• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 27

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 27

'இவன் வேற இன்னைக்கு பார்த்து சீக்கிரம் வந்துட்டானே. கரடி குட்டி! இவனுக்கு எல்லாம் வேலையே இருக்காதா? நினச்ச நேரத்துக்கு வந்துடுறான். இப்ப எப்படி இவனை வெளியில் அனுப்புறது' என நித்தி யோசித்துக் கொண்டிருக்க, தமிழ் தீவிரமாக லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.

தமிழ் காலையில் குணாவிற்கு போன் செய்த போதே அனைவரும் மாலை வருவதாக கூறியதால் சீக்கிரமே அவனும் வீடு வந்துவிட்டான்.

நேராக அவனிடம் வந்த நித்தி, "உனக்கு இப்போ எதாவது வேலை இருக்கா?" என கேட்க, என்னிடமா பேசுகிறாய் என்பது போல அவன் பார்த்தான்.

"உன்னை தான் கேட்குறேன்" என மீண்டும் நித்தி கேட்க, 'இவ இப்படி பேசுற ஆள் இல்லையே' என சரியாக அவளை கணித்து,

"ம்ம்! பெருசா எந்த வேலையும் இல்லை. சொல்லு உனக்கு என்ன பண்ணனும்?" என நேரடியாக விஷயத்திற்கு வர,

"ஏன் சீக்கிரம் வந்த?" என்றாள் கொஞ்சமும் ஒளிவின்றி

"ஏன் நான் இங்கே இல்லைனா தான் நிம்மதியா இருப்பியா?" என்றான் அவளை போலவே.

"என் மாமா வர்ராங்க.."

"உன் வீட்ல எல்லாரும் தான வர்ராங்க?" என்றான் அலட்சியமாக.

இவனை எப்படி வெளியே அனுப்புவது என அவள் யோசித்து நின்றதால் 'அவனுக்கு எப்படி எல்லாரும் வருவது தெரியும்' என யோசிக்கவில்லை. ஆனால் ஏன் சீக்கிரம் வந்தாய் என்று அவள் கேட்ட போதே அவன் புரிந்து கொண்டான். அவர்கள் வரும்போது தான் இங்கே இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை என.

அதற்கு மேல் அவளிடம் வாயாடாமல், "ஆறு மணிக்கு ஐஜி ஆபிஸ் போகணும்" என சொல்ல,

"ஓஹ், சரி சரி" என அவள் யோசனையில் சந்தோசத்துடன் கூற, இப்போது அவள் எண்ணம் தெளிவானது அவனுக்கு.

'டேய் சத்யா! நீ எப்பவுமே எனக்கு வில்லன் தான் போல' என நினைத்துக் கொண்டு லேப்டாப்பை மூடி குளிக்க சென்றான்.

சொன்னது போலவே தமிழ் வெளியே கிளம்பி சென்றுவிட, 'அப்பாடா' என்றவாறு அனைவருக்கும் லட்சுமியுடன் சேர்ந்து இரவு உணவுக்கான வேலையில் ஈடுபட்டாள் நித்தி.

வாசலில் கார் சத்தம் கேட்கவும் சமையலறையில் இருந்து நித்தி ஓட, "பார்த்து போ நித்தி" என்ற லட்சுமியின் வார்த்தை காற்றில் போனது.

"நித்தி" என்ற ஒரே பெயரை ஒவ்வொருவரும் ஒவ்வொருவாறு அழைக்க, நித்தியின் கண்கள் சத்யா உதய்யை தேடியது.

குணா, மஞ்சு, பத்மா, பார்வதி, ஹனி, மது என அனைவரும் வந்திருக்க சத்யா உதய் இருவரும் இல்லாமல் வாடி போனது நித்தி முகம்.

"மாமா, சத்யா மாமா வரலையா?" பாவம் போல நித்தி குணாவிடம் கேட்க, "ஒண்ணா தான் கிளம்பினோம் டா. ஆபிஸ்லேர்ந்து திடிர்னு போன். அதான் வேலை முடிஞ்சதும் ஆபிஸ்லேர்ந்து வந்திடுறதா சொன்னாங்க. இப்ப வந்திடுவாங்க டா" என்ற பின் தான் சமாதானம் ஆனாள்.

"எப்படி டா இருக்க? நீயும் இல்ல ஹனியும் இல்ல. இனியாவும் காலேஜ் போய்ட்டான். வீடே வெறிச்சோடி இருக்கு மா" என வந்ததும் தன் கவலைகளை தொடங்கினார் மஞ்சு.

"அத்தை நான் நல்ல இருக்கேன். அதான் உங்கள் செல்ல மருமகள் உங்களை நல்லா பார்த்துக்குறாளாமே? அப்புறம் எப்படி என்னை தேடினீங்க?" என மதுவை வம்பிழுக்க,

"நித்தி! நான் எவ்வளவு பார்த்துகிட்டாலும் மஞ்சு அத்தைக்கு நீ இருந்த மாதிரி இல்லையாம். டெய்லி புலம்புறாங்க" என்றாள் மது.

"நித்தி உனக்கு ஒன்னு தெரியுமா? நம்ம வீட்ல டெய்லி ஒரே ரொமான்ஸ் சீன் தானாம்! சத்யா மாமா மது அக்கா பின்னாடியே சுத்துறதும் அக்கா பதிலுக்கு வெட்கப்படுறதும்.." என ஹனி தன் வாலு தனத்தை எடுத்து விட,

"ஹையோ சும்மா இரு ஹனி" என்றாள் வெட்கத்துடன் மது.

மதுவையும் ஹனியையும் நித்தி கூர்ந்து பார்த்துவிட்டு மற்றவர்களுடன் சந்தோசமாக பேசிக் கொண்டே அனைவருக்கும் குடிக்க காபி கொடுத்தாள். தமிழ் அன்னை லட்சுமிக்கு பார்த்ததும் நித்தி குடும்பத்தை பிடித்துவிட்டது. மஞ்சு பத்மா பார்வதிக்கு கூட லட்சுமி நித்தி மேல் காட்டும் பாசத்தில் மனம் நிறைந்து இருந்தது.

அனைவரும் பேசிக் கொண்டிருக்க சத்யா உதய் இருவரும் வந்து சேர்ந்தனர். நித்தியை பார்த்த உதய்க்கு பேச்சு வரவில்லை. அந்த சூழ்நிலை உதய் எதிர்பார்த்த ஒன்று தான்.

"உதய்! ஏன் இப்படி நிக்குற? வா.. மாமா அவனை உள்ள கூப்பிடு" மதுவே அழைக்கவும் அமைதியாய் சென்றான்.

அவர்களுக்காக நித்தி சாப்பிட பார்த்து பார்த்து செய்ததை எல்லாம் லட்சுமி சொல்லி, அனைவரையும் சாப்பிட வைக்க பத்மாவிற்கு நித்தியை நினைத்து பெருமையாகவே இருந்தது.

சத்யா உதய் சாப்பிடமாட்டேன் என்றவர்களை நித்தி மிரட்டியே சாப்பிட வைத்தாள் எனலாம்.

வந்ததில் இருந்து அனைவருக்கும் ஒரு கேள்வி மனதில் இருந்தாலும் அதை கேட்காமல் ஒதுக்கிக் கொண்டே இருக்க, சாப்பிட்டு வந்த குணா கேட்டே விட்டார்.

"நித்தி, தமிழ் எங்கே? நேத்து வீட்டுக்கு வந்து அழைச்சதும் இல்லாமல், போன் பண்ணி கிளம்பிட்டீங்களானு எல்லாம் கேட்டாரு. நாங்கள் அவரும் வீட்ல இருப்பார்னுல நினச்சோம்?" என அனைவர் சார்பாக கேட்க,

நித்தி ஒரு நிமிடம் தடுமாறி தான் போனாள் அந்த கேள்வியில். அவளுக்கு இது முற்றிலும் புது செய்தி ஆகிச்சே. 'காக்கி நாம அழுததும் இவ்வளவு செஞ்சதா? பார்ரா! ஆனால் இதை ஏன் அந்த வளந்த மரம் நம்மகிட்ட சொல்லல. சொல்லியிருந்தா விரட்டியிருக்கமாட்டேனே?' என தனக்குள் நினைத்து கொண்டவள்,

"வேலை விஷயமாக போறதா மட்டும் சொன்னான் மாமா" என்றாள்.

"நித்தி! என்ன நீ! இப்படியா மரியாதை இல்லாமல் பேசுவ அவரை?" பத்மா கடிந்த பின் தான் அனைவர் முன்னும் அப்படி பேசியது உரைத்தது நித்திக்கு. அதுவும் நித்தி அம்மா அப்பாவும் இருக்கும் போது.

பின் அனைவரும் அட்வைஸ் செய்ய சிவனே என கேட்டுக் கொண்டு இருந்தாள். நித்தி குடும்பம் அனைவரும் லட்சுமி லட்சுமணன் உடன் பேசிக் கொண்டிருக்க, நித்திக்காக சாப்பிட்டு வெளியே வராண்டாவில் வந்து அமர்ந்திருந்த சத்யா உதய் அருகே நித்தி வந்தாள்.

எப்போதும் இருக்கும் சத்யா உதய் அல்ல இது என்பது தெரிந்தாலும் அங்கே வந்து அமர்ந்து சத்யா மடியில் சாய்ந்து கொண்டாள்.

"எப்படி இருக்க டா? உனக்கு எல்லாம் ஓகே தான? எந்த கஷ்டமும் இல்லையே?" சத்யா கேட்க, உதய்யும் அவள் பதிலுக்காக பார்த்திருந்தான்.

"நீங்கள் எல்லாரும் இல்லைன்றது தவிர எனக்கு எந்த கஷ்டமும் இல்லை மாமா" என்றவள் கண்கள் கலங்கியது.

"நித்தி நீ.. நீ.. அவன்கிட்ட பேசினயா? எதுக்காக.. எதுக்காக அவன் இப்படி..." உதய் தான் நினைத்த கேள்வியை சரியாக கேட்க முடியாமல் தடுமாற, நித்தி எழுந்து அமர்ந்தாள்.

"நீ எப்பவும் போல பேசு மாமா. எனக்கு உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு. உனக்கு ஒன்னு தெரியுமா? நான் காதல், கல்யாணம் இதை எல்லாம் நினச்சு பார்த்ததே இல்ல. ஆனா நீ என்னை விரும்புறனு தெரிஞ்சதும், சந்தோசமா இருந்தேன். ஏன்னா நம்மளை விரும்புறவங்க தான் நம்மை நல்லா பார்த்துக்க முடியும்னு ஒரு எண்ணம். இப்போ நான் ஏன் இதை சொல்றேன்னா! ஹனி உன்னை ரொம்ப விரும்புறா மாமா. அவ்வளவு பேர் முன்னாடி உங்களை கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்றது சாதாரண விஷயம் இல்ல. இது தான் உன் வாழ்க்கை அதை நீ வாழு மாமா. என்னை பத்தி நீ கவலைப்படாத. அவனை நான் பாத்துக்குறேன். அவன் எதுக்காக இதை செஞ்சிருந்தாலும் அவனை ஒருகை பார்க்க வேண்டியது என் பொறுப்பு. அவனால என்னை எதுவுமே செய்ய முடியாது. ஹனி பாவம் மாமா சின்ன பொண்ணு"

பேச வேண்டும் என நினைக்கவில்லை ஆனால் பேசிவிட்டாள். தன் தங்கையும் தன்னை விரும்பியவனும் நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசையில் பேசிவிட்டாள் நித்தி.

நித்தி பேச்சை கேட்ட உதய்க்கு தான் நித்தியை எண்ணி கவலைப்படுவதா? இல்லை அவள் சொன்ன ஹனியின் காதலை அறிவதா என தெரியவில்லை.

சத்யாவும் நித்தியின் இந்த ஆழ்ந்த பேச்சில் பேச்சிழந்து நின்றவன் அப்போது தான் உணர்ந்தான் தமிழ் நித்தியிடம் எதுவும் பேசியிருக்கவில்லை என. எப்படி யோசித்தும் அவன் நித்தியை காதலித்து இருப்பான் என்றே எண்ண முடியவில்லை சத்யாவிற்கு.

"என்ன நித்தி, உதயை மாமானு எல்லாம் கூப்பிடுற?" அவளை சகஜமாக்க எண்ணி சத்யா கேட்க,

"என்ன பண்ண சத்யா! உன் தம்பினு இவ்வளவு நாள் என் இஷ்டத்துக்கு கூப்பிட்டேன் இனி ஹனி ஹஸ்பன்ட்க்கு நான் மரியாதை குடுத்து தானே ஆகணும்?" என அவளும் விளையாட்டாய் பதில் கூறினாள்.

"ப்ச் நித்தி ப்ளீஸ்! நீ எப்பவும் போலயே பேசு. ஐ ஹேட் இட். ஹனி எனக்கு இது நாள் வரை எப்படியோ.. பட் அவ கழுத்தில தாலி கட்டினதில் இருந்து எனக்கு எல்லாமே அவ தான். உன் லைஃப் தெளிவானால் எங்க லைஃப் தானா மாறிடும்" என உதய் சொல்ல, அதில் சந்தோசமான நித்தி

"ஓஹ்! அப்ப சரி. மாமா வாடா உள்ளே போலாம்" என சாதாரணமாக சொல்லிவிட்டு செல்ல இருவரும் சிரிப்புடன் உள்ளே சென்றனர்.

அதன் பின்னும் சிலை மணி நேரங்கள், நொடிகளாக கரைய மனமே இல்லாமல் அனைவரையும் வழி அனுப்பி வைத்தாள்.

இரவு 11 மணிக்கு தமிழ் வர, லட்சுமி நித்தியின் குடும்பத்தில் உள்ளவர்களை புகழ்ந்தபடியே சாப்பாடு பரிமாறினார்.

"நித்தியை பெரிய இடத்து பொண்ணுனு நீ சொல்லவே இல்லையே டா. ஆனாலும் யாரும் அப்படி நடந்துக்கவே இல்ல. நல்ல மனுஷங்க. அவங்க பசங்க ரெண்டு பேர் வந்திருந்தாங்க டா. நித்தி சொல்லுமே சத்யா மாமானு அந்த பையனும் உதய்னு அவங்க தங்கச்சி பையனும். ரொம்ப பேசலைனாலும் நல்ல பசங்களா தெரியுறாங்க" என அடுக்கி கொண்டே போக,ஏற்கனவே நித்தி குடும்பத்தை பற்றி தமிழ் அம்மா அப்பாவிடம் சொல்லியிருந்தாலும் முழுதாய் அன்று மண்டபத்தில் கடைசி நேரத்தில் நடந்ததை சொல்லியிருக்கவில்லை.

இப்போது அம்மாவிடம் சொல்வது தான் சரி என்று தோன்ற, அனைத்தையும் கூறினான். அவன் காதலித்ததில் இருந்து சத்யா யார் என்பதையும் சேர்த்து.

கேட்ட ஒருநொடி அதிர்ந்த லட்சுமி, அடுத்த நொடி பளார் என தமிழ் கன்னத்தில் அறைந்திருந்தார். சரியாக அதே நேரம் அறையில் இருந்து வெளிவந்த நித்தியும் அதை பார்த்துவிட்டாள்.

தொடரும்..
 
Top