• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 14

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
728
538
93
Chennai
அத்தியாயம் 14

ராம் மனதில் என்ன நினைக்கின்றான் என யாராலும் அறிய முடியவில்லை. அவன் மட்டுமே அறிவான் அவன் வலிகளை.

அழுத்தக்காரன் என பெயர் வாங்கியவன் இப்போதும் என்ன நினைக்கின்றான் என தெரியவில்லை.

எதிர்பார்த்தான் தான். ஏதோ ஒன்று தான் அறியாமல் தன்னை சுற்றி நடக்கிறது என புரிந்திருந்தான் தான்.

அதற்காக தான் ஏமாற்றப்பட்டிருப்போம் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தன்னிடம் கூட கூற முடியாமல் நிஷாவிற்கு ஏதோ பிரச்சனை.. அது என்னவாக இருக்கும் என்று தான் எண்ணினானோ!.

ராமிற்கு அந்த நேரம் தனிமையான அமைதியைக் கொடுத்து மற்ற மூவரும் அமர்ந்திருக்க, அப்போது தான் கண்ணனின் சொல்படி நிஷாவினை அழைத்து வந்திருந்தான் அவன் நண்பன். கூடவே வெங்கட்டும்.

கண்ணன் தன் நண்பனிடம் விவரம் கூறாமல் தனக்கான உதவியாக நிஷாவை இங்கே வரவைக்க ஏற்பாடு செய்திருக்க, அவனுக்கு பெரிதும் வேலை வைக்காமல் வெங்கட்டும் நிஷாவுடன் இருந்ததால் நிஷா மறுத்தும் வெங்கட் தான் அவளை இழுத்து வந்திருந்தான்.

தூரத்தில் வரும் போதே ராமையும் உடன் கண்ணனையும் கண்ட நிஷாவிற்கு கால்கள் ஆணி அடித்ததை போல அசைய மறுக்க, வெங்கட் தான் இழுத்து வந்தான் எனலாம்.

"வாங்க நிஷா மேடம்! பார்த்து ரொம்ப நாளாச்சு.. எப்படி இருக்கீங்க?" சாதாரணமாய் கண்ணன் கேட்க,

கண்ணனின் சத்தத்தில் தான் நிமிர்ந்து பார்த்தான் ராம்.

"ராம்!" நிஷா அழைத்த சத்தம் அவளுக்கே கேட்டிருக்காது.

பார்த்தது பார்த்தபடி ராம் அமர்ந்திருக்க, நிஷாவும் ராமைப் பார்த்து தொண்டைக்குழி ஏறி இறங்க நின்றிருக்க டேபிளில் கிடந்த போட்டோக்களை முதலில் பார்த்தது வெங்கட் தான்.

"நிஷா!" என்று வெங்கட் அவள் காதினுள் அழைக்கவும் என்ன என்று திரும்பியவளிடம் "கொஞ்சம் அங்கே பாரு" என வாய்க்குள் முணுமுணுத்து கண்களால் சைகைக் காட்ட, அவன் காட்டிய பக்கம் பார்த்தவள் மூச்சச்சு போனாள்.

"போட்டோ இன்னும் கொஞ்சம் கிளீயரா இருந்திருக்கலாம் இல்ல நிஷா மேம்?" மீண்டும் அங்கே கண்ணன் தான் பேசினான்.

"கண்ணா! இது அவங்க பர்சனல்.. ஆனா இவங்க எப்படி இங்க?" தீபன் புரியாமல் கேட்க,

"சாரி தீபன் அண்ணா! பர்சனல்னு சொல்றதுக்கு இவங்க ஒன்னும் என் அண்ணியா வர போறவங்க இல்லையே! இதெல்லாம் பார்த்த அப்புறமும் என் அண்ணனுக்காக நான் பேசக் கூடாதுன்னு சொல்றிங்களா?" என்று கண்ணன் கேட்ட கேள்வியில் தீபன் ஆஃப்.

"சார்! ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க" என்று வெங்கட் பேச வர,

"ஏய் யார் டா நீ?" என்று எடுத்ததும் கேட்டான் கண்ணன்.

"கண்ணா! கூல்.. நீயா இவ்வளவு டென்ஷனா பேசுறது?" நண்பன் கேட்க,

"சாரி மச்சி!" என்றவன் தன்னைக் கொஞ்சம் நிதானத்திற்கு கொண்டு வந்தான்.

"கொஞ்சம் ஒர்க் இருக்கு நான் கிளம்புறேன் டா" என்று கண்ணனின் நண்பன் கிளம்பிவிட, தீபனின் பார்வைக்கு அவனுடன் வந்தவனும் எழுந்து சென்றுவிட்டான்.

"சொல்றேன்னு தப்பா நினைச்சுக்க வேண்டாம் கண்ணா.. ஐ திங்க் இட்ஸ் யுவர் பேமிலி மேட்டர்.. என்னோட ஜாப் இங்கே முடிஞ்சது..டாக்குமெண்ட் கொடுத்திட்டேன்.. இனி நீங்க தான் பேசணும்" என்று தீபன் சொல்ல,

"தேங்க் யூ வெரி மச்" என்று சொல்லி தீபனையும் அனுப்பி வைத்தான் கண்ணன்.

இவ்வளவும் நடக்க பதினைந்து நிமிடங்கள் எடுத்திருக்க, ராம் அடுத்து நிமிர்ந்து நிஷாவைப் பார்த்தான் இல்லை.

நிஷா ராமைப் பார்த்தவள் பார்த்தபடி தான் இன்னும் நின்றிருந்தாள்.

"சார் ப்ளீஸ்! ஒரு ஹால்ப் அன் ஹௌர் டைம் குடுத்தீங்கன்னா எங்க பக்கம் நாங்க சொல்லிடுவோம்" வெங்கட் கண்ணனை பார்த்து தான் பேசினான்.

வேறு வழி இல்லை. ராம் இன்னும் இவர்கள் பக்கம் திரும்பிடவில்லையே!

"ஸோ! அந்த ஹால்ப் அன் ஹௌர் கதைக்காக தான் என் அண்ணாவோட வாழ்க்கைல இவங்க விளையாடினாங்க இல்லையா?" என்றான் கொஞ்சமும் கோபம் குறையாமல்.

"கண்ணன் ப்ளீஸ்! நான் தெரியாம செஞ்ச தப்புனால தான் இதெல்லாம்..." என்று நிஷா கண்ணீருடன் கூற,

"கண்ணா! கிளம்பலாம்" என எழுந்து கொண்டான் ராம். எழுந்த வேகத்தில் அவன் அமர்ந்திருந்த நாற்காலி தூரம் சென்று விழ, அவன் கோபம் அறிந்தனர் அங்கிருந்தோர்.

சுற்றி இருந்தவர்களுக்கு காட்சிப் பொருள் ஆக விரும்பவில்லை கண்ணன்.

"ராம்! ராம் ப்ளீஸ்! நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்.." நிஷா கெஞ்சிட,

"போலாம்னு சொன்னேன் கண்ணா!" என்றான் ராம் அழுத்தமாய்.

"அய்யோ புரிஞ்சிக்கோங்க ராம்! உங்களுக்கு உயிருக்கே ஆபத்து இருக்கு" வெங்கட் சொல்ல,

"அண்ணா! இவங்களை மன்னிக்க நான் இங்கே இவங்களை வர வைக்கல.. உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு சொல்ல தான் வர வச்சேன்" என்றான் கண்ணன்.

"மிஸ்டர் கண்ணன்! கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க.. இப்ப இருக்குற நிலைமைக்கு நீங்க ஹெல்ப் பண்ணினா தான் ராஜேஷ், நிஷாவை நாங்க காப்பாத்த முடியும்" வெங்கட் சொல்ல,

"ஷட்அப் மேன்! ஹூ ஆர் யூ? நான் எதுக்காக யார் யாரையோ காப்பாத்த என் உயிரை கொடுக்கணும்.. எவ்வளவு பெரிய துரோகம்.. அதெப்படி ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கறதை ஈசியா மறந்துடுறீங்க?" கேட்ட ராமின் கண்களில் அவ்வளவு ஆத்திரம்.

ஆனாலும் தான் ஏமாந்ததற்கு யாரையும் பழி சொல்ல விரும்பாமல் தான் கிளம்பிட தயாரானான்.

"அண்ணா! யாரோட அட்டெனஷனும் நமக்கு வேணாம்.. ஒரு பைவ் மினிட்ஸ்" கண்ணன் சுற்றி இருப்பவர்கள் தங்களைப் பார்ப்பதை பார்த்து சொல்ல, அதன்பின் அமர்ந்தவன் ஒரு கையை டேபிளில் வைத்து மறு கையை தலையினில் வைத்துக் கொண்டான்.

"ராம்!" நிஷா அழைக்க,

"டோன்ட் கால் மீ!" என்று சத்தம் இல்லாமல் கூறினாலும் அதிலிருந்த அழுத்தத்தில் வெங்கட்டுமே கொஞ்சம் பயந்தான்.

"சொல்லுங்க மிஸ் நிஷா.. ஓஹ் சாரி! சொல்லுங்க மிஸ்ஸஸ் நிஷா.. உங்க கதையை கேட்போம்.. இவ்வளவு தூரம் வந்ததுக்கு எதையாவது கேட்டுட்டு போணுமே!" கண்ணன் அலட்சியமாய் கேட்க,

"நிஷாவும் ராஜேஷும் செஞ்சது தப்பு தான்.. ஆனா ராமை இவங்களா இதுல இன்வால்வ் பண்ணல.." வெங்கட் சொல்ல, ராம் கேட்டபடி தான் இருந்தான்.. ஆனால் நிமிரவில்லை.

"வாவ்! அடுத்த பிட்டா? சரி அப்புறம்?" அவ்வளவு கிண்டல் இருந்தது கண்ணனின் கேள்வியில்.

"ப்ச்! நிஜமா தான் சார்.. அண்ணாமலை எம்பிய அடிச்சது இவர் தானே?" வெங்கட் கேட்க, சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தான் ராம்.

கண்ணன் கூட தெரிந்தது போல கண்களை சுருக்கி அண்ணனைப் பார்த்துவிட்டு மீண்டும் வெங்கட்டைப் பார்த்தான்.

"அன்னைக்கு இவங்களா தான் இந்த பொண்ணை லவ் பண்றதா அந்த அண்ணாமலைகிட்ட சொல்லி இருக்காங்க.. அதை தான் தன்னோட புருஷனுக்காக இவ யூஸ் பண்ணிக்கிட்டா.." வெங்கட் சொல்ல, நிஷா அப்போதும் அழுது கொண்டே தான் இருந்தாள்.

"யூ பிளாடி ராஸ்கல்! ஒரு பொண்ணை காப்பாத்த அவன் சொன்ன பொய்யை வச்சு அவன்கிட்டயே அதுவும் தெரிஞ்சே விளையாடிட்டு... இப்ப அவனையே பாயிண்ட் அவுட் பண்றியே நீயெல்லாம் மனுஷனா?" கண்ணன் கொந்தளித்துஅவன் சட்டையை பிடித்துவிட்டான்.

"கண்ணா!" ராம் நிறுத்தியவன்,

"அந்த... பொண்ணு நீயா?" என்று கேட்டு அவள் தலையாட்டிய பின் தான் ராமிற்கே அது தெரிந்தது.

"அந்த பொண்ணாவே இருந்தாலும் என்னண்ணா? எப்படி உங்க லைஃபை அவங்க டிஸைட் பண்ணலாம்?" கண்ணன் கேட்க,

"அது தான் சிட்டுவேஷன் சார்! கணவனை எப்படி காப்பாத்தணும்னு தானே எந்த பொண்ணும் நினைப்பாங்க? அதுக்காக நிஷா பண்ணினது சரினு நான் சொல்லல.. முதல்ல இருந்தே நான் இதுக்கு சப்போர்ட் பண்ணல" என்றான் வெங்கட்.

"இப்ப உங்க ப்ரோப்லேம் என்ன? அதை மட்டும் சொல்லுங்க" நேராய் விஷயத்திற்கு வந்தான் ராம்.

"ண்ணா!" கண்ணன் தடுக்க,

"நான் இங்கேருந்து கம்ப்ளீட்டா விலக நினைக்குறேன் கண்ணா" என்றவன் சொல்லு என்பதாய் கையசைக்க, அப்போதும் வெங்கட் தான் பேசினான்.

"அன்னைக்கு போரூர்ல நடந்த கலவரத்துல ராஜேஷ் அதான் நிஷாவோட ஹஸ்பண்ட் நிஷாவைக் காப்பாத்துறதுக்காக ஒருத்தனை அடிச்சான்.. அதுல அவன் செத்தனால போலீஸ் சிசிடிவி மூலமா அடுத்த ரெண்டு நாளுல ராஜேஷை அரெஸ்ட் பண்ணிடுச்சு.."

"அதே கலவரத்து அப்ப தான் ஒரு பொண்ணை அடிக்க வந்ததுக்காக நீங்களும் சண்டை போட்டிங்க.. ஆனா நீங்க வந்த அப்ப கலவரம் ரொம்ப பெருசானதால நிஷா தனியா .. நிஷாவை விசாரிச்சுட்டு இருந்த அந்த ஆள் மேல நீங்க கை வைக்குற நிலைமை வந்துச்சு.."

"ஆனா அது எம்பினு அப்ப தெரியாது..கூட இருந்தவன் வாய் பேச நீங்க பதில் பேசனு இருந்தப்ப.. நீங்க சாதாரணமா நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு தான் என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்கோனு சொல்லிட்டீங்க.. நீங்க அப்ப நிஷா முகத்தை கூட பார்க்கல.. அப்ப இருந்தே இவளை கல்யாணம் பண்றது யாரா இருந்தாலும் அவனை கொல்லணும்னு ஆள் வச்சிருக்கான் அந்த அண்ணாமலை" என்று வெங்கட் சொல்லிக் கொண்டிருக்க,

"ஸோ?" என்றான் கண்ணன்.

"நீங்க அடிச்சதை விட, அடிச்சது நிஷாக்காகன்றது தான் அண்ணாமலையோட கோபமே! அவளுக்கு கல்யாணம் ஆனது அவங்களுக்கு தெரில.. வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணினவங்க வேற! வேற வழி இல்லாமல் தான் நிஷா ராஜேஷ் பத்தி வெளில சொல்ல முடியாமல் ராமை..." என்று இழுக்க,

"ராமை கொன்னாலும் பரவாயில்லைனு நினைக்குறிங்க இல்ல?" என்றான் கண்ணன்.

"சத்தியமா அப்படி இல்லை.. ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க" என்றாள் அழுகையுடன் நிஷா.

"வேற எப்படிங்க? வேற எப்படி? இவ்வளவு நாள் மறைச்சது வேற எதுக்காக? இவன்கிட்ட கல்யாணம் பண்ணிக்க கேட்டது எதுக்காக?" என்றான் கோபமாய் கண்ணன்.

"ஒவ்வொண்ணுமே சூழ்நிலை தான் சார்.. " வெங்கட் சொல்ல,

"சூழ்நிலை... சூழ்நிலை... சூழ்நிலை... என்ன சூழ்நிலை? அவனுக்கு எதாவது ஆகியிருந்தா என்ன செய்விங்க? அதுக்கு பதில் சொல்லுங்க" என்று கண்ணன் சொல்ல, இருவருமே அமைதி.

சில நொடிகளுக்கு பின் வெங்கட்டே தொடர்ந்தான்.

"ஆனதை பேசி எதுவும் ஆக போறதில்ல சார்.. நான் முதல்ல இருந்தே வேண்டாம்னு உங்ககிட்ட உதவி தான் கேட்க சொன்னேன்.. நிஷா தான் ராஜேஷ்க்கு எதுவும் ஆகிடுமோன்னு பயத்துல.... தப்பு தான் தயவுசெஞ்சு இப்ப இவங்களுக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.." என்று முடிக்கவும் எழுந்து கொண்டான் ராம்.

"கண்ணா! வா போலாம்" ராம் சொல்ல,

"ராம்" என்று அழைத்தாள் நிஷா.

"யாரோட மன்னிப்பும் எனக்கு தேவையில்ல.. எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன்னு எனக்கு என் மேல தான் கோபமே!" என்ற ராம்,

"எனக்கு இதுலருந்து எப்படி வெளில வரணும்னு தெரியும்.. அவங்கவங்களை அவங்கவங்க காப்பாத்திக்கனும்.. நான் யாரையும் இதுல இன்வால்வ் பண்ணல.. இனி நானும் எதுலயும் இன்வால்வ் ஆகல" என்று முடித்தவன் முன்னே நடக்க, நிஷா, வெங்கட்டைப் பார்த்துவிட்டு உடன் நடந்தான் கண்ணன்.


தொடரும்..
 
  • Like
Reactions: Vinolia Fernando