அத்தியாயம் - 6
உன் விழியில் விழுந்தேன்....
வெளிவர முடியாமல் இல்லை
வெளிவர விரும்பம் இல்லாமல்....
அதில் குடியிருக்க விரும்புகிறேன்
ஆயுள் வரை கைதியாக!!!
“மச்சான் டிக்கெட்ஸ் கன்ஃபர்ம் ஆகிடுச்சுல்ல, லாஸ்ட் டைம்ல சொதப்பிடப் போகுது…” சிவா
“அதெல்லாம் பக்காவா முடிச்சுட்டேன் மாப்பிள! ரிட்டன் டிக்கெட்ஸ் கூட புக்கிங் தான்… உங்க டைமிங் பொருத்து சேஞ்ச் பண்ணிக்கலாம்… நீ அதையெல்லாம் நினைச்சு டென்ஷன் ஆகவேண்டாம்…”- அரவிந்த்
“சரி மச்சான், நாங்க வரவரைக்கும், நீ தனியா மேனேஜ் பண்ணு, ஸ்ருதியை எங்க வீட்டுக்கு மட்டும் கூப்பிட்டுப் போயிடாதே! அவளோட மனசை ரொம்ப ஈஸியா கலைச்சுடுவார், எங்கப்பா…! என்ன நடந்தாலும், அவர் எப்படி ரியாக்ட் பண்ணாலும், நீ ஸ்டராங்கா இரு. அங்கிள் கிட்ட நான் பேசிட்டேன்…” சிவா.
“அப்பா எனக்கும் பேசினார்டா, கொஞ்சம் பயந்தாரு, ஸ்ருதி பேசவும் ஓகே சொல்லிட்டாரு, எனக்கு என்ன பயம் தெரியுமா? என் மாமனாரைக் கூட சமாளிச்சுடுவேன்.
ஆனா, அவர் பெத்த பொண்ணைத் தான், எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம முழுச்சிட்டு இருக்கேன்…”
“டேய் மச்சான், உன் காரியம் ஆகவும் என்னைக் கழட்டி விட்டுப் போயிடாதடா! எனக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட். நானும் என்னோட ரதி பேபி மட்டும் இருக்குற மாதிரி ப்ளா… ப்ளாவா… கனவெல்லாம் வருதுடா! உன் தங்கச்சியோட எனக்கு எப்படியாச்சும் பர்ஸ்ட் நைட் நடக்க வச்சுடு மச்சான்…! என்னோட நாலாவது பையனுக்கு உன் பேரை வைக்கிறேன்…” என்று நீளமாகப் பேசிய அரவிந்தை, கண்களில் சிரிப்புடன் பார்த்திருந்தான், சிவா.
திருமணப் புடவையை பெண்கள் இருவரும் மாற்றச் சென்றிருக்க, கிடைத்த கேப்பில் தான் இவர்களது பேச்சுக்கள் நடந்தது.
தான் பேசியதற்குப் பதில் பேசாமல் சிரித்துக் கொண்டு நின்றிருந்த சிவாவை விசித்திரமாய் நோக்கிய படியே, அவன் பார்வைப் போன திசையை பார்க்க,
அவனுடைய ரதி பேபி, சக்தி தேவியாய் மாறி முறைத்துக் கொண்டிருந்தாள்.
‘துரோகி…’ என்று நண்பனை மனதிற்குள் திட்டியபடியே, ஸ்ருதியைப் பார்த்து,
“அது வந்து ரதி பேபி, சும்மாடா! உன் அண்ணன் நமக்கு இன்னைக்கே பர்ஸ்ட்நைட் வைக்கனும் சொல்றான். நான் உடனே வேண்டாம்னு சொல்லிட்டேன். என் பேபியோட மனசு மாறுற வரைக்கும், நான் வெயிட் பண்ணுவேன்னு சொல்றேன். ஆனா, இவன் விட மாட்டேங்குறான்டா…! நீயே சொல்லு, இப்போ இருக்குற பிரச்சனைல அது ரொம்ப முக்கியமா…” என பாவமாய் பேச…
“சிவா வந்து உன்கிட்ட கம்பல் பண்ணிச் சொன்னான். நீ வேண்டாம்னு சொல்லிட்ட, இதை நான் நம்பனும்…” என்று கடுப்பாய் பேசியவள்,
பின் சிவாவிடம் திரும்பி, “சிவா, அது தான் அர்வி இவ்ளோ தூரம் சொல்றார் இல்ல, கேட்க மாட்டியா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.
நம்ம பிரச்சனை முடிஞ்சு, கார்த்திக் அண்ணா, அண்ணியோட நம்ம வீட்டுக் குட்டி இளவரசனோ, இல்லை இளவரசியோ வரட்டும், அதுக்குப் பிறகு எங்களைப் பத்தி யோசிக்கலாம்… சரியா…” என்று உள்ளுக்குள் சிரித்தாலும், வெளியே கோபமாய் பேசியவளை, கொலை வெறியுடன் பார்த்தான், அரவிந்த்.
“ஹேய் என்னடி இது…? அவ்ளோ நாளெல்லாம் வெயிட் பண்ண முடியாது. நீ சொல்ற டைம் படி பார்த்தா, நமக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணித்தான், பர்ஸ்ட் நைட்டே நடக்கும். அந்த வேலையே ஆகாது. உனக்காக வேணும்னா, இன்னைக்கு நைட் பத்துமணி வரைக்கும் டைம் தரலாம். அவ்ளோதான் அதுக்கு மேல… ஹூகும்… சான்சே இல்லை பேபி…” என்று அவளுக்கு மேலே கடுப்பாய் பேசியவனை…
“எதுக்கு இப்படி என் மானத்தை வாங்கித் தொலையுற…” என்று முணுமுணுத்தபடியே அவ்விடம் விட்டு ஓடினாள், ஸ்ருதி.
“ஏய் நில்லுடி… நில்லு…” என்று அவளின் பின்னாடியே ஓடிய அரவிந்தைப் பார்த்து சிவாவும், சஷ்டியும் வாய்விட்டு சிரித்தனர்.
“ஸ்ருதிக்கு அரவிந்த் அண்ணா மேல லவ்வோ லவ்வு, ஆனா, யாருக்கிட்டையும் சொல்லவே இல்லை. அவரைப் பார்த்தாலே ஓவரா கடுப்படிப்பா…! பிடிக்காத மாதிரியே நடிப்பா, இப்போ என்ன நடந்துச்சு, எப்படி ஓகே சொன்னா…” ஆர்வமாய் கேட்டாள் ஷஷ்டி.
“ம்ம்… அவ ஸ்கூல் படிக்கும் போதே, இவன் லவ் சொன்னான். நான் கூட சப்போர்ட் பண்ணேன். ஆனா, கார்த்திக் இவனை உண்டு இல்லைன்னு பண்ணிட்டான். அவ படிச்சு முடிக்கிறவரை, எந்த வகையிலும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு, கொஞ்சம் கண்டிப்போடு சொல்லி இருந்தான்…”
“கார்த்திக்னா பயம் அரவிந்த்துக்கு, அதோட என் அப்பா சொன்னா எப்படி அச்சு பிசகாம அப்படியே ஸ்ருதி கேட்பாளோ, அதே அளவு கார்த்திக் சொன்னாலும் கேட்பா… அதனால தான் சார் அடக்கி வாசிச்சது.
இப்போ பிசினஸ்ல இருந்து அங்கிளை ரிலீவ் பண்ணவும், பையனுக்கு பயம் வந்துடுச்சு போல. அதான் ஸ்ருதியை மிரட்டி எப்படியோ ஒத்துக்க வச்சுருக்கான்…”
“அத்தை இருக்கும் போதே ஸ்ருதியை தன் மருமகளா கொண்டு போகனும்னு ஆசை…! எங்க ஆச்சிக்கும் அதுல விருப்பம்தான். அவங்க இருக்குறவரை எல்லாமே நல்லாத்தான் போச்சு…” என்று கண்களை மூடி பெருமூச்சு விட்டவனின் கைகளைப் பிடித்து அழுத்தினாள், சஷ்டிகா.
“இனியெல்லாம் சரியாகும் சிவா… சரி பண்ணிடலாம்…” என்றதும்…
“ம்ம்… உனக்கு என்கிட்ட கேட்க நிறைய கேள்விகள் இருக்கும், கேட்கனும்னு தோனலையா…” என்றான் சிறு வருத்ததுடன்.
“நீங்களே சொல்லுவீங்கன்னு வெயிட் பண்றேன். எப்போ சொல்லனும்னு தோனுதோ சொல்லலாம்…” அவனின் சிறு வருத்தத்தைக் கூட போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பளிச்சென்று புன்னகை புரிந்தாள், ஷஷ்டி.
“தேங்க்ஸ்டா, என்னைப் புரிஞ்சுக் கிட்டதுக்கு. சீக்கிரம் உன்னோட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்றேன். ஆனா, நான் சொல்றதுக்கு முன்னாடி, நடக்குறதை வச்சு நீயே தெரிஞ்சுக்குவ…” என்றதும்,
“ம்ம்… ம்ம்…” என்றபடியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள், சஷ்டி…
“ஹேய்… இது கோவில், எல்லாரும் உங்களைத்தான் பார்க்குறாங்க, அந்த ஐயர் வேற வரச்சொல்லி கடுப்படிக்குறார். இங்க ரொமான்ஸ் சீன் ஓடுது. என் வயித்தெரிச்லைக் கொட்டாம வந்து தொலைங்க…” என்று எரிச்சலாய் கத்திய அரவிந்தைப் பார்த்து,
“என்ன மச்சான் என் தங்கச்சி கால்ல விழுந்தும் கூட ஒன்னும் தேரல போலயே…? போடா…! போடா…! அதுக்கெல்லாம் மச்சம் வேணும் மச்சான்… எனக்கு இருக்கு தானா கிடைக்குது…”
“யூ சி மச்சான், நீ இன்னும் கொஞ்சம் வளரனும், சரி சரி என்னைப் பார்த்து வயிறெரியாதே, பிறகு உன் காத்து எனக்கும் பட்டுடப் போவுது… நீ வாடி செல்லம்…”
என உசுப்பேற்றிய படியே, தன்னவளை அணைத்துக் கொண்டு நகர,
“ஏய்… ஸ்ருதி உன்னால என் மானம் கண்டமேனிக்குப் பறக்குதுடி, இன்னைக்கு என்ன சொன்னாலும் நம்ம பர்ஸ்ட் நைட் நடந்தே ஆகனும்…” என பக்கத்தில் இருந்தவளின் கையைப்பிடித்து இழுத்தப்படியே நகர,
“மானத்தை வாங்காதேடா…” என்று கோபமாகப் பேசினாலும், அவள் முகமும் சிரிப்பால் மலர்ந்திருந்தது.
சிவாவின் ஆட்கள் சிலரையும், அவனது நண்பர்கள் சிலரையும் மட்டும் வர வைத்திருந்தான். ஏற்கனவே ரிஜிஸ்டர் முறைப்படி திருமணம் செய்து முடித்திருந்தாலும், முறைப்படி திருமணம் செய்து கொள்வது நல்லது என்பதாலும் தான் இந்த ஏற்பாடுகள்.
ஹோமப் புகைக்குள் ஆண்கள் இருவரும் ஆளுக்கொரு மனையில் அமர்ந்திருக்க, பெண்கள் இருவரையும் அழைத்து வரச்சொல்லி ஐயர் கூறியதும்,
அவரவர் துணைகளின் அருகில் பெண்களும் அமர, கெட்டிமேளம்… கெட்டிமேளம்… என்ற ஐயரின் வார்த்தைகள் முடியும் முன்னே, சர்ரென்று இரண்டு கார்கள் வந்து நின்றன.
“ரதிமா… எங்க என்னோட மாமனார் இல்லாம நம்ம மேரேஜ் நடக்கப் போகுதேன்னு ரொம்ப பீல் பண்ணேன்டி செல்லம்… அந்த பீலீங்க்ஸ் தெரிஞ்சதும் கடவுள் உடனே அனுப்பி வச்சுட்டார் பாரு… ‘காட் இஸ் கிரேட்னு…’ சும்மாவா சொன்னாங்க…” என அருகில் இருந்தவளின் காதை கடித்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.
“வாயை மூடு… நானே பயத்துல இருக்கேன்… உனக்கு நக்கலு… என் டாடிய பத்தி எதுவும் சொன்ன அவ்ளோதான்…” என்று முறைக்கவும், கப்பென்று வாயை மூடிக்கொண்டான், அரவிந்த்.
கார் வந்த வேகத்தைப் பார்த்ததும், சிவாவின் கைகளை அழுந்தப் பிடித்த அவளின் கைகள் பயத்தில் வேர்த்திருந்தது.
“நான்தான் கூடவே இருக்கேனே, எதுக்கு இப்படி பயம் வருது… நான் பேசிக்கிறேன்… நான் மட்டும் பேசிக்கிறேன்… நீ அமைதியா வேடிக்கை மட்டும் பாரு போதும்…” என்று அவளுக்குத் தைரியம் கூறியவன் ஐயரின் முகத்தைப் பார்த்தான்.
“தகவல் சொல்ல லேட்டாகிடுச்சா மாமா…. லேட்டா வந்துருக்காங்க உங்க முதலாளி…” எனவும்,
“அதுவந்து… அதுவந்து தம்பி, நான் சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன்… ஆனா…. தம்பி…” என ஐயர் திணற,
“நீங்க அவர்கிட்ட சொல்லனும்னு தானே உங்ககிட்ட வந்தோம்… என் திட்டமும் அதுதான்… உதவி செய்ததுக்கு நன்றி மாமா…” என்றவன்,
“நல்ல நேரம் முடிய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு…” என்று கேட்கவும்,
“பத்து நிமிஷம்தான் இருக்கு…” என்றார் ஐயர் தவிப்புடன்.
“மச்சான்” என்ற நொடி, அரவிந்த் தன் கையில் உள்ள மாங்கல்யத்தை ஸ்ருதியின் கழுத்தில் கட்டி, திரும்பி நண்பனைப் பார்க்க, அவனோ வெகு நிதானமாய் சஷ்டியின் கழுத்தில் மூன்று முடிச்சுகளைப் போட்டுக் கொண்டு இருந்தான்.
புயல் வேகத்தில் லிங்கேஸ்வரன் நெருங்கும் முன்னே, திருமணம் முடிந்திருந்தது. கோபம் பொங்க நால்வரையும் உறுத்து நோக்கிய சில நொடிகளை தனக்கு சாதகமாய் பயன் படுத்திக் கொண்டார், அரவிந்தின் அப்பா தனஞ்செயன்.
“நான் அவ்வளவு தூரம் சின்னப் புள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லியும் கேட்காம, இந்த துரோகியோட பொண்ணையே கல்யாணம் செய்திருக்க…” எனக் கத்த,
அங்கிருந்த அனைவருமே இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது.