கானல் - 9
இப்போது மருத்துவமனையில் ஜெய்சங்கரை மருத்துவர் பரிசோதித்து கொண்டிருக்க, வெளியே அனைவரும் பதற்றமாக மருத்துவரின் பதிலுக்காக காத்து கொண்டிருந்தனர்.
அதே சமயம் ராஜனின் திறன்பேசி அலற, வித்யாவின் அப்பா அழைக்கிறார் என்பதை அறிந்து, ஏற்றவனிடம் ராமநாதனோ "என்னாச்சி மாப்பிள்ளை.. எல்லாரும் அவசரமா எங்க போனீங்க.. அதுவும் எல்லாரும் ரொம்ப பதட்டமா இருந்த மாதிரி இருந்துச்சு.. எதும் பிராப்ளமா" என்று கேட்க,
நடந்ததை அவரிடம் கூறிய ராஜனோ "அது.. உங்களுக்கு எப்படி தெரியும்"
"வெளிய ஒரு வேலையா வந்தேன்.. அப்போ தான் உங்க கார்ல.. நீங்க எல்லாரும் அவசரம் போனத பாத்தேன்.. அதான் என்ன ஏதுன்னு பயந்து கால் பண்ணினேன்.. சரி ஹாஸ்பிட்டல் அட்ரஸ் செண்ட் பண்ணுங்க உடனே வரேன்" என்று அழைப்பை துண்டித்துவிட்டு, அவருக்கு மருத்துவமனை விலாசத்தை அனுப்பிய பத்து நிமிடத்தில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவரோ வித்யாவிடம் பேசிக்கொடுத்து ஆறுதல் கூறினார்.
சிறிது நேரத்தில் பரிசோதித்துவிட்டு வெளியே வந்த மருத்தவரிடம் வித்யாவோ "டாக்டர்... என்னாச்சி அவருக்கு.. ஏன் மயங்கி விழுந்தார்"
"இதுக்கு முன்னாடி.. இந்த மாதிரி எதுவும் நடந்துச்சா.. இல்ல அவருக்கு எதுவும் ஃபேமிலி பிராப்ளம் ஆர் மனி பிராப்ளம்.. அந்த மாதிரி எதுவும் டென்ஷனாகிருக்கிறாரா"
"இல்ல டாக்டர்.. இதுக்கு முன்னாடி அவருக்கு மயக்கம்லாம் வந்தது இல்ல.. இதான் ஃபர்ஸ்ட் டைம்.. அதே மாதிரி வொர்க் விஷயத்துல அதிகமா டென்ஷன் ஆவார்.. ஏன் டாக்டர் இதெல்லாம் கேக்குறீங்க.. அவருக்கு எதுவும் ஆபத்தா"
"ஸ்மோக் ட்ரின்கிங்.. இந்த மாதிரி ஏதாவது ஹாபிட் உண்டா"
"இல்ல டாக்டர்.. அதெல்லாம் அவருக்கு பழக்கம் இல்ல"
"பைன்.. அப்போ பர்ஸ்ட் அட்டம்ப்ட் தான்.. சோ பிராப்ளம் இல்ல.. இருந்தாலும் டெஸ்ட் எடுத்து கன்பார்ம் பண்ணிக்கலாம்"
"பர்ஸ்ட் அட்டம்ப்ட்டா.. நீங்க என்ன சொல்லுறீங்க டாக்டர் எனக்கு ஒன்னுமே புரியல"
"அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு.. நீங்க சொல்லுறதெல்லாம் பாத்தா.. இதான் முதல் தடவன்னு தோணுது.. இருந்தாலும் டெஸ்ட் பண்ணி பாத்துருரலாம்.. முதல் தடவன்னா டேப்லெட்டலயே கன்ட்ரோல் பண்ணிக்கலாம்.. அப்படி இல்லன்னா கண்டிப்பா ஆபரேஷன் பண்ணியாகனும்"
"என்ன டாக்டர் சொல்லுறீங்க அட்டாக்கா.. அதுக்கு வாய்ப்பு இல்லையே.. அவரு மயக்கம் போட்டு தான் விழுந்தார்.. இது எப்படி அட்டாக்காகும்" என்று கூறி மாமியாரின் புறம் திரும்பியவளோ "அத்தை.. நீங்க தான பாத்தீங்க.. அவர் விழும் போது நெஞ்சுலயா கை வச்சி விழுந்தார்"
"இல்ல இல்ல.. டீ குடிச்சு முடிச்சு கொஞ்சம் நேரம் நியூஸ்பேப்பர் தான் படிச்சிட்டு இருந்தான்.. அப்படியே மயங்கி சரிஞ்சிட்டான்" என்று கூற,
வித்யாவோ "அப்புறம் எப்படி டாக்டர் அட்டாக்கா இருக்க முடியும்"
"நீங்க சொல்லுறது சரி தான்.. பட் ஒவ்வொருத்தரோட பாடி கண்டிசன் பொறுத்து தான் வரும்.. நான் செக் பண்ணினதுல அட்டாக்ன்னு தெரிஞ்சிது.. எடுக்க வேண்டிய டெஸ்ட்லாம் எடுத்தா தான் எனக்கே முழுசா தெரியும்.. அதுவர வெயிட் பண்ணுங்க" என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, மாமியாரோ "என் மகனுக்கு இந்த வயசுலயே நெஞ்சு வலியா.. அய்யோ கடவுளே.. எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என்னடி பண்ணேன் என் மகன.. உன்னால தான் அவன் இப்படி கிடக்குறான்" என்று கூற,
மேகலையோ "என்னத்த பேசுறீங்க.. உள்ள படுத்துக்ருகிறது அவங்க புருஷன் உங்களுக்கு இருக்கிற.. அதை அக்கறையும் வருத்தமும் அவங்களுக்கும் இருக்கும்.. அத மறந்துட்டு.. உங்க இஷ்டத்துக்கு பேசி அவங்க மனச கஷ்டப்படுத்தாதீங்க" என்று கூற,
ராஜனோ ₹இது ஒன்னும்.. நம்ம வீடுயில்ல கொஞ்சம் ரெண்டு பேரும் அடக்கி வாசிக்குறீங்களா"
"ம்க்கும்.. அவள சொல்லிட்டா ஆளுக்கு வக்காலத்து வாங்க வந்துருவீங்களே.. எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா.. அப்படி என்ன வசியம் போட்டாளோ தெரியல"
"ஆமா அத்த அக்கா வசியம் தான் பண்ணி வச்சிருக்காங்க.. பாசத்தால வசியம் பண்ணுறாங்க.. ஆது உங்கள மாதிரி ஸ்டோன் ஹார்ட் இருக்குறவங்களுக்கு கண்ணுக்கு தெரியாதாம்" என்று கூற,
அதற்கு முறைப்பை மட்டும் பதிலாக கொடுத்தவரோ மருமகளிடம் முகத்தை வெட்டிக் திரும்பி கொண்டார்.
இப்படியே, இவர்கள் ஒருத்தரை மாற்றி ஒருத்தர் அர்ச்சனை செய்து கொண்டிருக்க, அப்போது அவர்கள் முன் வந்த மருத்துவரோ "ரிப்போர்ட்ஸ்லாம் பாத்தேன்.. ஃபர்ஸ்ட் அட்டம்ப்ட் தான்.. சோ கொஞ்ச நாள் ரெஸ்ட்டுல தான் இருக்கணும் ஒரு டூ டூ த்ரீ மந்தஸ்.. அதுக்கு.. அப்புறம் செக் அப் பண்ணிட்டு சொல்லுறேன்.. டேப்லெட்ஸ் கண்டினுஸா கொடுக்கணும்"
"ஓகே டாக்டர்.. பட் எப்படி அட்டக்ன்னு சொல்லவே இல்ல"
"நீங்க சொல்லுற போல.. அவங்களுக்கு நெஞ்சு வலி அவ்வளவு வரல தான் ஜஸ்ட் மயக்கம்ன்னு நினைக்கிறீங்க பட் சுகர் இருக்கிறவங்களுக்கு ஸ்டார்டிங்ல.. இப்படி தான் அட்டாக் வரும் கவனிக்காம கேர்லஸா இருந்தா தான் ஆபரேஷன் அளவு சிவியரா போகும்.. இது ஃபர்ஸ்ட் அட்டம்ப்ட்னால டேப்லெட்டுலயே கன்ட்ரோலா வச்சிக்கலாம்"
"நீங்க சொல்லுறது வாஸ்தவமா இருந்தாலும்.. என் புருஷனுக்கு தான் சுகர் இல்லையே அப்புறம்.. எப்படி அட்டக்"
"அப்போ.. நீங்க இதுவர சுகர் செக் பண்ணினதே இல்ல போல அதான் தெரியல.. இதான் இன்னைக்கு உங்க ஹஸ்பான்ட்ட சுகர் டெஸ்ட் பண்ணும் போது.. எடுத்த ரிப்போர்ட் பாருங்க" என்று கூறி கையில் ஒரு தாளை கொடுக்க,
அதைக் கையில் வாங்கி படித்து பார்த்த வித்யாவிற்கோ கண்கள் விரிந்து கொண்டது, ஆம் மருத்துவர் கூறியது போல் அவனுக்கு சக்கரை நோய் இருக்கிறதா என்பதை, அந்த தாளை பார்த்து கண்டு கொண்டவளோ "எப்படி டாக்டர் இதெல்லாம்.. சடனா சுகர் எப்படி"
"இப்போ சுகர் யாருக்குனாலும் வரும் வயசு வித்தியாசமே இல்ல.. இதுவரைக்கும் நீங்க கவனிசிருக்க மாட்டீங்க போல.. இனி கேர்ஃபுல்லா பாத்துக்கோங்க.. ஒரு மூணு நாள் ஹாஸ்பிட்டல தான இருக்கணும்.. அப்புறம் வீட்டுக்கு போய் டூ மந்த்ஸ் ரெஸ்ட்டுல தான் இருக்கணும்.. ரொம்ப ஸ்டைரெயின் பண்ணிக்க கூடாது.. கொஞ்ச நாள் பக்கத்துல இருந்து நோட் பண்ணிக்கிட்டே இருங்க.. கொஞ்சம் நேரத்துல கண்ணு முள்ளிச்சிடுவார் எல்லாரும் போய் பாக்கலாம்" என்று கூறிவிட்டு சென்றார்.
அவர் சென்றதும் மருத்துவர் கூறியதை கேட்டு அனைவருக்கும் அதிர்ச்சியுடன் குழப்பமாகவும் இருந்தது இருப்பினும் அதையெல்லாம் விட்டு விட்டு அவனை காண அறைக்குள் சென்றார்கள்.
அவன் கண் முழிக்கும் நேரம் கண்டது என்னவோ எதிரே நிற்கும் தன் குடும்பத்தை தான்,
இப்போது ராமநாதனோ "ஒன்னும் வருத்தப்பாடதீங்க மாப்பிளை எல்லா சரியாகிடும்.. நீங்க ஸ்ரெயின் பண்ணிக்காம நல்லா ரெஸ்ட் எடுங்க" என்று கூற, பதிலுக்கு தலையசைப்புடன் புன்னகை அளித்தவனுக்கோ மனதில் ஒரு குற்றவுணர்ச்சி தனக்காக வருந்தும் மாமனாரை, அவரின் உடல்நிலை சரியில்லாத போது வெளி ஆள் போல் அல்லவா பார்த்து வந்தோம் ஆனா, அவரோ தனக்காக இருக்கிறேன் என்று ஆறுதல் கூறி தன்னை நினைத்து வருந்துகிறாரே,
இப்படி பட்ட உறவின் அருமையை புரியாமல் இவ்வளவு வருடம் இருந்ததை நினைத்து அவனுக்கே, அவன் மேல் கோவம் வந்தாலும் அனைவருக்கும் மொளனமாகவே பதில் அளித்தவனின் பார்வையோ மனைவியின் புறம் திரும்ப அவளோ கண்களை மூடி திறந்து "ஒன்னும் இல்ல.. நான் இருக்கேன்" என்று கூறாமல் கூற, தன்னை புரிந்து கொள்ளும் மனைவியை புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோமோ என்று கேள்வியும் மனதிற்குள் ஆயிரம் முறை ஒலித்து கொண்டிருக்க, அந்த நேரம் அனைவரும் அவனுக்கு தனிமை அளித்து சென்றுவிட, தான் வாழ்கையில் செய்த தவறை எல்லாம் தன் கண்முன் கொண்டு வந்து படமாக பார்த்து கொண்டிருந்தவனுக்கோ கற்றுக்கொள்ள அது ஒரு பாடமாகி போனது என்றது தான் கூற வேண்டும்.
மகனின் விடயம் கேள்விபட்டு அவனின் தந்தையோ, மறுநாளே காண வந்துவிட்டார்.
இப்படியே மூன்று நாட்கள் வித்யாவுடன் அவள் தந்தையும், அவனுடனே இருந்து பார்த்து கொள்ள, தாயின் உடல் நிலை குறித்து மருத்துவமனையில் இருக்க வேண்டாம் என்று கூறியதால் மீதி அனைவரும் அப்போ அப்போ வந்து பார்த்து செல்ல, மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்கு அழைத்து வந்து பார்த்துக்கொள்ள தொடங்கினார்கள்.
வீட்டிற்கு வந்ததும் தினமும் ஒரு முறையாவது மருமகனை பார்த்து செல்ல ராம்நாதனோ தவறாமல் அவர்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்.
இப்படியே ரெண்டு வாரம் கழிந்திருக்க, அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்த மேகலையோ நாட்காட்டியை பார்த்தவாறு யோசனையுடனே நிற்க, குளியல் அறையிலிருந்து இடையில் துண்டுடன் வந்தவனோ, அவளின் யோசனை கண்டு "என்னடி மறுபடியும் ஆராய்ச்சி பண்ண ஸ்டார்ட் பண்ணிட்ட போல.. ஆனாலும் எப்போவும் நைட் தான பண்ணுவ இன்னைக்கு என்ன பகல்லயே பண்ற"
"எங்கையோ இடிக்குதுங்க.. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்"
"இடிக்குதுன்னா தள்ளி நில்லுடி"
"உங்களுக்கு என்ன.. நான் என்னமோ பண்றேன்.. தள்ளி நில்லுங்க" என்று கூற, அவனோ வெற்று மார்புடன் அவளை நெருங்க,
"ஹலோ மிஸ்டர் ராஜன் தள்ளி நிக்க சொன்னது பின்னால தான் முன்னால இல்ல"
"அப்படியா.. எனக்கு உன்ன கட்டிபிடிக்க சொன்ன மாதிரி கேட்டுச்சு"
"கேக்கும் கேக்கும்.. இனி முக்கியமான ஆள் பெர்மிஷன் கொடுக்காம.. என்மேல உங்க நிழல் கூட பட கூடாது" என்று கூற,
அதைக் கேட்டவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தாலும், அவள் வாயாலே கூறட்டுமென்று ஒன்றும் தெரியாதவன் போல் நடித்தவாறே "என் பொண்டாட்டிய தொடுறதுக்கு யாரு பெர்மிஷன் கொடுக்கணுமாம்.. வர சொல்லு ஒத்தைக்கு ஒத்த மோதி பாக்கலாம்"
"எங்க ஆளு பயங்கர ஸ்ட்ராங்.. ஆனா அவர உடனேலாம் பாக்க முடியாது பத்து மாசம் வெயிட் பண்ணனும்" என்று கூறி தன்னவன் கரத்தை அவளில் வயிற்றில் வைத்து "கங்கிராஜுலேசன் மிஸ்டர் ராஜன்.. கூடிய சீக்கிரமே உங்கள பாக்க குட்டி லாயர் வருவார்.. மோத தயாராயிருங்க" என்று கூறிய, மறுநொடி மண்டியிட்டு தன் உதிரம் தோன்றிய இடத்தில் இதழ் பதித்து எழுந்தவனோ "உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மிஸ்ஸஸ் மேகலை ராஜன்" என்று மனைவியின் நெற்றியில் இதழ் பதிக்க, பெண்ணவளும் தன்னவனை கட்டிக்கொண்டாள்.
அடுத்ததாக இந்நற்ச்செய்தியை அனைவருக்கும் கூறி மகிழ, வித்யாவோ தங்கையை கட்டியணைத்து வாழ்த்து கூற, நாகவள்ளிக்கு சொல்லவே வேண்டாம் தங்கள் வீட்டிற்கு இன்னொரு வாரிசு போகிறது என்பதில் துள்ளி குதிக்க ஆரம்பித்தவரோ, அடுத்தடுத்த நாட்களில் மருமகளை தங்க தட்டியில் தாங்காத குறையாய் தாங்க ஆரம்பித்து விட்டார்.
இப்படியே நாட்கள் செல்ல, வித்யாவோ கணவனின், ஒரு அசைவையும் நன்கு உற்று நோக்கி கவனித்து கொள்ள, அதை உணர்ந்த ஆடவனுக்கோ தன்னவள் மேலிருந்த காதல் அதிகரிக்க, அவளை கட்டியனைத்து வெளிப்படையாக காட்ட வேண்டுமென்று கை துடி துடித்தது, சில நேரங்களில் அவள் ஆசைபடி வேலைக்கு அனுப்பிவிட்டாள் என்ன என்றெல்லாம் சிந்திப்பான் இருப்பினும் தான், அவளை வார்த்தைகளால் காயப்படுத்திருக்கிறோம்.
இப்போது, இப்படியெல்லாம் நடந்து கொண்டால் தன்னை தப்பாக நினைத்து கொள்வாளோ என்ற எண்ணத்தில் தன் காதலை வழக்கம் போல் மனதிற்குள்ளே வைத்து கொள்வான்.
வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு அறைக்குள் வந்தவளோ, கணவன் அருகில் அமர்ந்து, அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரையை கொடுக்க, அதை வாங்கி வாயில் போட்டுக்கொண்டவனோ "தேங்க்ஸ்" என்று கூற,
அவளோ "நான் தேங்க்ஸ் எதிர்பார்த்து ஒன்னும் இத செய்யல.." என்று கூற,
தான் கூறிய, அதை வார்த்தைகளை அவள் தன்னிடம் கூறியதில் மனதில் சுருக்கென்று ஒரு வலி, ஆனால் அவள் கூறிய அர்த்ததிற்கும் இவன் கூறிய அர்த்ததிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை அறிந்தவனோ, இன்று தான் வருந்திய போல் தான் அன்று அவளும் வருந்திருப்பாள் என்று, அவளை கொஞ்சம் கொஞ்சமாக
உணர தொடங்க, அவளிடம் எப்படி வெளிக்காட்டுவது என்பது ஒரு வித தயக்கம் இருந்தாலும் தன்னவளின் மொளனம் அளிக்கும் வலியே தனக்கு தண்டனை என்று நினைத்து கொண்டான்.