• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கார்கோள் கொண்ட குமரியாள் - கதைத் திரி

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
#disclaimer

இது முற்றும் முழுதும் எனது கற்பனையே. இதில் வரும் எந்த பெயரும், காட்சியும் நிகழ்வில் யாரையேனும் நினைவுபடுத்தியிருந்தாலும் அவை முற்றும் தற்செயலான ஒன்றே🙏🏻



குமரியாள்-01


“உனக்கு எதுக்குடி இந்த வேண்டாத வேலையெல்லாம்? உறவுக்காரங்க கூடவே பகைச்சுக்க வேணாமுன்னு நான் பதறுறேன். நீ இப்ப உலகத்தையே பகைச்சுக்க நிக்குறியே” என்று சாருமதி கூற,

“ம்மா.. தர்மம் தானா ஸ்தாபிக்கப்பட வேண்டிய ஒன்று. அதை கடவுள் நடத்திக் கொடுப்பார்னு தானே சொல்வீங்க. ஆனா மகாபாரதத்தில தர்மத்தை நிலைநாட்டத்தான் அந்த விஷ்ணு பெருமானே கிருஷ்ணன் அப்படிங்குற அவதாரத்தில் வந்தார். யாராவது ஒருத்தர் அப்படியொரு அவதாரத்தை எடுத்து குரல் கொடுத்தா மட்டும்தான் அது சாத்தியப்படும்” என்று கூறினாள் அகரயாழினி!

“ஏன்டி.. காலா காலத்தில் உனக்கொரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டு நான் கண்ணை மூடலாம்னு பார்த்தா, நீ இப்படி ஹை கோர்ட் போவேன், சுப்ரீம் கோர்ட் போவேன்னு நிற்குறியே? இது ஞாயமா?” என்று அவளது தாய் சாருமதி கேட்க,

“ஏம்மா இப்படியெல்லாம் பேசுற? கம்பன் பொண்டாட்டினு கெத்தா சொல்லி அவர் பெத்த மகனு பெருமைபடுறதை விட்டுட்டு சும்மா இப்படி பயப்படுறியே? இன்னொன்னு புரிஞ்சுக்கோம்மா.. நான் ஒன்னும் யார் மேலயும் வழக்குத் தொடுக்கலை. கடைசி ஹியரிங்க கண் குளிர பார்க்கத்தான் போறேன்” என்று அகரயாழினி கூறினாள்.

“என்னவோ போடி.. எனக்கு பயம் தான். பணம், வசதி, சொத்துனு அவ்வளவு இருந்தும், ஒன்னுமில்லாத என்னைபோய் உங்கப்பா கட்டிகிட்டு வந்தாரே.. அப்ப இந்த வாழ்க்கை மேல உள்ள பயம் இன்னும் அதிகமாயிடுச்சு. அந்த மனுஷன் போற உசுரை அனாமத்தா விட்டு வைக்க வேணாமேனு உன்னையும், உன்னை வளர்க்க அவர் சொத்தில் பங்கையும் எழுதி வைச்சும் அது எனக்கு தைரியத்தை துளியும் குடுக்கலை. ஆனாலும் என் வளர்ப்பு நீ தைரியமா வளரணும்னு ஆசைப்பட்டேன். இப்ப அதை நினைச்சே பயப்படுறேன்” என்று சாருமதி அலுப்பாய் கூற,

“அம்மா.. உன்னையும் வான்னு கூப்பிட்டாலும் நீ வரமாட்டேங்குற. ஜெர்மன் எவ்வளவு அழகான இடம் தெரியுமா?” என்று கண்களில் மின்னலோடு சிலாகித்துக் கூறினாள்.

“அதுசரி.. உன்னை அனுப்பவே நான் பயந்து போறேன். நீ என்னை கூப்பிடுறியா? ஏதோ தம்பி உன்கூட வரும் ஒரே தைரியத்துல தான் நான் இருக்கேன்” என்று அவர் கூற,

“அம்மா.. நீ பயப்படவே வேண்டாம் அம்மா. இது ஒன்னும் சாதாரணமா ரெண்டு பேருக்கு நடுவில் நடக்கும் பிரச்சினை இல்லை. இரண்டு நாட்டுக்குள்ள நடக்கும் பிரச்சினை. அதனால அவங்களால நம்ம நாட்டினருக்கோ, நம்மளால அவங்க நாட்டினருக்கோ பிரச்சினை வந்தா, அபராதம், கெடுபிடியா இருக்கும். அதனால பயமில்லாம இருக்கலாம்” என்று கூறினாள்.

“என்னவோமா. நீ சொல்ற. எனக்குதான் மனசே கேட்க மாட்டேங்குது” என்று சாருமதி கூற,

அழைப்புமணி ஒலித்தது!

அவ்வோசையிலேயே அகரயாழினியின் உடல் சிலிர்த்து அடங்கியது!

அவ்வோசையை இயக்கியது அவள் அகத்தில் இன்னிசை மீட்டியோன் அல்லவா?

மாளிகை போன்ற தன் வீட்டை ஒருமுறை சுற்றிப் பார்வையிட்டவள், தன்னைத் திருத்திக் கொண்டு கதவினைத் திறந்தாள்.

மிக அழகான புன்னகையுடன் அவள் முன் தனது பயணப்பொதிகளோடு நின்றிருந்தான், வேள்பாரி!

அவன் கண்களில் அவளைக் கண்டு எழுந்த அந்த மின்னலில் பெண்ணவளின் பூவிதயத்தினுள் ஒரு அழகிய பூகம்பம்!

உள்ளே நுழைந்தவனைக் கண்டு எழுந்து நின்ற சாருமதியின் கண்களில் இன்னமும் மகளை அனுப்பி வைப்பதால் எழும் அதிருப்தி குடியிருந்தது!

“அட என்ன அத்தை நீங்க? அதான் நான் போறேன்ல அகராகூட, அப்பறம் ஏன் பயம் உங்களுக்கு?” என்று அவர் கரம் பற்றி நம்பிக்கையூட்டும் விதமாய் பேசினான்.

சாருமதிக்கு எப்போதுமே வேள்பாரியைப் பார்த்தால் ஒருவித பிரம்மிம்புதான் எழும்!

அத்தனை பெரிய பின்புலம் கொண்ட குடும்பத்தின் வாரிசு அவன்! ஆனால் அவன் நடத்தையில் என்றுமே அந்தத் தலைக்கனம் இருந்ததே இல்லை!

“உன்னை நம்பி தான்பா அனுப்புறேன். இவளை ஒரு நல்ல டிகிரி படிக்க வைச்சு வேலைனு நாலு காசு சம்பாதிச்சு என்னைபோல இல்லாம சொந்த காலில் நிற்க வைச்சு ஒரு கல்யாணம் பண்ணி வைப்போம்னு பார்த்தேன். முதலில் இன்னும் இன்னும் படிக்குறேன்னு ஆறு வருஷத்தை இழுத்து என் கனவில் கொஞ்சம் மண்ணை போட்டா, பிறகு ஒரு வேலையில் சேர்ந்தவ கல்யாணம் பண்றியான்னதுக்கு ஏதேதோ பரிட்சை எழுதி தில்லியில உள்ள ஆபிஸ்ல தான் வேலைக்கு சேருவேன்னு இன்னும் கொஞ்சம் மண்ணை போட்டா. இப்ப இங்க வேலை கிடைச்சும் நாளைத் தள்ளிப்போட்டா. இப்ப இதோ.. இந்த வழக்கோட வந்து நின்னு என் நெஞ்சுலயே மண்ணை கொட்டி மொத்தமா மூடிட்டா. எனக்கு என்ன சொல்லனே தெரியலைப்பா” என்று அவர் வெள்ளந்தியாய் புலம்ப,

புன்னகையுடன் அதைக் கேட்டவன், “இந்த வழக்கு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிப்பாத்தை. நான் சொல்றேன்” என்று உள்ளர்த்தத்துடன் கூறினான்.

அதில் சிரித்துக் கொண்ட அகரயாழினி, “நமக்கு ஃப்ளைட்டுக்கு நேரமாகுது” என்று கூற,

“சரித்தை. நாங்க வரோம். நீங்க எதுக்கும் பயப்படாம இருங்க. அப்பாகிட்ட சொல்லி உங்களுக்கு துணைக்கு ஆள் ஏற்பாடு பண்ணிருக்கேன். நம்ம வெற்றியை கொண்டாட தயாரா இருந்துக்கோங்க” என்று கூறிவிட்டு அவளோடு சேர்ந்து விமானநிலையத்தை அடைந்தான்.

தங்களது அனுமதி முறைமைகளை முடித்துக் கொண்டு உள்ளே வந்த இருவரும் விமானத்திற்காக காத்துக்கொண்டு அமர, அகரயாழினியின் மனதில் பல எண்ணங்கள்..

அவள் அகரயாழினி.. அவனுக்கு மட்டுமே அகரா!

கம்பன் மற்றும் சாருமதியின் காதல் மற்றும் கலப்பின திருமணத்தின் சாட்சியம் அவள்!

அகழ்வாராய்ச்சித் துறையில் தன் தோழி சமுத்திராவுடன் சேர்ந்தே இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்று வேலைக்குச் சேர்ந்தவள், தங்கள் அயராத பணி மற்றும் விடா முயற்சிகளுக்குப் பின், தில்லியில் இருக்கும் முதன்மை அலுவலகத்திலும் பணிக்கு சேர்ந்தாள்.

அவள் வாழ்வில் அவள் நினைக்கும் முதல் வெற்றிப்படியும் அதுவே!

இயல்பிலேயே தந்தையின் குணம் கொண்டவளுக்கு எதிலுமே அபார தைரியம் தான்! அந்தத் தைரியம் தான் அவளை இத்தனை தூரம் கூட்டிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது!

சாய்ந்து அமர்ந்திருந்தவள் முன் ஒரு குவளை தேநீரை நீட்டிய வேள்பாரி, “அகரா..” என்க,

அவனை நிமிர்ந்து பார்த்தவள், அதை வாங்கிப் பருகியபடி அவனைக் கண்களால் பருகினாள்.

அவன் வேள்பாரி..
சமீபமாய் இந்த வழக்கு துவங்கியபோது தான் அவளுக்கு அவனைத் தெரியும்! ஆனால் தற்போது அவனின் அத்தனையும் அவளுக்கு அத்துப்படி!

இந்தியாவின் நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர் (solicitor general) திரு. சங்கரநாராயணனின் கடைசி வாரிசு அவன். தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் புணிபுரிபவன். தாய் ராஜலட்சுமி, இரண்டு அண்ணன்கள். மூத்தவன் தொழிலதிபன், பெயர் செழிலன், மனைவி கல்லூரி பேராசிரியை குந்தவை. இரண்டாமவன் மருத்துவர், கவியழகன், மனைவி தானும் மருத்துவச்சி ஆதிரை.

“பருகியாச்சா?” என்று நமட்டு சிரிப்போடு தனது குவளையைப் பார்த்தபடியே கேட்டவன் மெல்ல அவளை நிமிர்ந்து பார்க்க,

அதில் புரையேறி இருமியவள், “ஆ..ஹாங்?” என்று கேட்டாள்.

“தேநீரைப் பருகியாச்சானு கேட்டேன்” என்று சிரித்தபடி கூறியவன் கண்களில் தான் எத்தனை அழகுமிக்கக் கள்ளத்தனம்!

அவன் சிரிப்பில் கல்லெறிந்து கடற்கரை மணல்மேடாய் சிதறியவள், “ம்ம்.. பருகியாச்சு” என்று ஒரு மார்க்கமாய் கூற,

சிரித்தபடி அவள் குவளையையும் வாங்கிச் சென்று குப்பைத்தொட்டியில் போட்டு வந்தான்.

“கடைசி ஹியரிங்.. நம்ம பக்கம் தானே வரும்?” என்று அகரயாழினி கேட்க,

“வராம போயிடுமா? நம்ம வரலாறு நமக்குதான். இன்னும் ஆங்கிலேயர் படைக்கும், முகலாயர் படைக்கும் எதிர்த்து போரிட முடியாம நம்ம வளமைகளைக் கொள்ளை கொடுக்கும் நாடில்லை நம்மோடதுனு காட்டும் தருணம் வந்துடுச்சுனு புரிஞ்சுப்பாங்க. சேர, சோழ, பாண்டியர்கள்னு வீரம் பொதிந்த மன்னர்கள் ஆட்சி செய்த பூமியிது, உரிமையை விட்டுக்கொடுக்க முடியாதுனும் தெரிஞ்சுப்பாங்க” என்று ஒருவித பரபரப்போடும் கண்களில் கனலோடும் கூறினான்.

“ம்ம்.. அதுக்குத்தானே இத்தனை மாசப் போராட்டம். ஆனாலும் முதல்லயே முடிச்சுவிட வேண்டிய விஷயம். வரலாறு என்பதைத் தாண்டி கண்டுபிடித்தவருக்குத்தானே அது சொந்தமாகும்?” என்று அகரயாழினிக் கேட்க,

“அப்படியில்லை அகரா இப்ப வேறு ஒருத்தரோட பர்ஸ் கீழ விழுந்து அதை நீ கண்டெடுத்தா அது உனக்கு சொந்தமாயிடுமா? நான் இது அவங்களுக்கு சொந்தம்னு சொல்ல வரலை. இதுல உள்ள சிக்கலைத்தான் சொல்றேன். உனக்கு புரியும்படி சொல்லணும்னா, அமேரிக்காவில் நம்ம நாட்டு மஞ்சளில் ஆண்டிபயாடிக் தன்மை இருக்குனு அறிவியல் ரீதியா நிருபித்து பேடன்ட் வாங்கினாங்க. அறிவியல் ரீதியா நிருபிச்சது அவங்களா இருந்தாலும் மஞ்சள் நம்ம நாட்டோது தானே? அந்த பேடன்டை நாம கேன்ஸல் செய்ய வைத்தோம் தானே? அதுபோல்தான். எங்க நாட்டுக்குச் சொந்தம் இருக்கு எனும் வகையில் கண்டுபிடிச்சது இந்தியாவாவே இருந்தாலும் எங்களுக்கு உரிமை வேண்டும்னு அவங்க கேட்குறாங்க. இன்னும் ஒரு குறிப்பிட வேண்டிய விஷயம், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இதில் உள்ள தொடர்பு தான். சாதாரண வாய்க்கால் தகராறு இல்லை இது. சட்டுனு முடிச்சுவிட. இதன் விளைவுகள், அங்கவுள்ள இந்தியர்களின் வாழ்வாதாரத்தில் துவங்கி, ரெண்டு நாட்டுக்கும் இடையான வணிகம், சுற்றுலா பயணம் வரை அத்தனையையும் பாதிக்கும். அதனால இத்தனை மாத நீட்டிப்பே கம்மிதான்” என்று தெளிவான விளக்கம் கொடுத்தான்.

ஒரு பெருமூச்சு விட்டவள், “ஹ்ம்.. ஆனா எப்படிப் பார்த்தாலும் இது நம்முடையது தானே?” என்று அகரயாழினி கேட்க,

“இந்தியா ஆஸ்திரேலியா என்பதையெல்லாம் தாண்டி, இது நம்ம தமிழ் மற்றும் தமிழரின் ஆணி வேர், ஆதாரம் மற்றும் அடித்தளம். அதனால இது நமக்குதான் சொந்தம்” என்று ஆணித்தரமாகவும், தீர்க்கமாகவும் கூறினான், வேள்பாரி.

“நல்லபடியா முடிஞ்சுடும்னு நம்பித்தான் நம்ம வெற்றியை கொண்டாடும் ஆசையோட கிளம்பி வரேன்” என்று அகரயாழினி கூற,

“நிச்சயம் நம்ம கொண்டாட்டத்தில் தடையே இருக்காது. நீ திரட்டிக் கொடுத்த செய்திகள், மற்றும் நம்ம பக்கம் இருக்கும் ஆதாரம் அன்ட் வாதங்கள் ரொம்ப ஸ்ட்ராங். அப்பா கண்டிப்பா அத்தனை சீக்கிரத்தில் விட்டுக்கொடுத்துடுவாரா என்ன?” என்று பெருமை பொங்கக் கூறினான்.

அதில் புன்னகைத்துக் கொண்டவள், “அதென்ன அம்மாட்ட கல்யாணம் பண்ணிப்பானு சொல்லிட்டு வர்றீங்க?” என்று கேட்க,

“ஏன்.. நான் கேட்டா பண்ணிக்கமாட்டியா?” என்றான்.

“ஆங்?” என்று அவள் விழிக்க,

“பண்ணிப்ப தானே? ஐ மீன்.. நான் சொன்னா பண்ணிப்ப தானே?” என்று குறும்பாய் சிரித்தான்.

முகத்தைத் திருப்பி யாழினி தன் சிரிப்பை மறைக்க,

அவர்கள் விமானத்தைப் பற்றிய தகவல் அறிவிக்கப்பட்டது!

இருவருமாய் சென்று பரிசோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்தில் அமர, ஜெர்மனி நோக்கிய அவர்கள் பயணம் துவங்கியது, குமரியாளின் வரலாற்றை மீட்டிடும் நோக்கத்துடன்.



மூச்சுத்திணறி மூழ்கியவள்
மோட்சம் பெற்றிட
கார்கோள் கொண்ட குமரியாள்;
வையம் பூரிக்க மீண்டு வருவாள்!


-தொடரும்..


அத்தியாயம்-02

 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
வாவ்🤩 செம்ம ஸ்டோரி👌
ஐ லவ்ட் இட் டியர் 😍

நாளைக்கு எபி சீக்கிரமே போட்டுடணும் ஓகே👍மீ வெயிட்டிங்
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
வாவ்🤩 செம்ம ஸ்டோரி👌
ஐ லவ்ட் இட் டியர் 😍

நாளைக்கு எபி சீக்கிரமே போட்டுடணும் ஓகே👍மீ வெயிட்டிங்
மிக்க நன்றி சிஸ் 🥰 சாரி சிஸ் உங்க கமென்டயே நான் லேட்டா தான் பாக்குறேன்🙈🙈 சீக்கிரம் போட முயற்சி செய்றேன் சிஸ்☺️❤️
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵ஏதோ ஒரு முக்கிய விஷயம் பற்றிய கதைன்னு தோணுது 🙄🙄🙄🙄🙄போக போக தெரியும் இந்த காற்கோள் கொண்ட குமரியாள் பற்றி புரியும் 👍👍👍👍👍
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵ஏதோ ஒரு முக்கிய விஷயம் பற்றிய கதைன்னு தோணுது 🙄🙄🙄🙄🙄போக போக தெரியும் இந்த காற்கோள் கொண்ட குமரியாள் பற்றி புரியும் 👍👍👍👍👍
ஆமா சகி 😍 மிக்க நன்றி சகி 💖🤗