உ
கானல் - 1
திருச்சிராப்பள்ளி சத்திர பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவரங்கம் என்ற பகுதியில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைத்த திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் தொடங்கிய நாளான இன்றையை நாளை (மார்ச்11) கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதால், அதைக் காண மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆவலாக காத்து கொண்டிருந்தனர்.
ஒருவழியாக வரவேற்க வேண்டிய விருந்தினர்களை ராஜ மரியாதையுடன் வரவேற்க, வந்தவர்களும் கூடியிருக்கும் மக்களின் முன் கைக்கூப்பி வணக்கம் தெரிவிக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழாவும் தொடங்கியது.
இப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முடிந்து விருந்தினர்களும் மக்களும் அவரவர் இருக்கையில் அமர, அதே நேரம் அனைவருக்கும் வரவேற்புரை வழங்க மேடையேறிய தொகுப்பாளினியோ
"முதலில் அனைவருக்கும் என் காலை வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.. தங்கள் பணிகளை எல்லாம் விட்டுட்டு இந்நன்னாளான திருச்சிரப்பள்ளித் தமிழ்ச் சங்கம் தோன்றிய நாளை எங்களுடன் இணைந்து கொண்டாட வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்" என்று கூறி, விழாவை சிறப்பிக்க வந்த விருந்தினர்களையும் பாராட்டி வரவேற்பு வழங்கிய தொகுப்பாளினியோ அவர்களை மேடையில் ஓரிரு வார்த்தைகள் பேசுமாறு அன்புடன் அழைக்க, அவரின் அழைப்பை மதித்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் ஒரு சில வார்த்தைகள் பேசி தங்களின் சந்தோஷங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
விருந்தினர்களின் உரையாடல் முடிந்ததும், அவர்களின் உரையாடலை பற்றி ரெண்டு வார்த்தை புகழ்ந்து பேசிய தொகுப்பாளனியோ "அடுத்ததாக நம் அனைவரின் மனதை சந்தோஷப்படுத்த ஜோதி நாட்டியாலையா நடன பள்ளி மாணவர்களின் நடனம் இதோ.. அனைவரும், உங்கள் கரங்களின் ஓசையால் அவர்களை உற்சாகபடுத்தி வரவேற்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்" என்று கூற,
அந்நாட்டிய பள்ளி மாணவர்களோ, தங்களின் நாட்டிய ஆடை ஆபரணங்களையும் அணிந்து அழகோவியமாக நடந்து வந்து மேடையேறி, அங்கு நாட்டியத்திற்காக வைக்கபட்ட நடராஜரையும் கூடியிருக்கும் மக்களையும் கைக்கூப்பி வணங்க, அவர்களுக்கான பாடல்களும் ஒலிக்க, அவர்களின் நடனமும் தொடங்கபட்டது.
ரெண்டு மூன்று பாடல்களை இணைத்து மொத்தம் பதினைந்து நிமிடம் அழகாகவும் பார்ப்பவர்களின் கண்ணை கவரும் வண்ணம் சிறப்பாகவும் முடிந்து அவர்களின் நடனம் நிறைவு பெற்றதும், அடுத்து அடுத்து சொற்பொழிவு நாடகம் பாடல் பட்டிமன்றமென்று அனைத்து நிகழ்ச்சிகளும் முடிய தொக்குப்பாளினியோ,
"மக்கள் மனதை கவரும் வண்ணம் ஆடல் பாடல் நாடகம் பட்டி மன்றமென்று என்று கலந்து கொண்டு.. தங்கள் திறமையை வெளிக்காட்டி விழாவை சிறப்பித்து தந்த அனைத்து மாணவர்களுக்கும் அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. அடுத்ததாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக.. நமது சிறப்பு விருந்தினர்களின் கைகளால் அவர்களுக்கு பரிசு வழங்கபட வேண்டுமென்றும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூற, அதற்கு மரியாதை அளித்து விருந்தினர்களும் எழுந்து நிற்க,
அதை கண்ட தொகுப்பாளினியோ "ஜோதி நாட்டியாலையா நடன பள்ளி மாணவர்கள் மேடையேறி.. நம் சிறப்பு விருந்தினர்களிடம் பரிசை பெற்று கொள்ள வருமாறு கேட்டுக் கொள்கிறேன்"
அதை கேட்ட, அப்பள்ளி மாணவர்களும் மேடையேறி வந்திருந்த விருந்தினர்களிடம் பதக்கம் மற்றும் சான்றிதழை பெற்று அவர்களுடன் இணைந்து புகைபடம் எடுத்துக்கொள்ள, மக்களுடன் சேர்ந்து தன் நடன பள்ளி மாணவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார், அவர்களின் நடன பள்ளி ஆசிரியர்.
அவர்கள் பரிசை பெற்றுவிட்டு மேடையிறங்கியதும் தொகுப்பாளினியோ "இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்காலம் என்று கூறும் போதே, ஒரு வித பெருமையாக இருக்கிறது தான், அதே போல் நாளைய எதிர்காலத்தை உருவாக்குகிற இன்றைய ஆசிரியர்கள் இல்லயெனில் எதிர்காலமே இல்லையல்லவா ஆதலால்.. இவ்வளவு நேரம் பொறுமையாக தங்கள் மாணவர்களின் நடனம் மற்றும் அவர்கள் பரிசு வாங்கியதை பெருமையுடன் கைத்தட்டி உற்சாகபடுத்திய, நம் ஜோதி நாட்டியாலையா நடன பள்ளி ஆசிரியர் திருமதி வித்யா ஜெய்சங்கர் அவர்களை மேடையேறி தங்களுக்கான பரிசை விருந்தினரிடம் பெற்றுக்கொள்ள வரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. கூடியிருக்கும் அனைவரும் நாளைய எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியரில் ஒருவரான திருமதி வித்யா அவர்களை வரவேற்க கரங்களின் ஓசை எழுப்பி உற்சாகப்படுத்துங்கள" என்று கூற கூடியிருக்கும் அனைவரும் தங்கள் கரங்களில் ஓசை எழுப்ப,
அதை தன் காதில் கேட்டவாறு பெருமையுடன் மேடையேறிய வித்யாவோ, முதலில் அனைவரையும் கைக்கூப்பி வணங்கிவிட்டு விருந்தினர்களுக்கு நன்றி கூறி தனக்கான பதக்கம் கவசம் மற்றும் சான்றிதழை, அவர்கள் கையிலிருந்து வாங்குவது போல் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து முடிக்க, அடுத்ததாக விருந்தினர்களும் அவளை பாராட்டி கைக்குலுக்க
அவர்கள் கையை விடாமல் குலுக்கி கொண்டிருக்க, வலி எடுத்ததில் கண் விழித்தவளின் முன் நின்றது என்னவோ எழுப்ப முயற்சித்து கொண்டிருந்த வித்தியாவின் கொழுந்தன் மனைவியான மேகலை தான், கனவில் இருந்து கலைந்து, அவளை கண்டவாறு புன்னகையுடன் எழுந்தவளை கண்ட மேகலையோ "என்ன அக்கா.. இன்னைக்கு கனவு லோகத்துக்கு போயிட்டீங்க போல"
தான் கூறியதை கேட்டு புன்னகைத்தவளை "இப்படி எல்லாத்துக்கும் பொறுமையா சிரிச்சே சமாளிக்க.. உங்களால மட்டும் எப்படி முடியுதோ தெரியல"
அதற்கும் புன்னகை சிந்தியவளை கண்ட மேகலையோ "ம்.. இதுக்கும் சிரிப்பு தானா.. சரி சீக்கிரம் ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க அக்கா.. ஏற்கனவே நீங்க வருறதுக்கு பத்து நிமிஷமாகியும் ரூம்ம விட்டு வெளிய வரலன்னு.. அத்த தையா தக்கான்னு குதிச்சிட்டு இருக்காங்க.. சோ மாமா ஜாகிங் முடிஞ்சி வருறதுக்குள்ள கிச்சென் வந்துருங்க.. நான் வேலைய ஸ்டார்ட் பண்றேன் என்று அவளிடம் கூறிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்து கொள்ள, வித்தியாவோ தன்னருகில் உறங்கி கொண்டிருந்த மகனின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு ஒரு ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவளோ குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
தன்னை சுத்தபடுத்தி கொண்டு புடவை அணிந்து வெளியே வந்தவள் தன் தலையை துவட்தி காயவைத்து பின்னி நெற்றியில் பொட்டும் உச்சி வகுட்டில் குங்குமமிட்டு, தன் அன்னை புகைப்படத்தை வணங்கிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
மகாலட்சுமி போல் வெளியே வந்த மருமகளின் அழகை ஒவ்வொரு முறையும் ரசித்தாலும் வெளியே காட்டி கொள்ளாத, அவள் மாமியாரோ எதையாவது கூறி அவருக்கு அர்ச்சனை வழங்குவார்.
அதே போல் இன்றும் வெளியே வந்த மருமகளை முறைத்தவாறே "இன்னும் கொஞ்சம் தூங்கிட்டு நாளைக்கு எந்திச்சி வர வேண்டி தான.. என் மகன பாத்தேல எவ்வளவு பொறுப்பா டைமுக்கு எந்திச்சு ஜாக்கிங் போறான்.. நீயும் தான் இருக்கியே கரெக்ட் டைமுக்கு என்னிக்காவது வந்திருக்கியா.. அதான் அவன் ஆபீஸ் போனதும் வெட்டியா தான இருக்க.. அப்போ தூங்கோ தூங்குன்னு தூங்க வேண்டி தான" என்று கூற,
இதையெல்லாம் சமையல் அறைக்குள் கேட்டவாறே இருந்த மேகலையோ "தூங்க விட்டுடாலும்" என்று புலம்ப, அது அவரின் காதில் விழுந்ததோ என்னவோ "ஏய், என்னடி சொன்ன"
"அத்தை, இங்க ஒரு வயசான பூனை கத்திட்டு இருந்துச்சு.. எப்படி விரட்டனே தெரியல.. அடிக்கடி வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு போகுது அத்தை.. அதான் அத திட்டி புலம்பின.. சத்தம் வெளிய வர கேட்டுச்சோ.. சாரி அத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.. நீங்க பேசுங்க பேசுங்க" என்று கூறி நக்கல் செய்ய, அதை கேட்ட வித்யாவோ உதடு மடித்து சிரித்து சிரிப்பை கட்டு படுத்தி கொண்டாள்.
மேகலை பேசியில் கடுப்பான மாமியாரோ "என்னடி வர வர கொஞ்சம் ஓவரா தான் ஆடுற எல்லாம் என் மகன சொல்லணும்.. உன்ன கெடுத்து வச்சிருக்கான்"
"நீங்க தான அத்தை வாரிசு வேணும்ன்னு.. கேட்டீங்க.. இப்போ என்னடான்னா அவர் மேல குத்தம் சொல்லுறீங்க"
"அடியே மாமியார் கிட்ட பேசுற பேச்சாடி இது.. சத்தம் இல்லாம வேலைய பாக்குறதா இருந்த பாரு.. இல்ல இப்படியே பேசிட்டு திரிஞ்ச அப்புறம் ஆத்தா வீட்டுக்கு பொட்டிய தூக்கிட்டு போக வேண்டி தான்.." என்று கூறி வித்யாவின் புறம் திரும்பியவர் "நீ இன்னும் என் மொச்சரகட்டையே பாத்து நிக்கிற, வெத்தல பாக்கு வச்சி போக சொன்னா தான் போவியா.. போ போ போய் வேலைய பாரு" என்று கூற, அவளும் சமையல் அறைக்குள் சென்று மேகலையுடன் இணைந்து வேலையை தொடங்கினாள்.
அவள் சென்றதும் "எல்லாம் எனக்குன்னே வந்து சேந்து இருக்குங்க.. ச்ச உங்களால தினம் தினம் என் ஆவி தான் போகுது சொல்ல வேண்டிய இடத்துல சொல்லி கொடுத்து இருந்தா நான், ஏன் கஷ்டபட போறேன்.. எல்லாம் என்னோட தலையெழுத்து.." என்று கூறி சத்தமாக புலம்பிவிட்டு அவர் அறைக்குள் சென்றார்.
அவர் சென்றதும் காய்கறி வெட்டி கொண்டிருந்த மேகலையோ "பாத்தீங்களா அக்கா.. தினம் தினம் நம்ம பெத்தவங்கள குறை சொல்லுறத தலையாய கடமையா செய்றாங்க.. இல்லன்னா பொழுது சாயாது போல.. எனக்கு அப்படியே பத்திகிட்டு வருது.. உங்க கொழுந்தனுக்காக பொறுமையா போறேன்"
"விடு மேகல.. வயசானவங்க ஏதோ தெரியாம பேசுறாங்க.. அதுக்குன்னு அவங்க சொல்லுறது உண்மைன்னு ஆகிடுமா.. பொறுமையா போ"
"அந்நியாத்துக்கு நல்லவங்களா இருக்கீங்க அக்கா.. அது தெரிஞ்சும் இவங்களுக்கு எப்படி தான் உங்கள கஷ்ட படுத்த மனசு வருதோன்னு தெரியல.."
தான் கூறியதை கேட்டு புன்னகைக்கும் வித்யாவிடம் "இந்த அத்தையால.. கேக்க வேண்டிய விஷயத்தையே மறந்துட்டேன்.."
"என்ன விஷயம் மேகல"
"வேற என்ன.. கனவு பத்தி தான்"
"அட.. உனக்கும் கனவுலாம் வருதா.. என்ன"
"நடிக்காதீங்க அக்கா, என் கனவு இல்ல.. உங்க கனவு பத்தி"
"என் கனவா அடிக்கடி வருறது தான வருது.. புதுசா என்ன இருக்கு கேக்குறதுக்கு"
"இன்னும் எத்தன நாளைக்கு கனவுலயே வாழ போறீங்க.. உங்களுக்காகவும் யோசிங்க அக்கா"
"விடு மேகல.. கனவுலயாவது வாங்க கொடுப்பன இருக்குன்னு சந்தோஷபட்டுக்க வேண்டி தான்"
"நிஜத்திலயும் வாங்கணும்ன்னா நீங்க மாமாகிட்ட மறுபடியும் பேசுனா தான் உண்டு.. கல்யாண ஆனா புதுசுல மாமா அப்படி சொல்லிட்டாருன்னு இப்போ கேக்காம இருந்தா என்ன அர்த்தம் ஒரு தடவ கேட்டு பாருங்க கண்டிப்பா.. ஓகே சொல்லுவாங்க"
"எப்படியும் அத்தை சமதிக்க மாட்டாங்க.. எதுக்கு அவங்களையும் கஷ்டபடுத்தி நான் வறுத்தபட்டு எதுக்கு தேவையில்லாத பிராப்ளம்ன்னு தான் அமைதியா இருக்கேன்.. நீ வொர்ரி பண்ணிக்காத பாத்துக்கலாம் விடு" என்று கூறி முடிக்க, வீட்டிற்குள் நுழைந்த அவள் கணவரோ "வித்யா.." என்று அழைக்க "இதோ வந்துட்டங்க" என்று கூறியவள், அவருக்கான தேனீரை எடுத்து கொண்டு கணவனிடம் விரைந்தாள்.
போகும், அவளையே வியப்பாக பார்த்த மேகலையோ "இந்த அக்காவ திருத்தவே முடியாது இருந்தாலும் ரொம்ப நல்லவங்க தான்.. ஆனா, இவங்க இடத்துல நான் இருந்தா கண்டிப்பா இவ்வளவு பொறுமையாலாம் போக மாட்டேன்... அக்கா நீங்க நிஜமாவே கிரேட் தான்" என்று கூறி வித்யாவின் குணத்தை நினைத்து புன்னகைத்தவளோ வேலையில் கவனத்தை செலுத்தினாள்.
இப்போது தனக்கு தேனீர் கொடுக்க வந்த மனைவியின் முகத்தை அழுத்தமாக பார்வை பார்த்தவனோ "காபி கேட்டு எவ்வளவு நேரம் வெயிட் பண்றது ஆடி அசைஞ்சு வர"
"இல்லங்க.. ஃப்ரெஷா காபி கொடுக்கலம்ன்னு சுடா போட்டேன்.. அதான் டைம் ஆயிடுச்சு"
"எத கேட்டாலும் சாக்கு போக்கு சொல்ல கத்துகிட்ட... உன்னால என்னோட டைம் தான் வேஸ்ட்டாகுது.. வீட்டுல வெட்டியா இருக்குற உனக்கு இதெல்லாம் சொன்னா புரியுமா.. என்ன" என்று கூறி சலிப்புடன், அவளிடம் இருந்த தேனீரை வாங்கியவனோ "ப்ரேக்பாஸ்ட் சீக்கிரம் ரெடி பண்ணு.. முக்கியமான மீட்டிங் சீக்கிரம் போகனும் லேட் பண்ணி தொலச்சிடாத"
Last edited: