• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 19

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
728
538
93
Chennai
அத்தியாயம் 19

"என்ன அப்பு உங்க அக்கா எதாவது விரதமா?" அபர்ணாவிடம் கண்ணன் கேட்க,

"இல்லையே! கொஞ்ச நேரம் முன்னாடி கூட என்னை திட்டிச்சே" என்றவளை கீர்த்தி முறைக்க,

"அது மட்டும் தான் தெரியும் உன் அக்காக்கு.. ஏன் சொல்றாங்க, எதுக்கு சொல்றாங்கனு எல்லாம் தெரியாது" என்றான்.

"ஆமா! தெரியாது தான்.. இப்ப என்ன வேணுமாம்.. அதான் சாப்டாச்சுல்ல? நான் தூங்க போறேன்.. கதவை சாத்தணும்.. போக சொல்லு அப்பு" கீர்த்தி சொல்ல,

இருவரையும் மாறிமாறி பார்த்த அபர்ணா, "ஓஹ்! சண்டையா? அப்ப என்னை தான் வச்சு செய்விங்க.. ஆளை விடுங்க" என்றவள் ஓடிவிட,

"அப்பு! உன் அக்காகிட்ட என்னை தனியா விட்டுட்டு போறியே.. நோ! நோ!" என்று கண்ணன் கத்த,

"ஷ்ஷ்! அவருக்கு டிஸ்டர்ப் ஆகும்" என்றாள்.

"எவருக்கு? ஓஹ் அப்பாக்கா? எல்லார்கிட்டயும் சண்டை மட்டும் தான் போடுவியா? அவங்க அவங்களுக்குன்னு ஒரு ரீசன் இருக்காதா?" கண்ணன் கேட்க,

"என்ன ரீசன்? பொல்லாத மண்ணாங்கட்டி ரீசன்? அப்படி ஒரு ரீசனும் எனக்கு தேவை இல்லை.. போ! நீயும் போய்டு.. எனக்கு சண்டை மட்டும் தான் போட தெரியும் போ.. என்னை நீ கேட்ட கேள்வி தப்பு இல்ல.. ஆனா நான் கோபப்பட்டது தப்பு.. அதானே! சரி தப்பாவே இருக்கட்டும்.. தப்பா பேசின என்கிட்ட ஒன்னும் நீ பேச வேண்டாம்" கீர்த்தி சத்தமாக சொல்லிவிட,

எனக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை என்பதை போல அமர்ந்திருந்தான் கண்ணன்.

"ப்ச்! உன்கிட்ட போய் சொன்னேன் பாரு!" என்றவளை, "ஒரு நிமிஷம் கீர்த்தி" என நிறுத்தினான் கண்ணன்.

"ஏன் இவ்வளவு டென்ஷன், கோபம்? நான் சும்மா சொன்னதுக்கெல்லாம் இப்படி ரியாக்ட் பண்ணினா நான் என்ன செய்வேன்?" என்றான் தன்மையாய்.

ஏன் என்றால் அவள் கோபம் அப்படி இருந்தது.

"எப்பவும் போல தான் பேசினேன்" அவன் சொல்ல, அவள் முறைக்க,

"சரி தப்பு தான்! சாரி" என்றான். அப்போதும் அவள் பேசாமல் நிற்க,

"ஏன் கீர்த்தி! உனக்கு கல்யாணமாமே? என்கிட்ட சொல்லவே இல்ல" என்றவன் முகத்தில் அடக்கப்பட்ட புன்னகை தெரிய, திரும்பவும் அவன் கலாய்ப்பது நன்றாய் தெரிந்தது கீர்த்திக்கு.

"உன்னை எல்லாம் திருத்தவே முடியாது.. எரும!" அவள் சொல்ல,

"தேங்க் யூ!" என்றவன், "ரிலாக்ஸ் ஆயாச்சா?" என்றான்.

அதற்கு அவள் பதில் கூறவில்லை என்றாலும் அவள் முகத்தினில் இருந்த புன்னகை பதில் சொல்ல,

"ஒரு வாக் போலாமா கீர்த்தி?" என்றான்.

சரி என்றவள் அபர்ணாவிடம் சொல்லிக்கொண்டு வர, கண்ணன் உடன் வந்தான்.

அமைதியாய் சில தூரம் நடந்தவர்கள் இடையே பேச்சு என்பது இல்லை. பின் கண்ணனே ஆரம்பித்தான்.

"நிஷாவை அன்னைக்கு மீட் பண்ணினோம் கீர்த்தி" என்றான். அவள் கேள்வியாய் பார்க்க, தீபனை பார்க்க சென்று, அங்கே நிஷாவை வரவழைத்தது முதல் இன்று தந்தை சென்று அண்ணாமலையுடன் பேசியது வரை சொல்ல,

"என்ன கண்ணா இப்படி சொல்ற?" என்றாள் அதிர்ச்சியாய்.

"ஹ்ம்ம்! வேற என்ன சொல்ல? இதான் நடந்தது"

"இப்ப என்ன தான் பண்றது?" என்றாள் கீர்த்தியும் கவலையாய்.

"நாளைக்கு ராம் போய் நேர்ல பேசுறதா சொன்னான்.. கூட நானும் போலாம்னு இருக்கேன்" என்று கண்ணன் சொல்ல,

"நீங்க என்ன லூசா? தேடிட்டு இருக்கறவன்கிட்ட போய் வாண்டடா தலையை குடுக்க போறேன்னு சொல்றிங்க?" என்று கீர்த்தி கேட்க,

"அப்படிலாம் ஈஸியா எதுவும் பண்ண முடியாது.. பதவி முக்கியம் இல்ல! இந்த மாதிரி அச்சிடேன்ட் ஏதாவது தான் ட்ரை பண்ணுவான்.. நேர்ல போனா அப்படி எதுவும் சான்ஸ் இல்ல" கண்ணன் சொல்ல,

"ஆமா கண்டீங்களா ரெண்டு பேரும்?" என்றாள் முறைப்பாய்.

"அதெல்லாம் பார்த்துக்கலாம் கீர்த்தி! எனக்கு இன்னொரு விஷயம் தான் மைண்டை அரிச்சிக்குது" கண்ணன் சொல்ல,

"இதை விட அப்படி என்ன விஷயம்?" கீர்த்தி கேட்க,

"உன் மேரேஜ்" என்றான் உடனே.

"அதான் சொன்னேனே.. உன் அண்ணனுக்கு முதல்ல நடக்கட்டும்னு.. நிஷா இல்லைனா இன்னொரு பொண்ணு கிடைக்காதா? எப்படினாலும் உன் அண்ணனுக்கு தான் முதல்ல நடக்கணும்.. என்னை காம்ப்ரமைஸ் பண்ண பாக்காத" என்றாள் அழுத்தமாய்.

"ம்ம்க்கும்! அப்ப ஏன் உன் அப்பா பேசும் போது அமைதியா இருந்தியாம்?" கண்ணன் கேட்க,

"ம்ம் அதுக்காக.. சொன்ன உடனே எனக்கு வேண்டாம்னு முருங்கமரம் ஏறணுமா? ஒன்னும் வேணாம்! எப்பசொல்லணும்னு எனக்கு தெரியும்" என்றாள்.

"ஒஹ்!" என்று கேட்டுக் கொண்டவன்,

"ஏன் கீர்த்தி.. ஒருவேளை... சப்போஸ்.. இந்த ராம் இருக்கான்ல.. அவன் உன்னை மேரேஜ் பண்ணிக்குறேன்னு.. ஒரு பேச்சுக்கு தான்.. அப்படி சொன்னா என்ன செய்வ?" மண்டையை பிய்த்துக் கொண்டிருந்த கேள்வியை கண்ணன் கேட்க,

அவன் முகத்தையே சில நொடிகள் பார்த்தவள் "என்ன? போட்டு வாங்கறியா? வேணாம் கண்ணா! கடுப்பேத்தாத" என்று கடுப்பாய் சொல்ல,

"ப்ச்! நிஜமா கேட்குறேன்.. சொல்லேன்.. அப்படி நடந்தா என்ன செய்வ?" என்றான் மீண்டும்.

"ம்ம்! உடனே சரினு அவன் பின்னாடி போய்டுவேன்னு நினைச்சியா? அப்படினா நேத்து நீ சொன்னியே அட்வான்டேஜ் எடுத்துகிட்டாதா.. அது உண்மைனு ஆகிடாது? நான் கல்யாணம் பண்ணிக்குறேனோ இல்லையோ.. ஆனா உன் அண்ணா எனக்கு வேண்டாம்.. போதுமா?" என்றாள்.

"ஹேய் லூசு! நான் தான் சொல்றேன்ல சும்மா சொன்னேன்னு.. அதை விடேன்...அது இல்லாம நீ சொல்லு.. உனக்கு ராம் புடிக்கும்ல? அப்ப ஓகே சொல்வ தானே? ராம் இப்ப முன்ன மாதிரியும் இல்லை" கண்ணன் கூற,

"இப்ப ஏன் நடக்காத ஒன்னை பேசி என்னை படுத்துற? விதிப்படி நடக்கட்டும்.. பேசாமல் வா" என்றவள் இருட்டில் நடக்க, ஒரு பெருமூச்சுடன் அவள் பின்னே நடந்தான் கண்ணன்.

அடுத்த நாள் காலை ராம் கிளம்பிக் கொண்டிருக்க, வழக்கம் போலவே கிட்சனில் புலம்பல் தொடர்ந்தது சித்ராவிற்கு.

"ம்மா! டைம் ஆச்சு நான் கிளம்புறேன்" என்று கூறிய லதாவின் பையினுள் சாப்பாட்டை வைத்தவர் வாய் முணுமுணுத்தபடி இருக்க, அது அப்போதைக்கு முடியாது என்பதால் கிளம்பிவிட்டாள் லதா.

"ப்பா! நைட் தூங்கும் போது காட்டன் எதுவும் காதுல வச்சுப்பீங்களா?" கண்ணன் தந்தையிடம் கேட்க,

"நைட் மட்டும் தான் டா உன் அம்மா வாய் மூடி இருக்கும்" என்றவர் சித்ரா தலை வெளியில் தெரியவும் படித்துக் கொண்டிருந்த பேப்பரினால் முகத்தை மறைத்துக் கொண்டார்.

"எங்க தான் போறானுங்களோ... என்ன தான் பன்றானுங்களோ... எதையும் சொல்றது இல்ல.. அப்பான்னு பேரு தான்.. உங்ககிட்ட சொல்றாங்களா? அப்படி தெரிஞ்சாலும் என்கிட்ட சொல்றிங்களா?" சித்ராவின் வார்த்தைகளில் "உஃப்" என காற்றை ஊதித் தள்ளினான் கண்ணன்.

"எப்படிப்பா சமளிக்குறீங்க? எவ்வளவு கேள்வி?" கண்ணன் தலையை உலுக்கிக் கொள்ள,

"அதெல்லாம் உனக்கு கல்யாணம் ஆகும் போது தெரியும் டா" என்றார் தந்தை.

"அய்யய! அப்படினா நான்லாம் கல்யாணமே செஞ்சுக்க மாட்டேன் பா" என்றவன்,

"பொண்ணுங்க பொண்டாட்டி ஆயிட்டா தனக்கு ஒரு அடிமை கிடைச்சுட்டதா நினைப்பு போல" என்றும் சேர்த்து சொல்ல,

"அங்கே என்ன டா பேச்சு அப்பாகிட்ட? நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.. எங்க கிளம்புறீங்க ரெண்டு பேரும்?" என்றார் சித்ரா.

"ம்மா! அண்ணா பிரண்ட் கால் பண்ணினாங்க மா.. ஆபீஸ்ல இம்போர்ட்டண்ட் ஒர்க்காம்.. அண்ணனுக்கு தான் தெரியுமாம்.. நானே கூட்டிட்டு போய்ட்டு நானே கூட்டிட்டு வர்றேன்னு சொல்றேன்ல" என்று கண்ணன் சொல்ல,

"போலாம் டா" என்று வந்தான் ராம்.

"உங்களை எல்லாம் என்னனு தான் நான் பெத்தேனோ! இதெல்லாம் ஒரு பதிலா? கை கஷ்டப்பட்டு வேலை பண்ணக் கூடாதுன்னு தெரியாதாக்கும்.. ஒரு வாரம் கூட ஆகல.."

"ம்மா! மாக்ஸிமம் ஒன் ஹவர்ல நான் வந்துடுறேன் ஓகே" என்று ராம் சொல்ல, எப்போதும் இப்படியான புலம்பலுக்கு செவி சாய்க்காத ராமின் இந்த இலகுவான பதிலில் தன்னால் அமைதியாகிப் போனார் சித்ரா.

அதில் கண்ணனும் தங்கராஜும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

"என்னாச்சு?" என்றான் புரியாமல் ராம்.

"உன்கிட்ட தான் சுவிட்ச் இருக்குதா ண்ணா?" கண்ணன் கேள்வி புரியாமல் தந்தையை ராம் பார்க்க, புரிந்த நொடி பக்கென சிரித்துவிட்டார் தங்கராஜ்.

"என்ன சுவிட்ச் டா?" - ராம்.

"இவ்வளவு நேரமும் கிட்சேன்ல ஓடின டேப்ரிகார்டர் நீ வந்ததும் ஆஃப் ஆகிட்டு.. அதான் அப்படி சொல்லறான்" என்று தங்கராஜ் சொல்ல, அதன்பின் புரிந்து கொண்டவனும் மென்மையாய் சிரிக்க,

"இந்த வீட்டுல வர வர எல்லாம் புதுசா இருக்கு பா.. ஜோக் சொன்னாலே நின்னு கேட்காத அண்ணா.. பாருங்க! என்ன ஜோக்னு நின்னு கேட்டு சிரிச்சுட்டு போறாங்க" பெருமையாய் கண்ணன் சொல்ல,

"உன் அம்மாவை கூப்பிடவா?" என்று தங்கராஜ் சொல்லவும் வேகமாய் படிகளில் இறங்க ஆரம்பித்தான் கண்ணன்.

"டேய் சாப்பாடு?" சித்ரா கேட்க,

"வந்து சாப்பிடுறோம் மா" என்ற ராம் சாவியுடன் இறங்க, கீழே கிளம்பி நின்று வண்டியை துடைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி. அவளிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

ராம் சாவியை கண்ணனை நோக்கி தூக்கி போட அதை லாவகமாய் கேட்ச் பிடித்து காரினை ஸ்டார்ட் செய்தான் கண்ணன்.

"நைட் உன் பிரண்ட்க்கு நல்ல அட்வைஸ் போல?" ராம் காரினுள் ஏறியதும் கேட்க,

"அட்வைஸா? சண்டையை சமாதானம் பண்ணி சமாளிக்கவே ஒரு மணி நேரம் ஆச்சு.. நீங்க வேறண்ணா! ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான் கண்ணனும்.

"தூக்கம் வரலைனு ஜன்னல் பக்கம் வந்து நின்னப்ப நீங்க போறதை பார்த்தேன்" ராம் கூற,

"கீர்த்தி ஓவர் எமோஷனல் ண்ணா.. ஆனா யார்கிட்டயும் காட்டிக்க மாட்டா.. நான் சும்மா சொன்ன ஒரு வார்த்தையை புடிச்சிட்டு இருந்தா.. அதான் " என்று கண்ணன் சொல்ல, ராம் பதில் பேசவில்லை.

"கீர்த்தி என்ன சொல்வானு நினைக்குற?" கண்ணன் கிண்டலாய் கேட்க,

"அதான் சொன்னேனே! எதுவா இருந்தாலும் அம்மா பார்த்துக்கட்டும்னு"

"சுத்தம்! ண்ணா.. அம்மா பத்தி உனக்கு தெரியாதா? பேசியே சம்மதிக்க வச்சுடும்..ஆனா அதுக்கெல்லாம் கீர்த்தி ஓகே சொல்லமாட்டா.. அவளுக்கா தோணினா தான் சொல்வா.." என்றான் கண்ணன்.

"அப்புறம் அம்மாக்கு முதல்ல இருந்தே கீர்த்தியை தான் உனக்கு பேசணும்னு ஆசை.. அதுனால நிறைய பேசுவாங்கனு தான் நினைக்குறேன்.. ஜெகன் மாமா வேற கீர்த்திக்கு ஏதோ வரன் வந்திருக்குறதா சொன்னாங்க.. ஹ்ம்ம் பாக்கலாம்.. ஆனா கீர்த்தி ஓகே சொல்லிட்டா யூ ஆர் லக்கி ப்ரோ" என்றான் சில்லாகித்து.

"ஆஹான்! ஆனா எனக்கு அவ ஓகே சொன்னா? அவ அன்லக்கி இல்ல?" என்று சிரிப்புடன் தான் கேட்டான் ராம்.

"ஏன் ண்ணா இப்படி சொல்ற? அதெல்லாம் அவளும் லக்கி தான்.. அன்னைக்கு நீ பாட்டுக்கு ரோட்ல விட்டுட்டு வந்துட்டியா! அதுல கொஞ்சம் நான் ஸ்லிப் ஆகிட்டேன்.. அதுக்காக ரொம்ப பேசாதீங்க" கண்ணன் வருத்தமாய் கூறினான்.

தான் பேசியது ராமை பாதித்துள்ளது என்றும் புரிந்து கொண்டான்.

பேசியபடியே இருவரும் வந்து நின்ற இடம் அண்ணாமலையின் வீடு.

தொடரும்..