• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கர்வம் 34

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
"அண்ணா என்னால உங்களுக்கு வீண் சிரமம்..." என ரதி தலைகுனிய "எந்த அண்ணனுக்கும் அவன் தங்கச்சி சுமை இல்லை..." என்று தீரா கூறிவிட்டு பாதையில் கவனம் செலுத்த அவளுக்கு சட்டென கண்கள் கலங்கிவிட்டன..

அப்படியே மௌனமாக சாலையின் பக்கம் திரும்பியவளின் சிந்தனை பின்னோக்கி சென்றது...


...


"அப்பறம் முதல் நாள் வேலையெல்லாம் எப்படிப் போச்சு...?" என தீரா கிண்டலடிக்க

"அதெல்லாம் நல்லாத்தாண்ணா இருந்துச்சு..." என்றவளின் குரல் தேய்ந்து ஒலித்தது..

"என்னமா ஏன் வொயிஸ் டல்லா இருக்கு...ஹெவி வேர்க்கா...?" என அண்ணனாக மனம் சுணங்கியவனிடம் "அதெல்லாம் இல்லை..லைட்டா ஃபீவர் மாதிரி இருக்கு.." என்றவள் இரும சட்டென மின்னல் வெட்டினாற் போன்று ஒரு யோசனை வர அதை நிறைவேற்ற நாடியவனாக "ஹேய் ரதி நீ கிளம்பி ரெடியா இரு.. இதோ ஹாஸ்ட்டல் பக்கம் தான் ரவுன்ஸ் வந்திருக்கேன். உடனே வரேன் ஹாஸ்பிட்டல் போகலாம்..." என்றவன் பட்டென அழைப்பைத் துண்டிக்க "வே.. வேண்டாம்..." என தடுக்க வந்தவள் அழைப்பு துண்டிக்கப்பட்ட சத்தத்தில் ஃபோனாலே தலையில் அடித்துக் கொண்டு ரெடியாகச் சென்றாள்.

இவளையும் அனு இருந்த ஹாஸ்டலிலே சேர்த்து விடப் போக அங்கே இடமில்லை எனக் கூற வேறு வழியில்லாமல் வேறொரு ஹாஸ்ட்டலில் சேர்த்து விட்டான். ரதி பற்றிய அனைத்தையும் அனுவிடமும் கூறி இருந்தான். அதற்காக அவள் அண்ணன் தங்கை பாசமலர் படத்தை ஓட்டித் தள்ளியது வேறு கதை...

...


இப்படியே அவன் அழைத்து வந்தது வேறு எங்கே..? அரவிந்தின் தனியார் மனித்துவமனைக்குத் தான்... (இதுக்குத் தான் நீ பிள்ளையார் சுழி போட்டு டயலாக் விட்டேனு ஐக்கு நோ...)

அவள் அமைதியாக வர அவனும் அப்படியே கதையை கத்தரித்தவன் நேரே கொண்டு வந்து ஹாஸ்பிட்டல் வாசலில் நிறுத்தி இருந்தான்.

அவள் இறங்கவே உடன் இறங்கியவனும் உள்ளே செல்லப் போக அப்போது தான் அவள் பெயர் பலகையை கவனித்தாள். அரவிந்த் தனியார் மருத்தவமனை என்பதைப் பார்த்தவள் "அ..அண்ணா..." என அதிர்ந்து விழிக்க என்னவென புரியாதவன் போலக் கேட்டவனிடம் "அ..அ..அத்தான்.." என இன்னும் அதே போல் நிற்க "ஆமா அத்தான், அந்த பொத்தான் தான்..."என நேரம் காலம் தெரியாமல் வாயளந்தவனிடம் "ப்ச் அண்ணா இங்க ஏன்...?" என புரியாமல் கேட்டாள் ரதி.

"இதென்னடா கேள்வி..?நீ தானம்மா ஃபீவர்னு சொன்ன. அது தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்தேன்.." என தோளைக் குலுக்கிவிட்டு பபில் கம் ஒன்றை எடுத்து வாயில் போட்டவனின் செயலில் பல்லைக் கடித்தாள் தங்கை.

"ஓகே கூல்.. நீயும் அரவிந்தும் சேரனும்னா இப்படி மெல்ல மெல்ல நெருக்கினாத் தான் உண்டு.. இல்லை கஷ்டம் தான்..." என்றவன் கூறிய நியாமான பேச்சில் ஏனோ அவள் மனம் அரவிந்தை நினைத்துக் கொண்டது..

"கனவு கண்டது போதும். மொதல்ல வா போய் அவனைப் பார்ப்போம்.." என்றவன் அவளை கலாய்க்க அவனது பேச்சில் மெல்லச் சிரித்து தலை குனிந்தாள் ரதி.

பின் இருவருமாக உள்ளே சென்று அரவிந்தின் அறைக் கதவை திறக்கப் போக ரதியின் கால்கள் பின்வாங்கிக் கொண்டன.

அவளைப் திரும்பிப் பார்த்தவனுக்கு அவளின் தயக்கம் நன்றாகவே புரிந்தது.. அதன் பின் அவளை உருட்டி மிரட்டி உள்ளே அழைத்துச் சென்றான்.

ஏதோ கோப்பு ஒன்றை கண்ணாடியை சரி செய்தவாறு பார்த்துக் கொண்டிருந்தவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க முதலில் உள்ளே வந்தது என்னவோ தீரா தான்..."வாடா நல்லவனே..." என்ற அரவிந்த் அப்போது தான் அவனைத் தொடர்ந்து வந்த ரதியைக் கவனித்தான்.

"நீங்க கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. நான் மறுபடி கூப்பிடுறேன்.."என்றவனை புரியாமல் இருவரும் பார்த்து நின்றனர். அவன் ரதியை மறந்திருந்தான். ஏதோ பேசண்ட் எனத்தான் நினைத்தான் இப்போது.

"நீ என்னடா நின்ட ஊர்ல இருந்தா வந்த.. இரியன்டா..."என அரவிந்த் தீராவைப் கேலி செய்ய பல்லை நறுநறுத்த தீரா "ம்ம் பேசண்ட் நான் இல்லை இவ தான்..." என சுவரை வெறித்து நின்ற ரதியைக் சுட்டிக் காட்டினான்.

"ஓஓஓ என்ட் இவங்க கூட நீ..?"என நண்பனைக் கேள்வியாய் அவன் பார்க்க பேண்ட் பாக்கெட்டினுள் கையிட்டு நின்றவன் அரவிந்தையே அழுத்தமாக பார்த்துக் கொண்டு "தங்கச்சிக்கு உடம்புக்கு சரியில்லைனா அண்ணன் தானே அழைச்சிட்டு வரனும்..." என்றவனை அதிர்ந்து பார்த்த அரவிந்த் "வாட்..அண்ணனா..?" என்றவனிடம் விளக்க விருப்பம் இல்லாதவன் "இப்படியே கேள்வி கேட்டுட்டு இருக்கப் போறியா..?இல்லை அவளுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்க போறியா..? இஷ்டம் இல்லைனா சொல்லு நான் வேறு டாக்டரைப் பார்த்துக்கிறேன்..." என்றவன் அத்துடன் நில்லாமல் ரதியை கைபிடித்து அழைத்து செல்ல முன்னேற

"ப்ச்..டேய் ஏன்டா... வா மொதல்ல.. அவங்களை வந்து உட்காரச் சொல்லு..." என்றவன் நண்பனை வேற்றுக் கிரகவாசி போல பார்த்து வைத்தான். பின்ன சும்மா சும்மா கோபப்படுகிறானல்லலா...!!

ரதியிடம் கண்ணை சிமிட்டுவிட்டு நமட்டு சிரிப்புடன் வந்து ஆளுக்கு ஒரு இருக்கையில் அமர அரவிந்த் அவளிடம் விசாரித்தான்.

இருவருக்கும் தனிமையை கொடுக்க நாடியவன் வராத காலை அட்டண்ட் செய்து காதுக்கு கொடுத்துவிட்டு எழுந்து சென்றான்..."யா.. இங்க சிக்னல் சரியா கிடைக்கவில்லை.. ஆமா ஒரு மாங்காமடையண்ட ஹாஸ்பிட்டலுக்கு தான் வந்திருக்கிறேன்.." என்றவன் அப்படியே சென்று விட்டான்.

அவனது பேச்சில் அரவிந்திற்கு காதில் புகை வராத குறைதான்.. வாயினுள் நண்பனை கரித்துக் கொட்டியவன் இங்கே திரும்ப, ரதிக்குமே தீராவின் பேச்சில் சிரிப்பு வந்து விட்டது. எனினும் தன்னை தனியே விட்டுச் செல்பவனிடம் "அண்ணா..." என மெல்லிய குரலில் அழைக்க அந்தக் குரலை எங்கோ கேட்டது போல இருந்தது அரவிந்திற்கு..

அவளை பரிசோதித்தவன் சாதாரண காய்ச்சல் தான் மருந்து எடுத்தால் சரியாகிவிடும் எனக் கூறி முடித்தான்.

அவள் எங்கே அதனைக் காது கொடுத்துக் கேட்டாள். நிமிடத்துக்கு நிமிடம் அவளது இதயம் படு வேகமாக துடித்தது.. அவள் அவஸ்தையுடன் அவன் முன் இருக்க சின்ன சிரிப்புடன் அவளைப் பார்த்து "ஹேய் ரிலேக்ஸ்.. இந்தாங்க இந்த வாடரைக் குடிங்க.." என்று நீட்டவும் மறுக்காமல் வாங்கி பருகிய பின்னரே அவள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள்.

"ஆர் யூ ஓகே நவ்...?" என்றவனிடம் ம்ம என தலையாட்டி வைத்தாள் ரதி..

சிறிது நேரம் இருக்க, தீரா வந்தபாடில்லை. திரும்பி தீரா வருகிறானா இல்லையா என்று பார்ப்பதும் மீண்டும் குனிவதுமாக இருந்தவளை விசித்திரமாகப் பார்த்தவன்,அவளிடம் பேச்சை வளர்க்க நாடி "ஆமா உங்க பேர் என்ன..?" என்றான் அரவிந்த்.

திடீரென அவன் பேசவும் திடுக்கிட்டு களைந்தவள் "ஆங்..?" என்கவும் "சரியாப் போச்சு..." என வெளிப்படையாகவே கூறி இதழ் விரித்தவன் "வட்ஸ் யுவர் நேம்...?" என்கவும் பகீர் என்றிருந்தது ரதிக்கு...

தன்னைக் கண்டு கொண்டு விடுவானோ என்று பயந்து போனவள் திக்கித் தினறி "ர..ரதி..." என்றுவிட்டு அவனை கலக்கத்துடன் பார்க்க, ஓஓ என்று மட்டும் சொன்னவனுக்கு ஏனோ முகம் தெரியாத தன் அத்தை மகளின் குரல் செவியைத் தீண்டிச் சென்றது.. மூச்சுக்கு முந்நூறு தடவை அத்தான்..அத்தான் என அழைப்பவளின் குரலை இந்த கொஞ்ச நாட்களாக கேட்காதது அவனுக்கு ஏதோமாதிரித் தான் இருந்தது.. அவளுக்கு என்னானதோ? ஏதானதோ? என உள்ளம் வேறு பதபதைத்தது...

தன் சிந்தனையை சற்று ஒதுக்கி வைத்தவன் "ஆமா இப்போ எங்க இருக்கிறீங்க...?" என்றான்

"ஹா..ஹாஸ்டல்ல.."என்றவளின் பார்வை அவனைத் தான் வெறித்தது.

"ஹாங்...அப்போ உங்க அப்பா அம்மா எங்கே..சொந்த ஊர் சென்னை தானா..?" அரவிந்த் கேட்க வலியுடன் உதட்டை விரித்தவள் "அப்பா அம்மா இறந்துட்டாங்க.."

இப்போது அவனது முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய்.. அவளது வலியுடனான சிரிப்பு அவன் உயிர் வரை சென்று தீண்டியது.

இப்போது அவள் சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கண்ணிலிருந்து கண்ணீர் வடிய அதனை அவனுக்கு தெரியாமல் துடைத்து விட்டாலும் அவன் கண்டு கொண்டான்.

"சா..சாரி..." என்று மன்னிப்பு வேண்டியவன் பக்கம் திரும்பியவளின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை... ஆனால் அவன் கேட்காமலே அவள் கூறி இருந்தாள்...

"கொஞ்ச மாசத்துக்கு முன்னாடித் தான் அம்மாக்கு **வருத்தம் வந்தது.. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனா லாஸ்ட் ஸ்டேஜ் காப்பாத்த முடியாதுனு சொல்லிட்டாங்க.. எனக்கும் எங்கப்பாக்கும் என்ன செய்றதுன்னே புரியல்ல.. இன்பெக்ட் எங்க வீட்டுக்கு அம்மா தான் உயிர்நாடி.. அவங்களுக்கு எதும்னா எனக்கும் எங்காப்பாக்கும் கையும் ஓடாது காலும் ஓடாது.. அப்படி இருக்க அவங்களுக்கு இந்த நோய் வந்தால்...?" என்று நிறுத்தியவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வாயில் கை வைத்து அடக்கியவளை மனம் தடதடக்க பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.. ஏதோ ஒன்றை உணர்த்துவது போல இருந்தது அவளது பேச்சு..

பின் தொடர்ந்தவள் "அப்படியே கொஞ்ச நாளில் அம்மா படுத்த படுக்கை ஆகிட்டாங்க. ஒரு நாள் கூப்பிட்டு எனக்கிட்ட அவங்க அண்ணனோட மகனின் ஃபோன் நம்பரை கையில தந்தவங்க ஏதேதோ பேசுனாங்க.. நானும் ஏதோ ஒரு இதுல அதை கணக்கெடுக்கல்ல.. ஆனால் பிறகு தான் தெரிஞ்சது அவங்க பேசின கடைசி வார்த்தை அது தான்னு.." என்றளுக்கு கன்னம் தாண்டி மூக்கை கண்ணீர் தழுவ அழுந்த துடைத்து விட்டவள் " அ..அ..ம்..அம்மா.." தொண்டை கமறியது அவளுக்கு.."அம்மா இறந்துட்டாங்க.. எங்க அம்மாவும் அப்பாவும் காதல் செய்து கல்யாணம் பண்ணிகிட்டாங்க.. அவங்க அண்ணன்னா அம்மாக்கு அப்படி உசுரு.. இருந்தும் காதலித்தவரையும் விட மனமில்லாமல் ஓடிப் போய்டாங்க.. அண்டைல இருந்து அவங்க அண்ணன் அவங்க கூட பேசுற இல்லை. அம்மாவால இதை தாங்கிக்கவே முடியல்லை.. அதுக்கப்றம் எங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. எங்க அப்பாட சைட்ல அவருக்கு சொந்தம்னு யாருமில்லை. அதனால தனித்து விடப்பட்டுட்டோம் நாங்க. இருந்தாலும் பாசத்துக்கு குறை இல்லாம வளர்த்தாங்க.. ஆனாலும் என்ன பிரயோஜனம் என்னையும் தனிய இந்த சுயநலவாதிகள் நிறைஞ்ச பூமில விட்டுட்டுப் போ..போய்டாங்களே..." எவ்வளவு தான் தைரியமாக பேச நினைத்தாலும் கடைசியில் குரல் நடுங்கியது..

"அம்மா இறந்தன்னைக்கே அப்பாவும் அவங்க மடில சாஞ்சி இறந்துட்டாரு..." என்றவளின் முகம் வேதனையில் கசங்கி இருந்தது..

ஆயிரம் உயிரை காப்பாற்றுபவனுக்கு தெரியாதா ஓர் உயிரின் வெலிவ்.. அது இல்லாத போது வரும் வேதனையை அவர்கள் அறிவர். அப்படித்தான் ரதியின் வலியை தன் வலியாக நினைத்து அவன் நெஞ்சம் பிசைந்தது..

"ஆனால் அன்னைக்கு எனக்கு ஆறுதலுக்கு கூட ஒரு தோள் கிடைக்கவில்லை.. வலிச்சுது.. இதோ இப்போவும் வலிக்கிது..." என்றவள் மேசையில் அழுத்தத்தைக் கூட்டி தன்னைக் கட்டுப்படுத்த முயற்சித்தாள்..

"அப்போ தான் எனக்கு அம்மா கொடுத்த நம்பர் நினைவு வரவும் அடிச்சுப் பிடிச்சு நம்பரைத் தேடி கால் பண்ணினேன்..ஆ..ஆனால்.." எனக் கையை விரித்து காட்டிவள் "அவரு நா..நான் சொன்னதை நம்பாம க..கட் பண்ணிட்டாரு.. அம்மாவோட கூடப்பொறந்தவங்க என்றாலும் அவங்களுக்கு எங்க அம்மாட உயிரை விட கௌரவம் பெருசாப் போச்சு.. இருந்தாலும் அவங்க தகுதி வேறு எங்க தகுதி வேறு தானே ..." என்றவளது கூற்றில் அரவிந்த் சிலையாகி அமர்ந்திருந்தான்.

"அதுக்குப் பிறகு அவருக்கு எவ்வளவோ தடவை கால் பண்ணி என் நிலைமையை உணர்த்த முயற்சி செய்தேன்.. அவங்க புரிஞ்சிக்கல்ல.. எ..எனக்கு என் அப்பா அம்மா இல்லாத வீடு நரகம் மாதிரி இருந்தது.. அழுதேன்..கதறினேன்.. பைத்தியம் மாதிரி பயந்து பயந்து கத்தினேன்...ஆனால் அதெல்லாம் அந்த கடவுளுக்கு கேட்கவில்லைப் போல..அது தான் இன்னும் என்னைய உயிரோட வச்சிருக்காரு.. அந்த சமயத்துல தான் கடவுள் மாதிரி தீரா அண்ணா வந்தாரு.. எனக்கு இரத்த உறவுல கூட சம்பந்தமில்லாத அவரு எனக்காக என் கதையைக் கேட்டு கண்ணீர் விட்டாரு..அவர் எனக்கு அண்ணா மட்டுமில்ல இன்னொரு அப்பா அம்மா..." என்றவளது பேச்சில் அரவிந்தின் இதயம் அடிபட்டதென்றால் கதவிற்கு அந்தப் பக்கம் கேட்டுக் கொண்டு நின்றிருந்த தீராவிற்கு ஆனந்தத்தில் விழிநீர் வடிந்தது..

"அந்த மாமா பையன் வேறுயாருமில்லை சார்.. நீங்க தான்..." என்றவள் நில்லாமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.

கதவின் சுவரில் சாய்ந்து நின்ற தீராவைக் கண்டு அதிர்ந்தவள் பின் மெல்லப் புன்னகைத்துவிட்டு முன்னே நடக்க விரும்பியே தங்கையின் பின்னால் நடந்தான் தீரா..

தொடரும்...

தீரா.