• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் செய்யடா காந்தர்வா...

ஹரிணி அரவிந்தன்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 5, 2023
25
28
13
Manalmedu
காதல் செய்யடா காந்தர்வா - 3




தடை செய்யப்பட்ட ஆபத்து நிறைந்த பகுதி

கர்நாடகா அரசால் வைக்கப்பட்டு இருந்த அந்த தகர அறிவிப்பு பலகையை தாண்டி நடந்த ஆருத்ராவிற்கு நிலவின் வெளிச்சம் பாதைக்கு வழிகாட்டியாக அமைந்ததில் அவள் ஒரு வழியாக தட்டுத் தடுமாறி அந்த அருவிப் பாதையை அடைந்தாள். அங்கே அவள் அருவியை நெருங்கிய தற்கு அடையாளமாய் ஹோவென்ற சப்தத்துடன் அருவிக் கொட்டிக் கொண்டு இருப்பது அவள் காதில் விழுந்தது.

"அங்கே என்னப் பாட்டி இருக்கு…?",

"அங்கே யாழிசை அருவி இருக்கும்மா"

"அங்கேப் போக கூடாதா?",

"ஹூகும்.. அங்கே நிறைய பூதம், பேய்லாம் இருக்கு, இப்போ நீ அங்கப் போனால் இந்த அழகு குட்டி யாருனு கேட்டு உன்னைத் தூக்கிட்டுப் போய்டும்…",

சிறுவயதில் தனக்கும் தன் பாட்டிக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை எண்ணிக் கொண்டு அவள் அந்த அருவியின் பாதையில் நடந்தப் போதே அவள் காலில் அருவியில் இருந்து நெறித்ததால் குட்டைப் போல் தேங்கி இருந்த தண்ணீர் தடம் தெரிந்தது.

"பாட்டி….!!! உங்களைத் தேடி தான் வரேன்…",

தனக்குள் சொல்லிக் கொண்டவள், கண்களில் நீர் வழிந்தது. அந்த சிக்மகளூர் சிறுவயதில் அவள் பாட்டி அறிமுகப் படுத்திய இடம், தனக்கு மனக் கவலை என்றால் இதுப் போன்ற வித விதமாக ஒப்பனை செய்துக் கொண்டு அவள் அங்கே வந்து விடுவாள், அவள் போடும் ஒப்பனை பெரும்பாலும் நாற்பது வயது, ஐம்பது வயது பெண்மணி போல் இருக்கும் என்பதால் அவளை யாருக்கும் அங்கே இதுவரை அடையாளம் தெரிந்தது இல்லை. அவள் வெளிநாடு சென்று விட்டாள் என்று அவளுடைய குடும்பத்தாரே நினைத்துக் கொண்டு இருக்க, அவளுடைய பாட்டி அகிலாண்டத்தை தவிர அவள் சிக்மகளூர் தான் வந்து இருப்பாள் என்று யாருக்கும் தெரியாது.

"ஆருத்ரா மேடம் இங்கே இல்லை, பாரின் ட்ரிப் போயிருக்காங்க….",

"இணையத்தை கலக்கி வரும் ஆல் இந்தியன் பியூட்டி ஆருத்ராவின் பாரீஸ் சுற்றுலா புகைப்படங்கள்…",

என்று பத்திரிகை, மீடியா உலகம் அங்கே அவளைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கும் போது அவளோ மக்களோடு மக்களாக திங்கள் நாதரின் சன்னதியில் மெய்மறந்து உருகி கொண்டு இருப்பாள்.

தட்டுத் தடுமாறி அந்த அருவியின் மேல் இருந்த பாறையின் உச்சியில் ஏறியவளுக்கு அதில் படர்ந்து இருந்த பாசி வழுக்கியது. எத்தனை சினிமாக்களில் இதுப் போன்ற பாறையின் மீது ஏறி கதாநாயகனுடன் காதல் வசனம் பேசி இருப்பாள், மழையில் ஆடி இருப்பாள் அப்படி அவள் பாறையின் மீது ஏறும் போது இயக்குநர், தயாரிப்பாளர் முகமெல்லாம் பதறும்.

"மேடம்…பார்த்து….ரிஸ்க் எடுக்க வேண்டாம், இந்த ஷாட்டை கிராபிக்ஸ் பாறையில் கொண்டு வந்துடலாம்…நீங்க ரிஸ்க் எடுக்காதீங்க, அப்புறம் உங்க கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நாங்க பதில் சொல்ல வேண்டும்…",

என்று அவர்கள் சொல்ல, அவளோ புன்னகை செய்வாள். அத்தகைய அக்கறை மழையில் நனைந்தவள் தான் இன்று அதேப் போல் ஒரு பாறையில் இருந்து குதித்து தன் உயிர் விடப் போகிறாள். ஒருவழியாக ஏறி விட்டாள். அதற்குள் அவள் மேல் தெளித்துக் கொண்டு இருந்த அருவி நீர் பட்டு அவள் போட்டு இருந்த ஒப்பனை எல்லாம் கலைந்து கரைந்து விட்டதில் அவளின் பால் நிற உண்மையான முகம் தெரிந்தது. அவள் அதீத பேரழகி தான் என்பது ஓடிக் கொண்டு இருந்த அந்த அருவி நீரில் விழுந்த அவளின் பிம்பத்திலே தெரிந்தது. அதைக் கண்டு,

'இருபது வயது ஆருத்ராவாக தான் இந்த அருவி என் உயிரை ஏற்றுக் கொள்ளும் போல'

எண்ணிக் கொண்டு அவள் துயரத்துடன் புன்னகைத்துக் கொண்டாள். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டு வெளியே விட்டவள், கண்களை இறுக மூடிக் கொண்டு அந்தப் பாறையில் இருந்து அப்படியே கீழே குதித்தாள். கொட்டிக் கொண்டு இருந்த பிரம்மாண்ட அருவியின் முன் ஒரு தூசு போல் அவள் உடல் கீழே விழுவது தெரிந்தது. அந்த பிரம்மாண்ட அருவியின் சப்தத்தின் முன்பு அவளின் உயிர் அடங்கும் சப்தம் கேட்குமா என்ன? ஆனால் அந்த அருவியின் சப்தத்தையும் மீறி இப்போது இனிமையான இசை அந்த பிரதேசத்தை நிறைத்தது. கேட்பவர்களை மதி மயங்க வைக்கும் அந்த இனிமையான இசைக்கு அந்த பிரதேசமே கட்டுப் பட்டது போல் இருக்க, இரவுக்கே உரிய சில் வண்டுகள், காட்டுப் பூச்சிகளின் ரீங்காரம் கூட அந்த இசை ஒலிக்க ஆரம்பித்தப் பிறகு அமைதிக்கு போய் விடவே, சற்று முன் ஆருத்ராவைத் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த அந்த கோட் சூட் அணிந்த அந்த வசீகரன் அருவி நீர் விழுந்துக் கொண்டிருந்த பள்ளத்தின் அருகே உள்ள பாறையில் அமர்ந்துக் கொண்டு கண் மூடி வீணை மீட்டிக் கொண்டு இருந்தான். அவனின் கோட் சூட்டுக்கும் அவன் செய்கைக்கும் சம்பந்தம் இல்லை தான், ஆனால் அந்த முரண்பாடே அவனுக்கு இன்னும் அவன் முகத்தில் இருந்த புன்சிரிப்புடன் சேர்ந்து அழகு சேர்த்துக் கொண்டு இருந்தது. அவன் மடியில் கிடந்த அழகுப் பொருந்திய பெரிய வீணை சற்று முன் ஆருத்ரா கோயிலில் காணிக்கை செலுத்திய அதே சிறிய பொம்மை வீணை என்று
அதன் நிறத்திலே தெரிந்தது.


















மும்பையின் கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதி என்று சொல்லாமல் சொன்னது அந்த தெருவில் இருந்த பிரம்மாண்ட பங்களாக்கள். அதில் அரண்மனைப் போன்ற நான்காவது பங்களாவில் உள்ள பால்கனியில் கண்கள் சிவக்க நின்றுக் கொண்டு இருந்தார் ஐம்பது வயது கல்யாணம். அவர் முன்னே கைக் கட்டிக் கொண்டு தலைக் குனிந்து நின்றுக் கொண்டு இருந்தனர் அந்தப் பங்களாவில் பணியில் உள்ள ஐந்தாறு பணியாளர்கள். அவர்கள் அனைவரும் அந்தப் பங்களாவின் பணியாளர்கள் என்று தாங்கள் உடுத்தி இருந்த உடைகளின் மேல் ஒரு கருப்பு நிற கையில்லாத கோட் அணிந்து இருப்பதிலே தெரிந்தது.

"உங்கள் எல்லா கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு அவுட்டோர் ஷூட்டிங்னு பொய் சொல்லிட்டுப் போயிருக்கா…..இது தான் நீங்க அவளைப் பார்த்துக் கொள்ளும் லட்சணமா?",

அவர் கண்கள் சிவக்க கத்திக் கொண்டு இருந்தார். அப்போது அவர் அருகே வந்த ஒருவன் அவர் காதில் எதோ சொல்ல, அவரது முகம் மாறியது.

"சிக்மகளூரா? அங்கே அவள் எப்படிப் போனாள்?",

என்று வினவியவர், கண்கள் மீண்டும் கோபத்தில் சிவந்தது.

"நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது,
அவளை யாருக்கும் தெரியாமல் இங்கே அழைத்துக் கொண்டு வாங்க, குறிப்பா மீடியாவுக்கு தெரியக் கூடாது, வெளியே மீடியாவில் ஆருத்ரா காணாமல் போன விஷயம் தெரியாத மாதிரி, அந்த ராக் ஸ்டார் ரோஹித்தோடு காதலுங்கிற மாதிரி ஒரு வதந்தியை பரப்பி விடுங்க, அவள் சோசியல் மீடியா அக்கவுண்ட்டை நீதானே மெயின்டெய்ன் பண்ணிற? அதில் அவள் காதல்ல விழுந்து இருக்கிற மாதிரி கேப்ஷன் போட்டு விடு…., அவள் ஆக்டிவா இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டே இருக்கணும், அப்போ தான் மக்கள் நம்புவாங்க, சிக்மகளூர் காட்டுக்கு நம்ம ஆட்களைப் போகச் சொல்லு…நாளை விடிவதற்குள் அவள் இங்கே இருக்க வேண்டும்….",

அவர் இறுக்கமான முகத்துடன் உத்தரவு போட, அவன் தலையாட்டி விட்டு நகர்ந்தான்.

"ஆருத்ரா….",

அவர் பல்லைக் கடித்துக் சொல்லிக் கொண்டு நின்றுக் கொண்டு இருக்கும் அந்த அறையின் ஒரு பக்கச் சுவற்றை அடைத்துக் கொண்டு இருந்த கண்ணாடி அலமாரி முழுவதும் வித விதமான விருதுகள், பதக்கங்கள் ஆல் இந்தியன் பியூட்டி ஆருத்ரா என்றுப் பெயர் பொறிக்கப்பட்டு அடுக்கப் பட்டிருந்தது.


- தொடரும்

Screenshot_20230105-192132_Gallery.jpg
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அபாரமான எழுத்து நடை 👏👏👏👏