• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 26

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 26

"தியா என்னாச்சு பா! உடம்பு சரி இல்லையா?" என கேட்க அவனையே வெறித்துப் பார்த்திருந்தாள்.

"என்னாச்சு தியா?" என்றவன் அவள் நெற்றியில் கை வைக்கப் போக, அவள் பார்த்த பார்வையில் அதை செயல்படுத்த முடியவில்லை.

எதற்கும் பதில் சொல்லாமல் இருப்பவளை என்னை செய்ய என தெரியாமல் விழித்தவன் "அம்மாவை கூப்பிடவா? அவங்ககிட்ட சொல்றியா?" என கேட்க,

"என்ன சொல்லணும்! உங்க மகன் என்னை என் குடும்பத்துல இருந்து பிரிச்சுட்டான்னு சொல்லட்டுமா?" என்று கேட்கவும் அவன் திகைக்க,

"என்னை பார்க்க வர்றத்துக்கு கூட என் மாமா தயங்குறானே அதை சொல்லட்டுமா? என்னை நினச்சு அங்கே எல்லாரும் தவிக்குறாங்களே அதை தான் சொல்லட்டுமா?" என பேசியவள் அருகே நின்றவன் சட்டையை பிடித்து கேட்க, இதற்கு என்ன பதில் சொல்ல என தெரியாமல் அதை விடவும் அவள் திடிர் அழுகையுடன் அவள் கோபத்தில் திடுக்கிட்டு நின்றான் தமிழ்.

அவள் கண்ணீர் இன்னும் வற்றாமல் இருக்க, ஒரு வெற்று பார்வை மட்டுமே அவனிடம். இதை அவனும் எதிர் பார்க்கவில்லையே!

"தியா ப்ளீஸ் அழாத! வா நான் உன்னை கூட்டிட்டு போறேன்" என அவள் கண்ணீரை தாங்க முடியாமல் சொல்ல,

"ஓஹ் கூட்டிட்டு போறியா? போலாம்.. வா போலாம்! என் வீட்டுல உனக்கு ஆரத்தி எடுத்து அழைச்சுட்டு போவாங்க. ஆனால் அவங்களால் எப்படி இங்க வர முடியும். எல்லாம் பண்ணிட்டு சீன் போடுறியா? உன்னால தான் போச்சு.. எனக்கு எல்லாமே போச்சி" என முகத்தை மூடி அழ, தவித்து போனான் தமிழ்.

சில நொடிகள் தான் அதுவும்.. ஆழ மூச்செடுத்து யோசித்தவன் பின் "சரி இப்போ உன் மாமா இங்க வரணும் அவ்வளவு தானே" என முடிவுடன் கேட்க, உன்னால என்ன பண்ண முடியும் என அவளும் அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவன் எதுவும் சொல்லாமல் வெளியே சென்று விட, விட்ட அழுகையை தொடர்ந்தாள் நித்தி.

அறையில் யோசனையுடன் அமர்ந்திருந்த சத்யாவையே அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மது. தன்னையே உற்று பார்க்கும் மதுவின் பார்வையில் யோசனை கலைந்து அவன் மதுவை பார்க்க அவள் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

"என்ன பாப்பு! ஏன் அப்படி பார்த்த?" என அவன் சிரிப்புடன் கேட்க, ஒன்றுமில்லை என தலையாட்டினாள்.

"இல்லையே ஏதோ இருக்குன்னு மதுகுட்டி கண்ணு காட்டி கொடுக்குதே" என அவளை இன்னும் அருகில் அழைத்து, அவள் மடியில் படுத்துக் கொண்டு கேட்டான்.

"இல்லை நான் நித்தியா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு நினச்சி பொறாமைப்பட்டிருக்கேன் சில நேரம். இப்ப அவளை நினச்சு ரொம்ப கஷ்டமா இருக்கு. தமிழ் சார் ஏன் அப்படி பண்ணாங்கனு தெரில. ஆனால் அவங்க நல்லவங்கனு தான் எனக்கு தோணுது" என சொல்ல, ஏன் என அவளை முறைத்து பார்த்தான் சத்யா.

“தோணுது மாமா.. என்கிட்ட அன்னைக்கு எதுக்காக தமிழ் சார் பேச வந்தாங்கனு தெரியல. ஆனால் அவங்க பேச்சில கூட கண்ணியம் இருந்தது. மே பீ சம்திங் ஹப்பெண்ட்” என்றதும் சத்யா யோசனையில் இருக்க,

"நித்தி ரொம்ப குடுத்து வச்சவ மாமா! அவளோட நல்ல மனசுக்கு நல்லா இருப்பா. ஆனால் அவ இப்ப சந்தோசமா இருக்கணும்னா நீங்களும் நாளைக்கு எங்களோட வரணும்" என சொல்ல,

"நானும் அதை தான் நினைச்சேன் டா. நித்திக்காக என்ன வேணா பண்ணலாம். கண்டிப்பா போலாம். நான் இப்ப போய் உதய்யை பார்த்து பேசிட்டு அவனையும் நாளைக்கு வர சொல்லிட்டு வரேன். சரியா?" என கேட்டுகொண்டிருந்தவன் திடீரென வேகமாக அவள் மடியில் இருந்து எழுந்தான்.

"ஹேய் பாப்பு! என்ன சொன்ன? இப்ப என்ன சொன்ன?" என அவன் சந்தோசத்தில் குதித்துக் கொண்டே கேட்க, அவன் கேட்க வருவது புரிந்து,

"நீங்க தானே சார்னு கூப்பிட வேணாம்னு சொன்னிங்க? அதான் மாமா..னு.." என்றவள், "புடிச்சிருக்கா?" என கேட்க,

"புடிச்சிருக்காவா! அய்யோ பாப்பு சூப்பர் டி" என்றவன் அவளை இழுத்து கன்னத்தில் முத்தம் வைக்க, சிலையாய் மாறினாள் பெண் அவள்.

"மேடம்..பாப்பு.. ஹேய் என்னாச்சு டி" என கொஞ்சலான குரலில் பல விதமாக அழைத்து மதுவின் கண்ணம் தட்ட, அவள் அப்படியே நின்றாள்.

"போச்சு டா! ஒரு முத்தத்துக்கேவா?" என அவன் மீண்டும் அவள் அருகில் குனிய,

"அய்யயோ நீங்க ரொம்ப மோசம்" என்றவள் அறையை விட்டு வெளியே ஓடியே போனாள்.

"ஹேய் பார்த்து டி.. பாப்பு..!" என்றவன் சிரிக்கும் குரல் அவளை தொடர்ந்தது. பின் அவனும் சிரிப்புடன் கிளம்பி உதய்யை பார்க்க சென்றான்.

சத்யா வீட்டிலிருந்து கிளம்பி சென்ற ஐந்து நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தான் தமிழ். தியா என்ற தனக்கு பிடித்தவளுக்காக மீண்டும் சத்யாவை பார்க்க வந்திருந்தான். உள்ளே செல்ல தயங்கி வாசலில் நிற்க, பத்மா தான் அவனை முதலில் பார்த்தார்.

"உள்ளே வாங்க" என அவர் அழைக்க, என்ன சொல்வது என தெரியாமல் அவரைப் பார்த்து சிரித்து வைத்தான்.

"அண்ணி கொஞ்சம் இங்க வாங்களேன்" என பத்மா குரல் கொடுக்க, ராஜம்மாள், மது, மஞ்சு எல்லோரும் கூடினர்.

"வாங்க" என்ற மஞ்சுவும் அதோடு நிறுத்தி கொள்ள, ராஜம்மாள் தான் அவனிடம் பேசினார்.

"தம்பி என் பேத்தி எப்படி இருக்கா? அவளையும் கூட்டிட்டு வந்துருக்கலாமே?" என்றது பாட்டியே தான். எவ்வளவு சண்டை போட்டாலும் பேத்தி ஆயிற்றே.

"இல்ல பாட்டிமா! இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன். அதான்" என இழுக்க, அவன் சொல்வது பொய் என தெரிந்தும் அனைவரும் கேட்டுக் கொண்டனர். பத்மா காபி போட செல்ல, மஞ்சுவும் உடன் சென்றார்.

"நித்தி எப்படி இருக்கா?" என மது கேட்க, "நல்லா இருக்கா மா" என்றான் தமிழ்.

பின் கொண்டு வந்த காபியை குடித்து முடித்தவன் ஒருவாறாக கேட்டு விட்டான். "சத்யா இல்லையா" என்று.

"அவன் இப்ப தான் உதய்யை பார்க்க போயிருக்கான். என்ன தம்பி?" - மஞ்சு.

"ஓஹ்! இல்லை சத்யாகிட்ட கொஞ்சம் பேசணும்.. சரி நானே நேர்ல போய் பேசிக்கிறேன்" என எழுந்தவன்,

"எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டு போனீங்கனா நல்லாருக்கும். அம்மா கேட்டாங்க" என சொல்ல, அவன் கூப்பிட்டதில் அனைவருக்கும் திருப்தி. அனைவரிடமும் சொல்லிக்கொண்டு உதய் வீட்டிற்கு வழி கேட்டு கிளம்பினான் அவன்.

"அங்கே எப்படி டா நான்?" என உதய் தான் சத்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். நித்திக்காக என்றாலும் தமிழின் செயல் உதயை யோசிக்க வைத்தது.

"டேய் நித்தி இன்னைக்கு அழுதா டா. ப்ளீஸ் உன்னை பார்த்தால் ரொம்ப சந்தோசப்படுவா" என சத்யா சொல்ல, காலேஜ் சென்று வந்திருந்த ஹனியும் சேர்ந்து உதயிடம் போகலாம் என சொல்லிக்கொண்டு இருந்தாள்.

"உதய், நித்தியை பார்க்க மட்டும் வா போதும். நமக்கு அவ தான் முக்கியம்" என பார்வதியும் சொல்ல, சரி என அறை மனதுடன் ஒத்துக்கொண்ட நேரம் வாசலில் பைக் சத்தம் கேட்டு அங்கு சென்ற சத்யா தமிழைப் பார்த்து அப்படியே நின்றான்.

அவன் செய்த செயலுக்கு அவனை உள்ளே அழைக்கும் எண்ணம் துளியும் இல்லை. தமிழும் சத்யாவை பார்த்து அப்படியே நிற்க, பார்வதி தான் வெளியே வந்து பார்த்தார். அவருக்கும் கோபம் இருந்தாலும், அவனை வெளியே நிற்க வைத்து பேச முடியாதே என நினைத்து உள்ளே அழைத்தார்.

உதய் தமிழை பார்த்ததும் கோபம் வந்து எழுந்து கொள்ள, ஹனி அவன் கைப்பிடித்து கண்களால் சமாதானம் செய்து அமர வைத்தாள். தமிழும் அதை பார்த்துக் கொண்டிருந்தான்.

"காபி சாப்பிடுறியா பா?" வீட்டின் மூத்தவராய் பார்வதி கேட்க,

"இல்லம்மா, பத்மா ஆண்ட்டி இப்போ தான் குடுத்தாங்க".

"என்ன ஆண்ட்டி? ஏன் அத்தைனு சொல்ல மாட்டானாமா?" என ஹனி காதை உதய் கடிக்க, இவன் எதுக்கு நம்ம வீட்டுக்கு போனான் என சத்யா எண்ணும் நேரம், தமிழ் சத்யா பக்கம் திரும்பினான்.

"சத்யா!" என தமிழ் அழைத்ததும் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல உதய் பார்க்க, என்னையா என்பது போல சத்யா கண்களை சுருக்கி பார்த்தான்.

அதில் சிரிப்பு வந்தாலும், 'போலீஸ்டா நானு' என விரைப்பாக நின்றவன், "அம்மா அப்பா உங்களை எல்லாம் பார்க்கணும்னு சொன்னாங்க. அதான் அழைச்சுட்டு போகலாம்னு வந்தேன். உதய் ஹனி நீங்களும் கண்டிப்பா வரணும்" என்றவன் பார்வதியையும் அழைத்து விட்டு, சத்யா எதுவும் பேசமால் நிற்கும் போதே பார்வதியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

தமிழ் வந்தது என்னவோ தன்மையாக பேசத்தான். ஆனால் சத்யா உதய் முகத்தை பார்த்த பின் அவனால் அப்படி பேச முடியவில்லை. அதனால் உடனே கிளம்பியும் விட்டான்.

"டேய் இவனுக்காக எல்லாம் நான் வர்ல. நித்திக்காக வரேன்" என உதய் சொல்ல, சத்யாவும் தமிழின் இந்த திடிர் பேச்சில் அதிசயமாக இருந்தாலும், நித்திக்காக அடுத்தநாள் கிளம்பினான்.

நித்திக்கு சத்யா அழைத்து நாளை உதய்யுடன் வருவதாக சொல்ல, அவளின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. எனக்காக சத்யா மாமா பிடிக்காத இந்த வீட்டிற்கு வராங்க என நினைத்தவள், அப்போ நானும் சத்யா மாமாக்காக எதாவது செய்யணுமே என நினைத்து பின், சத்யா வரும் நேரம் சத்யாவிற்கும் உதய்க்கும் பிடிக்காத தமிழை எப்படியாவது வீட்டில் இருந்து வெளியே கிளப்பிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

தமிழ் சென்று அனைவரையும் அழைத்தது அவளுக்கு தெரியாது. தமிழும் நித்தியிடம் சொல்லவில்லை. அவன் மேல் இருந்த கோபத்தில் சத்யாவும் சொல்லவில்லை. மேலும் மது, உதய்யிடமும் என்ன பேச வேண்டும் என குறித்துக் கொண்டாள் நித்தி.

தமிழ் திரும்ப வீடு வந்தவன், நித்தி முகத்தில் இருந்த புன்னகை பார்த்து செய்தி வந்திருக்கும் என நினைத்துக் கொண்டு நிம்மதியுடன் இருந்தான். ஆனாலும் அவள் பக்கம் செல்லவில்லை. நித்தியும் அவனை கவனிக்கவில்லை.

நித்தி வீட்டிற்கு செல்ல என மது மாலை நேரம் தயாராகிக் கொண்டிருக்க, சத்யா ஆபிஸ் சென்றிருந்ததால் வர நேரமாகும் என்ற நினைவில் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று அந்த பிளவுசை பின்னால் மாட்ட முயன்று கொண்டிருந்தாள். பின்புறம் ஊக்கு சதி செய்ய என்ன முயன்றும் முடியவில்லை.

யாரை கூப்பிட என அவள் முயன்று கொண்டே யோசிக்க, கதவு திறந்த சத்தத்தில் சேலையை போர்த்தி கொள்ள தேட, அதற்குள் பார்த்து விட்டான் அவளவன். வேகமாக அவள் கைகள் இரண்டையும் கொண்டு மேனியை மறைத்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பினால் ஊக்கு மாட்டவில்லை. திரும்பாமல் அவன் முன் இப்படி நிற்கவும் முடியவில்லை. பின் சேலையை கொத்தாக பிடித்துக் கொண்டாள்.

அவள் நெளிந்து கொண்டிருக்க, உள்ளே வந்தவன் நிலையோ மிக மோசம். ஒரு பெண் உடை மாற்றும் போது அங்கு இருக்க கூடாது என்று தெரியாத முட்டாள் இல்லை தான் அவன். ஆனால் அது மனைவி ஆயிற்றே!.

"ப்ளீஸ் அத்தையை கூப்பிடுங்க" என அவள் கெஞ்ச,

"எதுக்கு" என்றான்.

"அது.. அது" என்று அவள் தயங்க, அவனுக்கு சில வினாடிகளின்பின் தான் புரிந்தது. அதுவும் ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் அவள் பின்புறம் பார்த்த பின். அவள் அருகில் அவன் செல்ல செல்ல அவள் இதய துடிப்பு வெளியே கேட்டது.

இப்படி அவன் முன் நிற்பது அவளுக்குள் ஏதோ ஒரு உருண்டையை அடிவயிற்றில் இருந்து மேல் எழுப்ப, அருகே வந்தவன் அவளின் பின் சென்று நின்றதும் மதுவின் கண்கள் இரண்டும் விரிந்தது. மூளை வேலை செய்வேனா என அடம் பிடித்தது.

அவன் ஒவ்வொரு ஊக்கினை மாட்டும் பொழுதும் இவள் மேனியை அவன் விரல்கள் தீண்ட, பெண் அவள் நிலை தான் பரிதாபம். எவ்வளவு நேரம் எடுத்து கொள்ள முடியுமோ அவ்வளவு நேரம் எடுத்து அவன் மாட்டி முடித்தான்.

பின் அவள் உள்ளே ஓட ஆரம்பிக்க, கை பிடித்து அவளின் பின்புறமே நின்று கொண்டவன் கைகள் அவள் தோளை தொட்டு, "மது வித் யூவர் பெர்மிஸ்ஸன் ஒரே ஒரு கிஸ் பண்ணவா?" என கைகளை தோளில் இருந்து எடுக்காமலே கேட்டான்.

இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? "ப்ளீஸ் நான் போகணும்" என அவள் கூற, மோகத்தின் பிடியில் நின்றவனுக்கு அவள் சம்மதம் கூறியது போலவே தோன்றியது. தோளில் கைகளின் அழுத்தத்தை கூட்டியவன், அழுத்தமான முத்ததை அவள் வெற்று முதுகில் பதிக்க பெண் அவள் சிலிர்த்து எழுந்தாள்.

அவன் அவளை திருப்ப கீ கொடுத்த பொம்மை போல திரும்பியவளின் முகத்தை நோக்கி அவன் குனிய கீழிருந்து பார்வதி அழைக்கும் சத்தத்தில் சுயநினைவு வந்தவள் அவனை தள்ளிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள். சத்யா ஒரு மார்கபுன்னகையுடன் தலை கோதி சிரித்துக் கொண்டான்.

தொடரும்..