கானல் - 10 ( இறுதி அத்தியாயம்)
காலையில் எழுந்தவளுக்கோ, எப்போதும் தன் மனதில் தோன்றும் பாரம் இன்று இல்லாமல் போனது, அதோடு இன்று தன் கனவை தொடங்கும் நாள் என்பதால், மனதில் ஆவலுடன் கூடிய புத்துணர்ச்சி கலந்த சந்தோஷத்துடன் தன் அன்னையின் புகைப்படத்தை பார்த்து புன்னகைத்தவளோ "அம்மா.. மறுபடியும் நம்ம கனவ நனவாக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு.. இனி விட்ட ஓட்டத்திலிருந்து தொடர போறேன்.. ரொம்பவே பயந்துட்டேன் எல்லாம் முடிஞ்சு போச்சோன்னு நினைச்சு.. ஆனா, இன்னும் முடியல இனி தான் ஆட்டமே ஆரம்பம்ன்னு இப்போ தான் புரியுது.. ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. லவ் யூ அம்மா" என்று கூறி அன்னையின் புகைப்படத்தில் இதழ் பதித்து குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
குளித்து முடித்து வேலைகளை முடித்து அனைவருக்கும் சாப்பாடு பரிமாறியவளோ "நீங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு இருங்க.. ஒரு பத்து நிமிஷத்துல.. நான் போய் ரெடியாயிட்டு வரேன்" என்று கூறி அறைக்குள் சென்றாள்.
பத்து நிமிடத்தில் தயாராகி படியிறங்கி வருபவளின் அழகை கண்டு விழி விரித்த ஜெய்சங்கரின் கண்களுக்கு, இவ்வளவு நாட்கள் இருந்ததை விட இன்று மிக அழகாக தெரிந்தால், ஏனென்றால் வழக்கத்தை விட இன்று தான், அவள் அதிக சந்தோசமாக இருப்பதால், அவளின் புன்னகையே வழமையை விட அழகாக தெரிவதற்கு காரணமாகும் என்பதை ஆடவனும் அறிவான்.
இப்போது இறங்கி வந்தவளோ கடிக்கராத்தை பார்த்தவாறே வேகமாக சாப்பிட்டு கொண்டிருக்க, ஜெய்சங்கரோ அவளை தான் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான், அதைக் கண்ட நாகவள்ளியோ குரலை செருமிவிட்டு "டேய்.. வெறும் தட்டுல.. என்னடா தேடுற" என்று கேட்டதும் சுயநினைவுக்கு வந்தவனோ, குனிந்து தட்டை பார்த்துவிடட்டு,
அவர்களை கண்டு திறு திறுவென்று முழித்தவாறே தட்டுடன் எழுந்து கைகழுவ சென்றுவிட, அவனின் செயலை கண்டு பெண்ணவளோ உதடு மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டே சாப்பிட்டு விட்டு அனைவரிடமும் கூறி விடைபெற்று தனது கனவை நோக்கி சென்றாள்.
இப்போது தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு வந்தவளோ அதிபரின் (பிரின்சிபால்) அழைப்புக்காக காத்திருக்க, அவரின் அறையில் வெளியே வந்த அதிபரின் உதவியாளரோ "மிஸ்ஸஸ் வித்யா ஜெய்சங்கர்.. மேம் உங்கள கூப்பிடுறாங்க" என்று கூறியதை கேட்டு, அவரை காண உள்ளே செல்ல,
அவளை அமர கூறியவரோ, அவள் கொடுத்த கோப்பையை ஆராய்ந்துவிட்டு "மிஸ்ஸஸ் வித்யா ஜெய்சங்கர்.. இங்க ஏற்கனவே பரதம் டீச்சர் ஒருத்தங்க இருக்காங்க.. இருந்தாலும் நீங்க ரெக்வஸ்ட் பண்ணி கேட்டதாலயும் உங்களோட டான்ஸ் டலெண்டுக்காவும் தான்.. நீங்க இங்க ஜாயின் பண்ண சம்மதிக்குறேன்... இருந்தாலும் நீங்க இவ்வளவு இயர் கேப் அப்புறம்.. மறுபடியும் ஜாயின் பண்றதால.. உங்க டான்ஸ் ஒருதடவ பாக்க ஆசைப்படுறேன் இப் யூ டோண்ட் மைண்ட் ஆடி காட்ட முடியுமா"
"ஷூயர் மேம்"
"தேங்க் யூ" என்று கூறிவிட்டு, தன் உதவியாளரின் புறம் திரும்பியவரோ "இவங்கள பரதம் கிளாஸ்க்கு கூட்டிட்டு போயிட்டு.. எல்லாம் ரெடி பண்ணுங்க நான் டென் மினிட்ஸ்ல அங்கியிருப்பேன்" என்று கூற,
அதைக் கேட்டு தலையசைப்பை வழங்கிய உதவியாளரோ வித்யாவை அழைத்து கொண்டு பரதம் கற்று கொடுக்கும் அறைக்கு செல்ல, அங்கே மாணவர்களுக்கு பரத கற்பித்து கொண்டிருந்த இளம் வயது ஆசிரியரோ உதவியாளரிடம் "என்ன வேணும்.. யாரு இவங்க"
"மேம் ஏற்கனவே சொன்னாங்கள.. இவங்க தான் நியூ பரதம் டீச்சர்.. இனி இவங்களும் உங்ககூட சேந்து பரதம் டீச் பண்ணுவாங்க" என்று கூற,
அதைக் கேட்டு வித்யாவை மேலியிருந்து கீழ் வரை, ஒரு பார்வை பார்த்தவளோ "வயசு 30க்கு மேல இருக்கும் போலயே.."
"ம்.. ஆமா 33 ஆகுது"
"ஓ.. டென் இயர்ஸ் அப்புறம்.. இப்போ தான் மறுபடியும் ஜாயின் பண்றீங்க.. எப்படியும் டச் விட்டு போயிருக்கும்.. எதாவது டவுட்ன்னா தயங்காம கேளுங்க.. உங்கள விட சின்ன பொண்ணு கிட்ட போய் கேட்கிறோம்ன்னு வருத்தப்படமா கேக்கலாம்" என்று நக்கலாக கூற,
அவளின் நக்கல் புரிந்தாலும் பொறுமையாக "கண்டிப்பா கேக்குறேன்.. உங்கள பத்தி தெரிஞ்சிக்கலாமா"
"நான் மயூரி.. காலேஜ் முடிச்சி இந்த ஸ்கூல்ல த்ரீ இயர்ஸா வொர்க் பண்றேன்.. படிக்கும் போதே நிறைய பரதம் போட்டியில ஜாயின் பண்ணி வின் பண்ணிருக்கேன்.. டிஸ்ட்ரிக் லெவல்ல கூட செகண்ட் பிரைஸ்லாம் வாங்கிருக்கேன்" என்று அவளை பற்றி அறியாமல் தன் பெருமையை திமிராக கூற,
வித்யாவோ "ஓ சூப்பர்.. டிஸ்ட்ரிக் லெவல் பிரைஸ் வின் பண்ணினதுக்கு என்னோட வாழ்த்துக்கள்.. உங்க கூட வொர்க் பன்றதுல.. எனக்கு ரொம்ப சந்தோஷம்.. எவ்வளவு நேரம்.. இப்படியே வெளிய நிக்க வச்சி பேசுவீங்க உள்ள வரலாமா"
"சாரி.. உள்ள வாங்க" என்று தனக்கு இணையாக அவள் வருகிறாரே என்ற கடுப்பில் வரவேற்க, அவள் புன்னகைத்தவாறு உள்ளே நுழைந்த நொடி "அம்மா" என்று அழைத்தவாறே அவளின் கால்களை கட்டிக்கொள்ள, வித்யாவோ "அட ரேஷ்மா குட்டி.. இங்கயா இருக்கீங்க.."
"ஆமா அம்மா.. கல்ச்சுரல் ப்ரோக்ராம் பிராக்டீஸ்க்கு வந்தோம்மா.. நீங்க என்ன இங்க"
"அம்மா.. நீ சொன்ன போல.. இங்க பரதம் டீச்சரா வந்திருக்கேன்"
"நிஜமாவா.. ரொம்ப தேங்க்ஸ்மா"
"அய்யோ அம்மாகிட்ட தேங்க்ஸ் சொல்ல கூடாதுடா"
"இனி.. நீங்க நான் பிரவீன் மூணு பேரும் ஸ்கூல்ல பாத்துகலாம் ஜாலியா இருக்கும்" என்று கூறி கொண்டிருந்த சமயம், அவளின் நாட்டியத்தை காண வந்த அப்பள்ளி அதிபரோ "ரெடியா ஸ்டார்ட் பண்ணலாமா"
"ஸ்டார்ட் பண்ணலாம்" என்று கூறி, தன் சலங்கை இரு கால்களிலும் கட்டிக் கொள்ள, அவளுக்காக பாடல் ஒலித்ததும் அங்கிருந்த நடராஜரை கைக்கூப்பி வணங்கிவிட்டு தன் நாட்டியத்தை தொடங்க, அனைவரின் கண்களும் அவள் நாட்டியத்தை ஒரு நொடி கூட நகரவிடாமல் கவர்ந்து கொண்டது, இவ்வளவு நேரம் தன்னை விட வயதானவர் அதுவும் பத்து வருடம் இடைவேளை விட்டு ஆடுபவரால், தனக்கு நிகராக எப்படி ஆட முடியும் என்று பெருமை பீத்தி கொண்டிருந்த, மயூரி கூட அவளின் ஆடல் கண்டு உறைந்துவிட்டாள்.
தனக்கான ஐந்து நிமிட பாடலை ஆடி முடிக்க, அங்கிருந்த அனைவரும் எழும்பி கரங்களின் ஓசையால் பாராட்டு தெரிவிக்க, அவளருகில் வந்த அதிபரோ "எனக்கு பரதம் பத்தி பெருசா தெரியாது தான்.. பட் நீங்க ஆடுறது பாத்து பத்து வருஷம் கேப் விட்டு ஆடுறீங்கன்னு சொல்ல முடியாது.. அந்த அளவுக்கு அழகா ஆடுனீங்க.."
"தேங்க்ஸ் மேம்"
"ஓகே.. மத்த டீடைல்ஸ் எல்லாம் மயூரி உங்களுக்கு சொல்லுவாங்க.. அப்போ நான் வரேன்.. ஆல் த பெஸ்ட்" என்று கை குலுக்கி சென்றார்.
அவர் சென்றதும் உறைந்து நிற்கும் மயூரியை தட்டியவளோ "என்னாச்சி மயூரி"
"நத்திங்.. நல்ல ஆடுறீங்க"
"தேங் யூ மயூரி.. ஒன்னு சொல்லுறேன் தப்பா நினைச்சிக்காதீங்க திறமைக்கு வயசு உருவம்லாம் கிடையாது.. அதுனால இனி வயசு உருவத்த வச்சி.. இவங்க இப்படி தான்னு நீங்க கணக்கு போடாதீங்க.. அது ரொம்ப தப்பு"
"ரியலி சாரி.. டிஸ்டிரிக் லெவல் செகண்ட் பிரைஸ் வாங்கின என்ன விட.. நீங்க அழகா ஆடுறீங்க.. எப்படி" என்று கேட்க,
ரேஷ்மாவோ "ஏன்னா.. எங்க அம்மா திஸ்றிக்ட் லெவல்ல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கிருக்காங்க" என்று மேகலை தன்னிடம் கூறியதை கூற,
மயூரியோ "உங்கள பத்தி தெரியாம அப்படி பேசிட்டேன்.. ஐ அம் ரியலி சாரி"
"இட்ஸ் ஓகே நோ பிராப்ளம் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாம்.." என்று கூறி இருவரும் இணைந்து மாணவர்களுக்கு பரதம் கற்பிக்கும் பணியை தொடங்கினார்கள்.
இப்படியே வீட்டியில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு பள்ளிக்கு வருவதும் பள்ளியில் கிடைக்கும் நேரங்களில் வீட்டிற்கு சென்று கணவனை பார்த்து வருவதுமாக ஒரு மாதத்தை கழித்தவள், இப்பணியில் கிடைக்கும் வருமானத்தை வீட்டிற்கு போக சேகரிக்கவும் தொடங்கினாள்.
ஒரு மாதம் ஓய்வு என்ற பெயரில் வீட்டியிலே அடைந்து கிடைப்பதில் கடுப்பான ஜெய்சங்கரோ மனைவிடம் கூறிவிட்டு கால்போக்கில் நடந்து சென்றவனின் கண்களில் தென்பட்டது என்னவோ மருத்துவமனைக்குள் செல்லும் மேகலை ராஜன் தான், அவனை தூரத்தில் கண்ட ஜெய்சங்கரோ "இவன் எங்க ஹாஸ்பிட்டல் போறான்.. ஒருவேளை அவன் பொண்டாட்டி செக் அப்க்கு போறான் போல.. ஆனா.. இங்க கார்டியோ பாக்குறவாங்க தான இருப்பாங்க.. இங்க எப்படி" என்று யோசிக்க,
அப்போது மருத்துவரை காண, அவர் அறைக்குள் இருவரும் நுழைய,
மருத்துவரோ "எப்படிடி இருக்க.. எத்தன மாசம்"
"ரெண்டு மாசம்டி.."
"பைன்.. செக் அப்லாம் ஒழுங்கா போறியா"
"ம் ஆமாடி.. இப்போ கூட போயிட்டு தான் வாரேன்.. அதவிட்டுட்டு எதுக்கு வர சொன்ன அத சொல்லு"
"இன்னும் எத்தன நாளைக்குடி.. அவருக்கு நெஞ்சு வலின்னு டிராமா பண்றது.. இப்போ கூட அவருக்கு சத்து மாத்திர தான் கொடுத்துருக்கேன்.. நேத்து கூட செக் அப் வந்துட்டு போனாங்க.. என்னால இல்லாத நோய் இருக்குன்னு பொய் சொல்ல முடியலடி.. நீங்க ரெண்டு பேரும் வந்து கம்பெல் பண்ணினதுனால தான் பொய் சொல்ல ஓகே சொன்னேன்.. இது என்னோட தனி கிளினிக்கா இருக்க போய் எப்படியோ சமாளிக்குறேன் இல்லன்னா.. அவ்வளவு தான் எப்போவோ சிக்கிருப்பேன்"
"நீ சொல்லுறது புரியுதுடி.. இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்புறம் நாங்களே உண்மைய சொல்லி.. உனக்கும் பிராப்ளம் வராமா பாத்துக்குறோம்"
"என்னது.. இன்னும் கொஞ்ச நாளா.. ரொம்ப கஷ்டம்டி.." என்று கூற,
ராஜனோ "நீங்க சொன்ன ஒரு பொய் தான் இன்னைக்கு எங்க அண்ணி வாழ்கைய மாத்திருக்கு.. இன்னும் கொஞ்ச நாள் அப்புறம் நாங்களே உண்மைய சொல்லிடுவோம்"
"எதா இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரம் பண்ணிட்டு.. உண்மைய சொல்லிடுங்க.. அது தான் நல்லது எவ்வளவு நாள் மறைக்க முடியும்.. அதோடு சத்து மாத்திரையும் அதிகம் எடுத்துக்க கூடாது.. அதுனால ஓவர் வெயிட் போட்டு நிஜமாலே அட்டாக் வர வாய்ப்பிருக்கு.. சோ பாத்துக்கோங்க"
"கண்டிப்பாடி.. அப்போ நாங்க கிளம்புறோம்" என்று விடை பெற்று காரில் ஏற, மேகலையோ "ஏங்க உண்மைய சொல்லிடலாமா.. எனக்கு பயமா இருக்கு.. அவ சொன்ன மாதிரி இல்லாத அட்டாக் வந்துட்டா"
"இதெல்லாம் சம்பவம் பண்ண ஐடியா சொல்ற முன்னாடியே சொல்லிருக்கணும்.. இப்போ வருத்தபட்டு என்ன யூஸ்"
"ஏதோ நான் மட்டுமே பண்ணினது போல பேசுறீங்க.. ரெண்டு பேரும் தான் பண்ணிருக்கோம் அத மறந்துறாதீங்க.. வண்டிய வீட்டுக்கு விடுங்க"
"என்னடி இன்னைக்கே சொல்ல போறியா"
"தெரியல பாப்போம்.. நீங்க வண்டிய வீட்டுக்கு விடுங்க" என்று கூற, அவனும் காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.
இப்போது வீட்டிற்கு கோவமாக வந்த ஜெய்சங்கரோ "வித்யா ஒரு காபி" என்று கூற,
அவள், அவனுக்கான தேனீரை எடுத்து வந்த சமயம் மேகலையும் ராஜனும் வீட்டிற்குள் நுழைய, அவர்களை கண்ட வித்யா "அட மேகல வா.. எப்படி இருக்க.. செக் அப் வந்தியா"
"ஆமா அக்கா செக் அப் தான் வந்தேன்.. அத்தை பிரவீன் எல்லாரும்.. எங்க" என்று கேட்ட சமயம் நாகவள்ளியும் வந்து, நலம் விசாரிக்க, வித்யாவோ "நீ இப்படி உக்காரு.. நான் போய் ஜுஸ் எடுத்துட்டு வாரேன்" என்று கூறி செல்ல, அவளோ ஜெய்சங்கரின் எதிரேயிருந்த சோஃபாவில் அமர, அவனோ "எப்படி இருக்க மேகல.. டாக்டர் என்ன சொன்னாங்க"
"இப்போ ஓகே மாமா.. அடுத்த மாசம் செக் அப் வர சொல்லிருக்காங்க"
"ஓ ஓகே.. அப்புறம் குழந்தைக்கு இப்போவே ஹார்ட் செக் பண்றாங்களா என்ன"
"ஏன் மாமா கேக்குறீங்க"
"கார்டியோ ஹாஸ்பிட்டல்ல உன்ன பாத்தேன்.. அதான் கேட்டேன்" என்று கூற,
அவன் கூறியதை கேட்டு தூக்கி வாரி போட்டதில் தகென்று எழுந்து கொள்ள,
அவனோ "ஏன் நிக்கிற உக்காரு" என்று கூற,
அவளோ கணவன் காதில் "ஏங்க.. ஒருவேளை தெரிஞ்சிடுச்சா.. கரெக்ட்டா அதையே கேட்கிறாரு" என்று அவன் காதில் கடிக்க,
அது ஜெய்சங்கருக்கே கேட்டுவிட "நீ சொன்னா தான தெரியும்.. இப்போவாது சொல்லுற எண்ணம் இருக்கா"
என்று கேட்டவனுக்கோ "நீங்க சொன்ன ஒரு பொய் தான்.. எங்க அண்ணி வார்த்தையா மாத்திருக்கு" என்று ராஜன் கூறிய வார்த்தைகள் அவன் காதில் திரும்ப திரும்ப ஒலித்து கொண்டிருக்க,
மேகலையோ "அது வந்து மாமா.. என்ன மன்னிச்சுடுங்க.. உங்களுக்கு நெஞ்சு வலின்னு.. நான் தான் பொய் சொல்ல சொன்னேன்" என்று கூற, அதிர்ந்த மாமியாரோ "என்னடி சொல்லுற பொய் சொல்ல சொன்னியா"
"ஆமா அத்தை.. நாங்க தான் சொல்ல சொன்னோம்.. என்ன நடந்துச்சுன்னா" என்று கூறி கதையை கூற தொடங்கினாள்.