• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 5 .

MK29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
33
25
18
thanjavur
1000069186.jpg



கானல் - 5

தன் கதையை கூறிமுடித்தவரிடம் வித்யாவோ "அப்பா சூப்பர்லமா.. அப்பாவ நினைச்சாலே பெருமையா இருக்கு"


"ம்.. இப்போ வர நான் பரதம் டீச்சரா வேலை பாத்து சாதிச்சி இவ்வளவு பிரைஸ் வாங்க.. உன் அப்பாவும் காரணம் தான்.. ஆனாலும் அம்மாக்கு இன்னொரு ஆசை கூட இருக்கு.. அந்த லட்சியத்த நோக்கி தான்.. இப்போவும் ஓடிக்கிட்டு இருக்கேன்"


"என்ன அது.." என்று கேட்க,


அவர் கூறும் சமயம் கதவு தட்டும் சத்தம் கேட்ட ஜோதியோ "இரு.. யாருன்னு பாத்துட்டு வரேன்" என்று கூறி செல்ல, அன்னை சென்றதும் மறுபடியும் ஒருமுறை அன்னையின் செருகேடை (ஆல்பம்) ஆசையாக பார்த்து புன்னகைத்தவளுக்கோ அம்மாவின் நடனத்தில் பரதம் மேல் ஈர்ப்பு வந்ததோ என்னவோ "நானும்.. ஏன் அம்மா போல பரதம் கத்துக்க கூடாது.." என்று யோசிக்க தொடங்கி விட்டாள்.


அதே சமயம் யாரென்று பார்த்துவிட்டு வந்த அன்னையோ தன் மகளின் சிந்தனையை கண்டு, அவளை உலுக்கியவாறே "என்னடி தனியா சிரிச்சிட்டு இருக்க"


"அம்மா.. நானும் பரதம் கத்துக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்"


"பரதம் கத்துக்க போறியா.. சரி தான் போடி பிராங்க் பண்றதுக்கு.. உனக்கு வேற வார்த்தையே இல்லையா"


"அய்யோ அம்மா.. பிராங்க் இல்ல நிஜமா தான் சொல்லுறேன்.. எனக்கும் பரதம் கத்துக்க ஆசையா இருக்கு.. நீயே எனக்கு கத்து தருவ தான"


"அடியே நிஜமா தான் சொல்லுறியா.. நான் கூட மத்தநேரம் என்கிட்ட பிராங்க் பண்றது போல பிராங்க் பன்றியோன்னு நினைச்சேன்"


"நோ பிராங்க்.. நிஜமா தான் சொல்லுறேன்.. எனக்கும் உன்ன போல பரதம் கத்துகிட்டு நிறைய பிரைஸ் வின் பண்ணனும்ன்னு ஆசையா இருக்கு.. நீ எனக்கு கத்து தருவியா அம்மா"


"அதுக்கென்ன கத்து தரேன்.. ஆனா.. அப்புறம் எனக்கே போட்டிக்கு நிப்ப போல"


"என்ன.. பரதம் டீச்சருக்கு பயம் வந்துட்டு போல.. பயம் இருக்க தான செய்யும் ஏன்னா நான் பரத டீச்சர் ஜோதி பொண்ணாச்சே.."


"ஓ அப்படியா.. அப்போ மோதி பாத்துறலாம்ன்னு சொல்லுற.. நான் ரெடி தான்"


"என்ன சாதரணமா எட போடாத ஜோதி.. ஒருநாள் என் திறமைய ஊரே பேசும்.. வெயிட் அண்ட் வாட்ச்"


"அடியே.. எவ்வளவு கொழுப்பு இருந்தா.. என்ன ஜோதின்னு கூப்பிடுவ.. உன்ன.." என்று கூறி அவளை அடிக்க துரத்த,


அவரிடம் பிடிப்படாமல் ஓடிய வித்யாவோ "எம்மா.. போதும் நிறுத்து என்கூட ஓடி பிடிச்சி விளையாடுறேன்னு கீழ விழுந்து மண்டைய ஒடச்சிக்காத.. அப்புறம் நான் யார்கிட்ட பரதம் கத்துக்கிறது"


"கொஞ்சம் ஓவரா தான் பேசுற.. அப்புறம் ரொம்ப வருத்தபடுவ.. என்னதான் மாடு ஊர் மெயிஞ்சாலும் கடைசில வீட்டுக்கு வந்து தான் ஆகனும்.. அப்போ உன்ன வச்சிக்குறேன்"


"ஏம்மா மாடுலாம் வளக்குறியா என்ன.. சொல்லவே இல்ல"


"அதான் உன்ன வளக்குறேனே.. தனியா மாடு வாங்கி வேற வளக்கணுமா"


"என்னைய மாடுன்னா சொல்லுற.. இரு அப்பா வரட்டும் சொல்லி.. கழுத்த பிடிச்சு வெளிய தள்ள சொல்லுறேன்"


"என் மாமியார் பண்ணாத கொடுமைலாம்.. நீ நல்லாவே பண்ற டி.. இரு அப்பாகிட்ட சொல்லி.. நீ பரதம் கிளாஸ் ஜாயின் பண்ண முடியாதபடி பண்றேன்"


"அய்யோ ஜோதி.. அப்படிலாம் பண்ணப்பிடாது" என்று கூறி அன்னையின் அருகில் செல்ல,


"சொல்லிட்டே இருக்கேன் மறுபடியும் மறுபடியும் ஜோதிங்குற" என்று கூறி அவளின் காதை திருக்க, அதில் வலி இல்லையென்றாலும் வலிப்பது போல் நடித்த வித்யாவோ "ஸ்ஸ்.. வலிக்குதுமா விடு.. ஏய் ஜோதி என்ன செவுடாக்கி சலெஞ்சல நீ ஜெயிக்கலாம்ன்னு பாக்குறியா.. கோழையா சீரியல் வில்லி மாதிரி யோசிக்காம.. நேருக்கு நேர் மோதி பாரு ஜோதி"


தன் மகள் கூறியதை கேட்டவாறே, அவள் காதை விடுவித்தவரோ "உனக்கு வர வர வாய் ரொம்ப நீழுதுடி.. உன்ன கட்டிக்க போறவன்.. என்ன பாடு பட போறானோ"


"அப்பாவ விடவா"


தான் கூறியதை கேட்டு தீயாய் முறைக்கும் அன்னையிடம் "சரி சரி கோசிக்கபிடாது.. இத மனசுல வச்சி என்னைய பலி வாங்கிடாத ஜோதி" என்று பாவமாக கூற,


"சரிடி மன்னிச்சிட்டேன் அழாத விடு.. அப்புறம் இன்னைக்கு நைட் அப்பாகிட்ட பேசி ஓகே வாங்குறேன்.. நாளைக்கே ஜாயின் பண்றோம்.. ஹேப்பி தான"


"ஓ டபிள் ஹேப்பி" என்று கூறி அன்னையை இறுக்கி அணைத்து கன்னத்தில் இதழ் பதித்து தன் அறைக்குள் சென்றவளோ, நாளையின் பொழுதை எதிர்பார்த்து ஆவலாக காத்திருந்தாள்.


அவர் கூறியது போல் இரவே அவள் தந்தையிடம் சம்மதம் வாங்கியவரோ, மாலை, பள்ளி முடிந்து வந்ததுமே அவளை தான் பரதம் கற்பிக்கும் பள்ளிக்கே அழைத்து வந்தார்.


இப்போது தன் மகளின் பெயரில் அந்நடன பள்ளியில் பதிவு செய்துவிட்டு பணம் கட்டி வெளியே தன் மகள் அருகில் வந்தவரோ "அட்மிஷன் போட்டாச்சு வித்யா.. இன்னைல இருந்து உனக்கு கிளாஸ் ஸ்டார்ட்டாகும்.. அப்புறம் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல நீ உன் கால் வைக்கிற முன்னாடி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. வா அப்படி உக்காந்து பேசுவோம்" என்று கூறி, தன் மகள் கரம்பற்றி ஓரமாக அழைத்து சென்று


அவளுடன் அமர்ந்தவரோ "இதே போல் தான் முதல் நாள் கிளாஸ்ல எங்க அம்மா என்கிட்ட பேசினாங்க.. ஆனா.. இன்னும் அவங்க பேசின வார்த்தைகள் கேட்டுக்கிட்டே தான் இருக்கு.. உனக்கும் அதை தான் சொல்லுறேன்.. பொண்ணா பிறந்ததுக்காக யாருக்காகவும் உன் ஆசைய விட்டு கொடுத்து வாழனும்ன்னு அவசியமில்ல.. அதே சமயம் உனக்கு வேண்டியத.. நீ அம்மா கிட்ட எவ்வளவு தைரியமா கேட்டியோ.. அதே போல் தான் யார இருந்தாலும் கேக்கணும்.. ஒருவேளை கிடைக்கலன்னா.. திரும்ப திரும்ப முயற்சி பண்ணினா கண்டிப்பா நம்ம கைக்கு வந்து சேரும்.. எல்லாருக்கும் வாழ்க்கை நல்லபடியா அமையாது.. கஷ்டம், தோல்வி, வறுமை அவமானம், சோகம், வெறுப்பு, ஒதுக்கல்...
இப்படி நமக்கு வருற பல வலிகள தகர்த்து எரியும் போது நமக்கு கிடைக்குற வெற்றி தான் நம்மள உலக முழுக்க பேச வைக்கும்..



பெண்கள் இந்த நாட்டியின் கண்கள்லாம்.. ஆனா அந்த கண்கள் வீட்டுக்குள்ள இருக்கிற நாலு சுவர தான் பாக்கணும்ன்னு சொல்லுறவங்களும் இருக்காங்க.. அப்படி சொல்லுறவங்க மத்தியில பெண்களின் ரெண்டு கண்களே ஆயிரம் கண்களுக்கு சமம்ன்னும் எல்லா துறைலயும் பெண்கள் சாதிக்க முடியும்ன்னு புரிய வைக்கணும்.. சில இடத்தில பெண்களே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க.. இத தட்டி கேட்டா.. இதான் கலாச்சாரம் இப்படி தான் இருக்கணும்ன்னு சொல்லி பெண்களோட கனவு உணர்வுகள்ன்னு எதையும் மதிக்க மாட்டாங்க.. இதெல்லாம் பெருசு படுத்தாம நமக்ககான வாழ்கைய உருவாக்கி நம்மள பேசுனவங்களே வியந்து பாக்குற அளவு வாழனும்..


இன்னொரு விஷயம் வாழ்க்கைல வெற்றி பெறனும்ன்னா உண்மை நேர்மை உழைப்பு இந்த மூணும் இருந்தா கண்டிப்பா நமக்கான வெற்றி வந்தே தீரும்.. இதெல்லாம் இப்போ உனக்கு பெருசா புரியாது.. புரியும் போது புரியும்.. அதே சமயம் என்னால எல்லா நிலமைலயும் உன்கூட நிக்க முடியாம போனாலும்.. நான் பேசுன வார்த்தைகள் உன்கூடவே வரும்.." என்று கூறி மகளின் நெற்றியில் முத்தமிட்டவரோ "இனி.. உன் வாழ்க்கைல கிடைக்க போற எல்லா வெற்றிக்கும் உன் அம்மாவின் வாழ்த்துக்கள்.. ஓகே இப்போ போதும் டைம் ஆயிடுச்சு ஃபர்ஸ்ட் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாம்" என்று கூறி மகளுடன் உள்ளே நுழைந்தார்.

தன் கூறியதை ஆழமாக மனதில் பதித்து கொண்ட வித்யாவோ "என்னால ஜெயிக்க முடியும்" என்ற நம்பிக்கையோடு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு, தன்னை நிதான படுத்தியவளோ, உள்ளே வைக்க பட்டிருந்த பரதத்திற்கு மூல கடவுளான நடராஜரை கைக்கூப்பி வணங்கியவிட்டு, தன் வாழ்க்கைன்னு வெற்றிக்கான முதல் அத்தியாத்தில் கால் பதித்து தொடங்கினாள்.

இப்படியே, அவளின் அன்னை போல் பள்ளி செல்வதும் மாலை அன்னையிடம் பரதம் கற்றுக்கொள்வதும் என்றவாறே பல வருடத்தை கழித்து, பள்ளி படிப்பை முடித்தவளோ, இடை இடையில் பள்ளி மற்றும் நிறைய இடங்களில் பரத போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அன்னையை சந்தோஷத்தில் மிதக்க வைத்தோடு, பாரதத்தையும் முழுவதுமாக கற்று தேர்ந்தாள்.


அடுத்ததாக கல்லூரியில் காலடி எடுத்து வைத்து, அதில் மூன்று வருடம் முடித்து இளங்கலை பட்டமும் பெற்று வெற்றி பெற்றதோடு, இவர்களின் சொந்த ஊரான திருநெல்வேலியில் மாவட்ட அளவில் நடந்த பரத போட்டியிகளில் கலந்து கொண்டு நிறைய பதக்கம் கவசம் என்று வெற்றி பெற்றாள்.


அதோடு கோவில் திருவிழா

கலை திருவிழா என பல திருவிழாக்களில் கலந்து கொண்டு, தனது திறமையை வெளிக்காட்டி அனைவரையும் ஆடலாலே கவர்ந்தாள்.
 
Last edited:
  • Love
Reactions: Kameswari

MK29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
33
25
18
thanjavur
இப்படியே நாட்களும் அதன் போக்கில் நகர, நாற்பத்தி மூன்று வயதை கொண்ட வித்யாவின் அம்மா ஜோதியோ, வழக்கம் போல் மாணவர்களுக்கு பரதத்தை கற்பித்து கொண்டிருக்க, அவரை காண வந்த நாட்டியாலத்தின் தூய்மை பணியாளரோ "ஜோதிமா.. உங்க பேரு கேட்டு ஒருத்தங்க.. உங்கள பாக்க வந்திருக்காங்க"


"என்னைய பாக்கவா.. யாரு"


"பெயர் தெரியல.. ஆனா வயசானவங்க போல இருந்தாங்க.. ஆலமரத்துக்கு கிட்ட இருக்கிற பெஞ்ச்ல உக்காரு சொல்லிட்டு வந்தேன்.. அங்க தான் இருப்பாங்க.. போய் பாருங்க" என்று கூறிவிட்டு செல்ல,


அவர் கூறியதை நினைத்து "யாரா இருக்கும்" என்று சிந்தித்தவாறே, போட்டிக்காக பயிற்சி செய்து கொண்டிருந்த மகளின் அருகில் வந்தவரோ "ஏய் வித்யா.. நீ பசங்கள பாத்துக்கோ.. நான் இதோ வந்துடுறேன்" என்று கூறி அவரை கான சென்றார்.


தன்னை காண வந்த, ஜோதியை கண்ட முதியவரோ புன்னகைத்தவாறே "ஜோதி.. எப்படி இருக்க.. என்ன தெரியுதா"


சற்று யோசித்தவாறே"லதா மேம்.. எப்படி இருக்கீங்க"


"நான் நல்ல இருக்கேன்.. நீ எப்படி இருக்க"


"ரொம்ப நல்லா இருக்கேன்.. நீங்க வேற ஊரு மாறி போனதா கேள்விப்பட்டேன்.. இங்க எப்படி"


"ஆமா.. திருச்சில இருக்கேன்.. இப்போ ரிலேஷன் மேரேஜ்க்கு வந்தேன்.. அப்படியே தெரிஞ்ச பொண்ணு ஒருத்திய இங்க வேலைக்கு சேத்துவிட வந்தேன்.. அப்போ தான்.. நீ இன்னும் இங்க இருக்கன்னு தெரியவர உன்னையும் பாக்கலாம்ன்னு நினைச்சேன்.. நீ இன்னும், அப்படியே தான் இருக்க"


"43 வயசு.. அரகிழவிய பாத்து அப்படியே இருக்கன்னு காமெடி பண்றீங்களே, பாருங்க வெள்ள முடி கூட வந்துட்டு" என்று தன் தலையை காட்ட,


அதைக் கேட்ட முதியவரோ "வயசாகுதுல கண்ணு தெரியல போல.. சரி அதவிடு உன் பசங்கலாம் என்ன பண்றாங்க"


"எனக்கு ஒரே பொண்ணு.. பேரு வித்யா.. இந்த வருஷம் தான் டிகிரி முடிச்சிருக்கா.. இங்க தான் இருக்கா.. அவள பசங்களுக்கு கிளாஸ் எடுக்க சொல்லிட்டு தான்.. உங்கள பாக்க வந்தேன்"


"அவளுக்கும் பரதம் தெரியுமா"


"ம்ம்.. டிஸ்ட்ரிக் லெவல்லாம் பிரைஸ் வாங்கிருக்கா.. சொல்ல போனா என்னவிட என்னோட பொண்ணு தான் பயங்கர டலெண்ட்"


"இருக்கணும்ல.. தாய் எட்டடி பாஞ்சா.. குட்டி பதினாறு அடி பாயும்ன்னு சும்மாவா சொன்னாங்க"


அவர் கூறியதை கேட்டு சிரித்த ஜோதியோ "சரி சரி.. பக்கத்துல தான் என்னோட கிளாஸ் வந்து பாத்துட்டு போங்க"


"கண்டிப்பா பாத்தே ஆகணும்.. என்னோடயே ஸ்டூடண்டயே மிஞ்சுன.. உன் பொண்ண பாக்கலேன்னா எப்படி.. போலாமா" என்று கூறி, ஜோதியுடன் நடந்து சென்றார்.


அம்மா சென்றதும் அங்கிருந்த மாணவர்களுக்கு அழகாக பரதம் ஆடி காட்டி கற்பித்து கொண்டிருக்க, அவளை காண வந்தவர்களோ, வித்யாவின் நாட்டியத்தை பார்த்தவாறே வெளியே நிற்க,


முதியவரோ "ஜோதி.. நிஜமாலே உன் பொண்ணு உன்னவிட டலெண்ட் தான்.. கண்டிப்பா நாட்டியத்துல பெருசா சாதிப்பா.. எவ்வளவு அழகா ஆடுறா... நாள் முழுக்க பாத்துட்டே இருக்க தான் தோணுது" என்று கூற,


தன் குருவின் கூற்றை கேட்ட, வித்யாவின் குருவான அன்னைக்கோ தன் மகளின் பெருமை நினைத்து சந்தோஷத்தில் பூரித்தவாறே நிற்க,


அதே நேரம் கற்பித்து முடித்த வித்யாவோ "ஓகே காய்ஸ்.. இன்னைக்கு அவ்வளவு கிளாஸ் ஓவர்.. எல்லாரும் கிளம்பலாம்" என்று கூறிவிட்டு வாசலின் புறம் திரும்பியவளோ, அன்னையின் அருகில் வர, ஜோதியோ "இவங்க தான் எனக்கு பரதம் கத்து கொடுத்த குரு" என்று கூற,


அதைக் கேட்டு, அவர் காலில் விழுந்து ஆசி வாங்கிய, வித்யாவை கண்ட முதியவரோ "நீ உன் அம்மாவிட பயங்கர டலென்ட் தான்.. எதிர்காலத்துல உன் அம்மாவிட பெரிய ஆளா வருவ.. உன்கூட ஆடும் போது.. உன் அம்மாவே அவுட் தான்"


"எனக்கு குருவே.. என் அம்மா தான்"


"ம்ம் சரி தான்.. இருந்தாலும் நீ குருவையே தூக்கி சாப்பிட்டன்னு சொல்லுறேன்"


அதில் செல்ல கோபம் கொண்ட ஜோதியோ "ஹலோ.. நீங்க எனக்கு குருவா.. அவளுக்கு குருவா.. என்ன ரெண்டு வார்த்த பாராட்டலாம்ல"


"உண்மைய சொன்னா கோவம் வருதா.. அப்போ ரெண்டு பேரும் மோதி காட்டுங்க நம்புறேன்"


"ஆடி வேனா காட்டுறோம்.. மோத போய் கீழ விழுந்து மூக்க உடச்சிக்கலாம் முடியாது "

தான் கூறியதை கேட்டு முதியவரோ, ஒரு மாதிரி பார்வை பார்க்க, வித்யாவோ "ஏன்மா மொக்க ஜோக்ஸ்லாம் போட்டு பாட்டிய டென்ஷனாக்குற"


"ம்ம்க்கும்" என்று முகத்தை வெட்டிக் கொண்ட ஜோதியோ, தன் மகளுடன் இணைந்து ஆட, முதியவரோ இருவரின் நாட்டிய அழகினை ரசித்தவாறே கண்டவரோ, அவர்கள் ஆடி முடித்ததும் "ரெண்டு பேருமே அழகா ஆடுனீங்க.. அதுலயும் உங்க அம்மா உன் வயசுக்கு ஈக்வல்லா ஆடுறா"


"அட பாட்டி.. சைக்கிள் கேப்ல கட்சி மாறிட்டீங்க" என்று கூற,

"என்ன இருந்தாலும், அவ என்னோட ஸ்டூடண்டாச்சே விட்டு கொடுக்க முடியுமா.." என்று கூறி தன் கைப்பையிலிருந்து ஒரு அட்டை நீட்டியவரோ,


"இது என்னோட கார்ட்.. திருச்சில நானே சொந்தமா நடத்துற பரதம் ஸ்கூல் அட்ரஸ் வித் மை ஃபோன் நம்பரும் இருக்கு.. எப்போனாலும், என்ன வந்து பாக்கலாம் அதே சமயம் என்ன உதவி வேணும்ன்னாலும் தயங்காம கேக்கலாம்" என்று கூறி, அந்த அட்டை வித்யாவின் கையில் கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து விடை பெற்றார்.


இப்படியே நாட்கள் நகர, வழக்கம் போல் நடன பள்ளியிலிருந்து அன்னையுடன் வீட்டிற்கு வந்த வித்யாவோ, தனது அறையில் பரத போட்டிக்காக பயிற்சி செய்து கொண்டிருக்க,


அப்போது கையில் பழசாறுடன் வந்த ஜோதியோ "ஏய்.. ஜுஸ் குடிச்சிட்டு பிராக்டீஸ் கண்டினு பண்ணு" என்று கூற,


அன்னை வார்த்தைக்கு கட்டுப்பட்டு பழசாறுடன், தன் அன்னையின் அருகில் அமர்ந்தவாறே குடித்து கொண்டிருக்க,

"ஏய் வித்யா.. உன்னோட வெற்றி எல்லாம் நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்குடி.. கண்டிப்பா நீ எதிர்காலத்துல என்னவிட பெரிய ஆளா வரணும்" என்று நிறுத்தி மீண்டும் தொடங்கியவரோ "எனக்கு ஒரு ஆசைடி.. என்னால செய்ய இதுக்கு மேல செய்ய முடியாம போனா.. நீ.. அந்த ஆசைய அம்மாக்காக நிறைவேத்தி வைப்பியா"

"என்னன்னு சொல்லுமா.. கண்டிப்பா பண்றேன்"


"எனக்கு சொந்தமா டான்ஸ் ஸ்கூல் வச்சு நடத்த ஆசைடி.. ஆனா, அப்போவும் சரி இப்போவும் சரி என்கிட்ட.. அந்த அளவு வசதி இல்ல.."


"கண்டிப்பா சொந்தமா நடத்தலாம்"


"சொந்தம்ன்னா.. நம்ம யார்கிட்டேயும் காசு வாங்காம.. நமக்கு கிடைக்குற காச சேத்து வச்சி வாங்கணும்.."


"அதுக்கென்ன சிறப்பா ஆரம்பிச்சிடலாம்.. அதுவும் உன்னோட பேருலயே"


"சரி தான் போடி.. கோழி குஞ்சு பொரிக்குறதுக்குள்ள ஆம்லெட் போடுறதுக்கு போயிட்டா" என்று கூறி செல்லமாக மகளின் தலையில் தட்டி சென்றார்.


அவர் சென்றதும், தன் அன்னை கூறியதை நினைத்து தலையில் அடித்து கொண்டவளோ பயிற்சியில் மூழ்கினாள்.


மகளிடம் பேசிவிட்டு வெளியே வந்த ஜோதியோ மாடி படிக்கட்டியில், கால் வைத்து இறங்கி கொண்டிருந்த சமயம் திடீரென்று மின் தடை ஏற்பட, அதை எதிர்பாராமல் இறங்கி கொண்டிருந்தவரோ மின் தடையானதில் கால் பிரண்டு படிக்கட்டியிலிருந்து "அம்மா.." என்று கத்தியவாறே, தவறி விழுந்தவருக்கோ மூக்கிலே பலமாக அடி பட, அதில் மூச்சு விட சிரமப்பட்டவரோ, தன் ஆசை நிறைவேறும் முன்னே இறைவனடி சேர்ந்தார்.


அன்னையின் சத்தம் கேட்டு பதறி, அன்னையை தேடி வித்யா வந்த நேரம் வெளிச்சமும் வர, வெளிச்சத்தில் தன் அன்னையின் நிலையை கண்ட ஜோதியோ, அன்னையின் அருகே இடிந்து விழுந்துவிட்டாள்.



இருப்பினும் நம்பிக்கையை வரவழைத்து கொண்டு தன் மடியில் அன்னையை கிடத்தியவளோ "எம்மா.. எந்திமா.. கண்ண திறந்து உன் வித்யாவ பாருமா.. எந்திமா.. எம்மா நீ என்ன விட்டு போக கூடாது.. எனக்கு நீ வேணும்மா.. நீ ஆசபட்ட போல கண்டிப்பா டான்ஸ் ஸ்கூல் நடத்தலாம்.. வாமா.. எந்திச்சி வாமா" என்று அன்னையின் கன்னம் தட்டி, நாசியின் அருகே தன் கரத்தை கொண்டு சென்றவளுக்கோ தன் உயிரே தன்னைவிட்டு பிரிந்தது போன்ற உணர்வு, அதனை, அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை "அம்மா" என்று ஒலிபெருக்கி போல் கத்தியவளோ மயங்கி அன்னையின் மேலே சரிந்தாள்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த ராமநாதனோ, இருவரின் நிலையை கண்டு பதறி அருகில் சென்று இருவரையும் மாறி மாறி எழுப்ப முயற்சித்து தோல்வியடைந்தவரோ, ஓடி சமையல் அறைக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து இருவரின் முகத்திலும் விடாமல் தெளித்து கொண்டிருக்க,



அதில் மயக்கம் தெளிந்த வித்யாவோ தன் அருகிலிருக்கும் தந்தை அணைத்து ஓவென்று அழுதவாறே "அப்பா.. அம்மாவ எந்திக்க சொல்லுங்க.. அம்மா நம்மள விட்டு போயிடுவாங்களோன்னு பயமா இருக்கு" என்று கூற,


இவ்வளவு நேரம் மனைவி மயக்க நிலையில் இருப்பதாக நினைத்த ராம்நாதனோ மகளின் கூற்றில் பயந்து நடுங்கியவாறே தன் விரலை மனைவின் நாசியின் அருகில் கொண்டு சென்றவருக்கோ, அழுகை வர, மகளுக்காக கட்டுபடுத்தி கொண்டு, அருகில்
அழுது கொண்டிருந்த மகளை இறுக்கி அணைத்து கொண்டார்.


இப்படியே நேரங்கள் கழிய, மனைவிக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்து, விடாமல் அழும் மகளை பெரும் பாடுபட்டு சமாதானம் செய்து உறங்க வைத்துவிட்டு தன் அறைக்குள் வந்தவருக்கோ மனைவின் நினைவுகளில் தூக்கம் வர மறுக்க, ஜோதியின் புகைப்படத்தை பார்த்தவாறே அவருடன் சேர்ந்து இருந்த நினைவுகளை எண்ணியவாறே அன்றைய இரவை கழித்தார்.


இப்படியே நாட்கள், அதன் போக்கில் நகர்ந்தாலும் ஜோதியின் பிரிவு இருவருக்குமே ஏற்று கொள்ள முடியாத நிலை தான், ராம் நாதனுக்கோ இரவெல்லாம் ஜோதியின் நினைவில் தூக்கம் வர மறுக்க, இரவெல்லாம் தூங்காமல் வேலைக்கு செல்பவரால் தன் வணிகம் சமந்தமான எந்த வேலைகளிலும் கவனம் செலுத்த முடியா நிலையில் இருந்தவருக்கோ மிஞ்சியது என்னவோ நஷ்டம் மட்டுமே, இப்படியே சென்றால் மகளின் வாழ்க்கையும் அழிந்து

விடும் என்று எண்ணியவரோ, மகளிடம் தன்னிலை கூறி புரியவைத்து, தானிருக்கும் வீட்டியிலிருந்து நண்பனின் உதவியால் மகளுடன் திருச்சிக்கு குடி பெயர்ந்தார்.

கானல் தொடரும்...

இப்படிக்கு
கருப்பட்டி மிட்டாய்❤️❤️
 
Last edited:
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஜோதியோட கனவு நிறைவேறுறதுக்குள்ள போயிட்டாங்களே 😢

வித்யா நிறைவேத்துவாளா 🤔
 
  • Love
Reactions: MK29

MK29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
33
25
18
thanjavur
ஜோதியோட கனவு நிறைவேறுறதுக்குள்ள போயிட்டாங்களே 😢

வித்யா நிறைவேத்துவாளா 🤔
பாக்கலாம் அக்கா.. நன்றி ❤️❤️