காதல் 10
(இறுதி அத்தியாயம்)
இதோ ரஞ்சினியின் திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. இந்த ஒரு வாரத்தில் கணவன் மனைவியின் உறவு எவ்வளவு பலப்பட்டிருந்ததோ அதே அளவுக்கு ரதியுடனும், நரேந்திரனுடனும் ரஞ்சினிக்கு உறவு பலப்பட்டிருந்தது.
தன் அத்தையை பற்றித் தாய் தந்தை சொல்லிக் கேள்விப்பட்டிருகிறாள் தான், ஒரு குறிப்பிட்ட சிறுவயது புகைப்படம் தவிர பெரிதாய் பார்த்ததில்லை..
அவர் வீட்டை விட்டுச் சென்றதும், தாய் தந்தை தினமும் பார்த்துக் கவலைப் படுவதால் கோபத்தில் ரதியின் இளமைக்காலப் புகைப்படம் அத்தனையையும் ரவி எரித்திருந்தார்.
ஆனால் ரதிக்கோ, அண்ணன் மகள் என்று தெரிந்ததில் இன்னும் ரஞ்சினியின் மேல் கவனிப்புக் கூடியிருந்தது.
இதோ திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க, இன்று வேலைக்கு வந்திருந்தாள் ரஞ்சினி.
அவள் வேலை செய்யுமிடத்துக்கே அவளைக் காண ரதியும் நரேந்திரனும் வந்திருக்க, ரஞ்சினியின் முகத்தில் யோசனை ரேகை, அவர்களைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
"சொல்லுங்க ஆன்டி இங்க வரைக்கும் தேடி வந்திருக்கீங்க வீட்டுலயே சொல்லி இருக்கலாமே" என்று கேட்க, நரேந்திரனோ "நல்லா சொன்னீங்க அண்ணி, எங்கம்மா ஒரு ரூல்ஸ் ராமானுஜம், எல்லாம் நீட்டா சரியா பண்ணனும். நீதி நியாயம் கருமை எருமைனு டயலாக் பேசிட்டே இருப்பாங்க, அவங்கள நம்மளால மாத்த முடியாது சோ, நாம மாறிக்க வேண்டியது தான்" என்க, ரஞ்சினியோ அவன் பேச்சில் புன்னகைத்தாள்.
"நல்லது தானே நரேன். இப்போ சரியா நடக்குறவங்கள இப்படி இருக்கீங்களேனு டீஸ் பண்ணுற அளவுக்கு நம்ம எல்லாரும் தப்பான பாதைய நோக்கி ஓடுறோம்ல அதான் நமக்கு அவங்க தனிச்சு தெரியுறாங்க, அவங்களப் போல நம்மளால நடக்க முடியலைன்னாலும் அவங்களாவது அவங்க மனசாட்சிக்கு உண்மையா இருக்கட்டுமே!" என்று முடித்தாள்.
நரேனோ, "நான் சும்மா விளையாட்டு சொன்னேன் அண்ணி" என்றான். அவள் தவறாக எடுத்துக்கொண்டாளோ என,
"தெரியும் நரேன், நானும் பொதுவா என்னையும் சேர்த்துத் தான் சொன்னேன்" என்று நரேனிடம் சொன்னவள் ரதியிடம் "என்ன விஷயமா வந்தீங்க ஆன்டி?" என்று கேட்டாள்.
நரேனோ அவனுக்குத் தெரிந்த மட்டில் ரதியின் முடிவு உட்பட அனைத்தையும் சொன்னவன், "அம்மாவ கெட்டவங்களா காட்டி அந்த டிவோஸ் எங்களுக்கு வேணா, அம்மா மேல தப்பு இல்லைனு நிரூப்பிச்சப்பறம் டிவோஸ் எடுத்தா போதும் அண்ணி" என்றான்.
அவளுக்கும் அவன் முடிவில் சம்மதம் தான். வீணாய் ஏன் பழியை சுமக்க வேண்டும் என்பது தான் அவள் எண்ணமும்..
"ஆன்டி, அந்த நோட்டீஸ்க்கு நம்ம ரிப்ளை கொடுக்கலனா சரியா ஒரு மாசத்துல கேஸ் கோர்ட்டுக்கு வரும் அப்போ பாத்துக்கலாம்" என்றவள் நரேனிடம் "நரேன் கொஞ்சம் வெளியே இருக்கியா ஆன்டி கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்றாள்.
அவனும் சரி என்று கிளம்பிவிட, "ஆன்டி, இப்போ சொல்லுங்க எதுக்காகப் பிழை உங்க மேல விழுந்தாலும் பரவா இல்லைனு யோசிக்கிறீங்க, அவரோட குற்றத்தை மறைக்க நினைக்கிறீங்களா? உங்களுக்குக் கெடுதல் செஞ்சவர காப்பாத்தா நினைக்கிறத்தோட நோக்கம் என்ன? இன்னும் பழைய காலத்துல தான் இருப்பீங்களா?" என்று கேட்க, புன்னகைத்தார் ரதி..
"அந்தக்காலத்துலயே இருக்குற ஆள்னா உன் முன்னால டிவோஸ் வேணும்னு வந்திருக்க மாட்டேன். என் புருஷன என்னோட சேர்த்து வைக்கணும்னு தான் வந்திருப்பேன்" என்றவரிடம் சிறிது அமைதி.
"அப்பறம் என்ன மறைக்க நினைக்கிறீங்க?"
"எனக்கு எப்படினாலும் அவர் வேணாம்னு மனசால முடிவெடுத்து ரொம்ப நாள் ஆகிடிச்சு, இனிமேல் சட்டம் தரப் போகுது அவ்வளவு தான். அதுவும் என் பேருக்கு முன்னுக்கு யாரோட அடைமொழியும் வேணாம், வெறும் ரதியா இருக்க ஆசப்படுறேன். அத நான் கெட்டவன்னு சொல்லித் தந்தாலும் ஒன்னுதான். இல்ல நீ தான் இந்த உலகத்துல உத்தமினு சொல்லித் தந்தாலும் ஒன்னும் தான். எதுவும் ரெண்டு நாளைக்கு மேல அப்படி பட்டம் கொடுத்தவங்க மனசுல கூட இருக்கப் போறதில்லை, அப்போ எதுக்காகக் காலம் நேரம் எல்லாம் வேஸ்ட் பண்ணனும்.. அதனால தான் அப்படியே எடுத்துட்டு போறேன்னு என் மனசு சொன்னிச்சு, ஆனா நரேன் அதுக்கு ஒத்துக்க மாட்டேங்குறான். சோ அவன் விருப்பதுக்கு அவன் அம்மாவ நிரூப்பிக்க நினைக்கிறான் இது அவனோட புரிதல் அத தப்புனு சொல்லமாட்டேன், என் வயசுக்கு வந்தப்பறம் அந்த நிதர்சனம் அவனுக்குப் புரியும்"
"அவர் உங்கள கொடுமை படுத்தினாரு அது மட்டும் தான் உண்மையா? அதுக்கு தான் இந்த டிவோஸ்ஸா? அப்படினு சொன்னா நிச்சயம் இல்லனு தான் எனக்குத் தோணுது" என்க ரதியின் மனதிலோ 'பாலச்சந்திரன் பேத்தினா சும்மாவா?' என்ற எண்ணம் தான் ஓடியது.
"கரெக்ட் தான் ரஞ்சினி, ஆனா இதுல நான் காப்பாத்த நினைக்கிறது எனக்குத் தாலினு ஒன்ன கட்டுனவர இல்லை, என்னோட குழந்தைங்கள" என்றதும் ரஞ்சினியின் முகத்திலோ குழப்பம் ரேகை..
"என் புள்ளைங்களோட அப்பா எல்லாத்தையும் விடப் பெரிய தப்பு பண்ணியிருக்காரு, ஐ மீன் அவருக்கு நரேன விடப் பெரிய புள்ள ஒன்னு இருக்கு"
"சோ?" என்றாள் அவள்..
ரதியோ "நான் கல்யாணம் பண்ண அடுத்த மாசமே நரேன் என் வயித்துல தங்கிட்டான்" என்றார்
அப்போது தான் ரஞ்சினிக்கு அவர் சொன்னா அர்த்தம் புரிந்தது "அப்படி பார்த்தா உங்களுக்கு முன்னாடியே ஒரு பொண்ண ஏமாத்தி இருக்காரு, ரைட்?" என்று கேட்க, ரதியிடம் மௌனம். அதுவே அதுதான் உண்மை என்பதை அவளுக்கு உணர்த்தியிருந்தது.
"இத சொல்லியே கேஸ நம்ம பக்கம் திருப்பலாமே ஈஸியா?"
"அதுதான் வேணான்னு சொல்லுறேன். ரெண்டு வருசத்துக்கு முதல் அவரே அவர் வாயால அவர் ஃபிரண்ட் கிட்ட பேசும்போது தான் எனக்கே இந்த விஷயம் தெரிஞ்சிது, அப்போவே சண்டை போட்டு அங்கிருந்து கிளம்பப் போன என்ன தடுத்தது, அவருக்கு வந்த பக்கவாதம் தான். ஜஸ்ட் அது ஒரு மனிதாபிமானம் தான். இதோ வெளியாக வேண்டிய நேரம் வந்திச்சு வந்துட்டேன். இத நான் உங்கிட்ட சொல்ல ரீசன் இது நீ ரஞ்சினியா இருக்குறதால தான். இதுவே வேற வக்கீலா இருந்தா நிச்சயம் சொல்லி இருக்க மாட்டேன். நீயும் இந்தக் காரணத்தைக் கேஸ்ல கொண்டு வர மாட்டனு நம்புறேன்" என்க, அவளும் சம்மதமாய் தலையசைத்தாள்.
"என் பொண்ணு தாரா அவ அப்பா மேல ரொம்ப அளவு கடந்த நம்பிக்கை வெச்சிருக்கா, அவளுக்கும் சரி நரேனுக்கும் சரி இந்த விஷயம் தெரிய வந்தா பெரிய தக்கத்தை ஏற்படுத்தும். இதே என் விஷயம்னு வந்தா, இப்பவே தாரா என்ன அப்படித்தானே நினைக்கிறா சோ அவளுக்குப் பெரிசா பதிப்பு இருக்காது, நரேன்னுக்கும் என்ன பத்தி தெரியும் அதனால தான் அவங்க அனுப்பின நோர்டீஸுக்கு சம்மதம் சொல்ல நினச்சேன். ஆனா அதுல நரேனுக்கு விருப்பம் இல்லைங்கிறப்போ அவன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு தோணிச்சு சோ இந்த முடிவு" என்றவர் சொல்லி முடிக்க, அவர் புரிதல், குழந்தைகளுக்காக யோசிக்கும் நிலை எல்லாம் அவளுக்குப் பிரம்மிப்பாய் தான் இருந்தது.
"ஆன்டி, எல்லாம் இவ்வளவு தெளிவா யோசிக்கிற நீங்க உங்க குழந்தைங்க புரிஞ்சிக்குவாங்கனு ஏன் நினைக்க மாட்டேங்குறீங்க?" என்று அவள் சந்தேகத்தைக் கேட்க,
அவரோ புன்னகையுடன் "குழந்தைங்களுக்கு அவங்க மனநிலைக்கு என்ன புரிஞ்சிக்குவாங்கனு அம்மாக்கு தெரியாம போகுமா? குழந்தைனு வரும்போது எல்லா அம்மாவும் தராசோட அந்தப் பக்கம் போறது இயல்பு தான் ரஞ்சினி" என்றார்.
"நீங்க எதையும் யோசிக்காதீங்க ஆன்டி, இந்தக் கேஸ் நீங்க நினைச்ச போல வின் பண்ணி, நீங்க ஆசைப்பட்ட உங்கள வெறும் ரதியா மாற வைக்கிறது என்னோட பொறுப்பு" என்றாள் அவர் கையில் கை வைத்தபடி, அவர் கண்களாலோ, அவளது மேசையில் இருந்த பாரதி கண்ணகியானால் என்ற அவரது நூலில் நிலைத்தது..
அந்தப் பா. ரதியே இவர் தானே (பாலசந்திரன் ரதிதேவி)
________________________
இப்படியே இன்னும் ஒரு வாரம் கடந்திருந்தது. இந்த வழக்கிக்கு தேவையான அனைத்தையும் ரகசியமாக ரஞ்சினி தேடத் தொடங்கியிருந்த நேரம் அது..
வீட்டில் கணவன் ரஞ்சிதனுக்கு இந்தக் கேஸ் மேலோட்டமாகத் தெரியும், அதற்கு அவன் பதிலோ "இந்தக் கேஸ் கோர்ட்க்கு வரும்போது இதப் பத்தி நீ யோசிக்கவே மாட்ட இப்போ ஏன் உன்னைக் கஷ்டப்படுத்திக்கிற" என்பது தான்.
அவளோ என்னவென்று கேட்டால், அவளை முத்தமிட்டு திசை திருப்பி விடுவான்.
இப்படி நாட்கள் கடந்து இன்னும் வழக்கு நீதிமன்றம் வரச் சில நாட்களே இருந்த நேரத்தில், அன்று காலையில் எழுந்த ரஞ்சினியோ தூங்கும் கணவன் முகத்தில் முத்தமிட்டவள் எழப்போக "எங்கடி போற, இன்னும் கொஞ்சம் தூங்கலாம்ல" என்றான்.
அதற்கவளோ "அதுசரி சார் வேலை முடிச்சிட்டு ராத்திரி பேய் கூடத் தூங்குனப்பறம் வர வேண்டியது, வந்து ரெண்டு கிஸ் கொடுத்துட்டு பெரிய ரொமான்டிக் மன்னன்னு பொண்டாட்டிய ஏமாத்த வேண்டியது விடுங்க சார் என்ன" என்றாள்.
"அடிப்பாவி, ரொம்ப தான்டி.. மாமாகூட ரொம்மன்ஸ் வேணும்னா கேட்டு வாங்கிக்க, அதுக்குனு இப்படி சில்லியா ரீசன் சொல்லுவியா? நான் ரொமான்ஸ் பண்ணாம உன் வயித்துல என் குட்டி மின்ட் எப்படி வந்தாளாம்" என்றவன் அவள் வயிற்றில் முத்தம் பதித்து நிமிர, அவளோ அவன் மீசையை நன்கு கடித்து வைக்க, வலியில் அவன் விலகிய நேரம் எழுந்து ஓடியே விட்டாள்.
அவனும் தூரத்தி வந்தவன் "பார்த்துடி மின்ட், பாப்பா இருக்கா" என்று வெளியே வர அவள் சமையலறைகுள் புகுந்து கொண்டதை உணர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்பிக்க, அதிலோ செய்தி வாசிப்பாளரின் குரல் ஒலித்தது.
"திடீரென்று வழக்கறிஞ்சர் மோகனபிரதாப் அவரது தனிப்பட்ட கெஸ்ட் ஹவுஸில் தூக்கிட்டு தற்கொலை, அதுவும் அவர் கைபடவே தன் முடிவுக்குத் தானே காரணம் வேறு யாருக்கும் இதில் எந்தச் சம்மந்தமுமில்லை என்று எழுதிவைத்துவிட்டே தற்கொலை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது" என்று செய்தி ஓடிக்கொண்டிருக்க, சமையலறையில் நின்றிருந்த ரஞ்சினிக்கு தெளிவாகக் கேட்டதில் வெளியே வந்தவளின் பார்வை கணவனையே துளைத்தது.
அந்தச் செய்தி வாசிப்பாளரையே வெறித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருந்த கணவனைக் கண்ட ரஞ்சினியின் முகத்தில் திட்டுக்கிடல்.
எப்போதும் சாந்தமாக இருக்கும் கணவனின் முகத்தில் என்றும் இப்படியொரு கொடூரத்தை பார்த்ததில்லை..
அவளோ சென்று அந்தச் செய்தியை அனைத்தவள் அவன் முன்னே கைகட்டி நிற்க, ஒரு வினாடிக்குள் அவன் முகப்பாவனையை மாற்றியவன், "உனக்குத் தேவையான நியூஸ் தான் மின்ட் போகுது, இனிமேல் அந்தக் கேஸ் உனக்குத் தேவப்படாதுல, ரதிமாக்கு எந்தத் தொந்ததரவும் இல்லாம கேஸ் முடிஞ்சிதுல" என்றான்.
அவன் முன்னே கைகட்டி நின்றாள் அவன் மனைவியோ "சொல்லுங்க என்ன பண்ணீங்க?" என்க, அவனோ "என்ன மின்ட் என்ன கேக்குற?" என்றான் புரியாதவனைப் போல..
"நடிச்சது போதும் இத்தன நாளா இந்தக் கேஸ் ஆரம்பிக்கப் போகுது நான் சொன்னதுல இருந்து உங்க வாயில இருந்து வந்த அந்தப் பதில் அப்போ எனக்குப் புரியல ஆனா இப்போ புரியுது. அன்ட் இப்போ உங்க முகத்துல பார்த்த அந்தக் கோபம் நிச்சயம் அதுல ஒரு வேறி தெரிஞ்சிது, நீங்க சொல்லியே ஆகணும், இது நம்ம புள்ள மேல சத்தியம் என்றவள் அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்தாள்.
அவனோ, அவள் கையைத் தட்டி விட்டவன் "என்ன பண்ற மின்ட்? இதுக்கு அந்தப் பிஞ்சுக் குழந்தை தான் கிடைச்சுதா?" என்று இயலாமையுடன் கேட்டவன் அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவளும் பின்னே சென்றவள் தனக்கு முதுகுகாட்டி நின்றிருக்கும் கணவனைத் திருப்ப ரஞ்சிதனோ, கண்ணில் கண்ணீரோடு நின்றிருந்தான்.
"என்னங்க" என்று இறங்கிய குரலுடன் அழைக்க, அவனோ அவளை அணைத்தவன் "என்னால முடியல மின்ட், அவன் சாவுக்கு நான் தான் காரணம், அவன அவன் கையாலயே தற்கொலை பண்ண வெச்சதும் நானே தான். என் அம்மா சாகக் காரணமானவன் அவன், என் அம்மாவ மட்டுமில்ல ரதிமாவையும் ஏமாத்துனவன் அவன். உலகத்துல வாழத் தகுதியே இல்லாதவன்" என்றான்.
அவளோ அவளை விட்டு அவனைப் பிரித்தவள் "உங்களோட அப்பாவா?" என்று கேட்க, அவனோ வெடித்திருந்தான் "இல்ல.. இல்ல அவன் என் அப்பா இல்லை, அப்படி சொல்லாத மின்ட் அவன அப்படி சொல்லாத?" என்று கத்த, அவளோ பயந்து போனாள்.
"சரிங்க சரிங்க, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க" என்று அவனை அமர வைத்தவள் குடிக்கத் தண்ணீரைக் கொடுத்து அவன் முதுகை தடவி அவனைச் சாந்தப்படுத்தினாள்.
அவனோ நிதானதுக்கு வந்தவன் "ஐ எம் சாரிடி மின்ட், கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டேன். அந்த ஆள் தான் என் அம்மாவோட புருஷன், அது எனக்கே தெரியாதுனா, எங்க அம்மா எந்த அளவுக்கு வெகுளியா இருந்திருப்பாங்கனு யோசிச்சு பாரு மின்ட், வாழ்க்கைல அப்பா பேரு தெரியாம பல எடத்துல தவிச்சு நின்னுருக்கேன்டி, அந்த வலி எல்லாம் மனசுக்குள்ள பொதச்சிகிட்டாலும், இன்னைக்கு வரைக்கும் என்னால மன்னிக்க முடியாத ஒரு விஷயம் இருக்கு, அவனோட சுயநலத்துக்கு அவனுக்கு அம்மா வேணும்ங்கிறபோ எல்லாம் ஒரு வண்டி வரும் அதுல ஏறி அம்மா அவன் இடத்துக்குப் போகணும், அப்போல்லாம் ஒரு மகனா எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுப்பாரு, ஏதோ விபச்சாரிய நடத்துன போலத்தான் என் அம்மாவ நடத்தினான். அந்தக் கோபம் எல்லாம் எனக்குள்ள வெச்சிட்டு மருகுனது எல்லாமே என் அம்மா ஒருத்தங்களுக்காகத்தான். ஆனால் அவங்களும் என்ன விட்டுப் போய்ட்டாங்க.. இதுல முழுக்க முழுக்க என் அம்மா மேல தான் நான் தப்பு சொல்லுவேன். இவ்வளவு பண்ணுற அவங்க புருஷன் நேர்மையானவரா இருப்பாருன்னு நினைச்சது அவங்க தப்பு.. தன்னை ஒரு அடிமைபோல நடத்துறானுன்னு தெரியாத அளவுக்கு அப்படி என்ன கண்மூடித்தனமான காதல் வேண்டி இருக்கு, பல காதல்கள் புனிதமா இருந்தாலும் இப்படி சில காதல் கானலா பல பெண்கள் வழ்க்கைய அழிக்கிது, அந்த வகைல ரதிமாவோட முடிவ நான் தலை வணங்குறேன்"
"அவன தேடி கொல்லனும் என்கிறது என்னோட ஆசை, வளர வளர வெறியா மாறிச்சு. அவனப்பத்தி தெரிஞ்ச ஒரே விஷயம் அவன் வக்கீல் என்கிறது தான். நீயும் அப்பா மாதிரி வக்கீலா வரணும்னு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க அதனாலயே அத பண்ணவே கூடாதுனு நினைப்பேன். அவன தேடத்தொடங்குனேன், அவன கண்டுபிடிக்கிறதுகான ஆயுதம் நான் தானே, என் டிஎன்ஏ அவனோடது தான, என்னயே ஒரு ஆயுதமா வெச்சு அவன தேட ஆரம்பிச்ச எனக்கு இத்தனை வருட தேடலோட பதிலா எங்க ஹாஸ்பிடலுக்கே ஸ்ட்ரோக்னு பொய் சொல்லி அவன் முடிவ தேடி அவனே வந்தான்" என்று சொன்னவன் கண்களில் கோபம் கொதித்தது.
"அவன ரெண்டு வருசமா பொலொவ் பண்ணப்ப தான் ரதிமா நரேன் பத்திலாம் தெரிஞ்சிது.. நரேன பார்க்கும்போது என்ன பாக்குற போல ஒரு பீல், அந்த நேரம் தான் அவங்க அங்க இருந்து வெளில வந்தது தெரிஞ்சிது, என்கூட்டுக்குள்ள அவங்க வேணும்னு தோணிச்சு, அதனால தான் அவங்கள இங்க எங்கூட வெச்சிக்கிட்டேன். தன் தப்ப மறைக்க ரதிமா மேல கேஸ் போட அவன் போட்ட காரணம் என்ன கொலைகாரனாவே மாதிடிச்சு"
"என் அம்மாபோல அவனே அவன் கையாள துடிச்சு சாகணும்னு தான் அவன அவன் இடத்துக்கே போய், கொன்னேன், தற்கொலை பண்ண வெச்சேன். அவன் தான் என் அம்மாவோட புருஷன்னு கண்டுபிடிச்ச நாள்ல இருந்து அவனுக்கு என் கையலையே ரொம்ப பவர்புல்லான போதை பொருளை உடம்புல செலுத்தி, கொஞ்சம் கொஞ்சமா என் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர ஆரம்பிச்சேன். அந்த மருந்துகாக என்ன வேணா பண்ணுவான் எங்குற நிலைமைக்கு அவன கொண்டு வந்தேன். அவன அவன் கையாள சாகவும் வெச்சேன். நான் பண்ணது தப்பே இல்ல மின்ட், எனக்கு அதுதான் நியாயம்" என்றவன் அனைத்தும் சொல்லி முடித்து மனைவியின் முகத்தையே பார்த்திருந்தான்.
அவளுக்கும் அவன் உணர்வுகள் எல்லாம் புரிந்தது தான் ஆனால் மனதில் ஒரு நெருடல், அவன் இப்போது இருக்கும் நிலையில் மேலும் வருத்த வேண்டாமென அவனைச் சமாதானமாகப் பேசித் தூங்க வைத்திருந்தாள்.
மோகனின் விடயம் வேகமாய் பரவியிருக்க, ரதிக்கும் தெரியவந்திருந்தது, அவர் மனதில் எந்த உணர்வும் தோன்றவில்லை.
மரண சடங்குக்குக் கூட அவர் செல்லவில்லை, நரேன் மட்டும் தான் சென்று வந்தான். மோகன் அவர் மனதில் மூன்றாமவராய் கூடப் பதிந்திருக்கவில்லை, அப்படி இருக்கையில் எப்படி மனம் அவர் இரங்கல்களில் வருந்தும்.
அடுத்து வந்த நாட்களில் அவருக்கும் சரி நரேனுக்கும் சரி அவர் சொத்தில் எந்த சம்மந்தமும் வேண்டாமெனக் கையெழுத்திட்டு, நரேனிடம் கொடுத்து விட்டிருந்தார்.
________________
ஐந்து வருடங்களின் பின்
இந்த ஐந்து வருடங்களில் பல மாற்றங்கள், ரதிக்கு அவரது குடும்பம் மீளக் கிடைத்திருந்தது. முதலில் ஒன்ற கஷ்டப்பட்டவர், அவர்களும் புரிந்து கொண்டு பழையதை பேசாமல் இருந்ததில், உறவில் விரிசல் ஏற்படவில்லை.
ரதிதான் தங்கள் அத்தை என்று தெரிய வந்ததில் இளயவர்கள் பட்டாளம் குதிக்காத குறை தான்..
அதிலும் நரேனுக்கு காதல் கைக்கூட போராட வேண்டியதில்லை என்று அவன் குதித்து ஒரு ரகளை பண்ணி இருந்தான். இதோ அவர்களுக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறாள்
தாராவும் கணவனுடன் வெளிநாடு சென்றிருக்க மங்கம்மா மொத்தமாய் உடைந்து போயிருந்தார். தனிமை கொடுமையாகப் பல உண்மைகளைத் தெரியப்படுத்தி இருந்தது.
படுத்த படுக்கையாய் இருப்பவரைப் பார்த்துக்கொள்வது என்னவோ பணத்துக்கு வேலைக்கு வரும் ஆட்கள் தான் ஆனால் அவர்களிடம் அவர் எதிர்பார்க்கும் பாசம் அவருக்கு இன்றளவும் கிடைக்கவில்லை..
ரதி அவர் உலகில் கொடிகட்டி பறக்காவிட்டாலும், அவருக்காகப் பல வாசகர் பட்டாலத்தை பெற்றிருந்தார். இன்றும் கண்ணகியின் புத்தகம் வருகிறதா உடனே வாங்குறேன் என்ற அளவுக்கு அவர் எழுத்தில் வாசகர்களை ஈரத்திருந்தார். அதில் நரேன் ரஞ்சினி இருவரும் அடக்கம், ரதி தான் தனக்கு பிடித்த கண்ணகி என்று தெரிந்து ரஞ்சினி ரதியை ஒரு வழி பண்ணியிருந்தாள், அவள் ஆர்ப்பாட்டத்தில் ரதியே சிரித்துவிட்டார்.
இப்போது அஞ்சல் வாரமலரில் அவர் திறமைக்குரிய வேலை கிடைத்திருந்தது. இப்போது அவர் பழைய பன்னிரெண்டாமாண்டு ரதி இல்லையே! இப்போது அவர் பட்டதாரி, அவர் விட்ட படிப்பை மீண்டும் படித்துமுடித்திருந்தார்.
இதோ ரஞ்சிதன் வீட்டுக்கு வரத் தாமதமாகியிருக்க, அவனது குட்டி மின்டும் பெரிய மின்டும் வாசலிலே காத்திருந்தது.
வெளியே வந்த ரதியோ "இன்னைக்கும் உங்க அப்பாக்கு பனிஷ்மென்ட் உண்டாடா மிருக்குட்டி" என்று கேட்க, ரஞ்சிதனின் நான்கு வயது வாண்டு மிருளாலினியோ "டெபனட்லி பாட்டி, அப்பா வரட்டும் இன்னைக்கு" என்றாள் கெத்தாக, அதில் நரேனும் அக்ஷவும் சிரித்துவிட, குழந்தை மிருவோ திரும்பி ஒரு முறைப்பு தான் அக்ஷயா வாயில் கை வைத்த நொடி நரேனும் "வாடி என் வாயாடி" என்று மிருவை தூக்கிக் கொள்ள, ரஞ்சிதனின் வாகனம் அங்கே வந்திருந்தது.
"என்ன இன்னைக்கும் வாசல்லயே மாநாடு கூடியாச்சா?" என்றபடி உள்ளே வர, அவன் மகளோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"அட என் குட்டி மின்ட் கோபமா இருக்காங்களா? இது தெரியாம அப்பா கேக் வாங்கி வந்துட்டேனே! என்ன பண்ணலாம், விஷ்னுக்கு கொடுத்துடலாமா?" என்று கேட்க, மகளோ நரேனிடமிருந்து அவனிடம் பாய்ந்திருந்தாள்.
விஷ்னுஜா நரேன் அக்ஷயாவின் குழந்தை இப்போதுதான் ஒரு வயது..
நரேனோ மிருவின் கன்னத்தைக் கிள்ளி "சரியான காரியக்காரிடி நீ அப்படியே உன் சித்தி மாதிரி" என்க, அக்ஷயா முறைக்க குடும்பமே சேர்ந்து "மைண்ட் வாய்ஸ்னு நினைச்சி சத்தமா பேசிட்ட தம்பி" என்று அவனை வாரி இருந்தது.
அப்படியே இவர்கள் மேலே வர, உள்ளே நுழைந்த ரஞ்சினி அவனிடம் பேசாமல் போக, குழந்தை உறங்கும் வரை பார்த்திருந்தவன் "என்ன என் பெரிய மின்ட் இன்னைக்கு ரொம்ப கோபமா இருக்கா போலயே" என்று அவள் இடையை பற்றி அருகில் இழுத்தபடி வினவ, அவளோ "போதும் விடுங்க ஆவுன்னா மின்ட்னு ஐஸ் வைக்க வேண்டியது" என்று சிலுப்பிக்கொண்டாள்.
"என்னாச்சு என் தங்கத்துக்கு?" என்று கேட்க, "எனக்குப் பையன் வேணும்" என்றாள் முகத்தை உம் என்று வைத்தபடி..
"அடியேய்! அதான் சொன்னேன்ல அடுத்த வருஷம் பெத்துக்கலாம்டி"
"இதையே தான் ஒவ்வொரு வருசமும் சொல்லுறீங்க"
'ஐயையோ கண்டுபிடிச்சிட்டாளே' என்று எண்ணியவன் "அது மிரு பிறக்கும் போதே நீ கொஞ்சம் வீக்கா இருந்தடி செல்லம் அதான்" என்க,
அவளோ "அதெல்லாம் இப்போ ஓகே ஆகிட்டேன். நல்ல ஹெல்தியா தானா சாப்பிடுறேன், நீங்க கூட போன மாசம் செக் பண்ணிட்டு நல்லா இருகேன்னு சொன்னீங்கல்ல" என்றார்.
இப்போது அவள் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்பது புரிந்தது, ஆனால் மிரு பிறக்கும்போது ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டாள் அதனாலேயே அவனுக்கு இந்தப் பயம்.
ஒரு வைத்தியராக இருந்தாலும், அவனும் சக மனிதன் தானே! மனைவி குழந்தை என்று வரும்போது உணர்வுகள் வெளிப்பட்டு விடுகிறது.
"யோவ், மனிதகுல மாணிக்கம் இப்போ பையன குடுப்பியா மாட்டியா?" என்று அதிரடியாய் கேட்கும் மனைவியைத் தவிர்க்கவா முடியும்?
"மிரட்டியே சாதிக்கிறடி என் வக்கீல் மின்ட் பேபி" என்று மனைவியைக் கையில் ஏந்திக்கொண்டான்.
இவர்களின் வாழ்க்கையை நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்..
சிலரின் வாழ்க்கையில் காதல் கானலாய் மாறிப்போக, சிலரின் கானல் வாழ்க்கை காதலாய் மாறிப்போகும். எதுவாக இருப்பினும் தம் தன்னம்பிக்கை கொண்டு நாமே வேரூன்றி நிற்கையில் யாராலும் எதற்கு நம்ம விலை பேசிட முடியாது..
தன்னம்பிக்கை தீபமேற்றி கானலையும் காதலாய் மாற்றுவோம்..
இப்படிக்கு
உங்கள் பெப்பர் மின்ட் மிட்டாய்
(MK31)
Last edited: