அத்தியாயம் 6
“போயும் போயும் உன் கண்ணுல மாட்டுவேனா?” கீர்த்தி சொல்ல,
“அப்படி என்ன ஓடுது மண்டைக்குள்ள? சாவியே போடாமல் வண்டியை டார்ச்சர் பண்ற?” என்றான் கண்ணன்.
“அதெல்லாம் ஒன்னும் ஓடல.. எனக்கு டைம் ஆச்சு வழியை விடு”
“ம்ம் சந்தோசமா போயிட்டு வாங்க.. ஆனா இப்படி சாவி போடாமல் ஸ்டார்ட் பண்ணின மாதிரி அவுட் ஆப் மூடோட எங்கயாச்சும் முட்டிட்டு நிக்காத.. புரியுதா?”
“ப்ச்! போடா” என்றவள் வண்டியை ஒரு அடி நகர்த்திவிட்டு மீண்டும் நின்றாள்.
“இப்ப என்னவாம்?” கண்ணன் கேட்க,
“உன் அண்ணாக்கு எதுவும் பிரச்சனையா?” என்றாள் கீர்த்தி.
“ஏன்? ஆமான்னா நீ சால்வ் பண்ண போறியா?”
“உன்கிட்ட கேட்க கூடாதுன்னு நினச்சேன்.. ஆனாலும் கேட்டேன் பார்த்தியா? என் புத்திய....”
“ம்ம் கண்டிப்பா அடிச்சிக்கோ! அப்பவாச்சும் திருந்தறியா பார்ப்போம்”
“லூசு லூசு! தெரியாட்டி தெரியாதுன்னு சொல்லு”
“ஆனா உன்னை எல்லாம் திருத்தவே முடியாது கீர்த்தி.. எவன் எப்படி வேணா போகட்டும் உன் வேலையை பாருன்னு அவ்வளவு முறை சொல்லியும்.. அதுவும் என்கிட்டயே வந்து கேட்குற பார்த்தியா? உன்னை எல்லாம் எத கொண்டு அடிக்குறதுன்னு சத்தியமா தெரியல..”
“வேற என்ன பண்றது...அடிச்சாலும் அசிங்கமா திட்டினாலும் உன்னை விட்டு எங்கே போக.. சரி சொல்லு என்ன பிரச்சனை? ஏன் உர்ருன்னு போறாரு”
“அடங்கவே மாட்டியா டி.. சரி போ எனக்கென்ன வந்துச்சு.. உனக்கு தானே டென்ஷன்.. அவன் லவ்வு கூட சின்ன சண்டையாம்.. சொல்ல முடியாது செல்ல சண்டையா கூட இருக்கலாம்.. அதான் நேத்துல இருந்து டல்லா இருக்கான்”
“ஏதாச்சும் நல்ல நியூஸ் சொல்றியா.. உன் மூஞ்சில முழிச்சுட்டு போறேன்.. வேலை உருப்பட்டுடும்.. மூஞ்சியப் பாரு” ராம் மேல் உள்ள கோபத்தை அவனிடம் காட்டிட முடியாமல் கண்ணனை கடித்துவிட்டு கிளம்பினாள்.
“தெரியும் டி.. அவன் ஆளை பத்தி பேசுனா மட்டும் சுர்ருன்னு ஏறும்.. ஆனா அவன் கவலைப்பட கூடாது.. என்ன லவ்வோ!” சொல்லிக் கொண்டு உள்ளே சென்றான் கண்ணன்.
“ப்பா! பைக் சர்வீஸ்க்கு கொடுத்திருக்கேன்.. என்னை ட்ராப் பண்ணிடுங்க” கண்ணன் தங்கராஜிடம் சொல்ல,
“ராம் உன் ஆபீஸ் வழியா தானே போறான்? அவன் கூட போயிருக்க வேண்டியது தானே டா?” சித்ரா வந்து கேட்க,
“அவனவன் ஆயிரம் கவலையில போவான்.. எதுக்கு அவங்களை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு..”
“என்ன டா சொல்ற?” – தங்கராஜ்.
“அதெல்லாம் விடுங்க பா.. நான் நீங்க போற வழியிலேயே இறங்கிப்பேன்..ம்மா! லஞ்ச் வேணாம் மதியம் வந்துடுறேன்”
“அப்ப உனக்கு இன்னைக்கு லீவ்வா? எங்கே டா போற? சரி இல்லையே?” கண்களை சுருக்கி கண்ணனை நம்பாத பார்வை பார்த்து கேட்டார் சித்ரா.
“நம்ப வேண்டியவனை நம்புறது இல்ல.. நம்புறவன் நல்லவன் இல்ல.. சொன்னா யாருக்கு புரியுது?”
“ஏன் டா எப்ப பாரு லூசு மாதிரி புலம்பிட்டே இருக்க? உன் அம்மாவும் இப்படி தான்” தங்கராஜ் சொல்ல,
“இப்ப நீங்க அம்மாவை லூசுன்னு இன்டைரக்டா சொல்றிங்க.. ரைட்டா?” கண்ணன் அழகாய் கோர்த்து விட்டான்.
“அதானே! உன் அப்பாக்கு என்னை ஏதாவது சொல்லிட்டே இருக்கணும்.. வயசான பின்னாடி நான் லூசு மாதிரி தானே தெரிவேன்” சித்ரா சரியாய் ஆரம்பிக்க,
“ஆளை விடுங்க.. காலங்காத்தால உங்க புலம்பலை என்னால கேட்க முடியாது.. சீக்கிரம் வா டா” என்றவர் காரை எடுக்க ஓடிவிட, சிரித்துக் கொண்டே பின்னே சென்றான் கண்ணன்.
“என்ன டா ப்ரோப்லேம் ராம்க்கு?” கண்ணன் டிரைவ் செய்ய அருகில் தங்கராஜ் அமர்ந்திருந்தார். கேட்டை தாண்டியதும் கண்ணனிடம் அவர் கேட்ட முதல் கேள்வி இது தான்.
“ஹேய்! இதென்ன டா வம்பா போச்சு! ஆளாளுக்கு அவனுக்கு என்ன ப்ரோப்லேம்னு எங்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க?” கண்ணன் கேட்க,
“வேற யாரு டா கேட்டா? உன் அம்மாவா? அவளுக்கு தெரியக் கூடாது.. தெரிஞ்சா புலம்புவான்னு தான் உன்கிட்ட தனியா கேட்டேன்”
“அம்மா எல்லாம் ஒன்னும் கேட்கல.. அது வேற மேட்டர்.. சரி எனக்கு தெரியும்னு உங்களுக்கு யார் சொன்னா?” கண்ணன் மீண்டும் கேள்வியே கேட்க,
“உனக்கு தெரியாதுன்னு எனக்கும் தெரியும்.. ராம் தான் ரொம்ப அழுத்தம் புடிச்சவன் ஆச்சே! சித்து அவன் பேசினதை சொன்னா.. ரெண்டு நாளா அவன் ஆளே சரி இல்ல.. நேத்து நீயும் அவனும் வெளில பேசிட்டு இருந்திங்களே.. அதான் தம்பின்னு மதிச்சு உன்கிட்ட எதுவும் சொல்லி இருப்பானோன்னு ஒரு டவுட்ல கேட்டேன்” தங்கராஜ் தன் சந்தேகத்தை சொல்ல,
“ப்பா! வாட் அ டாடி.. பசங்கள பத்தி எவ்வளவு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க? ஆனா அதுல பாதி தான் சரி.. மீதி எனக்கு மட்டும் இல்ல உங்க மூத்த மகனுக்குமே எதுவும் தெரியாது”
“என்ன டா சொல்ற?”
“அவன் ஆளே சரி இல்லனு சொன்னிங்களே! அது தான்.. அவன் சரியா தான் இருந்தான். அவனோட ஆள் தான் சரி இல்லாம இருக்கு.. ஆனா ரீசன் தான் தெரியல.. அதான் கொஞ்சம் வெக்ஸ் ஆன மாதிரி சுத்துறான்..”
“நிஷாக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது? எதாவது பணப்பிரச்சனையா இருக்குமோ?”
“நீங்க ஏன் இப்ப இவ்வளவு யோசிக்குறீங்க? வேற வேலை இல்லையா? அவன் பிரச்சனையை அவன் பார்த்துப்பான்.. பெருசா எதுவும் இருக்காதுன்னு தான் நானும் நினைக்குறேன்.. அவனே சொல்லுவான்.. அது வரை அம்மாகிட்ட எதுவும் சொல்லிடாதீங்க” என்றவன் அவன் இறங்கும் இடம் வந்ததும் இறங்கிவிட்டு மீண்டும் தந்தையிடம் ஒரு முறை இதை பற்றி சிந்திக்காமல் இருக்கும்படி சொல்லிவிட்டே சென்றான்.
ராம் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் நிஷாவின் நம்பர் சுவிட்ச் ஆப் என்றே வர ஏற்கனவே இருந்த குழப்பம் தான் எனினும் புதிதாய் தான் இப்போதும் தோன்றியது அவனுக்கு.
இதை பற்றி தெரிந்து கொள்ளாமல் வேலையை பார்க்க முடியும் என்றும் தோன்றவில்லை. கண்ணன் மதியம் வர சொல்லியதால் வழி இன்றி காலை வேலைக்கு வந்தவனுக்கு வேலை தான் ஓடவில்லை.
இங்கே கண்ணனும் அண்ணனுக்கு முன்னதாய் வந்தவன் அதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டிருந்தான்.
தன் நண்பன் அசோக்கின் அண்ணனை அதாவது ராம் பார்க்க கேட்டிருந்த அந்த டிடெக்ட்டிவ்வில் வேலை பார்க்கும் நபரை தான் பார்க்க வந்திருந்தான் அண்ணனுக்கு தெரியாமல்.
“வா கண்ணா எப்படி இருக்க? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? ரொம்ப நாள் ஆச்சு பார்த்து.. அசோக் எல்லாரும் காண்டாக்ட்ல தானே இருக்கீங்க?” அசோக்கின் அண்ணன் தீபன் கேட்க,
“அதெல்லாம் எல்லாரும் சூப்பர்ணா! அசோக் தான் அமெரிக்கா போய்ட்டானே! இங்கே சுத்தினது போதாதுன்னு அங்கேயும் தெரு தெருவா நின்னு ஸ்டேட்டஸ் போடுறான்.. பேசிட்டு தான் இருக்கோம்” என்றான் கண்ணன்.
“உன் வாய் மட்டும் குறையவே இல்லை டா.. சொல்லு கண்ணா! ஏதோ இம்போர்ட்டண்ட்னு சொன்ன?” என நேரே விஷயத்துக்கு வந்தார் தீபன்.
“ஆமா அண்ணா! இதை சந்தேகம்னு சொல்றதா இல்ல ப்ரோப்லேம்னு சொல்றதானு எனக்கு தெரியல.. அதுனால தான் நேர்ல பார்த்து பேசலாம்னு வந்தேன்”
“அப்படி என்ன டா விஷயம்? சொல்லு என்னனு பார்க்கலாம்” தீபன் சொல்ல,
“எனக்கு இல்லண்ணா என்னோட அண்ணா ராம்க்கு தான்..” என்றவன் தனக்கு தெரிந்ததுடன் அண்ணன் கூறியதையும் சேர்த்து தீபனிடம் கூறினான்.
“அவங்க நேட்டிவ்லேர்ந்து அண்ணாக்கு எந்த விஷயமும் தெரியல.. இவங்க லவ்ன்றது ஜஸ்ட் தெரிஞ்ச ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டா லைஃப் ஸ்மூத்தா போகுமே அப்டின்ற கான்செப்ட் மாதிரி தான்.. சோ அண்ணா இது வரை எதையும் பெருசா எடுத்துக்கலை.. ஆனா இப்ப சிட்டுவேஷன் அப்படி இல்ல” – கண்ணன்.
“புரியுது டா.. அவங்க போட்டோ எதாவது இருக்கு?”
“ம்ம் இருக்கு.. அன்னைக்கு கோர்ட்ல பார்த்தேன்னு சொன்னேனே அப்ப எடுத்த பிக் இருக்கு.. யூஸ் ஆகும் நினச்சேன்..”
“குட்.. வேற என்னென்ன டீடெயில்ஸ் தெரியும்.. ஆர் உன் அண்ணாவும் அந்த பொண்ணும் எங்கே மீட் பண்ணிப்பாங்க எதாவது தெரியுமா?”
“ஆக்ட்சுல்லி அண்ணா இப்ப வந்துடுவாங்க.. நான் உங்ககிட்ட இவ்வளவும் சொன்னது அவனுக்கு தெரிய வேண்டாம்.. நான் இப்ப வந்தது ஏன்னா!... சப்போஸ் பெரிய ப்ரோப்லேம் அப்டின்னா ப்ளீஸ் முதல்ல அண்ணாக்கு சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னிங்கன்னா நான் கொஞ்சம் அண்ணாவை அலெர்ட் பண்ணிப்பேன்.. ரெண்டு நாளா அவன் ஃபேஸ் சரி இல்ல.. கொஞ்சம் பயம்னு கூட சொல்லலாம்.. ப்ளீஸ்ணா!”
“கண்ணா! உன்னை இன்னும் அதே விளையாட்டு பையன்னு நினச்சேன்.. வெரி குட்.. பேமிலியோட ரெஸ்பான்ஸ்ஸிபிலிட்டி நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்க.. கண்டிப்பா உன் அண்ணாகிட்ட பேசிட்டு நான் என்னனு பாக்குறேன்.. அண்ட் நீ சொன்ன மாதிரி பெரிய ப்ரோப்லேம்னா என்னால முடிஞ்ச ஹெல்ப் கண்டிப்பா பண்றேன் ஓகே!”
“தேங்க் யூ சோ மச் அண்ணா!”
“இட்ஸ் ஓகே டா” என்ற தீபன் நிஷாவின் புகைப்படத்தை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“கண்ணா! எங்கே இருக்க நீ? உன் ஆபீஸ்ல பிக்கப் பண்ணிக்கவா?” மொபைலில் அழைத்துக் கேட்டான் ராம்.
“ண்ணா! நான் வெளில இருக்கேன்.. தீபன் அண்ணா ஆபீஸ் தெரியும்ல? அங்கே வந்துடுங்க.. நானும் வந்துடுறேன்” தீபன் அருகே அமர்ந்து கொண்டே கூறினான் கண்ணன்.
“ஹ்ம்ம் சரி டா..” என்ற ராம் வைத்துவிட,
“ண்ணா! உங்களை நம்புறேன்.. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிடுங்க.. அண்ட் நான் உங்களை இன்ட்ரோ பண்ணிட்டு கிளம்பிடுறேன்.. நீங்க பேசுங்க..”
“பக்கா ப்ளனோட தான் வந்திருக்க நீ? சரி டா அப்படியே பண்ணிடலாம்.. நீ போய் அழைச்சுட்டு வா..”
“தேங்க்ஸ் அகைன் ண்ணா! நான் வர்றேன்” என்றவன் ஆபீஸ் வெளியே சென்று நின்றான்.
இருபது நிமிட முடிவில் தீபன் ஆபீஸ் முன் வந்து சேர்ந்தந்திருந்தான் ராம். கண்ணனும் அப்போது தான் வந்தவன் போல மொபைலில் யாரிடமோ பேசிக் கொண்டே அண்ணனைப் பார்த்து கையசைத்தான்.
“அப்பவே வந்துட்டியா டா?” – ராம்.
“இல்லண்ணா ஜஸ்ட் இப்ப தான்.. அப்புறம் அண்ணா! ஏனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு.. நான் தீபன் அண்ணாவை இன்ட்ரோ பண்ணிட்டு கிளம்புறேன்.. நீங்க பேசுங்க..” கண்ணன் சொல்ல,
ராமும் இதை எப்படி கண்ணனிடம் சொல்வது இல்லை கண்ணன் முன் எப்படி நிஷாவை பற்றி பேசுவது என தான் யோசித்துக் கொண்டிருந்தான். ஆதலால் கண்ணன் சொல்லவும்
“ஓகே கண்ணா! நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லி அவனுடன் உள்ளே நடந்தான்.
தொடரும்..