குமரியாள்-04
“ஏ உள்ள வாயேன்டி.. வந்தா உள்ள தானே வருவாரு?” என்று சமுத்திரா கேட்க,
“வாசல்லயே மடக்கிப் புடிச்சாதான் உண்டு. உள்ள நம்ம முதன்மை அதிகாரி இருக்காரே.. அன்னிக்கு சாப்பிடக் கூட்டிட்டுப் போனதுக்கே அந்த முறை முறைச்சாரு.. என்னமோ அவரை நாம கடித்துட்டு போய் கைமா பண்ணிடுற போலதான்” என்று யாழினி கூறினாள்.
வாய்விட்டு சிரித்தபடி “அவர் வருவாரா முதல்ல?” என்று சமுத்திரா கேட்க,
“உள்ள சங்கர் அண்ணா வருவார்னு தான் பேசிகிட்டார்..” என்றவள் பார்வை வாயிலையே நோக்கி இருந்தது.
அவள் எண்ணத்தைப் பொய்யாக்காமல் தனது எளிமையான இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தான் வேள்பாரி.
“ஏ.. வந்துட்டாரு வா வா” என்று தோழியை இழுத்துக்கொண்டு ஓடிய யாழினி, “பாரி சார்..” என்று அவன் முன் வந்து நின்றாள்.
'ஆ.. இவ ஆர்வத்துக்கு என் இடுப்பெலும்ப உடைச்சுடுவா போலயே’ என்று சமுத்திரா மனதோடு புலம்பிக் கொள்ள,
தன் முன் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க வந்து நின்ற பெண்களைப் பார்த்து லேசாய் புன்னகைத்தவன், “ஹாய்” என்றான்.
அவனுக்குத் தங்கள் பெயர் நினைவில்லை என்பது வணக்கத்தோடு அவன் வார்த்தை நின்றுவிட்டதில் புரிந்தது அவளுக்கு!
“பாரி சார்.. இன்னிக்கு மதியமும் இங்க தானே சாப்பிடுவீங்க? உங்க கூட கொஞ்சம் பேச முடியுமா? இந்த வழக்குப் பற்றி?” என்று யாழினி கேட்க,
எந்தவித யோசனையும் இன்றி, “சரிம்மா” என்றான்.
அவனுக்கு வழக்கைச் சார்ந்து செய்திகள் கிடைப்பது நல்லது தானே?!
அவன் ஒப்புக்கொண்டதில் மிகுந்த உற்சாகம் கொண்டவள், “ரொம்ப நன்றி சார்” என்றுவிட்டு தோழியோடு செல்ல,
சற்றுத் தொலைவு சென்ற இருவரும் குதூகலத்தோடு ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்வதைக் கண்டு வேள்பாரி புன்னகைத்துக் கொண்டான்.
மதிய நேரம் யாழினியும் சமுத்திராவும் தீவிரமான பேச்சுவார்த்தையோட சிற்றுண்டி சாலையில் அவனுக்காகக் காத்திருக்க, தானே இருவரின் முன்பும் வந்து அமர்ந்தான்.
“பயங்கர டிஸ்கஷன் போலயே?” என்றவன் சமுத்திராவைப் பார்த்து, “நீங்க சமுத்திரா ரைட்?” என்று கேட்க,
அவள் “ஆமா சார்” என்றாள்.
“உங்க பெயர்?” என்று யாழினியைப் பார்த்து அவன் கேட்க,
“அகரயாழினி” என்று கூறினாள்.
அவள் குரலில் சிறு வருத்தம் இருந்ததுவோ?
“ம்ம்.. என்ன விஷயம்?” என்று அவன் கேட்க,
“சார்.. இந்த வழக்குப் பற்றி எங்களுக்குத் தெரிஞ்சத நாங்க சொல்றதையும் கேட்க முடியுமா உங்களால?” என்று சமுத்திரா கேட்டாள்.
அவள் கண்களில் ஆர்வம் மினுமினுத்தது!
“என்ன சொல்லப் போறீங்க?” என்று சிறு புன்னகையுடன் அவன் கேட்க,
“குமரிக்கண்டம் பற்றியும், அது நம்ம வரலாறுன்னு சொல்றதுக்குமான ஆதாரங்கள்” என்று யாழினி கூறினாள்.
அவள் குரலில் இருந்தத் தீவிரம் அவனைத் தூண்டியது.
“குமரிக்கண்டம் இருந்ததுன்னு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டதே பல சவால்களுக்குப் பின்பு தான். கா. அப்பாதுரையோட நூல் இதுல பெரும் உதவி புரிஞ்சுது. அவரோட குமரிக்கண்டம் புத்தகத்தில் இலக்கியங்களை ஆராய்ந்து கொடுத்த பல தகவல்களை நானுமே படிச்சுப் பார்த்தேன். குமரிக்கண்டம் நம்ம இந்திய அரசாங்கம் கண்டுபிடிச்சது, இந்தியாவின் உரிமம் என்பதையும் தாண்டி அது தமிழ்குடியோட இடம் என்பதுக்கான சான்று தான் இது” என்றபடி ஒரு காகிதத்தை வைத்தாள் யாழினி.
அவளைத் தொடர்ந்த சமுத்திரா, “ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணகாலரை நாடு, ஏழ்குறும்பனை நாடுனு ஏழு ஏழா மொத்தம் நாற்பத்தி ஒன்பது நாடுகளா இருந்திருக்கு இந்த குமரியில். இந்த பெயர்கள் ஒன்னும் சாதாரணமா வைக்கப்படலை.. பல ஆராய்ச்சிக்குப் பின் வைக்கப்பட்டது தான். குமரியின் நிலப்பரப்பைப் பொருத்து வைக்கப்பட்ட பெயர்கள். தென்னை அதிகமுள்ள இடம், குறுஞ்சியும் முல்லையும் திரிந்து உருவான சுரம் சார்ந்த பகுதிகலான பாலை, அப்பறம் அந்த குறும்பனை இப்ப இருக்கும் யாழ்ப்பாணப் பகுதியோடு உடைய இடம். இப்படி அதோட நிலப்பரப்புகளை வச்சு வைக்கப்பட்ட பெயர்கள் தான்” என்று கூற,
“இதுக்கும் வழக்குக்கும் என்னமா சம்மந்தம் இருக்கு?” என்று வேள்பாரி கேட்டான்.
“இருக்கு சார். பிரிடிஷ் ஆட்சி நம்ம இந்தியாவுக்கு வருவதற்கு என்ன காரணம்? நம்ம நாட்டோட செழிப்பு தான். நான்கு பக்கமும் அரண் போல இயற்கையே பாதுகாத்து வச்ச நம்ம நாட்டின் செல்வச் செழிப்பைக் கொள்ளையடிக்கத்தான் வந்தாங்க. இப்பவும் அமேரிக்க அருங்காட்சியகத்தில் நம்ம நாட்டு பொக்கிஷங்கள் எத்தனையோ இருக்கு. ஏன் அந்த கோஹிநூர் வைரம்? காக்கத்திய மன்னரால், வாராங்கலில் உள்ள பத்திரகாளி அம்மனுக்கு கண் மலரா சாற்றப்பட்ட வைரம். ஆனா அது இப்ப அவங்க நாட்டு கிரீடத்தில்..
இதோ பங்கு கேட்டு வராங்களே ஆஸ்திரேலியா? அங்க மட்டும் என்னவாம்? 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த வெங்கலத்தில் உருவான நடராஜர் சிலை, பளிங்கு சரஸ்வதி சிலை, தஞ்சை பட்டுனு எத்தனையோ ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் கண்டுபிடிச்சு போராடி நம்ம மீட்ட பொருட்கள். அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பொருட்களுக்கு சட்டபூர்வமான மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்ட விஷயங்கள் நிறைய இருக்கு. அதில் ரொம்ப முக்கியமான விஷயம் அது அவங்க கலாச்சாரத்தை சேர்ந்ததா இருக்கணும். சட்டபூர்வமான உரிமம் இருக்கணும். ஒரு பொருளை அருங்காட்சியகத்தில் வைப்பது ஒன்னும் சந்தைல வாங்குற பஞ்சு மிட்டாயை வைப்பது போல இல்லன்னு நான் சொல்லி தான் உங்களுக்குத் தெரியணுமா சார்?
இது நம்ம தமிழ் கலாச்சாரத்தைச் சேர்ந்ததுன்னு நாம காட்டினாலே போதுமே? முதல் விஷயம் இதை எடுத்தது நம்ம அரசாங்கம், நம்ம எல்லைக்குள். அதுவே போதும்.. அதுபோக அருங்காட்சியக நெறிமுறைகள் இருக்கு” என்று யாழினி நீண்ட விளக்கம் கொடுக்க,
“நீ பேசாம லா (law) பிடிச்சிருக்கலாம் ம்மா.. இந்த போடு போடுறியே” என்றான்.
“நாங்கூட இதான் சொல்லுவேன் சார். சரியான ரூல்ஸ் ருக்குமணி.. போய் லாயருக்கு படிடின்னு சொல்லுவேன்” என்று சமுத்திரா கூற,
அவளது அடைமொழியைக் கேட்டு வாய்விட்டு சிரித்த வேள்பாரி, “நல்லாருக்குமா அந்த பெயர்” என்றான்.
'அய்யோ.. மானத்தை வாங்குறாளே?’ என்று மனதோடு சங்கடப்பட்டவள் அவனைக் கண்டு அசடு வழிய,
அவள் சங்கோஜம் புரிந்து மெல்ல சிரிப்பைக் கட்டுப் படுத்தினான்.
“சார்.. மா- போ-னுலாம் வேண்டாம். ரொம்ப எல்லாம் வயசாகிடலை. இவ பார்க்க கொஞ்சம் வயசானவ போல தெரியலாம். அதுக்காக இவ்வளவு மரியாதை வேண்டாம். நான் சமு இவ யாழி.. பெயரிட்டே கூப்பிடுங்க’’ என்று சமுத்திரா கூற,
சிறிதாகப் புன்னகைத்தபடி லேசாய் தலையசைத்தவன், “குமரிமேல ரொம்ப ஆர்வமோ?” என்று கேட்டான்.
“ஆர்வம் என்பதையெல்லாம் தாண்டின விஷயம் சார் இது. காட்டில் தொலைஞ்சுபோன ஒருத்தனுக்கு தன் குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் நம்ம தொலைஞ்சுபோன வரலாறுகளைக் கொண்டு வர்றது” என்று யாழினி கூற,
“நாங்க சின்ன வயசுலயே குமரிக்கண்டம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கோம் சார். இந்த குமரியாள் ப்ராஜெக்ட் ஆரம்பமான சமயம் தான் இதை பற்றிய கட்டுரைகள், கதைகள், ஆய்வுகள்னு அத்தனையும் தேடித் தேடிப் படிச்சோம்” என்று சமுத்திரா கூறினாள்.
அவர்களை புருவம் மேலேற மெச்சுதலாய்ப் பார்த்தவன், “சரி.. இப்ப என்ன சொல்ல வரீங்க? இதை காட்டி இது தமிழ் வரலாறுக்கு சொந்தமானதுனு சொல்லலாம்னு சொல்றீங்களா?” என்று கேட்க,
“தமிழ் வரலாறு மிகவும் தொன்மையானது சார். சிலப்பதிகாரம் கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த காப்பிய நூல்னு சொல்லப்படுது. இதுல,
'வாழ்க எம்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோறும் ஊழிதொறு உலகம் காக்க
அடியில்தன் அளவு அரசர்க்கு உணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி' அப்படினு ஒரு பாடல் இருக்கு.
இதுல பெருமையுடைய பெருந்நகை மன்னரை வாழ்த்திப் பாடிருக்காங்க. தென்திசையில் நெடுந்தூரம் பரவியிருந்த பஃறுளி ஆறும், பல மலைத் தொடர்களும், குமரிமலையும், கடல் கொண்டு போனதால், தெற்கே படையெடுக்க நிலம் இல்லாமல் போக, வடதிசை சென்று கங்கை ஆற்றையும், இமயமலையையும் வென்று அரசாண்ட தென்னவன் பாண்டியன் வாழ்க அப்படினு இதுல சொல்லப்பட்டிருக்கு.
என்ன சார் பாக்குறீங்க? குமரி மலை.. நம்ம குமரிக்கண்டத்தில் உள்ள மலை. அந்த மலையிலிருந்து ஆறு பெரும் ஆறுகள் ஓடினதா சொல்லப்படுது. அதில் இந்த பஃறுளி ஆறும் ஒன்னு. தெற்கே உள்ள ஆறு, பெருமலை, பஃறுளி ஆறுனு எல்லாத்தையும் கடல் கொண்டு போயிட்டதால வடக்கே போய் தன்னோட செங்கோலை நிறுவின மன்னன் வாழ்கனு சொல்லியிருக்காங்க இதுல” என்று யாழினி கூறினாள்.
“இதுமட்டுமில்ல சார். நம்ம வால்மீகி ராமாயணத்தில் கூட இதுக்கான குறிப்பு இருக்கு. சீதையைத் தேடி அனுமான் போறச்ச, தென்திசைப்பக்கம் முத்து, தங்கம் வைரம்னு செழிப்போட பாண்டிய மன்னன் ஆட்சி செய்யும் கபாடபுரம் இருக்கு. அங்கேயும் சீதை இருக்காங்களானு பார்த்துட்டுப் போங்கனு சுக்கிரீவன் சொன்னதா ஒரு குறிப்பு இருக்கு. மணிமேகலையிலும் கூட குமரிக்கண்டம் சார்ந்த குறிப்பு இருக்கு” என்று சமுத்திரா கூறினாள்.
சிறு பெண்கள் இவர்களிடத்தில் தான் எத்தனை ஆர்வமும் ஈடுபாடும் என்று வேள்பாரி மிகுந்த ஆச்சரியம் கொண்டான்.
“சரிம்மா.. இந்த இலக்கியமெல்லாம் ஆதாரமா செல்லுபடியாகும்னு நினைக்குறீங்களா?” என்று வேள்பாரி புருவம் உயர்த்திக் கேட்க,
“சேர சோழ பாண்டியர்களின் வரலாற்றுலருந்து பல அரசர்களோட வரலாறு வரை இலக்கியங்கள் வாயிலாகவும் கல்வெட்டு வாயிலாகவும் தானே சார் தெரிஞ்சுது? அது உண்மை இல்லைனு சொல்லிட முடியுமா நம்மால? அப்ப இதுவும் ஆதாரம் தானே?” என்று கிடுக்கிப்பிடு போட்டாள், யாழினி.
“உங்கக்கிட்ட பேசினதுல நானே நிறைய புது தகவல்களைத் தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப சந்தோஷம்மா..” என்றவன், “சமு.. அகரா.. ரைட்?” என்று கேட்க
“அகராவா?” என்று யாழினி கேட்டாள்.
“ம்ம்..” என்று தோள்களை உலுக்கியவன் கண்டு, “இதுவரை யாருமே இப்படி கூப்பிட்டதில்லை” என்று அவள் கூற,
“என்னைக்கூடதான் யாருமே பாரினு கூப்பிட்டதில்லை” என்று அழகிய சிரிப்போடு கூறினான்.
அப்படித்தான் அவர்களது சந்திப்பு வாடிக்கையானது! தங்களால் ஆன செய்திகளை பெண்கள் இருவருமே அந்த உணவு வேளையில் அவனோடு சேர்ந்து உண்டபடியே கூறினர்.
தன் தந்தையின் அலுவலகம் வந்த வேள்பாரி, பெண்கள் இருவரும் கூறிய ஆதாரங்களைப் பற்றிக் கூற,
“இதெல்லாம் ஆதாரமா எடுப்பாங்களா?” என்றுதான் அவரும் கேட்டார்.
“நான்கூட இப்படித்தான் ப்பா கேட்டேன். ஆனா அந்த பொண்ணு சொன்ன பதிலைக் கேட்டு, அப்படியே ஆஃப் ஆயிட்டேன்” என்று கூறிய வேள்பாரி அவள் உரைத்த பதிலைக் கூற,
மெச்சுதலாய் புருவம் உயர்த்தியவர், “யாருடா அது?” என்று கேட்டார்.
“அகரா, சமுத்திரானு ரெண்டு பொண்ணுங்க ப்பா. எவ்வளவு ஆர்வம், எவ்வளவு ஈடுபாடு? அகராவைக் கூட்டிட்டுப் போனீங்கனு வைங்க, இனிமே நம்ம பக்கம் வழக்குனு ஒருத்தரும் வரமாட்டாங்க. அப்படி வச்சு செஞ்சுடுவா” என்று அவன் வாய்விட்டு சிரிக்க,
மகனின் அக உணர்வுகளைப் படம் போடும் முக அபிநயங்களைப் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டார்.
“ஷீ இஸ் சம்திங் இன்டிரஸ்டிங் ப்பா” என்று தந்தையிடம் எந்த பூசலுமின்றி அவன் மன உணர்வை பகிர்ந்துகொள்ள,
சிறு புன்னகையுடன் அவன் தோள் தட்டியவர் எழுந்து சென்றார்.
அடுத்து வந்த நாட்கள் அவளைச் சந்திப்பதற்காகவே அங்கு செல்வதை வாடிக்கையாக்கினான்.
அப்படியொரு நாளில் தான் அலுவலகச் சிற்றுண்டி சாலையில் அவன் பெண்கள் இருவருக்காகவும் காத்திருக்க, அங்கே வந்த சமுத்திரா, “சாரி சார்.. லேட் ஆயிடுச்சா?” என்று கேட்டாள்.
“இல்ல சமு.. இப்ப கொஞ்சம் முன்ன தான் வந்தேன்” என்றவன் விழிகள் அகரயாழினியைத் தேடின.
“சார்.. சாரி.. யாழி இன்னிக்கு வரலை. உடம்பு சரியில்லை அவளுக்கு. நானுமே இப்ப அவளைப் பார்க்கத்தான் கிளம்பிட்டு இருக்கேன். நாம நாளைக்குப் பேசலாமா?” என்று சமுத்திரா கேட்க,
“ஏ என்னாச்சு?” என்று கேட்டான்.
“எனக்கும் சரியா தெரியலை சார். ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்குறதா அவங்க அம்மா தான் தகவல் தந்தாங்க. பாவம் ரொம்ப பயந்த சுபாவம் அவங்க. அதான் துணைக்கு கிளம்புவோம்னு லீவ் சொல்லிட்டு வந்தேன்” என்று சமுத்திரா வருத்தமாய் கூற,
“ஓ..” என்றவனுக்கு என்னவோ போல் ஆனது.
அவளைப் போய் சந்திக்க வேண்டும் என்றுதான் மனம் வேண்டியது. ஆனால் எடுத்த எடுப்பிலேயே தானும் வரலாமா என்று எப்படிக் கேட்பதென்று தயங்கினான்.
என்ன நினைத்தாளோ? அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சமுத்திராவே, “உங்களுக்கு ஓகேனா நீங்களும் வரீங்களா சார்?” என்று கேட்க,
கிடைத்த வாய்ப்பை விட்டுவிடுவானா என்ன?
சரியென்று தானும் புறப்பட்டவன், யாழினியை சேர்ப்பித்திருக்கும் மருத்துவமனை வந்து சேர,
சாருமதிக்கு அழைத்து அவளிருக்கும் அறையைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து சேர்த்தனர்.
புயல் காற்றில் சிக்கி மீண்ட அல்லிக் கொடிபோல கட்டிலில் படுத்துக் கிடந்தவளின் கரத்தில் நரம்பூசி ஏறிக் கொண்டிருந்தது.
கண்களை மூடிக் கிடந்தவளைப் பார்க்கும்போதே அவள் உறக்கத்தில் இல்லை, திராணியற்று மயக்க நிலையில் படுத்திருக்கின்றாள் என்பது புரிந்தது.
“ம்மா..” என்றபடி சமுத்திரா சாருவின் அருகே வர,
கண்ணெல்லாம் கண்ணீரும் அச்சமுமாய் அமர்ந்திருந்தவர் திருவிழா கூட்டத்தில் தொலைந்துபோன குழந்தை அன்னையைக் கண்டு அழுது கட்டியணைக்கும் விதமாய் சமுத்திராவை அணைத்துக் கொண்டார்.
அவரைப் பார்க்கும்போதே அவர் எத்தனை வெள்ளந்தியான குணமுடையவர் என்பது பாரிக்குத் தெரிந்தது.
கட்டிலில் துவண்டுக்கிடக்கும் தன் திருத்துழாய் அவளையே பார்த்து நின்றவனுக்கு மனம் ஏதோ பிசைய, சாருமதி அருகே சென்றான்.
“நைட்டெல்லாம் தூங்கவே இல்லடா சமு.. வயிறு பிரட்டுது வைத்தால போகுதுனு சொல்லிட்டு இருந்தா. நானும் கைமருந்தெல்லாம் வச்சுத் தந்தேன். காலைல வாந்தியா எடுக்க ஆரம்பிச்சுட்டா. காச்சல் வேற பிடிச்சுடுச்சு.. என்ன ஏது செய்யனு புரியாம எனக்கு பயமா போச்சு. அவளே ஆட்டோக்கு கூப்பிட்டா. ஆட்டோ வர்றதுக்குள்ள மயங்கிடுச்சு புள்ள. அந்த ஆட்டோ அண்ணேன் தான் உள்ள ஏத்தினாங்க. கூட்டிக்கிட்டு வந்தா ஏதோ ஃபுட் பாய்சன்னு சொல்றாங்க. வீட்டு சாப்பாடு தானே சாப்பிட்டானு கேட்டா, தண்ணில கூட வந்திருக்கும்னு சொல்றாங்க. எங்க என்ன சாப்ட்டு வந்ததோ தெரியலை. பிள்ளை ரொம்ப தொவண்டு போச்சு சமு” கண்ணீரோடு அவர் கூற,
“ஒன்னுமில்ல ம்மா.. எதாவது வெளிய திறந்து வச்ச தண்ணி எதும் குடிச்சிருப்பாளாருக்கும். சரியாபோயிடும் பயப்படாதீங்க” என்றுபடி அவருக்குத் தட்டிக் கொடுத்தாள்.
“நல்லவேள நீ வந்த சமு. எனக்குப் பயத்துல கையும் ஓடலை காலும் ஓடலை” என்று முந்தானையில் கண்ணீரைத் துடைத்து நிமிர்ந்தவர் அப்போதே வேள்பாரியைப் பார்த்தார்.
“இவரு லாயர் ம்மா. இப்ப நானும் யாழியும் ஒரு வழக்குப் பற்றி வீட்ல பேசுவோம்ல.. அதை இவரோட மேலதிகாரி தான் நடத்தப் போறாங்க. பெயர் வேள்பாரி” என்று சமுத்திரா அவருக்குப் புரியும்படி அறிமுகம் செய்ய,
“வணக்கம் சார்” என்றவர் அவனுக்கு உட்கார இடம் கொடுத்து எழுந்தார்.
“இல்ல இல்ல.. நீங்க உட்காருங்க” என்றவன், “இப்ப டாக்டர் என்ன சொல்றாங்க?” என்று கேட்க,
“ஊசியெல்லாம் போட்ருக்கோம் ஒருநாள் இங்கயே இருக்கணும்னு சொல்றாங்க சார்” என்று பாவம் போல் கூறினார்.
“பயப்படாதீங்க.. சரியாயிடும். அதெல்லாம் உங்க பொண்ணு கன் மாதிரி எழுந்து வந்து நின்னுடுவா” என்று பாரி கூற,
மெல்ல புன்னகைத்தபடி தலையசைத்துக் கொண்டார்.
சிலபல நிமிடங்களுக்குப் பின் கட்டிலில் படுத்திருந்தவள், “ம்மா..” என்று முனக,
சாரு பதட்டத்தோடு மகளின் அருகே ஓடினார்.
மற்ற இருவரும் கூட அவளை நெருங்க,
“ம்மா..” என்று மீண்டும் முனகியவள், “ம்மா.. வாந்தி வர்றபோல இருக்கும்மா” என்றாள்.
கண்களைக் கூட திறக்காது வேதனை தோய்ந்த குரலில் கூறியவள் விழியோரம் விழிநீர் வழிந்தது.
“இதோடா.. இருடா கண்ணா..” என்றவர் “சமு.. அந்த நர்ஸை கூப்பிட்டு வாடா” என்க,
“இதோ வரேன்மா” என்றபடி சென்றாள்.
அவளைத் தூக்கி அமர்த்த சாரு முயற்சி செய்ய,
மறுபக்கம் சென்ற வேள்பாரி தானும் அவளை தூக்கி அமர்த்த உதவினான்.
அவள் தலை அவன் தோளில் துவண்டு விழுந்தது. தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
சமுத்திரா செவிலியரை அழைத்துவர, மெல்ல அவளது நரம்பூசியின் குழாயை எடுத்துவிட்டு அவளை ஒரு பக்கமாய் தாங்கிக் கொண்டார்.
மொத்தமாய் அகரயாழினி துவண்டு சரியவும், செவிலியர் பிடிக்கத் தடுமாற, “சிஸ்டர்..” என்றபடி வந்த வேள்பாரி தானே பெண்ணைத் தூக்கிக் கொண்டு கழிப்பறைக்குள் நிற்கச் செய்தான்.
நீர் தொட்டியிடம் அவளை நிற்கச் செய்து பிடித்துக் கொள்ள, பெண்ணவள் வாந்தியெடுக்கத் துவங்கினாள்.
அவள் காதுகளை அணைவாய் பிடித்துக் கொண்டவன் அருகே வந்த சமுத்திரா, “சார் நீங்க விடுங்க நான் பிடிச்சுக்குறேன்” என்று கூற,
“இருக்கட்டும் சமுத்ரா” என்றான்.
அவளை அத்தனை பாதுகாப்பாய் பிடித்து அவளுக்கு முகம் கழுவ உதவி மீண்டும் தூக்கி வந்து அவன் கட்டிலில் கிடத்த, செவிலி நரம்பூசியில் குழாயைப் பொருத்தினார்.
“இவ்ளோ நேரத்தில் இன்னுமா வாமிட்டிங் நிற்கலை?” என்று செவிலியரிடம் வேள்பாரி விசாரிக்க,
“காலைலருந்து இப்ப ரொம்பவே குறைஞ்சிருக்கு சார்” என்று கூறியவர் மேலும் ஒரு ஊசியை செழுத்திவிட்டுச் சென்றார்.
கண்ணீரோடு அமர்ந்திருக்கும் சாருவை சமாதானம் செய்தபடி அமர்ந்திருந்த சமுத்திராவின் பார்வை, வருத்தம் தோய்ந்த விழிகளோடு யாழினியைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேள்பாரியின் மீதே படிந்தது.
சென்று சாருமதிக்கும் சமுத்திராவிற்கும் உணவு வாங்கிக் கொண்டு வந்தவன், அவளைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் செல்ல, சமுத்திராவும் தனது தந்தைக்கு அழைத்து யாழினி உடல் நலமற்றிருக்கும் செய்தியையும், அவளோடு மருத்துவமனையில் ஒருநாள் இரவு தங்கவுள்ளதையும் கூறிவிட்டு வைத்தாள்.
கட்டிலில் தோய்ந்து படுத்துக்கொண்டு மனமெங்கும் முடியாத நிலையிலும் கூட தன்னைத் தாங்கியவனின் கரத்தின் சூட்டை உணர்ந்தவளாய் உறக்கம் கொண்டாள்.
நீ மீட்க வந்ததோ
கார்கோள் கொண்ட குமரியாள்…
அதற்கு பலனாய் எடுத்துக் கொள்வதோ
காதல் நோய் தீண்டிவிட்ட இக்குமரியாள்!
-தொடரும்...
அத்தியாயம்-05

கார்கோள் கொண்ட குமரியாள் -05
குமரியாள்-05 ஒருவாரம் ஓடியிருந்தது... வீட்டில் கீழே படுத்துக் கொண்டு கால்களை நீள்விருக்கையில் தூக்கிவைத்தபடி அகரயாழினியும், அவளருகே நீள்விருக்கையில் சாய்ந்தபடி கீழே சமுத்திராவும் அமர்ந்திருக்க, “எரும எரும.. காலைத்தூக்கி அந்தரத்துல வச்சுக்கணுமா? ஒழுங்கா நீட்டிப் படு” என்று சாருமதி வந்து...
vaigaitamilnovels.com
Last edited: