• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காவல் நீ என் காதல் நீயடா

Raja Sri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2024
6
2
3
Sattur, Virudhunagar District
நகரத்திற்கு வெளியே அரண்மனை போல் இருந்த அந்த வீட்டில் உள்ள எல்லா அறைகளுமே ஒரு வித வாசனையுடன் அழகாக காட்சி அழிக்க, ஒரு அறை மட்டும் எங்கு பார்த்தாலும் சிறு சிறு செய்தி தாள்கள் ஒட்டப் பட்டு குப்பை போல் காட்சி அளித்தது.இது அவனால் பல ஆண்டுகள் சேகரிக்க பட்ட செய்திகள். அதை அவன் ஏன் சேகரிக்கிறான் என்று அவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது.அந்த அறையின் ஒரு சுவர்றின் மேலே ,


"நூறு நண்பர்கள் தரும் ஊக்கத்தை ஒரே ஒரு எதிரி தருவான் நாம் வளர"


என்ற வாசகமும், அதன் எதிர் சுவற்றின் மேலே


"கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீ வளர்கிறாய் என்று பொருள் ஆனால் கூட்டமே உனக்கு எதிரியாக இருந்தால் நீ வளர்ந்து விட்டாய் என்று பொருள்...!"


என்ற வாசகமும் எழுதி இருந்தது. இதை ஏன் எழுதி வைத்திருக்கிறான் என்று அவனை தவிர யாருக்கும் தெரியாது.


அந்த அறையில் அவனை தவிர வேறு யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்திடவும் முடியாது.அவன் அந்த அறைக்குள் சென்று வந்துவிட்டால் அவன் முன் யாரும் வர மாட்டார்கள் அவன் தாய் ரேவதியை தவிர.அந்த அறையில் தான் அவனுடைய அனைத்து உணர்ச்சிச்சிகளும் வெளிப்படும்.அவன் விக்ரம ஆதித்யன். மற்றவர்களுக்கு விக்ரம் அவன் தாய்க்கு மட்டும் ஆதி.


அவனை கண்டாலே அனைவரும் பயம் கொள்ளுவர். அவன் செய்யும் வேலையும் அப்படி. ஆம் அவன் ஒரு காவல்காரன். சிறு வயதில் தன் தந்தை ஆசைப்பட்டதைப் போல் போலீசாக வேண்டும் என்று படித்து ஐ. பி. எஸ் தேர்வில் பாஸ் ஆகி இன்று காவல் துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளான்.


யாரையும் அவ்வளவு எளிதாக அவன் அருகில் சேர்த்துக் கொள்ள மாட்டான். அவன் நண்பன் முகிலனை தவிர. ஒரே பார்வையில் அனைவரையும் எடை போட்டு விடுவான்.அதிகம் பேச மாட்டான், அப்படி பேசினாலும் எதிரில் இருப்பவர் மூக்கு உடைப்பட்டு போகுமளவு தான் பேசுவான்.


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


"அம்மா லேட் ஆகிருச்சு மா வேகமா சாப்பாடு எடுத்து வைங்க" என்று அந்த வீடே அலறும் படி கத்திக் கொண்டிருந்தாள் அவள்.


"இரு டி எதுக்கு இப்போ உசுர கொடுத்து கத்துற" என்று பதிலுக்கு கத்திய படி கூடத்திற்கு வந்தார் அவளது தாய் பவானி.


"காலேஜ்க்கு லேட் ஆகிருச்சு மா" என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினாள். அவள் இனியா. பெயருக்கு ஏற்றார் போல் அனைவரிடமும் இனிமையாக பழகுபவள். கோபம் என்றால் என்ன விலை என்று கேட்பவள். எப்போதும் எந்த துன்பம் வந்தாலும் முகத்தில் ஒரு சிரிப்பு இருந்துக் கொண்டே இருக்கும்.ஆனால் அவள் ஒரு அப்பாவி.தனக்கு மிகவும் பிடித்தவர் என்ன சொன்னாலும் நம்புவாள். அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வாள்.


"இந்தா வேகமாக சாப்பிட்டு கிளம்பு" என்று அவள் தட்டில் நான்கு இட்லிகளை அடுக்கினார் பவானி.


இதையைல்லாம் கண்டுக் கொள்ளாமல் செய்தித்தாளில் தலையை புதைத்திருந்தார் அந்த வீட்டு தலைவன் கணபதி.


வேகமாக தன் உணவை உண்டு முடித்து விட்டு பஸ் நிறுத்தும் இடத்துக்கு வந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள் இனியா.


பஸ் சிறிது தூரம் நகர அங்கு ஒருவன் ஜீபில் சாய்ந்து நின்றிருந்தான். அவனை வெட்ட பின்னிருந்து ஒருவன் வர, அவள் தன் அருகில் இருக்கும் பெண்ணின் வாட்டர் போட்டிலை எடுத்து அவன் மேல் எரிந்து விட்டு பின்னே பார்க்கும் படி சைகை செய்ய பஸ் நகர்ந்து சென்று விட்டது.


இந்த கல் நெஞ்சக் காரனுக்கும் அந்த அப்பாவிக்கும் இடையில் நடக்கும் காதலை போக போக காண்போம்.


- காதலிக்க வருவான் 💐💐💐