அத்தியாயம் 7
"ஹாய் கண்ணா! ஹாய் சார்! வாங்க! வாங்க! எப்படி இருக்கீங்க?" தீபன் ராமுடன் கண்ணனையும் வரவேற்க,
"ஹாய் ணா! நல்லாருக்கோம்" என்றபடி தீபன் முன் வந்து நின்றான்.
பரஸ்பர நல விசாரிப்புகள் முதலில் இருக்க, ராமிற்கு தயக்கமாய் இருந்தது.
"இவங்க என்னோட அண்ணா! பார்ட்டில பார்திருப்பிங்க.. நீங்க எங்களுக்காக ஒரு ஹெல்ப் பண்ணனும்" என்று கண்ணன் கேட்க,
"ராம் சாரை நியாபகம் இருக்கு கண்ணா! என்னனு சொல்லுங்க.. செஞ்சிடலாம்" என்று தீபன் கூற,
"ஓகே ண்ணா! எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு.. அண்ணாகிட்ட நீங்களே பேசிக்கோங்க.. நான் அப்புறமா கால் பண்றேன்" என்று கண்ணன் சொல்ல,
"ஓகே டா.. கால் யூ லேட்டர்!" என்று தீபன் சொல்ல, கண்ணனும் தலையசைத்து விடை கொடுத்தான்.
"ஸோ! சொல்லுங்க சார்.. உங்களுக்கு யாரை பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணணும்?" என விஷயத்திற்கு வந்தான் தீபன்.
இன்னும் தயங்கியபடி தான் அமர்ந்திருந்தான் ராம். அது தீபனின் கண்களிலும் தப்பவில்லை.
"ராம் சார்! இது என்னோட ஆபீஸ்.. இங்கே இருந்து ஒரு சின்ன தூசி கூட எங்களோட அனுமதி இல்லாமல் வெளியே போகாது.. நான் ஹன்ட்ரேட் பெர்ஸன்ட் கராண்ட்டி தர்றேன்.. ரிலேஷன், பிரண்ட்ஷிப்னு எல்லாம் எதையும் நான் என்னோட ஆஃபிஸியலோட என்னைக்கும் அட்டாச் பண்ணினது இல்ல.. நீங்க என்கிட்ட தாராளமா வந்த விஷயத்தை சொல்லலாம்.. முடிச்சி தர்றது தான் எங்க ட்யூட்டி" என்று கூற, ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டான் ராம்.
"தேங்க் யூ மிஸ்டர் தீபன்.." என்று ஆரம்பித்தவன் தனக்கு நிஷா பற்றி தெரிந்தவற்றைக் கூறி நிஷாவின் பெற்றோர் முதல் சில தகவல்கள் வேண்டும் என கேட்டுக் கொண்டான்.
"ஓகே சார்! மேடம் போட்டோ பிளஸ் அவங்களை உங்களுக்கு எப்படி தெரியும் எல்லாம் டீடெயில்லா சொன்னிங்கன்னா நாங்க ஃபர்தரா மூவ் பண்ணுவோம்.. உங்களுக்கு அவங்க யார்னு எங்களுக்கு தெரியணும் இல்லையா.. அதுக்காக தான் கேட்கிறோம்" என்று கூற,
நிஷாவின் பழக்கம் முதல் காதல் வரை என கூறி தற்போது ஏற்பட்ட சந்தேகம் வரை கேட்டு முடித்தான்.
"அண்ட் எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை முடிச்சி கொடுப்பிங்கனு நம்புறேன்" என்று ராம் சொல்ல,
"யாஹ்! சூர் சார்! வித்தின் டூ டேஸ்.. ஐ வில் கால் யூ" என்று கை கொடுக்க, ராமும் விடைபெற்றுக் கொண்டான்.
"அப்பு! அவருக்கு போன் பண்ணியா? எப்ப வர்றாராம்? நல்ல நேரதுக்குள்ள பொங்கல் வச்சுடனும்" மாலை வந்ததும் கீர்த்தி சொல்ல,
"அப்பாக்கு கால் பண்ணினேன் ரீச் ஆகல அக்கா.. இப்ப பண்ணி பாக்குறேன்" என்றவள் மறுபடியும் அழைக்க,
"சொல்லு அப்பு" என்றார் ஜெகன் எடுத்ததும்.
"ப்பா! அக்கா உங்களை கேட்டுட்டே இருக்காங்க..எப்ப வர்றிங்க?" என்றாள்.
"கிளம்பிட்டேன் மா.. காலையிலே வந்துடுவேன்.." என்றார் அவரும்.
"இதையே தான் நானும் அக்காகிட்ட சொல்றேன்.. நம்ப மாட்டுறாங்க" அபர்ணாவும் விடாமல் கேட்க,
"வந்துடுறேன் மா.. பொங்கல் வேற.. கூட்ட நெரிசல் அதிகமா தான் இருக்கும்.. சீக்கிரமா வர பாக்குறேன்னு அக்காகிட்ட சொல்லிடு.. அப்புறம் மாணிக்கம் பணம் கொண்டு வருவான்.." என்று சொல்ல,
"சரிப்பா அக்காகிட்ட சொல்லிடுறேன்" என்று வைத்தாள் அபர்ணா.
பேசாமல் இருந்தாலும் மகள் தன்னை தேடாமல் இருப்பதில்லை. அந்த மட்டும் அதீத நிம்மதி தான் ஜெகனுக்கு.
"அப்பா டிராபிக்னால லேட் ஆனாலும் ஆகும்னு சொல்றாங்க.. மாணிக்கம் அங்கிள் பணம் கொண்டு வருவாங்களாம்" என்று தமக்கையிடம் கூற,
"ஒரு நாள் முன்னாடி வந்தா தான் என்னவாம் அவருக்கு.. கடைசி நேரத்துல கிளம்ப வேண்டியது" என்று புலம்பிக் கொண்டே காபியைக் கலக்க,
"அக்கா! பஜார் போலாமா? ப்ளீஸ் க்கா!" என்று கேட்டாள் அபர்ணா.
"வேண்டாம் அப்பு இன்னொரு நாள் போகலாம்.. கூட்டம் அலைமோதும்" என்று கீர்த்தனா தவிர்க்க பார்க்க,
"அதனால தான்க்கா போலாம்னு கேட்குறேன்.. போலாமே! ப்ளீஸ்!" பாவமாய் மீண்டும் அபர்ணா கேட்க,
"சொன்னா கேட்க மாட்டியே! சரி கிளம்பு இப்பவே போனா கொஞ்சம் பரவாயில்லை.. சொன்னா உனக்கு புரியாது.. நேரமாச்சுன்னா வீட்டுக்கு வர பன்னிரண்டு மணி ஆகிடும்.." என்று சொல்லியபடி காபியை கொடுக்க, ஒரே வாயில் சூடு பறக்க வாயில் ஊற்றிக் கொண்டு தயாராகி வர ஓடினாள் அபர்ணா.
சிரித்தபடி தனக்கான காபியை கையில் எடுக்க "கீர்த்தி!" என்று வாசலில் சத்தம் கேட்க, கீர்த்தனா எட்டிப் பார்த்தாள்.
"வாங்க அத்தை!" என்றபடி தனக்கு எடுத்த காபியை கீழே வைத்தவள் சித்ராவிற்கு கலக்கினாள்.
"கீர்த்தி கடைத்தெருவுக்கு போறேன்.. எதாவது வாங்கணுமா? நாளைக்கு பொங்கல் வைக்கணும் தானே?" என்று சித்ரா கேட்க,
"வரும்போது எல்லாமே வாங்கிட்டு வந்துட்டேன் அத்தை.. அப்பு போயே ஆகணும்னு அடம் பண்ணுறா.. இப்ப தான் கிளம்பி வர்றேன்னு போனா" என்று சிரித்தபடி சொல்லியவள் காபியை நீட்டிட, வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வர, தன்னுடைய காபியுடன் வந்தாள் கீர்த்தனா.
"அது சரி! அப்பு குட்டி பாப்பா பார்த்தியா.. அதான் அடம் பண்ணுறா" என்று சொல்லி சிரிக்க, கீர்த்தனாவும் சேர்ந்து சிரித்தாள்.
"கீர்த்திம்மா!" என்றபடி வந்தார் மாணிக்கம்.
"வாங்க அங்கிள்! காபி சாப்பிடுறிங்களா?" என்று கீர்த்தனா கேட்க,
"மாணிக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க?" என்றார் சித்ரா.
"நல்லாருக்கேன் தாயி! இப்ப தான் சாப்பிட்டு வர்றேன்.. எதுவும் வேண்டாம்" என்றவர்,
"நேத்து கார் ஆந்திரா போச்சுல்ல? அந்த பணத்தை கொண்டு வந்தேன்" என்று மாணிக்கம் கொடுக்க,
அதை வாங்கி தன் அன்னையின் படத்தின் முன் வைத்தாள் கீர்த்தனா.
"பொங்கலுக்கு ஊருக்கு போகலையா அங்கிள்?" என்று கீர்த்தனா கேட்க,
"போய் என்ன பண்ண போறேன்த்தா? ஒரே புள்ள.. கல்யாணம் பண்ணினதும் என்னை வேண்டாத விருந்தாளியா நினைக்குறான்.. எதுக்கு அவனை தொல்லை பண்ணிக்கிட்டு.. இனிமேல் எனக்கு என்ன பொங்கல்?" என்று கேட்க வருத்தமாய் ஆனது கீர்த்தனாவிற்கு.
மாணிக்கம் சொந்த ஊர் சேலம். ஜெகனிடம் வேலை செய்கிறார். தனியாய் ஒரு அறை எடுத்து இங்கேயும் அருகில் தங்கி இருக்கிறார்.
மனைவி சில வருடங்கள் முன்னால் இறந்திருக்க, ஒரு மகன் இருந்தும் இல்லாத நிலை தான்.
"அங்கிள் காலைல பொங்கல் வச்சு சாமி கும்பிடுறோம்.. நீங்க இங்கேயும் வந்துடுங்க.. என்ன அத்தை?" என்று கீர்த்தனா கேட்க,
"நீ சொன்னா சரி தான் கீர்த்தி! நானும் இதையே தான் நினச்சேன்" என்றார் சித்ராவும்.
"பார்க்கலாம்மா.. முடிஞ்சா வர்றேன்" என்று மாணிக்கம் சொல்லிச் செல்ல,
"ம்மா போலாம்" என்று வந்து நின்றான் கண்ணன்.
"நீயும் போறியா கண்ணா?" கீர்த்தி கேட்க,
"நான் தான் மா கூப்பிட்டேன்.. பைக்ல போனா சீக்கிரம் வந்துடலாம் பாரு" என்று சித்ரா சொல்ல,
"ம்ம் நினைப்பு தான்.. வெளில இருக்குற நிலைமை தெரியாம கிளம்புறீங்க.. ரெண்டு மணிக்கு ஆபீஸ்லேர்ந்து கிளம்பி அஞ்சு மணிக்கு தான் வீட்டுக்கு வந்து சேர்ந்துருக்கேன்.. இப்ப போனா எவ்வளவு நேரம் ஆகுமோ" என்று கண்ணன் சலித்துக் கொள்ள,
"அதையே தான் கண்ணா நானும் சொல்றேன்.. அப்புவும் கேட்க மாட்டுறா" என்று கீர்த்தி சொல்லிக் கொண்டு இருக்க, தயாராகி வந்திருந்தாள் அபர்ணா.
"ஹேய் லூசு! அப்புக்கு தான் தெரில.. உனக்குமா தெரியாது? இப்ப என்ன அவசரம் வெளில போறதுக்கு?" என கீர்த்தனாவை கண்ணன் கேட்க,
"கண்ணாத்தான்! நான் தான் அக்காவை கம்பல் பண்ணினேன்.. எக்ஸாம் எக்ஸாம்னு வெளில போகவே இல்லையே.. நாளைக்கு பொங்கல்னா இன்னைக்கு கடைத்தெரு ஜோரா இருக்கும்ல? அதான் கூப்பிட்டேன்" என்று சொல்ல,
"விடு டா! ஆசை படுறா இல்ல? போய்ட்டு வரட்டும்.." என்ற சித்ரா,
"கீர்த்தி! பைக்ல போய்ட்டு வாங்க.. சீக்கிரம் வந்துடுங்க" என்று சொல்ல,
"சொன்னா கேட்க மாட்ட! போய் பாரு தெரியும்" என்றபடி கிளம்பினான் கண்ணன்.
சித்ரா வெளியே சென்றுவிட, அபர்ணா ஸ்கூட்டி கீயை எடுக்க செல்ல,
"கண்ணா?" என அழைத்தாள் கீர்த்தி.
"என்னா?" என்று அவன் அருகே வர,
"இல்ல.. அது.. ஹான் மாமா வந்துட்டாரா?" என்று கீர்த்தி கேட்க,
"பார்றா! மாமா மேல ஓவர் அக்கறை தான்.. வந்துட்டார்.. கூப்பிடவா?" என்றான் அவள் எதற்கு அழைத்திருப்பாள் என தெரிந்தே!
"இல்ல சும்மா தான் கேட்டேன்.. அப்புறம் ராம் வந்தாச்சா?" என்று கேட்க, பக்கத்தில் இருந்த சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது கண்ணனிற்கு.
"ஏன் டா முறைக்குற? என்ன கேட்டுட்டேன்? வந்தாச்சானு தானே கேட்டேன்? அதுவும் காலையில ரொம்ப டல்லா தெரிஞ்சனால தான் கேட்டேன்.." என்று கீர்த்தனா விளக்கம் கொடுக்க,
"அடங்கவே மாட்டியா கீர்த்தி? எவ்வளவு சொன்னாலும் நீ கேட்க மாட்டல்ல?" என்று கூறும் நேரம் அருகே வந்திருந்தாள் அபர்ணா.
"அத்தான்! அக்காவை ஏன் திட்டுறீங்க? நான் தான் சொன்னேனே? இல்லைனா நாங்க வீட்டுலயே இருக்கோம்" என்று அப்பாவியாய் அபர்ணா கூற,
"அக்காவை சொன்னா உனக்கு கோபம் வருதா? வரட்டும் வரட்டும்.. உன் அக்காக்கு புத்தி புல் மேய போய்கிட்டு இருக்கு.. எப்ப தான் தெளிய போகுதோ!" என்று சொல்ல, அபர்ணா பாவமாய் புரியாமல் நின்றாள் என்றாள் அப்பாவியாய் நடித்தபடி நின்றாள் கீர்த்தி.
"இதெல்லாம் எங்க திருந்த போகுது?" வெளிப்படையாய் சொல்லியவன் தலையில் அடித்துக் கொண்டு திரும்ப,
"நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வர்ல" என்று சத்தமாய் கூறினாள் கீர்த்தி.
"அப்பு! வெளில அம்மா நிக்கிறாங்க.. நீ போ நாங்க வர்றோம்" என்று கீர்த்தியை பார்த்தவாறு கண்ணன் சொல்ல,
"சரித்தான்" என்று கிளம்ப சென்றவளை வேகமாய் தடுத்த கீர்த்தி,
"வேணாம்! வேணாம்! நாம கிளம்பலாம் அப்பு" என்றபடி அபர்ணாவுடனே வெளியே வர,
"அந்த பயம் இருக்கட்டும்" என்றபடி வெளியே வந்தான் கண்ணன்.
"அக்கா! இருங்க லதாவை கூப்பிடுறேன்.." என்று அபர்ணா படியேற போக,
"அதுக்கு ஏன் மேல சுத்திகிட்டு கூப்பிட்டா வந்திட போறா" என்ற கண்ணன்,
"ஏய் குண்டு! வெளில வா" என்று சத்தமாய் அழைக்க,
"இவன் ஒருத்தன்.. எப்ப பாரு அவளை வம்புக்கு இழுக்குறது.." என்று சித்ரா மகனை சத்தம் போட,
"வீட்டுல எல்லாரும் வந்தாச்சா அத்தை?" என பொதுவாய் கேட்டாள் கீர்த்தி.
"உன் மாமா இப்ப தான் வந்தாங்க மா.. லதா டிவி தான் பார்த்துட்டு இருந்தா.. இந்த ராம் பையனுக்கு தான் இன்னைக்கும் நைட் ஷிப்ட் போட்டு விட்ருக்காங்க" என்று சித்ரா வெள்ளந்தியாய் அனைத்தையும் சொல்லிவிட,
கண்ணன் கீர்த்தனாவை முறைக்க, 'எப்பூடி!' என தன் ஷோல்டரைத் தூக்கினாள்.
வாய்க்குள் அவளை அவன் மெல்லுவது தெரிய, அதற்குள் லதாவும் வந்து சேர்ந்திருந்தாள்.
"தடிமாடு! எரும! ம்மா! பாருங்கம்மா! வீட்டுல கூப்பிட்டது பத்தாதுன்னு வெளில நின்னும் குண்டுன்னு கத்துறான்" என்று புகார் சொல்லி லதா இறங்க,
"பார்த்ததும் என்ன தெரியுதோ அதை தானே சொல்ல முடியும்?" கண்ணன் கேட்க,
"சும்மா இருங்க கண்ணாத்தான்.. லது! வர்றியா பஜார் போலாம்?" என்று அபர்ணா கேட்க,
உடனே தலையசைத்தவள் ரெடியாகிவிட,
"ட்ரிபில்ஸ்ஸா போறிங்க? டிராபிக் போலீஸ்கிட்ட இன்னைக்கு மாட்ட போறீங்க.. குண்டு உன் ஒருத்திக்கு தான் அந்த வண்டி சரியா இருக்கும்" என கிண்டல் செய்தபடி அன்னையுடன் கிளம்பினான் கண்ணன்.
"ரொம்ப தூரம் எல்லாம் போக முடியாது.. நம்ம ஆர்ச் வரை போய்ட்டு வரலாம்.. சரியா?" என்றபடி மூவரும் கிளம்பினர்.
தொடரும்..