• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 6

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 6

மது அவள் சித்தியுடன் வந்து திறப்பு விழாவில் கலந்து கொண்டு 5 நிமிடத்தில் கிளம்பியதும் அவள் ஆசையுடன் காலையில் கிளம்பியதை அவள் சித்தி தடுத்ததும் சத்யாவிற்கு தெரியாமல் போனது தான் வருத்தம்.

மல்டி காம்ப்ளக்ஸ் கட்டிடத்தின் முதல் தளத்தில் இனிதாக ஆரம்பமானது US வின் கம்ப்யூட்டர்ஸ். உதய் சத்யா இருவரின் முதல் எழுத்துக்கள் தான் US. அடுத்த நாள் சத்யா கிளம்பிக் கொண்டிருக்க நித்தி அவனறைக்கு வந்தாள்.

வெளியில் இருந்தே மாமா என்று குரல் கொடுக்க, "உள்ளே வா நித்தி" என்றான். உள்ளே சென்றவள் ஒருமுறை அறையை சுத்தி பார்த்து விட்டு, "அய்யே! என்ன மாமா ரூம் இப்படி இருக்கு? டிரஸ் எல்லாம் அப்படி அப்படி கிடக்குது. ரூமை சுத்தமா வைக்க வேண்டாம்?" என அவள் ஒதுங்க வைக்க, "அதெல்லாம் எப்பவும் நீட்டா தான் இருக்கும். நேத்து பன்க்ஸன் பிஸில இப்படி இருக்கு" என்றான்.

"மாமா எனக்கொரு உதவி வேணும்".

"சொல்லு டா"

"இல்ல! இப்போ என்னோட காலேஜ் பக்கம் தானே உங்க ஆபிஸ்! டெய்லி நீங்களே என்னை ட்ராப் செயிரிங்களா?" என்றாள்.

கண்ணாடியில் தலை வாரிக் கொண்டிருந்தவன் அவளை பார்த்து முறைத்து, "பஸ் சார்ஜ் மிச்சம் பன்றியா?" என்றதும் திருதிருவென முழித்தாள்.

யோசிப்பது போல பாவனை செய்தவன், "ஹ்ம்ம் பண்லாம். நான் சொல்றதை நீ செய்றதா இருந்தால் பண்லாம்" என்றான் கண்ணடித்து.

அதில் ஏதோ வில்லங்கம் என புரிந்தவள் "அப்போ நான் போறேன். எப்படியும் வில்லங்கமா தான் சொல்ல போற. போ! ஒன்னும் வேணாம்" என சொல்லிக் கொண்டே நகர,

"ஹாஹாஹா ஹேய் லூசு. ஒன்னு மரியாதை குடு.. இல்லை குடுக்காத. ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசுற. சரி அதை விடு. நான் சொல்றதை கேட்டுட்டு போ" என்றான்.

என்ன தான் சொல்ல போகிறான் என அவள் பார்க்க, "உன் பிரண்ட் மதுவும் உன்னோட வர்றதா இருந்தா எனக்கும் ஒகே" என்று ஏதோ போனால் போகிறது என்ற பாங்கில் கூறினான்.

"அடப்பாவி வர வர என்னை விட அவ தான் உனக்கு முக்கியமா போய்ட்டா இல்ல? ஓஹ் அப்போ அவளுக்காக தான் என்னை கூட்டிட்டு போவீங்க?" என முறைத்துக் கொண்டே கேட்க,

சிரித்தவன் "நித்திமா! நீ கேட்டு நான் இல்லைனு சொல்வேனா? அவளும் வந்தா நான் சந்தோசப்படுவேன்" என்று நிறுத்தி அழகாய் அவன் கூற, அவள் எப்படி மறுப்பாள்.

"சரி இன்னைக்கு என்னை மட்டும் கூட்டிட்டு போ. நாளைலேர்ந்து அவளும் வருவா" என்றதும் தலை அசைத்தவன் சிரித்துக் கொண்டான்.

இருவரும் கிளம்பி கீழே வர, "வேணாம் டி விட்டுடு. நீ தானே கேட்ட!" என சொல்லிக் கொண்டே இனியன் ஓட, ஹனி அவனை துரத்திக் கொண்டிருந்தாள்.

"அடடா காலையிலே ஆரம்பிச்சாச்சா உங்க சண்டையை?" என சத்யா கேட்க,

"மாமா அவனை புடிங்க மாமா. அவனை இன்னைக்கு கைமா பண்ணல.." என கூறிக்கொண்டே ஹனி மீண்டும் துரத்தினாள்.

"டேய் ஏன்டா பாப்பாகிட்ட எப்ப பாரு வம்பு பண்ற?" என சத்யா கேட்க,

"ஐயோ அண்ணா இன்னுமா நீங்க இவளை பாப்பானு கூப்பிடறீங்க? வேணும்னா பீப்பானு கூப்பிடுங்க" – இனியா.

"நான் உனக்கு பீப்பாவா? இருடா உன்னை இன்னைக்கு கொல்லாமல் விடமாட்டேன்" என ஓடிக்கொண்டே ஹனி பேச,

"ஹனி ஏன் எப்ப பாரு இனியா கூடவே சண்டைக்கு நிக்குற?" என்றாள் நித்தி.

"அப்படி கேளுங்க அண்ணி. ஏதோ புக்ல சந்தேகம் கேட்டா. பாவம்னு சொல்லி குடுத்தா…..!" என அவன் பேசி முடிக்கும்முன் அவனைப் பிடித்து காதை பிடித்து திருகினாள் நித்தி.

"சூப்பர் நித்தி. அவனை சும்மா விடாதே" என ஹனியும் அவனை பிடித்து கொள்ள, மாட்டிக் கொண்டான் இனியா.

வீட்டில் அனைவரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டே இவர்களின் விளையாட்டையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

"சொல்லு டா என்ன பண்ணின?" என நித்தி கேட்க, "அண்ணி நான் ஒன்னும் பண்ணலை. அவ தான் ஒரு டவுட் கேட்டா நான் பதில் சொன்னேன்" என்றதும் சத்யா நித்தி இருவரும் அவளை பார்க்க, அவர்கள் முன் ஒரு புத்தகத்தை வீசினாள் ஹனி.

வேறு யாரும் எடுக்கும் முன் இனியா அதை எடுக்க செல்ல, அதற்குள் சத்யா எடுத்து விட்டான். அது அவர்களின் கல்லூரி பாடப்புத்தகம். இதுல என்ன? என சத்யா முன்னும் பின்னும் பார்க்க, "அய்யோ மாமா புக் உள்ளே பாருங்க" என்றாள்.

இனியா மெதுவாக பம்மி நழுவப் பார்க்க, நித்தி பிடியில் இருந்தான். உள்ளே விரித்த சத்யா அதைப் பார்த்து விட்டு இனியாவை பார்த்து முறைக்க, நித்தி அதை இன்னொரு கையில் வாங்கி பார்த்தாள்.

ஹே! என் கோலி சோடாவே!
என் கறி கொழம்பே!
உன் குட்டி பப்பி நான்..
டேக் மீ! டேக் மீ!
ஹே! சிலுக்கு சட்ட!
நீ வெயிட்டு காட்ட!
லவ் சொட்ட சொட்ட..
டாக் மீ! டாக் மீ!
ஏய் மை டியர் மச்சான்!
நீ மனசு வெச்சா!
நம்ம ஒரசிக்கலாம்!
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா..

உள்ளே இருந்தது பாடல் புத்தகம். அனைத்தும் குத்து பாடல்கள்.

"டேய் நீ டாக்டர்க்கு படிக்குற டா. இப்படி இருந்தா எப்படி? எனக்கு புரியலை? அப்புறம் எப்படி நீ நல்ல டாக்டர் ஆக முடியும்? இரு இப்பவே மாமாகிட்ட சொல்றேன்" என நித்தி சொல்ல,

"இதுக்கு தான் சண்டையே. நான் டௌவ்ட் கேட்டதும் இதை எடுத்துட்டு வந்து சீரியஸ்சா பார்க்குற மாதிரியே பார்த்துட்டு இருந்தான். சரினு நானும் பதிலுக்கு வெயிட் பண்ணினேன். ரொம்ப நேரம் ஆகியும் பார்த்துட்டே இருந்தான் அதான் அவனுக்கு பின்னாடி போய் பார்த்தேன். இதை தான் படிச்சுட்டு இருந்தான்". என விவரமாக சொன்னதும், நித்தி மாமாவின் அறைக்கு திரும்ப,

"அண்ணி அண்ணி! ப்ளீஸ் அண்ணி சாரி அண்ணி. அவளை கலாய்க்கலாம்னு தான் இப்படி பன்னினேன். இது வெறும் புக் கவர் தான். புக் ரூம்ல இருக்கு" என்று அவன் சொல்ல, மீண்டும் கோபத்தில் துரத்தி அடித்தாள் ஹனி.

இவர்களை திருத்தவே முடியாது என சத்யா ஒதுங்கி விட, தலையில் அடித்து கொண்டு சென்றாள் நித்தி.

நித்தியுடன் சத்யா காரில் சென்று கொண்டிருக்க, அங்குபேருந்து நிறுத்தத்தில் யாரோ மதுவுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தாள் நித்தி.

"மாமா அங்கே பாரு. மது யார்கிட்ட பேசுறா?" என கைகாட்ட, பார்த்தவனுக்கு கோபம் சட்டென ஒட்டிக் கொண்டது.

அவர்கள் அருகில் செல்ல செல்ல, 'இவளுக்கு என்னை பார்த்தால் மட்டும் தான் பயம் போல. இத்தனை வருஷத்துல ஒருநாள் கூட இவனை பார்த்ததில்லை. யாரு இவன் ரொம்ப நார்மலா பேசிட்டு இருக்குறா?' ன எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது சத்யாவிற்கு.

அவர்கள் கார் அருகில் வரவும் மது ஏதோ இந்த காரை கைகாட்டி சொல்ல, அந்த புதியவனும் காரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மது அருகில் காரை நிறுத்தியவன், "உன் பிரண்ட்டை கூப்பிடு" என்று சொல்ல, நித்தியும் இறங்கி சென்றாள்.

புதியவனின் பார்வை காரின் உள் இருந்த சத்யாவை ஆழ்ந்து பார்த்தது. அதன் பின் தான் வந்து கொண்டிருந்தவளை பார்த்தான். அவர்கள் அருகில் நித்தி செல்வதற்குள் மதுவிடம் விடைபெற்று சென்றான் அவன்.

"நீ தானா? என்ன கார்ல வர்ற?" என மது சகஜமாக நித்தியிடம் பேச, சொல்றேன் வா என அவளை காருக்கு கூட்டிச் செல்ல, முதலில் மறுத்தவள் வற்புறுத்தல் தாங்க முடியாமல் ஏறினாள்.

அமைதியாக கார் செல்ல இளையராஜாவின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. "யார் அவன்" என்று கேட்கும் போது சத்யா முகம் பார்த்து சிரித்து வைத்தாள் நித்தி.

அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவள் சாதாரணமாக பேசினாலும் அவன் சிரித்து சிரித்து தானே பேசினான். யாராக இருக்கும் என எவ்வளவு யோசித்தும் தெரியவில்லை. அவளும் சொல்லபோவதில்லை என அறிந்து தான் கேட்டான்.

அவனை புரியாத பார்வை பார்த்த மது, "உங்க பிரண்ட் இல்லையா?" என கேட்க, கார் சட்டென்று நின்றது.

"என் பிரண்ட்டா?" - சத்யா

"ஆமா உங்க பெயர் சொல்லி தான் கேட்டாங்க". என்றதும்,

"என்ன கேட்டான்?" என்றான்.

"நீ சத்யா பிரண்ட் தானேனு கேட்டாங்க" என்றதும், ஒரு ஆவலுடன் சத்யா மது முகத்தை பார்த்தான்.

அதை பார்த்தவள் முகத்தை குனிந்து "ஆமானு சொன்னேன்" என்றாள். இவ்வளவு தானா என அவன் திரும்பி காரை ஸ்டார்ட் செய்ய, "உதய் அண்ணாவையும் தெரியுமா கேட்டாங்க. அப்ப தான் உங்க கார் பார்த்ததும் நீங்க வர்றதா சொல்லி கை காட்டினேன். அதுக்குள்ளே ஏதோ வேலைனு சொல்லி போய்ட்டாங்க" என்றாள்.

"யார் மாமா அது? நான் சைட் அடிக்க எல்லா தகுதியும் அவன்கிட்ட இருக்கு. செம்மையா இருந்தான்ல?" என நித்தி கேட்க, சத்யாவின் ஒரே ஒரு பார்வையில் நித்தியின் வாயில் சிப்.

கேட்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை. யாராக இருக்கும் என்று யோசித்தான். அந்த முகத்தை பார்த்தது போல் இல்லையே என நினைத்தவன் பின் பார்த்து கொள்ளலாம் என விட்டுவிட்டான்.

நித்திக்கும் எதுவும் விளங்கவில்லை. யோசித்தாலும் தெரியாததால் அப்படியே விட்டுவிட்டாள். அவர்களை கல்லூரியில் விட்டுவிட்டு திரும்பி சத்யா ஆபீஸ் சென்ற போது அங்கு உதய் முன்னாடியே வந்திருந்தான்.

"சாரி டா லேட் பண்ணிட்டேனா?"

"இப்ப தான் நானும் வந்தேன் டா. சும்மா இன்டெர்வியூ கேண்டிடேட்ஸ் ப்ரொபைல் பார்த்துட்டு இருந்தேன்"

"ஓஹ் எத்தனை மணிக்கு இன்டெர்வியூ சொன்ன?"

"10 மணிக்கு தான் டா. உன்கிட்ட கேட்டு தானே சொன்னேன்".

"ஹ்ம் ஒகே டா. பட் எல்லாம் செக் பண்ணிட்ட தானே?" என்றதும், அவன் அருகில் வந்து அமர்ந்த உதய், "அதெல்லாம் எப்போவோ பண்ணியாச்சு. எனக்கு ஒன்னு தோணுது அது சரியா வருமான்னு பாரேன்" என்றான்.

என்ன என்றவனிடம், "நம்ம ஏன் இப்போ காலேஜ் பைனல் இயர் பண்றவங்களை செலக்ட் பண்ண கூடாது?" என்றான் உதய்.

தொடரும்..