அத்தியாயம் 8
"சொன்னேனே கேட்டியா அப்பு?" கீர்த்தி அபர்ணாவை திட்டிக் கொண்டே ஸ்கூட்டியை உதைக்க, அது ஸ்டார்ட் ஆவேனா என்றது.
ஆர்ச் அருகே வந்ததும் இன்னும் கொஞ்சம் தூரம் என்று சொல்லி சொல்லி தூரமாய் வந்து, சோளம், வெள்ளரி என வாங்கி சாப்பிட்டபடி லதாவும், அப்புவும் வர, கூட்டத்தை கண்டு கண்களை கட்டியது கீர்த்தனாவிற்கு.
இதில் வீடு திரும்பும் நேரம் வண்டியும் காலை வாரிவிட, இருந்த எரிச்சல் இன்னும் கூடிவிட்டது.
"ப்ச்! ஆர்ச் பக்கம்னா கூட தள்ளிட்டு போய்டலாம்.. ப்ளீஸ் ப்ளீஸ்னு சொல்லி ரெண்டு பேரும் எவ்வளவு தூரம் கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க?" என்றபடி நின்றவள் வேறு வழி இல்லாததால் வண்டியை தள்ள ஆரம்பித்தாள்.
அபர்ணா தவறு செய்தவளாய் பாவம் போல நிற்க, லதாவிற்கும் கவலையாய் ஆனது.
"சாரி அண்ணி! இப்படி ஆகும்னு நினைக்கல" லதா சொல்ல,
"சரி விடு! இப்படி தான் நடக்கணும்னு இருந்தா என்ன பண்ண முடியும்" என பேசியபடி தள்ளிக் கொண்டு வர, கூட்டத்தில் ஒரு ஹார்ன் சத்தம் மட்டும் தனியாய் கேட்டது கீர்த்தனாவிற்கு.
"உன் அண்ணா வர்ராரு போல லதா" என்று கீர்த்தி சொல்ல,
"அண்ணாவா?" என்று திரும்பி கூட்டத்தின் நடுவே பார்க்க, அங்கே ராமின் கார் இவர்களைப் பார்த்ததற்கு சாட்சியாய் ஓரமாய் மெதுவாய் சென்று நின்றது.
"எப்படி அண்ணி கண்டுபுடிச்சீங்க?" லதா கேட்க,
"அது.. தற்செயலா திரும்பும் போது பார்த்தேன்" என்றாள் சமாளிப்பாய்.
"பைக் என்னாச்சு?" தன் அருகே வந்தவர்களைப் பார்த்து இறங்கி ராம் கேட்க,
"தெரியல அத்தான்!" என்றவள் வந்த காரணத்தை சொல்ல,
"இதென்ன திருவிழா கூட்டமா? சுத்தி பாக்குறதுக்கு? உங்களுக்கு தான் தெரியல.. டெய்லியும் வண்டியில வர்றவங்களுக்குமா தெரியல?" என கீர்த்தனாவை அவன் குறை கூற,
"போச்சு டா! ஹரே ஹரே ராம் ஆரம்பிச்சுட்டார்" என்றாள் லதா அபர்ணாவிடம்.
"இவ்வளவு கூட்டத்துல என்னைக்கு நீங்க தள்ளிட்டு வீடு போய் சேர்றது?" என்றவன் யாருக்கோ அழைத்தான்.
பேசி முடித்துவிட்டு "வண்டி காலையில வீட்டுக்கு வந்துடும்.. வந்து கார்ல ஏறுங்க" என்றான் பொதுவாய்.
ராம் கீர்த்தி இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.
அவனே ஸ்கூட்டியை ஓரமாய் பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு வர, அதுவரையும் வெளியில் தான் நின்றிருந்தனர் மூவரும்.
"போலாம்" என்றவன் அருகே லதா அமர்ந்து கொள்ள பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள் அபர்ணா.
இன்னும் வண்டியில் ஏறாமல் நிற்கும் கீர்த்தனாவை அழைக்காமல் ராம் ஹார்னை அழுத்த, அபர்ணாவும் லதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"என்னவாம்?" ராம் கேட்டவுடன் அபர்ணா இறங்கி,
"அக்கா வா போகலாம்" என்று சொல்ல,
"நான் வர்ல அப்பு! நீ போ" என்றாள் அழுத்தமாய்.
அவ்வளவு தான்.. இவள் ஒன்றுமே இல்லை என்பதை போல பல மடங்கு கோபக்காரன் ராம். ஏற்கனவே நிஷாவைப் பற்றி மண்டைக்குள் ஓடிக் கொண்டு இருக்க, கீர்த்தியின் செயலில் கடுப்பாகிவிட்டான்.
"அப்பு! வண்டியில ஏறு" ராம் சொல்ல,
"அத்தான்! அக்கா வர..." என்று சொல்ல வர,
"நீ ஏறுன்னு சொன்னேன்" என்றதும் கீர்த்தியும் போ என்று சொல்ல, என்ன செய்வது என தெரியாமல் அபர்ணா காரில் ஏறவும் ஸ்டார்ட் செய்து வேகமாய் கூட்டத்தில் கலந்து சென்றுவிட்டான் ராம்.
கோபம் தான் கீர்த்திக்கு. அவன் என்றால் பிடிக்கும்.. காதலிக்கிறாள்.. இதெல்லாம் அவனுக்கு தெரியாமல் இருக்கலாம்.. புரியாமலும் போகலாம்.. மண்டபத்தில் இவள் நண்பர்கள் பேசுவதை கவனித்தான் தானே?
அக்கறையாய் கார்த்திக் யார் என்று விசாரித்தான் தானே? அதையெல்லாம் எந்த கணக்கில் எடுப்பது? எந்த நம்பிக்கையில் என் திருமணத்தைப் பற்றி இவன் பேச்செடுத்தான்?
இதெல்லாம் இவளுக்கு தேவை இல்லாத கோபம். காட்டிட முடியாத கோபத்தை இப்படி பேர் வைத்துக் காட்டிக் கொண்டிருக்கிறாள்.
அவனுக்கு புரியாது, புரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டான்.. நீ கோபம் கொண்டால் எனக்கு என்ன என்று தான் செல்வான் என தெரியும்.. ஆனாலும் முடியவில்லை.
கண்ணனிடம் அவனைப் பற்றி விசாரித்தாலும் அவனைப் பார்த்ததும் இந்த ஞாபகம் தான் முன் வந்து நின்று இவளை பிடிவாதம் பிடிக்க செய்தது.
மணி பத்தை தொட்டுக் கொண்டிருக்க, கூட்டம் அடங்கியபாடில்லை.
ராம் ஸ்கூட்டியை எங்கு விட்டானோ அங்கே அதற்கு அருகில் சென்று நின்று கொண்டாள். போகவும் தோன்றவில்லை.
வாசலில் ராம் காரை நிறுத்தவும் லதாவுடன் அபர்ணாவும் இறங்க, சித்ராவும் கண்ணனும் அப்போது தான் வந்து மேலே ஏறிக் கொண்டிருந்தனர்.
"என்ன டா லதா, அப்பு இவனோட வர்ராங்க?" சித்ரா கேட்க,
"தெரிலையே ம்மா! நீங்க கீழே இறங்க வேண்டாம்.. முட்டு வலிக்குதுன்னு சொல்லுவீங்க.. நான் போய் பாக்குறேன்" என கண்ணன் இறங்கி வர, லதா, அபர்ணா அவனருகே ஓடி வந்தனர்.
"என்னாச்சு? ஏன் கார்ல வர்றிங்க? கீர்த்தி எங்கே?" கண்ணன் கேட்க, நடந்ததை கூறினாள் லதா.
"இந்த ராம் அண்ணா எப்பவும் இப்படி தான்.." லதா சொல்ல,
"அக்காவும் கார்ல ஏறி இருக்கலாம் தானே லது?" என்றாள் அபர்ணா.
"சரி நான் போய் பார்த்து கீர்த்தியை கூட்டிட்டு வர்றேன்.. எந்த இடம்?" என்று கேட்டுக் கொண்ட கண்ணன் அவர்களைத் தாண்டி வர, காரை பார்க் செய்துவிட்டு இறங்கினான் ராம்.
"ஏன் ண்ணா?" கண்ணன் அயர்ச்சியாய் கேட்க,
"ஏன்னா? வராதவளை நான் என்ன செய்ய முடியும்?" என்றான் ராமும் சாதாரணமாய்.
"அம்மா வரலைனாலும் இப்படி தான் விட்டுட்டு வந்திருப்பியா?" கண்ணன் கேட்க,
"அம்மா கோபப்பட ரைட்ஸ் இருக்கு கண்ணா" என்றவன் நிற்காமல் செல்ல,
"ஷிட்!" என்றவன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
'யாராச்சும் ஒருத்தருக்கு அறிவிருக்கணும்.. ரெண்டும் ஒன்னு தானே! நீ வீட்டுக்கு வா டி உனக்கு இருக்கு'
கீர்த்தியைக் கண்ணால் காணும் வரை இப்படி தான் திட்டியபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் கண்ணன்.
லதா கூறிய இடம் வந்தது. வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தியவன் சுற்றிலும் தேட, கீர்த்தி கண்களில் மாட்டவே இல்லை.
கீர்த்திக்கு அழைத்த போதும் முழுதாய் அழைப்பு சென்று கட் ஆகியது. மீண்டும் அழைத்தபடி சுற்றிலும் பார்வையை ஓட்ட, சாலை ஓரமாய் வண்டியில் சாய்ந்து தலையில் கைவைத்தபடி குனிந்தவாறு நின்றிருந்தாள் கீர்த்தி.
கூட்டம் அதிகமாய் இருக்க வண்டியை சுற்றிக் கொண்டு அவளருகே வந்தான்.
வந்தவன் அதே வேகத்தில் இறங்கி அவளருகே சென்று "உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லையா கீர்த்தி?" என்று கேட்க, அவன் தான் என தெரிந்தது போல அமைதியாய் நிமிர்ந்து பார்த்தாள்.
கோபம் கொஞ்சமும் குறையவில்லை கண்ணனுக்கு. ஆனாலும் இடத்தை கருத்தில் கொண்டு அமைதியானான்.
"வந்து வண்டில ஏறு" கண்ணன் சொல்ல, அசையாமல் நின்றவளை கைப்பிடித்து இழுத்து வந்தான் அவன் வண்டி நின்ற பக்கம்.
பின்னும் அமைதியாய் அவள் அமர்ந்திருக்க, இவனும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
வீடு வந்து சேர்ந்த போது இவர்களுக்காக வாசலிலேயே நின்றிருந்தனர் சித்ரா, லதா, அபர்ணா மூவரும்.
"ம்மா! நான் மெக்கானிக் பார்த்து வண்டியையும் எடுத்துட்டு வந்துடுறேன்" என்று கண்ணன் அம்மாவிடம் சொல்ல,
"ராம் அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டானாம் டா" என்றார் சித்ரா.
"ஒன்னும் தேவை இல்ல.. மனுஷங்களுக்கு இல்லாத மதிப்பு இரும்புக்கு ஏன்?" என்றவன்,
"நைட் ஷிப்ட்னு சொன்னிங்க? இப்ப ஏன் வந்தானாம்?" பைக்கில் அமர்ந்தே கேட்க,
"திரும்ப போணுமாம் டா.." என்றவரை முறைத்துவிட்டு வந்த வேகத்திலேயே திரும்பி செல்ல,
சிறு புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது கீர்த்திக்கு. தனக்கு ஒன்று என்றால் உடனே வந்து நிற்பான் என தெரியும் கண்ணனை. ஆனாலும் அவன் அக்கறையை நினைத்து இப்போதும் மனது ஆறவில்லை.
"ஆளாளுக்கு கோபப்பட்டா நான் என்ன டா செய்வேன்?" என்றபடி கீர்த்தி பக்கம் திரும்பினார் சித்ரா.
"ஏன்டா! அவன் தான் புரியாமல் பன்றான்னா நீயுமா?" என்று அவர் கேட்க,
"சாரி அத்தை! ஏதோ ஒரு ஞாபகத்துல..." என்றவளை என்ன சொல்ல,
"சரி விடு! ஒரு ஆட்டோ புடிச்சி வந்துருக்கலாம்ல? கொஞ்சம் பயந்துட்டேன்" என்றவர் கூறிய பின் தான் தன் முட்டாள்தனம் புரிந்தது.
"இனி இப்படி பண்ண மாட்டேன் அத்தை!" என்று கீர்த்தி சொல்ல,
"இனி அக்கா கூட போனா அக்கா கூட தான் வரணும்.. புரியுதா அப்பு! அவன் சொன்னான்னு இப்படி வரக் கூடாது.. அக்கா தானே உன்னை பார்த்துக்குறா?" என்று கேட்க, சரி என தலையாட்டிக் கொண்டாள் அபர்ணா.
அபர்ணாவின் கண்களும் கலங்கி இருக்க, இப்போது தான் தன் தவறே எவ்வளவு பெரியது என புரிந்தது.
"சாரி க்கா! என்னால தான்.. இனிமேல் இப்படி பண்ணமாட்டேன்" என்று அபர்ணா சொல்ல,
"ப்ச்! என் மேல தான் தப்பு அப்பு! சரி விடு" என அவளைத் தேற்றினாள் கீர்த்தி.
"நீ அவளை உள்ள கூட்டிட்டு போ! நான் ரெண்டு பேருக்கும் தோசை குடுத்து விடுறேன்" என சித்ரா சொல்ல, கீர்த்தி மறுத்ததை அவர் காதில் வாங்கவே இல்லை.
"இனி இவனை வேற சமாதானம் பண்ணணுமே!" என கண்ணனை நினைத்தபடி அமர்ந்தாள் கீர்த்தி.
'இப்ப எதுக்கு டி இவ்வளவு சீன் கிரீயேட் பண்ணி வச்சுருக்க? உனக்கெல்லாம் என்ன அறிவு இருக்கு.. இனி ராம் இருக்குற பக்கமே திரும்பக் கூடாது.. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கனும்.. தெளிவா கண்ணன்கிட்ட சொல்லிடலாம்' கீர்த்தி தனக்குள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
லதா வந்து இரவு உணவைக் கொடுத்திருக்க, சாப்பிட்டு முடித்ததும் தூங்க சென்றுவிட்டாள் அபர்ணா.
கண்ணன் வரும்வரை ஒரு புத்தகத்துடன் வாசலில் கீர்த்தி அமர்ந்திருக்க, ராம் படிகளில் வேகமாய் இறங்கி வந்தவன் அவளைப் பார்த்ததும் வேகத்தைக் குறைத்தான்.
மதிய வேளையில் தீபனைப் பார்க்க சென்று வந்தது முதல் மனதில் சில எண்ணவோட்டங்கள். ஏமாந்த உணர்வு.
காதல் இதை அனுபவித்தது இல்லை என்றாலும் மனதில் ஆசைகள் இருந்தது உண்மை.
நிறைய பேசவும், அன்பில் உருகவும் வைக்கும் அளவுக்கு இருப்பது காதல் தானே?
நிஷாவின் குணம் இது என்று முதலில் நினைத்தவனுக்கு இப்போது ஏனோ அப்படி நினைக்க முடியவில்லை.
மனம் முழுக்க குழப்பத்தில் இருக்க, இதயமும் கனமாய் இருந்தது. தனிமையில் நேரத்தை செலவிட்டு வந்து கொண்டிருந்த வேளையில் தான் இவர்கள் மூவரையும் சாலையில் பார்த்தது.
உதவி செய்யவென இவன் நிற்க, கண்டுகொள்ளாமல் கீர்த்தி நிற்க, ஏற்கனவே இருந்த குழப்பதிலும் கோபத்திலும் எதையும் யோசிக்காமல் கிளம்பி வந்துவிட்டான்.
வீட்டிற்கு வந்து ஒருநிலைக்கு வரவே சிறிது நேரம் எடுக்க, நிதானமான பின் தான் கீர்த்தியை அப்படியே விட்டு வந்ததும் தம்பியிடம் பேசியதும் நினைவுக்கு வந்தது.
இப்போது வாசலில் இருப்பவளைப் பார்த்து கடந்து செல்ல தான் நினைத்தான். ஆனாலும் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.
யோசித்தபடி படிகளில் மெதுவாய் இறங்கியவன் அவளருகே செல்ல போக, தனது வண்டியில் வந்த கண்ணனின் பின்னே மற்றொருவன் கீர்த்தியின் ஸ்கூட்டியுடன் வந்தான்.
பைக் சத்தத்தில் தான் தன் அருகே நின்றிருந்த ராமையும் கவனித்தாள் கீர்த்தி.
"தேங்க்ஸ் பாஸ்" என்று ஸ்கூட்டியை ஓட்டி வந்த புதியவனிடம் கூறிய கண்ணன் ஸ்கூட்டீயை அதனிடத்தில் விட்டுவிட்டு வர, அதுவரையும் அவனை தான் பார்த்து நின்றனர் கீர்த்தியும் ராமும்.
தொடரும்..