அத்தியாயம் 5
ஞாயிறு காலை நிஷாவைப் பார்க்க கிளம்பிச் சென்று காத்திருந்தான்.
அரைமணி நேரம் கழித்து வந்தவள் எதுவும் பேசாமல் அவனருகில் அமர்ந்திருக்க இவளும் எதுவும் பேசிடவில்லை.
“நிஷா! உனக்கு என்ன தான் பிரச்சனை?” எடுத்ததும் இப்படி தான் கேட்டான் ராம்.
“ஏன் ராம்?”
“இப்ப கொஞ்ச நாளா என்னவோ போல இருக்குற.. சம்திங் ஆனா எனக்கு சொல்ல தெரியல.. “
“எனக்கும் கூட சொல்ல முடியல.. சொல்லிட்டா..”
“சொல்லிட்டா?”
“வேண்டாம் ராம்.. நானே சொல்றேன். ப்ளீஸ் இப்ப என்னை எதுவும் கேட்காதே”
“நீ பண்ற எதுவும் சரியில்லைனு தோணுது.. உனக்கு எதுவும் பிரச்சனைனா சொல்லு.. நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுவேன்ல”
“உன்னால முடியும் நினச்சு தான்... இல்ல ஒன்னும் இல்ல.. நான் பொங்கல் லீவ்க்கு நேட்டிவ் போறேன்.. அதை சொல்ல தான் கூப்பிட்டேன்.. வர ஒன் வீக் ஆகும்”
“ஓஹ்! நேட்டிவ் எங்கே?” ராம் அவளைப் பற்றி அறிய முயல, சரியாய் அவள் மொபைல் ஒலித்து தடுத்தது.
“சரி ராம்.. நான் கிளம்புறேன்.. போய்ட்டு வந்து கால் பண்றேன்” என்றவள் எழுந்து கொள்ள “ம்ம்” என்றவன் அவள் முகம் பார்க்கவில்லை.
அவள் சென்ற நீண்ட நேரத்திற்கு பின்பும் அந்த பீச்சிலேயே அமர்ந்திருந்தான். எவ்வளவு யோசித்தும் விடைக்கு தேவையான சிறு துரும்பும் கிடைக்கவில்லை.
“அப்பு! அப்பு!” அபர்ணாவை தேடி மேலே ராம் வீட்டிற்கு வந்திருந்தாள் கீர்த்தி.
“வா கீர்த்தி! லதா ரூம்ல தான் அப்பு இருக்கிறா..” சித்ரா சொல்ல,
“சரி அத்தை! அப்பா இன்னும் வர்ல.. அதான் போன் பண்ணினாங்களானு கேட்க வந்தேன்”
“சரி டா மா அவங்க வரட்டும்.. நீ இங்கே உட்காரு”
“இல்ல அத்தை நான்...”
“அட உட்காருன்றேன்.. என்ன யார் வீட்டுக்கோவா வந்திருக்க? நீ இங்கே வர்றதே எப்பவாச்சும் தான்.. இந்தா இதை சாப்பிடு” என அவள் முன் பணியாரத்தை வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தார்.
“இருக்கட்டும் அத்தை! ஆமா கண்ணா எங்கே? வீடே அமைதியா இருக்கு”
“கண்ணா யாரையோ பார்க்க போறேன்னு காலையிலே போய்ட்டான் மா.. வந்திடுவான்.. மாமா ரூம்ல இருக்காங்க.. ராம் அந்த நிஷாவை பார்க்க போறேன்னு போனான்.. அவனை நினச்சு தான் கவலையா இருக்கு” சித்ரா புலம்ப ஆரம்பிக்க ஏன் கேட்டோம் என்று ஆனது கீர்த்திக்கு.
“ஹாய் அண்ணி! என்ன இந்த பக்கம்?” லதா அறையில் இருந்து வந்தவள் வியப்பாய் கேட்டாள். உடன் அப்புவும் வெளிவந்தாள்.
மேல் வீடு என்ற போதும் அதிகம் இங்கே வந்ததில்லை கீர்த்தி. அதுவே லதா வியப்பிற்கு காரணம்.
“சும்மா தான் லதா.. அப்பு அவருக்கு கால் பண்ணியா?”
“பண்ணிட்டேன் க்கா! ட்யூஸ் டே மார்னிங் வந்திடுவாங்களாம்..”
“அன்னைக்கு தானே பொங்கல்.. அப்புறம் வந்து எதுக்கு.. நான் தான் கிளம்பும் போதே சொன்னேனே?” கீர்த்தி கோபமாய் சொல்ல,
“அதெல்லாம் பொங்கல் வைக்குறதுக்கு முன்னாடி மாமா வந்திடுவாங்க அண்ணி.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று கூறினாள் லதா.
“ஆமா டா! அண்ணா சொன்ன மாதிரி வந்திடுவாங்க நீ கவலைப்படாத” என்று சித்ராவும் சொல்ல, ஒன்றும் சொல்லாமல் அமைதியானாள் கீர்த்தி.
“சரி அத்தை! நான் கிளம்புறேன்” என்று கீர்த்தி எழுந்து கொள்ளவும் வந்து சேர்ந்தான் ராம்.
அவன் இவர்களை பார்த்தும் பேசாமல் அவனறைக்கு செல்ல கீர்த்தியும் கிளம்பிய நேரம் அவள் கைகளை பிடித்துக் கொண்டார் சித்ரா.
“ஆமா! உன்கிட்ட கண்ணனை பேச சொன்னேனே? அவன் சொன்னானா?” என கேட்க, ஒரு நொடி தயங்கியவள் ஆமாம் என தலையாட்டினாள்.
“உனக்கு அப்ப பார்க்கலாம் இல்ல?” சித்ரா கேட்க,
“அப்பா வரட்டும் அத்தை பேசிக்கலாம்” என்றவள் சென்றுவிட்டாள்.
“டேய்! ராம் காபி வேணுமா?” சித்ரா அவன் அறைக்கு சென்று கேட்டபோது கண்மூடி வந்த போது போட்டிருந்த சட்டையை கூட மாற்றாமல் படுத்திருந்தவன் அப்போது தான் கண் விழித்தான்.
“ராம்! என்ன டா ஆச்சு?” ராம் முகத்தில் இருந்த கவலைக் கோடுகளை கண்டுகொண்டார் அன்னை.
“ஒன்னும் இல்லை மா.. சும்மா தான்” என்றவன் எழுந்து அமர்ந்தான்.
“என்கிட்ட சொல்ல என்ன டா? என்னாச்சு சொல்லு.. உன் முகத்தை இப்படில்லாம் பார்த்துட்டு சும்மா எப்படி நான் போக முடியும்?”
என்ன சொன்னாலும் மகனாயிற்றே! அப்படி விட்டு விடுவாரா?
“ம்மா! என்ன சொல்றதுன்னு தெரில மா.. நிஷாக்கு என்கிட்ட சொல்ல முடியாத சம் ப்ரோப்லேம் போல..” ராம் சொல்ல,
“அப்படி என்ன டா ப்ரோப்லேம்?” என்றார் தெரிந்து கொள்ள,
“ப்ச்! அதான் மா தெரியல.. இதுக்கு நான் என்ன பண்ண முடியும்னும் தெரியல.. ரொம்ப குழப்பமா இருக்கு மா”
ராம் இப்படி இருந்ததே இல்லை எனலாம். கஷ்டம் என இதுவரை அவன் பார்த்ததில்லை என்றாலும் இப்படி அவன் முகம் இருந்ததில்லை.
கவலை இருக்கிறது தான்.. ஆனாலும் அதை தாண்டி அவன் முகத்தில் இருக்கும் குழப்பம் ஒரு மகிழ்ச்சியை தான் கொடுத்தது சித்ராவிற்கு.
ராம் தவறான பாதையில் செல்கிறான் என்பது தான் அவரின் எண்ணம். நிஷா அவனுக்கு சரியான தேர்வு அல்ல என்பதை அத்தனை நிச்சயமாய் நம்பினார்.
அதுவே இப்போது இவனுள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தின் முதல் படி என்று தோன்றியதால் வந்த சந்தோஷம் இது.
அதை உடனே முகத்தில் காட்டி ராமிடம் மாட்டிக் கொள்ள விருப்பம் இல்லை.
“என்ன குழப்பம் டா உனக்கு? அவளால முடியாதுன்னா உன்கிட்ட வருவா.. இதுக்காகவா இப்படி உட்கார்ந்திருக்க?”
“ப்ச்! எனக்கு ஒரு காபி கொண்டு வாங்கம்மா ப்ளீஸ்!” ராம் சொல்ல,
“சரி” என்று வெளியே வந்தவர் முகத்தில் ‘ஈஈஈ’ எனும் புன்னகை.
புன்னகையுடன் நின்றவரை வீட்டினுள் வந்த கண்ணன் கண்களை சுருக்கி பார்க்க, அவனை பார்த்ததும் சுதாரித்தார் சித்ரா.
“உனக்கு காபி வேணுமா டா?” என்றபடி கிட்சேன் செல்ல, பின்னோடே உள்ளே நுழைந்தான்.
“ஸ்ட்ரோங் காபி ப்ளீஸ்”
“ம்ம்”
“அப்பாக்கு இன்க்ரிமெண்ட் வந்துருச்சா?” கண்ணன் கேட்க,
“அதுக்கு இன்னும் நாலு மாசம் இருக்கே டா.. ஏன் கேட்குற?”
“அப்ப லதாக்கு ஏதாச்சும் வரன் வந்துச்சா?”
“என்ன டா திடிர்னு வந்து லூசு மாதிரி கேள்வி கேட்குற? அவ படிச்சுட்டு தானே இருக்கிறா?”
“இல்லையே நான் மார்னிங் கிளம்பும் போது உங்க முகத்துல இல்லாத ஒளிவட்டம் இப்ப தெரியுதே! ஏதோ நடந்திருக்கு..”
“டேய்! டேய்! நீ தான் டா என் அழகு மகன்.. அய்யோ! எப்படி டா இப்படி கண்டுபுடிச்ச? உன்னை நான் வக்கீலுக்கு படிக்க வச்சிருக்கணும்.. மிஸ் ஆகி போச்சு டா” கண்ணன் முகத்தை சித்ரா கைகளால் வழித்து எடுத்து தன் நெற்றியில் முட்டி திருஷ்டி எடுத்த போது சினிமாக்களில் அம்மா கேரக்டரில் வரும் சரண்யா போலவே காட்சி அளித்தார் கண்ணன் கண்களுக்கு.
“ம்மா! அப்படி என்ன நடந்துச்சுன்னு முதல்ல மேட்டரை சொல்லுங்க மா” கண்ணன் கேட்க,
“ஏன் டா அப்பாக்கு ப்ரோமோஷனா, தங்கச்சிக்கு வரன் வந்திருக்கான்னு கேட்டியே உன் அண்ணனை மறந்திட்டியே டா” பாவனை அள்ளியது சித்ரா முகத்தில்.
“ஓஹ் காட்! யூ மீன் உங்க மூத்த பையன் ராம்?”
“எஸ்!”
“ம்மா! கொஞ்ச நாளா அவன் பேச்சு ஓடினாலே உங்க முகம் எட்டூருக்கு முன்னாடி கோச்சிட்டு போகும்.. திடிர்னு என்ன ஆச்சு? நிஷாகூட பிரேக்அப் பண்ணிட்டானா?” அப்படி என்னவாய் இருக்கும் என விளையாட்டாய் தான் கேட்டான்.
“அதுக்கு இப்ப தான் டா உன் அண்ணன் யோசிக்க ஆரம்பிக்குறான்.. அப்படி மட்டும் நடந்து என் அண்ணன் மக கீர்த்தி மட்டும் இந்த வீட்டுக்கு மருமகளா வந்துட்டா... பழனி முருகா உன் கோவிலுக்கு நடந்தே வந்து... ஆஹான் இல்ல அது முடியாது கார்ல வந்து எனக்கு மொட்டை போட்டுக்குறேன்” இன்ஸ்டன்ட் வேண்டுதல் ஒன்றை முருகனுக்கு வைத்துவிட்டு கண்ணன் கையில் காபியை திணித்தவர் ராம் அறைக்கு காபியுடன் சென்றார்.
அன்னை சொல்லில் ‘சோ! பத்த வச்ச நெருப்பு சரியா தான் வேலை செய்யுதா?’ என தீவிர யோசனையுடன் நின்றுவிட்டான் கண்ணன்.
“எதுவும் நினைச்சிக்காம காபியை குடிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு டா.. நடக்கணும்னு இருக்குறது தானே நடக்கும்?” சித்ரா ராமிடம் சொல்லிச் சென்றார்.
ராம் இன்று நிஷாவை பார்க்க சென்றது அவள் பிரச்சனையை கேட்டுவிட்டு கண்ணனும் சித்ராவும் கூறியது போல இவர்கள் கல்யாணத்தையும் கீர்த்தி கல்யாணத்துடன் சேர்த்து செய்யலாமா என கேட்கத் தான்.
ஆனால் அதை கேட்கக் கூட நேரம் இல்லாமல் சென்று விட்டாள் நிஷா.
“ம்மா! இந்த கீர்த்திகிட்ட கல்யாணம் விஷயமா பேசுனீங்க?” கண்ணன் கேட்க,
“ஆமா டா காலையில வந்தா.. அப்ப கேட்டேன்.. அப்பா வரட்டும் பார்த்துக்கலாம்னு சொன்னா..ஆனா இனி கொஞ்ச நாள் இந்த பேச்சு வேணாம்.. முதல்ல என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” சித்ரா சொல்ல,
“ம்மா! என்ன நீங்க? விட்டா நீங்களே ராம் அண்ணா லவ்வை பிரிச்சு விட்டுடுவிங்க போல? அவங்களுக்குள்ள ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்.. அவ்வளவு தானே? இதெல்லாம் சாதாரணம்.. நாளைக்கே அம்மா ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே வச்சுக்கலாம்னு வந்து நிற்பான்.. அதுனால தான் சொல்றேன்.. ஓவரா கனவு காணாதீங்க.. கீர்த்திகிட்ட கூட எதுவும் சொல்லாதீங்க.. கல்யாணப் பேச்சு எடுத்தது எடுத்ததாவே இருக்கட்டும்” என்றவன் படிகளில் வேகமாய் இறங்கி கீர்த்தி வீட்டிற்கு செல்ல,
“இவன் ஒருத்தன் போதும்.. நல்லவன் மாதிரியே பேசுவான்.. திடிர்னு நம்ம லூசாக்கிட்டு போயிடுவான்.. எவனையும் நம்பக் கூடாது” சித்ரா தலையில் அடித்தபடி வேலைகளை தொடர்ந்தார்.
“ஹேய் குண்டு! கீர்த்தி எங்கே?” – கண்ணன்.
“எரும! குண்டு சொல்லாத..” லதா.
“சரி குண்டு! இப்ப சொல்லு கீர்த்தி எங்கே?”
“அண்ணி சமையல் பன்றாங்க..”
“நீ என்ன காவல் காக்குறியா? அப்பு எங்கே?”
“அப்பு புக்ஸ் எடுக்க ரூம்க்கு போயிருக்கா”
“ஹ்ம்ம்! ஸ்டடி புக்ஸ் தவிர எல்லா புக்ஸ்ஸும் படிப்பிங்க போல” சொல்லிக் கொண்டு சமையலறை சென்றான்.
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?
பாரதியின் பாடலோடு என்ட்ரி கொடுத்தவனை யார் என அறிந்து திரும்பி பார்க்கவில்லை கீர்த்தி.
“வந்துட்டியா? என்னை இம்சை பண்ணலைனா உனக்கு தூக்கமே வராதா?” – கீர்த்தி.
“வர மாட்டுதே! அதான் ஏன்னு எனக்கும் தெரியல..”
“வேற ஏன்? என் உயிரை வாங்க தான்”
“இப்ப ஏன் மூஞ்சி மூஞ்சா இல்லாம இருக்கு? எனி மூட்அவுட்?”
“நான் உன்கிட்ட சொன்னேனா மூட்அவுட்ல இருக்கேன்னு?”
“இதெல்லாம் சொல்லித் தெரியணும்னு இல்ல.. இப்ப கான்போர்ம் பண்றேன் பாரு!” என்றவன்,
“அப்பு! லதா!” என சத்தமாய் அழைக்க இருவரும் கிட்சேன் உள்ளே வந்தனர்.
“உங்க ரெண்டு பேரையும் கீர்த்தி இப்ப ஜஸ்ட் கொஞ்ச நேரம் முன்னாடி எதுக்காகவாச்சும் கடிக்குற மாதிரி எரிஞ்சு விழுந்துச்சா?”
“அக்கா! திட்டிட்டு அதை அத்தான்கிட்ட வேற சொல்லிட்டியா?” பாவமாய் கேட்டாள் அப்பு.
“ஏய்! உங்களை படிக்க தானே சொன்னேன்? ஓடுங்க.. இவனுக்கு தான் வேலை இல்ல.. உங்களுக்குமா?” கீர்த்தி அவர்களை விரட்ட,
“பார்த்தியா! செம்ம காண்டுல இருக்குற இல்ல?”
“விளையாடாத கண்ணா! ரொம்ப இரிடேட் ஆகுது”
“அதான் மேடம் ஏன்னு கேட்குறேன்? இப்ப என்ன பிரச்சனையாம் உனக்கு?”
“ஏன் உனக்கு தெரியாதா?”
“நீ ரொம்ப திங்க் பண்ற.. அதான் உன் ப்ரோப்லேமே! நீ பண்றது தப்புன்னு நான் அடிச்சு சொல்லுவேன்..”
“அது எனக்கும் தெரியுது.. ஆனா ஐ காண்ட்”
“தெரிஞ்சு பண்ணாலும் தப்பு தப்பு தானே?”
“என்னை என்ன கண்ணா பண்ண சொல்ற?”
“சிம்பிள் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு.. அது போதும்”
“சரி சொல்றேன்.. ஆனா ஒரு கண்டிஷன்”
“உனக்கு நான் ஆப்ஷன் கொடுக்கவே இல்லையே?”
“கொடுத்து தான் ஆகணும். எனக்கு சம்மதம்.. ஆனா முதல்ல ராம் கல்யாணம் நடக்கட்டும்.. அப்புறமா நான் பண்ணிக்குறேன்”
“ஹ்ம்ம்! ஓகே.. இனிமேல் உன்கிட்ட பேசி நோ யூஸ்.. ஆனா இதை ஏன் நீ அம்மாகிட்ட சொல்லல?”
“அத்தைகிட்ட என்னால எப்படி சொல்ல முடியும்? லூசு மாதிரி பேசாத கண்ணா.. உனக்கு என்ன! நான் கல்யாணம் பண்ணனும் அவ்வளவு தானே? பண்ணிக்குறேன் போதுமா.. ஆனா இப்போ இல்ல.. அவ்வளவு தான்” அவ்வளவு தான் என பேசியவள் சமையலில் ஈடுபட கவலை இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல்
“பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமாம்... கோபத்தை அங்கே காட்ட முடியலை... வந்துட்டாங்க! என்கிட்ட மட்டும்” என்றவன் அவள் கரண்டியை தூக்கவும் ஓடிவிட்டான்.
“அத்தான்!” வெளியே வந்தவனை அழைத்தாள் அப்பு.
“சொல்லு அப்பு!”
“என்னாச்சு அத்தான்? அக்கா ஏன் டென்ஷனா இருக்கு?”
“உன் அக்கா தானே? அவளுக்கு டென்ஷன் ஆக சொல்லியா கொடுக்கணும்?”
“கொஞ்ச நாளா இப்படி தான் இருக்கு அதான் கேட்டேன்”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல டா.. நீ ஏன் இதை எல்லாம் நினைச்சுட்டு இருக்குற? இதோ இருக்கா பாரு.. இடியே விழுந்தாலும் சிப்ஸ் மட்டும் போதும்னு சாப்பிட்டுகிட்டு.. அந்த மாதிரி இருக்கனும்.. சரியா..” என்றவன் அப்பு கல்லூரி முடிக்கும் வரை எந்தவித வழி மாறலும் இருக்க வேண்டாம் என முடிவெடுத்திருந்தான்.
“டேய்! மரியாதையா போய்டு!” லதா சொல்ல,
“பூசணிக்கா மாதிரி ஆனதே இதுனால தான்.. அவ கூட சேராத அப்பு “ என சொல்லி மேலே வந்தான் கண்ணன்.
“இங்கே என்ன பண்ற அண்ணா?” வாசலில் நின்ற ராமிடம் கேட்டான் கண்ணன்.
“சும்மா தான் டா.. நீ எங்கே போய்ட்டு வர்ற?” – ராம்
“நான் கீர்த்திகிட்ட மேரேஜ் விஷயமா பேசிட்டு வந்தேன்.. ஆமா நான் உன்கிட்டயும் சொன்னேனே? ரெண்டு மேரேஜ்ஜூம் ஒன்னா பண்ணலாம்னு.. நிஷாகிட்ட பேசினியா? என்ன சொன்னாங்க?” கொஞ்சம் கொஞ்சமாய் ராம் விஷயத்தை கேட்க ஆரம்பித்தான் கண்ணன்.
“இல்ல டா.. ஹாலிடேஸ்க்கு நேட்டிவ் போறா.. வந்ததும் பேசணும்”
“ஓஹ்! ஓகேண்ணா!” என்றவன் வீட்டினுள் செல்ல திரும்பிவிட்டு மீண்டும் ராமிடம் வந்தான்.
“ண்ணா! அவங்க நேட்டிவ் என்ன?” நிஜமாய் தெரிந்து கொள்ள கேட்டு அண்ணன் பார்த்த பார்வையில் அதன் அர்த்தம் புரிந்து இப்போது சங்கடமாய் போனது இருவருக்குமே!
“சாரிண்ணா!” என்றவன் உள்ளே திரும்பிவிட,
“கண்ணா!” என அழைத்தான் ராம்.
“சொல்லுண்ணா!”
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?”
“என்ன கேள்வி? சொல்லுண்ணா என்ன செய்யணும்?”
“இல்ல.. உன் பிரண்ட்டோட அண்ணா ஒருத்தர் அன்னைக்கு டிடெக்ட்டிவ்லேர்ந்து பார்ட்டிக்கு வந்தாரே! அவரை கொஞ்சம் இன்ட்ரோ பண்றியா?”
“அது ஓகே ண்ணா பண்ணிடலாம்.. ஆனா ஏண்ணா? ஏதாச்சும் பெரிய ப்ரோப்லேமா?”
“தெரில டா.. ஆனா தெரிஞ்சுக்கணும்னு இப்ப தோணுது.. இப்ப வேற எதுவும் கேட்காத! நாளைக்கு நீ பிரீயா?”
“ஹ்ம்ம் சரிண்ணா! நாளைக்கு என்ன ஷிப்ட் உனக்கு? அப்டேர்நுன் போலாமா?”
“ஓகே டா! பிரீ டைம் சொல்லு பார்க்கலாம்” என்ற ராம் அங்கேயே நின்றுவிட, கண்ணன் ஒரு தயக்கத்துடனே தான் உள்ளே சென்றான்.
கண்ணன் தெரிந்த வரையில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது நிஷாவிடம். அதை ராமும் இப்போது உணர ஆரம்பித்திருக்கிறான்.. ஆனால் அது ராமை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்கிற கவலை தம்பியாய் கண்ணனுக்கு.
“அப்பு! லஞ்ச் ரெடி பண்ணிட்டேன்.. பேக் பண்ணிக்கோ. எனக்கு இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும்.. அப்படியே அவருக்கு போன் பண்ணி நாளைக்கு வந்துடுவாரான்னு கன்ஃபார்ம் பண்ணிடு” தனது பேக்கில் அனைத்தையும் திணித்துக் கொண்டே கேட்ட கீர்த்தி அவசரமாய் வெளியே வர அப்போது தான் ராமும் பைக்கை உதைத்துக் கொண்டிருந்தான்.
கீர்த்தியை கண்டாலும் ராமின் கவனம் முழுக்க நிஷாவின் மேல் உள்ள பல கேள்விகளில் சிக்கி இருந்ததால் இவளை கண்டுகொள்ளாமல் கிளம்பிவிட,
அவன் முக மாற்றத்தை பார்த்தவாறே வண்டியை ஸ்டார்ட் செய்ய பட்டனை அழுத்தினாள். ஆனால் அது ஸ்டார்ட் ஆகத் தான் இல்லை.
“இந்த சாவி இருக்கு இல்ல சாவி.. அதை போட்டு ஆன் பண்ணினா தான் எந்த வண்டியா இருந்தாலும் ஸ்டார்ட் ஆகும்” என வந்து நின்றான் கண்ணன்.
தொடரும்..