அத்தியாயம் 31
"ஹெலோ!" திகைத்து நின்றவளைப் பார்த்து ராம் அழைக்க,
"ஹான்!" என்றவளுக்கு வேறெதுவும் வார்த்தை எழவில்லை.
"என்ன இந்த நேரத்துல?" இருவருமே எதிர்பார்க்கவில்லை என்பதால் சகஜமாகவே பேசி நின்றான் ராம்.
மணியைப் பார்த்தவள் பத்து தானே ஆகுது என்று நினைத்து நிற்க,
"டிஸ்டர்ப்பா இருந்தா நான் வேணா கிளம்பிடவா?" என்றான் அவள் பதில் பேசாது நின்றதில்.
"இல்ல இல்ல.. நீங்க எப்படி இங்க?" என்று கீர்த்தி கேட்டு வைக்க,
"பின்ன! என் வீட்டுக்கு மட்டும் மாடி தனியாவா இருக்கு?" என்று கிண்டல் செய்து சிரித்தவனை ஒரு மாதிரியாய் பார்த்து வைத்தவள், அவன் அறியாமல் தன் கைகளை தானே கிள்ளிப் பார்க்க, அதை கண்டு கொண்டான் அவனுமே!
"நானே தான் கீர்த்தி!" என்றான் மென்மையாய் ஒரு அமைதியான புன்னகையுடன்.
"கண்ணாகிட்ட நான் பேசலைனு கேட்டியா?" ராம் கேட்க,
"அது.. இல்ல! ஒருவேளை உங்களுக்கு விருப்பம் இல்லையோனு தான்.. கேட்டேன்.." என்றாள்.
"எனக்கு விருப்பம்ன்றதால தானே அன்னைக்கே உனக்கு டைம் கொடுத்துட்டு வந்தேன்?" கேள்விகேட்டு ராம் நிற்க, என்ன சொல்வதென தெரியாமல் நின்றாள் கீர்த்தி.
"ஒரு சின்ன பயம் அவ்வளவு தான்.. உனக்கு இவ்வளவு குழப்பம் வரும்னு தெரிஞ்சிருந்தா டைம் வேஸ்ட் பண்ணிருக்கவும் மாட்டேன்" பதிலாய் ஆரம்பித்து கிண்டலில் ராம் முடிக்க,
'என்ன செஞ்சிருப்பானாம்?' என்ற உள்ளத்தின் கேள்வியை கண்கள் அழகாய் காட்டிக் கொடுத்தது.
"சொல்றேன்" என்று சொல்லி மீண்டும் சிரித்தவன் பார்வையை திருப்பி, சிரிப்பை உதடுக்களுக்குள் மறைத்துக் கொள்ள, முகத்தின் செம்மையை மறைக்க முடியவில்லை கீர்த்திக்கு.
"நான் போறேன்!" என்று கீர்த்தி கிளம்பப் பார்க்க,
"நில்லு கீர்த்தி! சும்மா பேசலாம் தானே?" ராம் கேட்க, அவளுக்கு ஆச்சர்யத்தை அளித்துக் கொண்டே இருந்தான் அந்த இரவு நேரத்தில்.
"முன்னாடி எல்லாம் ரொம்ப போல்ட்டா பேசுவியே! இப்ப ஏன் சைலேண்ட் ஆகிட்ட?" ராம் கேட்க,
'நானா டா பேச மாட்டுறேன்?' என்று மைண்ட் வாய்ஸ் வேறு நேரம் கெட்ட நேரத்தில் கேட்டு வைத்தது கீர்த்திக்கு.
"என்கிட்ட தான் இப்படியா?" அவனே கேள்வி கேட்டு அவனே பதிலும் கூறி என இருக்க, அதற்குமேல் அப்படி இருக்க பிடிக்காமல் ஒரு ஆழ்ந்த மூச்சினை எடுத்து விடுத்தாள் கீர்த்தி.
"பேச ரெடியாகுறியா?" என்று கேட்டு சிரித்தவனை பார்த்துக் கொண்டே நின்றாள் என்ன என்று தான் தோன்றியது அந்த நிமிடம் கீர்த்திக்கு.
"நீங்க எப்ப இவ்வளவு பேச ஆரம்பிச்சீங்க?" கீர்த்தி வாயை திறந்து கேட்டுவிட,
"ஆமால்ல!" என்றவன், "ஆனா இப்ப தான் நான் நானாவே இருக்குற மாதிரி இருக்கு.." என்றான் உடனே.
சிறு வயது முதலே கீர்த்தியிடம் முகத்தை சுருக்குபவன், இதற்கு முன் அவன் சிரித்து காட்டி இருந்தால் தானே அவனின் இந்த முகத்தையும் அவள் அறிவாள்.
"ம்ம்ம்! நிறையவே மாறிடுச்சு" என்றாள் உணர்ந்து.
"அது நல்லது தான்னு எனக்கு தோணுது" ராம் கூற,
"எனக்குமே!" என்றாள் புன்னகையுடன்.
"அப்புறம்?" ராம் கேட்க,
"அப்புறம்...." என்று கீர்த்தியும் இழுக்க,
"ஏதோ கேட்கனும்னு தோணுதுல? கேட்டுடு.. எப்பவும் இப்படியே இருக்க முடியாது.. நமக்கு தான் கல்யாணம் ஞாபகம் இருக்கு தானே?" என்றான். இன்னமுமே அவன் முகத்தில் அந்த வசீகரிக்கும் புன்னகை அப்படியே இருந்தது.
கூடவே இவ்வளவு நாளில் காதல் என்று பேசிய பெண்ணிடம் ஏன் இப்படி எல்லாம் பேச தோன்றியதில்லை என்ற கேள்வியும் கூட எழ, அதை அப்படியே புதைத்துக் கொண்டான் தனக்குள்.
"ம்ம் ஆமா!" என்றவள், "அத்தை மாமா எதுவும் உங்ககிட்ட பேசினாங்களா?" என்று கேட்டாள்.
தான் கூறியதை இவனிடம் சொல்லி இருப்பார்களா என்கின்ற சந்தேகம் வேறு மனதில்.. நேராய் கேட்க முடியுமா என்ன!.
"ம்ம் சொன்னாங்களே! நீ சம்மதம் சொல்லிட்டன்னு" அவன் கூற,
"அவ்வளவு தான் சொன்னாங்களா?" என்றாள் கேள்வியுடன்.
"ஆமா! வேறென்ன?" என்று கேள்விகேட்டு பார்த்தவன்,
"ஏதாச்சும் ரூல்ஸ் கேட்டிருந்தியா கல்யாணத்திற்கு?" என்றான் உடனே.
"ச்ச! ச்ச! அதெல்லாம் இல்ல.. சும்மா தான்" என்றவள், பேச்சை மாற்றும் பொருட்டு,
"அந்த பிரச்சனை முடிஞ்சிடுச்சா? நீங்க ரெண்டு பேரும் பேச போனீங்களே! என்னாச்சு?" என்று கேட்க,
அந்த நாள் நினைவில் இப்போதும் வாடிப் போனான் ராம்.
'கண்ணாகிட்டயே கேட்ருக்கலாமோ! எனக்கு தெரியக்கூடாதுன்னு நினைச்சிருப்பாங்களோ?' நொடியில் பலதும் கீர்த்திக்கு அப்போது தோன்றிவிட, அவன் கூறியபடியே மனதில் இருப்பதை பேசிவிடுவது என முடிவெடுத்துவிட்டாள்.
"சாரி! கண்ணா என்கிட்ட எப்பவும் எதையும் சொல்லிடுவான்.. அதுவும் நான் உங்களை..." என்று கீர்த்தி தன் காதலை கூற வர,
"இனி என்கிட்டேயே கேட்கலாம்.. உனக்கு உரிமை இருக்கு" என்று சட்டென சொல்லியவன் மீண்டிருந்தான் அந்த நேரம்.
அன்று நடந்ததை முழுதாய் சொல்லியவன், "கண்ணா! இப்படி செய்வான்னு நான் எதிர்பார்க்கல கீர்த்தி.. இன்னும் எனக்கு மனசுக்குள்ள அது குத்திட்டே தான் இருக்கு.. ஆனா நான் அவசரப்பட்டு எதுவும் செஞ்சா அதுவும் நம்ம பேமிலியை தான் பாதிக்கும்.. அதுனால தான் கைகட்டி பார்க்க வேண்டியதிருக்கு" என்றவன் நிஜமாய் கண்ணனை எண்ணி பெருமையும் கவலையுமாய் நின்றிருந்தான்.
ராம் நிலை இதுவென்றால் கீர்த்தியோ கண்களில் கண்ணீர் நிறைய நின்றிருந்தாள்.
"ஹேய்! நீ ஏன் அழுற?" ராம் அதிர,
"கண்ணா எப்பவுமே இப்படி தான்.. எனக்கும் கூட எவ்வளவோ நேரம் நான் கஷ்டப்படும் போதெல்லாம் கேட்காமலே ஆறுதலா இருப்பான்" என்று கீர்த்தி கூற,
"ஹ்ம்ம்! இவ்வளவு நாள் பேமிலி கூட நான் டைம் ஸ்பென்ட் பண்ணலைனு ஜஸ்ட் ஒரு டென் டேஸ்ல எனக்கு எல்லாரும் புரிய வச்சுட்டே இருக்காங்க.. நான் இருக்கேன்னு ஒவ்வொரு நிமிஷமும் எனக்காக இருக்காங்க எல்லாரும்.. இவங்களுக்கு நான் எதாவது செய்யணும் இல்ல?" என்று ராம் கேட்க,
"கண்டிப்பா" என்றாள் கீர்த்தி.
"அதுக்காக தான் அம்மா உன்னை கைகாட்டவும் சம்மதம் சொன்னேன்" என்றான் உடனே. கீர்த்தியின் கண்ணீரும் அப்போது தான் நின்றிருந்தது.
"என்ன?" கீர்த்தி புரியாமல் விழிக்க,
"இனி வீட்டுல அம்மா அப்பா எது சொன்னாலும் கேட்டுக்கணும்னு நான் முடிவெடுத்தப்போ, அவங்க எல்லாரும் எடுத்த முடிவு தான் கீர்த்தி என்னோட வைஃப் ஆகுறது.. கண்ணா கூட அதெல்லாம் முடியவே முடியாதுன்னு நின்னான்.. என்னவோ நான் உன்னை கடத்திட்டு போறது மாதிரி" என்று சொல்லி சிரிக்க, மெலிதாய் சிரித்தாள் கீர்த்தியுமே.
"அவங்களுக்காக மட்டும் தான் சம்மதம் சொன்னேன்.. கண்ணாகிட்ட உன்னோட முடிவு எதுவா இருந்தாலும் ஏத்துக்குறதா சொன்னேன்.. ஆனா அது அப்படியே மாறி போச்சு.. உனக்காகவே உன்னை ஏத்துக்கனும்னு தோணுச்சு.. என்னவோ இப்ப தான் என் லைஃப் என் கையில இருக்குற மாதிரி ஒரு பீல் கீர்த்தி"
என்னென்னவோ அவன் பேசிக் கொண்டிருக்க, புரிந்தும் புரியாமலுமாய் கேட்டுக் கொண்டிருந்தாள் கீர்த்தி.
"எவ்வளவு டார்ச்சர் பண்ணிருக்கேன் உன்னை.. எப்படி ஓகே சொன்னனு இப்பவும் எனக்கு ஆச்சர்யமா தான் இருக்கு" ராம் கூறவும்,
"அப்ப வேணா நோ சொல்லிடவா?" என்று கிண்டலாய் கேட்டவளைப் பார்த்து,
"ஹ்ம்ம்! கீர்த்தனா இஸ் பேக்!" என்று சொல்லி சிரித்தான் ராம்.
அதில் சிரித்தவள் "ஓகே! போலாமா?" என்று கேட்க,
"ம்ம்ம்ம்! இப்ப உனக்கு எந்த டவுட்டும் இல்லை ரைட்?" என்று கேட்டான்.
ஆம் என்று தலையாட்டவும் முன்னே செல்லுமாறு கைகளால் அவன் சைகை செய்ய, அவளும் முன்னே சென்றாள்.
"டேய்! இஸ்ஸுஸ் கிளியர் பண்ற நேரமா டா இது? நிம்மதியா தூங்க விடுறிங்களா?" என்று மொபைலில் பேசிக் கொண்டே கிட்சேனில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் கண்ணன்.
"எர்ரர் கிளியர் பண்ணி தானே சமிட் பண்ணினேன்?" என்றவன் வாசலில் பார்க்க,
ராம் கதவருகே நின்று கீழே சென்று தன்னைப் பார்த்த கீர்த்திக்கு பை சொல்லிக் கொண்டிருந்தான்.
'இவன் என்ன இந்நேரத்துல கை ஆட்டிட்டு நிக்குறான்?' என நினைத்தவன்,
"ஜீ! ஃபைவ் மினிட்ஸ்ல கிளியர் பண்ணி அனுப்புறேன்" என்று மொபைலில் கூறிவிட்டு ராம் பக்கம் நடந்தான்.
கீர்த்தியும் ராமிற்கு கை அசைத்தவள் புன்னகையுடன் விடைபெற்று வீட்டிற்குள் சென்றிருந்தாள்.
"யாரங்கே?" என்று நெற்றியினில் கைவைத்து இருட்டினைப் பார்த்தவன்,
"என்ன ண்ணா பேய்க்கு பை சொல்லிட்டு இருந்தியா?" என்று கேட்க,
"ஹ்ம்ம்! பேய் தான்.. அழகான பேய்" என்று விட்டு கண்ணனை தாண்டி உள்ளே சென்றான் ராம்.
"அழகான பேயா? அப்ப கீர்த்தியா இருக்க வாய்ப்பில்லையே!" தெரிந்தே கண்ணன் கிண்டல் செய்ய,
"என் கண்ணுக்கு அழகு தான்.. போ டா" என்றான் அண்ணன்காரனுமே!
"ப்ப்பா! இவன் வேற நேரம் காலம் இல்லாம ஷாக் மேல ஷாக் குடுக்குறான்" என்ற கண்ணன்,
"இந்நேரம் என்ன மீட்டிங்கு?" என்று ஸ்ட்ரிக்ட்டாய் கேட்க,
"கல்யாணம் பண்ணிக்க போறவங்க பேச ஆயிரம் இருக்கும்.. அதை ஏன் டா உன்கிட்ட சொல்லணும்?" என்று அவன் தலையில் தட்டி ராம் கூற,
"வாஸ்தவம் தான்.. ஆனாலும் அஸ் அ பேமிலி வெல் விஷேர்ரா இதை தான் எதிர்க்கிறேன்" கண்ணன்.
"உன்கிட்ட எவன் டா பெர்மிஸ்ஸன் கேட்டது? அப்படி தான் மீட் பண்ணுவேன்.." ராமும் அவனுக்கு ஈடு கொடுக்க,
"ஹோஹ்ஹோ! ரொமான்ஸ் மூட்லேர்ந்து சார் இன்னும் வெளில வர்ல போலயே!" என்றவனை முறைத்த ராம்,
"எது! உன் பிரண்ட்கிட்ட.. நான் ரொமான்ஸ்ஸு? நடந்துட்டாலும்.. ஏதோ கடவுள் புண்ணியம்.. இன்னைக்கு தான் முறைக்காமல் பேசவே ஆரம்பிச்சிருக்கா" என்றான் ராம்.
"அவ முறைக்குறதுக்கு உனக்கு தான் பிரதர் அர்த்தம் புரியல.. ஒரு நாள் புரியும்.. அப்ப மறுபடியும் நீ தான் பீல் பண்ணுவ" புரியாதபடி கண்ணன் கூற,
"ரொம்ப நாளைக்கு அப்புறம் நானே இன்னைக்கு தான் டா நிம்மதியா தூங்கப் போறேன்.. ஏன் டிஸ்டர்ப் பண்ற? தூக்கம் வரலைனா இரு அம்மாவை எழுப்புறேன்" என்று கூற,
"வேணாம் சாமி! பேய் புலம்பலை கூட கேட்டுடலாம்.. அவங்க புலம்பலை கேட்க முடியாது.. நீ போ! நல்லா லவ் ட்ரீம்ஸ்ஸா வரட்டும்" என்று வாழ்த்தி அனுப்பி வைத்தவன்,
'நாம காலம் முழுக்க இந்த ப்ரோக்ராம் கூட தான் வாழனும் போல' என முனகியபடி அறைக்கு சென்றான்.
தொடரும்..