அத்தியாயம் 12
ராம் பேசிச் சென்ற ஒரு மணி நேரத்திலேயே நிஷாவைப் பற்றிய விவரங்களை சேகரிக்க ஆரம்பித்து இருந்தான் தீபன்.
தன்னுடன் நம்பத்தகுந்த இன்னொரு நபரை மட்டும் தன்னுடன் இந்த ப்ராஜெக்ட்டில் இணைய்திருந்தான்.
அதன்படி நிஷாவின் இருப்பிடம், வேலை பார்க்கும் இடம் என ராம் கூறியவற்றை கையில் கொண்டு தான் ஆரம்பித்து இருந்தான்.
தன்னுடன் இருந்தவனை நிஷாவினை ஒரு நாள் மட்டும் பின் தொடர அனுப்பிட, அந்த ஒரு நாளும் இந்த பண்டிகை விடுமுறை.
நிச்சயம் இந்த ஒரே நாளில் இவ்வளவு கண்டுபிடிக்க முடியும் என தீபன் கூட எதிர்பார்த்திருக்க மாட்டான்.
நிஷாவினை பின்தொடர்ந்து செல்வது அவ்வளவு எளிதாயும் இருக்கவில்லை. ஏன் என்றால் அவளுமே அவ்வளவு ஜாக்கிரதையாய் தான் ஒவ்வொரு அடியையும் யாரும் கவனிக்கிறார்களா என பார்த்தபடி எடுத்து வைத்திருந்தாள்.
அது ராமின் மேல் கொண்ட பயம் என்பது அப்போது அவர்கள் அறியவில்லை.
அப்படி பயந்து பயந்து அந்த பண்டிகை நாளில் நிஷா போய் நின்ற இடம் சென்னை சென்ட்ரல் ஜெயில்.
அதில் குழம்பிய அந்த டிடெக்டிவும் உடனே தீபனுக்கு அழைக்க, அவன் சில உதவிகளை செய்தான் உள்ளே செல்வதற்கு.
முதலில் ஐடி கார்டைப் பயன்படுத்தி வெளியே நின்ற செக்யூரிட்டியிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்க, அவர் இவனை நம்பாத பார்வை பார்த்து வைத்தார்.
இப்ப போனாங்களே நிஷா.. அவங்களோட தான் நானும் வந்தேன் என்றவன் நிஷாவின் போட்டோவினையும் காட்ட இன்னும் நம்பவில்லை அந்த காவலர்.
நேர்மை என்ற ஒன்று அங்கு எடுபடாமல் போக அடுத்த வழியை தீபனின் சொல்படி தேர்ந்தெடுத்து எளிதாய் உள்ளே சென்றிருந்தான் அவன்.
வரிசையாய் தன் சொந்தங்களை தெரிந்தவர்களை என பார்க்க வந்தவர்கள் நிற்க குறுக்காய் கம்பிகள் கட்டம் கட்டமாய்.
அதில் நிஷா எங்கே என தேட கொஞ்சம் இடைவெளிவிட்டு தனியாய் நின்று துப்பட்டாவால் முகத்தை மூடி நின்றிருந்தாள்.
தானும் அருகே சென்று நின்று கொண்டவன் எதிர்புறம் வருகைக்காக நிற்பது போல நின்று கொண்டான் அவள் பேசுவது கேட்கும் தொலைவில்.. ஐந்து மீட்டர் இடைவெளி தான் இருக்கும்.
பண்டிகை நாள் என்பதால் கூட்டம் அதிகமாய் தான் இருந்தது.அதில் தெரியாத இவனை நிஷா கண்டுகொள்ள தான் வாய்ப்பே இல்லையே!
அப்படித் தான் முதல் சில விஷயங்களை கண்டறிந்தனர் தீபன் குழு. அடுத்ததாய் நிஷா சந்தித்த நபர்களைப் பற்றி விசாரணை தொடங்கி இருக்க அதுவும் அன்று மாலையே தெரிந்து போனது. இது இரண்டாவது தகவல்.
இரண்டையும் கணக்கிட்டு பார்க்க தீபனிற்கு சில விஷயங்கள் பிடிப்படவில்லை.
காலையில் கண்ணன் மட்டும் அழைக்காமல் இருந்திருந்தால் இன்னும் ஒரு நாள் நேரமெடுத்து முற்றுமுதலாய் அறிந்தபின் தான் அறிக்கையை சமர்ப்பித்திருப்பான்.
இப்போது சொல்ல வேண்டிய அவசியம் வந்திருக்க, அதுவும் கண்ணன் கூறியது போலவே விஷயம் கொஞ்சம் பெரிது என்று தோன்ற, முதலில் கண்ணனை நேரில் அழைத்தான் தீபன்.
உடனே தந்தையை அழைத்துக் கொண்டு வந்துவிட்டான் கண்ணனும்.
வந்தவர்கள் முன் ஏழு எட்டு போட்டோக்களை டேபிளில் தீபன் வைக்க, ஆர்வமாய் முதலில் எடுத்தது தங்கராஜ் தான்.
எப்போதும் போல கலகலப்பாய் தான் அதுவரை இருந்தார். “யாரு டா இது?” என தீபனை நியாபகம் இல்லாமல் கேட்டதாகட்டும், என்னவாக இருக்கும் என ஆர்வத்தோடு போட்டோவை கையில் எடுத்தாதகட்டும் அவர் அவராகவே இருக்க, போட்டோவைப் பார்த்த சில நொடிகளில் மௌனமாகிப் போனார்.
குழப்பத்துடன் அவர் மகனைப் பார்க்க, கண்ணன் போட்டோவைப் பார்த்துவிட்டு தீபனைக் கண்டான்.
“இது இன்னைக்கு முழுக்க நிஷாவை பின்தொடர்ந்து எடுத்த போட்டோஸ்” என்று ஜெயிலில் நிஷாவை பார்த்தது முதல் யாருடனோ கெஞ்சுவது வரை இருந்த போட்டோக்கள் தீபன் காட்ட,
“என்ன டா இது?” என்றார் அதிர்ந்து தங்கராஜ்.
“அப்பா ப்ளீஸ்! டீடெயிலா அப்புறம் சொல்றேன்..” என்றவன்,
“நீங்க சொல்லுங்க அண்ணா” என்றான்.
“இது இந்த இடத்துல எடுத்த ஆடியோ! பட் குவாலிட்டி சரி இல்ல.. நீங்களும் கேளுங்க” என்று அதை ஆன் செய்ய, ஐந்து நிமிடங்கள் ஓடியது அந்த ஆடியோ.
ஜெயிலில் பேசி இருப்பது என்றும் கூறினான். கூர்ந்து கேட்டதில் சில தகவல் தெரிந்தாலும் அதை நம்ப முடியவில்லை கண்ணனுக்கு.
“அண்ணா?” என்று அவன் கண்களை விரிக்க,
“எஸ் கண்ணா! நிஷா! ஷீ இஸ் நாட் அ சிங்கிள்.. ஹீ இஸ் ஹெர் ஹஸ்பண்ட்” என்று அந்த ஜெயிலில் கைதியாய் நின்றவனை, நிஷா பார்க்க சென்றிருந்தவனைக் காட்ட, தலை சுற்றிப் போனது தங்கராஜிற்கு.
“வாட் தி ஹெல்?” என்று அங்கேயே கத்தி இருந்தான் கண்ணன்.
அடுத்து நிஷா கைகூப்பி நின்று யாருடனோ கெஞ்சும் போட்டோவைக் கையில் எடுத்த தீபன்,
“இதையும் நீங்க நம்பி தான் ஆகணும்.. இன்னைக்கு மார்னிங் ராமிற்கு நடந்த அச்சிடேன்ட்க்கு காரணம் இவங்க தான்” என்றதும் அதிர்ந்து எழுந்துவிட்டான் கண்ணன்.
“எஸ்! இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அச்சிடேன்ட்.. அதுவும் நிஷானால” என்று தீபன் சொல்ல,
“கண்ணா!” என்ற தங்கராஜ் முகத்தில் அப்பட்டமாய் பயம்.
“ப்பா!” என்ற கண்ணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“நீங்க சொன்ன மாதிரி நிஷா உங்க அண்ணனை பார்க்க ஹாஸ்பிடல் வந்தது ட்ரு.. வந்தவங்க அவருக்கு தெரியாம மறைந்து நின்னு ராமைப் பார்த்துட்டு டாக்டர்கிட்ட அவரோட ஹெல்த் கண்டிஷன் கேட்டுட்டு ராம் பாக்குறதுக்கு முன்னாடியே வெளில வந்துட்டாங்க” என்றவன் ஹாஸ்பிடலில் நிஷா நின்றதை எடுத்த போட்டோவையும் காட்டினான் தீபன்.
“நிஷா தன்னோட கணவனைக் காப்பாத்திக்க உங்க ராமை அவங்க லைஃப்குள்ள கொண்டு வந்திருக்காங்க.. அது நல்லதுக்கானு கேட்டிங்கன்னா நிச்சயமா இல்லை..” என்று தீபன் சொல்ல,
“புரியலண்ணா” என்றான் கண்ணன் கலங்கி போய்.
“ராமைப் பகடக்காயா யூஸ் பன்றாங்க அப்டின்றது என்னோட கெஸ்” என்று சொல்ல, பொத்தென சோஃபாவில் விழுந்தான் கண்ணன்.
“நிச்சயம் உங்களை கஷ்டப்படுத்த இதை சொல்லல.. என்னோட ஜாப் இது அண்ட் நீங்க கொடுத்த வேலை! அதை கரெக்ட்டா செய்யணும்னு நினைக்குறேன்” என்றவன் பேச்சில் தங்கராஜ் ஒன்றும் புரியாமல் நின்றார்.
“இவ்வளவு சீக்கிரம் நாங்க எந்த கேஸ்ஸையும் கண்டுபிடிச்சது இல்ல.. இந்த பொங்கல் எங்களுக்கு வேலையை சுலபமாக்கிடுச்சு” என்று தீபன் சொல்ல சொல்ல சிலையாகி இருந்தான் கண்ணன்.
கண்ணன் அங்கேயே கொதித்துவிட்டான். உடனே நிஷாவைப் பார்க்க செல்ல இருந்தவனை தீபன் தான் தடுத்திருந்தான்.
“எனக்கு நீ கொடுத்த வேலை இன்னும் முடியலை கண்ணா! நாளைக்கு கம்ப்ளீட் ஆகிடும்.. நாளை ராமோட வா” என்று அவனை அனுப்பி இருந்தான்.
எல்லாம் அரை மணி முதல் ஒரு மணி நேரம் தான்.. எப்பொழுதும் துருதுருவென இருக்கும் கண்ணன் அதன்பின் விழித்துக் கொண்டான்.
அப்பாவை அழைத்துக் கொண்டு வரும்வழியில் பாதியில் நிறுத்தி அனைத்தையும் சொல்ல, கேட்டவருக்கு அத்தனை அதிர்ச்சி.
அத்தனையையும் கீர்த்தியிடம் சொல்லி இருந்தான்.
“கொஞ்ச நாளாவே ஒரு டவுட்.. அந்த நிஷா... ம்ம்ம்ம் அந்த பிளடி இடியட் மேல..” என்று கோபமாய் கீர்த்தியிடம் கண்ணன் சொல்ல,
“கண்ணா! காம் டவுன்” என்றாள்.
“ராம்கிட்ட நானே சொன்னா தப்பாகிடும்னு தான் அவனை திங்க் பண்ண விட்டேன்.. அவனும் சரியான ரூட்ல தான் போக ஸ்டார்ட் பண்ணினான்.. ஆனா அவ இப்படி ஒரு ஃபோர்ஜரியா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை கீர்த்தி”
என்றான்.
“இந்த அச்சிடேன்ட் கூட அவளால...” என்ற கண்ணன் பாதியில் நிறுத்திவிட்டு கீர்த்தியை கேள்வியாய் பார்த்தான்.
“நீ ஏன் காலையில அந்த அச்சிடேன்ட் பத்தி அவ்வளோ கேட்ட?” என்று கண்ணன் கேட்க,
“நிஜமா நானும் இதை எல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணல கண்ணா” என்றவள் இன்னும் அதிர்வில் இருந்து வெளிவந்திருக்கவில்லை.
“அச்சிடேன்ட் சின்னதாவும் இல்லை பெருசாவும் இல்லை.. எழும்பு பிசகி இருக்கு.. ஸோ ராம் தான் வேணும்னே செஞ்சிட்டானோன்னு ஒரு டவுட்” என்று கீர்த்தனா சொல்ல, எதுவும் பேசவில்லை கண்ணன்.
“இப்ப நெக்ஸ்ட் என்ன பண்ணலாம்னு இருக்க கண்ணா?” கீர்த்தி கேட்க,
“ஹான்! சங்கை ஊதி பாலை ஊத்த வேண்டியது தான் அந்த நிஷாக்கு..” என்றான் கோபமாய்.
“ஆனா ராம்... ராம் இதை எப்படி எடுத்துப்பான்?” கீர்த்தி கேட்க,
“அவன் எப்படி வேணா எடுத்துக்கட்டும் கீர்த்தி.. நாளைக்கு அவன் பேசுறதை வச்சு தான் எனக்கு அவன் அண்ணாவா இல்லையான்னு நான் டிஸைட் பண்ண போறேன்” என்று சொல்ல இப்போதே கலவரம் கீர்த்தி முகத்தில்.
“நீ தெரிஞ்சா மாதிரி காட்டிக்க வேணாம் கீர்த்தி..” என்று சொல்ல, தலையசைத்தவள் அவன் அறையில் இருந்து வந்துவிட்டாள்.
இரவு முழுதும் உறங்காமல் இருந்தான் ராம். அவனுக்கு நிச்சயமாய் தெரிந்திருந்தது இது தற்செயலாய் நடந்த விபத்து அல்ல என்று.
அருகில் வந்த காரில் இருந்தவன் கூறிய “தூக்கு டா” என்ற வார்த்தை தெளிவாய் ராம் காதிலும் விழுந்திருக்க, அதை கூறி யாரையும் பயமுறுத்த விரும்பவில்லை.
ஆனால் யார்? ஏன்? எதற்கு? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் குழப்பத்தில் இருந்தான்.. இருக்கிறான்.
வீட்டிற்கு வந்தது முதல் இரண்டு மூன்று முறை நிஷாவிற்கு அழைத்து பார்த்தான்.. முதல் முறை ரிங் சென்று கட்டாகிவிட, அடுத்தடுத்து நாட் ரீச்சபிள் என்ற வார்த்தைகள் கேட்டு கேட்டு எரிச்சலாய் ஆனது தான் மிச்சம்.
தன் வாழ்வில் எல்லாம் தவறாக சென்று கொண்டிருப்பதாய் தோன்றியது. எங்கு சென்று எதை மாற்றிட என்று தான் தெரியவில்லை.
ராம் போலவே இன்னும் உறங்காமல் இருந்தது கண்ணன், கீர்த்தி, தங்கராஜ்.
“ஏன் என்னவோ போல இருக்கீங்க?” என்று தீபனைப் பார்த்துவிட்டு வந்ததில் இருந்து தங்கராஜிடம் கேட்டுக் கொண்டே தான் இருந்தார் சித்ரா.
தங்கராஜ் எதுவும் பேசவே இல்லை.. சொல்லவும் பயம்.. சொல்லாமல் விட்டால் என்னவாகுமோ என்ற பயம்.. அதில் அவர் வாயே திறக்காமல் இருக்க, அதற்கும் புலம்பல் தான் சித்ராவிடம்.
கீர்த்திக்கு முதலில் அனைத்தும் அதிர்ச்சி.. அடுத்ததாய் இதை ராம் எப்படி தாங்குவனோ, எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற எண்ணத்தில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்க,
கண்ணன் பிரச்சனையை எப்படி முடிப்பது, நிஷாவை என்ன செய்வது, ராமை எப்படி மீட்பது என அனைத்தையும் யோசித்தபடி இருந்தான்.
நிஷாவை மட்டும் தப்பிக்க விடக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தான். அது அண்ணன் எதிர்த்தாலுமே!
வாழ்க்கையை முடிவெடுக்கும் உரிமை அனைவருக்குமே உண்டு.. நாம் எடுக்கும் முடிவுகள் நியாயமானதாயும் தகுதியானதாயும் இருப்பின் மட்டுமே நம்மால் நம் வாழ்வை ஜெயிக்கவும் முடியும்.
தொடரும்...