• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 33

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 33

அந்த பெரிய ஜவுளிக்கடையில் பட்டுப் புடவைப் பிரிவில் நின்றிருந்தனர் கீர்த்தி குடும்பமும், ராம் குடும்பமும்.

ராம் மட்டும் ஆஃபிஸ் சென்றுவிட்டு கொஞ்சம் தாமதமாய் வருவதாய் சொல்லி இருந்தான்.

"ம்மா! இதெல்லாம் டூ மச்! அண்ணி தான் கல்யாணப் பொண்ணு.. அவங்க தானே சாரீ செலக்ட் பண்ணனும்? நீங்களும் மாமியார் கெத்தை காட்றிங்களா?"

கீர்த்திக்கு ஒவ்வொரு புடவையாய் வைத்துப் பார்த்து சித்ரா எடுத்துக் கொண்டிருக்க, லதா தான் கேட்டது.

"இதுல என்னடி கெத்து காட்டுறது? என் மருமகளுக்கு நான் எடுக்குறேன்.. உனக்கென்ன வந்தது?" என்று சித்ரா பதிலுக்கு கேட்க,

"அண்ணி! அம்மா இப்படி தான்.. என்னையவே எடுக்க விடமாட்டாங்க அவங்களே செலேக்ட் பண்ணிடுவாங்க.. நீங்க இப்பவே கண்டிஷனா சொல்லிட்டா தான்.. இல்லைனா நீங்க விரும்பினது கிடைக்குறது டவுட் தான்" என்று லதா கீர்த்தியிடம் கூற,

"நான் விரும்பினது இது தான் லதா.. எனக்குன்னு இதுவரை யாருமே இப்படி பார்த்து பார்த்து செலக்ட் பண்ணினது இல்ல.. இப்ப வரை தீபாவளி, பொங்கலுக்கு அத்தை எடுத்து தர்றது தான் எனக்கு ஸ்பெஷல்.. இனி எப்பவும் அத்தை தான் எனக்கு செலக்ட் பண்ணனும்" கீர்த்தி கூற,

"போச்சு டா! ஒரே பால்ல சிக்ஸர் அடிச்சுட்டா.. அம்மா இனி கிளீன் போல்டு.. எவ்வளவு பெரிய ஐசு?" கண்ணன் கிண்டல் செய்ய,

"சொல்லிட்ட இல்ல கீர்த்தி! இனி பாரு உன் அத்தை கால் தரையிலேயே இருக்காது" என்றார் தங்கராஜும் சிரிப்புடன்.

"போதும் போதும்! ரொம்ப பேசாதீங்க.. நீங்களே கண்ணு வச்சுடுவீங்களே? அதுங்களுக்கு எல்லாம் பொறாமை கீர்த்தி.." என்ற சித்ராவிற்கு எதுவுமே திருப்தியாய் அமையவில்லை.

"ம்மா! எனக்கும் அண்ணிக்கு மாதிரி தான் சாரீ வேணும்" லதா கூற,

"அவங்கவங்க கல்யாணத்துக்கு என்ன கேட்குறீங்களோ அது உண்டு.. இப்ப கீர்த்திக்கு தனி தான்.. உனக்கும் அப்புக்கும் வேற தான்" சித்ரா முடிவாய் சொல்லிவிட, ஒரே மாதிரியான புடவை நண்பர்கள் இருவருக்கும் அமையப்போவதில் அமைதியாகினர்.

"ப்ச்! சித்ரா உனக்கு திருப்தி ஆகலைனா முதல்ல லதாக்கும் அப்புக்கும் பாரு.. அப்புறமா மறுபடி வந்து கீர்த்திக்கு பார்க்கலாம்" ஜெகன் கூற,

"ஆமா மா! எனக்கும் கூட போர் ஆகிடுச்சு.. நானும் அப்பா, மாமாவும் எங்களுக்கு பாக்குறோம்.. நீங்க பாருங்க" என்று கண்ணனும் கூற, அரைமனதாய் சரி என்றார் சித்ராவும்.

நிச்சயதார்த்தம் நல்லபடியாய் நடந்தேறி இருக்க, ராம் கீர்த்தி உறவிலும் முன்னேற்றம் கூடியிருக்க, அடுத்த முப்பது நாட்களில் திருமணம் என பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

முதல் வேளையாய் பத்திரிக்கை பொறுப்பினை ஜெகனுடன் தங்கராஜும் எடுத்துக் கொள்ள, இந்த மண்டபத்தில் தான் திருமணம் என முடிவு செய்தது கண்ணன்.

புடவை, நகை என பெண்களுக்கு தேவையானதை கையில் எடுத்துக் கொண்டிருந்தார் சித்ரா.

பத்திரிக்கை அச்சடிக்க ராமுடன் கண்ணனும் சென்று அந்த வேலையை முடித்திருக்க, கண்ணன் முன்பணம் கொடுத்து மண்டபத்தை பேசி முடித்திருந்தான்.

துணி எடுக்க அனைவரும் வர வேண்டும் என கட்டளையே போட்டிருந்தார் சித்ரா. அதன்படி தான் அனைவரும் வந்திருந்தது.

கீர்த்தியின் கண்கள் நிமிடத்திற்கு ஒரு முறை என வாசலை தொட்டு வர, கண்ணன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

"யாரை தேடுறீங்க?" என்று கீர்த்தி பக்கம் வந்த கண்ணன்,

"அண்ணா வரலைனு எனக்கு தகவல் சொல்லியாச்சு" என்றும் கூற,

"ஃபைவ் மினிட்ஸ் கீர்த்தி.. ஆன் தி வே" என சில நொடிகளுக்கு முன் ராம் அனுப்பிய செய்தியை காண்பித்து முறைத்தாள் கீர்த்தி.

"ஓஹ்! அந்த அளவுக்கு ஆயாச்சா?" என்று வாங்கிய பல்பினை விழுங்கிக் கொண்டான்.

"போ! போய் வேலையைப் பாரு" என்றவள் பார்வை மீண்டும் வாசல் பக்கம் வந்த போது, அம்சமாய் அதே சமயம் கீர்த்தி மயங்கும் அந்த புன்னகையுமாய் வந்து கொண்டிருந்தான் ராம்.

"சுத்தம்! இனி எங்க நான் உன் கண்ணுக்கு தெரியுவேன்?" என்றவன் தந்தையுடன் இணைந்து கொள்ள செல்ல, நேராய் கீர்த்தி அருகில் வந்து நின்றான் ராம்.

"நேரம் ஆகிடுச்சா?" என்றும் அவளிடமே கேட்க, இல்லை என்று கண்களை சிமிட்டினாள்.

"ண்ணா! வந்திட்டீங்களா?" என்ற லதாவின் கேள்வியில் அனைவரும் இவர்கள்புறம் திரும்பினர்.

"முடிஞ்சதா ம்மா?" ராம் கேட்க,

"எங்கே டா? லதா அப்புக்கு எடுத்தாச்சு.. எனக்கும் கூட இது ஓகே" என்று ஒன்றை காண்பித்தவர்,

"கீர்த்திக்கு தான் எதுவும் செட் ஆகல" என்றார்.

அப்படியா? என கீர்த்தியைப் பார்த்தவன், அங்கே இருந்த புடவைகளை ஆராய்ந்தான்.

"அந்த பிங்க் எடுங்க" என்ற ராம், அந்த புடவை கைக்கு வரவும் அவனே வாங்கி கீர்த்தியின் தோள்களில் போட்டுப் பார்க்க, லதா அப்புவுடன் தங்கராஜ், கண்ணனும் வாய் திறந்து பார்த்திருந்தனர்.

"ராம்! எல்லாரும் பாக்குறாங்க" என்ற கீர்த்தியின் முகம் முழுக்க நாணம் பூத்திருக்க, சட்டென நியாபகம் வந்தவனாய் திரும்பி அனைவரையும் பார்த்தபோது சித்ரா வாயினில் கைவைத்து நின்றார்.

அதில் தலை கோதி சிரித்தவன் "இது ஓகே ம்மா" என்றும் கூறிவிட, அவ்வளவு தான் அங்கே எல்லை இல்லாமல் கிண்டல் தொடர்ந்தது.

இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட ராம் தன்னை அனைவரும் பார்க்கும்படி செய்திருக்க, கீர்த்தி நினைத்ததற்கும் மேலாக அவளைத் தாங்கிக் கொண்டிருந்தான்.

"இன் அப்ஸ்டர்ஸ்" என ராம் அனுப்பி இருக்க, அபர்ணாவிடம் சொல்லிக்கொண்டு அந்த இரவில் மாடிக்கு வந்தாள் கீர்த்தி.

இதுவும் இப்போது அவ்வபோது நிகழ்வது தான். இடையில் ஒரிரண்டு நாட்கள் இவர்கள் இருக்கும் நேரம் கண்ணன் தற்செயலாய் மாடிக்கு வர, இருவரையும் பார்த்தவன்,

"இது வேற நடக்குதா? ண்ணா! உன்னை எல்லாம் சாமியார் தான்னு நினச்சேன்... ம்ம்ம்ம் நீ கலக்குற மேன்!" என்று கூறினாலும் அவர்களின் தனிமையை தொந்தரவு செய்யாமல் கிளம்பிவிடுவான்.

கீர்த்தி வந்து சில நிமிடங்கள் கழித்தும் ராம் அமைதியாய் நின்றிருக்க, கீர்த்தி தானே அவனருகில் சென்று நின்றாள்.

"என்னாச்சு? எதுவோ போல இருக்கீங்க?" என்று கேட்க, அவள் பார்வை முழுதும் எப்பொழுதும் போலவே அவன் முகத்திலும் புன்னகையிலுமே!

"நிஷாவைப் பார்த்தேன் கீர்த்தி" என்றான். கூறியவன் அவளையே பார்த்து நிற்க, புரியாமல் பார்த்து நின்றாள் கீர்த்தி.

"ஹ்ம்ம் நாட் பேட்! நான் கூட எங்கே என்னை சந்தேகப்பட்டு திரும்ப முறைக்க ஆரம்பிச்சிடுவியோனு நினச்சேன்" என்றவன் மிதமாய் சிரித்து வைக்க, அப்போது தான் தெளிவானாள் கீர்த்தி.

ராம் நினைத்தது போல கீர்த்தி கலங்கினாள் தான். ஆனால் அது ராமை தவறாக நினைத்து இல்லாமல் இப்போது என்ன பிரச்சனையோ என்பது போல தான் கலங்கினாள்.

"என்னாச்சு? எதாவது ப்ரோப்லேமா?" கீர்த்தி கேட்க,

"இப்ப ஏன் உன் வாய்ஸ் உள்ளே போகுது?" ராம் கேட்க,

"இனி ப்ரோப்லேம் எதுவும் வராதுனு நினச்சேன்.. ஆனா அந்த பொண்ணு..?" என கேள்வியுடன் நிறுத்த,

"ப்ரோப்லேம் எதுவுமே இல்லை டியர்.. நான் தான் வர சொன்னேன்" என்றவன் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்தபடி நின்றான்..

"நீங்களா?"

"ஹ்ம்ம்! அன்னைக்கு ஒரு கோபத்துல எப்படியோ போகட்டும்னு விட்டுட்டேன்.. இப்ப யோசிச்சு பார்த்தா அது தப்புன்னு தோணுச்சு.. அதான் ஒரு சிறப்பான காரியம் செஞ்சுட்டு வந்தேன்" கீர்த்தியின் கைகளுடன் விளையாடியபடியே ராம் கூற,

"அப்படி என்ன பண்ணீங்க?" என்றவள் அவன் பேசும் தொணியில் இருந்து எதுவும் தீமை இல்லை என்பதையும் ஏதோ நல்லது தான் செய்திருக்கிறான் என்பதையும் கண்டு கொண்டிருந்தாள்.

அதில் தெளிந்தவள் மீண்டுமாய் அவன் முகத்தினில் பார்வையை விட,

"வேற என்ன? நிஷா அண்ட் ஹெர் ஹஸ்பண்ட் ரெண்டு பேருக்கும் ப்ரோப்லேம் சால்வ் ஆகலைனு கண்ணா சொன்னான்.. அதான் சின்னதா ஒரு ஐடியா கொடுத்துட்டு வந்தேன்.. கண்டிப்பா ஒர்கவுட் ஆகும்" என்று கூற, என்ன ஐடியா என்று கேட்க தோன்றவில்லை கீர்த்திக்கு.

மாற்றாக அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

"ஓய்! என்ன?" அவள் பார்வை உள்ளுக்குள் ஒருவித அவஸ்தையை அவனுள் கொண்டு வர, பின்னந்தலையை கைகளைக் கோதியவன் மனதையும் சமன்செய்து கேட்டான்.

"நீங்க ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொன்னதா தான் கண்ணா சொன்னான்.. ஏன் அவனுமே அந்த பொண்ணுக்கு நாம ஏன் ஹெல்ப் பண்ணனும்னு தான் கேட்டேன்.. அப்புறம் எப்படி?" என்று புரியாமல் கேட்க, இன்னும் அவனுள் இருந்த அவஸ்தை விலகவில்லை. ஆனால் அதற்கான காரணம் இப்போது தான் அவனுக்கு புரிந்தது.

"அதான் சொன்னேனே! அன்னைக்கு கோபம்.. ஆனா இப்ப யோசிச்சு பாரேன்! அதெல்லாம் நடக்கலைனா இதெல்லாம் நடந்திருக்குமா?" என்றவன் கைகளில் இவள் கைகளை காண்பிக்க, அப்போது தான் அதை உணர்ந்தவளும் கண்களை விரித்து கைகளை விடுவிக்கப் பார்த்தாள்.

'என்னவாகியிருக்குமோ!' என்ற எண்ணத்தில் இருந்தவள் கைகளை அவன் சிறை எடுத்ததை இவள் அறியவில்லை போலும்.

இப்போது சட்டென உருவிக் கொள்ள அவள் பார்க்க, அதை அறிந்ததை போலவே இறுக்கமாய் பிடித்திருந்தான்.

"ராம்!" என்றவளுக்கு குரல் வெளிவந்ததா என்பதே சந்தேகம் தான்.

"கீர்த்தி! இப்ப கொஞ்ச நாளா எனக்கு ஒரு சந்தேகம்" என்று ராம் கூறவும்,

"கையை விட்டுட்டு பேசுங்களேன்!" என்றவளை,

"கையை விடமாட்டேன்னு சத்தியம் பண்ணி கொஞ்ச நாள் தான் ஆச்சு.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்று வேறு கூறி வைக்க, அதன்பின் பேச்சே எழவில்லை அவளுக்கு.

"நான் டவுட்னு சொன்னேன்" மீண்டும் அவன் கூற,

"கேட்கலைனா விடவா போறீங்க? அநியாயம் பண்றிங்க.. இதெல்லாம் சொன்னா யாரும் நம்பக் கூட மாட்டாங்க" என்றாள் கீர்த்தி.

"அதெல்லாம் இப்ப நம்புவாங்க" என்றவன் கண்களும் சிரிக்க, அதைக் கண்டவள்,

"ஆமாமா! அதான் சாரீ செலக்ட் பண்ணும் போதே பார்த்தேனே!" என்று முணுமுணுக்க, சரியாய் அவன் காதிலும் விழுந்திருந்தது அந்த வார்த்தைகள்.

"இது தான் கீர்த்தி நான் எதிர்பார்த்த லைஃப்.. அது இவ்வளவு பக்கம் இருந்தும் நான் ஏன் தூரமா போனேன்னு எனக்கே தெரியல.." மென்மையாய் கனிந்து வந்தது அவன் குரல்.

"ஆரம்பிச்சுட்டீங்களா?" முதல் நாள் இரவில் மாடியில் அவளிடம் பேச ஆரம்பித்தது முதல் இன்று வரையுமே ஏதோ ஒரு தருணத்தில் இப்படி, தான் இருந்ததை நினைத்து ஒருமுறையாவது புலம்புவது வழக்கமாய் போது ராமிற்கு.

"சரி சொல்லுங்க உங்களுக்கு என்ன டவுட்?" என்று பேச்சை அவள் மாற்றிட,

"நீ என்னை விரும்புற ரைட்?" என்றான் சட்டென்று.. அந்த நொடி ஒரே நொடியில் அவள் இருதயம் நின்று துடிப்பதை போலவே உணர்ந்தாள் கீர்த்தி.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
காதலை தான் உணர்ந்த பின் தான்
கீர்த்தியின் காதல்
கண்ணுக்கு தெரியுது போல ராம்....
கண்டுபிடிச்சுட்டியா... 🤩🤩🤩💕💕💕
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
காதலை தான் உணர்ந்த பின் தான்
கீர்த்தியின் காதல்
கண்ணுக்கு தெரியுது போல ராம்....
கண்டுபிடிச்சுட்டியா... 🤩🤩🤩💕💕💕
Athe dha