• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் - 31

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
920
481
93
Tirupur

அத்தியாயம் - 31


31
ஆரணி சேலம் வந்து இரண்டு நாட்கள் போயிருந்தது. அன்று சனிக்கிழமை என்பதால் அரை நாள் மட்டுமே வகுப்புகள் இருக்க, வகுப்பு முடிந்து வெளியில் வரும் நேரம் அவளது எச்ஓடியும் சேர்ந்து கொள்ள, இருவரும் பேசியபடியே காரிடாரில் நடக்க, இருவரையும் முறைத்தபடியே அவர்களுக்கு எதிரில் வந்து நின்றான் ஆதித்யன்.
திடீரென்று அவனைப் பார்த்ததும் சந்தோசத்தில் விரிந்த அவளது விழிகள், பட்டென்று நிதர்சனம் உணர்ந்து கோபத்தில் சிவந்தது. அவள் முறைத்துக் கொண்டிருக்க, அவனோ அவளுக்கு அருகில் இருந்த “டேய் உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா.? இப்போ எதுக்கு இவளை அங்க இருந்து பேக் பண்ணிட்டு வந்துருக்க.” எனக் கத்த,

இருவரையும் மாறி மாறிப் பார்த்த ஆரணி, ஆதியின் உரிமையானப் பேச்சில், ‘ஓ.. அப்போ இந்த எருமக்கடாவும் கூட்டுக் களவானியா’ என எச்ஓடியை பார்த்து முறைத்துவிட்டு, ‘போங்கடா’ என மனதுக்குள் இருவரையும் கேவலமாகத் திட்டிவிட்டு வேகமாக அங்கிருந்து விலகி நடக்க ஆரம்பித்தாள்.

“பாவி ஏண்டா..” என அந்த எச்ஓடி, ஆதியைப் பார்த்து பாவமாகக் கேட்க, “போடா..” என அவனைத் தள்ளிவிட்டு, “ஏய்.. நில்லுடி.. நில்லுடின்னு சொல்றேன்ல, என்னைப் பார்த்தா எப்படி தெரியுது. எதுக்குடி என்கிட்ட சொல்லாம ஓடிவந்த..” என அவளுக்குப் பின்னாடியே போய் ஆதி கத்த ஆரம்பிக்க,

“இதோ பாருங்க.. இது ஒன்னும் உங்க வீடு இல்ல, இஷ்டத்துக்குப் பேச, இது காலேஜ்.. கொஞ்சம் அதுக்குத் தகுந்த மாதிரி டீசன்டா நடந்துக்கோங்க..” என அவளும் பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பிவிட்டு நிற்காமல் செல்ல,

“திமிர்.. திமிர் உடம்பு மொத்தமும் திமிர்.. ஊரு உலகத்துல பொண்ணே இல்ல, என் மாமன் பொண்ணு மட்டும் தான் பேரழகின்னு, உன்னைப் போய் லவ் பண்ணேன் பாரு. என்னைச் சொல்லனும்.. ச்சே..” என எரிச்சலில் மேலும் கத்த ஆரம்பித்தான் ஆதி.

“இப்போ நான் வந்து உங்களை லவ் பண்ணுங்கன்னு சொன்னேனா.. இல்லைதானே.. நான் வந்து உங்கக்கிட்ட கெஞ்சிட்டு இருக்குற மாதிரி பேசிட்டு இருக்கீங்க.. நான் நல்லா யோசிச்சிட்டேன். உங்களுக்கும் எனக்கும் செட்டே ஆகாது, ப்ரேக்கப்தான் பெஸ்ட். உங்களை மாதிரி லவ் பண்ண பொண்ணோட ஃபீலிங்க்ஸ புரிஞ்சிக்காத ஒரு சைக்கோவை நான் மேரேஜ் பண்ணி குப்பை கொட்டுறதா இல்லை. எனக்கு நீங்க வேண்டாம். அவ்ளோதான்..” எனப் படப்படவென பட்டாசாகப் பொறிந்துவிட்டு, பிரின்சிபல் அறைக்குள் நுழைதுவிட,

‘இராட்சசி.. நான் சைக்கோவா.. இருடி வரேன்..’ எனப் பல்லைக் கடித்தவன், அவளை இடித்துக் கொண்டு அதே அறைக்குள் நுழைந்து பிரின்சிபலின் முன்னால் இருந்த சேரில் சட்டமாக அமர்ந்து கொண்டான்.

‘பைத்தியம் எப்படி போய் உக்காந்துருக்கு பாரு.. எதாச்சும் பேசட்டும் இருக்கு’ என அவனைக் கருவியள், முதல்வரைப் பார்த்து, “சார் கூப்பிட்டீங்களாம்..” எனப் பாவமாகக் கேட்டாள் ஆரணி.

அப்போது அவளது போன் அடிக்க, எடுத்துப் பார்த்தவள் அப்பத்தாவின் நம்பர் என்றதும், கட் செய்து வைத்துவிட்டு அவரைப் பார்க்க,

“வா.. வா ஆரணி.. இவர் உனக்குத் தெரியும் தானே..” என ஆதியைக் காட்ட,

“ஹான் சார், இங்க வந்துருக்கார் தானே ஆதித்யன் சார். நான் கூட அவருக்கு அசிஸ் பண்ணிருக்கேன்..” எனவும், ஆதித்யன் பல்லைக் கடித்தான்.

“யெஸ் அவர்தான். வெரி டேலன்டேட் பெர்சன், அன்ட் ரொம்ப பிசி மேன். நான் கேட்டதுக்காக இங்க வந்துருக்கார். உன்னோட ஹெட் நாளையில் இருந்து லீவ்ல போறார். உனக்குத் தெரியுமா.? அவருக்குப் பதிலாதான் ஆதித்யன் சாரை அப்பாய்ன்ட் செய்துருக்கோம். நீ இனி இவர் கூடவே ஜாயின்ட் செஞ்சிக்கோ. உன்னோட ப்ராஜெக்ட் டீடைல்ஸ் எல்லாம் அவருகிட்டயே கலெக்ட் செய்துக்கலாம்.. ஓக்கேவா.. இப்போ நீங்க போகலாம்..” என அவர் முடித்துவிட,

‘எய்யா பாண்டி முனீஸ்வரா உனக்கு என்ன குறை வச்சேன்னு இந்த பைத்தியத்துக் கூட எல்லாம் என்னைக் கோர்த்து விடுற… தப்புதான் பெரிய தப்புதான், உனக்கு நேந்து விட்ட சேவலை எல்லாம் நான் ஸ்வாகா பண்ணது தப்புத்தான். அதுக்காக இப்படியெல்லாம் பழி வாங்கனும்னு இல்லையே..’ என மனதுக்குள் புலம்பியபடியே வெளியேறப் போனவளை “ஒரு நிமிசம்..” என ஆதித்யன் நிறுத்த, அப்போது மீண்டும் அவளது போன் அடித்தது.

“எடுத்துப் பேசுங்க, எதுவும் முக்கியமான காலா இருக்கப் போகுது. இல்லைன்னா க்ளாஸ் டைம்ல கால் பண்ணமாட்டாங்க..” என முதல்வர் சொல்ல, “நோ இஸ்ஸூஸ் சார், நான் அப்புறம் பேசிக்கிறேன்..” என்றவள், ஆதித்யனைப் பார்த்து ‘என்ன’ என்று பார்க்க,

“ஸார், எனக்கு அசிஸ் பண்ண இவங்கதான் இருக்காங்களா..? ஸ்டூடன்ட் இல்லாம வேற ஸ்டாப்ஸ் இருந்தா பெட்டர்ன்னு நினைக்கிறேன்..” என அவளைப் பார்க்காமல், முதல்வரிடம் பேசி ஆரணியின் கோபத்தீயில் எண்ணையை ஊற்ற, இப்போது மீண்டும் ஆரணியின் போன் அலறியது.

ஏற்கனவே கடுப்பின் உச்சியில் இருந்தவள், இப்போதும் அப்பத்தாவின் அழைப்புதான் என்றதும், ‘எடுத்துப் பேசுங்க’ என யாரும் சொல்வதற்கு முன்பே, அட்டென்ட் செய்தவள் “ஏய் கெழவி, போன் எடுக்கலன்னா எதாவது முக்கியமான வேலையில இருப்பாங்கன்னு தெரியாதா.? எதுக்கு சும்மா போன் போட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்க,” எனக் கடுப்பில் கத்த,

“ஏய் என்னடி வாய் ரொம்ப நீளுது, உன் மாமன் வந்துட்டானான்னு கேட்க போன் போட்டா..” என முடிக்க முன்னே, “ஆமா அந்த பைத்தியக்கார சைக்கோ, உன் பேரன் அவன் இங்கதான் சுத்திட்டு இருக்கான். உனக்கு அவன் உசுரோட வேணும்னா வந்து கூட்டிட்டு போ.. இல்ல அவனை சட்னி ஆக்கித்தான் பார்சல் பண்ணுவேன் பார்த்துக்கோ..” என ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே பேச,

அவளின் பேச்சில் கடுப்பானவன், போனை பிடுங்கி, “அம்மாச்சி உங்களுக்காகத் தான் இவளைத் தேடி வந்தேன், ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கா.. பைத்தியம்ங்கிறா, சைக்கோங்கிறா..” என பட்டியல் புகார் வாசிக்க, “கொடுடா.. போனை கொடுன்னு சொல்றேன்ல..” என அவனிடமிருந்து போனை பிடுங்க ஆரணி முயற்சிக்க, ஆதித்யன் ஒரு கையால் அவளை மடக்கிப் பிடித்துக் கொண்டே போனில் பேச, இருவரையும் ஒரு மார்க்கமாகப் பார்த்த முதல்வர், “சீக்கிரம் ரெண்டு பேரும் சண்டையை முடிச்சிட்டு வெளியே போங்க..” என அவரும் கத்திவிட்டார். (பின்ன எவ்ளோ நேரம்தான் இதுங்க சண்டைய வேடிக்கப் பார்க்குறது, பொறுமை எருமையில ஏறிப் போயிடுச்ச் முதல்வருக்கு)

“கெழவி உன் பேரனை பாண்டி முனீஷனுக்கு காவு கொடுக்காம விட மாட்டேன்.” என அவள் அப்போதும் கத்திக் கொண்டே இருக்க, “சாரி சார்.. சாரி..” என்று முதல்வரைப் பார்த்து சொன்னவன், கத்திக் கொண்டிருந்தவளின் வாயை இரண்டு கைகளாலும் மூடி, “இனிமேல் வாயைத் திறந்த, யார் இருக்காங்க என்னனு கூட பார்க்காம, லிப் டூ லிப் கிஸ் பண்ணுவேன், எனக்கு ஒன்னும் இல்ல, நீதான் கூச்சப்படுவ..” என அவள் காதில் முணுமுணுக்க,

அதில் பட்டென்று தன் திமிறலை விடுத்து, அதிர்ந்த விழிகளால் அவனைப் பார்க்க, “செய்ய மாட்டேன்னு நினைக்காத, கண்டிப்பா செய்வேன்.. வேணும்னா பேசு, ஒரு ட்ரைல இங்கேயே பார்ப்போம்..” என்று கண்ணைச் சிமிட்ட,

அவன் அசந்த நேரம், அவனைத் தள்ளிவிட்டு “போடாங்..” என்றவள் வெளியில் ஓடிவிட, ஆண்கள் இருவருக்கும் பயங்கர சிரிப்பு.

“உக்காருங்க ஆதி, பாண்டியன் காலையிலேயே கூப்பிட்டு சொன்னார். என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்.. ஏன் ஆரா இப்படி கோபமா இருக்கா.? எனக்குத் தெரிஞ்சி அவளுக்கு கோபமே வராது. செம வாலு..” எனச் சிரித்துக் கொண்டே கேட்க,

“இவ்வளவு சொன்ன மாமா, அதையும் சொல்லியிருப்பாரே..” என்றவன், “அது ஒரு சோகக்கதை சர், இவளை எப்படி சமாளிக்கன்னே தெரில. எங்க அப்புச்சியும், அம்மாச்சியும் சேர்ந்து இவளை இப்படி வளர்த்து விட்டுருக்காங்க.” என்றவன் நடந்ததை சுருக்கமாகச் சொல்லிவிட்டு, “எப்படித்தான் இந்த லவ்வ பன்றாங்களோ தெரில சார், எனக்கு இப்பவே கண்ண கட்டுது.” என தலையில் கைவைத்து அமர்ந்துவிட,

“ஹாஹா.. ஆதி நான் எப்பவும் ஆரா பக்கம் தான். அவளோட கோபத்துல தப்பே இல்லை. நீ எப்படியோ அவளை சமாளிச்சிடு. இல்லைன்னா சொல்லு என் பையன் இருக்கான். அவனுக்கு பேசி முடிச்சிடலாம்.. நான் ஏற்கனவே பாண்டியன்கிட்ட பேசிருக்கேன்..” என அவரும் தன் பங்குக்கு அவனைக் கடுப்பாக்க,

“ஏன் அங்கிள் ஏன்.. நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்னு வளைச்சு வளைச்சு செய்றீங்க.. மீ பாவம்.” என சிறுபிள்ளை போல பேசியவன், “உங்க பாண்டியனை சமாளிச்சு வரவே எனக்கு ரெண்டு நாளாச்சு. இனி இவளை கரெக்ட் பண்ண எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியல.. இதுல நீங்க வேற புதுசா போங்க அங்கிள்..” என்றவன் தலையில் கைவைத்து அமர்ந்துவிட, வாய்விட்டு சிரித்து விட்டார் அவர்.

இங்கு வெளியில் வந்தவளோ முதல் வேலையாகத் தன் தந்தைக்கு அழைத்து, “ப்பா.. எதுக்கு இப்போ அவனை இங்க அனுப்பி வச்சீங்க..” என ஆரம்பிக்க,

“ஆரா..” என்ற பாண்டியனின் அதட்டலில், “சரி சரி அவரை.. அவரை.. அந்த துவரையை ஏன் இங்க அனுப்பி வச்சீங்க..” எனப் பல்லைக் கடிக்க,

“ஆரா நீ இன்னும் சின்ன பொண்ணு கிடையாது. நீ கேட்டப்ப உன் பக்கம் நியாயம் இருந்தது. அதுக்காக உனக்கு ஹெல்ப் செஞ்சேன். இப்போ ஆதி அவன் செஞ்ச தப்பை உணர்ந்து, உங்கிட்ட மன்னிப்பு கேட்க வந்துருக்கான். அதை மறுக்கக்கூடாது.” என முடிக்க முன்னே

“ஒருத்தங்க தன் தப்பை உணர்ந்து வரும்போது அவங்களை அவாய்ட் பண்ணக்கூடாது அதானேப்பா..” என ஆரணியே முடிக்க, “எஸ்.. என் பொண்ணு எம்புட்டு அறிவு..” என அவர் சிலாகிக்க,

“ப்பா.. கதை முழுக்க உங்களை ஒரு டெரெஸ் பீஸ் மாதிரி காட்டி வச்சிருக்காங்க, நீங்க இப்படி ஜாலியா பேசினா எப்படி.. ம்ம்ம்.” என்றவள், அவனைக் கதறவிட்டாத்தான் எனக்கு கொஞ்சமாவது நிம்மதி கிடைக்கும், அதனால அவனுக்கு சப்போர்ட் பண்ணி யாரும் வராதீங்க.. மிஷன் ஸ்டார்டேட்..” என்றவள் போனை வைத்துவிட்டு நம்பியார் பாணியில் கையை பிசைந்து கொண்டாள்.

“ஏய் கிழவி என்னடி மூஞ்ச மூனு நீளத்துக்கு தூக்கி வச்சிருக்க..” என்றபடியே முத்துசாமி வர,

“என்னத்த சொல்லுவேன்.. இந்த ராங்கி என்னைய கண்டமேனிக்கு வஞ்சிபுட்டா.. ஒரு மட்டு மருவாத இல்லாம..” என புலம்ப,

“எல்லாம் உங்களைப் பார்த்துதான் பழகிருக்கா.. நீங்க கொடுத்த செல்லம்தான் இந்தளவுக்கு வந்துருக்கு. இருக்கட்டும் அவளை..” எனப் பாண்டியன் தாயிடம் பேச,

“என்னலே.. விட்டா பேசிட்டே போற, எம்பேத்தி என்ன மாதிரிதான் இருப்பா. அதுக்காக நீ என்ன வேணும்னாலும் பேசுவியா.. சோலியப் பார்த்துட்டு போ.. சும்மா எதாச்சும் சொல்லிட்டு இருக்காத..” என மகனைக் கண்டித்தவர், “ஏங்க இவன் எப்போ ஊருக்குப் போறான், புள்ள வேற அங்க தனியா இருக்கா..” எனக் கணவனிடம் கேட்க, ‘தெரியாது’ எனும் விதமாக அவர் தலையை ஆட்ட, “என்னதான் உங்களுக்குத் தெரியும்.. சும்மா எல்லாத்துக்கும் தலையை ஆட்ட வேண்டியது..” என கணவரைச் சாடினார்.

“எய்யா பாண்டி.. நீ எப்போ போற.. ஆருக்குட்டி தனியா இருக்காளே..” என இழுக்க,

“அதான் உங்க பேரன் போயிருக்கானே, அவன் பார்த்துப்பான். நீங்க போன் போட்டு அவளை டென்ஸன் பண்ணாம இருங்க போதும்..” என முடித்துவிட்டு உள்ளே போய்விட்டார் பாண்டியன்.

‘என்னங்க இது’ என மனைவி பார்த்த பார்வைக்கு, ‘எல்லாம் சரியாகும்’ என்று மட்டும் சொல்லிவிட்டார்.

இங்கு ஆரணி, தாரணியின் வீட்டில் தங்கிக்கொள்ள, ஆதித்யனோ ஆரணியின் வீட்டில் அவள் அறையில் தான் தங்கி இருந்தான். மூன்று நேரமும் உணவு அங்கே தான். ஆனால் ஒரு நாளும் ஆரணி கொண்டு போய் கொடுத்ததில்லை. அவனே அங்கு வந்துவிடுவான்.

அவனைப் பார்த்ததும் பல்லைக் கடிப்பவளைப் பார்த்து வேண்டுமென்றே சீண்ட ஆரம்பிப்பான். ஆனால் அவனை முற்றிலும் தவிர்த்து மண்டை காய வைப்பாள்.

ஆனால் அதற்கு எதிராக கல்லூரியில் அவளுக்கு வேலை அதிகம் கொடுத்து கதற விடுவான் ஆதித்யன். சிறு தவறு என்றாலும் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிவிடுவான். இன்னைக்கு ஒரு தப்புமில்லை என்று ஆசுவாசமாக விடமாட்டான். மைக்ரோஸ் கோப்பில் தேட வேண்டும், அந்தளவிற்கு அவளது தப்பைத் தேடி, திட்டி டார்ச்சர் செய்வான்.

சில நேரம் அவளிற்கே தோன்றும், நான் இவனைப் பழிவாங்குறேனா, இல்ல இவன் என்னை பழிவாங்குறானா என்று.. மம்மி என்று கதறாத குறைதான். இப்படியே பத்து நாட்கள் செல்ல, பாண்டியனும் லீவ் முடிந்து சேலம் வர, அவர் கூடவே அவளது அப்பத்தாவும், அப்புச்சியும் வந்துவிட்டனர்.

தாத்தாவைப் பார்த்ததும், ஓடிப் போய் கட்டிக் கொண்டவள், அப்பத்தாவைப் பார்த்து முகத்தைத் திருப்ப, யாரும் எதிர்பார்க்காத விதமாக “ஓவென்று” தன் ஒப்பாரியை ஆரம்பித்துவிட்டார் குருவம்மா.
 
  • Haha
Reactions: CRVS2797

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
39
7
8
Ullagaram
அய்யோ..! ஆரம்பிச்சிட்டாங்கய்யா...
ஆரம்பிச்சிட்டாங்க.. திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க. நம்மளாலேயே
முடியலை, இதுல ஆதி ரொம்பவே பாவம் தான். ஆதி உனக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா....? நல்லா யோசிச்சுக்க.
😃😃😃
CRVS (or) CRVS 2797