• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கர்வம் 24

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
இப்படி இருவரும் இருக்க சிறிது நேரத்தில் தீராவே பேச்சை ஆரம்பித்து இருந்தான்.

"ஐ வொன சே சம்திங்.." என ஆரம்பிக்க அனுவோ புரியாமல் என்னவென கேட்க அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டே "உன் அக்கா செய்த வேலை தெரியுமா...?" என ஆரம்பித்து அவள் செய்த அனைத்தையும் கூறி முடிக்க, இருந்த சந்தோஷம் அனைத்தும் சட்டென வடிய கண்களில் கண்ணீருடன் "எ..என்னையும் சந்தேகப்படுறீங்களா தீரா...?" என தாங்கமுடியாமல் கேட்டே விட்டாள் காரிகை.

அவசரமாக இடம் வலம் தலையாட்டி மறுத்தவன் "அப்படி இல்லடா. சொல்லனும்னு தோனிச்சு...என்ட் உன்னை சந்தேகப்படுறது என்னை நானே சந்தேகப்படுறதுக்கு சமன்..பிகாஸ் ஐ ல..." என இழுத்தவன் அப்படியே நாக்கை மடித்து கள்ளச் சிரிப்பு சிரிக்க, இங்கே பெண்ணவளோ அவனின் ஒவ்வொரு வார்த்தையும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்க, இப்படி இடையிலே அவன் நிறுத்தியதில் புரியாமல் அவனைப் பார்த்து "எ..எ..என்ன தீரா சொல்ல வந்திங்க...?" என கேட்டாள்.

அவனோ தோளை குலுக்கி ஒன்றுமில்லையே என இலகுவாக கூற பெண்ணவள் ஏமாந்து தான் போனாள். அவளின் ஏமாற்றம் முகத்தில் பிரதிபலிக்க அதனை மனதில் குறித்துக் கொண்டவன் "என் காதலை சொல்ல இது சரியான நேரம் இல்லை...ஆனால் கூடிய சீக்கிரம் சொல்லுவேன்..லவ் யூ பேபி "என மனதிலே கூறிக் கொண்டவன் வெளியில் "லீவ் இட் அனு.." எனக் கூற அவளோ முகத்தை சுளித்தாள். அவளது ஒவ்வொரு அசைவையும் ரசித்தவன் "மை ஸ்வீட்டி..." என சற்று வெளிப்படையாகவே அவளை கொஞ்சிக் கொள்ள அவளோ விலுக்கென அவனை ஏறிட்டு பார்க்க மாட்டிக் கொண்டு திருதிருத்தவன் வராத அழைப்பை ஏற்று காதில் வைத்துக்கொண்டு "எஸ் டா..இ..ங்..க..சிக்..ன..ல்.. கிடைக்கைல்லை..இரு வரேன் அங்கே..." என புழுவி விட்டு அனுவை பார்த்து இளித்துக் கொண்டே சென்று விட்டான்.. ஏலியன் போல அவனை பார்த்து நின்றவள் அவனது ஜீப் சென்று மறையவும் குபீரென வந்த சிரிப்பை கை வைத்து மறைத்துக் கொண்டாள் தன்னவனை கண்டுகொண்ட விதமாய்...


***


ஆதவின் ஆபிஸ்

நான்கு சுவர்களுக்கு மத்தியில் கையை கோர்த்து தலைக்கு பின்னே வைத்தவாறு தனதாசனத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தான் கர்வத்தில் சிறந்தவன்.

நேரம் சென்றதே தவிர அவனில் மாற்றமில்லை. ஆபிஸிலிருந்து இன்னும் அவன் வீட்டுக்கும் செல்லவில்லை. அவனுக்கு தனிமை தேவைப்பட்டது. அங்கே அமராவோ மகனைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்தார். அவன் சில சமயங்களில் நேர தாமதமாகி வீட்டுக்கு வருவதுண்டு தான். ஆனால் இந்த இரண்டு நாட்களாக மகனின் வரவை அதிகம் எதிர்பார்த்தவராக இருக்கிறார். காரணம் தான் பெற்ற மகவின் உடல் நிலை. ஆனால் இங்கே அவன் மனநிலையே சரியில்லாமல் இருக்கிறது.

சேர்டின் மேல் இரு பட்டனையும் திறந்து விட்டிருந்தவன் காலை நீட்டி கதிரையை இலேசாக ஆட்டியவாறு ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டிருந்தான். அவனின் சிந்தனையை சுற்றி வந்ததெல்லாம் அந்த மதி முகத்தாள் தான்.

கடந்தகாலம் தொட்டு இந்த நிமிடம் வரை அனைத்தையும் தன்னுள் மீட்டிக் கொண்டிருந்தான். அவளைப் பற்றி அவன் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும். இத்தனை தொழிலையும் சொத்துக்களையும் கை நுனியில் வைத்து ஆட்டி ஆட்சி செய்து கொண்டிருப்பவனுக்கு தன்னவளுடனான இந்த சிறு விடயத்தில் தெளிவு கிடைத்திருக்கவில்லை.

எத்தனையோ பெண்களை சட்டையில் படிந்த தூசு போல தட்டிவிட்டு கடந்து சென்றவனுக்கு இவளை அப்படி தட்டி விட்டு செல்ல மனம் வரவில்லை. அவள் தான், அவனின் உதிரத்தில் உறைந்து விட்டாளே...!

திருமண வாழ்க்கையில் ஏனோ ஈடுபாடு இல்லாதவனுக்கு முழு மூச்சு உழைப்பாகிப் போனது. அன்றிலிருந்து இயந்திரம் போல தன் வாழ்க்கையை சுருக்கிக் கொண்டவன் எதற்கும் அடிமையாகிப் போவதை முற்றிலும் வெறுத்தான். காரணம் எதற்கும் அடிமையாகினால் அது தன் முன்னேற்றத்தை தடுத்து விடும் என்பதே.. மடையனவன் அறியாதது சிலதை அனுபவிக்க சிலவற்றுக்கு அடிமையாகித் தான் ஆக வேண்டும் என்பதை.

அவன் செய்த ஒரு தவறு, அகழ்யாவின் குடும்பத்தைப் பற்றிய அனைத்தையும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருந்தவன் தன்னவளானவள் சார்ந்த ஒரு துறும்பைக் கூட அறிந்திருக்கவில்லை. அறிந்திருக்கவில்லை என்பதை விட அறிய முற்படவில்லை என்பது சாலச் சிறந்ததோ...!?

ஆம் ஒரு பெண் திடீரென திருமணம் என்பதை ஒத்துக்கமாட்டாள் என்று அவன் இருக்க, அந்த நம்பிக்கையை சில்லு சில்லாக உடைத்தவளாக அவள் அவனை மணந்து கொள்ள முற்பட்டதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவே அவளை தன் வாழ்க்கையை விட்டு அகற்றிய பின்னும் அவளை வெறுக்கக் காரணம் ஆகியது. அதனால் இதோ அவள் தன்னில் ஒட்டிய மாசு, அதனை அகற்றிய பின் அது யாரோ நான் யாரோ என்று விட்டேறியாக இருந்தவன் வர்ஷினியைப் பற்றி ஆராயவில்லை. அத்துடன் அவளை மறந்திருந்தான் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் அவனை அறியாமலேயே அவள் அவன் இதயவறையில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டாள் என்பதை அன்று அவளைக் கண்ட நொடி அவனின் ஆள் மனது அவனுக்கு உணர்த்தி இருந்தது. ஆனால் ஆதித்யா என்ற செருக்கு கொண்டவன் முகமூடி போட்டு அதனை மறைத்து இதோ இன்று வரை தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.

வார்த்தைகளால் நோகடித்து செயலால் சித்திரவதை செய்து ஒரு சிறு பெண்ணின் மனதை இரத்தம் வராமல் கிழித்திருந்தவனுக்கு அன்று வலிக்கவில்லை. அதையே இன்று அவள் திருப்பிக் கொடுக்கும் போது வலிக்கிறது.

இன்று இதே ஆபிஸில் எதேச்சையாக தான் திரும்பிப் பார்த்ததை தன்னை சந்தேகப்படுகிறானோ என நினைத்து அவள் கண்ணீருடன் இல்லை எனும் விதமாக தலையை ஆட்டியது அவனின் செயலை அவனுக்கு அடித்து உறைக்க வைத்திருந்தது..

அன்று ஊமையாக நின்ற தன்னை இன்று வெறுக்கிறான் தேவ். அவளின் கண்ணீர் இந்த கல் நெஞ்சை கரைக்கிறது..எதனால்..?தெரியவில்லை..புரியவில்லை...!

எல்லாவற்றிற்கும் மேலாக அவள் தன் காலில் விழுந்ததைத் தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...ஏன்..?விடையோ பூச்சியம்..!

அப்போது தான் வர்ஷினி அநாதை என அந்தப் பெரியவர் கூறியது நினைவில் வந்தது...

ஷிட் என்றவன் கையால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான்... வர்ஷு அநாதையா..? என்று தன்னுள்ளே கேட்டுக் கொண்டவனுக்கு இதயத்தில் ஊசி குத்திய வலி..

"அவள் இத்தனை நாட்களும் எத்தனை எத்தனை சந்தோஷங்களை இழந்திருப்பாள்..?"அவனால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அவன் மூன்று நான்கு தடவை தான் அவளைப் பார்த்திருக்கின்றான். அவளது அமைதியும் எப்போதும் முகத்தில் ஒட்டி இருக்கும் அந்த துயரத்தையும் அன்று பொருட்படுத்தாமல் விட்டவனுக்கு இன்று மனம் ஏனோ வலிக்கத் தானே செய்கிறது... இப்பொழுதே அவளது விருப்பு வெறுப்புகளை கேட்டு அறிந்து கொண்டு தன் பரந்த மார்பில் அவளைப் போட்டுக் கொண்டே அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்க அவனின் கைகள் பரபரத்தன.. அதிர்ந்தே விட்டான் ஆதித்ய தேவ்....

தானா இது... அதுவும் அவளுக்காக...?? யோசிக்க யோசிக்க தலை வலித்தது... கொஞ்சம் தண்ணீரை எடுத்துப் பருகியவனுக்கு இப்போது தேவலாம் என்றிருந்தது. தலையை கைகளில் தாங்கிக் கொண்டே அமர்ந்திருந்தவனுக்குள் தான் அந்தக் கேள்வி..!

வாட்...?? மறுபடியும் அதிர்ந்து எழுந்தவன் அங்கும் இங்கும் நடந்தவனாக ஏதோ ஓர் தெளிவை நாடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சிந்திக்கலானான்...

வழமையாக வரும் புதிர் தான்.

"அவளை தான் காதலிக்கிறேனா..? "

ஆனால் புதிருக்கான விடை தான் புதையல் போல் மறைந்திருந்து விளையாடிக் கொண்டிருக்கிறது..

பேண்ட் பாக்கெட்டில் கையிட்டவாறு கண் மூடி நின்றவன் கண் முன்னே தன்னவளை கொண்டு வந்து நிறுத்தினான்..

சரும நிறம்...ப்பாஹ் வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.. பெரிய கண்கள், நுனி நீண்ட மூக்கு அப்படியே தன்னைப் போல..என சிந்தித்தவனின் முரட்டு அதரங்கள் இலேசாக விரிந்தன,பிறகு பார்வையை அப்படியே கீழே கொண்டு வந்தவனின் சிவந்திருந்த விழிகள் அந்த சிவந்த இதழ்களை கண்டு கொண்டன.தொட நினைத்தவனுக்கு காற்றே கையை தடவி விட்டு சென்றது.. ச்சே என தன் பின்னந்தலையில் தட்டியவன் மீண்டும் கனவில் மிதந்தான்..

அவளது சின்ன முகம் அவனின் இதயத்தை இறகினால் வருடியது..இதமாக உணர்ந்தவன் அப்படியே கீழே பார்க்க சங்குக் கழுத்து கண்ணை கவர்ந்தது.. அங்கு எதையோ தேடியவனின் கண்ணின் கறுமணிகள் அங்குமிங்கும் உருண்டோடின..தேடியது கிடைக்கவில்லை என்றவுடன் சட்டென கண்ணைத் திறந்தவனின் விழிகள் கோவைப் பழமாய் சிவந்திருந்தன.

"தென், நான் கட்டிய தாலி எங்கே..???" மீண்டும் குழம்பியவனுக்கு சினம் துளிர்விட்டிருந்தது... கையில் கிடைத்த அனைத்தையும் தரையில் போட்டு நொறுக்கினான்...

இதற்காக நாளை தன்னவளின் மனதை நொறுக்குவானா??


...


அதே நேரம் அங்கே வர்ஷினியும் ஆதித்ய தேவ்வை பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தாள். இன்று அவன் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் செவியை தீண்டிக் கொண்டிருந்தன.. அப்படியே ஒருக்களித்துப் படுத்தவளின் மனம் நிலையில்லாமல் தவித்தது... அவளது மனதில் காதலா..? அவளுக்கு தெரியாது..

ஆதித்ய தேவ்வின் ஆபிஸிற்கு அவள் வேலைக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அந்த இரண்டு நாட்களே அவனைப் பற்றி அறிய போதுமானதாக இருந்தது பெண்ணவளுக்கு.. அன்று அவன் கூறிய தகுதிக்கான அர்த்தத்தை இன்று கண்டு கொண்டாள் காரிகை.. கண்ணோரம் கண்ணீர் கசிந்தது.. ஆம் அவள் அவனை காதலிக்கிறாள்... எப்போதிலிருந்து...எப்படி..? அவளுக்கே தெரியவில்லை... இன்று கூட அவள் உணர்ந்திருக்கலாம்... முதல் தடவை அவனை பார்த்த நொடியே ஆடவன் அவளின் மனதினுள் புகுந்து விட்டான். ஆனால் இன்று தான் அதனை உணர்கிறாள்..

தன் தகுதியை எண்ணி முதல் தடவை வருந்துகிறாள். எட்டாக் கனியாய் இருக்கும் அவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை பெண்ணவளாள்..

அங்கே உடையவனோ காதலை உணர துடித்துக் கொண்டிருக்கிறான் என்றால், இங்கே இவளோ காதலை உணர்ந்த நொடியே அதனை புதைக்க குழி தோண்டிக் கொண்டிருக்கிறாள்...

வழமை போல உருவம் தெரியாத தன் தாயுடன் கதைத்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது... நிதர்சனத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் பெற்றோரை எடுத்துக் கொண்ட விதி தன்னை மட்டும் ஏன் விட்டு வைத்துள்ளது என்பதை நினைத்து விதியை நொந்து கொண்டாள். பிறந்தது முதல் தனிமையிலே வாழ்ந்தவளுக்கு ஒவ்வொரு நாளும் நரகமாய் தெரியும்...சிறைக் கைதியாகிய நிலை அவளது.. அந்த தனிமை எனும் சிறையிலிருந்து சிறை மீட்க மன்னவன் வருவானா...?

இரு காதல் கொண்ட உள்ளங்களும் ஒரே விடயத்தைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் இருவரினதும் மனநிலை தான் வெவ்வேறாக இருக்கின்றன. இவர்கள் இருவரிலும் அவன் தன் காதலை உணர்ந்தாலே போதும்...ஆனால் அங்கும் விதி வைத்து செய்கிறது இவர்களின் வாழ்க்கையை..

தொடரும்...

தீரா.