• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 08

MK31

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
27
13
thanjavur
InShot_20241128_135734632.jpg


காதல் 08

சத்தமாய் சிரித்தவன் வாயை தன் கை கொண்டு மூடியவளோ "என்ன பண்ணுறீங்க வெளில கேட்கப்போகுது பாருங்க" என்று அத்தனை மெல்லிய குரலில் அவள் பேச, தனது இதழ்களில் உரசிய அவளது உள்ளங்கைக்கு இதழ் குவித்து முத்தம் வைத்தவனோ, கன்சிமிட்டி சிரிக்க, கையை சட்டென எடுத்துக்கொண்ட ரஞ்சினி தான் அவன் சிரிப்பில் தொலைந்து போனாள்.

"என்ன மேடம் சைட் அடிச்சி முடிஞ்சிதுனா நான் தூங்கலாமா?" என்று கேட்க, அவளோ "யாரு உங்கள, அதுவும் நான் சைட் அடிக்கிறேனா! ரொம்ப தான் பேராசைப் படக்கூடாது மிஸ்டர் மனிதகுல மாணிக்கம்" என்று திமிராய் சொன்னவள் அவனைத் தாண்டிச் சென்று மெத்தையில் அமர்ந்து கொண்டாள்.

"ஆஹான்! அப்போ நான் அழகா இல்லையாமா என் பொண்டாட்டிக்கு? சைட் அடிக்கிற அளவுக்கு வேர்த் பீஸ் இல்லைங்கிறியோ? சரிதான்" என்று கேட்டபடி அவன் அலுமாரியில் வைத்திருந்த பெட்டி ஒன்றை எடுத்து வந்தவன் "நான் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், உனக்கு ஒன்னு தரணும்னு, ரொம்ப ஆசையா காத்திருந்தேன். ஆனா நீதான் சைட் அடிக்கிக்கலைனு சொல்லிட்டியே சோ உனக்கு தேவப்படாது அதனால எதுவும் தர வேணாம்ல.. சரி அப்போ தூங்கலாம்" என்றவன் வேறெதுவும் சொல்லாமல் உடை மாற்றிக் கொள்ள குளியல் அறைக்குள் நுழைந்தான்.

அவன் மாற்றுத்துணியை எடுத்துக் கொண்டு குளியறைக்குள் நுழையும் வரை பார்த்திருந்தவள் அவன் சென்று கதவடைத்ததும், கதவிலும் ஒரு பார்வையை வைத்தபடி, அவன் அங்கே மேசையில் வைத்துவிட்டுச் சென்ற பெட்டியின் அருகில் சென்றாள்.

அதுவோ பூட்டால் பூட்டப்பட்டிருந்த இரும்பு பெட்டி, தூக்கிப் பார்க்க சற்று கணமாகத் தான் இருந்தது.

'உள்ளுக்குள்ள என்ன இருக்கும்? ஒருவேள ஏதாச்சும் கிப்ட் இருக்குமோ? என்னவோ சொல்லணும்னாங்களே என்னவா இருக்கும்? காலைல கூட ஏதோ உளறிடுவேன்னு எல்லாம் சொன்னாங்களே.. என்னனு கேட்டிருக்கலாமோ?' என்று பல கேள்விகள் மனதில் ஓட, அந்த பெட்டிக்குரிய சாவி எங்கேன்னும் இருக்கிறதா என்று அங்கு மேசையில் எல்லா இடத்திலும் சத்தம் வராமல் தேடத் தொடங்க, நேரம் சென்றதை அறியவில்லை அவள்.

அவன் வெளியே வந்ததைக் கூட உணராமல் இன்னும் தேடிக் கொண்டுதான் இருந்தாள் ரஞ்சிதனின் மனைவி.

அவனோ அங்கே அவளருகே சுவற்றில் சாய்ந்து நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லாமல் அவளை நெருங்கி பின்னிருந்தே அணைத்துக்கொண்டவன், அவள் காதின் அருகே நெருங்கி "நான் வேணா சாவியக் கொடுக்கட்டுமாடி பொண்டாட்டி?" என்று அத்தனை மெல்லிய குரல் பேச, காதில் உரசிய அவன் மீசையும், அவன் இதழ்வழி அவளுக்காய் வெளியேறிய அவனது மூச்சுக் காற்றும் மயிலறகு போல அவளை வருடிச் சென்றதில், உணர்வு தாங்காமல், பின்னால் சரிந்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

"யாரோ சைட் அடிங்கலனு ரொம்ப உறுதியா சொன்னாங்களே! அந்த வக்கீல் மேடத்த எங்கயாச்சும் பாத்தீங்களா?" என்று முன்பு பேசிய குரலை விட சற்று சத்தமாகப் பேசியதில் அவன் மீது மயக்கத்தில் இருந்தவள், சற்று தெளிந்தாள்.

அவன் பக்கம் திரும்பியவள் அவனை நிமிர்ந்து பார்க்க வெட்கம் வேறு வந்து தொலைத்ததில், அவன் நெஞ்சிலேயே முகத்தை புதைத்துக்கொண்டாள்.

அவனோ ஏதோ பேச இதழ் பிரிக்க, தன் கரம் கொண்டு அவன் இதழை அடைத்தவள், அவன் நெஞ்சில் இன்னும் ஆழப்புதைந்தாள். அதில் அவன் புன்னகையை அவளது கரத்த்தை தாண்டியும் அவளது காதுகள் உணர்ந்து கொண்டது.

"ப்ளீஸ்.. ப்ளீஸ் எதுவும் பேசாதீங்க" என்றாள் அவனை சமாளிக்க முடியாமல்,

அதற்கு அசருபவனா அவன் "பேசாதீங்க, செயல்ல காட்டுங்கனு சொல்லுற அப்படித்தான?" என்றவன், அவள் அதிர்ச்சியில் அவனை நிமிர்ந்து பார்ப்பதை உணர்ந்து ஒன்றை கண்ணை சிமிட்டி சிரிந்தான்.

"நானெல்லாம் பொண்டாட்டிக்கு அடங்குன புருஷன்மா, அவ எள்ளுனு சொன்னா எண்ணெய்யா நிற்பேன், இப்போ அவ என்னையே கேட்டிருக்கா? கொடுக்காம இருப்பேனா?" என்றவன் அவளை குழந்தை போல் கைகளில் ஏந்திக் கொள்ள, அவன் விளக்கத்தில் முழிப்பது அவள் வேலையானது.

நீதிமன்றத்தில் அத்தனை பேரையும் வாயடைக்க வைப்பவள் அவனிடம் வாயடைத்துப் போய் நின்றாள்.

அதனை அவனிடமே சொல்லி, மீண்டும் அவன் பதிலில் அவள் முழித்தது மட்டும் தான் மிச்சம்.

"என்னடி பொண்டாட்டி ஒழுங்கா கேக்கலையா? மறுபடியும் சொல்லவா? அதாவது வாயடைச்சு போய் நிற்க வெச்சிட்டேன்னு சொன்னியே! ஆனாப் பாரு உன் வாயும் சரி என் வாயும் சரி எவ்வளவு டிஸ்டன்ஸ்ல இருக்கு அப்பறம் எப்படி வாயடைக்கிறதாம்! வேணும்னா டெமோ ஒன்னு ட்ரை பண்ணி பார்ப்போமா?" என்றிருந்தான்.

அவள் மனதோ 'இப்போ அந்த வசனம் சொல்லியே ஆகணுமாடி உனக்கு? உன் ஆளு டபில் மீனிங்ல தான் டாக்டரேட் முடிச்சிருபாரு போல' என்று எண்ணிக்கொண்டிருந்தவள் உலகுக்கு வர அவன் முகம் அத்தனை நெருக்கத்தில், கூட அவனும் அத்தனை நெருக்கத்தில் கூடவே மஞ்சத்தில் அவள். எப்போது வந்தாள் எப்படி வந்தாள் என்று அவளுக்கே தெரியாமல் சிறை செய்திருந்தான் அவளோடு அவள் நினைவுகளையும்.

அவளோ பதறி விலகத் தொடங்க, அடுத்த பக்கம் சரிந்து படுத்தவன் அவளை அவன் நெஞ்சில் போட்டுகொண்டான்.

"என்னோட பெப்பர் மின்ட்டுக்கு என்ன, என் உணர்வுகளை என் காதலை, என் ஏங்கத்தை, என் காத்திருப்ப, என் ஆசைய, என் காமத்தை சொன்னா புரியுமா?" என்றவனின் குரலில் இருந்த கலக்கம் அவளுக்கு புரிய அவன் நெஞ்சில் சாய்ந்து படுத்திருந்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன், "என் கண்ணுல உனக்கான என்னோட அஞ்சு வருஷ காத்திருப்பு தெரியுதா மின்ட்?" என்று கேட்க, அவளோ புருவன் சுருங்க யோசனையுடன் "என்ன முன்னாடியே தெரியுமா உங்களுக்கு?" என்று கேட்க அந்த கேள்விக்காக காத்திருந்தவனோ அவளை இறுக அணைத்திருந்தான்.

ஐந்து வருட தனிமையுடன் கூடிய அவளுக்கான காத்திருப்பு, மூடி வைத்திருந்த காதல் எல்லாம் போதும் என்று தோன்றி விட்டது.

"ரொம்ப டைட்டா கட்டிகிறேன் கொஞ்சம் எனக்கா பொறுத்துக்கோடி, நீ எனக்குள்ள இருக்கன்னு என் ஒவ்வொரு செல்லுக்கும் சந்தோசமா சொல்லப்போறேன்" என்று உளறியவனது அணைப்பு வலிக்கவில்லை, மாறாக அவன் உணர்வுகள் அவளை உடைத்திருந்தது. காதல் என்கிறான், கத்திருப்பு என்கிறான், ஐந்து வருடம் என்கிறான். எப்படி இதெல்லாம்? எங்கு ஆரம்பித்த நேசம் இது? என்று பல விடயம் அவள் மூளைக்குள் ஓட, அவன் காட்டும் உணர்வுகள் அவளை கொல்லாமல் கொன்றது.

அணைப்பு நீண்டு கொண்டே போனதே தவிர, அவன் அதற்கு மேல் முன்னேறவும் இல்லை, அவளை விடவுமில்லை, அவன் செய்கை எல்லாம் அவனுள் அவளை உணருவதாகவே இருந்தது.

இப்படி அவனையே உடைத்து நொறுக்கும் அளவுக்கான, அவன் காதலை உணர அவளுக்கும் ஆசையாய் இருந்தது.

அவனை தன்னை விட்டு பிரித்தவள் "ரஞ்சிதன் எனக்கு தெரியணும் நம்ம காதல் பத்தி சொல்லுறீங்களா?" என்க, அவள் விளித்த நம் காதல் என்ற வசனம் அவனை பலாயிரம் முறை உயிர்பிக்க வைத்திருந்தது.

அவனோ "கேக்குறியா மின்ட்? சொல்லவா?" என்று மீண்டும் அவன் அத்தனை ஆனந்தத்துடன் கேட்க, அவளும் ஆசையாய் புன்னகைத்தாள்.

எழுந்து அந்த பெட்டியை கையில் எடுத்து வந்தவன் அங்கே மெத்தையில் அவளுடன் அமர்ந்தான்.

அவள் கையில் சாவியைக் கொடுத்தவன் திறக்குமாறு கண் காட்ட, அவளும் திறந்தாள் கண்களில் எதிர்பார்ப்புடன்..

உள்ளே பல பெப்பர் மின்ட் மிட்டாய்களும், இன்னும் சில பொருட்களும் இருந்தது. அவளுக்கு என்னவென்று புரியாவிட்டாலும் அவள் சம்மந்தபட்ட ஏதோ ஒன்றென ஓரளவுக்கு அவன் கண்களில் தெரிந்த உணர்வுகளில் இருந்து புரிந்து கொண்டாள்.

"சாரிங்க எனக்கு இதெல்லாம் என்னனு தெரியலையே! கோச்சிக்காம சொல்லுறீங்களா?" என்று அத்தனை சங்கடத்துடன் அவள் கேட்க, அவனோ புன்னகைத்தபடி "அதுக்கென்னடா, நீ கேட்டா நான் சொல்லப்போறேன்.. வேணும்னா உனக்கு தெரியாம போனதுக்கு பனிஷ்மென்ட்டா ரெண்டு முத்தா தரியா?" என்று கன்னத்தைக் காட்டியபடி கேட்டு, அவளை இலகுவாக்க முயல, அவளும் மாட்டேன் என்று எல்லாம் சொல்லவில்லை உடனே கொடுக்கத் தயாராக, அவன் தான் விலக வேண்டியிருந்தது.

முன்பே அவளுக்கு அவனை அத்தனை பிடித்திருந்தது காரணம் எல்லாம் தெரியாவிட்டாலும் ஏதோ ஒன்று அவன்பால் அவளை இழுப்பது போல் உணர்ந்திருக்கிறாள். ஆனால் அது அவள் மீதான அவனது காதல் என்பது இப்போதான் புரிகிறது.

அவனை மனதில் கணவனாய் வடித்திருந்தவளுக்கு, அதிலும் அவன் தன்னை முனபே காதலித்திருக்கிறான் என்று தெரிந்த பிறகும் அவன் கேட்ட முத்தத்தை கொடுக்க தயங்குவாளா என்ன??

அவள் முத்தம் பதிக்க முன் விலகியவனோ "என்னடி கேட்டதும் கொடுக்குற?" என்று கேட்க, அவளோ சிரிப்புடன் "கேட்டா கொடுப்பாங்க தான?" என்று அவனையே திணற வைத்திருந்தாள்.

அவனோ "பாத்துடி உன்னையே கேட்பேன் கவனம்" என்றவன் முடிக்கவில்லை அதற்குள் அவளோ "எடுத்துக்கோங்க" என்று கண் சிமிட்டி சொல்ல, ரஞ்சிதனோ பெரிய கும்பிடு போட்டவன் "அடியேய்! சொல்லி முடிக்கிறவர கொஞ்சம் சும்மா இறேண்டி, அப்பறம் என் கை கால் சும்மா இருக்காது, நானும் சும்மா இருக்கமாட்டேன். பேசாம இதெல்லாம் அப்பறம் சொல்லவா முதல்ல உன்ன எடுத்துகிறேன்" என்க அவளோ அவன் பேச்சில் புன்னகைத்து அவனை பார்த்து சம்மதமாய் கண் வேறு சிமிட்ட, ரஞ்சிதன் பட்ட அவஸ்தை சொல்லில் அடங்காதது.

"ஐயோ! பிள்ளையராப்பா காப்பாத்து, கொஞ்ச நேரம் நீ வாயே திறக்கக் கூடாது நான் சொல்லி முடிக்கிற வர, என்று அவள் மடியில் படுத்துக்கொண்டவன் அவர்களது காதலை சொல்லத் தொடங்கினான்.


"என்னோட பதினாறு வயசுல என் அம்மா என்ன விட்டு போய்ட்டாங்க ரஞ்சி, இயற்கை மரணம் எல்லாம் இல்ல, அவங்களா அவங்க முடிவ தேடிகிட்டாங்க, அவங்க புருஷன் அதான் என் அப்பான்னு பேருக்கு இருந்தானே ஒருத்தன் அவன் ஏமாத்திட்டானாம் அதுவும் இருபது வருஷம் கழிச்சு தெரிஞ்சி போச்சுன்னு மனசொடஞ்சி தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.. அதுல எனக்கு இப்போவும் என் அம்மா மேல கோபம் தான்,என்னை யோசிச்சு பாக்கலைனு.. அப்போ நான் யாரு அவங்களுக்கு, புருஷன் தான் பெருசா தெரிஞ்சான்னா என்ன எதுக்கு பெத்துக்கணும்" என்றவன் அடுத்து பேச முடியாமல் தடுமாற, அழுகையை அடக்க எண்ணி பக்கவாட்டில் திரும்பி அவள் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டான்.

"வேணா எதுவும் வேணா தூங்கலாம் ரொம்ப டையர்டா இருக்கீங்க இன்னைக்கு ஃபுல்லா அலைச்சல் வேற.. சோ இன்னைக்கு நல்லா தூங்குறோம் நாளைக்கு இத பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்" என்க அவனோ "ம்ம்கூம், நான் சொல்லணும்" என்றான் பிடிவாதமாய்.

அதற்கு அவளோ அவன் நெற்றியில் ஆழ்ந்த முத்தத்தை பதித்து "பொண்டாட்டி சொன்னா கேக்கணும் எனக்கு தூக்கம் வருதுப்பா உங்கள கட்டிக்கிட்டு தூங்கவா? இன்னும் நம்ம வாழ்க்கை ரொம்ப தூரம் விரிஞ்சி கெடக்கு. இன்னைக்கு எல்லாத்தையும் தள்ளி வெச்சிட்டு நமக்காக இந்த இரவை எடுத்துக்குவோம்" என்றாள்.

அவளுக்கும் அவன் கடந்த காலம் தெரிய வேண்டும் தான் ஆனால் இன்று அவன் அழுகை அவளை ஏதோ செய்திருக்க, ஒரு தாயாய் அவள் மனம் அவனை சமாதானப்படுத்தி தூங்க வைக்கவே விழைந்தது, காலையில் பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு..

அவள் தூக்கம் வருகின்றது என்றதும் மற்றது மறந்தவன் அவனும் சம்மதிக்க, சிறிது நேரத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறக்கத்தை தழுவியிருந்தனர்.

____________________

அங்கே மோகனோ கோபத்தை அடக்க வழி தெரியாமல் குடித்துக் கொண்டிருந்தான். கையில் ரதி இன்று தாலி எடுத்து கொடுத்த புகைப்படம் பார்க்க பார்க்க வயிறு எரிந்தது அவருக்கு. குடி போதை கூட மண்டையில் ஏறவில்லை முழுதும் ரதியின் ஆக்கிரமிப்பே, அந்த புகைப்படத்தில் சிரித்த முகமாய் அவரது குடும்பத்துடன் நின்றிருந்த ரதியே அவர் மூளையை குடைந்து கொண்டிருந்தார்.

அப்படி ஒரு கோபம் வெறி அவர் மீது, அவர் சிரிப்பை சிதைக்க வேண்டுமென்பது அவரது போதை, ரதியை அடக்கியே பழகியவருக்கு அந்த ஆணாதிக்க தரும் போதையை எந்த மதுவும் அவருக்கு தரவில்லை.

தன் கூட்டுக்குள் இருந்த கிளி பறந்து அதான் குடும்பத்துடன் சேர்ந்தால் கழுகு சும்மா விடுமா?

பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் அந்த புகைப்படத்தைப் போட அதுவோ கொஞ்சம் கொஞ்சமாக ரதியின் சிரித்த முகத்தை எரித்து சாம்பலாக்க அது தந்த போதையில் அவர் இதழ்கள் மெல்ல விரிந்து கொண்டது கொடூரமாய்..

கானல் தொடரும்.

இப்படிக்கு
உங்கள் பெப்பர் மின்ட் மிட்டாய்
(MK31)
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
இந்த கேடுகெட்ட மோகனுக்கு என்ட் கார்ட் எப்போ வரும் 🤔🧐 கேவலமான ஜென்மம் 😡
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ரஞ்சனி நல்லாவே சூழ்நிலைய handle பண்ணுறா சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️மோகன் திருந்த மாட்டான் வக்கிரம் பிடிச்சவன்