• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காவல் -3

Raja Sri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2024
6
2
3
Sattur, Virudhunagar District
தன்னை தாக்க வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று ஜீபில் ஏற்றி அவன் கைக்கு விலங்கு போட்டு விட்டு மற்றவர்களை கண்கள் சிவக்க ஒரு பார்வை பார்த்தான் விக்ரம். அவனது பார்வையின் பொருள் உணர்ந்தவர்கள் "சார்... நீங்க இவனை ஸ்டேஷன் கூட்டிட்டு போங்க... நான் மட்டும் இங்க இருக்கேன்" என்று ஒரு வயதான கான்ஸ்டபில் கூற,


"இல்ல அண்ணா... நீங்க வாங்க முத்து... நீங்க இங்க இருங்க" என்றவன் நேராக தன் காவல் நிலையத்தை நோக்கி வண்டியை செலுத்தினான். ஏனோ அவன் மனதில் அந்த கண்களே வந்து இம்சை செய்தது. அவன் நினைத்தால் அடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் மேல் பாட்டிலை எறிந்து அவனை காப்பாற்றியவளை பற்றிய ஜாதகத்தையே அவன் முன் வைத்து விடுவார்கள் தான். இருந்தும் அவனுக்கு தன்னை காப்பாற்றியவளை தான் தான் தேட வேண்டுமே தவிர குற்றவாலியை தேடி பிடிப்பது போல் மற்றவர்களை விட்டு கண்டு பிடிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.


எனவே மாலை அங்கு தானே செல்கிறோம் அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவன்,அவள் கண்கள் தரும் நினைவை ஒதுக்கி வைத்து விட்டு, தான் அழைத்துக் கொண்டு வந்த அந்த குற்றவாலியை தனக்கே உரிதான நல்ல முறையில் விசாரிக்க ஆரம்பித்தான்.பாவம் அவன் அறியவில்லை அவன் தேடாமலையே அவன் கண்ணில் வந்து சிக்கிக் கொள்வாள் அவன் பைங்கிளி என்று.


அந்த குற்றவாலியை விசாரித்ததில் அவனுக்கு கிடைத்த தகவல் அவனது கோபத்தை இரண்டு மடங்காக்கியது. அந்த பகுதியின் கவுன்சிலர் சிகாமணியுடன் சில வாக்கு வேறு பாடு இருந்துக் கொண்டே இருந்தது விக்ரமுக்கு.சிகாமணிக்கு வெளியே கவுன்சிலர் என்னும் பட்டம்.ஆனால் உள்ளேயோ பொறம்போக்காக இருந்தான். செய்யாத திருட்டு வேலைகளே இல்லை.மது, மாது, கஞ்சா, போதைப்பொருள் என அவன் கால் பதிக்காத கேவலமான தொழில்களே இல்லை எனலாம்.இது அனைத்தும் தெரிந்தாலும் சரியான ஆதாரம் கிடைக்காதலால் அமைதியாக இருக்க வேண்டி இருந்தது விக்ரமுக்கு.


தற்போது அவன் வீட்டிற்கு தினமும் இரண்டு கல்லூரி மாணவர்கள் காலையிலும் மாலையிலும் வந்து செல்வதாக கேள்விப்பட்டவன் என்ன என்று விசாரிக்க அவன் போதைப்பொருளை அவன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கல்லூரியில் விற்பதாக தகவல் வந்தது.


சிகாமணிக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள். பெண் பிள்ளையை திருமணம் செய்து கொடுத்து விட்டான். ஆண் பிள்ளைகளில் ஒருவன் வெளிநாட்டில் இருப்பதாகவும் இன்னொருவன் தான் இங்கு உள்ளான் என்பது விக்ரம் செவிக்கு வந்த தகவல். இங்குள்ளவனும் அப்பனை போலவே செய்யாத வேலையெல்லாம் செய்துக் கொண்டிருந்தான்.


நேற்று இரவு குடிப்போதையில், வேலைக்கு போய்விட்டு வந்த இரண்டு பெண்களை விக்ரம் முன்பே கையைப் பிடித்து இழுத்து விட்டான். அதை பார்த்த விக்ரம் அங்கேயே அவனை நான்கு சாத்து சாத்தி கையை உடைத்து விட்டு எதுவும் தெரியாது போல் வீட்டிற்கும் வந்து விட்டான்.அவன் கூட வந்த கூட்டாளிகளை காணவில்லை இவன் மட்டும் அரசு மருத்துவமனையில் என்ற தகவல் தெரிந்த சிகாமணி விக்ரமை கொள்ள ஆள் அனுப்பி விட்டார்.அதை தான் இனியா வந்து தடுத்தது.


அவனை பற்றி அனைத்தும் தெரிந்து அமைதியாக இருந்தால், அவன் மகன் ரோட்டில் போகும் பெண்ணை கையை பிடித்து இழுத்து அடி வாங்கி விட்டான். அவன் அப்பன் மேல் இருக்கும் வெறியையும் இவன் மேலேயே பாதி தீர்த்துக் கொண்டான் விக்ரம்.


மதியம் உண்ணும் நேரம் நெருங்க, அந்த குற்றவாளி கூறியதை முழுவதும் கேட்டு விட்டு அந்த அறையில் இருந்து வெளியே வந்தவன் கணக்கரிடம் "அண்ணா... இவன் மேல வழிப்பரி கேஸ் போட்டுருங்க" என்று கூறி விட்டு நகர்ந்தான்.


தனக்கு பின்னால் "ஏன் சார் வேற ஏதாவது கேஸ் போடுவோமே" என்று தயக்கமாக கேட்ட கணக்கரை பார்த்தவன் "அவனுக்கு குடும்பம் இருக்கு ணா... இதை அவன் காசுக்காக செய்திருக்கான் அவ்ளோ தான்" என்று கூறி விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டான்.


அங்கிருந்த மற்ற காவலர்களுக்கு தான் இவனை புரிந்துக் கொள்வது கடினமாக இருந்தது. எப்போதும் விரைப்பாக தப்பென்று தெரிந்தால் சப்பென்று அறைபவன் கொஞ்சம் கூட மற்றவர்களை தன்னிடம் சேர்த்துக் கொள்ளாதவனுக்கு அங்கிருந்த அனைவரை பற்றியும் தெரியும் அவர்கள் குடும்பத்தை பற்றியும் தெரியும். எல்லாரையும் விட்டு இரண்டு எட்டு தள்ளியே இருந்தாலும் அவர்களுக்கு தேவையானதை தன்னால் முடிந்த மட்டும் செய்து விடுவான்.ஒருநாளும் மரியாதை குறைவாக யாரையும் அழைத்ததும் இல்லை நடத்தியதும் இல்லை. தான் அவர்களின் மேல் அதிகாரி என்ற எண்ணம் இருந்தாலும் அவர்களின் வயதுக்கு மரியாதை கொடுத்து அனைவரையுமே "அண்ணா... இல்லை அக்கா" என்றலைத்தே பழகி விட்டான்.மர்றிவர்களையும் அவ்வாறே அழைக்க வைக்கவும் பழக்க படுத்தி விட்டான்.


அங்கிருந்தவர்களும் விக்ரம் முதன்முதலில் வேலைக்கு வரும் போது எப்படி இருக்குமோ என்று பயத்துடன் இருக்க, அதற்கு அவசியமே இல்லாமல் அவன் தள்ளி நின்றே பழகும் விதம் அவர்களுக்கு அவன் பால் மரியாதையையும் பாசத்தையும் ஒரு சேர தோற்று வித்து இருந்தது.


தன் காவல் அலுவலகத்தில் இருந்து விக்ரம் நேராக வந்தது முகிலன் வேலை பார்க்கும் அலுவகத்திற்கு தான். அங்கு வந்து சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் அடுத்த நிமிடமே பொரிய தொடங்கி விட்டான்.அதையெல்லாம் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு தன் சூழல் நாற்காலியில் சுற்றிக் கொண்டே அமர்ந்திருந்தான் முகிலன்.


"என்ன டா... நான் பேசிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு சிரிச்சிட்டே இருக்க" என்று கோபத்துடன் விக்ரம் கேட்க,


"இல்ல மச்சான்.... உனக்கு மட்டும் எப்படி டா... புதுசு புதுசா பிரச்சனை வருது" என்று யோசனையுடன் கேட்டான் அவன் நண்பன் முகில்.


"உனக்கு என்னப்பா நடு சிட்டில வேலையை வாங்கிட்டு ஜாலியா இருக்க.... நான் அப்படியா" என்று தன் நண்பனை சீண்ட,


"டேய் நல்லா வாயில வந்துரும்... நடு சிட்டியாம்... இதுக்கு ஏதாவது அத்துவானா காட்டுல கூட போட்டுருக்கலாம்.... எப்போ என்ன பண்ணுறாங்கனே தெரிய மாட்டேங்குது எரிச்சலா இருக்கு" என்று முகிலன் அவன் பங்கிற்கு புலம்ப தொடங்க,


"சரி அதை விடு மச்சான்....நமக்கு இதெல்லாம் புதுசா என்ன" என்றவன், காலையில் நடந்த சம்பவத்தை விவரிக்க,


"டேய் யாரு டா அந்த பொண்ணு... ப்பா செம தைரியம் போ.... எப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் பாட்டில தூக்கி அடிச்சா... ஏன் அவ கிட்ட டிபன்போக்ஸ் இல்லையா" என்று முகிலன் சிரிக்க, அப்போது தான் விக்ரமிர்க்கும் தோன்றியது.அவன் முகத்தில் சிறு புன்னகை வந்து விட்டு அடுத்த நொடி மறைந்ததை பார்த்து விட்டான் முகிலன்.


ஏனோ முகிலன் மனதில் தன் நண்பனுக்கு அந்த பெண் மேல் ஏதாவது ஈர்ப்பு இருக்குமோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.அதை கேட்டால் தனக்கு சங்கு நிச்சயம் என்று எண்ணியவன் அமைதியாக இருந்து விட்டான். மனமோ "கடவுளே அவன் ஆசை பட்டு பார்த்ததில்லை... அவன் அப்பாவுகாக தான் இந்த வேலையில் சேர்ந்தான்... நன்றாக தான் உள்ளான்... ஆனால் அவனுக்கு இப்போது அந்த பெண்ணை பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்...அவளையே அவனுக்கு ஜோடி சேர்த்து விடு பா... அவன் சந்தோசமாக இருந்தால் அதுவே எனக்கு போதும்" என்று தன் நண்பனுக்காக கடவுளையே மாமா வேலை செய்யுமாறு வேண்டிக் கொண்டான் விக்ரமின் உயிர் நண்பன்.


தான் திருமணம் செய்து தன் மனைவியுடன் இருக்க இவன் இப்படி திருமணமே செய்யாமல் இருக்கிறானே என்று கவலை முகிலனுக்கு இல்லாமல் இல்லை. அவனும் எத்தனையோ தடவை சொல்லி பார்த்து விட்டான்... விக்ரமோ பிடி கொடுக்காமல் அவனையே குழப்பி விட்டு சென்று விடுவான்.


முகிலனுடன் வெளியே உண்டு விட்டு நேராக தன் அலுவலகம் வந்த விக்ரம், சிறிது நேரம் தன் வேலையில் மூழ்கி இருந்தான். பின் கடிகாரம் மூன்று மணி என்பதை காட்ட, சிலரை அழைத்துக் கொண்டு தன் தாய் வேலை பார்க்கும் கல்லூரியை நோக்கி சென்றான்.


நேராக கல்லூரி வந்தவன் சிறிது நேரம் அந்த கல்லூரி தாலாளரிடம் பேசி விட்டு நேராக வரலாறு துறையை நோக்கிச் சென்றான்.


காக்கி உடையில் வந்தவனையே சிலர் ஆச்சரியமாக பார்க்க, சில மாணவர்களோ 'இவைங்களுக்கு வேலை இல்லை மாசத்துக்கு ரெண்டு நாள் இங்க வந்து சுத்தி பாத்துட்டு போறாய்ங்க... எனக்கு என்னமோ அவருக்கு இந்த காலேஜ்ல ஏதோ ஒரு பொண்ணு செட் ஆகிருச்சு போல... அதான் இப்படி அடிக்கடி ஏதாவது சாக்கு சொல்லிட்டு வராங்க' என்று அவன் காது படவே பேசி சிரித்துக் கொண்டனர்.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நேராக வரலாறு துறை முன்பு நின்றுக் கொண்டிருந்தான் விக்ரம்.


வெளியே நின்று அனுமதி கேட்டு உள்ளே வந்தவனை பார்த்த அந்த துறை தலைவர் எழுந்து நின்று மாலை வணக்கம் வைத்தார். அதை ஏற்றவனிடம் தானும் தன் இருக்கையில் அமர்ந்து தனக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர வைத்தார்.


"மேம் உங்களோட டிபார்ட்மென்ட்ல இருக்க ஒரு பையன் தான் போதைப் பொருள் கொண்டு வந்ததாக தகவல் கிடைத்திருக்கிறது" என்ற அவன் சிறிது நேரம் அந்த மாணவர்கள் யார் எப்படி இருப்பர் என அனைத்தையும் கூற,


"வாங்க சார்... உங்களை நான் கூட்டிக்கொண்டு போகிறேன்" என்று எழுந்து நின்றார்.


"ம்ம்ம்" என்ற தலையசைப்புடன் எழுந்தவன், முன்னே சென்ற ஆசிரியரின் பின் சென்றான்.


இவர்கள் இருவரும் நேராக சென்ற இடம் நம் இனியா இருக்கும் வகுப்பறை தான். கடைசி இருக்கையில் அமர்ந்து தன் கையை கன்னத்தில் வைத்துக் கொண்டு பாவமாக வகுப்பை கவனித்துக் கொண்டிருக்க, வாயோ கடலை முட்டாய்யை மென்றுக் கொண்டிருந்தது.


கல்லூரி முதலாம் ஆண்டு முடிக்க போகிறோம் அடுத்து விடுமுறை தான். பிறகு அடுத்த வருடம் தான் என்று அவள் நினைத்திருக்க, அவர்களோ இன்னும் ஒரு மாதம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவள் தலையில் இடியை இறக்கிக் கொண்டிருந்தனர்.


அவள் தலையெளுத்தே என்று தூங்கி வலியும் முகத்துடன் அமர்ந்திருந்தாள்.அந்நேரம் துறைத் தலைவருடன் வந்தவனை கண்டு அதிர்ச்சியில் எழுந்து நின்றே விட்டாள் இனியா.


அதை மற்றவர்கள் கவனிக்க வில்லை என்றாலும் கவனிக்க வேண்டியவன் கவனித்து விட்டு யோசனையுடன் புருவத்தை சுருக்கினான். இதில் அவள் வாயில் இருந்ததை கண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் விக்ரம ஆதித்யன்.


- காதலிக்க வருவான் 💐💐💐