• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காற்று -05

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,390
440
113
Tirupur
அத்தியாயம் - 5
என்னுள் நீயும்
உன்னுள் நானுமாய்
இருந்தாலும்....
என்றும் உன்னுள்ளே
நான் இருக்க
விரும்புகிறேன்...
காதலனாக கணவனாக
காவலனாக
என்றும் நீயிருக்கும் வரை
ஏதோ ஞாபகத்தில் இணைந்து இருந்த அந்தக் கைகளைப் பற்றியே கவலைப்படாமல், இருவரும் அமர்ந்து இருந்தனர். தன்னையறியாமலே ஒரு இனம் புரியாத சுகம் சூழ்வதையும், பெரும் பலத்தை அந்தத் தீண்டல் தருவதையும், அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
சிப்பிக்குள் விழுந்த மழைத்துளி முத்தாக உருமாறும் இயற்கையின் ரசவாதமாய்…
அவனுடைய நினைவுத் துளிகள், இதயத்தில் வீழ்ந்து காதலாய் உருமாறி குளிர்ச்சியாய் உள்ளே பரவுவதை அவளால் உணர முடிந்தது.
இருவரிடமும் ஆழ்ந்த அமைதியை சஷ்டியே கலைத்தாள். “சிவா நான் போகனும், அம்மா ரொம்ப பயந்துட்டு இருக்காங்க… நான் கூட இருந்தா பெட்டரா பீல் பண்ணுவாங்க. இந்த டைம்ல ஷ்ரவ் கூட நான் இருக்கனும்…” என்றதும்,
“ம்ம்… போலாம், கண்டிப்பா போகலாம். பட், நீ மட்டும் தனியா இல்லை, உன் கூட நானும் வரேன். இனி தனியா எதையும் பேஸ் செய்து கஷ்டப்பட வேணாம். நான் உன் கூட எப்பவும் இருப்பேன். ஆனா, அதுக்கு முன்னாடி, நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணனும்… நான் என்ன செய்தாலும், என்கூட துணையா இருப்பேன்னு உறுதி கொடுக்கனும்.” என்று அவன் கூற,
அவன் கைகளுக்குள் இருந்த தன்கைகளை எடுத்து அவன் கன்னத்தைப் பற்றியவள், “தேங்க்ஸ் சிவா, வேற என்ன சொல்ல, நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்… உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நான் இந்த உலகத்தை விட்டுப் போறவரைக்கும், உங்களை விட்டுப் போகமாட்டேன்…!
இட்ஸ் ப்ராமிஸ் சிவா… மதர் ப்ராமிஸ்…” என அவளும் அவன் கைகளைப் பிடித்துக் கொள்ள,
“லூசுதாண்டி நீ… இன்னும் லைப்பே ஸ்டார்ட் பண்ணல, அதுக்குள்ள, என்ன என்னமோ பேசுற, இனி இதுமாதிரி பேசினா, நான் உன்கூட பேசமாட்டேன்…”
“இல்ல… இல்ல… இனி இப்படி பேசவே மாட்டேன்… நீங்க சொல்லுங்க…”
“ஓகே… அது வந்து, உனக்கு கார்த்திக் மேல கொஞ்சமாச்சும் நம்பிக்கை இருக்கா… அவன் நல்லவன்னு, ஏதோ ஒரு காரணம் இருக்கு. அவன் இப்படி ஒதுங்கிப் போகன்னு உன்னாலப் புரிஞ்சுக்க முடியுதா…” என்றான் சிறு தயக்கத்துடன்.
சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “பல இளைஞர்களுக்கு வழிகாட்டியா இருக்குற ஒரு ப்ரொபசர் தப்பானவரா இருக்க வாய்ப்பில்லை, சிவா. அதோட, ஷ்ரவ் ஒரு தப்பானவரை செலக்ட் பண்ணி இருக்க மாட்டான்னு எனக்குத் தெரியும்…”

“அப்புறம் அப்பாவும் கார்த்திக் சார் கூட ஒர்க் பண்ணிருக்கார். எப்படித்தான் நல்லவனா நடிச்சி இருந்தாலும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல அவங்களோட உண்மை யான முகம் வெளியே வரும். ஆனா அத்தானைப் பத்தி, அப்படி யாரும் எந்தக் குற்றமும் சொன்னதே இல்ல. அப்பா என்கிட்ட சொல்லும் போது கூட,
‘கார்த்திக் ஒரு பிசினஸ் மேனோட, தொழிலதிபரோட மகன், ஒரு தொழில் சாம்ராஜியமே இருக்கு அவங்க கிட்ட.. ஆயிரக் கணக்குல லேபர்ஸ் சம்பளம் வாங்கி வேலை செய்றாங்க. ஆனா கார்த்திக் டீச்சிங் சூஸ் பண்ணி இருக்கார். ஒரு தொழிலதிபரா இருக்கறதை விட, பல தொழிலதிபர்களை உருவாக்குவது தான் பெஸ்ட்னு… என்கிட்டயே சொல்லி இருக்கார். அவர் தப்பானவரா இருக்க வாய்ப்பே இல்லைன்னு சொன்னார்.’ எனக்கும் அதே தாட் தான் இருக்கு…” என்றாள் நீளமாய்…
அவள் கூறியதை மௌனமாய் உள் வாங்கியவன், “எனக்கு உன் அம்மாக்கிட்ட பர்ஸ்ட் பேசனும் சசி…
சில விஷயங்கள் நான் பேசி தெளிவு பண்ணிடுறது நல்லது. அதனால கால் பண்ணு அவங்களுக்கு…” என்றான் சிவா.
மறுப்பேதும் சொல்லாமல் தாய்க்கு அழைத்து, நலம் விசாரித்தவள், சிவாவிடம் கொடுக்க,
அவனும் “வணக்கம் ஆன்டி” என ஆரம்பித்து, புனேவில் இருந்து கார்த்திக் வந்ததில் இருந்து இந்த நிமிடம் வரை நடந்தது என அனைத்தையும் கூறிவிட்டு, அடுத்து அவன் செய்யப் போவதையும் சொல்ல, சஷ்டிக்குத்தான் பயமாக இருந்தது.
‘பத்மா என்ன சொல்லுவாரோ என்ற பயம் வேறு… இவளும் காதல் அது இதென்று வந்து நிற்கிறாளே எனக் கோபப்படுவாரோ என்ற பயம் வேறு…’
அனைத்து உணர்வுகளையும் முகத்தில் காட்டியபடி சிவா பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் அவனும் பேசிமுடித்து அவளிடம் கொடுக்க, என்ன பேசுவது என்று,

“அம்மா…” என்றதும்,
“உன்னைத் தப்பா நினைக்கவே இல்லை, அவர் என்ன சொல்றாரோ அதைச் செய்…” எனவும்,
“மம்மி…. என்னைத் தப்பா நினைக்கல இல்ல… ப்ளீஸ் மம்மி…” என்று கூற,
“இல்லைடா எனக்குப் புரியுது, நீ சிவா சொல்றதை கேளு, சரியா, இப்போ ஷ்ரவோட லைப்பும் அதுலதான் இருக்கு… என்னோட ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு. மனசைப் போட்டு குழப்பாத, நான் பிறகு பேசறேன்டா…” என்று வைத்துவிட்டார்.
யோசனையோடு இருந்தவனை, “சிவா” என,
“நான் பேசினதைக் கேட்டதானேடா, நான் என்ன செய்தாலும், ஏன் எதுக்குனு கேள்வி கேட்காம என்கூடவே இருக்கனும்… நமக்கு டைம் ரொம்ப கம்மியாதான் இருக்கு… அண்ணிக்கு நார்மல் டெலிவரிக்கு சான்ஸ் இல்லைன்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு ஈவ்னிங்தான் ஆப்ரேஷன் செய்யப் போறாங்க.
நம்ம குடும்ப வாரிசு, எந்தப் பிரச்சனையும் இல்லாம, இந்த உலகத்தைப் பார்க்க வரனும். இன்னைக்கு எல்லா வேலையும் முடிச்சிட்டு நாம எல்லாரும் போகலாம். இப்போ கிளம்புவோம் டைமாச்சு…” என்று கூறி அவளையும் அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினான்.
‘யாரோ மந்திரக்கோலை ஆட்டி எல்லாமே சரியாகிடுச்சு… சொன்ன மாதிரி இருக்கு’ என்ற எண்ணம் தான் வந்தது அவளுக்கு…
அவனிடம் கேட்க பல கேள்விகள் இருந்தாலும் விடையளிக்கத் தயாரான நிலையில் அவன் இப்போது இல்லை… ஆனாலும், “கார்த்திக் எங்கே என மண்டையை உடைக்கும் அந்த ஒரு கேள்விக்காவது அவன் பதில் சொன்னால் போதும்…” என்று நினைத்து,
“சிவா… நீங்க சொல்ற எல்லாத்தையும் கேட்குறேன். பட் என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க, போதும்… அத்தான் எங்க இருக்கார்…?

ஷ்ரவ் பத்தி அவருக்கு எல்லாமே எப்போது தெரியும்?” என்றாள்.
“ம்ம்… நீதான் அண்ணியோட சிஸ்டர்னு தெரிஞ்சதுமே, உங்களை கண்டுப்பிடிக்கிறது கஷ்டமா இல்லை… ஆனா, கார்த்திக்கை கண்டுபிடிக்கிறது தான் கஷ்டமா இருந்துச்சு… அவனைத் தேடத்தான் இவ்வளவு நாளாச்சு…”
“ஒன் வீக் முன்னாடிதான் அவன் இருக்குற இடம் தெரிஞ்சது… அவன்கிட்ட அண்ணியைப் பத்தி சொல்லி, இப்போ இருக்குற சூழ்நிலை எல்லாம் சொல்லி, கிளம்ப வச்சிருக்கேன்…”
“நான் பொய் சொல்றதா நினைச்சு நம்பமாட்டேன்னு சொல்லிட்டான்… உங்க பேமிலி போட்டோஸ் அனுப்பி, டாக்டர் வெஸ்லினைப் பேசவச்சு, அப்புறம் தான் நம்பினான். சர்ஜரிக்கு முன்னாடி ஹாஸ்பிடல் வந்து விடுவான், டோன்ட் வொரி…” என்றதும்,
“அப்படியா… அப்போ இவ்ளோ நாள் எங்கே இருந்தாங்க, ஏன் எங்களைத் தேடி வரவே இல்லை…” என்றாள் படபடவென…
“அவன் உங்களைத் தேடி வரலன்னு உனக்குத் தெரியுமா…? வேலைக்குன்னு போனவன் லவ் பண்றேன், கல்யாணம் பண்ணி வைங்கன்னு வந்து நின்னா எந்த அம்மா அப்பா ஏத்துப்பாங்க…”
“அதுவும் இவ்வளவு சொத்துள்ள ஒருவன் அவனோட மதிப்பு அவனுக்கே தெரியல… அதுதான் இங்க பிரச்சனை…! போராடி அவங்க மனசை மாத்திடலாம்னு நினைச்சான். ஆனா, அவனே எதிர் பார்க்காத பல திருப்பங்கள் வந்து கார்த்திக் லைப்பை டோட்டலா மாத்திடுச்சு…” என்று தனக்குத் தெரிந்த உண்மைகளை அவளிடம் கூற, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய் இருந்தது, சஷ்டிகாவிற்கு.
அனைத்தையும் நெஞ்சில் ஒருவித வலியோடு கூறியவன், “போதும்… இனி இதைப்பத்தி எதுவும் பேச வேண்டாம்…” என்று வருத்தமான குரலில் பேசவும், எதுவும் சொல்லாமல் அவன் இடக்கையை தன் இருகைகளாலும் வளைத்து, தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்… அவளது கண்ணீர் சட்டையை நனைக்க,
“சாரி சிவா, ஐயாம் வெரி சாரி… நான் வேண்டின கடவுள் என் நம்பிக்கையைக் காப்பாத்திட்டார்… அத்தானோட அன்பு பொய்யா இருக்கக்கூடாது… நான் உங்கமேல வச்ச காதல் அழியக் கூடாதுன்னு வேண்டினேன்… என் வேண்டுதல் வீண் போகல சிவா…” என்று அழுதவளை, ஒருகையால் அணைத்து ஆறுதல் படுத்தியபடியே காரைச் செலுத்தினான், சிவா.