• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கர்வம் 8

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
நண்பர்கள் நால்வரினதும் வாழ்க்கை தெளிந்த நீரோடை போலத் தான் சென்று கொண்டிருந்தது அந்த நாள் வரும் வரை..

ஆதித்யா ஊருக்கு திரும்பி இரண்டு தினங்கள் ஆகி இருந்தன. அமரா அன்று ஃபோனில் பேசியது மட்டும் தான். அதன் பின் அவனிடம் மூஞ்சியை கூட காட்டவில்லை. சதாசிவம் மகனிடம் பேசுமாறு கூற அதற்கு "நான் அவனுடன் கோபம் பேசுவதாக இல்லை" என முகத்தை திருப்பி இருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் அவனுக்கு பக்கத்தில் போய் நின்று பேச பயம் என்று தான் கூற வேண்டும். (பெத்தவளையே பயம் காட்டி வச்சிருக்கான் பஃபலோ...)

பேசியே காரியத்தை சாதித்துவிடும் தாய் பேசாமல் இருப்பதே மேல் என இவனும் கண்டுக்காமல் விட்டு விட்டான். இவை அனைத்தும் அன்று வரை தான்.

காலையில் ஆபிஸ் செல்ல தயாராகி வந்து சாப்பிட அமர்ந்தவன் சாப்பிட்டு முடியும் வரை தான் அமரா பொறுமையாக இருந்தார்.

"அன்று நாங்க சொன்னதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லவில்லை.." என அவர் தொடங்க காலையிலேயே எரிச்சலானது அவனுக்கு.

முகத்தை கடுகடுகென வைத்துக் கொண்டே "அதற்கு அன்டைக்கே பதில் சொன்னதா நியாபகம்.." என முடிக்க

"நான் அந்த பதிலை கேட்கவில்லை.."

வேறென்ன என்ற தோரணையில் அவன் புருவத்தை உயர்த்த "உனக்கே இவ்வளவு திமிர் என்றால் உன்னை பெற்ற எனக்கு எவ்வளவு இருக்கும்.." என மனதில் நினைத்துக் கொண்ட அமரா "எப்போ வெடிங் டேட் ஃபிக்ஸ் பண்ணலாம்னு கேட்டேன்..உனக்கு ஃப்ரீயா இருக்கிற நாள் சொல்லு.." என அலட்டாமல் இடியை இறக்க

"வாட்...நோன்சென்ஸ் மாதிரி பேசாதிங்க மாம்..." என்று கோபப்பட்டவன் யாரிடம் கூறினால் வேலைக்காகும் என அறிந்திருந்தவனாக தந்தையின் பக்கம் திரும்ப அவரோ இவன் அடுத்து இங்க தான் தாவுவான் என தெரிந்து கொண்டே சாப்பாட்டு தட்டினுள் தலையை புதைத்துவிட்டார்.

அவரின் செயலில் பல்லை கடித்தவனாக ஆதித்யா அமர்ந்திருந்தான். அவனுக்குமே தெரியும் மனைவி மகன் என வந்தால் கட்டாயம் மறுபேச்சில்லாமல் மனைவி பக்கம் தான் தன் தந்தை நிற்பார் என. இருந்தும் தன்னைப் போல பிடிவாதம் கொண்டவர் தன்னை புரிந்து கொள்வார் என அவன் நினைத்திருக்க அவரோ போடா டேய் என இருந்துவிட்டார்.

கணவனின் புறக்கணிப்பில் சிரித்த அமரா மகனை ஏளனமாக பார்க்க அவனோ தாயை முறைத்து வைத்தான்.

அமரா சாந்தமானவர் தான். இருந்தும் தனக்கொரு காரியம் ஆக வேண்டும் என்றால் அவரின் பரிமாணமே வேறு. பேசாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விடுவார். அதற்கு பயந்தே அவரின் தந்தை உட்பட கணவனும் அவர் போக்கில் விட்டு விடுவர். இதோ மகனிடமும் அதே தந்திரத்தை பிரயோகிக்க நாடுகிறார். அவனோ உன்னை அறிவேன் நான் என பிடி கொடுக்காமல் நிற்க உயிரை கையில் எடுத்திருந்தார். எவ்வளவு தான் பிடிவாதம் பிடித்தாலும் தாயின் உயிர் என்று வரும் பொழுது ஊனும் கரைந்துவிடும். அவனின் கல்லான இதயத்தை கரைக்க இங்கே தாயின் கண்ணீர் ஆயுதமாகிப் போனது.

"அப்போ சொன்னது தான் இப்போவும் சொல்றேன். இந்த சம்பந்தத்துக்கு நீ ஒத்துக்கல்லன்னா இந்த அம்மாவ நீ உயிரோடு பார்க்க முடியாது...இதுக்கு மேலே உன் இஷ்டம்" என்று கூறிய அமரா கலங்கிப் போய் இருந்தார்.

இதுவரை தன் வரட்டு பிடிவாதத்தை இழுத்து பிடித்து வைத்திருந்தவனை தாயின் கலங்கிய முகம் அசைத்துப் பார்த்தது என்னவோ உண்மைதான். இதற்கு மேல் பேசிப் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்தவன் மனதில் பல திட்டங்களுடன் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டான்.

அமராவிற்கு தன் திட்டம் ஜெயித்ததில் சந்தோஷம் ஒட்டிக் கொண்டது என்றால் சதாசிவம் இன்னும் தட்டிலிருந்து முகத்தை நிமிர்த்தவேயில்லை. நிமிர்த்தினால் மகன் தன்னை கண்டு விடுவானே..

தாடை இறுக கொதித்துக் கொண்டே கோபத்துடன் கிளம்ப போன தேவ் தந்தையை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டே "பார்த்து தட்டுக்குள்ளே போய்றாம..." என்றுவிட்டு விட்டென சென்று விட்டான்.

மகனின் பேச்சில் பெற்றோர் இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.


...


ஆபிஸ் வந்தவனுக்கு சங்கர நாராயணனினதும் பரனியினதும் சதி திட்டங்களும் அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இவர்களை ஏமாற்ற போட்ட ஸ்கெட்சை அவர்களுக்கே ஓர் ட்விஸ்டாக மாற்றி அமைத்திருந்தான் நவீனகாலத்து ஹிட்லர்.

அவர்களுக்குள்ளே தன் ஆளை அனுப்பிவிட்டிருந்தவன், அந்த ஒற்றையன் மூலம் தகவலை அறிந்த நொடி வேங்கையாக மாறி இருந்தான். இதில் அனைவரையும் நம்பும் தன் தந்தைக்கு மனதில் அர்ச்சனை வேறு.. இருந்தும் இந்த நம்பிக்கை துரோகம் சதாசிவத்தை பாதிக்காதவாறு திட்டங்களை வகுத்திருந்தான் தேவ்.

அதன்படி உடனே திருமண ஏற்பாடுகளை ஆரம்பிக்குமாறு தந்தையிடம் கூறியவனை, இவன் சரியாக சொன்னானா..!?இல்லை நமக்கு தான் தவறாக கேட்டதா!? என்று அமராவையும் சதாசிவத்தையும் குழப்பி விட்டிருந்தான்.

நண்பனின் திருமண விடயம் கேள்விப்பட்ட நண்பர்கள் நெஞ்சில் கை வைத்தனர் என்றால், அடுத்து அவன் கூறிய திட்டத்தில் புஸ் என்றிருந்தது. ஆக திருமணம் ஆனால் திருமணம் இல்லை என்று தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டனர்.. ஹா..ஹா.. (நான் தான் சொல்றன்ல அவனை நம்பாதிங்கனு. நீங்க இளிச்சவாயன்கடா..)

...

இங்கே அகழ்யாவோ ஆதித்ய தேவ்வுடன் திருமணம் என்றதில் வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தாள்.

இவள் மாடன் மங்கை தான். அதனாலே சொத்து, அழகு என மொத்தமும் ஒன்றாக கொட்டிக் கிடந்த ஆதித்யா கிடைக்க போவதில் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவன் எட்டாக் கனி என்பது தான் அவளுக்கு தெரியாமல் போய்விட்டது.

அனுவிற்கும் இவளுக்கும் செட்டே ஆவதில்லை. அனு பிறந்த இடம் தான் தவறாகிப் போனது. ஆனால் அவளோ சேற்றில் முளைத்த செந்தாமரை. அதனாலேயே அகழ்யாவிற்கு தன் தங்கையை பிடிக்காமல் போய்விட்டது. பிறந்ததில் இருந்தே அழகு, குணம் என தன்னில் இருந்து எப்போதும் வேறுபட்டிருந்த அனுவை அகழ்யா கிண்டல் செய்து கொண்டே தான் இருப்பாள். அதுவே அனுவிற்கு அகழ்யா மேல் வெறுப்பை வளர்த்து விட்டிருந்தது. காலப்போக்கில் பேச்சு கூட நின்றுவிட்டது.

இதோ தந்தையின் சூழ்ச்சிகள் தெரியாமல் சகோதரிக்கு திருமணம் என கேள்விப்பட்டவள் எதிலும் ஈடுபடாமல் பேசாமல் மௌனியாகினாள். அந்த திருமணத்தில் தான் தன்னவனை காண இருக்கிறோம் என்பதை அறியாதவள் தன் போக்கில் காலேஜூக்கு தயாராகி சென்றுவிட்டாள்.

..


சதாசிவம் உலகம் போற்றும் முதன்மை தொழிலதிபர்.கோடிக் கணக்கில் சொத்துக்களை வைத்திருப்பவர்.அது போல திமிரும் கர்வமும் கொண்டவர்..பாசம் இருந்தும் வெளிப்படுத்தாதவர்..அவர் பணிந்து போகும் ஓர் இடம் தன் காதல் மனைவி...ஆம் அவர் தான் அமரா..

பரம்பரை பரம்பரையாக பணக்காரரான சதாசிவம் தொழில் வட்டாரத்தில் தனக்கென தடமொன்றை பதித்துக் கொண்டிருந்த நேரம் அது..தனது தந்தை ஓர் பெண்ணை மணக்க சொல்லி கேட்க தனக்கு இப்போது திருமண வாழ்க்கையில் ஈடுபாடில்லை இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும் என சாக்கு போக்கு சொல்லி,வந்த அனைத்து வரன்களையும் தட்டிக்கழித்தார்..

அதற்கு முதற்காரணம் கௌரவம்,அந்தஸ்து தான் என்று கூறினால் நம்புவோர் யாருமில்லை...சதாசிவத்தின் தந்தையோ சாந்தமான இரக்க குணமான ஒருவர்.அவர் வசதியை பாராது நல்ல குணத்தை பார்த்து மகனுக்கு வரன் பார்க்க பிறந்ததிலிருந்து பணத்திலும் செல்வத்திலும் உருண்டு புரண்ட சதாசிவமோ பணத்திற்கு முதலிடத்தை கொடுத்தார்...

அவர் வழியிலே சென்று அவரை மடக்க நினைத்த சதாசிவத்தின் தந்தை உனக்கு வரட்டு கௌரவம் தான் முக்கியம் என்றால் இன்றிலிருந்து உனக்கு இந்த வீட்டில் இடமில்லை என்று கூற இதை நான் எதிர்பார்த்தேன் என அந்த இருபத்தி ஐந்து வயதிலே நெஞ்சை நிமிர்த்தி நின்றார் சதாசிவம்.

அப்போ எனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து கொடுத்துட்டு உங்களுடைய மீதி சொத்துடன் வாழ்ந்து கொள்ளுங்கள் என சதாசிவம் முகத்தில் அடித்தாற் போல கூறிவிட்டார்.

அவை அனைத்தும் நான் சம்பாதித்த சொத்து உனக்கு ஐந்து பைசா கூட இல்லை என கூறி உனக்கு நான் அப்பன் என்பதை நிரூபித்திருந்தார்.

அதில் பற்களை கடித்த சதாசிவமோ தான் உருவாக்கிய இரண்டு கம்பனியுடன் கூடிய சொத்தை தன்பேரில் மாற்றிக் கொண்டு பெற்றவர்கள் என்றும் பாராமல் தனியே விட்டு விட்டு சென்னைக்கு வந்து விட்டார்..

இதனை கேள்விப்பட்ட தொழிலதிபர்கள் இவருடன் அதிருப்தியடைந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவே சில காலம் தொழிலில் நஷ்டமடைந்து கொண்டே வந்தார்.

தந்தையாக மகனின் வளர்ச்சி தடைப்பட்டதில் சதாசிவத்தின் தந்தை கவலையடைந்தாலும் வேறு எதுவும் அவர் செய்திருக்கவில்லை.

அந்த நேரம் தான் அவர் வாழ்வில் தென்றலாக வந்து சேர்ந்தார் அமரா. சதாசிவம் தங்கி இருந்த குடியிருப்பிற்கு முன் இருக்கும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

அவரின் அழகும் குணமும், தராதரம் பார்க்கும் சதாசிவத்தை அடியோடு புரட்டிப் போட்டு காலப்போக்கில் அவர் மீது காதல் வயப்பட்டு திருமண செய்ய முடிவு செய்திருக்க ஒரே மகனல்லவா பெற்ற பாசம் தலைவிரித்து ஆட மிகவும் ஆடம்பரமாக மகனின் திருமணத்தை நடத்தி வைத்தனர். அந்த வாழ்க்கை சிறப்பாக செல்ல முக்கிய காரணமே அமரா தான். மருமகளாக இருக்க வேண்டிய இடத்தில் மகளாக நடந்து கொண்டார். இப்படியே சிறிது காலத்தில் சதாசிவத்தின் தாய் தந்தை இறந்துவிட்டனர்.

அதன் பின் அனைத்து சொத்துக்களும் இவருக்கே வந்து சேர தொழிலில் அசைக்க முடியாத இடத்தில் வந்து நின்றார். அதன் பிறகு பிறந்தவன் தான் ஆதித்ய தேவ். அவனும் இவருக்கு ஒற்றைவாரிசாகிப் போனான். தாத்தா மற்றும் தந்தை ஆகியோரின் மொத்த உருவமாய் வந்து நின்ற மகனை பார்த்து தான் தானும் இவ்வளவு கோபக்காரனா என்பது புரிந்தது சதாசிவத்திற்கு. இவன் அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யும் போதெல்லாம் கிழவனின் உச்சி முடியை இழுத்து ஆட்டி வைத்துவிடுவார் அமரா. அவ்வளவு கோபக்காரன் அவன். தாய்க்கே தாங்க முடியாமல் போய்விடும். ஆனால் பாசத்துக்கு பஞ்சம் இல்லாமல் பாராட்டி சீராட்டி வளர்த்தனர் அவனை.

அப்படிப்பட்டவனின் திருமணம் என்றால் சும்மாவா.. இதோ சுற்று வட்டாரமே வாயில் விரல் வைத்து வேடிக்கை பார்க்குமளவுக்கு ஜாம் ஜாம் என திருமண ஏற்பாடுகள் விழாக்கோலம் பூண்டது..

அனைத்து தொழில் மா அதிபர்களுக்கும் திருமண அழைப்பிதழ் சென்றிருந்தது.

அதில் பெரியவரும் ஒருவர். அவரோ வர்ஷினியையும் அழைத்து வர இருப்பது தான் அங்கே சிறப்பான சம்பவம்.

அவளோ வர மறுக்க இவர் ஏதேதோ காரணம் சொல்லி ஒத்துக்க வைத்திருந்தார்.

நாளை திருமணம் என்றிருக்க இன்று காலையிலே காரில் புறப்பட்டு வெளியே வந்தவனை ட்ராஃபிக், நடுவீதியில் நிறுத்தி வைத்திருந்தது. அதற்குள் ஆதித்யாவின் பொறுமை எங்கோ பறந்திருந்தது.

ஸ்டியரிங்கில் கையை குத்தியவன் எதேச்சையாக திரும்ப பஸ்ஸில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தாள் ஓர் மங்கை. அவளின் பக்கவாட்டு தோற்றமே அவனுக்கு தெரிய, முதலில் அவனின் கருத்தில் பட்டது என்னவோ அவளின் சரும நிறம் தான். அதில் தானாக அவன் இதழ் ஆசம் என்றது..

இவ்வளவு நேரமும் காலில் சுடு தண்ணீரை ஊற்றி விட்டது போல இருந்த உலகமே அருகில் நின்று பேச அஞ்சும் மகா கோபக்காரனும், இவளின் ஆர்பாட்டம் இல்லாத அழகில் ஓர் கணம் தடுமாறித் தான் போனான்.

அவளும் ஏதோ உந்த திரும்பிப் பார்த்தாள். ஆம் அவள் வர்ஷினியே தான். ஆனால் முழுவதும் கறுப்பு நிறத்தினால் ஆன காரினுள் இருந்த தேவ், அவளுக்கு தென்படவேயில்லை.

இருந்தும் அவனோ கண்ணிமைக்காமல் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அழகா என்று கேட்டால் யோசிக்காமல் ஆம் என்பான். அதே லவ்வா என்று கேட்டால் இல்லை என அடித்துக் கூறுவான். எப்படியோ அந்த நிமிடம் அவனை அவள் ஈர்த்திருந்தாள். பின் வாகனங்கள் கலைய அங்கேயே அவளின் நினைவை உதறித் தள்ளிவிட்டு சென்றுவிட்டான்.

அவள் தான் தன் வாழ்க்கையின் சரி பாதி ஆகப் போவதை அறியாமலே அவனும், அவன் தான் தன் வலிகளுக்கு மருந்து என்பதை அறியாமல் அவளும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றனர்.

தொடரும்...

தீரா.
 
  • Like
Reactions: Lakshmi murugan