• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கர்வம் 31

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
ஆதித்யா வேகமாக வெளியே வர அவனது முகத்தில் இருந்த வெறியைப் பார்த்து மூவருக்கும் நெஞ்சம் பதபதைத்தது... அடுத்து அவனைத் தொடர்ந்து வந்த வர்ஷினியின் முகம் அழுது கசங்கிப் போய் இருக்க இன்னும் இன்னும் குழம்பினரே தவிர தெளிவு கிடைத்த பாடில்லை.

இவ்வளவு நாளும் அமைதியின் மொத்த உருவமாய் இருந்தவள் தீராவின் புறம் திரும்பி "அ..அண்ணா அவர் கோவமா போறார்..." என கண் கலங்க உதட்டைப் பிதுக்க அவளது செய்கையில் வேறு ஏதும் கேட்க மனம் வராமல் "டோன்ட் வொரி.. நான் பார்த்துக்கிறேன்..." என்றவன் திரூவிடம் கண்ணசைத்து விட்டு நண்பனைத் தேடிச் சென்றான்.

மீதி நின்ற இருவரில் விக்ரமை அவள் பாவமாய் பார்க்க அவன் பார்வையாலே என்னவெனக் கேட்க ஒன்றுமில்லை என தலையசைத்தாள். பின் அவளையும் விக்ரம் கேண்டின் அழைத்து சென்று விட்டான்...

"கடைசிலே நான் மட்டுந்தானா....?.அவ்வ்..இந்த விக்ரம் கூட என்னை கணக்கெடுக்கல்ல" என அவனையும் கரித்துக் கொட்டிவாறு புலம்பியபடி திரூபனும் கோட்டிற்கு சென்று விட்டான்.

...

"ச்சே நாம, ஒருத்தனுக்கும் முக்கியமில்லை..." என முணுமுணுத்துக் கொண்டே முகத்தை உற்றென வைத்தவாறு வந்து கொண்டிருந்தவனைப் பார்த்து தலையிலடித்தவள் "நீ எனக்கு முக்கியம் தான்டா பங்கு..." என பெருந்தன்மையாக கூறினாள் அவள்...

அவள் மேக்னா...!!!

"போடி கடுப்படிக்காம..." என விரிட்டி விட்டவனின் கல்லூரி நண்பி தான் இவள்.

"என்னடா வழக்கம் போல உன் நட்ப்ஸ் உன்னை கலட்டி விட்டுடானுங்க போல..." என்றவளை முறைத்து வைத்தான் திரூ..

"இப்படில்லாம் பாசமா பார்க்காதடா நண்பா..வெட்கமா வருது.. " என்றவள் தரையில் கோலம் போட

"போடி பிசாசு..." என வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டவன் "நமக்குனு வந்து வாய்க்குது பாரு..." என்றுவிட்டு அவளைக் கடந்து சென்று விட்டான்.

அவளும் சிரித்துக் கொண்டே அவன் பின்னே ஓட

"எதுக்கிப்போ வாலு மாதிரி பின்னாடி வரே...?"

"உனக்காக நான் இருக்கிறேனு காட்ட வேணா..அதுக்குத் தான்டா தண்டம்..." என்றவளுக்கு தலையில் தட்டிய திரூ "யாருடி தண்டம்..நீ தான்டி வீட்டுல சும்மா திண்டுட்டு உடம்ப வளர்த்து வச்சிக்க.. பாரு நல்லா கொளுத்த கத்தரிக்காய் மாதிரி இருக்கிற..." என்றவனது பேச்சில் பெண்ணவள் வெகுண்டெழுந்து விட்டாள்.

நீதிமன்றம் என்றும் பாராமல் அவனை அடிக்க அவள் துரத்த அவனும் அவளுக்கு போங்கு காட்டிக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தான்.

இது சரிப்பட்டு வராது என நினைத்தவள் ஆஆஆஆஆஆ என அலறிக் கொண்டு காலை நொண்ட விளையாட்டைக் கைவிட்டு விட்டு பதறிக் கொண்டு ஓடி வந்தான் திரூபன்.

"ஏய் என்னாச்சுடி...?" என்றவன் அவளது காலைப் பிடிக்க குனிய அப்படியே அவனது தலை முடியை பிடித்து ஆட்டியவள் தனது கைக்கு சிக்கிய இடமெல்லாம் அடித்தாள்..

"யாருடா கத்தரிக்காய்...?" என அவளும் "சனியனே விடுடி....ஆஆஆ" என அவனும் அலற பார்ப்போருக்கு ஒரே குஷியாகிப் போய் விட்டது. இந்த வயதிலேயும் விளையாட்டுப் பிள்ளைங்களாய் இருக்கும் அவர்களைப் பார்த்து சிரித்தவாறே சக லாயர்ஸும் கடந்து போக "எருமை எல்லாரும் நம்மலத் தாண்டி பாக்குறாங்க.. விடுடி.." என கஷ்டப்பட்டு விடுபட்டவன் அவளை முறைத்துக் கொண்டே தலைமுடியையும் கசங்கிய சட்டையையும் சரி செய்ய அப்போது தான் அவள் சுற்றி முற்றிப் பார்த்தாள்.

வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள வாயில் விரலை வைத்து கடித்தவள் ஓடிப் போய் திரூபனின் கையைப் பிடித்துக் கொண்டு முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அவள் குழந்தைத் தனமாகவே அவனது முடியை இழுத்து விட்டாள். அவனுக்குமே வலிக்கவில்லை தான். இருந்தும் பாசாங்கு காட்டியவனுக்கு, இப்போதைய இவளது நிலை சிரிப்பைத் தர அவள் பக்கம் திரும்பி "ஓகே வா உள்ளே போகலாம்..." என தங்களது அறைக்குள் அழைத்துச் சென்றான்.

ஆனால் இருவரினதும் முகத்தில் புன்னகை குடி கொண்டிருந்தது..

உனக்காக நான் இருக்கிறேன் என அவள் கூறியதை அவன் நினைத்துக் கொண்டும் விளையாட்டிற்காக தான் நடித்ததற்கு அவன் பதறியதையும் மாறி மாறி நினைத்துக் கொண்டு புன்னகையுடன் சென்றனர்.

...


ஒரு மணி நேரத்திற்குள் வர்ஷினியின் இந்த நிலைக்கு காரணமான அனைவரையும் வலை வீசி பிடித்திருந்தான் ஆதித்ய தேவ்.

தீராவும் அங்கே தான் இருந்தான். வரும் வழியிலேயே அவனிடம் அனைத்தையும் மேலோட்டமாக சொல்லி இருக்க அவனுக்குமே ஆத்திரம் தான். ஆனாலும் இப்படி எடுத்த எடுப்பிற்கெல்லாம் எத்தனை கொலைகள் தான் செய்வது. அதனாலே ஆதித்யாவிடம் கெஞ்சிக் கூத்தாடி எந்தக் கொலையும் செய்யக் கூடாது, அவர்களில் யாருடைய உயிரும் போகக் கூடாது என சத்தியம் வாங்கி இருந்தான். ஆனால் அவன் அடிக்கும் அடிக்கு இந்தக் கொலையே மேலானது என அவன் சிந்திக்கும் நேரமும் வெகு தூரமில்லை..

மொத்தமாக ஏழு பேரை தூக்கி இருந்தான் தேவ். யாரந்த ஏழாவது ஆளுனு தானே பார்க்குறீங்க..வேறு யாரு!? அம்மணி தான்.. அது தான் அகழ்யா...!!!

அனைவரும் கட்டப்பட்டிருக்க அகழ்யாவோ கத்திக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். ஆதித்யா அவளின் பக்கம் திரும்பியதாக இல்லை.

தீரா தான்.. "ச்சே வாய மூடு.. நானும் பார்த்துட்டே இருக்கேன் ஏதோ குட்டி போட்ட பூனை முதிரி க்கியா மியானுன்டு இருக்க..." என காதைக் குடைந்தான். தீராவையும் சேர்த்து முறைத்தவள் "தேவ் கட்ட அவுத்து விடுடா.. நான் யாருனு தெரிஞ்சும் இப்படி கடத்த உனக்கு எவ்வளவு தைரியம்..." என நறநறுத்தாள்.

"ஓஓ இவ பெரிய உலக அழகி, இவளை ஊர் முழுக்க சொல்லிட்டு கடத்துவாங்க பாரு.. நல்லா பவுடர்ல முக்கி எடுத்த மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்ட வாய் வேற..." என கடுப்படித்தான்.

"டேய் நீ ரொம்ப ஓவரா பேசுற..." என்றாள் மூக்கு நுனி விடைக்க..

"என்னது டேயா..? டேய் தேவ் இவனுங்கள போட்டுதள்ளுறதுக்கு முன்னுக்க இவள போடு டா.. வந்ததுல இருந்து ஓட்ட சட்டிக்குள்ள நண்டை விட்ட மாதிரி லொட லொடனு..." என இப்போது தீரா முறைக்க அவள் ஏதே திட்ட வருவதற்குள் கதிரையில் இருந்து எழுந்திருந்தான் ஆதித்யா.. அதில் அவளது வாய் கப்சிப் என மூடிக்கொள்ள அவனது கண்ணில் தெறித்த அனலில் மற்றைய அறுவருக்கும் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

"என்ன மச்சி ஆரம்பிக்கலாமா...?" இப்போது தேவ்.

"அத தானடா நானும் அரைமணி நேரமா சொல்லிட்டு இருக்கேன்.. முதல்ல இவள்ள இருந்து ஆரம்பி மச்சான்..." என அகழ்யாவைக் கண் காட்ட லத்தியை கையில் எடுத்து நுனியில் தூசி தட்டியவாறு அவளை நோக்கி வந்தான் தேவ்.(டேய் தீரா உன் லத்தி உனக்கு உதவுதோ இல்லையோ அவனுக்கு நல்லாவே உதவுதுடா...)

இங்கே தீரா குச்சியொன்றை கையில் எடுத்து பல்லுக்குத்தியவாறு இடத்தை விட்டு நகர அவ்விடம் வந்த தேவ் அகழ்யாவைப் பார்த்த பார்வையில் அவளுக்கு பயப் பந்து தொண்டையில் உருண்டது. அதனை அனு அனுவாக இரசித்தவன் லத்தியை எடுத்து ஓங்கி விட்டிருந்தான் நடு மண்டையில் ஓர் அடி.. இடியென அடி விழ ஆஆஆஆஆஆ என்று அலறித் துடித்தான் அவளருகில் இருந்தவன்.

இவளோ தனக்குத் தான் அடி விழப் போகிறதோ என கண்களை இறுக்க பொத்திக் கொள்ள அடி விழுந்ததோ அவனுக்கு... அதற்குப் பின்னர் என்ன, ஒரே ஜாலியா ஜிம்கானா தான்.. அடி என்றால் அடி சுக்கு நூறாக்கி விட்டான். கொஞ்சம் அவனின் அடியின் வலிமை குறையும் போதெல்லாம் வர்ஷினி கையெடுத்து கும்பிட்டு "விட்டுடு" என கூறியது மண்டையினுள் நுழைந்து இம்சிக்க ஆத்திரம் தீருமட்டும் அவர்களுக்கு வெளுத்தான். அந்த நொடியில் அரக்கர்களின் உயிர் போய் வந்தது..

உடல் முழுக்க இரத்தம் தெறிக்க எழும்புகளை நொருக்கி இருந்தான்...உயிர் மட்டுமே உடலில்..!!

பார்த்துக் கொண்டிருந்த அவளுக்கே அந்த அடி அவளது உடலில் படுவது போல வலித்தது. பெண்ணல்லவா, கண்கள் கலங்கி விட்டன.

தீராவோ மனதில் "இதுக்கு இவன் ஒரு புல்லட்ட இறக்கி இருந்திக்க நோகாம போய் சேர்ந்திப்பானுங்க..." என நினைத்தவன் மறந்து கூட அவனை தடுக்கவில்லை. வர்ஷினி பட்ட வலியையும் வேதனையையும் உணர்ந்தவனாக நின்று கொண்டான்.

அனைத்துத் தலைகளும் குருதியுடன் தொங்கிக் கொண்டிருந்தன.. இறுதியாக குத்துயிரும் குழையுயிருமாக கிடந்த ஒருவனின் உச்சி முடியை பிடித்து தலையைத் தூக்கியவன் "யாரு என் வர்ஷினியைத் தொட்டது...ம்ம்..?" என்றானே பார்க்க தீரா அதிர்ந்து நண்பனின் முதுகை வெறித்தான்.

இவனோ விடாமல் கேட்க அவனென்ன சொல்லக் கூடாது என்றா கிடக்கிறான். கண்களைத் திறக்கக் கூட ஜீவனற்றுக் கிடந்தான்.

அவனை எட்டி உதைய கதிரையுடன் சரிந்து விழுந்தவன் மெல்லக் கண் திறந்து ஒருவனைக் கை காட்ட அந்தோ பரிதாபம் அவனின் கை எழும்பு நொறுங்கியது...

அகழ்யாவோ அதிர்ந்து ஆஆஆ என கத்தி இருந்தாள். பார்த்தவளின் நிலையே அப்படி என்றால் அவர்களின் நிலை...!?

அத்துடன் வந்த வேலை முடிந்தது எனக் கருதினானோ தன் அக்மார்க் நடையுடன் வெளியேறி விட்டான். தப்பித்தோம் என அகழ்யா நினைத்திருக்க அடுத்த நிமிடம் உள்ளே நுழைந்தனர் லேடி காண்ஸ்டபில்ஸ்... தன் கதி புரியாமலா அவளிற்கு... இதோ அவள் கதறக் கதற அவளை விழங்கிட்டு இழுத்துச் சென்றனர்...


***


"தேவ் நீ வர்ஷினியை லவ் பண்ணுறியா..?" கார் ஓட்டிக் கொண்டு வந்தவனிடம் தீரா வினவினான்.

அவனைத் திரும்பிப் பார்த்தவனின் கண்களில் தெரிந்தது என்ன..!?

"என்னடா பதிலையே காணோம்.. அப்போ ஐயா சரண்டராகிட்டாரு போல..." என ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே அவன் கேட்க அப்போதும் அதே புன்னகை...

சற்றுத் தூரம் வந்திருப்பார்கள் தூரத்தில் ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.. யோசனையினூடே காரை அவள் நோக்கி செலுத்தியவனுக்கு நடையிலே விளங்கியது அது வர்ஷினி என.

அவளோ உலகமே சிந்தனையற்று தன் கடந்த காலத்தை எண்ணியவாறு நடந்து வந்து கொண்டிருக்க அவளுக்கு அருகில் சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் அவளைத் திட்டி விட்டு கடந்து சென்றனர். அவள் வந்து கொண்டிருந்ததோ சற்று பாதையினுள்... வாகன நெரிசலான நேரம் அது..

அதனை பார்த்தவன் பற்களை நறநறுத்தான். அறிவற்றவள் போல நடு வீதியில் நடந்து வருபவளை பார்த்து கொந்தளித்து விட்டான் தேவ்..

"இடியட்..." என திட்டியவன் காரின் வேகத்தைக் கூட்ட தீரோவோ புரியாமல் "என்னடா...?" என்கவும் "அங்க பாரு..கண்ணை எங்க வச்சிட்டு வராளோ தெரியல..." என்றவனின் கூற்றில் ஊன்றி கவனித்தவனே அதை கண்டு கொண்டான். ஆம் வர்ஷினிக்கு நேர் பின்னே வேகமாக ட்ரக் ஒன்று வந்து கொண்டிருந்தது..

"டேய் மச்சி தங்கச்சிக்கு பின்னாடி..." என கத்தியவனின் அதிர்ந்த சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவனுக்கு இதயம் நின்று துடித்து.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக காரை ஒடித்து திருப்பி நிறுத்தியவன் இறங்கி ஓடினான். அவன் வந்து கொண்டிருந்ததோ பாதையின் அந்தப் பக்கம். இவள் வந்ததோ மறு பக்கம்...

தீராவும் அவசரமாக இறங்கி ஓடி வருவதற்குள் அந்தோ பரிதாபம்......!!!

தொடரும்...

தீரா.