ஓர் அழகிய காலைப்பொழுதில் கதிரவனின் ரம்மியமான மெல்லிய புன்னகையில், அவள் கழுத்திலிருந்த புதிய தாலி... ஆதவனின் ஒளிபட்டு பனித்துளியைப்போல் அழகாய் மின்னிக்கொண்டிருக்க...
தன் மனதிற்கு பிடித்தவனின் கைகளால் வாங்கிக் கொண்ட பாரம்பரியம் மிக்க மூன்று முடிச்சாக இருந்தாலும், அவளுக்கோ அதன் முழு இன்பத்தையும் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை.
'அப்போதெல்லாம் தூரம் இருந்தாலும் நெருங்கி இருந்தது எங்கள் காதல்... இப்போ, என் அருகில் அமர்ந்திருக்கும் அவனை ஏற்க மனமோ ஏன் இப்படி யோசிக்கிறது ?' மனம் போன போக்கில் யோசித்துக்கொண்டு வந்தாள்.
இவளின் எண்ணம் ஒருபுறம் பயணம் செய்துகொண்டு இருக்க.. இந்தக் குழப்பத்திற்கு காரணமான அவளின் மன்னவனோ, எதையோ சாதித்தது போல், முகத்தில் ஒரு பொலிவோடு புதுமாப்பிள்ளைத் தோரணையிலே உட்கார்ந்து இருந்தான்.
அவன் முகத்தில் தோன்றிய தேஜஸை பார்த்து, அவனின் துணைவிக்கு உள்ளுக்குள் தீயை பற்றவைத்தது போலிருந்தது.
அவனை வைத்த கண் வாங்காமல் விசித்திரமாக பார்த்தவளுக்கு, பதிலாக அவனின் அலட்சியப் பார்வை மட்டுமே கிடைத்தது.
அவளுக்கு உள்ளுக்குள் பற்றி எரிந்துக் கொண்டு இருந்த தீ அவளது கண்களில் பிரதிபலித்தது.
" ஏதாவது சாப்பிட வாங்கி வரட்டுமா... ?" என்று தன் அத்தையின் குரலுக்கு பதில் தர நினைத்தவள், ஏதும் பேசாமல் மறுப்பாகத் தன் தலையை மட்டும் அசைத்துவிட்டு மீண்டும் தன் குழப்பத்தோடு அமர்ந்திருந்தாள்.
"ஏன்டா.. பொண்ணு ரொம்ப அமைதி போல. உனக்கு ஏத்த மாதிரி பொருத்தமா தான் அமஞ்சிருக்கு, இருந்தாலும் எனக்கு ஒரு மனக்குற, நல்ல வாயாடியா வந்து உன்னோட ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் பேசறவளா இருந்திருந்தா, நான் இன்னும் சந்தோசமாக இருந்து இருப்பேன். பரவால்ல ... என் மருமகள் இப்படி இருக்கிறது கூட அழகுதான்" என தன் மனதில் இருப்பதை மறைக்காது வெளிப்படையாகவே கூறிவிட்டார், அவளின் அத்தை.
அர்ஜுனின் அன்னை மட்டும் சாராவிடம் பேசிக்கொண்டு வர... மெதுவாக அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசிக்கொண்டு வந்தாள் சாரா.
மனமும் உடலும் ஒருசேர அவளை சோர்வாகியாகியது, சிறிது நேரம் தூங்கினால் கொஞ்சம் மனது சமநிலை படும் என்று நினைத்து அமர்ந்து இருந்தாள்.
மீரா அத்தையின் மீது உரிமையோடு சாய்ந்தவாறு தூங்கினாள் சாரா.
சிறிது தூரம் சென்றதும் அவளின் அத்தைக்கு கைகள் மறத்து போனது போல் ஆனது.
அர்ஜூன் சைகையில் அழைத்து சாராவை தாங்குமாறு பணிக்க, அவனுக்கு கசக்குமா என்ன?
இது உரிமையோடு தீண்டும் முதல் ஸ்பரிசம், அவனை வெகுவாக கவர்ந்து இழுத்தாள் அர்ஜுனின் மனம் கவர்ந்த மனையாள்.
மனதில் ஆயிரம் யோசனைகள் அவனுக்கு... 'என்னை தவறாக நினைத்து இருப்பாளோ?.. ' என்று இவனது அறிவு அதன் குரலை உயர்த்தியது.
'இல்லை என்மீது அவளுக்கு அளவுக்கு அதிகமாக நம்பிக்கை உண்டு' என அவன் மனம் மற்றும், அறிவுக்கிடையில் போட்டியாக வந்து குரல் கொடுத்து அர்ஜுனை சமாதானப்படுத்தியது.
அவனது மார்பில் இன்னும் ஒன்றி படுத்தாள் சாரா. தனக்கான இடத்தில் வந்து சேர்ந்தது போல, அவள் மனம் நிம்மதியோடு தன்னவனிடம் பாதுகாப்பில் உறங்கினாள்.
தன்னவளை மனைவி என்ற உரிமையோடு தொடும் முதல் ஸ்பரிசம், அர்ஜுன் மெலிதாக சாராவை பார்த்து சிரித்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான்..
அர்ஜுனுக்கு இவர்களின் திருமணம் பற்றி... அதிகமாக ஆசை உண்டு.
இப்படி திடீர் திருமணம் அவனுக்கு சிறிது மனவருத்தத்தை கொடுக்கத்தான் செய்தது.
அர்ஜுன் எப்போதும் அடாவடிதான். முன்பு எல்லாம் அவளின் வேலை நேரத்தில் வம்பிழுப்பதும். அவளுடைய வேலையைச் செய்ய வேறு பணியாள் வைத்துவிட்டு, எப்போதும் சாரா அவனது அருகிலேயே இருக்குமாறு வைத்துக்கொள்வான்.
சாரா தூங்காமல் இருந்திருந்தால் மறந்தும் கூட அவன் புறம் திரும்பி இருக்கமாட்டாள்.
அவனோ அவளின் ஸ்பரிசத்தை ரசித்துக்கொண்டு இருக்க... அர்ஜுனின் அன்னை ஏதோ பேசிகொண்டே வர.. அவனோ தனி உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டு வந்தான்.
இவர்களின் பேச்சு ஏதும் காதில் போட்டுக் கொள்ளாது, நம்ம புதுமாப்பிள்ளையோ அவனுக்கு பிடித்த பாடல்களை மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்தான்.
தொடர்ந்து ஒலிக்கும் அவனது முணுமுணுப்பில் சாரா தூக்கத்திலிருந்து எழுந்து விட்டாள்.
அர்ஜுனை முறைத்தவாரு சாரா விலகி சென்று அத்தையிடம் ஒன்றி அமர்ந்து கொண்டாள்.
அவர்கள் சென்றுகொண்டு இருந்த ரயில் வண்டி முன்னோக்கி தன் பயணத்தை மேற்கொள்ள.
புது மணப்பெண்ணின் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தது.
ஒரு நாள் முன்.....
"இன்னும் இரண்டு மணி நேரத்தில் திருமணம் அதற்குள் எப்படியாவது சென்று விட வேண்டும். இந்த ட்ராபிக் வேற...."என்று சலித்தபடி சுற்றிமுற்றி பார்த்தவளுக்கு இந்த நெருக்கடிகளைத் தாண்டி போவது மிகவும் சிரமம் என்று பட்டது.
'ட்ராபிக் இல்லாம போனா கூட பரவாயில்லை ஆனால் நான் இன்னும் ரெடி கூட ஆகவில்லையே என்ன செய்வது...?'என்று தன்னுள் ஆழ்ந்த யோசனையின் பிடியில் சிக்கித் தவித்தவள்,
டிரைவரிடம், "அண்ணா...! இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..?"
"ஒரு மணி நேரம் ஆகும் நினைக்கிறேன்மா....."
"அண்ணா இங்க பக்கத்துல ஏதாவது நல்ல ஹோட்டலுக்கு போங்கண்ணா...."
பக்கத்தில் ஒரு விடுதி தென்பட அதன் வாசலில் வண்டியை நிறுத்தினார் அந்த டிரைவர்.... அவ்விடுதிக்குள் நுழைந்தவள்.
"என்னமோ இந்த ஹோட்டலை விலைக்கு வாங்க வந்த மாதிரி இத்தனை செக்கிங் சைன் வாங்குறானுங்க.!!"என்று முனகியவாறு டிரைவர் பக்கம் திரும்பி.
"அண்ணா... இஃப் யூ டோன்ட் மைண்ட்? நீங்க கொஞ்சம் வெயிட் செய்கிறீர்களா, நான் ஒரு அரை மணி நேரத்தில் வந்துவிடுகிறேன்."
"பரவால்ல மா நீங்க போய்ட்டு வாங்க நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்".
” என் நம்பரை குறிச்சு வச்சிக்கோ மா நீ வெளியே வந்ததும் கூப்பிடு...."
"தேங்க்ஸ் அண்ணா" என்று சொல்லிவிட்டு ஒரு தலை அசைவோடு அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி விரைந்தாள்.
முழுவதாக தயாராகி ஒரு முறை கண்ணாடியில் அவளை சரி செய்துவிட்டு திரும்பியவள்.
'பரவாயில்லை புடவையில கூட நல்லாத்தான் இருக்கேன் ' என்று நினைத்தவள் அவளது மனம் அவளவனை நினைவு படுத்தியது.
"ஐய்ய்ய்யோ... ! என் கண்ணே பட்டுடும் போல இருக்கே!" என்று தனக்கு தானே சத்தமாக பேசிகொண்டு, ஜஸ்ட் எ மினிட் இத அந்த நல்லவனுக்கும் காட்டனும்னு ஒரு 'கிளிக்' எடுத்து அந்த புகைப்படத்தை அவனுக்கு அனுப்பினாள் .
"ஓகே! லெட்ஸ் மூவ்... இப்போ கெளம்பலாம்".
இப்போது வாகனம் நெரிசல் முன்பை விட சற்று கொஞ்சம் குறைந்திருந்தது.
'எல்லாம் உன் நேரம் சாரா, மண்டபத்தில் சரியாக தாலி காட்டும் நேரத்தில் வந்துருக்கியே உன்ன என்ன செய்றது?'அவளை அவளே கடிந்துகொண்டு அந்த பிரமாண்டமான மண்டபத்தின் உள்ளே நுழைந்தாள். ஏனோ அவள் மனது திடீரென்று படபடத்தது.
'அக்காவை பிரியப்போறோம்ல அதனால தான் இப்படி ஆகுது' ன்னு நெனச்சிட்டே உள்ள ஆர்வமாக நுழைந்தவள்.
'அக்காவின் மாமாவை பார்க்க சென்றவள். வேகமாக கூட்டத்தை விலக்கிக்கொண்டு வேகமாக முன்னேறி சென்றவளுக்கு பெரும் அதிர்ச்சி.
மணமகன் இடத்தில் தன்னுடைய காதலன் கம்பீரமாக இருக்கும் தோரணையைக் கண்டவளுக்கு மயக்கம் வந்துவிடும் போலிருந்தது.
'எதுக்கு இவன் இங்க உட்கார்ந்து இருக்கான்?' மக்கு அதுகூட தெரிலையா ? அவனுக்கு கல்யாணம்
'எனக்கு தெரியாமல் என்ன ஏமாத்திட்டானா?? என்று யோசித்தவளுக்கு அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலை சுற்றியது.
தன் அருகில் இருந்த பொருளை இறுக்கி பிடித்தவளுக்கு, காதலனை கொலை செய்யும் அளவிற்கு கோபம் பொங்கிவந்ததை கட்டுப்படுத்தி தன் நிலையை உணர்ந்தவள் அமைதியாக அந்த இடத்திலேயே நின்றுகொண்டாள்.
'ஓ இதனால்தான் அவ்ளோ படபடப்பா இருந்ததா சற்று முன்பு?' என்றெண்ணியவளின் மனமோ பதைபதைக்க. அவள் வாழ்க்கை மற்றும் உயிர் அவளைவிட்டு பிரிந்து செல்லும் உணர்வு.... இவை அனைத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் அழுத்தி கண்களை மூடி திறந்தாள்.
'என்னை ஏமாற்றி துரோகம் செய்துவிட்டு இங்க ராஜத்தோரணையில்' இருக்கும் அவனை கண்ணீரோடு கண்கள் சிவக்க... கோபப் பார்வையில் அவனை பார்த்தவளின் மனதிற்குள் நிறைய கேள்விகள்.
சாராவின் வாழ்வில் கண்ணீர் விடக்கூட மறந்த நிமிடங்கள் இதுவாகத்தான் இருக்கும்.
தன் காதலனை மாமா என்று கூப்பிட ஆசைப் பட்டவளுக்கு உண்மையில் மாமா உறவாகி போனான்.
அவளோட காதலன்தான் அக்காவின் கணவன் என்று தெரிந்த பிறகு நம்ம சாராவின் நிலை என்ன...?