அத்தியாயம் 2
"ஹாய் நிஷா! வந்து ரொம்ப நேரம் ஆச்சா?" கேட்டவாறே வந்து அவளருகில் அமர்ந்தான் ராம்.
"ஜஸ்ட் இப்ப தான் ராம்! சாப்ட்டியா?"
"ஹ்ம்ம் ஆச்சு! மதியம் ஆபீஸ் போகனும். அதான் அப்படியே கிளம்பி வந்துட்டேன்"
"ஓஹ்! சரி டா.." என்றவள் அமைதியாய் அமர்ந்திருக்க
"என்னாச்சு? எப்பவும் வீக்டேஸ் மீட் பண்ணனும்னு சொல்ல மாட்டியே?" என்றான் ராம்.
"ஹான்.. அது.. இல்ல சும்மா தான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா பீல் பண்ணினேன்.. இப்ப ஓகே!"
"பட் ஃபேஸ் பார்த்தால் அப்படி தெரில.. நேர்வஸ்ஸா இருக்குற போல தெரியுது.." ராம் சொல்ல,
"ச்ச! ச்ச! நத்திங் ராம்.. இப் யூ டோன்ட் மைண்ட் நான் கிளம்பவா?" என்றாள் நிஷா.
"நிஷா ஆர் யூ ஓகே?"
"யாஹ் ஐம் ஓகே ராம்.. ஐம் சாரி.. அப்புறமா பார்க்கலாம்.."
"நான் ட்ராப் பண்றேன் டா"
"இட்ஸ் ஓகே ராம்.. பை" என்றவள் கிளம்பிவிட, நிஷாவின் நடவடிக்கைகளில் குழம்பி நின்றான் ராம்.
"ஹெலோ! சொல்லிட்டியா?" காரில் ஏறி அமர்ந்த நிஷாவிடம் போனில் கேட்டான் ஒருவன்.
"இல்ல.." என்றாள் நிஷா.
"என்ன இல்ல.. நீ லேட் பண்ற ஒவ்வொரு நாளும் அவனுக்கு தான் ஆபத்து"
"எனக்கு புரியுது.. ஆனா சொல்ல தான் தைரியம் இல்ல"
"உன் நிலைமை எல்லாம் புரியுது.. ஆனா அவனுக்கு ஆபத்து உன்னால.. அதை நல்லா நியாபகம் வச்சுக்கோ" என்றவன் வைத்துவிட, நிஷா கண்மூடி ஆழ்ந்துவிட்டாள் யோசனையில்.
"ஹாய் கீர்த்தி! என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட போல.." பைக்கை அதனிடத்தில் நிறுத்திக் கொண்டே உள்ளே வந்த கீர்த்தனாவிடம் கேட்டான் கண்ணன்.
"ஆமா கண்ணா! இன்னைக்கு ஹால்ப் டே தான் ஒர்க்.. முடிச்சு வர இவ்வளவு நேரம் ஆகிட்டு"
"ஓஹ்! அப்புறம் உன் ஆளு காலங்காத்தால காதல் பண்ண கார் எடுத்துட்டு பீச் போய்ட்டாராமே.. உன்னையெல்லாம் இன்வைட் பண்ணலையா?" கண்ணன் குறும்புடன் கேட்க,
"டேய் உதை வேணுமா உனக்கு? அவன் எங்கே போனா எனக்கு என்ன?" என்றாள் கண்ணனை பாராமலே.
"ஆஹாங்.. அப்டினா நீ அவனை காதலிக்க...."
"எரும.. எரும... வாயை மூடு.. யாராவது கேட்டு தொலஞ்சிட போறாங்க... நான் ஒரு லூசு.. உன்கிட்ட போய் என் பர்சனலை சொன்னேன் பார்த்தியா.. என் புத்திய..." யாராவது இருக்கிறார்களா, யாராவது கேட்டு விட்டார்களா என சுற்றிமுற்றி பார்த்துக் கொண்டே அவள் சொல்ல,
"இன்னும் காலுலயே தான் போட்ருக்க கீர்த்தி.. எடுத்து அடிச்சிக்கோ.. உனக்கு தேவை தான்" என்றவன் அவள் விரட்டும் முன் படி ஏறினான்.
மீண்டும் வேகமாய் கீழே வந்தவன் "இந்தா அப்பு கேட்டா.. கொடுத்திடு" என்றவன் கீர்த்தி கையில் திணித்துவிட்டு ஓடிவிட்டான்.
கீர்த்தனா, கண்ணன் இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்கள்.. உறவுமுறை தாண்டி நல்ல நண்பர்களும் கூட.
ராம் எவ்வளவுக்கு எவ்வளவு கீர்த்தியை வெறுக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவனை விரும்பும் கீர்த்தனாவை கண்ணன் மட்டுமே அறிவான்.
ஆனால் எதற்காகவும் அதை ஊக்குவிக்கமாட்டான்.. ராம் நல்லவன் தான். அவன் மனதில் வேறொரு பெண் எனும் போது கீர்த்தனாவின் மனதில் விதை வளர்ந்து அவள் கவலை கொள்வதை இவன் விரும்பவில்லை.
அதற்காகவே இப்படி எப்பொழுதும் அவளை சீண்டுவதோடு நிஷா என்ற ஒருத்தியையும் நியாபகப்படுத்தி விடுவான்.
அது கீர்த்தனாவிற்கு தெரியாமலும் இல்லை. அவள் வெளியில் எதையும் யாரிடமும் காட்டிக் கொள்வதும் இல்லை.
"அப்பு! கண்ணாகிட்ட புக் கேட்டியா?" வீட்டிற்குள் வரவும் கீர்த்தனா கேட்க, அப்போதே தன் விதி தெரிந்துவிட்டது அபர்ணாவிற்கு.
உடன் லதாவும் இருக்க "என்ன நாவல் அண்ணி?" என ஓடி வந்து அந்த புக்கை கையில் வாங்கினாள் லதா.
"பாவி அத்தான் சண்டே தானே வாங்கிட்டு வர்றதா சொன்ன? இன்னைக்கே வாங்கி அதுவும் இவ கையில கொடுத்துருக்கியே" அபர்ணா முணுமுணுத்தது தெளிவாய் லதா காதுகளில் விழுந்தது.
"நீ முழிக்குறதுலேயே தெரியுது.. ஏன் அப்பு இப்படி பண்ற? உனக்கு எதாவது வேணும்னா என்கிட்ட கேளு.. எப்ப பாரு கதை படிக்கறது.. தூக்கத்துலயும் அதையே நினச்சு புலம்புறது" என திட்டியபடியே இருக்க, அது இப்போதைக்கு முடியாது என தெரியும் அபர்ணாவிற்கு.
"அட யாரு வாங்கினா என்ன அண்ணி? அவன் ஒன்னும் சும்மா வாங்கி கொடுக்க மாட்டான்.. அவனோட ட்ராயிங் எல்லாம் இவ தான் வரைஞ்சு கொடுக்குறா.. அவன் நோகாமல் ஆபீஸ்ல போய் பாராட்டு வாங்குறான்" என்றபடியே புக்கை பிரித்துப் பார்த்தாள் லதா.
"அவர் வந்துட்டாரா?" கீர்த்தி கேட்க,
"எவர்?" என்றாள் அபர்ணா வேண்டுமென்றே.. கீர்த்தி முறைக்க "மாமா அப்பவே வந்துட்டாங்க அண்ணி! ரூம்ல இருக்காங்க" என்றது லதா.
நால்வருக்கும் கீர்த்தி டீ எடுத்துக் கொண்டு வர, தந்தைக்கு லதாவிடம் கொடுத்து அனுப்பினாள்.
"கீர்த்தி வந்துட்டாளா லதா?" ஜெகன் கேட்க,
"ஏன் மாமா ரெண்டு பேரும் பேசிக்க மாட்டுறிங்க.. ஆனா ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்குறீங்க.. அண்ணியும் இப்ப தான் உங்களை கேட்டாங்க.. கலெக்ஷன் காசு எங்கேன்னும் கேட்டுட்டு வர சொன்னாங்க" என்றதும் சிரித்தவர்
"காசு அம்மா படம் முன்னாடி நானே வச்சுட்டேன் மா.. நாளைக்கு வெளியூர்க்கு வண்டி போகுது.. நானும் போய்ட்டு வரேன்னு சொல்லிடு" ஜெகன் சொல்ல,
"என்ன மாமா திடிர்னு வெளியூர் எல்லாம்? வண்டி தானே அனுப்புவீங்க?" கேட்டாள் லதா.
"இல்ல டா.. பண்டிகை நேரம் ஆள் கிடைக்காதே! போன வருஷம் கண்ணன் தான் ரெண்டு மூணு முறை போய்ட்டு வந்தான்.. இந்த முறை நானே போய்ட்டு வரலாம்னு பாக்குறேன்.." என்றவர்க்கு மகள் பதில் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.
"சரி மாமா.. நான் அண்ணிகிட்ட சொல்லிடுறேன்.. ஆனா பொங்கலுக்கு முன்னாடி வந்துடனும்" அக்கறையாய் அன்பாய் சொல்லும் தங்கை மகளை பார்த்து வாஞ்சையாய் சிரித்தார்.
"எக்ஸாம்க்கு படிக்க சொன்னா ரெண்டு பேரும் விளையாட தான் செஞ்சீங்களா?" அபர்ணாவை திட்டிக் கொண்டிருந்தாள் கீர்த்தி.
"இல்லக்கா! நாங்க எல்லாமே கவர் பண்ணிட்டோம்.. போராடிக்கும் போது சும்மா ரெஸ்ட்க்காக விளையாடினோம்" என விளக்கம் கொடுத்தாள் அபர்ணா.
"அண்ணி! மாமா நாளைக்கு வெளியூர் ட்ராவல் போறாங்களாம்" என்று வந்தாள் லதா.
"என்னவாம்? அடுத்த வாரம் பண்டிகைனு தெரியாதா? அதெல்லாம் இப்ப போகணும் வேண்டாம்னு சொல்லு" சத்தமாய் கூறியவள் பேச்சு அவருக்கே கேட்க மீண்டும் சிரித்தார்.
"நான் சொல்லிட்டேன் அண்ணி! அதெல்லாம் பொங்கலுக்கு முன்னாடி மாமா வந்திடுவாங்க" லதா சொல்லவும் கீர்த்தி யோசித்தவள் சரி என்று விட்டுவிட்டாள்.
"சொல்லிடு அப்பு! அப்புறம் அங்கே மாட்டிகிட்டேன்.. இங்கே மாட்டிகிட்டேன்னு சொல்லக் கூடாது"
"சரிக்கா வந்திடுவாங்க" என அவளும் கூறிய பின் தான் இரவு உணவிற்காக சமையலறைக்கு சென்றாள்.
"இவங்க அக்கப்போர் தாங்க முடியலை லது.." அபர்ணா சொல்ல இருவருமே சிரித்துக் கொண்டனர்.
"ம்மா! தலைவலிக்கு காபி கேட்டா.. என்னம்மா இது இஞ்சி, சுக்கு, பூண்டு வாசமெல்லாம் வருது காபில?" குடிக்கலாமா என்று ஆராய்ச்சி செய்து கொண்டே கேட்டான் கண்ணன்.
"கண்ட நோயெல்லாம் வெளில இருக்கு.. நாம தான் இழுத்து கொண்டு வர்றோம் வீட்டுக்கு.. இனிமேல் டெய்லி மசாலா டீ தான் குடிக்கணும்.." சொல்லி முடித்துவிட்டு திரும்பி சித்ரா பார்க்க அங்கே கண்ணன் இல்லை.
"போய்ட்டானா! இவனை..." மகனை திட்டியபடியே அந்த டீயை கணவருக்கு பத்திரப்படுத்தினார் சித்ரா.
"அப்பு! அப்பு!" என்றவாரே கீழே வந்திருந்தான் கண்ணன்.
"வந்துட்டானா! எங்கே போனாலும் வந்துடுறான்" லதா சலித்துக் கொள்ள அவனை முறைத்துக் கொண்டு நின்றாள் அபர்ணா.
"அப்பு! ஸ்ட்ரோங்கா ஒரு காபி ப்ளீஸ் டா" என்று சோஃபாவில் அமர்ந்தான் அவன்.
"ஏன் புக்கை அக்காகிட்ட கொடுத்தீங்க அத்தான்.. எப்படி திட்டினா தெரியுமா?" அபர்ணா பாவமாயும் கோபமாயும் சொல்ல,
"எது திட்டினாளா? இன்னைக்கு அவளை என்ன பண்றேன்னு பாரு.. முதல்ல ஒரு காபி கொண்டு வா.. குடிச்சுட்டு தெம்பா கேட்குறேன்" என்றவன் பேப்பரை எடுத்து வாசிக்க, மீண்டும் முறைத்தபடி சமையலறை சென்றாள் அபர்ணா.
"இவன் எல்லாம் உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டான் அப்பு.. இவனை நம்பி காபி கொடுக்காதே" வெளியில் லதாவின் குரல் கேட்கத் தான் செய்தது.
"குண்டு இங்கே என்ன பண்ற?" பேப்பரில் கண்களை வைத்தே கண்ணன் கேட்க,
"குண்டு சொல்லாத டா தடிமாடே!" என்றாள் லதா.
"க்கா! கண்ணாத்தான்க்கு காபி" அபர்ணா சொல்லவும்,
"நான் திட்டினதை அவன்கிட்ட சொல்லிட்டியா?" என்றாள் தங்கையை அறிந்த கீர்த்தி. ம்ம் என்று தலையாட்டினாள் அபர்ணா.
அவன் என்ன கூறுவான் என தெரிந்தபடியால் அங்கே இருந்து வெளிவரவே இல்லை கீர்த்தி.
காபியை குடித்துவிட்டு அங்கேயே அமர்ந்து டிவியை பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.
'இவன் இன்னைக்கு என்னை வச்சு செய்யாமல் போக மாட்டான்.. இவன்கிட்ட போய் உளறுவேனா!' நினைத்தப்படியே சப்பாத்திகளை உருட்டினாள் கீர்த்தி.
"என்ன அப்பு! உன் அக்காக்கு கிட்சேனை எழுதி வச்சுட்டீங்களா என்ன?" கண்ணன் கேட்டது தெளிவாய் கீர்த்தி காதுகளிலும் விழ, அவனை தெரிந்தவள் என்பதால் எழுந்து வெளியே வந்தாள்.
"அட கீர்த்தி முகமெல்லாம் மாவு சாப்டிருக்கு.. அப்ப என்னை திட்டிட்டே வேலை பார்திருக்க.. அப்படித்தானே?" கண்ணன் கேட்க,
"சத்தியமா இல்லைனு சொல்ல மாட்டேன்.. தெரியாமல் அப்புவை திட்டிட்டேன்.. கிளம்புறியா?" என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்..
"ஹ்ம்ம்! புக்ஸ் யாரு வேணா வாங்கிக் கொடுக்கலாம் டார்ல்ஸ்.. ஆனா மனசை தான் பத்திரமா பாத்துக்கணும்.. இனி அப்புகிட்ட அதை வாங்காத.. இதை வாங்காதனு ஏதாவது சொன்ன..." ஒற்றை விரலைக் காட்டி மிரட்டிவிட்டு செல்ல,
ஆயிரமாவது முறையாய் இவனிடம் தன் காதலை கூறியதை நினைத்து மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி.
இரவு பத்து மணி.. இன்னும் வேலை முடிய ஒரு மணி நேரம் இருந்தது ராமிற்கு. ஆபீஸ் வந்தது முதல் பல முறை அழைத்துவிட்டான் நிஷாவிற்கு.. எந்த அழைப்பும் ஏற்கப்படவில்லை.
இவர்கள் காதலும் வித்யாசமானதே! வாரத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ நிஷாவே அழைத்து பார்க்க வேண்டும் என்று கூறுவாள்.. அதுவரை ராமும் அவளை தொந்தரவு செய்யமாட்டான்..
அடிக்கடி போன், மெசேஜ், வாட்சப் ஸ்டேட்டஸ் என எதுவும் இவர்களுக்குள் கிடையாது..
ராமுமே சில சமயம் தான் ஏன் இப்படி இருக்கிறோம் என நினைப்பான். பின் நிஷா புறமும் யோசித்து அப்படியே விட்டுவிடுவான்.
இப்போதும் அவளைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறான். அவளே பலமுறை வந்து வழிய வழிய பேசியும் முதலில் ராம் கண்டு கொண்டதே இல்லை. நிஷாவும் எல்லா பெண்களும் போல கண்களில் கனவு மின்ன புன்னகை முகமாய் எல்லாம் அவனிடம் இருக்கமாட்டாள்.
அவனைப் பார்த்து வந்த தயக்கம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். நாளடைவில் அவளிடம் இவனே பேச அப்போதும் இவள் பயத்துடனே தான் பேசுவாள்.
ஒரு நாள் நிஷா ப்ரொபோஸ் செய்த போது கூட அவள் முகத்தில் அவ்வளவு பயம். அது தான் என்ன சொல்வோமோ என்கின்ற பயம் என்று தான் நினைத்திருக்கிறான் ராம்.
இப்போது வரையுமே அவள் குணங்கள் எதுவும் மாறிடவில்லை. அவனிடம் எதிராய் ஒரு வார்த்தை பேச மாட்டாள். இந்த கால பெண்கள் போல வெளியில் செல்லவும் விரும்ப மாட்டாள். எப்போதாவது அவளே அழைத்து பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்பாள்..
புரியாத புதிர் இவள் என்று நினைத்தவாறே மீண்டும் நிஷாவிற்கு அழைக்க இம்முறை அழைப்பை ஏற்றிருந்தாள்.
"ஹெலோ நிஷா! என்னாச்சு? ஏதாச்சும் ப்ரோப்லேமா?" என்றான் எடுத்ததும்.
"இல்ல.. இல்ல ராம்.. நான் பிரண்ட்ஸ்ஸோட பேசிட்டு இருந்தேன்.. போன் கவனிக்கல.."
"ஹ்ம்ம் ஓகே மா.. டேக் கேர்!" என்றவன் வைத்துவிட்டான். ஏதோ ஒரு வித்யாசம் இப்போது அவளின் பேச்சில் தெரிகிறது.. அது தான் யோசிக்கும் அளவுக்கு பெரிதா இல்லை ஒன்றும் இல்லாததை தான் தான் பெரிதாக நினைத்துக் கொள்கிறோமா என நினைத்தவாறே வேலைகளை முடித்தான்.
கீர்த்திக்கு புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் மட்டும் கண்களை எட்டவே இல்லை..
அந்த நாள்.. நிஷாவின் காதலை ஏற்றுக் கொண்டு ராம் வந்த அந்த நாள் இன்னும் ககீர்த்தியின் கண் முன்னே நின்றது.
ஆறு மாதத்திற்கு முன் தான் நடந்தது அது. வெளியில் தன் ஸ்கூட்டியை கீர்த்தி துடைத்துக் கொண்டிருக்க, தன் பைக்கில் வந்து இறங்கியவன் எப்போதும் போலவே கீர்த்தனா வீட்டிற்கு முன் நின்ற தன் அன்னையிடம் பேசினான் சாதாரணமாய்.
யாரும் அறியாமல் ஆண்களைப் பார்க்க பெண்களுக்கு தெரியாதா என்ன? அப்படித்தான் அவனைப் பார்த்தவாறே வண்டியை துடைத்துக் கொண்டிருந்தாள்.
அவளை சிறிதும் சட்டை செய்யவில்லை ராம். பேச்சினூடேயே நிஷா கூறியதையும் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்பதால் சம்மதம் கூறியதாயும் சொல்ல கீர்த்திக்கு தான் கேட்டதை நம்பவே முடியவில்லை.
எப்போதுமே சண்டைக் கோழியாய் கீர்த்தியுடன் சண்டைக்கு தான் நிற்பான் ராம். இல்லையெனில் பேசாமல் கடந்து சென்றுவிடுவான். கீர்த்தி எப்போதும் அமைதியாய் இருந்து விடுவாள். இது தான் வழக்கம்.
எனவே அன்றும் அவன் அன்னையிடம் பேசியதை கேட்டும் கேட்காதது போல வீட்டிற்குள் நுழைந்து தன் அறைக்குள் பூட்டிக் கொள்ள அது யாருக்கும் பெரிதாய் தெரியவில்லை.
அழவெல்லாம் இல்லை.. தான் அவனை அதிகமாய் நேசித்திருக்கிறோம் என்றே அப்போது தான் அவளுக்கு புரிந்தது. இருந்தும் என்ன பயன் என்று கடந்து போக முடியவில்லை. ஏனோ எல்லாம் வெறுப்பாய் ஆனது ஒரே நாளில்.
அப்படி அவள் தன்னிலை வெறுத்து சோர்ந்து அடைந்து கிடந்த போது தான் அவளிடம் வந்தான் கண்ணன்.
அவளின் முகம் பார்த்து தன் பேச்சாலேயே அவள் வாயிலிருந்து அனைத்தையும் வர வைத்திருந்தான்.
கீர்த்திக்கும் யாரிடமாவது சொல்லிவிட மாட்டோமா என்றிருக்க அவனிடமே அவன் அண்ணனுடனான காதலை தன் மனதைக் கூறினாள்.
"ஓஹ்" என்று கேட்டுக் கொண்டவன் சில நொடிகள் யோசனை செய்தான்.
தான் வந்தபோது அம்மாவும் அவனிடம் இதை கூறி தான் புலம்பி இருந்தார். ஆனால் ராம் ஒரு முடிவு எடுத்தால் அதில் தீர்மானமாய் இருப்பவன்... அவ்வளவு எளிதில் மாறமாட்டான் என்பதால் கீர்த்தியை தான் மாற்ற வேண்டும் என நினைத்து ஒரு முடிவிற்கு வந்தான்.
"கீர்த்தி! உனக்கு அவனை புடிச்ச மாதிரி அவனுக்கு ஒரு பொண்ணை புடிச்சிருக்கு.. அது தப்பா?" என்று கேட்க,
"ச்ச! ச்ச! தப்பு இல்லை டா.. ஆனா அதை மனசு ஏத்துக்க மாட்டுது. இவ்வளவு நாளுமே அவனை புடிக்கும்னாலும் இப்ப இன்னொரு பொண்ணு அவன் வாழ்க்கைலனு தெரிஞ்சதும் அதை எப்படி ஏத்துக்கனு தெரியல.. இனி பழகிக்கிறேன் டா.."
கண்ணனை தைரியம் பேச விடாமல் அவள் தன் மனதை மாற்றிடுவதாய் சொல்லிவிட அவனும் முதலில் விட்டு விட்டான்.
அதன்பின் இப்படி சிறிது சிறிதாய் பேசி நிஷா அவன் வாழ்க்கையில் இருக்கும் நிஜத்தை அவ்வபோது அவளுக்கு உணர்த்துவான்.
நல்ல நண்பனாய் அவளுடன் இருக்கும் கண்ணனுக்கும் கீர்த்தி தன் அண்ணியாய் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இல்லாமல் இல்லை.
ஆனால் அதைக் கூறி இன்னும் அவளை வருத்தவும் மனம் இல்லாமல் மனதிலேயே வைத்துவிடுவான்.
கண்ணன் ராமிற்கு எதிர் மாறானவன். லதா போல தான் இவனுக்கு கீர்த்தியும் அப்புவும்.
கீர்த்தியும் வெளியில் யாரிடமும் பேசிப் பழகி இராதவளுக்கு கண்ணனை தான் அதிகமாய் பிடிக்கும்.. அத்தை மகனைத் தாண்டி நண்பனாய்.
தொடரும்...