• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 11

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
728
538
93
Chennai
அத்தியாயம் 11

“ஹாப்பி பொங்கல் கண்ணா! என்ன காலையிலே போன்?” என்றான் தீபன் கண்ணனிடம்.

“ஹாப்பி பொங்கல் அண்ணா! சாரி இன்னைக்கும் உங்களை டிஸ்டர்ப் பண்றேன்” கண்ணன் சொல்ல,

“இட்ஸ் ஓகே டா! எனிதிங் இம்போர்ட்டண்ட்?” என்று கேட்க, ராமிற்கு நடந்ததை விவரமாய் கூறினான்.

“அண்ணா கால் பண்ணவும் நானும் அப்பாவும் அங்கே போய்ட்டோம்.. நாங்க போகவும் நிஷா அழுதுட்டே வெளில வந்தாங்க” என்று கண்ணன் கூற,

“கமான் கண்ணா! உன் அண்ணாக்கு அச்சிடேன்ட்னு சொல்ற.. ஸோ பாக்குறதுக்காக ஹாஸ்பிடல் வந்திருப்பாங்க.. லவ் பண்ற பையனுக்கு அச்சிடேன்ட் ஆச்சுன்னா அழ மாட்டாங்களா? நீ சொல்ல வர்றதை தெளிவா சொல்லு” என்றான் தீபன்.

“நீங்க சொல்றது சரி தான் அண்ணா! ஆனா நான் ராம்கிட்ட கேட்டேனே! அண்ணாக்கு அச்சிடேன்ட் ஆனதை அவங்க நிஷாகிட்ட சொல்லவே இல்லையாம்.. இன்ஃபாக்ட் நிஷா ஊர்லயே இல்லனு தான் அண்ணா நினைச்சுட்டு இருக்காங்க..நேட்டிவ் போறதா சொல்லிட்டு போன நிஷா திரும்பி வந்துட்டேன்னு கூட அண்ணாகிட்ட சொல்லல போல” என்றான் தெளிவாய்.

“கண்ணா! நிஷா நேட்டிவ் போகல.. இப்போதைக்கு நீ சொன்னதுல இதை மட்டும் என்னால கன்ஃபார்ம் பண்ண முடியும்.. ஏன்னா! ஆல்ரெடி ராம் கொடுத்த இன்போர்மேஷன் வச்சு நாங்க இன்வெஸ்டிகேஷனை ஸ்டார்ட் பண்ணிட்டோம்.. ஸோ அதுபடி நேத்து ஈவ்னிங் நிஷா சென்னைல தான் இருந்தாங்க.. அதற்கான எவிடென்ஸ் கூட என்கிட்ட இருக்கு..” என்று தீபன் கூற,

“ஓஹ் மை காட்! ஐ திங் இட்ஸ் வெரி சீரியஸ்! அப்ப அண்ணா சொல்லாமல் எப்படி நிஷா ஹாஸ்பிடல் வந்திருப்பாங்க?” கண்ணன் கேட்க,

“எனக்கு ஒரு டூ ஹவர்ஸ் டைம் கொடு கண்ணா! நான் அனுப்பின ஆள் ரிப்போர்ட் தரவும் நான் சொல்றேன்” என்றான் தீபன்.

சரி என்று போனை கட் செய்த கண்ணனிற்கு இதை சிறிதாய் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை.

நிஷாவைப் பார்த்தது முதல் ராம் கூறியது வரை என அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று முரனாய் தான் அமைந்தது.

தீவிர சிந்தனையில் கண்ணன் தனியே அமர்ந்திருக்க, அவனருகே வந்து நின்றாள் கீர்த்தி. சிந்தனையில் இருந்து கலைந்தவன்,

“என்ன வந்த வேலை ஆச்சா? அழுது ஊரை கூட்டிடுவனு எக்ஸ்பெக்ட் பண்ணினேன்.. என்னாச்சு? திருந்திட்டியா?” என்றவனை பார்வையால் அளவிட்டாள் கீர்த்தி.

“என்ன கேட்டுட்டே இருக்கேன்.. அமைதியா நிக்குற?” என்றான் அவள் பார்வையின் அர்த்தம் புரியாமல்.

“நிஜமாவே இது நார்மல் அச்சிடேன்ட் தானா?” என்று கீர்த்தி கேட்க,

“அச்சிடேன்ட்ல என்ன நார்மல் அச்சிடேன்ட்.. அப்நார்மல் அச்சிடேன்ட்?” என்றான் புரியாமல்.

“நீ எதையாச்சும் என்கிட்ட மறைக்குறியா கண்ணா?” என்றாள். இன்னுமே கீர்த்தியின் முகத்தினில் தீவிர பாவம் இருக்க அதில் குழம்பினான் கண்ணன்.

“ஹேய்! என்னாச்சு உனக்கு? என்னென்னவோ பேசுற?” நிஜமாய் புரியவில்லை கண்ணனுக்கு.

“ராம்...” என்று ஆரம்பிக்க,

“ஆரம்பிச்சுட்டியா? அவனை நினைக்காமல் உன்னால இருக்கவே முடியாது இல்ல?” என்றான் முறைப்புடன்.

“ப்ச்! அதெல்லாம் இல்ல.. அதான் உன் மேல சத்தியம் செஞ்சேன்ல? நான் கேட்குறதே வேற” என்றாள் நிதானமாய்.

“ஏய்! அதான் சத்தியம் பண்றதுக்கு முன்னாடி நான் ஸ்டாப் பண்ணிட்டேனே! உயிருக்கு உலை வச்சுடாத டி” பதறி போய் கண்ணன் சொல்ல,

“பேச்சை மாத்தாத கண்ணா! ராம்க்கு என்ன ப்ரோப்லேம்?” என்றாள் நேரடியாய். அதில் கண்ணனுமே விளையாட்டை கைவிட்டு பேச்சை நிறுத்தி இருந்தான்.

“சொல்லு கண்ணா! ஏதோ இருக்கு” என்றாள் கலக்கமாய்.

“நீ ஏன் கீர்த்தி பயப்படுற? அந்த அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல.. சின்ன சின்ன ப்ரோப்லேம்ஸ் தான்.. ஆனா அதெல்லாம் ஒன்னோட ஒன்னு கனெக்ட் ஆகும் போது.... சரியா சொல்ல தெரில.. பட் அண்ணா எங்கேயோ எதிலேயோ லாக் ஆகிட்டானோனு தோணுது” என்றவன் பேச்சு புரியவே இல்லை கீர்த்திக்கு.

“நீ என்ன சொல்ற? எனக்கு புரியல.. கொஞ்சம் தெளிவா சொல்லேன்” என்றாள் பதட்டமாய்.

“இதுக்கு தான் பேச்சை மாத்தினேன்.. அதான் சொல்றேனே கீர்த்தி.. எனக்கே இன்னும் சரியா தெரில.. ஆனா இதுக்கு மேல நான் இப்படியே விட மாட்டேன்.. பார்த்துக்கலாம்.. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.. நீ ஒர்ரி பண்ணிக்காத” என்றான்.

“இந்த அச்சிடேன்ட்?” என்றாள் முடிக்காமல்.

“அது ஏதோ கார்க்காரன் தட்டி விட்டுட்டான் போல.. பத்து நாள்ல சரியாகிடும்” என்றான் கண்ணன்.

இன்னும் யோசித்தபடி அவன் முன்னே கீர்த்தி நிற்க,

“கீர்த்தி! ஏன் இப்படி டல்லாகுற? அதான் சொன்னேன்னே! இனி நான் பார்த்துக்குறேன்” என்றான் அழுத்தமாய்.

“ஹ்ம்ம்!” என்றவள் குரல் தெளிவில்லாமல் தான் இருந்தது.

ராம் என்ற ஒருவனின் இந்த தோற்றம் அந்த வீட்டில் இருந்த அனைவரையும் பாதித்திருக்க பண்டிகை நாள் அமைதியாய் முடிந்தது எந்தவித கொண்டாட்டமும் இன்றி.

கொண்டாட்டம் இல்லாவிட்டாலும் அந்த நாளின் முடிவில் அதிக அதிர்ச்சியில் உறைந்திருந்தது கண்ணனுடன் தங்கராஜூம் தான்.

கண்ணன் எதிர்பார்த்த வரை கூட தங்கராஜ் நினைக்கவில்லை என்பதால் அதிகம் தடுமாறியதும் அதிர்ந்ததும் அவர் தான்.

அன்று மாலை தீபன் நேரில் பார்க்க அழைக்க, சில நிமிடங்கள் யோசித்த கண்ணன் தன் தந்தையையும் உடன் அழைத்து சென்றான்.

“எங்கே டா என்னை கடத்திட்டு போற?” என்று கிண்டல் செய்தபடி தான் அவனுடன் பைக்கில் சென்றார் தங்கராஜ்.

தீபன் கூறிய இடத்திற்கு வந்து அவனைப் பார்க்கும் வரையுமே தங்கராஜ்ஜிற்கு எந்தவித சந்தேகமோ, நிஷா மீதான அதிருப்தியோ இருந்ததில்லை.

தீபன் கூறியவற்றை கேட்ட பின் மொத்தமாய் ஆடிப் போயிருந்தார் தங்கராஜ்.

ராமை எவ்வளவுக்கு நம்பி இருந்தார் என்பது அனைத்தையும் உடைக்க வந்திருந்தாள் நிஷா.

அங்கே தீபனிடம் பேசிவிட்டு வந்த கண்ணன் முகத்தில் அவ்வளவு ஆத்திரம். அதை மறைக்காமல் தீபனிடம் வெளிப்படுத்திவிட்டு தான் வந்திருந்தான்.

இனி கொஞ்சமும் யோசிக்கவோ தாமதிக்கவோ தேவையில்லை. எவ்வளவு ஏமாற்றி இருக்கிறாள்? மனது ஆறவே மறுத்தது.

தீபனிடமும் சொல்லிவிட்டு தான் வந்திருந்தான் இனி தான் பார்த்துக் கொள்வதாக. தீபன் தான் மறுத்து முழுதாய் டாக்குமெண்ட் வரும்வரை பொறுத்திருக்க சொல்லியிருக்கிறான்.

அதற்காக கூட பொறுத்து போக நினைக்கவில்லை கண்ணன். முடிவு செய்தபின் பின்வாங்கும் வழக்கமும் இல்லை.

ஆனால் ஒன்றே ஒன்று அவன் முடிவை சற்று தள்ளிப்போட வைத்தது. அது ராமின் பிடிவாதம்.

இதனை தூரம் அவனை யோசிக்க வைத்துவிட்டு தான் இறங்கி அடித்தால் ராம் பார்வையில் கண்ணன் மேலும் சந்தேகம் தானே வரும்.

அதற்காக மட்டும் தன் முடிவை சற்று தள்ளி வைத்தானே தவிர, ஒதுங்கிட நினைக்கவில்லை.

தங்கராஜ் வெகுநேரம் தனிமையில் இருந்தவர் வெளியே வர, சித்ராவின் கூப்பிட்ட குரல் கூட அவருக்கு கேட்கவில்லை.

சித்ரா அவரை சற்றே வித்யாசமாய் பார்த்துக் கொண்டிருக்க, தங்கராஜ் கண்ணனின் அறைக்குள் நுழைந்தார்.

அங்கே கண்ணன் அருகில் அமர்ந்திருந்தாள் கீர்த்தி.

“மாமா!” என்று கீர்த்தி எழுந்து நிற்க, உட்கார் கீர்த்தி என்றவர் மகன் முகத்தை பார்த்தார்.

அவ்வளவு ரவுத்திரம் அவன் முகத்தில் கொட்டிக் கிடந்தது. அதில் சற்று நிதானித்தவர் அவனை சீண்டிவிடக் கூடாது என கண நேரத்தில் முடிவெடுத்து அங்கே அமர,

“நான் வெளில இருக்கேன் மாமா” என்றாள் கீர்த்தி.

“பரவாயில்ல கீர்த்தி மா.. நீ இரு” என்று தங்கராஜ் சொல்ல, இருவரின் மௌனமும் ஏதோ சரி இல்லை என்று அவளுக்கு உணர்த்தியது.

தான் வந்து கால் மணி நேரமாகியும் இன்னும் எதுவும் பேசவில்லை கண்ணன். பார்த்ததும் அவ்வளவு நக்கல் பேசி வம்பிழுப்பவன் இவ்வளவு அமைதியாய் இருந்து பார்த்ததே இல்லை கீர்த்தி.

இதில் தங்கராஜ் வந்ததும் அவரும் அமைதியாய் அமர, அவருக்கும் ஏதோ தெரிந்திருக்கிறது போல.. என்னவாய் இருக்கும் என யோசித்தபடி இருவரையும் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

“நீங்க என்னப்பா சொல்றிங்க?” கண்ணன் தான் சில நிமிடங்களுக்கு பிறகு பேச்சை துவங்கினான்.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில.. ராம் பாவம்னு தோணுது” தங்கராஜ் சொல்ல,

“என்ன பாவம்? இல்ல என்ன பாவம்ன்றேன்? வீட்டுல ஒரு லிமிட்கு மேல அவன்கிட்ட யாராவது பேச முடியுதா? பையன் தானேன்னு நீங்களோ அம்மாவோ அவன்கிட்ட ஏதாவது கலந்து பேசுற மாதிரி இருந்திருக்கானா? சரி நான் இப்படி தான் அடமன்ட் அப்டினா வெளிலயும் அப்படி தானே பா இருக்கனும்? இவ்வளவு கேர்லெஸ் அவனுக்கு எங்கேருந்து பா வந்துச்சு?” கோபமாய் தான் கேட்டான் கண்ணன்.

நிஷா மேல் இருக்கும் கோபத்தை விட பல மடங்கு தன் அண்ணன் மேலும் கண்ணனிற்கு இருக்க, அது காட்டிட முடியாத இடத்தில் இருந்தான் ராம்.

“கண்ணா!” கீர்த்தனாவின் அதிர்ந்த பார்வையை பார்த்துவிட்டு தங்கராஜ் மகனை எச்சரிக்கப்பார்க்க,

“என்ன? இல்ல இப்ப என்னன்றேன்? கீர்த்தி நம்ம வீட்டு பொண்ணு.. மோஸ்ட் இம்போர்ட்டண்ட்லி அவ என்னோட பிரண்ட்.. உங்களுக்கு தெரியும் தானே? நம்ம வீட்டு பொண்ணுக்கே நீங்க தெரிய வேண்டாம்னு நினைக்குறிங்க.. ஆனா உங்க பையன் எவ்வளவு பெரிய ஃபூலா இருந்திருக்கான்னு கொஞ்சம் நினச்சு பாருங்க ப்பா” என்று கண்ணன் தாளித்து தள்ள,

“டேய்! நான் அந்த மீனிங்ல சொல்ல வரலை டா” என்றவர்,

“நீ தப்பா எடுத்துக்காத கீர்த்தி! உன் அத்தைக்கு தெரிஞ்சா தாங்கமாட்டா.. ஏற்கனவே தன் அண்ணன் பொண்ணை ராமுக்கு கட்டி வைக்க அவனுக்கு குடுத்து வைக்கலையேனு புலம்புவா.. இப்ப இதை எப்படி சொல்லன்னு தான்...” என்று அவர் சொல்ல, இது முற்றிலும் புது செய்தி நிஷாவிற்கு.

அதிர்ந்து கண்ணனை அவள் பார்க்க, அவன் கவனம் முழுதும் அதில் இல்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது.

“யூ ஆர் ரைட் பா! அம்மாக்கு எதுவும் தெரிய வேண்டாம்.. நான் தெரியவிட மாட்டேன்.. இனி நான் பார்த்துக்குறேன்.. இவனை எப்படி ஹாண்ட்ல் பண்ணனும்னு நான் டிசைட் பண்ணிட்டேன்” என்று கண்ணன் சொல்ல,

“என்ன டா செய்ய போற?” என்றார் தங்கராஜ். மனதின் கலக்கமும் வார்த்தைகளில் தெரிந்தது.

“என்னப்பா பயம்? பார்த்துக்கலாம்.. நேரா போய் நிக்குறேன்.. உண்மையை சொல்லித் தானே ஆகணும்.. அப்ப இருக்கு கச்சேரி” கொஞ்சமும் கோபம் குறையாமல் கண்ணன் கூற,
மொத்தமாய் குழம்பி நின்றாள் கீர்த்தி.

அதற்கு மேல் கண்ணனிடம் என்ன பேசவென்று தெரியவில்லை. கலக்கம் தான் என்றாலும் சரி செய்துவிடலாம் என்னும் எண்ணமும் இல்லாமல் இல்லை. பேசாமல் எழுந்து சென்றுவிட்டார்.

“ஏதோ நடந்திருக்கு தானே கண்ணா?” காலையில் தான் கேட்ட போது மறுத்தான் தானே! என்று தோன்ற பயத்துடன் கேட்டாள் கீர்த்தி.

“தப்பிச்சுட்ட கீர்த்தி! இவ்வளவு நாளும் நீ விரும்புறவனை உனக்கு தர முடியலைனு நான் எவ்வளவு பீல் பண்ணி இருப்பேன் தெரியுமா? ஆனா நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்ல டானு நிரூபிச்சுட்டான் அவன்” என்று கண்ணன் சொல்ல,

ராம் மேல் கண்ணனிற்கு இருக்கும் அந்த கோபம் நன்றாய் தெரிந்தது கீர்த்திக்கு. ஆனால் ஏன் என்று தான் புரியவில்லை.

“என்னனு சொல்லு கண்ணா” என்று கீர்த்தி கேட்க, அவளை முறைத்துப் பார்த்தான் கண்ணன்.

தொடரும்..
 
  • Like
Reactions: Vinolia Fernando