• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கார்கோள் கொண்ட குமரியாள்-02

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
குமரியாள்-02

விமானத்தில் ஏறி அமர்ந்தவளுக்கு உடல் அசதியாக இருந்தபோதும், மனதில் பல எண்ணங்கள்.

“ஓய்.. என்ன பயங்கர யோசனை?” என்று வேள்பாரி கேட்க,

“தெரியலை… மனசுக்குள்ள அமைதியின் பெரும் இரைச்சல்” என்று தோள்களை குலுக்கினாள்.

“ம்ம்.. எதுவும் யோசிக்காத அகரா. எல்லாம் நமக்கு சாதகமாத்தான் நடக்கும்” என்று கூறியவன்,

“எதாவது பாட்டு கேளு. மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும்” என்று கூற,

“ம்ம்..” என்றாள்.

பாடல்கள் கேட்டபடி சாய்ந்து அமர்ந்தவளுக்குள் பல நினைவுகள் எழுந்து காணம் இசைத்தது!

அன்று...

அன்றைய நாள்... அவள் கல்லூரியில் முதுகலை பட்டம் படித்துக் கொண்டிருந்த தருணம் அது! எத்தனை படபடப்போடு துவங்கியது ஆனால் எத்தனை எத்தனை ஆர்வம் அவளிடம்!

“யாழினி.. ரொம்ப ஆர்வமா இருக்குடி” என்று அவளது தோழி சமுத்திரா கூற,

“எனக்கும்டி. எத்தனை வருட உழைப்புல்ல இது அவங்களுக்கு?” என்று கண்களில் மின்னலோடு கேட்டாள் அகரயாழினி.

“என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டுபேரும்?” என்றபடி இருவருக்குமான தேநீர் குவளைகளோடு வந்த சாருமதி கேட்க,

“நம்ம ஆதிக்குடியான குமரிக்கண்டம் இருந்தது அப்படிங்குறதுக்கான ஆதரங்களைத் திரட்ட எடுத்திருக்கும் முயற்சி பத்திதான் அம்மா” என்று சமுத்திரா கூறினாள்.

“குமரிக்கண்டமா?” என்று வெள்ளந்தியாய் கேட்ட அன்னையைப் பார்த்த அகரயாழினி,

“ஆமாம்மா. அதாவது கிட்டத்தட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டுல நம்ம தெற்கிந்தியா, மடகாஸ்கர் தீவு அண்ட் ஆஸ்திரேலியா மூன்றையும் இணைக்கும் விதமா ஒரு கண்டம் இருந்திருக்கு. அங்கதான் மனிதன் தோன்றினான்னும், தமிழ் தோன்றியதுன்னும் பல இலக்கிய வரலாறுகள் இருக்கு. ஆனா அதற்கான முறையான அறிவியல் ஆதாரங்கள் தான் நம்மகிட்ட இல்லாம இருந்தது.

1960கள்ல கடற்தள ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் தெற்கிந்தியாக்குத் தெற்கில் ஒரு பெரிய கண்டம் இருந்திருப்பதா கண்டுபிடிச்சாங்கம்மா. அதுதான் லெமூரியானு அழைக்கப்பட்டுச்சு. ஆனாலும் இன்னும் முறையான ஆதாரங்கள் இல்லாதபட்சத்தில் ராமாயணம், மகாபாரதம் போல நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் நடுவில் தான் இதுவும் வாழ்ந்துட்டு இருந்தது” என்றாள்.

“அம்மாடீ.. இப்படி ஒரு வரலாற்றை நான் கேள்விபட்டதே இல்லையே” என்று சாரு கூற,

“இருக்கு (அ)ம்மா. ராமாயணத்தில் கூட குமரிக்கண்டம் இருந்ததற்கான சில ஆதாரங்கள் இருக்கு. முதல்ல கடல்மட்டம் ரொம்ப குறைவா இருந்தவரை ரொம்ப செழிப்பா தான் இருந்திருக்கு. அதில் மேருமலைனு ஒரு மலை இருந்ததாகவும் பல இலக்கியங்கள்ல இருக்கு. அதிலிருந்து பல ஆறுகள் உருவாகியிருந்ததாகவும், அதுல ஒன்னு குமரி ஆறுனும் சொல்லப்படுது. இந்த குமரி ஆறு இலக்கியங்களில் இருந்து இதிகாசம் வரை பலதிலும் இருக்கு. கந்தபுராணத்திலும் இந்த குமரி ஆறு இருந்ததா சொல்லப்படுது. நம்ம மதுரை கூட முதலில் அந்த குமரிக்கண்டத்தோடு மேற்குப்பகுதியில் இருந்ததா தான் சொல்லப்படுது” என்று சமுத்திரா கூறினாள்.

“அவ்வளவு பெரிய கண்டம் பிறகு என்னாச்சு?” என்று அவர் புரியாமல் வினவ,

“கடற்கோல்களால் அதாவது சுனாமிகளால் அழிஞ்சுபோச்சும்மா. நம்ம முதல் தமிழ் சங்கம் மற்றும் இரண்டாம் தமிழ் சங்கம் அந்த குமரிக்கண்டத்தில் தான் நிறுவப்பட்டிருக்கு. அகத்தியர், தொல்காப்பியர் போன்ற மாமுனிகள் இந்த குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததா தான் சொல்றாங்க. எல்லாமே சுனாமியால அழிஞ்சு இப்ப கடலுக்கு அடியில் இருப்பதா நம்பப்பட்டு வந்தது. நம்மகிட்ட இதை ஆதாரபூர்வமா நிரூபணமாக்க முதலில் வசதிகள் பத்தலை. இப்ப ஒரு ரெண்டு வருஷம் முன்னதான் ஒலி சமிக்ஞை மூலமா கடலுக்கு அடியில் ஒரு கண்டம் இருப்பது நிரூபணமாச்சு.

அதுக்கு முன்ன இருந்தே, கடலுக்கு அடியில் வெகு துள்ளியமா ஒலி மற்றும் ஒளியை செழுத்தி புகைப்படங்கள் எடுக்கும் வசதிகளை கொண்ட ஒரு கருவியை உருவாக்க முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. இந்த கண்டம் கடலுக்குள் பலநூறு மீட்டர் ஆழத்தில் இருப்பதால அத்தனை கீழ கடல் அழுத்தத்தைத் தாண்டி எந்த கருவிகளின் வீச்சாலும் ஊடுருவி போக இயலாம இருந்தது.

இப்பவுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியாலதான் ஓசை மூலமா குமரிக்கண்டம் கடலுக்குள் இருந்ததற்கான சான்று நிரூபிக்கப்பட்டிருக்கு. ஆனாலும் அதுதான் குமரினு ஒத்துக்க எதாவது புகைப்படங்கள் போன்ற ஆதாரங்கள் கிடைச்சா இன்னும் நல்லாயிருக்கும்னு இந்த சைட்-ஸ்கேன் ஸோனார் (side scan sonar) அப்படிங்குற கருவியை உருவாக்க ரொம்ப முயற்சி செய்தாங்க. கிட்டத்தட்ட ஏழு எட்டு வருஷம் கழிச்சு இந்த முயற்சி இப்ப கை கூடி வந்திருக்கும்மா. இதன் மூலமா குமரிக்கண்டம் இருப்பதற்கான எச்சங்களா கடலுக்குள் இருப்பதை புகைப்படமா வெளியிடப்போறதா ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க. அதுமட்டுமில்லாம, கடலுக்குள் அடி ஆழம்வரை போய் அந்த கண்டத்தோட ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு வர்றதுக்குன்னே ஒரு இயந்திர மனிதனை உருவாக்கும் பணியும் கடந்த நான்கு ஆண்டுகளா போயிட்டுத்தான் இருக்கு. கடலின் ஆழமும் அழுத்தமும் தான் ஒரே பிரச்சினை. அதை சமாளிக்கும் விதமா உருவாக்கிட்டா ரொம்ப நல்லாருக்கும்” என்று அகரயாழினி கூறினாள்.

“இதையெல்லாம் கண்டுபிடிச்சு இப்ப என்ன பண்ண போறாங்களாம்? இதுல என்ன இருக்குனு நீங்களும் அபூர்வமா பேசுறீங்கனே எனக்கு புரியலையே” என்று சாருமதி கேட்க,

அன்னையை கோபித்துக் கொள்ளாமல் சிறு புன்னகையுடன், “அப்படியில்லம்மா... உனக்குப் புரியும்படியே சொல்றேன். நம்ம பாட்டி வீட்டில் கொள்ளு தாத்தா வேட்டையாடின மாட்டுத்தலைகளைப் பதப்படுத்தி மாட்டி வைச்சுருப்பாங்கள்ல? அதை ஏன் இன்னுமும் அப்படியே வச்சுருக்கீங்க?” என்று கேட்டாள்.

“என்னடி கேட்குற? அது ஒரு வீரச்சின்னம் மாதிரி. அவங்க காலத்தில் வேட்டையாடுறது ரொம்ப பெருமையான விஷயம். அவங்க வீரமே அதில் இருந்ததா சொல்லுவாங்க. தாத்தா பெரிய பெரிய மிருகங்கள் கிட்டருந்துகூட தப்பி வந்ததா பாட்டி எனக்கு அதைக்காட்டி தான் கதையெல்லாம் சொல்வாங்க” என்று சாருமதி கூற,

“அதேதான் ம்மா. அந்த பெருமைக்கு அந்த தலைகள் சான்றா இருக்குறது போல, இது நம்ம பெருமைக்கான சான்று! இது நிரூபணமானா, தமிழ் வரலாற்றில் பெருமை இன்னும் உயரும். குமரியில் தான் தமிழ் தோன்றியதா சொல்லப்படுது. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி இந்தத் தமிழ்மொழி. இது நம்ம அடையாளம். இது நமக்கான பெருமை. அகல்வாராய்ச்சிகள் எல்லாம் நடக்கப்போய் தான் சிந்துசமவெளி நாகரிகம், நம்ம சேர, சோழ மற்றும் பாண்டிய வரலாறுகள்னு எல்லாமே இப்ப நமக்குத் தெரிய வந்திருக்கு. அதுபோல இது மூலமா நம்ம தமிழோட தொன்மையான வரலாறுகள் பேசப்படும். நம்ம மொழிக்கான ஒரு அங்கீகாரம் ம்மா இது” என்று புரியும்படி விளக்கினாள்.

“ம்ம்.. என்னவோ.. எனக்கெல்லாம் இதுபத்தி ஏதும் தெரியாதுமா. நீங்க ரெண்டு பேரும்தான் படிக்குற புள்ளைங்க. அதனால எல்லாம் தெரிஞ்சு பேசுறீங்க” என்று சாருமதி கூற,

“எங்க மூலமா நீங்களும் தெரிஞ்சுக்குறீங்களே ம்மா. படிப்பறிவை தாண்டி பலதும் உங்ககிட்ட இருக்கே” என்றபடி சமுத்திரா சாருமதியை அணைத்துக் கொண்டாள்.

அன்றைய இரவு சமுத்திரா யாழினியுடனே தங்கிக் கொண்டாள். இருவரும் உறங்கவே இல்லை. இரவு வெகு தாமதமான பின்பும் அத்தனை ஆர்வத்தோடு செய்திகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களும், அவர்களது இடைவிடாது வேண்டுதலும் மட்டுமே அந்த அந்தகாரப் பொழுதில்!

“எல்லாம் நல்லபடியா வந்துடணும் சமு” என்று அகரயாழினிக் கூற,

“வந்துடும்டி” என்றபடி அவளது சில்லிட்டக் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

வானை நோக்கி விண்கலம் அனுப்பிய நமது ஆய்வாளர்கள் இன்று கடலை நோக்கி தங்கள் கருவியை அனுப்புகின்றனர்!

முடிந்தளவு ஆழம் சென்று, ஒளியை ஊடுறுவச் செய்து புகைப்படம் திரட்டவதாய் தான் அக்கருவி அமைக்கப்பட்டிருந்தது! அதன்படி இரவு காரிருள் சூழ்ந்த வேளையிலேயே அதை அனுப்பியுள்ளனர்.

புகைப்படம் எப்படி வரவுள்ளதோ என்ற பதட்டம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியலாளர்களை இருக்கையின் நுனிப்பகுதிக்கும், சிலரை இருக்கையை விட்டே எழவும் வைத்திருந்த தருணம் அது!

கடலுக்குள் சென்ற இயந்திரம், நீரின் அழுத்தத்திலும் தன் தன்மை மாறாமல் இதுவரை இருந்ததே பெரும் வெற்றிதான்!

சுற்றிமுற்றி கடல் அலைகளோடு நகர்ந்த இயந்திரம் அதன் வேலையைத் துவங்க, வியர்க்க விறுவிறுக்க தங்கள் இஷ்ட தெய்வங்கள் அனைத்தையும் வேண்டிக் கொண்டு காத்திருந்தனர்.

“அப்துல் சார் பேட்டி பார்த்தியா யாழி? அவர் இந்த ஆராய்ச்சிக்காக அவ்வளவு உழைச்சிருக்கார். யாரோ ஒரு லூசு பேட்டியில் ஒரு இஸ்லாமியரான நீங்க எப்படி தொன்மங்களும், ஆன்மீகமும் அதிகம் உள்ளதாகக் கருதப்படும் குமரிக்கண்டத்தை நம்புறீங்கனு அவர்கிட்ட கேட்டிருக்கான். அதுக்கு கொஞ்சமும் அசராம, நானும் ஒரு தமிழன்னு கெத்தா சொல்லிருக்கார் அவர்” என்று சமுத்திரா கூற,

“ஆமா சமு. நானும் பார்த்தேன். இப்படி பேசுறவங்களையெல்லாம் கண்டுக்கவே கூடாது. அப்துல் சார் ஸ்பார்டா ஹான்டில் பண்ணினார்” என்றவள் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செய்திகளைப் பார்த்தபடி தன் இல்லாத நகங்களையெல்லாம் கடித்துக் கொண்டிருந்தாள்.

இயந்திரம் தனது நிலையில் நின்று, அதன் செயல்பாட்டைத் துவங்க, மெல்ல பரபரப்பும் படபடப்பும் அதிகரித்தது!

இதோ அதோவென்ற நிமிடங்கள் நகர, தனது செயல்பாட்டை இயக்கிய இயந்திரம் புகைப்படங்களை எடுத்து செயற்கைக்கோளின் (சாடிலைட்டின்) உதவியோடு ஆய்வகத்திற்கு அவற்றை கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தது!

அப்பொன்னான தருணம் அங்கு கூடியிருந்த ஆய்வாளர்கள் தொட்டு ஒட்டுமொத்த தமிழ் குடிகளையும் கண்களில் கண்ணீரோடு உடல் சிலிர்த்து உள்ளம் பூரிக்க வைத்த உத்தம தருணம்!

'கடலுக்கடையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குமரிக்கண்டம்’ என்ற தலைப்போட வெளியானது, பழமையான கல் கட்டிடங்களின் முற்றும் சிதிலமடைந்த சில எச்சங்கள், மற்றும் பிளவுபட்ட கண்டத்திற்கான ஆதரங்கள்!

மீண்டும் உயிர்பெற்று வந்தது குமரிக்கண்டம்!

இன்று...

“அகரா.. ஏ அகரா..” என்று அவளை வேள்பாரி உழுக்க,

நினைவலைகளிலிருந்து திடுக்கிட்டு எழுந்தாள், பெண்!

“ஏ பதறாத.. நான் தான்” என்று வேள்பாரி கூற,

காதிலிருந்து காதொலிப்பானை எடுத்தவள், “நினைவுகளோட பயணத்தில் மூழ்கிட்டேன்” என்றாள்.

“ஆஹாங்? நினைவுகளில் எனக்கு இடம் இருந்துச்சா?” என்று அவன் குறும்பாக வினவ,

“வெளிவந்த நினைவுகளில் தான் திரும்ப மூழ்க முடியும். ஏற்கனவே மூழ்கி மூச்சுத்திணறி மோட்சம் பெற்ற நினைவுகளில் திரும்ப போய் எங்கிருந்து மூழ்குறதாம்?” என்று கேட்டு சிரிப்பும் நாணமுமாய் திரும்பிக் கொண்டாள்.

“ம்ஹும்..” என்று புருவம் ஏற்றியவன், “சாப்பாடு வருது. அதுக்கு தான் எழுப்பினேன்” என்று கூற,

“அய்யோ.. இவனுங்க வருக்கி பிஸ்கட்டு போல தானே எதையாவது கொடுப்பானுங்க” என்று சலிப்பாய் கூறினாள்.

“இண்டியன் க்விஸின் வாங்கிக்கோ” என்று வேள்பாரி கூற,

“அய்யா சாமி.. நம்ம சாப்பாட்டை நம்மாளுங்க சமைச்சாதான் உண்டு. எப்படி நம்மூரில் சாப்பிடும் பீட்சா பர்கர் அமேரிக்காவில் செய்வதுக்கு ஈடாகாதோ அதேபோல நம்ம சாப்பாட்டை செய்யும் பக்குவம் அவங்ககிட்ட இருக்காது. அதில் நொந்து போறதுக்கு அவங்க சாப்பாடே வாங்கி சாப்பிட்டுடலாம்” என்றாள்.

“இதைத்தான் பாம்பு திங்குற ஊருக்குப் போனா நடு துண்டா வாங்கி திங்கனும்னு சொல்வாங்களோ?” என்று கேட்டு அவன் சிரிக்க,

அவன் சிரிப்பில் கொள்ளைபோகும் மனதின் மீதும் விரும்பியே மையலுற்றாள் பெண்.

அவள் பார்வை மாற்றத்தை உணர்ந்தோனாய், “குளிரடிக்குதே” என்று அவன் கூற,

“பழகிக்கோங்க” என்றவள் சிறு இடைவெளிக்குப் பின், “ஜெர்மன்ல குளிரும் தானே?” என்றாள்.

அவள் வார்த்தைக் கோர்வையிலும், வாக்கிய ஏற்ற இறக்கங்களிலும் எப்போதும் போல் இப்போதும் அவளை மெச்சிக் கொண்டவன், அழகான புன்னகையுடன் அவர்களுக்கான உணவை பெற்று அவளோடு உண்டு உறக்கம் தழுவினான்!


நீரை வாரிக் குடித்து முழ்கியாள்

தன் வரலாறுகளைத் தன்னோடு கொண்டுள்ளாள்!
தேடித் துருவிக் கண்டுடெக்க வெளிவருவாள்

கார்கோள் கொண்ட குமரியாள்!!!

-தொடரும்...


அத்தியாயம்-03

 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
Excellent information epi ❤️🤩👌

எவ்வளவு ஆர்டிகிள்ஸ் படிச்சும், தேடிய தகவலையும் சரி பார்த்து.... 🤩 சரியான உழைப்பு நீங்க குடுக்கிற எபில தெரியுது ❤️

அருமை டியர்❤️👌

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
  • Like
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
Excellent information epi ❤️🤩👌

எவ்வளவு ஆர்டிகிள்ஸ் படிச்சும், தேடிய தகவலையும் சரி பார்த்து.... 🤩 சரியான உழைப்பு நீங்க குடுக்கிற எபில தெரியுது ❤️

அருமை டியர்❤️👌

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
மிக்க நன்றி அக்கா 🥰😍 தேடியதுக்கெல்லாம் பலன் கிடைச்ச போல இருக்கு நீங்க கொடுக்கும் கமென்ட்ஸ்😍
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️நல்லா தெளிவா யாழினி மற்றும் சமுத்திராவின் குமரிகண்டம் பற்றி சாருமதிக்கு கூறிய விதம் அருமை 👍👍👍👍👍👍👍👍
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
சூப்பர் சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️நல்லா தெளிவா யாழினி மற்றும் சமுத்திராவின் குமரிகண்டம் பற்றி சாருமதிக்கு கூறிய விதம் அருமை 👍👍👍👍👍👍👍👍
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகி 😍❤️