கானல் - 7
இப்போது வழக்கம் போல் காலையில் எழுந்து தயாராகியவள், சமையல் அறைக்குள் நுழைந்த கணம், அவள் முகம் சிவந்து வீங்கிருப்பதை கண்ட மேகலையோ "அக்கா.. என்னாச்சி நைட்லாம் தூங்கலயா.. கண்ணுலாம் ரெட்டிஷா இருக்கு"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. எதாவது அலர்ஜியா இருக்கும் போல"
"அலர்ஜி மாதிரி இல்லயே.. நைட்லாம் தூங்காம அழுதா மாதிரி தான் மூஞ்சுலாம் வீங்கி கண்ணு ரெட்டிஷா இருக்கு"
"அப்படிலாம் இல்ல மேகல.. எதாவது டஸ்ட் பட்டு அலர்ஜி ஆகிருக்கும் அவ்வளவு தான்.. கொஞ்சம் நேரம் போனா அதுவே சரியாகிடும்.. சரி அதவிட்டுட்டு நீ போய் பசங்க எழுப்பி விடு" என்று தன் பேச்சை மாற்ற,
அதை பெண்ணவளும் அறியாமல் இல்லை, இருப்பினும் அவள் கூறாமல் தானாகவே எதுவும் கேட்க வேண்டாமென்று எண்ணியவளோ, குழந்தைகளை பள்ளிக்கு செல்வதற்கு தயாராக்க சென்று விட்டாள்.
இப்படியே நேரங்கள் கடக்க, அனைவரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட, அனைத்து வேலையும் முடித்த களைப்பில் படுக்கையில் வயிறை பிடித்தவாறு சுருண்டு படுத்து கிடக்க, கதவு பலமாக தட்டப்படும் சத்தம் கேட்டு மெதுவாக இறங்கி கதவை திறந்தவளோ, வெளியே நிற்கும் மாமியாரை கண்டு "சொல்லுங்க அத்தை"
"எத்தன தடவ சொல்லிருக்கேன்.. மாத்திரை தீருறதுக்குள்ள வாங்கி வைன்னு.. சொல்லுற வேலைய கூட உன்னால உருப்படியா செய்ய முடியாதா.. ச்ச எப்போ பாரு எதையாவது ஒன்னு பண்ணி என்ன டென்ஷன் பன்றதே.. உன் வேலையா போச்சு.. போ மெடிக்கல் போய் இந்த சுகர் மாத்திரை வாங்கிட்டு வா.. புடி" என்று பழைய மாத்திரை அட்டையை அவள் திணிக்க,
அவளோ "சாரி அத்தை மறந்துட்டேன்.. இன்னைக்கு மதியம் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. நைட்டுக்கு மேகலய வாங்கிட்டு வர சொல்லுறேன்"
"ஏன்.. மகாராணிக்கு வாங்க போக முடியாதோ"
"இல்ல அத்த.. கொஞ்சம் முடியல.. பீரியட்ஸ் அத்தை வயிறு வேற ரொம்ப வலி.. டையடாவும் இருக்கு.. வெளிய எங்கேயும் என்னால போக முடியாது அத்த.. மதியம் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. நைட் கண்டிப்பா மேகலகிட்ட வாங்க சொல்லிடுவேன்"
"ஏன்டி.. மகாராணி உங்களுக்கு மட்டும் தான் வீட்டு தூரம் அதிசயமா வருர மாதிரி பேசுற.. ஊருல எல்லாரும் இத வச்சிட்டு வேலைக்கு கூட போயிட்டு வர தான செய்றாங்க.. உனக்கு பக்கத்துல இருக்கிற மெடிக்கல் போயிட்டு வர வலிக்குதா"
"இல்ல அத்தை.. எப்போவும் ஓகேயா தான் இருப்பேன்.. இந்த தடவ தான் ரொம்ப முடியல"
"இங்க பாருடி.. இந்த பேச்செல்லாம் என்கிட்ட வச்சிக்காத.. எனக்கு வாங்கி கொடுக்க உனக்கு இஷ்டம் இல்லன்னா இல்லன்னு நேரடியா சொல்லு.. அதவிட்டுட்டு சாக்கு போக்கு சொல்லி சமாளிக்காத.. எனக்கு மதியம் மாத்திரை சாப்பிடாம சாப்பாடு சாப்பிட முடியாது.. ஒருநாள் பட்டினி கிடந்தா செத்தா போயிடுவேன்.. நீ போய் ரெஸ்ட் எடுமா"
"சரி அத்த.. வாங்கிட்டு வரேன் கொடுங்க" என்று கூறி, அவரிடமிருந்து மாத்திரை அட்டையை கையில் வாங்கியவளோ, வயிறு வலியுடனே மெதுவாக நடந்து அருகில் இருக்கும் மருந்தகத்தை நோக்கி சென்றாள்.
அனைத்து மருந்தையும் வாங்கி வீட்டை நோக்கி பயணம் தொடங்க, பெண்ணவளுக்கோ வயிற்றில் சுருக்கென்று பிடித்து இழுப்பது போல் வலி எடுக்க, இருக்கும் வலியில் அழ கூட முடியாமல் வயிற்றில் கை வைத்தவாறே வெயிலில் வேர்த்த முகத்துடனே கீழே விழுவது போல் கிறக்கமாக நடந்து கொண்டிருந்தவளுக்கோ, அதற்கு மேல் வலு இழந்ததில் மயங்கி சரிந்த நேரம் தாங்கியதோ அவளின் உரிமையாளன் ஜெய்சங்கர் தான்,
என்ன தான் அவளிடம் சிடுசிடுவென்று நடந்து கொண்டாலும், இப்போது அவள் நிலை கண்டு பதறியவனோ "ஏய் வித்யா.. கண்ண திறடி" என்று இரு கன்னங்களிலும் மாறி மாறி கரம் கொண்டு தட்டியவனோ,
அவள் விழிகள் திறக்காமல் போனதில் உள்ளம் பதறியவனோ வேகமாக, அவளை கரங்களில் அள்ளிக்கொண்டு தன் காரில் படுக்க வைத்துவிட்டு அருகில் இருந்த கடையில் தண்ணீர் குவளை வாங்கி வந்து முகத்தில் விடாமல் தெளிக்க, அதில் சற்று மயக்கம் தெளிந்து தலையை பிடித்தவாறு எழுந்து அமர்ந்தவளிடம் தண்ணீர் குவளையை நீட்டி "குடி" என்று செய்கையில் கொடுத்தவனோ "ஆர் யூ ஓகே"
"பைன்"
"முடியலன்னா எதுக்கு வெளிய வர.. வீட்டுலயே இருக்க வேண்டி தான.. நான் மட்டும் வரலன்னா என்னாகிருக்கும்"
"அத்தைக்கு சுகர் டேப்லெட் தீந்து போச்சுன்னு சொன்னாங்க.. அதான் வாங்க வந்தேன்"
"ஒருவேளை அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்லி.. நைட்டுக்கு வாங்கிட்டு வர சொல்லிருந்தா நானே வாங்கிட்டு வந்துருப்பேனே"
"இல்லங்க எப்போவும் முன்னமே மேகலகிட்ட சொல்லி வாங்க சொல்லிடுவேன்.. இந்த தடவ மறந்துட்டேன்.. மதியம் சுகர் டேப்லெட் போடாம அத்த சாப்பிட மாட்டாங்க.. அதான் நானே வந்தேன்.. அத விடுங்க நீங்க எப்படி இங்க.. ஆபீஸ் போகலயா"
"அது சரி.. நான் என்ன சொல்லுறேன், அத கொஞ்சம் கூட காதுல வாங்காம என்னைய திருப்பி கேள்வி கேக்குற"
"சரிங்க.. நீங்க ஆபீஸ் கிளம்புங்க.. நான் வீட்டுக்கு போயிடுறேன்"
"நீ ஓகே தான.. ஹாஸ்பிட்டல் போயிட்டு வரலாமா"
"இல்லங்க.. நான் ஓகே தான்.. பீரியட்ஸ்னால கொஞ்சம் டையடா இருக்கு.. மத்தபடி வேற ஒன்னும் இல்ல.. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்தா நார்மல் ஆகிடுவேன்"
"சரி விடு.. நானே ட்ராப் பண்றேன்"
"இல்லங்க.. நீங்க ஆபீஸ் போங்க.. நான் போயிக்குறேன்"
"வொர்க்லாம் இல்ல ஹாஃப் டேய் லீவ் போட்டிருக்கேன், என்கூட வேலை பாக்குற ஸ்டாப் ஒருத்தருக்கு மேரேஜ்.. அதுக்கு போயிட்டு இருக்கும் போது தான் உன்ன பாத்தேன்"
"சாரிங்க.. இப்போ கூட டைம் இருக்கு.. நீங்க போகலாம்.. நான் இப்போ ஓகே தான் நடந்தே போயிடுவேன்"
"வாய மூடுடி.. அதான் சொல்றேன்ல குறுக்க குறுக்க பேசிக்கிட்டே இருக்க, எனக்கு எப்போ என்ன பண்ணனும்ன்னு தெரியும்.. நீ சொல்லி தராத" என்று கத்திவிட்டு காரில் ஏறி வீட்டிற்கு சென்றான்.
இப்போது வீட்டு வாசலில் காரை நிறுத்தியவனோ "நீ உள்ள போ.. நான் கார பார்க் பண்ணிட்டு வரேன்_ என்று கூற, அவளும் மெதுவாக நடந்து வீட்டினுள் காலை வைத்த மறுநொடி அவள் கையிலிருந்த மாத்திரை பையை பிடுங்கிய மாமியாரோ "ஏன்டி.. பக்கத்துல தான மருந்து கடை இருக்கு.. அங்க போய் இந்த ஒரு மாத்திரை வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா"
"உடம்பு முடியலன்னு சொன்னேன்ல மெதுவா தான் நடந்து போனேன்.. அதான் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு"
"யாருக்கு தெரியும்.. அப்படியே எங்கையாவது ஊர் சுத்திட்டு வந்திருப்ப.. கேட்டா முடியல மெதுவா நடந்தேன்னு, நீ சொல்லுறத நம்புறதுக்கு.. நான் என்ன முட்டாளா" என்று கூறி கொண்டிருக்க, உள்ளே வந்த ஜெய்சங்கரோ மனைவிடம் "நீ போய் ரெஸ்ட் எடு போ" என்று கூற, அவன் கூறியதை கேட்டு ஓய்வெடுக்க அறைக்கு செல்ல மாடியேறினாள்.
அவள் சென்றதும் நாகவள்ளியோ "டேய்.. வந்ததும் வராததுமா பொண்டாட்டி மேல அவ்வளவு அக்கற"
"கொஞ்சமும் மனசாட்சியில்லயம்மா உனக்கு.. உடம்பு சரியில்லன்னு சொல்லியும் மாத்திரை வாங்கி வான்னு சொல்லிருக்க.. உன்னால ஒருவேளை அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதா.. நீ பண்ணின வேலையால அவளுக்கு என்னாச்சின்னு தெரியுமா" என்று நடந்ததை கூறி முடித்தவனோ,
"நான் மட்டும் கரெக்ட்டா போலன்னா ரோட்டுல விழுந்து கிடந்திருப்பா.. என் அம்மா இப்படிருக்க.. எனக்கு தான் அந்த வலியெல்லாம் புரியாது.. ஆனா.. நீயும் ஒரு பொண்ணு தான அந்த வலியெல்லாம் தாண்டி தான வந்துருப்ப அப்போ ஏன் புரிஞ்சிக்கமா.. முட்டாள் மாதிரி நடந்துக்குற"
"டேய்.. அவ சும்மா சொல்லுறான்னு நினைச்சேன்டா"
"இப்படி அசிங்கமா சொல்லி சமாளிக்காத எரிச்சலா வருது.. சரி அவள விடு.. இதே உனக்கு பொண்ணு இருந்தா இப்படி பண்ணிருப்பியா இல்ல.. அவ மாமியாவ தான் பண்ண விட்ருபியா"
"டேய்.. அப்போ நான் அவள கொடும பண்றேன்னு சொல்லுறியா"
"மத்த விஷயத்துல எப்படின்னு தெரியாது ஆனா.. இன்னைக்கு நடந்த விஷயம் ரொம்ப தப்பு.. இதுவர நான் இல்லாத நேரம் அவள நீ என்ன பண்ணுவ ஏது பண்ணுவன்னு கூட எனக்கு தெரியாது, ஏன் அவ சொல்லவும் மாட்டா நானும் கேக்கவும் மாட்டேன்.. நீ பேசுறது கேட்டு அமைதியா இருக்கிறதுனால எப்பவுமே அப்படி இருப்பேன்னு நினைக்காத" என்று கூறி வெளியே செல்ல,
அறைக்கு சென்ற வித்யாவோ தனக்காக அவன் பேசுவதை அறை கதவருகில் நின்று கேட்டு கொண்டிருந்தவளுக்கோ
தன் கனவை நிறைவேற்றவில்லை என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் அவன் தனக்காக யோசிக்கிறான் என்பதை நினைக்கும் போது பெண்ணவளின் மனதியில் ஏற்பட்ட நிறைவுடனே அறைக்குள் நுழைந்து படுக்கையில் படுத்து உறங்கிவிட்ட நேரம் அறைக்குள் வந்த, ஜெய்சங்கரோ அவளை எழுப்பிவிட்டு "இந்தா.. இந்த ஜுஸ் குடிச்சிட்டு தூங்கு"
தான் கூறியதை கேட்டு விழிவிரித்து பார்ப்பவளை கண்டவன் "என்ன பாக்குற.. ஓவர் சீன் கிரேட் பண்ணாத கடைல தான் வாங்கிட்டு வந்தேன்" என்க
அதை கேட்டு அமைதியாக, அவன் கையில் உள்ளதை வாங்கி குடித்
தவளோ "தேங்க்ஸ்ங்க"
"உன் தேங்க்ஸ் எதிர்பார்த்து ஒன்னும்.. நான் செய்யல" என்று கூறி வெளியே செல்ல, பெண்ணவளும் படுத்து உறங்கிவிட்டாள்.