அத்தியாயம் 17
"கண்ணா! என் கூட வாயேன்" மூன்று மணி அளவில் கண்ணனை சித்ரா அழைக்க,
"எங்கே ம்மா?" என்றான் மொபைலில் கவனம் வைத்து.
"கீழே தான் டா.. ஜெகன் அண்ணாவை பார்த்துட்டு வந்துடலாம்" என்று சொல்ல,
"ஏன் வழி மறந்து போச்சா? ரைட்ல தான் ஸ்டெப்ஸ் இருக்கு மா" என்றவனை என்ன செய்தால் தகும் என முறைத்து நின்றார் சித்ரா.
"ப்ச்! ம்மா என்ன வேணும் உங்களுக்கு?" என்று அவர் முறைப்பில் கேட்க,
"வர முடியுமா முடியாதா?" என்றார் அவரும்.
"கீர்த்தி ஆல்ரெடி என் மேல செம்ம காண்டுல இருக்குறா.. அதான் வர்ல சொல்றேன் மா" என்றான்.
"இதெல்லாம் ஒரு விஷயமா டா? நானே போய்டுவேன்.. கல்யாணத்துக்கு பேச போகும் போது ஒத்தயாவா போவாங்க? அப்பா வர லேட் ஆகுமாம்.. அதான் கூப்பிட்டேன்" என்று சித்ரா சொல்ல,
"ஓஹ்! கல்யாண விஷயமா? சூப்பர் சூப்பர்.. ஆனா மார்னிங் தான் அண்ணா முன்னாடி என்னை சின்ன பையன் இதுல தலையிடாதனு சொன்னதா ஞாபகம்" என்று கண்ணன் கிண்டல் செய்தவன்,
"காலையில தான் நொந்து போய் வந்தான்.. அதுக்குள்ள உங்க வேலையை ஆரம்பிச்சுட்டீங்களா?" என்றான்.
"பழி வாங்கறியா? இப்ப வரலைனா கீர்த்திகிட்ட சொல்லி இப்பவே கொழுந்தனாரை கவனினு சொல்லிடுவேன்.. எப்படி வசதி?" என்று உற்சாகமாய் சித்ரா பேச, மொத்த உற்சாகமும் வடிந்து போனது கண்ணனிற்கு.
"என்ன சொல்றிங்க? ஜெகன் மாமாகிட்ட பொண்ணு பாக்குறது பத்தி தானே பேச போறீங்க?" அவன் வேறு அர்த்தத்தில் கேட்க,
"ஆமா டா! பொண்ணு பார்க்க எப்ப வரட்டும்னு கேட்க போறேன்" என்றார் குழந்தையின் மகிழ்ச்சியுடன்.
"ம்மா! என்ன விளையாட்டு உங்களுக்கு? கீர்த்தியை தான் சொல்றிங்களா?" என்றான் இன்னும் தெளிவாய் தெரிந்து கொள்ள.
"ஆமா டா! அதான் ராம் ராமனா திரும்பி வந்துட்டானே!" இன்னும் அதே உற்சாகம் சித்ரா குரலில்.
"அய்யோ ம்மா! அதுக்காக... கீர்த்தி எப்படி மா?" என்றான் கோபமாய்.
"ஏன் டா கீர்த்திக்கு என்ன?" என்றார்.
"கீர்த்திக்கு என்ன? அவளுக்கு எல்லாம் ஓகே தான்.. ஆனா ராம்க்கு? அவங்களுக்குள்ள சரி வராது" என்றான் அழுத்தமாய் கண்ணன்.
"அதை நீ எப்படி டா சொல்ற?"
"ப்ச்! முதல்ல நீங்க இதை அண்ணாகிட்ட பேசணும்.. அவன் சரினு சொன்னா தானே ப்ரோசீட் பண்ணலாம்?" என்று சொல்ல,
"டேய்! அதான் இருந்த ஒரு தடையும் சரி ஆகிட்டே! அதெல்லாம் சரினு தான் சொல்லுவான்" என்றார் அவரும் பிடிவாதமாய்.
"ம்மா ப்ளீஸ்.. விளையாடாதீங்க.. ரெண்டு பேரும் ஜஸ்ட் நாலு வார்த்தை பேசி சிரிச்சு பார்த்திங்களா எப்பவாச்சும்? அதுவும் அண்ணா நிஷா பத்தி எல்லாம் ஜெகன் மாமாக்கு தெரியும்.. இப்ப திடிர்னு இப்படி கேட்டா அவங்க என்ன நினைப்பாங்க?" என்று கண்ணன் சொல்ல,
"எனக்கு என் அண்ணனை தெரியும்" என்றார் இன்னும் அதே பிடிவாதமாய்.
"நோ மா! இதை நான் அல்லோ பண்ண முடியாது.. ஏன்னா எனக்கும் என் அண்ணனை தெரியும்.. முதல்ல அண்ணாகிட்ட பேசுங்க" என்று கண்ணன் கூற,
"உனக்கு என்ன டா பிரச்சனை? அதெல்லாம் ராம் நான் சொன்னா கேட்டுப்பான்" என்றார் சித்ரா.
"ம்மா! என்னம்மா புரியாமல் பேசுறீங்க? ரெண்டு நாள் முன்னாடி நடந்தது மறந்து போச்சா உங்களுக்கு? நடு ரோட்ல விட்டுட்டு வந்திருந்தான் மா அவளை" என்று கண்ணன் சொல்ல, இப்போது சித்ராவிற்குமே சிந்திக்க வேண்டியதானது.
ஆனாலும் கீர்த்தியை இனி விட்டுக் கொடுக்க தயாராய் இல்லை.
"ஆமா! நீ ஏன் இதை தடுக்குறதுலயே நிக்குற?" சித்ரா சந்தேகமாய் பார்த்து கேட்க,
"என்ன தெரியாத மாதிரி கேட்குறீங்க! ராம்க்கு கீர்த்தியை கண்டாலே ஆகாது.. எனக்கு கீர்த்தி லைஃப் ரொம்ப முக்கியம்.. அதுனால தான்" என்று சொல்ல,
"அதுவும் சரி தான்.. சரி நான் அப்ப இப்பவே போய் ராம்கிட்ட பேசிட்டு வர்றேன்" என்றவர் உடனே அவனறைக்குள் செல்ல,
'முடியாதுன்னு சொல்லுவான்.. அதுக்கு போய் துள்ளி குதிச்சு ஓடுறாங்க' என நினைத்தபடி இருந்தான் கண்ணன்.
அதிக நேரம் எல்லாம் இல்லை.. சரியாய் உள்ளே சென்ற பதினைந்து நிமிடத்திற்குள் வெளியே வந்திருந்தார் சித்ரா.
அவருக்காக ஹாலில் காத்திருந்தான் கண்ணன். முகம் முழுதும் யோசனையை தாங்கியபடி வந்தார் சித்ரா.
"அதான் சொன்னேனே! கீர்த்தி என்னவோ கொலை குத்தம் பண்ணின மாதிரியே பேசி இருப்பானே! இவன் கண்ணு முன்னாடியே நான் அவளுக்கு எப்படி மாப்பிள்ளை பாக்குறேன்னு பாருங்க" என்று கண்ணன் வசனம் பேச,
"உன் வாயில உப்பள்ளி போட.. நானே என்னல்லாம் பண்ணி இந்த கல்யாணத்தை நடத்தலாம்னு பிளான் போட்டுட்டு இருக்கேன்.. இவன் வேற தப்பு தப்பா பேசிகிட்டு" சித்ரா என்றதும்,
"வாட் டூ யூ மீன்?" என்றான் குழப்பமாய்.
"மீன், வாத்துலாம் இல்ல.. ராம் சரினு சொல்லிட்டான்.. இனி ஜெகன் அண்ணனையும் கீர்த்தியையும் தான் சம்மதிக்க வைக்கணும்.. அதை பத்தி தான் யோசிச்சேன்.." என்றவர், கண்ணனின் அதிர்ந்த முகத்தை பார்த்துவிட்டு,
"ஆனா உன்னை மட்டும் கூட்டிட்டு போக மாட்டேன்.. கிளம்பும் போதே அபசகுனமா பேசிட்டு திரியுற.. அங்கே போய் கீர்த்தி மண்டையை கழுவினாலும் கழுவிடுவ.. அவரு வரட்டும் முறைப்படி ரெண்டு பேரும் போய் பேசிக்கிறோம்" என்று சொல்லி சித்ரா சென்றுவிட,
இன்னும் அப்போது நின்றது போலவே அதிர்ந்தே தான் நின்றிருந்தான் கண்ணன்.
'ராம் எப்படி சரி சொல்ல முடியும்?' சில நொடிகளில் வேகமாய் ராம் முன் போய் நிற்க,
"சொல்லு டா" என்றான் ராம்.
"அம்மாகிட்ட என்ன சொன்ன?" என்றான் கண்ணன்.
"நான் எதுவும் சொல்லலையே!"
"ண்ணா! கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னியா?" கண்ணன் கேட்கவும்,
"அதுவா! உங்க இஷ்டம்னு சொன்னேன்" என்று சொல்ல, அவனிடம் என்னவென்று கேட்பதென தெரியவில்லை கண்ணனுக்கு.
"ஏன்? என்னாச்சு கண்ணா?" ராம் கேட்க, கண்ணனுக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.
"நீ என்ன நினைக்குறனு கெஸ் பண்ண முடியுது கண்ணா.. இவ்வளவு நாளும் நான்..." என்று ராம் சொல்ல வர,
"அய்யோ ண்ணா! அதெல்லாம் இப்ப பிரச்சனையே இல்ல.. ஆனா.. அம்மா என்ன கேட்டாங்க? கீர்த்தியை தான் உனக்கு பேச போறதா சொல்லிட்டு போறாங்க" என்று கண்ணன் சொல்ல,
"சொன்னாங்க கண்ணா! நான் எடுக்குற முடிவு சரியானதா இல்லைனும் போது.. ஏன் அம்மாவுக்கும் கஷ்டத்தை கொடுக்கணும்? அதான் உங்க இஷ்டம்னு சொல்லிட்டேன்"
"ஆனா உனக்கு தான் கீர்த்தியை புடிக்காதே!" கண்ணன் கேட்டதில் ராம் அவனை முறைக்க,
"என்ன ண்ணா?" என்றான் கண்ணன்.
"புடிக்காது மீன்ஸ்?" என்றவன்,
"சின்ன வயசுல இருந்தே அம்மா அவளோட என்னை கம்பெர் பண்ணி பேசுவாங்க.. எனக்கு நான் பண்றது தான் சரினு ஒரு தாட்.. ஸோ அந்த கோபம் வளர வளர அவ மேல கோபமா மாறிடுச்சு.. இப்ப நான் தான் டோட்டலா தப்பு.. எனக்கு யாரையும் ரிஜெக்ட் பண்ற ரைட்ஸ் இருக்கானு கூட தெரியல.. அதுனால தான் ரொம்ப யோசிக்கல நான்.. புடிக்கலைனா கீர்த்தியே ரிஜெக்ட் பண்ணட்டுமே!" எளிதாய் ராம் சொல்லிவிட,
பே என முழிக்க வேண்டியதானது கண்ணனுக்கு. இப்படி ராம் நினைப்பான் என கண்ணன் நினைக்கவில்லையே!.
"இன்னும் என்ன டா? ஏன் இப்படி முழிக்குற?" ராம் கேட்க,
"ஆனா கீர்த்தி... அவளுக்கு எப்படினா இது சரியா வரும்?" என்று கேட்ட கண்ணனுக்கு இன்றிருக்கும் ராமை மட்டும் இல்லாமல் இரு நாட்களுக்கு முன் ரோட்டில் கீர்த்தியை விட்டு வந்த ராமும் ஞாபகம் வந்தான்.
அவனை கூர்ந்து பார்த்த ராமிற்கு அவன் எண்ணம் புரியாமல் இல்லை.
"உன் பிரண்ட் மேல அவ்வளவு அக்கறைனா நீயே கூட வேண்டாம்னு சொல்லு.. ஆனா நான் இனி பழைய ராம் இல்ல அதையும் ஞாபகம் வச்சுக்கோ" என்றவன் அவ்வளவு தான் என்பதை போல புத்தகத்தில் கண்களை விட குழம்பிப் போனான் கண்ணன்.
ராம் நினைத்ததை தெளிவாய் கூறிவிட்டான். சித்ரா வந்து கீர்த்தியை கேட்க போவதாக சொல்லவும் அதிகம் எல்லாம் யோசிக்காமல் உங்களுடைய விருப்பம் என்று தான் சொல்லி இருந்தான்.
அந்த இடத்தில் கீர்த்தி இல்லாமல் வேறு யாரையும் கூறி இருந்தாலும் கூட அவன் பதில் இதுவாக தான் இருந்திருக்கும்.
காதல் தோல்வி.. இல்லை அதை காதல் தோல்வி என்று சொல்லிவிட முடியவில்லை அவனால்.
இருவருமே உணராத ஒன்று.. அதுவும் நிஷாவை நினைத்தாலே ரத்த அழுத்தம் ஏற தான் செய்தது. கொஞ்சமும் யோசிக்காமல் காதல் என்ற ஒன்றை உணராமல் இருந்தவனுக்கு வேறு எப்படி தோன்றும்.
நிஷா பெற்றோருக்காக என்று இவன் யோசித்து தான் திருமணத்திற்கு நாட்களை தள்ளிப் போட்டபடி இருந்தான்.
இன்னும் முடியாது என்றால் சித்ராவின் புலம்பல்கள் தானே அதிகமாகும்.. நடப்பது நடக்கட்டும் என்று தான் பட்டுக் கொள்ளாமல் அவர்களின் விருப்பத்திற்கே முடிவினை விட்டான்.
இப்போது கண்ணன் வந்து கேட்டபின் தான் ஒரு எண்ணம்.. ஒருவேளை அவள் மறுத்துவிடுவாளோ என்று.
'எவ்வளவு பண்ணியிருக்கேன்.. வேண்டாம் சொல்றதுக்கு வாய்ப்பும் அதிகம் தான்' என்று தோன்றவும் ஒரு புன்னகை ராம் முகத்தினில்.
கீர்த்தி முடிவு எதுவாய் இருந்தாலும் ஏற்று கொள்ள இவன் தயங்கவில்லை. அவள் விரும்புவது இவனுக்கு தெரியாதபட்சத்தில் ராம் எதுவாக இருப்பினும் பார்த்து கொள்ள முடிவெடுத்தான்.
ராம் குணத்திற்கு நிச்சயம் கீர்த்திக்கு ஒத்து வராது என்றே எண்ணினான் கண்ணன்.
ராம் ஒத்துகொள்ள மாட்டான் என்பதிலும் அவ்வளவு திடமாய் இருக்க, இப்படி அந்தர் பல்டி அடிப்பான் என எதிர்பார்க்கவே இல்லை.
இவனே சரி என்று விட்டால் கீர்த்தி மட்டும் எப்படி மறுப்பாள்? நிஷா என்ற ஒருத்தி ராம் வாழ்வில் வரவில்லை என்றாலும் நிச்சயம் கீர்த்தி ராம் திருமணம் என்ற ஒன்றை எதிர்க்க தான் செய்திருப்பான் கண்ணன்.
நிஷா விஷயத்தை கொஞ்சமும் கண்ணனும் சட்டை செய்யவில்லை தான்.. ஆனாலும் ராம் சுபாவம் என்னவோ கீர்த்திக்கு சரி வராது என்று நம்பினான்.
அதற்கு சாட்சியாய் இரு நாட்கள் முன்பு வரை நடந்திருக்க, சாதாரணமாய் நம்பவும் முடியவில்லை இவனால்.
இப்போதும் ராம் பிடித்து சரி என்று சொல்லவில்லையே? அப்படி சொல்லி இருந்தால் கண்ணன் அவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பான் தானே?
ஏனோதானோவென்று சரி சொன்னால் எப்படியாம்? என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ராமின் இந்த ஒரு குணத்தை தவிர்த்து பார்த்தால் கீர்த்தி இந்த வீட்டிற்கு வருவதில் அத்தனை அகமகிழ்ந்து இருந்திருப்பான் கண்ணன்.
ராம் முடிவாய் சொல்லிவிட, கீர்த்தி வீட்டில் அன்னை பேசி எல்லாம் சுமூகமாய் முடிந்தால் நிச்சயம் ராமிடம் தெளிவாய் பேசி கீர்த்தி வாழ்க்கைக்கு நன்மை செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டான்.
தொடரும்..