அத்தியாயம் 8
நீயே போய்ட்டு வா என்று உதய் கூறவும் "சரி ஓகே டா" என்று விட்டு "நித்தி நீ உதய் கூட கிளம்பு. எனக்கு மது வீட்டு பக்கம் தான் வேலை. நான் அவளை ட்ராப் பண்ணிடறேன்" என்றான் சத்யா.
மது ஏதோ சொல்ல வர, நித்தி "ஐயோ மாமா! இவன் என்னை கடுப்பேத்துவான்" என்றவள், பின் இங்கிருந்து ஆட்டோ பிடித்தால் செலவாகும் என்ற நினைவில் அமைதியாக நிற்க,
"இல்லை டா நானும் பைக்ல தான் வந்தேன்" என்றான் உதய்.
"நோ இஸ்ஸுஸ் டா. நித்தி அதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ உதய் கூட போறது தான் சேஃப்" என்றதும்,
"நீ உன் ஆளு கூட போறதுக்கு என்னை இவன் கூட கோர்த்து விடுறியா?" என முனங்கிக் கொண்டே நித்தி வெளியே செல்ல, உதயும் சத்யாவும் ஹை-பை அடித்துக் கொண்டனர்.
மது அதை பார்த்து விட, "போச்சு டா! மறுபடியும் மாட்டிட்டேனே" என சத்யா புலம்ப, சிரித்துக் கொண்டே கிளம்பினான் உதய்.
"இங்கே பாரு! போற வழியில ஏதாச்சும் சீண்டுன.. நான் விழுந்தாலும் பரவாயில்லைனு பைக்கை தள்ளி விட்டுடுவேன்" என ஏகப்பட்ட கண்டிஷன்களுடன் ஏறினாள் நித்தி.
"பை மாமா! பை டி. வீட்டுக்கு போனதும் ஒரு மெசேஜ் பண்ணு" என்றவள் சத்யாவை ஒரு பார்வை பார்க்க, அவர்கள் அருகே சென்றவன், "உன் பிரண்ட்ட கடத்திட்டு எல்லாம் போகல. சாரி தான் கேட்க போறேன். பத்திரமா விட்டுடுவேன்" என்றவன், "பை டா நாளைக்கு பார்க்கலாம்" என்று விட்டு அவனுடைய பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
உதய் சென்று விட, 'இவனுடன் எப்படி தனியாக செல்வது அதுவும் பைக்' என்ற யோசனையில் நின்றாள் மது.
"மது ஜஸ்ட் கொஞ்சம் பேசணும் அவ்வளவு தான் ப்ளீஸ் வா" என்றதும் அவளும் அவனுடன் சென்றாள்.
காபி எதாவது சாப்பிட்டுட்டே பேசலாமா? என கேட்டதற்கு மது மறுத்து விட, ஆள் நடமாட்டம் உள்ள சாலையில் வண்டியை நிறுத்தினான்.
"சாரி மது. நிஜமா நித்தி மொபைல் உன்கிட்ட இருக்கும்னு எதிர்பார்க்கலை" என்று அவன் கூற,
"அப்போ எனக்கு தெரியாம என்னை லூசுனு தான் ரெண்டு பேரும் பேசிப்பிங்களா?" என முறைத்துக் கொண்டே அவள் கேட்டதும் சிரித்து விட்டான் சத்யா.
"அதெல்லாம் உன்னோட செல்ல பேரு. இப்ப அதை பத்தி பேசி உன்னோட படிப்பை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். அது மட்டும் இல்லை உன் டியர் பிரண்ட்டை என் டியர் பிரண்ட் விரும்புறான். அவங்க எப்பவும் சண்டை தானே போடுறாங்க அதான் அவங்களுக்கு தனிமை கொடுத்து இப்படி உன்னை தனியா கூட்டிட்டு வந்தேன். அதுக்காக தான் ஹை-பை கூட குடுத்தேன். நீ தப்பா நினைக்க கூடாதுனு தான் இதெல்லாம் சொல்றேன் ஓகே" என்றான்.
செல்ல பெயர் என்றதும் அவனை முறைத்தவள் பின் உதய் நித்தியை விரும்புகிறான் என்று தெரிந்ததும் அவளையும் அறியாமல் மகிழ்ச்சி கொண்டாள். அவர்கள் வீட்டில் நித்திக்கும் சத்யாவிற்கும் திருமணம் செய்ய விருப்பம் என்பது மதுவிற்கு தெரியும். சத்யா காதலை சொன்ன நாளில் இருந்து நித்திக்கு இதில் வருத்தம் இருக்குமோ என்று கவலை இருந்தது இவளுக்கு. உதய் பற்றி தெரியும் என்பதால் இதில் அவளுக்கு சந்தோசமே.
"ஆபிஸ் வர்றதுல உனக்கு ஓகே தானே?" என அவன் கேட்க, "ம்ம் ஓகே தான். இருந்தாலும் சித்திகிட்ட கேட்கணும்" என்று அவளும் சாதாரணமாக கூறினாள்.
"நான் ஒன்னு கேட்கலாமா சார்?" என மது கேட்க, ஒன்றரை வருடத்திற்கு பின் இன்று தான் சார் என்று அழைக்கிறாள் என்பதை நினைத்துக் கொண்டவன் மனம் 'அதே ஒன்றரை வருடத்திற்கு பின் இப்போது தான் உன்னிடம் சாதாரணமாக பேசுகிறாள் என்பதை மறவாதே' என்று கூறியது.
'சார் அந்த பையன் நித்தியை பார்த்து பாட்டு பாடி கிண்டல் பன்றான்' பள்ளி படிக்கும் போது மது கூறியது. எப்போதும் அவளுக்கு அவன் சார் தான் போல என முன் நடந்ததை நினைத்து பார்த்து சிரித்தவன், சார்னு கூப்பிடாதேனு சொன்னா பழையபடி பேசாமல் போய் விடுவாள் என்று நினைத்து "என்ன" என்று மட்டும் கேட்டான்.
"ஏன் நீங்க என்னை விரும்புறீங்க?".
"இதை கேட்கவே உனக்கு ஒன்றரை வருஷம் ஆச்சா?" என்றதும் முறைத்தாள்.
"சரி சரி கூல். நித்தி எனக்கு அத்தை பொண்ணா இருந்தாலும் அவ எனக்கு தங்கை மாதிரி தான். எனக்கு நித்தியை பிடிக்கும். நித்திக்கு உன்னையும் பிடிக்கும். சின்ன வயசில இருந்து பார்க்குறதாலோ என்னவோ தெரியலை. எப்போ, எப்படி, ஏன்னு எல்லாம் எனக்கு தெரியாது. நீ காலேஜ் ஜாயின் பண்ணின அப்புறம் தான் எனக்கே என் லவ் புரிஞ்சிது. பட் நீ காலேஜ் முடிச்சதும் உன்கிட்ட சொல்லி, வீட்டில பேசி கல்யாணம் பேசலாம்னு... ப்ச் என்னென்னவோ பிளான் போட்டேன். இடையில சில சிக்கல். எனக்கு சம்மந்தம் இல்லைனாலும் நீ அந்த சிட்டுவேஸன் புரிஞ்சுக்கணுமே! அதான் அப்பவே உன்கிட்ட சொல்லிட்டேன்" என்றான்.
"என்னோட விருப்பம் பத்தி நீங்க யோசிக்கவே இல்லையே?" என்று மது கூற, அவள் தலையில் கொட்டி கொஞ்ச துடித்த ஆசையை அடக்கியவன்,
"மது! நீ உன் படிப்பை முடிக்கணும்னு தான் இப்பவும் வெயிட் பண்றேன். நீ வேற யாரையும் விரும்பலைன்றது எனக்கு தெரியும். அண்ட் உனக்கு என்னை புடிக்கும்னும் எனக்கு தெரியும். அது காதலா? இல்லை தெரிந்த மனிதன் என்ற விதத்திலா? அப்டினு மட்டும் தான் எனக்கு தெரியாது. மேபீ இப்ப காதல் இல்லைனாலும் பரவாயில்லை கல்யாணத்துக்கு அப்புறம் காதலிச்சுக்கோ" என்று அவன் பேசிக் கொண்டே போக,
"என்ன பேசிட்டே போறீங்க? உங்களை புடிக்கும்னு நான் எப்போ சொன்னேன்?"
"புடிக்காதுன்னா நான் காதலை சொன்ன அப்புறம் பதில் சொல்லலைனாலும் ின்னைக்கு வரை ஏன் பதில் சொல்லலை? நீ எப்பவும் சொல்ற 'சார்' ஏன் இப்போ மட்டும் வரலை?" என்றதும் அவள் யோசிக்க, சிறிது நேரம் பொறுத்தவன், "உன்னை சந்தோசமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு மது. நீ இப்போ எதையும் யோசிக்க வேண்டாம். உன் மனதில் இருக்கும் காதலோ, உரிமை உணர்வோ உனக்கே தெரியாமல் இருக்கலாம். இன்னும் 6 மாதம் தானே! படிப்பு முடியட்டும் பிறகு பார்த்துக்கலாம்" என்றதும் அவள் தலையாட்டினாள்.
"இப்ப கூட நான் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்ற. ஆனால் அது ஏன்னு தான் யோசிக்க மாட்ற" என்று சொல்லி கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தவன், குழப்பத்துடன் அவள் ஏறி கொண்டதும், "நீ எதுவும் யோசிக்க வேண்டாம் எல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்று விட்டு கிளம்பினான்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தெருவின் முனையில் இறங்கிக் கொண்டவளை கோபத்துடன் முறைத்து சென்றான்.
'என்ன சொல்கிறான் இவன்? என் மனதை அப்படியே படித்து வைத்துள்ளானா! அப்படி என்ன தான் நான் அவனுக்கு செய்தேன்? நித்தி மாதிரி தோற்றத்திலும் குணத்திலும் ஒருத்தி அருகே இருக்கும் போதும் அவளை தங்கை ஸ்தானத்தில் வைத்து என்னை விரும்பும் இவனை என்னவென்று சொல்வது. அவன் சொல்வதும் உண்மை தானே! சத்யா என்ற ஒருவனை பார்த்த முதல் நாள் அது சிறு குழந்தையாய் இருந்த பொழுதில் இருந்து இருந்தாலும் பிடிக்கும் என்பது உண்மை தானே!' என்று மனதுக்குள் பேசியபடி வீட்டிற்கு வந்தாள் மது.
நித்தியின் குணமும் மனமும் சிறு வயதிலேயே அழகு என்று அவளுடன் பள்ளியிலேயே நெருங்கியவள் மது. மதுவின் வெகுளி தனமும் பயந்த சுபாவமும் நித்தியை அவளை பாதுகாப்பது என் கடமை என்று எண்ண வைத்தது.
சிறுவயதில் நித்தி கூடவே இருக்கும் சத்யா மீது சிறு பொறாமை கூட மதுவுக்கு உண்டு. நான் பள்ளியில் மட்டும் தானே அவளுடன் இருக்கிறேன். வீட்டிற்கு சென்றாலும் அவர்கள் இருவரும் ஒன்றாக தானே இருப்பர் என்ன நினைத்து தனக்கு வீட்டில் அப்படி யாரும் இல்லையே என மருகுவாள்.
நினைவு தெரிந்த நாள் முதல் நித்தியும் சத்யாவும் மது உடன் தான் இருந்தனர். இப்போதும் இருக்கிறார்கள். அடுத்தடுத்த வயது ஏற ஏற சத்யாவின் நித்தி மீதான அன்பும் அக்கறையும் பிடித்து போனது. அவனுக்கு மதுவை பிடித்ததன் காரணம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் மதுவுக்கு சத்யாவை பிடிக்க நிறைய காரணம் இருந்தது. ஆனாலும் அவன் காதலை சொல்லும் போது நித்தி மீது இருந்த பாசமும் தன் வீட்டை நினைத்து பயமும் சேர்ந்து அவளால் இன்று வரை பதில் சொல்ல முடியவில்லை. நித்தி, சத்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினால்? என்ற எண்ணம். ஆனால் அது எப்படி பட்ட உறவு என்று சமீபகாலமாக அவளுக்கு நன்கு புரிந்தது.
அவன் கூறுவது போல் கல்லூரி முடிந்த பின் பார்த்து கொள்ளலாம் என அவளும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தாள்.
கோபத்துடன் சத்யா வீட்டிற்கு வர, அங்கு தன் குடும்பத்துடன் பார்வதி, உதய் இருப்பதை பார்த்ததும் கோபம் கலைந்தது.
"சித்தி.. எப்படி இருக்கீங்க? எப்போ வந்தீங்க?"
"கொஞ்ச நேரம் தான் ஆச்சு கண்ணா. கோவிலுக்கு போனேன். உதய்க்கு கால் பண்ணும்போது இங்கே இருக்கிறதா சொன்னான் அதான் இங்கே வந்துட்டேன். நீ எப்படி டா இருக்கிற?" என அவன் தலையை பாசமாக வருடினார்.
"நல்லார்க்கேன். ஆமா உதய் எங்கே"
.
"மேல போன் பேசிட்டு இருக்கான் டா. நேரம் ஆகுது. அவனை போய் வர சொல்லு.கிளம்பனும்".
"பார்வதி நீ என்ன முன்னாடி மாதிரி அடிக்கடியா வர்ற. இன்னைக்கு இங்க தான் சாப்பிடற. அது மட்டும் இல்லை, நீயும் உதய்யும் இங்கே தான் தங்குறீங்க" என்றார் குணசேகரன்.
அன்று தன் அன்னை தவறாக பேசிய பின் பார்வதி முன்பு போல் வருவதில்லை. அந்த குற்ற உணர்ச்சியில் தான் இப்படி பேசிக் கொண்டிருந்தார்.
"ஆமா அத்தை, மாமா சொல்றது சரி தானே. நீங்கள் இங்கேயே இருங்க இன்னைக்கு" என்று நித்தியும் கூற, பின் சத்யா, பத்மா, மஞ்சு அனைவரும் கூறியதை தடுக்க முடியாமல் சரி என ஒத்துக் கொண்டார்.
பின் சத்யா உடை மாற்றி வருவதாக அவன் அறைக்கு செல்ல, அங்கே அவன் அறையில் உதய் தீவிர யோசனையில் மேலே பார்த்தபடி படுத்திருந்தான்.
தொடரும்..