• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கர்வம் 30

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
மயங்கி சரிந்தவளை கொண்டு வந்து அப்படியே சோஃபாவில் பூப் போல கிடத்தினான் ஆடவன். எதற்காக அவளுக்காக தன் மனம் தவிக்கிறது..இதோ நூறாவது தடவையாக தன் மனதில் கேட்டுக் கொண்டான். விடையைத் தேடியவாறே நீரைக் கொண்டு வந்து முகத்தில் தெளிக்க சிறுக கண்ணைத் திறந்தாள் பாவை.

தீரா திரூ உட்பட விக்ரமும் ஆதித்யாவை பின்தொடர்ந்தது வந்தாலும் அவனது அறையினுள் செல்லுமளவுக்கு தைரியம் இருக்கவில்லை. மற்றைய நேரம் என்றால் நண்பர்கள் இருவரும் கேட்பார் இன்றி கேள்வி இன்றி உள்ளே நுழைந்திருப்பார்கள். ஆனால் இப்போது அவன் இருப்பதோ அவன் தாலிகட்டியவளுடன். இருவருக்குள்ளும் என்ன நடக்கின்றது என்பது புரியாத புதிராக இருந்தாலும் இப்போதைய அவனின் செயல் நண்பர்களை கொஞ்சம் நிதானித்து சிந்திக்க வைத்தது.

இதோ அதனால் வெளியே நிற்கின்றனர்.

வர்ஷினியோ மெல்ல இமையசைக்க அந்த விழிநீருடனான இமைகளுக்குள் பல காட்சிகள்.. யாரோ அவள் கதறக் கதற அவளது உடலைத் தொட வருவதும் அவள் இருந்த வாக்கிலே காலை இழுத்துக் கொண்டு பின்னோக்கி போவதுமாக இருக்க திடீரென கண்களை திறந்தவளுக்கு ஆதித்யாவின் ஆபிஸ் அறை அந்த பங்களா போல் இருக்க உடல் துணுக்குற எழுந்தமர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவள் இருந்த மாய உலகில் ஆதித்யாவை காணவில்லை. சோஃபாவில் இருந்து எழுந்தவள் கையில் கிடைத்தவற்றை தட்டி விட்டுக் கொண்டே பின்னோக்கிச் செல்ல அப்போது தான் "வர்ஷூ என்னாச்சு..ஏன் இப்படி பண்ணுற...?" என்ற ஆணின் குரல் காதைத் தீண்டியது.

சரியாக ஆதித்யா இருந்த பக்கம் திரும்பியவள் கண்களில் கண்ணீருடன் தலையை இடம் வலம் ஆட்டியவாறு "நோ..ந்..நோ..." என உதட்டை வேதனையில் வளைத்து வைத்து அழுதவளின் செயலை ஆதித்யா விநோதமாக பார்த்தான்..

அவனது வார்த்தைகள் அவளது செவியைத் தீண்டவில்லை. அவனுக்குமே தன் மனம் ஏதோ ஒன்றை உணர்த்துவது போலிருக்க அவளைத் தொட முன் வர அவளது கால்களோ பின்னோக்கி நகர்ந்து சென்றன..

"வே..வேணா...கி..கிட்ட வராத..." என்றவளுக்கு அதீத பயத்தால் கால்கள் நடுங்கின...

"வர்ஷூ நான் சொல்றதை கேளு...லிசின்..." என்றவாறு அவன் மீண்டும் முன்னேற ஒரு கட்டத்துக்கு மேல் செல்ல முடியாமல் கண்ணாடித் தடுப்பு தடுக்க அதிர்ந்து திரும்பியவள் பைத்தியம் போல அதனை தடவி வெளியே செல்ல முடியாதா என்று பார்த்துக் கொண்டே கதறினாள்.

இவனுக்கோ நெஞ்சடைப்பது போல் இருந்தது... எதனால்..???

அதற்கிடையில் அவன் அவளை நெருங்கி இருக்க அப்படியே சாய்ந்தவாறு கீழே அமர்ந்தவள் இரு கால்களையும் கட்டிக் கொண்டு "ப்..ப்ளீஸ்..எ..என்னை ஒன்றும் செஞ்சிறாதே...எ..என்னையை விட்டுடு..." என கையெடுத்து கும்பிட்டவளின், முகத்தில் உயிர்ப் பயம் அப்பட்டமாய்...

அவளது நிலை கோபத்தையும் இயலாமையும் ஒருங்கே கொண்டு வர சடாரென மண்டியிட்டு அவளை தன் சிறகினால் மூடிக் கொண்டான். ஆம் ஆதித்ய தேவ் வர்ஷினியை அணைந்திருந்தான். காற்றுக் கூட புகாதவாறு இறுக்கி அணைத்திருந்தவனின் அணைப்பு இனி உன்னை தனியே விட மாட்டேன்..!! என்பது போல் இருந்தது..

அவளோ அவனது பிடியிலிருந்து வெளிவரத் துடிக்க இன்னும் இன்னும் நெருங்கியவன்..."பேபி லிசின்..ஐ எம் ஹியர்.. ஐ எம் வித் யூ.. டோன்ட் பெனிக்..." என்றவன் முதுவை மெல்ல வருடி விட அப்படியே அவனுள் அடங்கிப் போனாள் பாவை.

அதில் அவளது உடல் நடுக்கம் சற்றுக் குறைந்தாலும் கேவல் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்தது... அவன் விடவில்லை, விட மனம் வரவில்லை.. ஏதோ தனக்கான தன் பொருள் என பிடியை இறுக்கினான்.

வர்ஷினியோ கொஞ்சம் கொஞ்சம் தன் உலகிற்கு வந்து கொண்டிருந்தாள். அவளது கேவல் குறைய அவள் தன்னிலை உணர முற்படுகிறாள் என சரியாக கருதியவன் அப்படியே தான் இருந்தான். அவன் அறிந்த மட்டில் தாயைக் கூட அணைத்திராதவன் முதல் தடவை ஒரு பெண்ணை அணைத்திருக்கிறான். ஏதோ பரவசமாக இருந்தது அவனுள். இத்தனை நாட்களும் இருந்த வலி, நிம்மதியின்மை, குழப்பம் அனைத்தும் நீங்கியதாக ஓர் பிரம்பை..

ஆம் அவனது கர்வம் அவனவளால் வீழ்ந்து விட்டது... மீசை, தாடியுடனான ஆதித்யாவின் அழுத்தமான உதடுகள் நிறைவான புன்னகையால் விரிந்தன... அவன் தன் காதலை உணர்ந்த அழகிய தருணம் அது. பொன் எழுத்துக்களால் தன் உள்ளத்தில் அந்த தருணத்தை பதித்துக் கொண்டான்... (ப்பாஹ் இவனுக்கு இந்தக் காதலை உணர வைக்கிறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளிப் போச்சு... எனிவே, நவ் யூ ஹேப்பி..மீ ஹேப்பி.. ஆல் ரீடர்ஸ் ஹேப்பி..)

அவனது பரந்த மார்பிலே இவ்வளவு நேரமும் தலையை வைத்திருந்தவள் இப்போது தான் அசைகிறாள். தலையை மெல்ல அணைப்பிலிருந்தவாறே நிமிர்த்திப் பார்த்தவளைப் பார்த்து ஆதித்யா அதே அக்மார்க் புன்னகையைக் கொடுக்க ஏதோ யோசனையில் இருந்தவளும் மெல்ல உதட்டை விரித்தாள். அதன் பின்னே சுற்றத்தை உணர்ந்தவள் அதிர்ந்து அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டுக் கொண்டே அணைப்பிலிருந்து வெளிவந்தவளைப் பார்த்து இப்போது நக்கலாக ஆதித்யாவின் இதழ்கள் விரிந்து கொண்டன... ஏதோ மாதிரி இருக்க, எழுந்தவளுக்கு எங்கிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள சிறிது நேரம் பிடித்தது.

சுற்றி சுற்றி பார்வையை சுழற்றியவளுக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. இறுதியாக அவளது பார்வை ஆதித்யாவில் நிலைத்திருக்க அவனோ அப்போதும் அதே புன்னகையுடன் பேண்ட் பாக்கெட்டினுள் கை இட்டவாறு நின்று கொண்டான்.(மொத முறைச்சே பயம் காட்டுவான். இப்போ சிரிச்சே சாவடிக்கிறான்.. வி ஆர் பாவம்..)

அவள் வெளியே போக காலைத் தூக்கி வைக்க "நில்லு..." என்ற அழுத்தமான குரலில் அவளது கால் அப்படியே அந்தரத்தில் நின்றது.

நின்றாலும் பின்னே திரும்பி பார்க்குமளவுக்கு அவளுக்கு சக்தி இருக்கவில்லை. அவனே அவளருகிலும் வந்திருந்திருந்தான். அவள் பின்னே அரவம் எழுப்பாமல் வந்து குனிந்து அவளது காதைத் தீண்டியும் தீண்டாமலும் நின்றவன் "எனக்கு ஒரு மேட்டரை சொல்லிட்டு அதுக்கப்புறம் யு கேன் கோ..." என்றானே பார்க்க அவசரமாக அவன் பக்கம் திரும்பினாள் வர்ஷினி.

இதயம் வேறு வேகமாய் லப் டப் என ஒலிக்க கண்கள் வேறு குளம் கட்டி விட்டது...

அவள் திரும்பிய வேகத்தில் அவனுக்கும் அவளுக்குமான இடைவெளி நூலளவே..!!

தன் நெஞ்சளவு தான் இருந்தவளை இவன் குனிந்து பார்க்க அவள் நிமிர்ந்து பார்த்தாள். இந்தா விழவா என்றிருந்த கண்ணீரை சட்டென பேண்ட் பாக்கெட்டினுள் இருந்த கையை எடுத்து விழாமல் ஆட்காட்டி விரலால் தாங்கிப் பிடித்தான் இனி உன்னையும் சேர்த்து தாங்க நான் ரெடி என்பது போல..

ஆனால் அவளுக்குத் தான் அவனது நெருக்கம் ஒவ்வாமையைத் தந்தது.. அன்று அவள் நெருங்க நினைக்க அவன் விழகிச் சென்றான். இன்று அவன் இணையத் துடிக்க அவள் பிரிய நினைக்கிறாள்.. இதுவே இங்கே காதலின் நியதியாகியது...

கண்களின் ஓரமும் மூக்கு நுனியும் சிவந்து நின்றிருந்தவளை பார்க்கப் பார்க்க தெகிட்டவில்லை வேங்கைக்கு...

"ம்ம் டெல் மீ...என்ன நடந்தது...?" எனக்கேட்க வார்த்தைகள் தந்தியடிக்க "எ..என்னது...?" என இன்னும் பின்னோக்கிச் சென்றவள் அப்படியே கண்ணாடி சுவற்றில் சாய ஒருபக்கம் உதட்டை கோணலாக வளைத்து சிரித்தவன் அவளின் இருபக்கமும் கையை ஊன்றி சிறை செய்திருந்தான்.

இதனையெல்லாம் எதிர்பாராதவள் அச்சத்தால் கண்களை அகல விரிக்க அந்த மருண்ட மான் விழிகளில் சித்தம் தொலைந்து நின்றிருந்தான் கர்வம் கொண்டவன்.

"யூ மேக் மீ க்ரேசி பேப்..." என்றவன் வலக்கரத்தால் நெஞ்சை நீவி விட்டான். இதனை மனதில் தான் சொல்லிக் கொண்டான். வெளியில் சொன்னால் தான் சிங்கத்தின் கெத்து சிதைந்து விடுமே..ஹா..ஹா...

பின் "ஐ நீட் ஆன்சர்..டெல் மீ..." என்கவும் அவனது குரலில் தெரிந்த ஏதோ ஒன்றில் அவனை குழந்தைப் போல உதட்டை சுழித்து அழுகையினூடு பார்த்தவள் "அ..அது நா..நான் வரும்போது ப..பஸ்.. அந்த.." என ஆயிரம் முற்றுப் புள்ளி வைத்து கூறியவளை ஆழ்ந்து பார்த்தவன் "நான் அதைக் கேட்கைல்லை... இதுக்கு முன்பு இதே மாதிரி ஐ மீன் இன்னைக்கு நடந்தது போல எதோ நடந்திருக்கு.. அது எப்போ..எங்கே?? என்று எனக்கு தெரிந்தாகனும்.." என்றவனின் தன்னைக் கண்டுகொண்ட பேச்சில் வலியுடன் முகம் விகசித்தது...அடுத்த நிமிடம் அதை நினைக்கையில் பயத்தில் உடல் நடுங்கியது.

அவளது மாற்றத்தை உணர்ந்தவன் பட்டு போன்ற கன்னத்தை கையில் தாங்கி "நான் உன் கூடத் தான் இருக்கேன். பயப்படாதே என்னை நம்பி சொல்லு..." என்கவும் மடை திறந்த வெள்ளம் போல அனைத்தையும் ஒப்பு வைத்தாள்...


***

சரியாக அதே ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தான். எப்போது ஆதித்ய தேவினால் விரட்டப்பட்டாளோ அன்று நடந்தது தான். ஏ.டி பெலஸை விட்டு காலடி எடுத்து வைத்து வெளியே வந்தவள் ஒரு கண தூரம் நடந்திருப்பாள். ஆள் அரவமற்ற அந்த சாலையில் எங்கிருந்து தான் வந்தார்களோ தெரியவில்லை மூன்று நான்கு பேர் திடீரென அவள் முன் குதிக்க பயத்தில் பின்னே பாய்ந்தாள் பெண்ணவள்.

விரக்தியோடு நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணவளை கவனித்திருந்தாள் சாலையோரம் காரில் நின்றிருந்த அகழ்யா.

பழிவாங்க ஒரு சந்து கிடைக்காதா புகுந்து விளையாட என்று கழுகாய் காத்திருந்தவளின் கண்ணில் தான் திருமணம் ஆகி அடுத்த நாளே விரட்டப்பட்ட வர்ஷினி அகப்பட்டாள். அதே புடவை என சரியாக கவனித்திருந்தவளின் நரி மூளை வேலை செய்ய அவளை பின் தொடர்ந்து செல்லுமாறு மட்டுந்தான் அடியாட்களை ஏவி இருந்தாள். ஆனால் அங்கே நடந்தது வேறு மாதிரி ஆகிவிட்டது.

வர்ஷினியோ அவர்களை புரியாமல் பார்த்துக் கொண்டே பின்னோக்கி நடக்க அவர்களோ கண்ணில் காம வெறியுடன் அவளை துகிலுறியக் காத்திருந்தனர். அவர்களின் கொடூரப் பார்வை பெண்ணவளை விழித்துக் கொள்ளச் செய்ய எதனையும் சிந்திக்காமல் பிடித்தாள் ஓட்டம்...

தொலை தூரம் இப்படியே அவர்களால் துரத்தி வரப்பட்டவள் ஒரு கட்டத்தில் வந்து நின்றதோ மணல் திட்டுப் பிரதேசம் ஒன்றில். கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய உதவி செய்யக் கூட யாருமில்லாமல் மானத்திற்காக அநாதையாக நின்றிருந்தாள் காரிகை.

தன்னைச் சுழற்றி சுழற்றி அடிக்கும் விதியை நொந்தவளாக திரும்பியவளின் கண்களில் பட்டதோ பாழடைந்த பங்களா ஒன்று.. அதற்கிடையில் அவர்கள் அவளை நெருங்கி இருக்க சுடு மணலில் வெறும் கால்களில் ஓடியவள் உள்ளே சென்று ஒழிய சுற்றிப் பார்க்க அந்தோ பரிதாபம் அந்த அரக்கர்கள் உள்ளே வந்து அவளை வளைத்து விட்டனர்.

நெஞ்சு சேலை கசங்க இறுக பற்றிக் கொண்டவளுக்கு இப்படியே பூமி பிளந்து உள்ளே சென்று விடமாட்டோமா என்றிருந்தது...

"டேய் பிடிடா அவளை..."என்றொருவனின் பேச்சில் திக்பிரம்மை பிடித்தவள் போல நின்றிருந்தாள் பேதை..

அதற்குள் ஒருவன் வந்து அவளது கையை பிடிக்க வர சட்டென பின்னோக்கி நகர்ந்தவளுக்கு சனி உச்சியில் வந்து நின்றது போலும்.. அருகில் கிடந்த கல்லில் இடரி விழுந்தளை அந்த கூரிய கல் பதம் பார்த்திருந்தது..

கால்களில் இரத்தம் வழிய கீழே விழுந்தவள் இழுத்து இழுத்து பின்னோக்கி நகர்ந்தவாறு "ப்..ப்ளீஸ்..வே..வேண்டாம்..." என மன்றாடினாள்.

ஆனால் அதெற்கெல்லாம் இரக்கம் காட்டாத காட்டுமிராண்டிகள் அவளது சேலையை இழுக்க கையைக் கொண்டு செல்ல "ஆஆஆஆஆ வேண்டாம் விட்டுடுங்க..."என கையெடுத்து கும்பிட்டவளின் அழுகையில் அந்த பங்களாவே அதிர சிரித்து வைத்தனர்.

அவளோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்க அதோ அவன் இழுத்த இழுவையில் கை சட்டை கிழிந்து அவன் கையோடு சென்றது.. கொடியவனின் கை நகம் அந்த மென்மையானவளை பதம் பார்க்க கை சதை கீறிட்டு இரத்தம் வேறு கசிந்தது..

பெண்ணின் உதிரத்தை துச்சமென கருதியவர்கள் அறியவில்லை நாளை அதற்காக கணக்கு தீர்க்க ஆதவப் பிறவி எடுத்து வந்திருப்பவன் வருவான் என... இப்படிப்பட்ட கயவஞ்சகர்களை விதி கொல்லாமல் விடாது..

அதோ, இருந்த காயத்தில் இது வேறு வலிக்க முகத்தை சுழித்தவளுக்கு அனைத்தையும் விட மானம் முக்கியமாகப் பட்டது.

வலியுடன் எழுந்து ஓட முற்பட்டவளை ஒருவன் பிடிக்க முன்னேற அந்த கட்டிடமே அதிர சத்தம் போட்டிருந்தாள் அகழ்யா..

இவர்களை அனுப்பி விட்டு அவளுமே பின்தொடர்ந்து வர அவர்கள் துரத்திக் கொண்டு சென்றதைப் பார்த்து ஏதோ தவறாய் பட வேகமாக வந்தவள் தான் இந்தக் காட்சியைப் பார்த்தது..(ரொம்ப வேகமா வந்த போ...)

தன் எஜமானியின் குரலை அந்த நேரத்தில் எதிர்பாராதவர்கள் சத்தம் வந்த திசை திரும்ப கண்ணில் அனலுடன் நின்றிருந்தாள் அகழ்யா..

அந்த நேரம் அகழ்யாவை வர்ஷினி மறந்திருந்தது தான் அவள் செய்த தவறு. யாரோ பெண் தன்னைக் காக்க வந்தவள் என்றெண்ணிய வர்ஷினி அவளருகில் ஓட "போ.." என்றாலே பார்க்க விட்டால் போதுமென திரும்பிக் கூட பார்க்காமல் வர்ஷினி வந்து விட்டாள். ஆசிரமத்திற்கு வந்தவள் இந்த விடயத்தை பற்றி வெளியில் மூச்சுக் கூட விடவில்லை. அதன் பின்னரே அவள் ஹைதரபாத் சென்றிருந்தது..

...

திக்கித் தினறி கூறி முடித்தவளை ரௌத்திரத்துடன் பார்த்திருந்தான் ஆதித்யா. அவனைப் பார்த்தவளுக்கு இன்னும் அச்சமாய் இருக்க ஏங்கி ஏங்கி அழுது நின்றவள் இன்னும் பயந்து தான் போனாள். தன் அனைத்து உணர்வுகளையும் அவளுக்காக கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டவனுக்கு என்ன செய்தாலும் முகத்தின் இறுக்கத்தை தளர்த்த முடியவில்லை..

அவளும் அன்று காயப்பட்ட அந்தக் கையைத் தான் அழுத்திப் பிடித்து உதடு வேதனையில் துடிக்க நின்றிருந்தாள்.

அதனைப் பார்க்க சகிக்காதவனாக அவளை இழுத்து மென்மையாக கட்டிப் பிடித்தான் ஆதித்யா.

அவளுக்கும் அந்த அணைப்பு தேவை என்பதால் அப்படியே நின்றிருந்தாள். பின் அவளை விழத்தியவன் "ஹூ இஸ் தட் லேடி...?" எனக் கேட்க தெரியாது என உதட்டை வளைத்தவளுக்கு தான் மின்வெட்டினாற் போன்று அவளது முகம் மனதில் வந்து போனது.. ஆம் அகழ்யாவே தான்.. ஆனால் அதனை அவனிடம் எப்படிச் சொல்வதென அறியாதவளாய் கண்கள் கலங்க நிற்க அவனே சொல்லுமாறு தூண்டி இருந்தான்.

"அது யாரா இருந்தாலும் பரவாயில்லை... ஹூ இஸ் தட்...**" மீதி வார்த்தைகளை வாயினுள்ளே கடித்துத் துப்பினான்.

தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போக தலையை கோதி விட்டவனை பார்த்து மறுபடியும் வர்ஷினி கண்களை அகழ விரித்து நிற்க பல்லைக் கடித்தவன் ஓங்கி மேசையில் தட்ட அதிலிருந்த பொருட்கள் சில்லு சில்லாய் தெறித்தன...

உடல் வாரித் தூக்கிப் போட "அ...அன்று உ..உங்களை தி..திருமணம் செய்ய இ..இருந்தவங்க...." என்றவளின் பதிலில் "எதிர்பார்த்தேன்..." என்றவாறு அவளது அடுத்த எதிர்வினையைக் கூட பார்க்காமல் சடாரென கதவைத் திறந்து கொண்டு வெளியேறி விட்டான்..

போகும் அவனையே வேதனையுடன் பார்த்து நிற்பது இவளது முறையாகிற்று..

தொடரும்...

தீரா.