• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கர்வம் 26

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
இப்படியே நாட்கள் கடந்தோடி ஒரு வாரம் ஆகி விட்டிருந்தது.

அகழ்யாவின் செயல் ஆதித்யாவை ரொம்பவே கோபப்படுத்தி இருந்தது. ஆனால் இதுவரைக்கும் அவன் அமைதியாக இருக்க ஒரே காரணம் அவள் பெண் என்றதால். ஆனால் நாளையே அந்த அமைதி புயலாக மாற இருக்கிறது என்பதை எப்படிக் கூறுவது...?

இங்கே வழமை போல வர்ஷினி ஆபிஸ் வந்து சென்று கொண்டிருந்தாள். அன்று அவளை சந்தித்த பின் இன்று வரை அவளை அவன் நேருக்கே நேர் பார்க்கவில்லை. ஆனால் அவளை தன் கண்காணிப்பின் கீழ் தான் வைத்திருந்தான். பல நேரங்களில் அவளை சாதாரணமாக தொடரும் பார்வை சில சமயங்களில் இரசனையாக வருடிச் செல்லும். அதிசயம் என்னவென்றால் அந்த உணர்வுகள் அவனுக்கு பிடித்திருந்தன.

விக்ரமோ வர்ஷினியிடம் பாராமுகத்தை தான் காட்டிக் கொண்டிருக்கிறான். காரணம் வர்ஷினி தானாக வந்து அவனுடன் பேச முற்படவில்லை. இவளுக்கும் அவனுடன் பேச ஏதோ ஒன்று தடுத்திருந்தது. அப்படி ஒரு நாள் விக்ரமே தானாக வந்து வர்ஷினியுடன் பேசி இருந்தான்.

"வர்ஷினி நான் உன் கூட கொஞ்சம் பேசனும்..." என பீடிகை போட விக்ரமின் சத்தத்தில் அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் திரும்பியவளின் முகத்தில் இருந்த புன்னகையை அவன் கண்டு கொண்டான்.

இத்தனை நாட்களும் இருந்த கோபம் அந்த ஒற்றைப் புன்னகையில் காணாமல் தான் போனது. அதில் விக்ரமின் உள்ளம் கனிய

"ம்ம் சொல்லுங்கண்ணா..." என்று புன்னகை முகமாகவே கூற அவளில் இருந்த மாற்றம் அவனையும் தாக்கித் தான் இருந்தது.. அவள் மரியாதையாக அவனை அழைத்தது ஏதோ போல் இருந்தாலும் இந்தளவுக்காவது அவள் தேறி இருப்பதில் அண்ணனாக சந்தோஷப்பட்டான்.

இவ்வளவு நாட்களும் பேசாமல் இருந்ததில் இன்று ஏனோ அவளுக்கு அந்த ஒற்றை அழைப்பு வாயில் நுழைந்திருக்கவில்லை..

"இங்க இல்லை.ஈவினிங் பக்கத்தில் இருக்க பார்க்கிற்கு வந்துடு.." என்றவன் அத்துடன் சென்று விட்டான். வர்ஷினி தான் யோசனையாக அமர்ந்திருந்தாள்.

இது அனைத்தையும் ஆதித்ய தேவ் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஏனோ அவள் மற்றவர்களுடன் பேசுவது அவனுக்கு பொறாமையை தந்திருந்தது.

பின் விக்ரமை அழைத்தவன் தன் வேலையில் மூழ்கி விட்டான்.

"சார் மே ஐ கம் இன்...?"

"ம்ம்.."

"சார் வர சொல்லி இருந்திங்க.. எனிதிங் இஸூஷ் ?"

அவனை நிமிர்ந்து பார்த்தவன் பின் மடிக்கணினியில் பார்வையை செலுத்தியவாறு "வர்ஷினியை உங்களுக்கு ஆல்ரெடி தெரியுமா...?"

திடீரென அவன் வர்ஷினியைப் பற்றி கேட்க முதலில் அதிர்ந்தவன் பின் சுதாரித்துக் கொண்டு "சார்..." என்று இழுத்தவன் பின் "ப..பட் வை சார்...?" என்கவும் அவனை முறைத்தவன் "கேட்டதுக்கு மட்டும் பதில்..."

அத்துடன் விக்ரமின் மூச்சு நின்று விட்டது..(ஹா..ஹா..)

பதில் சொல்லா விட்டால் அடுத்து உயிர் இருக்காது என்றதை நன்கு அறிந்தவன் அவளை முதன் முதல் கண்டது, முதற்கொண்டு அவள் செய்த அட்டூழியங்கள் உட்பட அவளின் வாயாடித்தனத்தையும் பிட்டு பிட்டாக எடுத்து விட, என்றும் போல ஆதித்யாவின் வாய் "இன்ட்ரெஸ்டிங்..." என வளைந்தது.

அடுத்து விக்ரம் கூறியதில் அவன் மனம் ஏனோ இவ்வளவு நேரமும் இருந்த கடினத் தன்மையை இழந்து மென்மையை தத்தெடுத்துக் கொண்டது.. அப்படி என்ன கூறினான் விக்ரம்..?இதோ இதைத் தான்..

"பட் சார்..எனக்கு ஒரு தங்கச்சி இல்லைன்ற குறையை நிவர்த்தி செய்தது அவ தான்..." என கூற வந்தவன் அப்படியே அந்த வார்த்தையை வாய்க்குள் மென்று முழுங்கி விட்டு "அ..அவங்க தான்..." எனக் கூறி, தேவ்வை பாவமாக பார்க்க அவனின் பேச்சிலும் செய்கையிலும் தேவ்விற்கு புன்னகை அரும்பியது...

"நத்திங் வொரீஸ் விக்ரம்..நீங்க உங்க தங்கச்சியை தாராளமா வா போன்னு கூப்பிடலாம்..." அந்த தங்கச்சியில் அழுத்தம் கொடுத்திருந்தான்.

விக்ரமிற்கு தலை சுற்றியது அவன் புன்னகைத்ததில்...

மற்றவர்கள் அவளை எப்படிப் பேசினாள் இவனுக்கென்ன. இவனுமே அறியவில்லை ஏன், தான் விக்ரமிற்கு அனுமதி கொடுத்தோம் எனவும் அந்தளவுக்கு அவள் மேல் அவனுக்குள்ள உரிமை என்னவென்பதையும்...

பின் விடைபெற்றுக்கொண்டு விக்ரம் வெளியே செல்ல இங்கிருந்த ஆதித்யாவிற்கோ மனம் முழுவதும் வர்ஷினி தான்.

அவள் இவ்வளவு பேசுபவளா?..அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை...(ஒரு நாள் உன்னையே பேச விடாம கதையளப்பா..அப்ப தெரியும் உனக்கு...)

இப்போதெல்லாம் அவள் மீது அவனுக்கு என்ன செய்தாலும் கோபமே வருவதில்லை.. தனதுள்ளத்தில் அவள் மேல் என்ன அபிப்ராயம் இருக்கிறது என்பதை அறியவே அவளை வரவழைத்திருந்தான். ஆனால் இன்னும் அதற்கான எந்த தீர்வும் வரவில்லையே என யோசித்தவனை, யாரோ அனுமதி வேண்டி வெளியில் நிற்பது களைத்திருந்தது..

"எஸ் கம் இன்..."என்கவும் உள்ளே நுழைந்தாள் கார்குழல் அழகி...

முன் விழுந்த முடியை காதின் பின் சொருகிக் கொண்டே நிமிர்ந்தவளை கண்களால் களவாடினான் அரக்கன். அவளின் அழகு அவனை கவர்ந்திருந்தது. ஆனால் அவள் அந்தளவிற்கு அலங்கரித்தும் இருக்கவில்லை. இருந்தும் அவனுக்கு இந்த மிதமான, கண்ணுக்கு இதமான அழகு தானே பிடித்திருக்கிறது...

இங்கே அவளுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை போலும். கண்ணில் பரிதவிப்புடன் அவனின் பதிலுக்காக எதிர்பார்த்து நின்றிருந்தாள்.

தன்னைப் போல அவளுக்கும் இருக்குமோ என அவளின் முகத்தை ஆராயந்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது... அப்படியே கழுத்தைப் பார்த்தவனுக்கு இறங்கி இருந்த பேய் உச்சந்தலையில் மீண்டும் வந்து முக்காடு போட்டு உட்கார்ந்து கொண்டது.

அவன் அவளை என்னவோ சாதாரணமாகத் தான் பார்த்தான். அவளுக்குத் தான் ஆதித்யா முறைப்பதைப் போல இருக்க திடீரென அவளின் கண் கலங்கியது.. "தன்னைப் பார்க்கவே அவருக்கு பிடிக்கலையோ...?"என்றெண்ணியவளுக்கு அங்கு நிற்பதே தீயின் மேல் நிற்பதைப் போல இருந்தது...

அவளின் கலங்கிய கண்களைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ அவளை சோதிக்க விரும்பாமல் "கிவ் மீ..." என்கவும் அவள் ஒரு கோப்பை நீட்ட அதனை மேலோட்டமாக பாரத்தவன் கையெழுத்திட்டு அவளிடம் கொடுத்திருந்தான்.

"தெ..தெங்க்ஸ் சார்..." என்றவள் அப்படியே வந்த வழியே சென்றாள்.

அவளின் சார் என்ற அழைப்பு ஆதித்யாவிற்கு கசந்தது..

...

அதேசமயம் இங்கே தீரா கேஸ் ஒன்றிற்காக ரதியின் ஊரிற்கு வந்திருந்தான். அந்த ஊரே கிராமம் என கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்திருந்தது.. ஜில்லென்ற குளிர் காற்று மேனியில் மோத கையை தேய்த்து விட்டுக் கொண்டே நடந்தவனை அந்த ஊர் குமரிப் பெண்கள் ஒழிந்திருந்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

விசாரணைக்காக வந்திருந்தவனை அனைவரினதும் பார்வை சுற்றி வந்தது. ஹீரோ போல் வந்து நின்றவனை ஒருத்தியைத் தவிர அனைவரும் வாயில் விரல் வைத்து பார்த்துக் கொண்டிருக்க ரதியோ முற்றத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். கை அதன் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தாலும் மனமோ வெறுமையாக இருந்தது.. எதிலுமே ஒட்டுதல் இல்லாமல் மனம் தவித்தது...

அப்படியே யோசனையில் இருந்தவளை சொடக்கிடும் சத்தம் களைத்திருந்தது..

"ஓய் சிஸ்டர்..." என தீராவே அழைத்திருந்தான். சத்தத்தில் நிமிர்ந்தவள் அவனின் உடையை பார்த்து குழம்பிப் போய் எழுந்து வந்தாள்.

"சொல்லுங்க சார்..." என்கவும் அவளையே பார்த்து நின்றவன் வெள்ளைச் சுடிதாரில் நின்றவளை ஆழ்ந்து பார்த்து விட்டு "ஆமா இந்த வீட்டுப் பையனைத் தெரியுமா...?" என எதிர்த்த வீட்டை கை காட்ட

தன் எதிர்வீட்டுப் பையனைத் தெரியாதளவுக்கு அவள் கண்ணை இழந்தவள் இல்லையே... ஆம் என தலையாட்டினாள்.

"கொஞ்ச நாளைக்கு முன்னாடில இருந்து இந்தப் பையனைக் காணைல்லை..யூ நோ...?" எனக் கேட்டான் தீரா.

அவளிடம் இருந்து உடனே பதில் வந்தது..."ஆமா...அதுக் இப்போ என்ன..?" என எதிர் கேள்வி அவனைக் கேட்க...

தான் கேள்வி கேட்டாள் தன்னையே கேள்வி கேட்பளின் பேச்சில் சினத்திற்கு பதிலாக சிரிப்பே வந்தது தீராவிற்கு...

அவனது சிரிப்பை புரியாமல் பார்த்தவளை "ஐ எம் ஏ.எஸ்.பி தீரா. இந்தப் பையனின் கேஸ் பற்றி விசாரிக்க வந்தேன்.. இங்கே கேள்வி கேட்க வேண்டியது என்னவோ நான் தான். ஆனால் நீ என்னையே கேள்வி கேட்கிற..." என மீண்டும் புன்னகைக்க அவளுக்கு தான் சிரிக்க முடியாத நிலை.

அவன் போலிஸ் என்ற ஒரு காரணத்திற்காக தான் அங்கே நின்று பேசிக் கொண்டிருக்கிறாள். இதுவே வேறு யாராவது இருந்திருந்தால் லூசு என திட்டி விட்டு தன்போக்கில் போய் இருப்பாள். அவளது முகமே அவளது பிடித்தமின்மையைக் காட்ட கெத்து தீராவிற்குள் கடமைக் கண்ணியவான் வந்து அமர்ந்து விட்டான்.

விறைப்புடன் நிமிர்ந்தவன் "இங்கே யாராவது சந்தேகப்படுற மாதிரி பார்த்து இருக்குறீங்களா மிஸ்...?" என்கவும் இல்லை என உதட்டைப் பிதுக்க "சரி போங்க..." என்றவன் அந்த ஏரியாவை சுற்றும் முற்றும் ஆராய்ந்தான்.

திடீரென அவனது தொலைபேசி தன் இருப்பிடத்தை உணர்த்த எடுத்து காதில் வைத்தவன் "எஸ் டா அரவிந்த்..டெல் மீ..." என ஆர்பாட்டமாக ஆரம்பித்திருந்தான்.

மறுபடியும் குனிந்து கோலம் போட சென்றவளின் கைகள் தீராவின் "அரவிந்த்" என்ற ஒற்றை சொல்லில் அப்படியே அந்தரத்தில் நின்றது...

அடுத்த கணம் எதையும் யோசிக்காமல் தீராவின் அருகில் அவள் ஓடி வர, தன் பின்னே நிழலாடுவதை உணர்ந்தவன் திரும்ப அங்கே கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள் ரதி.

"அரவிந்த் வன் செக்..ஐ வில் கால் யூ லேட்டர்..." என கட் பண்ணியவன் அவளை குழம்பிப் போய் பார்க்க அவளோ "கா..கால் பேசியது யா..யாரு...?" என்கவும்

நான் யாரோட பேசினால் இவளுக்கென்ன?..என எரிச்சல்லுற்றவனின் போலிஸ் புத்தி வேலை செய்ய "அது ஏன் உனக்கு...?" என்றவன் பேண்ட் பாக்கெட்டினுள் கை இட்டவாறு நின்று கொண்டான்.

அவளது வார்த்தைகளோ எதிர்பார்ப்புடன் திக்கித் திக்கி வந்தன..."அ..அரவிந்த்..அ..அத்தான்...?" அழுத விழிகளை விரித்துக் கேட்க தன் நண்பனை கேட்கிறாள்..யார் இவள்? என்று ஒருகணம் சிந்தித்தவனுக்கு மின் வெட்டினாற் போன்று நினைவில் வந்தது அரவிந்த் கூறியவை..!!

இதே ஊர் தானே அவளும்..என்று யோசித்தவன் சட்டென..."மகாலட்சுமி ஆன்டி..?" என கேட்க விழிநீர் கன்னம் தாண்டி வழிய தலையை மேலும் கீழும் ஆட்டி வைத்தாள் ரதி.

தீராவிற்கு சந்தோஷப்படுவதா துக்கப்படுவதா என்றிருந்து. "வட்ஸ் யுவர் நேம்...?" இப்போது தீரா தான்.

"ரதி..." என்றவளுக்கு புன்னகை ஒன்றை பதிலழித்தவன் வீட்டினுள்ளே பார்த்தவாறு "அப்பா அம்மா எங்கே...?" எனக் கேட்க சிறு பிள்ளை போல உதட்டை வளைத்து அழத் தயாரானவள் "இ.. இறந்துட்டாங்க..." என தலையைக் குனிய தீராவின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய்...

"ஆ..ஆர் யூ...?" என அதிர்ந்த வாக்கிலே அவன் கேட்க தன்னிலையை நொந்தவள் "நா..நான் உங்களை அண்ணானு கூப்பிடட்டுமா...?" என்கவும் எப்படிச் சொல்லுவான் இல்லை என.. மனதார சம்மதமாய் தலையாட்டியவனைப் பார்த்து வலியுடன் சிரித்தவள் "உள்ளே வாங்கண்ணா.. " என்று அழைத்து விட்டு முன்னே நடந்தாள் காரிகை.

அவளைத் தொடர்ந்து நடந்தவனின் பார்வை உள்ளே ஆளுயரத்திற்கு மாலையிட்டுத் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படத்தில் நிலைத்திருந்தது. ஆணி அடித்தாற் போன்று நின்றிருந்தான் தீரா.

ரதியோ அந்தப் புகைப்படத்தின் அருகில் சென்றவள் தன் புஸ்டி விரல்களால் புகைப்படத்தை தடவி அவர்களை உணர முற்பட்டாள். கண்களிலிருந்து கண்ணீர் நின்றபாடில்லை...

"நீங்களும் நான் முதல்ல கூறினப்போ நம்பவில்லைல அண்ணா.. ?அப்படித் தான் போல அரவிந்த் அத்தானும்..." என்றவளுக்கு இறுதியில் குரல் அடைத்திருந்தது...

அவளது வலியை உணர்ந்தவனாக நண்பனை மனதில் ஆயிரம் கெட்ட வார்த்தைகளால் கரித்துக் கொண்டிருந்தான் தீரா.

"உ..உங்களுக்கு ஒன்று தெரியுமாண்ணா.. நா..நான் அம்மா அப்பா இறந்தப்போ அத்தானுக்கு கால் பண்ணினேன்... எ..எனக்கு அப்போ யா..யாருமே இல்லண்ணா.. யா..யாருக்கு கால் பண்ணுறேனு தெரியாம அவருக்கு கால் பண்ணிட்டேன். நா..நான் செய்த முதல் தப்பு அது தான் போல..." என்று நடந்த அத்தனையும் கூறியவள் அரவிந்த் மேல் தான் கொண்டுள்ள காதலையும் சேர்த்தே கூறினாள். அப்படியே புகைப்படத்தின் கீழே அமர்ந்து சுவரில் சாய்ந்திருந்தவளை பார்த்தவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது .

மூச்சுக்கு மூச்சு அவள் கூறிய அண்ணா என்ற வார்த்தை தீராவின் உள்ளத்தை வலிக்கச் செய்தது.

ஆறுதலுக்கு கூட யாருமில்லாமல் அந்தச் சிறு பெண் பட்டிருந்த பாட்டை தீராவால் ஜீரணிக்க முடியவில்லை. திடமான ஆண்மகனாக இருந்தாலும் பெண்ணின் கண்ணீர் அவனையுமே கலங்க வைத்திருந்தது...

அவளறியாமல் கண்ணீரை சுண்டு விரலால் சுண்டி விட்டவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மனதில் அரவிந்த் மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது.

எந்தப் பெண்ணாக இருந்தாலும் தாய் தந்தை விடயத்தில் பொய் சொல்ல மாட்டாள்.அப்படி இருக்க இவள் கூறியதை நம்பாமல் இருந்துவிட்டு ஆறுதலாக இருக்க வேண்டிய இடத்தில் வார்த்தைகளால் வேறு நோகடித்துள்ளான்... அரவிந்தை நினைக்க ச்சே.. என்றிருந்தது தீராவிற்கு...

எவ்வளவு வலி இருந்திருந்தால் அவள் பயமாக இருக்கிறது என்று கூறி இருப்பாள். அதுவும் சின்னப் பெண் வேறு. தாய் தந்தையை இழந்து விட்டு இருப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ரதியோ எழுந்து நின்றவள் "அ..அண்ணா ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க.. எ..எனக்கு இங்கே தனியே இருக்க ப..பயமாய் இருக்குண்ணா.. ஏ..ஏதாவது ஹா.. ஹாஸ்ட்டலில் சேர்த்து விடுறீங்களா...எனக்கு வே..வேற யாருகிட்ட உதவி கேக்குறதுனு பு.. புரியல?" என்றவளை ஓடிச் சென்று அணைத்திருந்தான் தீரா...

மனம் பாரமாக இருந்தது அவனுக்கு. மனதார தங்கையாக அவளை ஏற்றுக் கொண்டவனிடம் என்ன கேட்டு விட்டாள்...?? மூச்சு விடக் கூட சிரமாய் உணர்ந்தவன் சட்டென வெளியேறி இருந்தான்.

கேட்ட தனக்கே வலிக்கிறது என்றால் அனுபவித்த அவளுக்கு எப்படி இருந்து இருக்கும்...!!

உஃப் என காற்றை குவித்து ஊதியவன் தன்னைக் கட்டுப்படுத்த முயற்சித்து தலையைக் கோதினான்.

தீரா வெளியே வர அவன் பின்னே வந்தவள் தீராவின் ஒவ்வொரு அசைவையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்கான ஓர் உறவு என்று நினைக்க மனம் கொஞ்சம் இலேசானது.

இங்கே தீராவோ அழைப்பேசியில் யார் யாருக்கோ அழைத்துப் பேசிக் கொண்டிருந்தான்.

பின் அவளைத் திரும்பிப் பார்த்தவன் "என்னை உன் அண்ணனா நம்பினா என் கூட வாம்மா..." என்கவும் வலியுடன் சிரித்தவள் கண்களை துடைத்துக் கொண்டு "இப்போ வரைக்கும் சொந்தம்னு இருந்தும் அநாதையா இருந்த எனக்கு ஒரு அண்ணன் கிடைச்சிருக்கிறாரு. அதை விட வேறென்ன நம்பிக்கண்ணா வேணும்..." என்றாளே பார்க்க இப்போது கண் கலங்குவது தீராவின் முறையாகியது.

அடுத்த கணம் ஒரு லொறியுடன் காரும் வந்து நின்றது. வீட்டிலுள்ள பொருட்களை அந்த லொறியில் ஏற்றச் சொல்லியவன் கார் காரரிடம் வீட்டை ஒப்படைத்து விட்டு ரதியை தன்னுடன் அழைத்துச் சென்றான்...

ரதியோ மனதில் தீராவிற்கு கோவிலே கட்டி விட்டாள்...

தொடரும்...

தீரா.