• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காரிகையின் கனவுகள் கானல் தானா..? , கானல் - 8 .

MK29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
33
25
18
thanjavur
1000069186.jpg




கானல் - 8

காலையில் எழுந்தவளுக்கோ மனது பாரமாகவே தோன்ற, இதுவரை தன் கனவை அடைந்து விடலாம் என்று ஒரு மூளையில் நம்பிக்கையோடு வாழும் வித்யாவிற்கோ நம்பிக்கை போன உணர்வு,


அதோடு என்னடா வாழ்கை இது என்று நினைக்கும் அளவு வெறுத்துவிட்டாலும் குழந்தைகளுக்காக வாழந்தாக வேண்டுமே என்ற நிலையில் உள்ளே சோகமாகவும் வெளியே அச்சோகத்தை மறைத்தும் கடமைக்காகவே வாழும் வித்யாவோ விரக்தி புன்னகையை அன்னையின் புகைப்படத்தை பார்த்து சிந்திவிட்டு, அன்றாடம் வேலையை தொடங்குகிறாள்.


அனைவருக்கும் சாப்பாடு பரிமாறி கொண்டிருந்த நேரம் வித்யாவின் திறன்பேசி தொடர்ந்து ஒலிக்க, இந்நேரம் தந்தை அழைப்பதால் கேள்வியாகவே திறன்பேசி அழைப்பை ஏற்க போனவளை


கடுப்புடன் கண்ட மாமியாரோ "எத்தன தடவ சொல்லிருக்கேன் ஃபோன்ன ரூம்மோட வச்சிக்கோன்னு கேட்கிறது இல்ல.." என்று கூறி கொண்டிருக்க மறுபடியும், அவளின் திறன்பேசி அலற


"அப்பா தான் அத்தை.. எப்போவும் இந்த டைம்ல கால் பண்ண மாட்டார்.. என்னன்னு மட்டும் கேட்டுக்குறேன்"



"ஃபோன் பேச இதான் நேரமா.. வேலை பாக்கும் போது வேலைல தான் கவனம் இருக்கணும்.. ஃபோன் ஆஃப் பண்ணி போட்டுட்டு வேலைய பாரு அப்புறம் பேசிக்கலாம்" என்று கூற,


ராஜனோ "எம்மா.. எதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது.. ரெண்டு வார்த்த என்னன்னு கேட்கிறதுல என்னாகிட போகுது.. பாவம் வயசானவரு தனியா வேற இருக்காரு" என்று கூறி வித்யாவின் புறம் திரும்பியவனோ "அண்ணி.. நீங்க பேசுங்க" என்று கூற,


இப்போது அழைப்பை ஏற்றவளோ "சொல்லுங்க அப்பா.. என்ன விஷயம்" என்று கேட்டவளோ, மறுபக்கத்தில் இருந்து வந்த பதிலை கேட்டு உறைந்தவள் "என்ன சொல்லுறீங்க.. இதோ உடனே வாரேன்" என்று பதற்றத்துடனே அழைப்பை துண்டித்தவளிடம் மேகலையோ "என்னாச்சி அக்கா.. ஏன் இவ்வளவு டென்ஷன்.. அப்பா என்ன சொன்னார்"


"அப்பாக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சாம்.. ஹாஸ்பிட்டல் அட்மிட் பண்ணிருக்கோம்.. உடனே வாங்கன்னு ஒருத்தர் சொன்னார்"


அதற்கு ராஜனோ "என்ன அண்ணி சொல்லுறீங்க.. ஆக்ஸிடென்டா"


"இப்போ, எனக்கு பேச டைம் இல்ல.. நான் உடனே ஹாஸ்பிட்டல் போறேன்.. போயிட்டு வந்து மத்தத சொல்லுறேன்"


"அண்ணி.. நீங்க தனியா போக வேண்டாம்.. நானும் மேகலையும் உங்க கூட வரோம் மூணு பேரும் சேந்தே போகலாம்.. இருங்க கார் சாவி எடுத்துட்டு வரேன்" என்று கூறி கார் சாவி எடுத்து வர, மூவரும் மருத்துவமனையை நோக்கி சென்றனர்.


மருத்தமனையில் காரை நிறுத்திய, மறுநொடி வேகமாக இறங்கி, ஐசியூ நோக்கி விரைந்து உள்ளே செல்ல போனவளை தடுத்த அம்மருத்தவமனை செவிலியரோ "நீங்க.. அந்த பேசன்ட்க்கு என்ன வேணும்"


"அவர் என்னோட அப்பா தான்.. எதுவும் பிராப்ளம் இல்ல தான.. அவர் ஓகே வா"


"ஆக்ஸிடென்டானதுல பயங்கரமா அடிப்பட்டிருக்கு பிளட் வேற ஒரு பக்கம் ஓவர் லாஸ் ஆகுது.. டாக்டர் ஆபரேஷன் பண்ணனும் சொல்லிருக்கார்.. நீங்க போய் டாக்டர பாருங்க.. அவரே டீட்டைலா சொல்லுவார்" என்று கூறிவிட்டு செல்ல, அதில் பயந்த வித்யாவோ "என்ன மேகல ஆபரேஷன் அது இதுன்னு சொல்லுறாங்க.. எனக்கு பயமா இருக்கு.. அப்பாக்கு எதுவும் ஆகாது தான.."


"அக்கா.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. வாங்க நம்ம டாக்டர் பாத்துட்து வரலாம்" என்று கூறி, மருத்துவரை காண அறைக்குள் சென்றார்கள்.


வந்தவர்களை அமர கூற, வித்யாவோ "டாக்டர் இப்போ அப்பா.. எப்படி இருக்கார்.. எதுவும் பிராப்ளம் இல்லையே"


"கொஞ்சம் நேரம் முன்னாடி ஆக்ஸிடென்டல அட்மிட்டாகி ஐசியூல இருக்கிறாரே.. அவர பத்தி கேக்குறீங்களா"


"ஆமா டாக்டர்.. அவர் என்னோட அப்பா"


"ஓகே பைன்.. தலைலயே அடி பலமா பட்ருக்கு சோ ஆபரேஷன் பண்ணியேயாகனும் இல்லன்னா ரொம்ப கஷ்டம்"


"டாக்டர்.. என்ன சொல்லுறீங்க ஆபரேஷனா"


"புரிஞ்சுக்கோங்க பீ சீரியஸ் கண்டிப்பா ஆபரேஷன் பண்ணியே ஆகனும்.. அதுவும் முடிஞ்ச அளவு இன்னைக்கே பண்றது நல்லது.." என்று கூற,


மேகலையோ "ஆபரேஷன் பண்ணினா காப்பாத்திடலாம் தான.. எதுவும் பிராப்ளம் ஆகாதே"


"கண்டிப்பா காப்பாத்திடலாம்.." என்று கூற,


அதற்கு ராஜனோ "ஓகே டாக்டர்.. ஆபரேஷன் பேமென்ட் எவ்வளவு ஆகும்"


"4 டூ 6 லக்ஸ் ஆகும்.. அது போக மருந்து மாத்திரை செலவு தனியா இருக்கும்.. எதுக்கும் ரிசப்ஷன்ல கேட்டுக்கோங்க.. அவங்க கரெக்ட்டா சொல்லுவாங்க"


"அவ்வளவு அமௌன்ட் ஆகுமா"


"கண்டிப்பா.. முத அட்வான்ஸ் ஹாஃப்பா பே பண்ணிட்டீங்கன்னா ஆபரேஷன் முடிஞ்சி மீதி பே பண்ணிக்கலாம்" என்று கூற,


மேகலையோ "ஓகே டாக்டர்.. நாங்க ரெடி பண்றோம்.. இப்போ அப்பாவ பாக்க முடியுமா"


"ஓகே பாருங்க பட் டிஸ்டர்ப் பண்ண கூடாது.. யாராவது ஒருத்தர் மட்டும் போய் பாருங்க"


"தங் யூ டாக்டர்" என்று கூறிவிட்டு அங்கிருந்து விடை பெற்று வெளியே வர, வித்யாவோ தலையில் கைவைத்தவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர, அவளை கண்ட மேகலையோ "அக்கா தைரியமா இருங்க.. அப்பாக்கு ஒன்னும் ஆகாது.. நம்ம காப்பாத்திடலாம்"


"எப்படி.. அவ்வளவு பணத்துக்கு எங்க போறது"


"பாத்துக்கலாம்.. நீங்க உள்ள போய் அப்பாவ பாத்துட்டு வாங்க" என்று கூறி அனுப்பி வைத்தாள்.


உள்ளே வந்து தந்தையின் நிலை கண்டு அழுதவளோ, ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டு கண்களை அழுத்தி துடைத்துவிட்டு "உங்களுக்கு எதுவுமே ஆக விட மாட்டேன்ப்பா" என்று கூறி வெளியே வந்தவளோ, ராஜனிடம் "தம்பி.. என்கூட பேங்க் வரீங்களா.. நான் பரதம் கிளாஸ் போகும் போது சேத்து வச்ச பணம் இருக்கு.. அதவச்சி அட்வான்ஸ் முத கட்டி ஆபரேஷன் முடியவும் மீதி பணத்துக்கு எதாவது பண்ணலாம்"


"என்ன அக்கா.. அந்த பணம், உங்க அம்மா கனவுக்கு சேத்து வச்சதுன்னு சொன்னீங்க.. இப்போ.."


"அழிஞ்சு போக போற கனவுக்காக.. எங்க அப்பா அழிய விட முடியாது.. முதல அட்வான்ஸ்க்கு மட்டும் இத கட்டுவோம்.. லேட் பண்ண நேரம் இல்ல.. வீட்டுக்கு போயிட்டு பேங்க்கு தேவையானத எடுத்துட்டு கிளம்பலாம்" என்று கூற,


ராஜனோ "கார்ட் இருக்கும் தான.. அதவச்சி எடுக்கலாமே.. எதுக்கு பேங்க் வர போகனும்"


"கார்ட் இருந்துச்சு எக்ஸ்பிரி ஆயிட்டு.. பேங்க் போனா தான் பணம் எடுக்க முடியும்" என்று கூற, மூவரும் மருத்துவமனையில் விசாரிக்க வேண்டியவற்றை விசாரித்துவிட்டு வீட்டிற்குள் சென்று, வங்கிக்கு செல்ல தேவையானவற்றை எடுத்து வந்தவளோ "மேகல.. நீ மதியம் சமையல் மட்டும் பாத்துக்கோ.. நாங்க போயிட்டு வரோம்" என்று கூறிவிட்டு, ராஜனுடன் வங்கிக்கு சென்றாள்.


வங்கிக்கு சென்று காசோலையை நிரப்பி பணம் எடுக்கும் இடத்தில் கொடுக்க, அதை வாங்கி மடிக்கணினியில் ரெண்டு தட்டு தட்டிவிட்டு "மேம்.. உங்க அக்கவுண்ட் லாக் ஆகிருக்கு.. லாக் எடுக்கணும்ன்னா டூ டேஸ் ஆகும்.. சோ ரெண்டு நாள் கழிச்சி வந்து பணம் எடுத்துக்கோங்க"


"எனக்கு பணம் அர்ஜென்ட்டா தேவைப்படுது கொஞ்சம் சீக்கிரம் எதாவது பண்ண முடியுமான்னு பாருங்களேன்.. பிளீஸ்"


"நோ மேம்.. மினிமம் டூ டேஸ்ஸாகும்" என்று கூற,


அதைக் கேட்டு ராஜன் புறம் திரும்பியவளோ "இப்போ பணத்துக்கு.. என்ன பண்றது"


"நான் பணத்துக்கு ஏற்பாடு பண்றேன்.. நம்ம வீட்டுக்கு போகலாம்.. வாங்க" என்று கூறி, அவளுடன் வீட்டிற்கு வந்தான்.


அவர்கள் இருவரும் வருவதை கண்ட மேகலையோ "என்னாச்சிங்க பணம் கிடைச்சிதா"


"அக்கவுண்ட் லாக்காகி இருக்காம்.. பணம் டூ டேஸ் கழிச்சி தான் எடுக்க முடியுமாம்" என்று கூற, அதை கேட்டு சிந்தித்த மேகலையோ வேகமாக தன் அறையை நோக்கி சென்றாள்.


இப்போது அங்கே வந்த நாகவள்ளியோ "என்னடி தலைல கைவச்சு உக்காந்திருக்க.. உயிர் இல்லையா" என்று கூற,


அதைக் கேட்டு மாமியாரை தீயாய் முறைத்துவிட்டு அறைக்குள் செல்ல,


அப்போது அறையிலிருந்து வந்த மேகலையோ "ஏங்க.. இது நம்ம ரேஷ்மாக்காக சேத்து வச்ச பணம்.. இத இப்போ ஆபரேஷனுக்கு அக்காகிட்ட கொடுக்கலாமா" என்று கூறிகொண்டிருந்த சமயம் யோசனையுடன் அறையை விட்டு வெளியே வந்த வித்யாவோ தங்கையின் பேச்சை கேட்டவாறே நிற்க,


ராஜனோ "அப்போ இதவச்சி அட்வான்ஸ் பே பண்ணிடலாம்.. மீதி அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு வருற அண்ணி பணத்த வச்சி கட்டிடலாம்" என்று கூற,


இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த நாகவள்ளியோ "டேய் பைத்தியமா.. உங்களுக்கு பிள்ளைக்கு சேத்து வச்ச பணத்த கொடுக்குறீங்க.. கொஞ்சம் கூட அறிவில்ல"


"என்னம்மா பேசுற.. இப்போ மாமா உசுற விட பணம் முக்கியமா"


"டேய் புரியாம பேசாத.. அவரு வயசானவரு ஆபரேஷன் பண்ணியும் புலைக்காம போயிட்டா.. போன காசு திரும்ப வருமாடா" என்று கூறி முடிக்கவும் அனல் தெறிக்கும் பார்வையில் மாமியாரை எரித்து பார்த்தவாறே கீழே இறங்கியவளிடம் மேகலையோ "அக்கா.. இந்த கார்டல எப்படியும் 1.5லக்ஸ் கிட்ட இருக்கும்.. இப்போதைக்கு இதவச்சி ஆபரேஷன் ஸ்டார்ட் பண்ண சொல்லலாம்" என்று கூறி, அந்த அட்டை அவளின் கையில் திணிக்க,


மாமியாரோ "பணம் என்ன மரத்துலயா காய்க்கு அவ தான் அறிவே இல்லாம கொடுக்குறான்னா.. இவ வெக்கமே இல்லாம வாங்குறா.. அடுத்தவ உழைப்புல ஆபரேஷன் பண்ணினா உயிர் பிழைக்குமா"


அதைக் கேட்டு வித்யாவோ, மாமியாரை ஒரு பார்வையில் அடக்கிவிட்டு மேகலையிடம் "ரேஷ்மாவுக்கு சேத்து வச்ச பணத்த எனக்காக தர நினைச்ச உனக்கு என்ன கைமாறு பண்ண போறேன்னு தெரியல... இருந்தாலும் என்ன மன்னிச்சிடு என்னால இந்த பணத்த வாங்க முடியாது.."


"என்னக்கா சொல்லுறீங்க.. அவங்க சொல்லுறதெல்லாம் பெருசா எடுத்துகிட்டு.. நான் அப்பாக்காக கொடுக்குற பணத்த வேண்டாம் சொல்லுறீங்களா"


"இல்ல மேகல, எனக்கு பணத்துக்கு வழி கிடைச்சிட்டு இத நீ
யே வச்சிக்க.. திடீர்ன்னு அத்தையே கீழே விழுந்து மண்டைய உடச்சிகிட்டா அப்போ.. இந்த பணம் தேவைப்படும் வயசானவங்களுக்கு எப்போ என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாதுல" என்று கூற,
 
  • Love
Reactions: Kameswari

MK29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
33
25
18
thanjavur
நாகவள்ளியோ "ஏய் என்னடி சொன்ன.." என்று, அவளை அடிக்க கையோங்க


அவர் கையை தடுத்து உதறிவிட்டவளோ "உண்மை தான சொன்னேன் காலம் கெட்டு கிடக்கு யாருக்குனாலும் என்னாலும் நடக்கலாம்.. இப்போ என்ன பண்றீங்க.. உங்க இடுப்புல இருக்கிற சாவிய எடுத்து தரீங்களா"


"சாவிலாம் தர முடியாது.. இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா.. உன் இஷ்டத்துக்கு கேக்குற"


"எனக்கு இருக்கிற கோபத்துலயும்.. உங்கள சாப்ட்டா மரியாதை டீல் பண்ண நினைச்சேன்.. வேலைக்காகது போலயே"


"என்னால தரமுடியாதுடி.. இப்படி எங்க சொத்த திருடிட்டு போய் பண்ற ஆபரேஷன் விலங்குமா" என்று கூற,


அதில் கோபம் கொண்டவளோ "அத்தை..." என்று கற்சித்தவளின் கண்களோ சிவந்து அனல் வீசும் பார்வையாக இருக்க, அவளின் அவதாரத்தை கண்டு நாகவள்ளியே உறைந்துவிட, மீதி இருவருக்கும் அதிர்ச்சியில் கண்கள் விரிந்து கொண்டன.


இப்போது வித்யாவோ "வார்த்தைய பாத்து பேசுங்க.. அப்புறம் பேசுறதுக்கு நாக்கு இருக்காது.. கொஞ்சம் பொறுமையா இருந்தா ரொம்ப தான் எகுருறீங்க.. நெருப்புகிட்ட இருந்து தள்ளி நிக்கிற வர எந்த ஆபத்தும் வராது.. அதுவே கைவைக்க நினைச்சா போசுங்கிடுவீங்க.. இதுக்கு மேல ஒரு வார்த்தை.. என் அப்பா பத்தி எதாவது பேசுனீங்க" என்று கூறி ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டிவிட்டு,


அவர் இடுப்பில் இருந்த சாவியை உருவியவளோ பூஜை அறைக்கு அருகில் இருந்த லாக்கரை திறந்து, தன் தந்தை திருமணத்திற்காக கொடுத்த 15 பவுன் நகை மட்டும் எடுத்துவிட்டு மாமியார் அருகில் வந்தவளோ


"இது என்னோட நகை.. எனக்காக என் அப்பா போட்ட நகை.. இத நான் என்ன வேணாலும் பண்ணுவேன்.. அத கேக்க யாருக்கும் இந்த வீட்டுல உரிமை கிடையாது" என்று கூறி ராஜனின் புறம் திரும்பியவளோ "இதுல 15 பவுன் ஜூவல்ஸ் இருக்கு.. இத வித்து சீக்கிரம் பணம் ரெடி பண்ணுங்க பிளீஸ்"


"சரி அண்ணி.. நான் பாத்துக்கிறேன்.. நீங்க ஹாஸ்பிட்டல் போங்க.. நான் பணத்தோட நேரா அங்க வந்துருவேன்.. மேகல, நீ அண்ணி கூட இருந்து பாத்துக்க" என்று கூறி, அவளிடம் நகை வாங்கிக் கொண்டு விடை பெற, மேகலையோ "அக்கா.. ஃபிளாஷ் அப்புறம் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போக என்னலாம் தேவையோ எல்லாம் எடுத்துட்டு வாங்க" என்று கூற, அவளும் சென்றாள்.


அவள் சென்றதும் மாமியாரின் அருகில் வந்த மேகலையோ "என்ன அத்தை.. கொட்டும் மழைல நினைஞ்ச போல உரஞ்சி போய் நிக்குறீங்க.. இவ்வளவு நாள் பொறுமையா பெஞ்ச மழை இன்னைக்கு கனமழையாகும்ன்னு நினைச்சி பாத்திருக்க மாட்டீங்களே.. நீங்க மட்டுமில்ல நான் கூட ஷாக் ஆயிட்டேன்.. அப்புறம் அத்த... இதுக்கு மேல மழைய வெள்ளமாக்குறதும் துளியா மாத்துறதும் உங்க கைல தான் இருக்கு.. கொஞ்சம் பாத்து நடந்துக்கோங்க இல்லன்னா மூழ்கிடுவீங்க" என்று கூறி வித்யாவிற்காக காத்து கொண்டிருக்க, அவள் வந்ததும் இருவரும் மருத்துவமனையை நோக்கி விரைந்தனர்.


இவர்கள் இருவரும் மருத்துமனைக்கு சென்று ஒரு மணிநேரத்தில் வந்து சேர்ந்த ராஜனோ "அண்ணி ஆபரேஷனுக்கு மொத்த பணமும் கட்டியாச்சு.. இப்போ ஆபரேஷன் ஸ்டார்ட்டாகிடும்.. அப்புறம் நீங்க கொடுத்த நகைல ஆபரேஷன் கட்டினது போக உள்ள மீதி பணம்" என்று கூறி அவளிடம் கொடுக்க, அதை கையில் வாங்கியவளோ


"ரொம்ப தேங்க்ஸ்.. நீங்க ரெண்டு பேரு மட்டும் எனக்கு துணையா இல்லன்னா.. நான் என்ன பண்ணிருப்பேன்னு தெரியல.. வாழ்க்க முழுக்க நீங்க ரெண்டு பேரும்.. எனக்கு செஞ்ச அத்தன உதவியையும் மறக்க மாட்டேன்" என்று கைக்கூப்பி கண்ணீர் வடிக்க,


அவள் கரம்மேல் கரம் வைத்து பற்றியவனோ "நீங்க என்னோட அண்ணி உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்.. எப்போவும் எங்க சப்போட் உங்களுக்கு தான்.. எதையும் நினைச்சி ஃபீல் பண்ணாதீங்க மாமா நல்லபடியா திரும்பி வருவார்.. அப்புறம் அண்ணி இன்னைக்கு வெகுண்டெழுந்த கண்ணகி ஆகிட்டீங்க போல.. இத்தன நாள் அந்த கண்ணகி எங்க கண்ணுக்கு தெரியாம போச்சு பாருங்களேன்" என்று கூற,


மேகலையோ "அதான.. நீங்க பண்ணின பெர்பார்மன்ஸ்ல அத்தயே ஆடி போயிட்டாங்க.. அப்படியே பாகுபலி சிவகாமி பார்ட் 2 நேருல பாத்த மாதிரி ஒரு ஃபீல்.. அடி பின்னிட்டீங்க் போங்க" என்று கூற,


அவர்கள் இருவரும் கூறியதை கேட்டு வித்யாவோ இதழ் விரித்து புன்னகைக்க, அவர்களும் புன்னகைத்தனர்.


இப்படியே நேரங்கள் கடக்க சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்த மருத்துவரோ "ஆபரேஷன் சக்சஸ்.. இனி எந்த பிராப்ளமும் இல்ல.. இன்னைக்கு ஒரு நாள் முழுசா ஐசியூல தான் இருக்கணும்.. நாளைக்கு நார்மல் வார்ட் ஷிப்ட் பண்ணிடுவோம்.. அதுக்கு அப்புறம் ஒன் வீக் ஆர் டூ வீக் ஹாஸ்பிட்டல் தான் இருந்தாகனும்.. ஒரு ஒன் ஹவர் அப்புறம்.. யாராவது பாக்கணும்ன்னா ஒருத்தர் மட்டும் போய் டிஸ்டர்ப் பண்ணாம பாத்துட்டு வரலாம்" என்று கூறி சென்றார்.


அவர் சென்றதும் வித்யாவோ "சரி.. டைம் ஆயிடுச்சு.. நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க.. நான் பாத்துக்குறேன்"


"என்ன அக்கா பேசுறீங்க.. அதெல்லாம் இங்க தான் இருப்பேன்.. வேணும்ன்னா நீங்க போங்க" என்று கூற,


அவள் கூறியதை கேட்டு சிரித்தவளோ, சிகிச்சை அறைக்கு சென்று தந்தையை பார்த்துவிட்டு வெளியே வந்து, அவர்கள் இருவருடன் மருத்துவமனையில் இருக்கும் சிற்றுண்டியில் சாப்பிட்டுவிட்டு சிகிச்சை அறைக்கு வெளியே இருந்த நாற்காலியில் சாய்ந்தவாறே உறங்கி விட்டார்கள்.


மறுநாள் ராம்நாதனை அறுவை சிகிச்சை அறையிலிருந்து வேறு அறைக்கு மாற்றியதும் மூவரும், அவரை காண செல்ல, அவர்களை கண்டதும் எழுந்து அமர முற்பட்ட ராமநாதனை கண்ட ராஜனோ "மாமா படுத்துக்கோங்க.. ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க"


"என்னால தான் எல்லாருக்கும் கஷ்டம்.. என்ன மன்னிச்சிடுங்க மாப்பிள"


"என்ன மாமா.. எதுவும் நம்ம கைல இல்ல.. ஃப்ரீயா விடுங்க.. மனச போட்டு குழப்பிக்காதீங்க.. நல்லா ரெஸ்ட் எடுங்க"


"ஆபரேஷனுக்கு ரொம்ப செலவு ஆகிருக்குமே பணத்துக்கு.. என்ன பண்ணீங்க" என்று கூற


வித்யாவோ "அப்பா ராஜன் தான்ப்பா அவர்கிட்ட இருந்த காசு போக, பிரெண்ட்
கிட்டயும் வாங்கி கொடுத்தார்" என்று கூறி அவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று செய்கை காட்ட,


அதைக் கேட்ட, அவளின் தந்தையோ "ரொம்ப நன்றி மாப்பிள.. என்னோட பொண்ணுக்கு சப்போட்டாவும் எனக்கு இன்னொரு மகனாவும் எல்லாம் பண்றீங்க.. உங்க கடன எல்லாம் எப்படி அடைக்க போறேன்னு தெரியல"


"மகன்ட கடன் அடைக்க தேவை இல்ல.. அப்போ பேச்சுக்கு தான மகன்னு சொல்லுறீங்க"


"அப்படியில்ல தம்பி.. நீங்களே உங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட கடன் வாங்கிருக்கீங்க.. என்னால.. உங்களுக்கு தான் தேவையில்லாத கஷ்டம்"


"நான் பாத்துக்குறேன் மாமா.. நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க" என்று கூற,


மேகலையோ "நானும் இங்க தான்ப்பா இருக்கேன்.. என்னைய கண்டுக்கவே மாட்றீங்க.. போங்கப்பா நான் கோச்சிக்கிட்டேன்" என்று கூற,


ராஜனோ "பொறாமடி.. உனக்கு"


"ம்க்கும்" என்று கூறி முகத்தை வெட்டிக் கொள்ள,


ராம்நாதனோ "டேய்.. நீ தான்டா என் செல்ல பிள்ளை"

"அப்படி சொல்லுங்க அப்பா" என்று கூறி சிரிக்க, மூவரும் இணைந்து சிரித்தனர்.


இப்படியே வீட்டிற்கு செல்வதும் மருத்துவமனைக்கு வந்து தந்தை பார்ப்பதுமாக இருக்க, ராஜனும் மேகலாவும் வேலை முடித்து வந்து பார்த்து கொள்வார்கள், இடைபட்ட நாட்களில் நாகவள்ளியும் ஜெய்சங்கரும் அவரை காண வந்து நலம் விசாரித்து சென்றனர்.


அடுத்து இருவாரங்கள் கழித்து, அவர் வீட்டிற்கு அழைத்து சென்று, இதே போல் மூவரும் மாறி மாறி பார்த்து கொள்ள, அவரும் இரண்டு மாதத்தில் உடல் தேறிவிட, அதற்கு மேல் அவரே அவரை பார்த்து கொள்ள தொடங்கிவிட்டதால் கிடைக்கும் நேரங்களில் மூவரும் ராம்நாதனை வீட்டிற்கு சென்று பார்த்து வருவார்கள்.


அவள் கொடுத்த அதிர்ச்சியில் ரெண்டு மாதங்கள் நாகவள்ளியோ பல் பிடுங்கிய பாம்பு போல் அமைதியாகி விட்டார், அதற்காக திருந்தி விட்டார் என்றுலாம் கூற முடியாது, எப்போது பற்கள் வளரும் என்று பாம்பை போல் கொத்த எதிர் பார்த்து காத்திருந்தார்.


இப்படியே நாட்கள் கடந்து கொண்டிருக்க,


விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்றதும் தாமதமாக எழும்பிய ஜெய்சங்கரோ, காலை கடன்களை முடித்து வெளியே ஜாக்கிங் சென்று வந்த களைப்பில் சோஃபாவில் அமர்ந்தவாறு மனைவி கொடுத்த தேனீரை குடித்துவிட்டு செய்தி தாளை வாசித்து கொண்டிருந்தவனோ அப்படியே மயங்கி சோஃபாவில் சரிய,


அதை கண்ட, அவனின் அன்னையோ "டேய் ஜெய்சங்கர் எந்திரிடா என்னாச்சி.. கண்ண திறடா" என்று கத்தும் சத்தம் கேட்டு சமையல் அறையிலிருந்த ரெண்டு பெண்களும் என்னவென்று பார்க்க வந்து ஜெய்சங்கரின் நிலை கண்டு அதிர,


வித்யாவோ கணவனின் அருகில் "ஏங்க கண்ண திறந்து பாருங்க.. ஏங்க" என்று கத்தி கொண்டிருக்க, மேகலையோ சமையல் அறைக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து தெளிக்க, அவனோ அசையாமல் இருந்ததில் பெண்கள் மூவரும் பயந்து விட, அதே நேரம் கீழே வந்த ராஜனோ அனைவரின் உதவியோடு தன் சகோதரனை காரில் ஏற்றிவிட்டு முன்னால் ஏற, பெண்களும் ஏறி கொள்ள, வேகமாக மருத்தவமனையை நோக்கி சென்றார்கள்.


பரிசோதனை செய்துவிட்டு மருத்துவர் கூறியதை கேட்டு அனைவரும் உறைந்து போய் நின்றனர்.


கானல் தொடரும்...


இப்படிக்கு
கருப்பட்டி மிட்டாய் ❤️❤️
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
இப்ப இவனுக்கு வைத்தியம் பாக்க வித்யாவோட நகைகளை கேக்க போறா இந்த மாமியார்க்காரி 🧐
 
  • Love
Reactions: MK29

MK29

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
33
25
18
thanjavur
இப்ப இவனுக்கு வைத்தியம் பாக்க வித்யாவோட நகைகளை கேக்க போறா இந்த மாமியார்க்காரி 🧐
Nagai viththu thana ava appa operation pannirukkanga ini nagaikku enga poga.. Pakkalam sis.. nandri 😍😍