• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 4

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 4

அம்மா சாப்பிட்ற நேரத்தில் என்ன பிரச்சனை பண்ணிட்டு இருக்கிங்க? நீங்க உங்க ரூம்க்கு போங்க. நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்" என்று ராஜம்மாவை அனுப்பப் பார்த்தர் பத்மா.

உதய் முகத்தை பார்த்த நித்தி இன்னும் கொதித்து, "இப்போ என்ன சொன்ன? வாசல்ல நின்னு சாப்பிடணுமா? என் அத்தை மட்டும் இல்லைனா உன் பொண்ணு... அதான் என் அம்மா, நான், அனிதா எல்லாரும் நீ சொன்னா மாதிரி தான் நின்னுருக்கனும். ஒவ்வொரு வீட்ல மருமகள் எல்லாம் எப்படி மாமியாரை ஒரு ஓரமா இருக்க வச்சிருக்காங்க தெரியுமா? அத்தை உன்னை இப்படி வச்சி அழகு பாக்கறதும் இல்லாமல் உனக்கு பிறந்த பாவத்துக்கு அம்மாக்கும் எங்களுக்கும் சோறு போடுறாங்க இல்ல! நீ இப்படி தான் பேசுவ. ஏன்! உதய் சாப்பாடு இல்லாமல் வந்தானு உனக்கு நினைப்பா? இதை விடவும் அதிக சொத்து அவனுக்கு இருக்கு. அவன் அவனோட பெரியம்மாவை பார்க்க எப்போ வேணா வருவான். இனி ஒரு தடவை பேசுறதுக்கு முன்னாடி என்னையும் அம்மாவையும் நினச்சுட்டு பேசு" என குறுக்கே யார் பேசியதையும் கேட்காமல் அவள் கோபத்தில் கத்தினாள்.

எப்போதும் வாயடிப்பவள் இன்று நிஜமாகவே, அதுவும் அவன் முன் தன்னை மரியாதை குறைவாய் பேசியதும் இல்லாமல் பத்மாவின் நிலை பற்றி கூறியதில் இருந்த உண்மையும் சேர்ந்து எழுந்த கோபமும் அந்த இடத்தில் எதுவும் பேச முடியாமல் போக கோபத்தில் தன் அறைக்கு சென்றார் ராஜம்மாள்.

மஞ்சு கண்ணீருடன் நிற்க, பத்மாவும் மாடிப்படியில் நின்ற ஹனியும் கண்கள் கலங்க நின்றனர். சத்யாவும் பாட்டியின் வார்த்தைகளில் இறுகி கோபத்தில் இருந்தவன் நித்தி அவளது நிலை பற்றி பேசியதில் கோபமும் வருத்தமுமாய் இருந்தான்.

இதை எதையும் கண்டு கொள்ளாமல் நித்தி உதய் அருகே வந்து, "ஏன்டா அறிவில்ல உனக்கு? என்கிட்ட மட்டும் வார்த்தைக்கு வார்த்தை சண்டை போட தெரியுமில்ல! ஏன் 'அது' பேசும் போது உன் வாயை வாடகைக்கு குடுத்து இருந்தியா? திருப்பி நாலு குடு குடுக்க வேண்டியது தானே? மூஞ்ச இப்படி வச்சிக்காத! சகிக்கல!" என அவனிடமும் காய ஆரம்பிக்க,

உதய் மற்றும் சத்யா முகத்தில் புன்னகை பரவ ஆரம்பித்தது. ஹனியும் வந்து அவள் பங்கிற்கு சாரி கேட்க, "என்ன பாப்பா! நீ போய் சாரிலாம் கேட்டுகிட்டு" என்று தெளிந்த உதய் மற்றவர்களுக்காக சாப்பிட ஆரம்பிக்க, சிறியவர்கள் நால்வரும் சகஜமாயினர்.

"ஐயோ மாமா! நான் டாக்டருக்கு படிக்கிறேன். இந்த பெரிய மாமா தான் என்னை பாப்பானு கூப்பிடுறாங்கனு பார்த்தால் நீங்களும் இன்னும் என்னை பாப்பானு கூப்பிடுறீங்களே" என ஹனி குறைபட்டாள்.

"நீ எவ்வளவு வளந்தாலும் எங்களுக்கு பாப்பா தான்!" என்று அவள் தலையை பாசமாக வருடிவிட்டு சத்யா எழுந்து கொள்ள, அதை ஆமோதிப்பதாய் சிரித்து கொண்டே உதயும் எழுந்து கொண்டான்.

அவர்களுக்கு சாப்பிடும் மனநிலை இல்லாததால் பாதியில் எழுந்தது புரிந்தாலும் எதுவும் கேட்கவில்லை மஞ்சு.

இனி எக்காரணம் கொண்டும் நீயே இது போல உன்னை தாழ்த்தி பேச கூடாது என மஞ்சுவும் சத்யாவும் நித்திக்கு அறிவுரை வழங்க, அவள் பேசியது சரிதான் என பத்மா கூறி “இனி அம்மா இப்படி பேசாமல் நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

'எவ்வளவு அன்பான அண்ணி! அண்ணன் பாசத்தில் தங்களை வீட்டோடு வைத்து கொண்டாலும், இவ்வளவு நல்ல மனம் கொண்ட அண்ணி கிடைக்காவிட்டால் இது சாத்தியமா?. இனி அம்மாவை கொஞ்சம் அடக்கியே வைக்க வேண்டும்' என நினைத்து கொண்டாள் பத்மா.

உதய்க்கு நித்தி தனக்காக பேசியது பிடித்தாலும் அவள் பேசிய முறை அவனுக்கு வருத்தத்தை தான் கொடுத்தது. வருங்காலத்தில் அவளுக்கு இது போல எந்த கவலையும் இல்லாமல் தன் வீட்டில் அவளுடைய சுயமரியாதை போகாமல் அவளை அவளாகவே ஏற்று, கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்னும் கூடியது.

‘இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு உதய் கிளம்ப, அவனை வாசலில் வழி அனுப்பி வைத்து விட்டு சத்யா காதை பிடித்து திருகினார் மஞ்சு.

"ம்மா! ம்மா! வலிக்குது மா! ஆ" என்று அவன் கத்த அந்த இடத்தில் இருந்து நைசாக நழுவ பார்த்தாள் நித்தி.

அதற்குள் அவள் கையை பிடித்த சத்யா, "நான் இருக்கேன் மாமா உனக்கு. எப்பவும் நான் இருக்கேன்னு வசனம் எல்லாம் பேசுவ! இப்போ இப்படி என்னை அடிக்கிறாங்க. பார்த்துட்டு பேசாமல் போற" என அவன் உண்மையில் புரியாமல் கேட்க, "அவ தான் டா உன்னை போட்டு குடுத்தது" என்றார் மஞ்சு.

"ஹீஹீஹீ" என சிரித்துக் கொண்டே அவள் ஓடிவிட இப்போது சத்யாவிற்கு புரிந்தது மஞ்சுவின் செயல்.

"ஏன்டா இப்பவே என்னை கண்டுக்காமல் வருங்கால மனைவிகிட்ட போய் முதல்ல நீ பிசினஸ் ஸ்டார்ட் பண்றதா சொல்லியிருக்கியே! உன்னை என்ன பண்ணலாம்?" என அவர் கேட்க,

"ம்மா மது எனக்கு முக்கியம் தான் அதுக்காக உங்க இடத்தை யாரும் ரீப்லேஸ் செய்ய நான் விட மாட்டேன். அதோட உங்களுக்கும் இதில் சந்தோசம் தான்னு எனக்கு தெரியும். சோ ஸ்மார்ட்டா ஆக்ட் பண்ண ட்ரை பண்ணாதீங்க!" என கண்ணடித்து கூற, அதை சிரிப்புடன் கேட்டுக் கொண்டார் மஞ்சு.

"படவா! கேடி டா நீ" என்றவரை தோள் மேல் கை போட்டு தோட்டத்திற்கு அழைத்து சென்றான். "அவ என்னை பார்த்தாலே பயப்படுறா மா. அன்னைக்கு எனக்கு சொல்லிடனும்னு தோணிச்சு அதான் ப்ரொபோஸ் பண்ணிட்டேன். அதுக்கு முன்னாடி வரை என்னை பார்த்தா சார்னு கூப்பிட்டாலும் எதுவும் பண்ண முடியாம பாத்துட்டு இருந்தேன். இப்போது யாரோன்ற மாதிரி பாக்குறா. கஷ்டமா இருக்கு மா." என்றான்.

"நீ அவசரப்பட்டதும் தப்பு தானே டா. நித்தி சின்ன வயசுல ஒரு நாள், என் பிரண்ட் ஸ்கூல்க்கு வரலை அதனால நானும் போக மாட்டேன்னு ஒரு வாரம் ஸ்கூல் போகாம அழும் போது நீ தானே அப்பா கிட்ட பேசின?. அந்த பொண்ணோட வீட்டு நிலைமை தெரிஞ்சதும் அப்பாகிட்ட நாமே அந்த பொண்ண படிக்க வைக்கலாம் ப்பானு சொன்ன? அப்பாக்கு உன்னை நினச்சு அவ்ளோ சந்தோசம். இந்த வயசுலையே என் பையனுக்கு உதவி செய்யுற குணம் இருக்குனு. அவ காலேஜ் சேரும் போதும் அப்பா தான் பீஸ் கட்டினார். இது அந்த பொண்ணுக்கு தெரியாதுனு எனக்கே அவ காலேஜ் போகும் போது தான் தெரியும். இதுல 6 மாசத்துக்கு முன்ன வேலைக்கு போறேன்னு நீ பாட்டுக்கு தைரியமா அப்பாகிட்ட போய் நானே அந்த பொண்ணுக்கு இனி பீஸ் கட்டுறேனு சொல்லியிருக்க!. அப்பாக்கு அப்போ தான் டவுட். என்கிட்டே சொல்லவும் நம்ம வீட்டு வாண்டு நித்திகிட்ட எப்படி கேட்கணுமோ அப்படி கேட்டு தெரிஞ்சுகிட்டேன். இவ்ளோ நாள் அமைதியா இருந்த நீ, வேலைக்கு போக ஆரம்பிச்சதும் போய் ப்ரொபோஸ் பண்ணினா! அவ எப்படி ரியாக்ட் பண்ணுவா சொல்லு? அதுவும் அவ சித்தி பத்தி உனக்கு தெரியும்ல அதான் சொல்றேன் அவ பிகேவ் பண்றதுல தப்பே இல்லை" என்றார் மஞ்சு.

"அப்போ நான் பண்ணது தப்பா?" என்று சிறுபிள்ளை அவன் போல கேட்க, அதில் சிரித்தவர்

"தப்பே இல்லை கண்ணா! உனக்கு பிடிச்சா எங்களுக்கும் பிடிக்கும். ஆனால் அவளோட சிட்டுவேசன் வேற. சோ அவ படிச்சு முடிக்குற வரை நீ அமைதியா இருக்கணும். அது மட்டும் இல்லை. பாட்டிக்கு உனக்கும் நித்திக்கும் கல்யாணம் செய்து வைக்கணும்னு ஆசை. அவங்களுக்கு மட்டும் இல்லை.. வீட்ல எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கு. பட் உங்களோட முடிவும் முக்கியம்ல. அதனால நித்தி கல்யாணத்துக்கு அப்புறம் தான் உன்னோட கல்யாணம். அதுல நீ தெளிவாக இருக்கனும்" என்று ஒரு அம்மாவாக அவர் நினைத்ததை கூற, அமைதியாக கேட்டு கொண்டான் சத்யா.

"நீங்கள் சொல்றது புரியுது மா. ஸ்கூல் போகும் போது நித்தி பயப்படக் கூடாதுனு அவ கையை நான் புடிச்சுட்டு இருப்பேன். ஆனால் மது சின்ன விசயத்துக்கெல்லாம் பயந்து நித்தி கையை புடிச்சிப்பா. அப்பவே எனக்கு அவளை புடிக்கும். ஆனால் அதை காதல்னு நினைக்கல. மது காலேஜ் படிக்க மாட்டானு அவங்க அப்பா சொன்னதா நம்ம அப்பா சொன்னதும் தான் அவளை பார்க்காமல் இருக்க முடியாதுனு தோணிச்சி. அண்ட் மனசுல ஏதோ ஒன்னு இருந்துட்டே இருக்கும். அப்புறம் அப்பாகிட்ட பேசி அவளை காலேஜ் அனுப்பின அப்புறம் தான் எனக்கு என் மனசுல இருந்த காதல் புரிஞ்சது. அப்புறம் நான் காலேஜ் முடிச்சதும் ஒரு சிட்டுவேசன் மா. அதான் உங்களுக்கே தெரியுமே! என் மேல தப்பு இல்லைதான் ஆனாலும் பயம். மது என்னை புரிஞ்சிக்காமல் போய்டுவாளோனு! அதான் என் மனசுல இருந்ததை சொல்லிட்டேன்" என்றவன் மஞ்சுவை பார்க்க, அவரும் அவனை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து, "நித்தி மேலே எனக்கு அப்படி ஒரு தாட் வந்ததே இல்லை மா. அவளுக்கும் தான். எனக்கு நித்திய ரொம்ப பிடிக்கும். கடைசி வரை அவளை என் பாதுகாப்புல வச்சிக்கனும்னு கூட நினைப்பேன் பட் ஹஸ்பண்டா முடியாது மா. அவ நம்ம வீட்ல இருக்கிற வரைக்கும் அவளுக்குள்ள இருக்கிற தாழ்வு மனப்பான்மை போகாது. அதனால அவளுக்கு புடிச்ச, அவளை நல்லா அண்டெர்ஸ்டண்ட் பண்ணி நடந்துக்குற நல்லவனை தான் என் நித்திக்கு நான் பரிசாக கொடுப்பேன். அது வரை என்னோட திருமணம் பத்தி பேசமாட்டேன். அதுக்காக மதுகிட்ட பேசாமல் எல்லாம் இருக்க முடியாது மா! அதையும் சொல்லிட்டேன்" என சிரித்துக் கொண்டே கூற., மஞ்சுவும் சிரித்து விட்டார்.

"இது போதும் கண்ணா எனக்கு. நித்திக்கும் ஒரு நல்லவன் வரணும்" என அவர் கண்களை மூடி கடவுளை நினைக்க,

"வந்துட்டான்னு நான் நினைக்கிறேன்" என சத்யா கூறினான்.

"என்ன டா சொல்ற?" என மஞ்சு கேட்க, ஹோட்டலில் நடந்ததை கூறினான். "அவ்ளோ திட்டினாலும் மறக்காமல் கேசரியை எடுத்துட்டு வந்து கொடுக்கிறா மா. என்னை எப்படி யார்கிட்டயும் விட்டு கொடுக்காமல் பேசுறாளோ அதே மாதிரி தான் உதயையும் பேசுறா. உதய்க்கும் நித்தியை புடிச்சிருக்கு மா. அவனும் அவளை சீண்டினாலும் அவன் கண்ணுல காதல் தெரிஞ்சுது இன்னைக்கு. ரொம்ப நாள் கழிச்சு பார்த்த பீலிங்கு போல! அதான் பய என்கிட்ட மாட்டிக்கிட்டான்" என அவன் கேலியாக கூற,

"ஏன்டா, அப்போ இந்த பொண்ணு பாக்கிற வேலை, மாப்பிள்ளை பாக்குற வேலை எல்லாம் எங்களுக்கு இல்லையா? கல்யாணம் ஆச்சும் இனி தானா? அதுவும் முடிஞ்சுதா? நான் பெத்தது தான் சொல்லலைனு பார்த்தால், வளர்த்ததும் என்னை ஏமாத்திடுச்சே! வரட்டும் அவன்" என கோபமாக கூறினாலும் சந்தோசமே அவர் முகத்தில் தெரிந்தது.

தொடரும்..
 
Top