• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 6 .

MK29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
33
25
18
thanjavur
1000069186.jpg


கானல் - 6

திருச்சிக்கு வந்து நண்பன் உதவில், ஒரு வேலையில் காலடி எடுத்து வைத்தவரோ அனைத்தையும் மறந்து மகளுக்காக ஓட ஆரம்பித்தார்.


திருச்சிக்கு வந்த வித்யாவிற்கோ, தன் அன்னையின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இருப்பினும் தன் அன்னையின் ஆசையை நிறைவேற்ற எண்ணியவளுக்கோ,



அன்று ஒருநாள், தன் அன்னையின் குரு கொடுத்து சென்ற அட்டை நிகழ்விற்கு வர வேகமாக, அதை தேடி எடுத்தவளோ, அவர் கொடுத்த அட்டையை கையில் வைத்துக் கொண்டு எதிரேயிருக்கும் அன்னையின் புகைப்படத்தை பார்த்தவாறு,


தன் அன்னை தனக்கு கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்தி ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டவளோ "அம்மா.." என்று அழைத்ததுமே கண்களில் நீர் எட்டி பார்க்க,


அதனை கட்டுப்படுத்தியவளோ "கண்டிப்பா, உன் ஆசைய நிறைவேத்துவேன்ம்மா.. அதுக்காக ஒரு புது அத்தியாத்துல கால வைக்க போறேன்.. இதுவர நிறைய போட்டில கலந்துக்கிட்டு அதுல வின் பண்ணனும் அப்படிங்கிற லட்சியத்துல மட்டும் தான் வாழ்ந்துட்டு இருந்தேன்.. ஆனா, இப்போ உன்னோட குரு நடத்துற டான்ஸ் கிளாஸ்ல பரதம் டீச்சரா ஜாயின் பண்ணி நிறைய பரத கலைஞர்கள உருவாக்குற பணில இறங்கி.. அதுல வருர வருமானத்த சேத்து வச்சி எப்படியாவது உன் கனவ நிறைவேத்துவேன்ம்மா.. நீ தான் கூடவே இருந்து என்ன வழி நடத்தனும்" என்று கூறி, அன்னையின் குரு கொடுத்த விலசாத்தை நோக்கி சென்றாள்.


அவ்விலாசத்தை அடைந்தவளோ ஒருவரிடம் "லதா மேம் பாக்கணும்.. எங்க இருப்பாங்க" என்று அவர் தனக்கு கொடுத்த அட்டையை அவரிடம் நீட்டி கேட்க,


அதை பார்த்தவரோ "இதோ.. இதான் அவங்க ரூம்.. போய் பாருங்க" என்று ஒரு அறையை கைக்காட்டி கூற,


அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவரின் அறை நோக்கி வந்தவளோ, வெளியே நின்றவாறு "பாட்டி.. உள்ள வரலாமா"


குரல் வந்த திசையை தலை நிமிர்த்தி பார்த்தவரோ "அட வித்யா நீயா.. உள்ள வா"


அவள் உள்ளே வந்ததும் அமர கூறியவரோ, அவள் அமர்ந்த பின் "என்ன இந்த பக்கம்.. எதாவது போட்டிக்காக வந்தியா"


"இல்ல.. வேலைக்காக வந்திருக்கேன்"


"ஓ.. ஓகே ஓகே.. நீ மட்டும் தான் வந்தியா.. ஜோதி வரலயா.. அவளையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல" என்று கேட்டதும்,


"கூட்டிட்டு வர முடியாத தூரத்துக்கு போயிட்டாங்க" என்று கூறியவளுக்கோ, அதற்கு மேல் முடியாமல் போக கண்ணீர் அனைத்தையும் கொட்டிவிட்டாள்.



அவள் நிலையை உணர்ந்த முதியவரோ, அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு தலை வருட, பெண்ணவளுக்கும் அந்த அணைப்பு அப்போது தேவை பட, அவர் அணைப்பில் இருந்தவாறே மொத்தமாக அழுது தீர்த்து விட்டாள்.


சிறிது நேரம், அவளை அழ விட்டவரோ தன் அணைப்பில் இருந்து, அவளை விலக்கி "என்னால ஜோதி இழப்ப நம்பவே முடியல.. நல்லா தான இருந்தா.. எப்படி.. இதெல்லாம்" என்று கேட்க,


அம்முதியவரிடம் தன் அன்னையின் இறப்பின் நிகழ்வை கூறி முடித்தவளோ "அம்மா போனதும்.. அப்பாக்கு ஒரே அம்மா நினைப்பு தான்.. தூக்கம் இல்லாம வேலைல கூட கன்சென்ரேட் பண்ண முடியாம நிறைய நஷ்டம் வேற... அப்பாக்கு தெரிஞ்ச பிரெண்ட் ஒருத்தர் இங்க இருக்காராம்..அவர் மூலமா தான் இப்போ அப்பாக்கு வேலை கிடைச்சிருக்கு.. அதான் மொத்தமா இங்கயே வந்துட்டோம்.. அது மட்டுமில்லாம நான் எவ்வளவு நாள் தான் சும்மா இருக்க, அதான்.. உங்ககிட்ட ஹெல்ப் கேட்டு வந்து இருக்கேன்.. நான் இங்க பரத டீச்சரா ஜாயின் பண்ணிக்கலாமா"


"கண்டிப்பா.. நீ இங்க வொர்க் பன்றதுல எனக்கு தான் பெரும அவ்வளவு டலெண்டான டான்ஸர் நீ.. உன்ன போய் வேண்டாம்ன்னு சொல்லுவேனா.. "


"ரொம்ப தேங்க்ஸ் பாட்டி.."


"அடியே பெரிய மனுஷி உன் தேங்க்ஸ நீயே வெச்சிக்க.. நடந்தத நினைச்சு கவலபடாம.. உன் அம்மா ஆசப்பட்டது போல, நீ பெரிய ஆளா வரணும் அது போதும்.. அப்புறம் நாளைல இருந்து கிளாஸ் ஜாயின் பண்ணிக்க" என்க


அவர் கூறியதிற்கு சம்மதம் தெரிவித்து காலில் விழுந்து ஆசி வாங்கியவளோ, அங்கிருந்து விடை பெற்றாள்.


அன்று இரவு தந்தை பணியிலிருந்து வந்ததுமே பேசி சம்மதம் வாங்கியவளோ, மறுநாளிலிருந்து தன் அடுத்த அத்தியாத்தை நோக்கி ஓட ஆரம்பித்துவிட, தனக்கு வரும் வருமானத்தை வீட்டு செலவிற்கு கொஞ்சம் எடுத்துவைத்தது போக மீதியை தன் வங்கி கணக்கிலிட்டு, தன் அன்னையின் கனவுக்காக சேமித்து வைத்தே ரெண்டு வருடத்தை கழித்து விட்டாள்.


திடீரென்று, ஒருநாள் பரத பள்ளியில் மாணவர்களுக்கு பரதம் கற்பித்து கொண்டிருந்த வித்யாவிற்கோ தன் தந்தையிடமிருந்து அழைப்பு வர, அதை ஏற்றவளோ "ஹலோ சொல்லுங்கப்பா"


"உடனே வீட்டுக்கு வா.. முக்கியமான விஷயம் பேசணும்"


"இப்போ தானப்பா வந்தேன்.. ஈவ்னிங் கிளாஸ் முடிச்சி வந்ததும் பேசிக்கலாம்"


"அதான் சொல்றேன்ல.. முக்கியமான விஷயம்ன்னு.. உடனே வா" என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.


இதைக் கேட்டு "என்னவா இருக்கும்" என்ற குழப்பத்துடனே வீட்டிற்கு வந்தவளோ, தன் தந்தையின் எதிரே அமர்ந்து "என்னாச்சிப்பா உடனே வர சொன்னீங்க.. எனி பிராப்ளம்"


"இன்னைக்கு ஈவ்னிங்.. உன்ன பொண்ணு பாக்க வராங்க"


அதைக் கேட்டு அதிர்ந்தாலும் வெளியே இயல்பாகவே தந்தையிடம் "எப்பா.. நீங்களே ரொம்ப கஷ்டப்படுறீங்க.. உங்கள.. இந்த நிலமைல விட்டுட்டு நான் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பேன்னு எப்படி நினைக்கிறீங்க.. இன்னும் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ போகட்டும்.. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்"


"அப்பாக்கு இப்போவே அம்பது வயசு தாண்டிட்டு.. எப்போ என்ன நடக்கும்ன்னு யாருக்கு தெரியும்.. அப்பா கொஞ்சம் உடம்பு நல்லா இருக்கும் போதே உன் கல்யாணத்த பண்ணி வைக்க ஆசப்படுறேன்.. நீ செலவு நினைச்சி கவலப்படாத ஏற்கனவே உன் அம்மா உயிரோட இருக்கும் போது, உனக்காக சேத்து வச்ச நகை இருக்கு.. அதுனால அப்பா ஈஸியா சமாளிச்சிடுவேன்"


"அப்பா.. அது வந்து"


"நீ நினைக்கிற போல அப்பாக்கு எந்த கஷ்டமும் இல்ல.. என்னோட பிரெண்ட்க்கு தெரிஞ்ச ரிலேஷன் தான்.. ஏற்கனவே உனக்கு மாப்பிளை விஷயமா அவன்கிட்ட உன் ஃபோட்டோ கொடுத்து வச்சிருக்கேன்.. உன் ஃபோட்டோவ மாப்பிளை வீட்டுல காட்டிருக்கான் உன்ன பிடிச்சுருக்காம்.. இன்னைக்கு ஈவ்னிங் பொண்ணு பாத்துட்டு பூ வைக்க வரரோம்ன்னு சொல்லிட்டாங்க.. நல்ல வசதியான குடும்பம் தான்.. உன்ன நல்லா பாத்துப்பாங்கடா.. இனியும் அப்பா கூட இருந்து கஷ்டப்பட வேண்டாம்டா.. கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு.. அது தான் அப்பாக்கு வேணும்" என்று கூற,


பெண்ணவளுக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை முதலில் அவர் கூறியதும், மாப்பிளை வீட்டிலிருந்து பாக்க தான் வருகிறார்கள் என்று நினைத்தவளோ, அவர்கள் பூ வைக்க வருகிறார்கள் என்று சொன்னதும் பெண்ணவளின் மனதிலோ பயத்துடன் பெரிய கணம் ஏறியது போன்ற உணர்வு, அதே சமயம் தன்னால் தந்தை மனசு கஷ்டபடுமென்று மறுக்கவும் முடியாத நிலை என்பதால், ஏதோ ஒரு நம்பிக்கையில் தந்தையிடம் "அப்பா.. உங்க ஆசை போல கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்.. சந்தோஷமா"


"நீ அப்பா மனச புரிஞ்சிகிட்டு சம்மதம் சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம்மா.. சரி நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.. ஈவ்னிங் மாப்பிளை வீட்டிலிருந்து வந்துருவாங்க.. நான் அவங்களுக்கு ஸ்வீட்ஸ் காரம் என்னலாம் வேணுமோ வாங்கிட்டு வாரேன்" என்று கூறி விடை பெற்றார்.


அவர் சென்றதும் அறைக்குள் வந்து அன்னையின் புகைப்படத்தை பார்த்தவாறே "கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுல, ஒரு பக்கம் உன்ன அப்பா புரிஞ்சிக்கிட்டு சபோர்ட் பண்ணின போல எனக்கு வர போறவரும் புரிஞ்சுப்பாருன்னு நம்பிக்கை இருந்தாலும், இன்னொரு பக்கம் மனசுக்கு ஏதோ நெருடலாவே இருக்கு.. நீ தான் கூட இருந்து, நம்ம கனவு தட படாம என்ன வழி நடத்தனும்" என்று கூறி அன்னையின் படத்தை அணைத்தவாறே உறங்கியும் போனாள்.


மாலை கண்விழித்தவளோ, மாப்பிளை வீட்டார் வருவதற்கு முன் தயாராகி காத்திருக்க, மாப்பிளை வந்ததும் அவளின் தந்தை அழைக்க,


அவர்களுக்கான தேனீருடன் குனிந்த தலை நிமிராமல் மகா லக்ஷ்மியின் அம்சமாக நடந்த வந்து நின்றவளின் அழகை வந்தவர்கள் ரசிக்க தவறவில்லை,


இப்போது ஜெய்சங்கரின் தந்தயையோ "இங்க பாருமா.. இதான் என் பையன் பேரு ஜெய்சங்கர்.." என்று ஆரம்பித்து தன் குடும்பத்தை, அவளிடம் அறிமுகபடுத்தியவரோ "எங்களுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு மகா லக்ஷ்மி போல இருக்க.. உனக்கு என் பையன பிடிச்சி இருக்குன்னா சொல்லு இப்போவே பூ வச்சிடலாம்" என்று கூற,


அவர் கூறியது அனைத்தையும் கேட்டுவிட்டு தந்தையின் முகத்தை ஒரு கணம் பார்த்தவளோ, கண்களை மூடி திறந்து இதழ் குவித்து ஊதிக் கொண்டு "எனக்கு மாப்பிளைய பிடிச்சி இருக்கு" என்றாள்.


அவள் பதில் கேட்டவரோ "மருமகளே சொல்லிட்டா.. அப்போ பூ வச்சிட்டு.. மத்த விஷயத்தெல்லாம் பேசலாம்" என்று கூற,


நாகவள்ளியோ "ஏங்க ஒரு நிமிஷம் இருங்க.. பொண்ணுக்கு எவ்வளவு போடுவீங்க.. மாப்பிளைக்கு என்ன பண்ணுவீங்கன்னு இப்போவ சொல்லிட்டீங்கன்னா மேற்கொண்டு பேசும் போது வசதியா இருக்கும்"


"பொண்ணுக்கு 15 பவுன் நகையும் என்னால முடிஞ்ச ரொக்ககும் கொடுக்கிறேன்.. அத போக கொடுக்க வேண்டிய மத்த சீர் வரிசையெல்லாம் கரெக்ட்டா கொடுத்துருவேன்"


"15 பவுன் தானா.. ஒரு 20 இல்லன்னா 25 போடலாமே.. என் மகனுக்கு பொண்ண பிடிச்சிருக்குன்னு சொல்ல போய் வந்தேன்.. மத்தபடி எனக்கு இந்த சமதத்துல இஷ்டம்லாம் இல்ல.. நீங்க என்னடான்னா சொந்த மகளுக்கே நகை போட கணக்கு பாக்குறீங்க"


அவர் கூறியதை கேட்டு, ராம்நாதன் முகம் மாறுவதை கண்ட சந்திர சேகரோ (ஜெய் சங்கரின் தந்தை) "அவ அப்படி தான் எதையாவது பேசுவா.. நீங்க வருத்தபடாதீங்க அதெல்லாம், அவளுக்கு பொண்ண ரொம்பவே பிடிச்சிருக்கு.. கல்யாணம் செலவு எல்லாமே நாங்களே பாத்துக்குறோம் உங்களால முடிஞ்சதயே நீங்க போட்டா போதும்.. நாகவள்ளி நீ போய் மருமக தலைல பூ வச்சிவிடு"

"ம்க்கும்" என்று முகத்தை வெட்டியவரோ "சரி நகை தான் 20 பவுன் போட மாட்டேன்னு சொல்லுறீங்க.. ரொக்கமாச்சும் நிறைய செய்ங்க" என்று கூறி, முக சலிப்புடனே வித்யாவின் தலையில் பூ வைத்து விட்டார்.

இரு வீட்டியிலும் திருமண வேலைகள் தொடங்க,


ஜெய்சங்கரின் மேல் உள்ள நம்பிக்கையில் திருமணம் முடியும் வரை பரத கற்பிக்கும் பணியிலிருந்து விடுப்பில் இருப்பவளுக்கோ, தங்களின் கனவு தடைப்பட்டு விடுமோ என்ற பயமும் இருக்க தான் செய்தது,


அதே சமயம் தனக்கு கிடைக்கும் நேரத்தை பயன்படுத்திய ஜெய்சங்கரோ அழைப்பு மூலம் அடிக்கடி வித்யாவிடம் பேசுவது உண்டு, அவனின் பேசியிலே தன்னை அவனுக்கு பிடித்து இருக்கிறது, ஆனாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளவும் மாட்டான் அதிகம் யாரிடமும் பேசவும் மாட்டான், அதோடு கோபக்காரன் என்பதையும் உணர்ந்து கொண்டவளோ, தன் மீது அவனுக்கு இருக்கும் காதலால் தன் கனவிற்கு உறுதுணையாக இருப்பான் என்று நம்பிக்கையுடன் கல்யாண வாழ்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.
 
  • Love
Reactions: Kameswari

MK29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
33
25
18
thanjavur
இப்படியே நாட்கள் நகர்ந்து திருமணம நாளும் வர, இருவீட்டாரின் ஆசியுடன் வித்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டவனோ நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு வித்யாவை தன் மனைவியாக்கி கொண்டான்.


அனைத்தும் முடிந்து தன் தந்தையிடமிருந்து விடை பெற்று புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தவளோ, பூஜை அறையில் விளக்கேற்றி தெய்வத்தை வணங்கி முடிய, மணமக்கள் இருவருக்கும் செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் முடிந்தது,


திருமண நாளில் குடும்ப வாழ்கையில் ஈடுபட்டவளுக்கு அப்படியே ஒரு வாரம் கழிந்து விட,


காலையில் மாமியாரின் அர்ச்சனைகளை காதில் வாங்கியவாறே செய்ய வேண்டிய வேலைகளை செய்துமுடித்து கணவனை அலுவலகம் அனுப்பிவிட்டு, அறைக்குள் ஓய்வெடுக்க வந்து படுக்கையில் அமர்ந்தவளின் சிந்தையில் நாளையோடு திருமணத்திற்காக தான் எடுத்து விடுப்பு முடிகிறதே என்பது நினைவிற்கு வர,


"அய்யோ.. நாளையோட லீவ் முடிய போகுது.. என்னோட பரதத்த பத்தி இதுவரைக்கும் அவரு ஒரு தடவ கூட கேட்டதே இல்லையே, பின்ன எப்படி அவர்கிட்ட பேசுறது.. வேற வழியில்ல இன்னைக்கு ஆபீஸ் விட்டு வந்ததும் எப்படியாவது கேட்டுற வேண்டி தான்... அம்மா.. எனக்கு நீ தான் உதவி பண்ணனும்" என்று கூறி அன்னையிடம் வேண்டுதல் விடுத்தவளோ, கணவனின் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள்.


இப்படியே நேரங்கள் கடக்க அலுவகத்தில் இருந்து வந்தவனோ, அறைக்குள் சென்று தன்னை சுத்தபடுத்திவிட்டு அனைவருடனும் சாப்பிடுவதற்காக வந்தமர, உணவு பரிமாறி கொண்டிருந்த வித்யாவோ "எல்லார்கிட்டயும், ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்று கூற,


ராஜனோ "என்ன விஷயம் அண்ணி.. சொல்லுங்க" என்று கேட்க, மீதி மூவரும் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தனர்


"அது வந்து.. நாளைல இருந்து பரதம் கிளாஸ் போகனும்.. லீவ் இன்னயோட முடியுது" என்று கூற,


அவள் வேலைக்கு செல்ல வேண்டுமென்று கேட்கிறாள் என்றதும் கடுப்பான நாகவள்ளியோ "அப்போ நாளைக்கு போய்.. இனி மொத்தமா லீவ்ன்னு சொல்லிடு.. அதோட குடும்ப பொண்ணா லட்சணமா தைய தக்கான்னு குதிக்காம அடக்க ஒடுக்கமா வீட்டில இருந்தோமா குடும்ப நடத்துனோமா பிள்ளைய பெத்தோமா.. பிள்ளைய நல்லா வளத்தோமான்னு இருக்கணும்.. நீ வேலைக்கு போய் வாங்குற காசுல சாப்பிடுற அளவுக்கு நாங்க வக்கெத்து போய் இல்ல.. அதுக்கு தான் ரெண்டு ஆம்பள பிள்ளைய பெத்து வச்சிருக்கேன்.. நீ வீட்டுக்கு மருமகளா எதுக்கு வந்தியோ.. அந்த வேலைய மட்டும் பாரு" என்று கூற


அதைக் கேட்ட ராஜனோ "என்னமா பேசுற.. அவங்க வேலைக்கு போறது உனக்கு என்ன பிராப்ளம்.. அது அவங்க தனிபட்ட விருப்பம்.. நீ எப்படி போக கூடாதுன்னு சொல்லலாம்" என்க,


அதைக் கேட்டு, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஜெய்சங்கரோ "டேய்.. அதான் அம்மா பேசுறாங்க தான.. மரியாத இல்லாம குறுக்க பேசுற.. நானே பெரியவங்க பேசுறாங்கன்னு தான அமைதியா இருக்கேன்.. என் பொண்டாட்டிய தான சொல்லுறாங்க.. உனக்கு என்ன வந்துச்சு பேசாம சாப்பிடு" என்று முகத்தில் அடித்த போல் பேசிவிட,
அதற்கு மேல் அங்கிருக்க மனமில்லாத ராஜனோ எழுந்து அறைக்குள் சென்று விட,


சாப்பிட்டு முடித்த மாமியாரோ "கிளி பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிருக்கேன் புரிஞ்சி நடந்துகிட்டா வீடு வீடாயிருக்கும்" என்று கூறி எழுந்து செல்ல, மாமனாரோ "இங்க பாருமா வித்யா.. நீ வேலைக்கு போறதுல எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல.. உன் புருஷனுக்கு சம்மதம்ன்னா.. நீ தராலமா போகலாம்" என்று கூறியவரோ சாப்பிட்டு எழுந்து சென்றார்.


அனைவரின் பேச்சை கேட்டவளுக்கோ, தங்களின் கனவு சிதைந்து விடுமோ என்ற எண்ணம் எழ, சாப்பிடும் எண்ணம் கூட தோன்றாமல் அடுத்து என்ன செய்வது தன் கனவு அனைத்தும் கானல் தானா? என்று மனதில் பல கேள்விகளோடு அப்படியே நின்று கொண்டிருந்தவளோ, இழந்த நம்பிக்கை மறுபடியும் இழுத்து பிடித்து நேராக அறைக்குள் சென்று மடிக்கணினியை தட்டிக்கொண்டிருந்த கணவனிடம் "ஏங்க.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"


"கொஞ்சம் வேலையா இருக்கேன் அப்புறம் பேசலாம்"


"இப்போவே பேசணும்"


"என்னடி வேணும் வேலையா இருக்கேன்னு சொல்றேன்ல.. காது நல்லா கேக்கும் தான.. படுத்தமா ஓரமா போ" என்று கூறியும், அந்த இடத்தைவிட்டு நகராமல் நிற்பதில் கடுப்பானவனோ "ச்.. சரி சொல்லு என்ன பேசணும்"


"நான் சாப்பிடும் போது சொன்னது பத்தி எதுவுமே சொல்லல"


"நான் என்ன சொல்லுறது.. அதான் எனக்கும் சேத்து அம்மா சொல்லிட்டாங்களே"


"என்னங்க சொல்லுறீங்க.. அவங்க தான் புரியாம பேசுறாங்க.. நீங்க தான் எடுத்து சொல்லி புரிய வைக்கணும்.. நீங்களே இப்படி பேசுனா எப்படி"


"எப்படின்னா.. நீ வேலைக்கு போறதுல எனக்கு துளியும் இஷ்டம் இல்ல.. புருஷன் கை நிறைய சம்பாதிக்கும் போது பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு என்ன அவசியம்.. அதே சமயம் பொண்டாட்டிய வேலைக்கு அனுப்புறான்னு நாலு பேரு சொல்லி அசிங்க படுத்துனா எனக்கு தான் கேவலம்.."


"என்னங்க இப்படி பேசுறீங்க.. உங்க கண்ணுக்கு பொண்டாட்டி ஆசைய விட நாலு பேரு பேசுறது தான் பெருசா தெரியுதுல"


"ஆமா அப்படி தான்டி.. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.. அதுக்காக என்ன மீறி நீ எது செஞ்சாலும் என்னால ஏத்துக்க முடியாது.. இப்போ கூட நீ எனக்கு சரிசமம்மா நின்னு பேசுறதே சுத்தமா பிடிக்கல.. இதுக்கு மேல இப்படி பேசுனா பொறுமையா கேட்டுட்டு இருக்க மாட்டேன்"


"இப்போ முடிவா என்ன தான் சொல்ல வரீங்க"


"அம்மா சொன்ன போல.. நாளைக்கு போய் மொத்தமா லீவ் சொல்லிட்டு வந்துரு.. சொன்னத கேட்டு நடந்துக்கிட்டா.. நம்ம லைஃப்க்கு நல்லது.. தேவையில்லாம எதாவது பண்ணி, உங்க அப்பா மனச கஷ்டப்படுத்தாத.. புரியும் நினைக்கிறேன்" என்று கூறியவனோ மடிக்கணினியில் மூழ்கிவிட்டான்.


இதையெல்லாம் கேட்ட வித்யாவுக்கோ பைத்தியம் பிடிக்காத நிலை, வேகமாக பால்கனி பக்கம் சென்றவளுக்கோ கத்தி அழ வேண்டுமென்ற உணர்வு, ஆனால் அதற்கு கூட பெண்ணவளுக்கோ சுதந்திரம் இல்லாததால் கரங்களால் வாயை முடி சத்தம் வராமல் தேம்பி தேம்பி அழுதாள்.


இப்படியே கணவனிடம் பலமுறை தன் கனவை நனவாக்கஜிய அவனிடம் சம்மதம் எதிர்பார்த்து தோல்வி அடைந்தவாறே குடும்ப வாழ்கை கழிக்க பழகியவளுக்கோ மறுவருடமே ஆண் குழந்தை பிறக்க, ஆறு மாதம் கடந்திருந்த நிலையில் ராஜனின் கல்யாணம் பேச்சு தொடங்கி ஒரு பெண்ணை பார்த்து தேர்வு செய்தவார்களோ, குடும்பத்துடன் பூ வைப்பதற்காக சென்றனர்.


வீட்டிற்கு வந்தவர்களை ராஜமரியாதையோடு அமர வைத்து பேசிகொண்டிருந்த பெண்ணின் தந்தையோ தன் மனைவியிடம் "மேகலைய அழைச்சிட்டு வா" என்று கூற,


அவரும் மகளை அழைத்து அனைவருக்குமான தேனீரை அவள் கையில் கொடுத்துவிட, அதை வாங்கி அனைவருக்கும் கொடுத்துவிட்டு அன்னையின் அருகில் நிற்க,


பெரிய இடத்து சம்மந்தம் என்பதால் அனைவரிடமும் சிரித்த முகமாக பழகிய நாகவள்ளியோ மருமகளிடம் "அம்மாடி மேகல.. உனக்கு என் பையன பிடிச்சிருக்கான்னு வெக்கப்படாம சொல்லு" என்று கூற,


மேகலையோ "நான் அவர்கிட்ட பேசணும்"


"அதுக்கென்ன தாராளமா பேசலாம்.." என்று கூறி மகன் புறம் திரும்பியவரோ "டேய் போடா.. என் மருமகட்ட பேசிட்டு வா"


"இல்ல இல்ல.. தனியா வேண்டாம்.. எல்லார் முன்னலாயும் தான் பேசணும்" என்க,


ராஜனோ "ம் சொல்லு"


"எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு.. ஆனா.."


"எதா இருந்தாலும் தயங்காம சொல்லு"


"நான் ஐடி கம்பனில தான் வொர்க் பண்றேன்.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் வொர்க் கண்டின்னு பண்ண ஆசப்படுறேன்.." என்று கூறி, முடிப்பதற்குள் தொடர்ந்த ராஜனோ "கல்யாணத்துக்கு அப்புறம்.. நீ விருப்பப்பட்ட போல வேலைக்கு போகலாம்.. எனக்கு அதுல முழு சம்மதம்"


"நிஜமா தான் சொல்லுறீங்களா.. அப்புறம் பேச்சு மாற மாட்டீங்களே"

"தாராளமா நீ வொர்க் பண்ணலாம்.. பட் பிரேகன்ஸி டைம்லயும் குழந்த பிறந்து ஒன் ஆர் டூ இயர்ஸ்க்கு மட்டும் வொர்க் போக சம்மதிக்க மாட்டேன்.. அதுக்கு அப்புறம் நீ தாராளமா போகலாம்.. என்னோட கண்டிசன் உனக்கு ஓகே வா"


"கண்டிப்பா.. எனக்காகவும் நம்ம பேபி ஹெல்த்க்காவும் சொல்லுறீங்க.. சோ உங்க கண்டிசன் அக்செப்டட்" என்று கூறினாள்.


மேகலையின் பேச்சு நாகவள்ளிக்கு பிடிக்கவில்லை என்றாலும் மறுப்பு தெரிவித்து, பெரிய இடத்து சம்மந்தத்தை விட மனமில்லாததால் திருமணம் முடிந்து அவளை தன் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அடக்கி வாசித்தவரோ, சிரித்தவாறே மேகலையின் தலையில் பூ வைத்துவிட்டு, மேற்கொண்டு பேச வேண்டியதை பேசி விடை பெற, வீட்டிற்கு வந்ததுமே அனைவரிடம் பேச தொடங்கிய ராஜனோ "இங்க பாருங்க என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்கு போவா.. இப்போ நல்ல பிள்ள மாதிரி தலையாட்டிட்டு நாளைக்கு அவ வீட்டுக்கு வந்ததும்.. உங்க வேலைய காட்டுவீங்கன்னு, எனக்கு நல்லா தெரியும்.. அப்படி எதுவும் நடந்துச்சு நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்" என்று கூற,


ஜெய்சங்கரோ "டேய் என்னடா பேசுற.. நாளைக்கு வர போற பொண்டாட்டிக்காக.. அம்மாவ மதிக்காம பேசுற.. வாய மூடுடா"


"நான் எங்க அம்மாகிட்ட தான் பேசுறேன்.. அதுவும் என் பொண்டாட்டி பத்தி நான் பேசுவேன்.. நீ உன்னோட வேலைய மட்டும் பாரு" என்று கூறி செல்லும் ராஜனை பார்த்த வித்யாவிற்கோ அவன்மேல் உள்ள மரியாதை அதிகரித்தது.

இவனின் பேசியில் அவமானத்தை உணர்ந்த ஜெய்சங்கரோ, அதற்கு மேல் தம்பியிடம் அதிகம் பேசுவதையே நிறுத்தி விட்டான்.


இப்படியே நாட்களும் நகர இருவருக்கும் திருமணம் முடிந்தது,


இப்போது ஒரு வாரம் அலுவலகம் செல்ல விடுப்பு எடுத்தவளோ, அதன் பிறகு கணவனின் துணையோடு அலுவலகம் செல்ல தொடங்கினாள்.


சில நேரங்களில் மாமியாரின் குத்தல் பேச்சு பிடிக்கவில்லை என்றாலும் தன்னவனுக்காக அனைத்தையும் பொறுத்து கொண்டவளோ, ஒரு நேரத்தில் சந்தேகம் எழ வித்யாவிடம் அனைத்தையும் கேட்டு தெரிந்தவளுக்கோ ராஜன் தனக்காக பேசியதில் அவன்மேல் எல்லையில்லா காதல் பெருக,



மறுவருடமே பெண் குழந்தை பெற்று கணவனின் சொல்படி பிறந்து ரெண்டு வருடம் குழந்தை வளர்ப்பதிலே கவனத்தை செலுத்தியவளோ, அதன் பின் வேலைக்கு செல்ல தொடங்கினாள்.


தன் குழந்தையுடன் தங்கையின் குழந்தையும் தன் குழந்தையாகவே பார்த்து கொண்ட வித்யாவிற்கோ அவர்களுடன் கழிக்கும் நிமிடமே சொர்க்கமாகி போக, அவ்வாறே பத்து வருடமும் கழிந்து விட, அவளின் லட்சியமோ கனவாகி போனதே என்று நினைத்தவாறே கையிலிருந்த செருகேடை முடியவளோ கடந்து காலத்தில் இருந்த எண்ணத்தை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்து, அன்னையின் புகைப்படத்தில் இதழ் பதித்தவளோ, அதை அணைத்தவாறே தரையி
லே உறங்கி விட, இடையில் தூக்கம் களைந்த ஜெய்சங்கரோ மனைவி தரையில் படுத்திருப்பதை கண்டு, எழும்பி, அவளை தன் கையில் ஏந்தி படுக்கையில் கிடத்தினான்



கானல் தொடரும்..

இப்படிக்கு
கருப்பட்டி மிட்டாய்
❤️
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ராஜன் அவன் மனுஷன் ❤️ மேகலை லக்கி கேர்ள்😍

ஜெய்சங்கர் அவனைப் பத்தி சொல்ல ஒண்ணுமில்ல 🫤 வித்யா அன்லக்கி கேர்ள் 😢
 
  • Love
Reactions: MK29

MK29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
33
25
18
thanjavur
ராஜன் அவன் மனுஷன் ❤️ மேகலை லக்கி கேர்ள்😍

ஜெய்சங்கர் அவனைப் பத்தி சொல்ல ஒண்ணுமில்ல 🫤 வித்யா அன்லக்கி கேர்ள் 😢
Ellarkkum rajan kidaikkirathu illaiye sis.. nandri sis ❤️❤️