• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

குலத்தொழில் 6

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
குலத்தொழில் 6

தூங்கி எழுந்த முத்து உணவு உண்டு வெளியே கிளம்பி விட்டான்…ஊருக்கு சென்று கிளம்பி விட்டதாக நினைத்தார்கள் ராணியும் லட்சுமியும் …

வீட்டிற்கு தேவையான அனைத்தையும் வாங்கி வந்து வைத்து விட்டு லட்சுமியிடம் "நானும் உங்க பையன் தான் அப்டினு நினைக்கறேன்… நீங்களும் நினச்சா இத எடுத்துக்கோங்க… அப்புறம் ராணி கிட்ட கொஞ்சம் பேசணும் அத்தை …"

"சரிங்க தம்பி ( இயல்பாக மாப்பிளை தம்பியாக மாறி இருந்தது ) தறில தான் இருக்குறா போய் பாருங்க… " புதிய தம்பி கிடைத்த சந்தோஷம் லட்சுமிக்கு

அங்கே கைகளும் கண்களும் கால்களும் தன்னைப்போல் வேலை செய்து கொண்டு இருந்தாலும் மனமும் முகமும் மிக தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தது…

"அப்படி என்ன யோசனை ராணி… நா வேணா உனக்காக யோசிக்கற வேலைய செய்யவா? ஏன்னா எனக்கு கைத்தறி நெய்ய தெரியாதே… " இயல்பாய் பேசினான் முத்து

"அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க.. வாங்க உட்காருங்க.. நீங்க போயிட்டீங்கனு நினச்சேன்.." சொல்லாமல் கிளம்பி விட்டாரே என குமைந்து கொண்டு இருந்த மனம் ஆறுதல் அடைந்தது டில்லிக்கு

"கொஞ்சம் வெளிய வேலை இருந்துச்சு அதான் போனேன்… ராணி உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே…"உன்கிட்ட சொல்லாம போய்டுவேனா எனும் விளக்கம் கூறும் தோணி முத்துவிடம்

"இருங்க வர்றேன்…" தறியை வெள்ளை துணியால் போர்த்தி விட்டு மேடை மேல் ஏறி கீழே குதித்தாள்..

"ஹே ஹே பாத்து… " பதட்டத்துடன் முத்து

"ஒன்னும் ஆகாது இப்படித்தான் இறங்கி ஆகணும்… வாங்க பின்னாடி உட்காரலாம்… " கொஞ்சம் கூச்சம் இருந்த போதும் இயல்பாய் காட்டிக்கொண்டாள் டில்லி இல்லை இல்லை முத்துவின் ராணி…

சிறிது நேர அமைதிக்கு பின்..

"ராணி உன் மனசுல ஓட்றத கொஞ்சம் பிரேக் போட்டு நிறுத்திட்டு என்கிட்ட கொஞ்சம் மனசு திறந்து உன் குழப்பத்தை சொல்லு… என்னால என்ன செய்ய முடியும்னு பாக்குறேன்.. " அவளின் எண்ண குதிரையை கடிவாளம் கொண்டு நிறுத்தும் முத்து

"அப்பாவோட இடத்துல இருந்து தறி வேலை சொசைட்டி வேலை கல்யாண வேலைன்னு எல்லாத்தையும் செய்யணும்.. எப்டி இதெல்லாம் சமாளிக்க போறேன்னு தெரியல…

ஓரளவுக்கு சேவிங்ஸ் இருக்கு… இருந்தாலும் இப்போ இந்த கல்யாணம் வேணுமான்னு தோணுது… " தங்கைகள், உலகம் தெரியா அம்மா, படுத்தபடி இருக்கும் தகப்பன் மட்டுமே அவளின் எண்ணங்களை ஆட்சி செய்தது.. முத்துவை முத்துவிடம் இருநாள் பேசிய பேச்சு எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டது..

"இப்போ இல்லாம வேற எப்போ செய்யலாம் இல்ல எப்பவுமே வேணாமா? " பின்னுக்கு தள்ளப்பட்ட தன் நினைவுகளை அவளுக்கு நினைவுபடுத்தும் நிலையை வெறுத்தான் முத்து

குரலில் இருந்த பேதத்தை புரிந்து அதிர்ச்சி பயம் கலந்து முத்துவை பார்த்தாள்..

"ஹ்ம்ம் இப்டி முகத்தை பாத்து பேசு அப்போதான் நாம பேசுறது கேட்கறவங்கள எப்டி தாக்கும்னு புரியும்… " மனம் ஆறவில்லை முத்துவிற்கு

கண்களில் நீர் நிறைந்து கன்னம் தொட்டு இன்னும் இன்னும் கீழே இறங்கி கொண்டு இருந்தது டில்லிக்கு…

"இப்போ எதுக்கு இந்த அழுகை… எனக்கு அழுறவங்களை பிடிக்காது… " சமாதானம் செய்தால் இன்னும் ஏதாவது ஏடாகூடமாக பேசும் வாய்ப்பு தெரிந்தது அவளின் முகத்தில் அதனால் கொஞ்சம் கோவமாகவே பேசினான்

கண்களோடு முகத்தையும் அழுத்தி தாவணி முந்தியால் தொடைத்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்…

"ஹ்ம்ம் பரவாயில்ல கொஞ்சம் சொல் பேச்சு கேக்குற பொண்ணா தான் எங்க அம்மா பாத்து இருக்காங்க…"நமுட்டு சிரிப்புடன் முத்து.. அவளின் இந்த செய்கை அவனுக்கு பிடித்து இருந்தது

"ஹ்ம்ம் நா எப்போ சொல் பேச்சு கேட்கல இப்போ கேக்குறேனாம்.. " சகஜமாய் ஆகிவிட்டாள் என்பதை உரைக்கும் பொய் கோவம் டில்லியிடம்

"ஹாஹாஹா எப்பா என்னா கோவம் வருது என் ராணிக்கு… " பழைய முத்து வந்துவிட்டான்..

….. டில்லி

"அடடா இப்போ எதுக்கு இந்த வெக்கம்…. ஓ என் ராணி சொன்னதுக்கா? ஹாஹாஹா

சரி சரி நார்மல் ஆகிடியா? " அவளின் இந்த வெட்க புன்னகை அவனுக்கான அன்பை மட்டுமே காட்டியது

"ஹ்ம்ம்" மிகவும் மென்மையாக வெளி வந்தது சத்தம் டில்லியிடம்

"இது கொஞ்சம் மோசமான நிலைமை தான் ஆனா சமாளிக்க முடியாத நிலைமை கிடையாது..
கண்டிப்பா என்னோட ராணி இதை சமாளிப்பா…

நீ தறி பாத்துக்கோ மத்ததெல்லாம் அம்மா பாத்துப்பாங்க… சொசைட்டி வேலை என்னைக்கு இருக்குதோ அன்னைக்கு நா ஒரு ரெண்டு முறை உன்கூட வந்து இருக்கிறேன்… அப்புறம் நீயே பாத்துக்கோ… அப்புறம் உங்க அப்பா கிட்ட காசு விஷயம்லாம் நீ பேசிக்கோ…

கல்யாணம் நாங்க தான் செய்ய போறோம் அதனால உங்களுக்கு எந்த வேலையும் இல்ல..

நாங்க அடிக்கற பத்திரிகையை உங்களுக்கும் தர்றோம் முடிஞ்ச வரைக்கும் உங்க பங்காளி ஆளுங்கள வச்சிக்கிட்டு குடுத்துடுங்க…

அப்புறம் என்ன சீர் சாமான் நகை துணி தான…

அதுக்கு ஒரு நாள் பாத்து எங்க வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு வர்றேன்… கூட வச்சிக்கிட்டு தேவையானதை மட்டும் வாங்கிக்கோ…

ஒண்ணே ஒன்னு மட்டும் தெளிவா காதுல வாங்கிக்கோ..

நமக்கு கல்யாணம்ன்னு ஒன்னுனா அதுல நீயும் நானும் தான் பொண்ணு மாப்ள புரிஞ்சிதா? " அவளின் எண்ண போக்கை கணித்து அனைத்தையும் சரி செய்ய ஆலோசனை கூறி, அவள் செய்த தவறையும் சுட்டி காட்டி விட்டான்

ஹ்ம்ம் புரிஞ்சிது எனும் வகையில் தலையை பலமாக ஆட்டினாள்..

ஆட்டும் தலையை பிடித்து இன்னும் கொஞ்சம் ஆட்டி வைக்க ஆவல் கொண்டது முத்து மனம்..

"பங்குனி கடைசியா நாள் பார்த்து உன் அம்மாக்கு கால் பண்ண சொல்றேன்.. உனக்கு அது ஒத்து வருமா பாத்து சொல்லிடு…

வேற ஏதாவது கேட்கணுமா? " அவனுக்கும் இங்கே இன்னும் இருக்க ஆசை தான்… ஆனால் போய்த்தான் ஆக வேண்டும்.. பார்ப்பவர்களுக்கு இலவசமாக பேச அவல் குடுக்க அவனுக்கு விருப்பம் இல்லை…

"இல்லிங்க… இப்போ ரொம்பவே தெளிவா இருக்கேன்.. தேங்க்ஸ்.. " நேற்றைய டென்ஷன் இன்றைய சோர்வு என அனைத்தும் தெளிவாகிய முகத்தெளிவு டில்லியிடம்

"என்னது தேங்க்ஸ் ஹா? நீ யாருனு தெரியுமா? " இவ என்ன இன்னும் இப்டியே பேச்சுல கூட தள்ளி நிப்பாட்டுரா

டில்லி தெரியலியே எனும் விதத்தில் முழிக்க..

சிரித்துக்கொண்டே" நீ எனக்கு பாதி பொண்டாட்டி… " தாலி மட்டும் தான் கட்ட வில்லை மத்தபடி அணைத்து உரிமை சாசனமும் எழுதி ஆயிற்று என ஒரு வரியில் விளக்கி விட்டான்

ஏதாவது சொல்வாள் என அவளை பார்த்திருக்க…

அவளுக்கு பேச்சும் வர வில்லை.. என்ன? எப்படி? உணர்வது என்பது கூட புரியாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்…

"சரி நா போய்ட்டு கால் பண்றேன்… பை… " இதுக்கும் மேல இவ கூட பேசிட்டு இருந்தா நைட் ஷிப்ட் பாக்க முடியாது எனும் எண்ணத்தில் கிளம்பிவிட்டான்

"பத்திரமா போய்ட்டு வாங்க… " தெளிவுடன் டில்லி

டில்லிக்கு திடீர் என உடலில் புது ரத்தம் பாய்ந்ததை போல இரண்டு மடங்கு உத்வேகத்துடன் அனைத்தையும் செய்ய தொடங்கினாள்…

காலையில் எழுந்தவுடன் தாயுடன் சேர்ந்து வீட்டு வேலைகள் செய்து… தந்தையுடன் சிறிது நேரம் அளவளாவிட்டு.. தறிக்கு வந்தால் இயற்கை உபாதைக்கு மட்டுமே எழுவாள்… மாதவிடாய் நாட்களில் தறியை தொடக்கூடாது என்பதால் அந்த 3 நாட்கள் மட்டுமே அவளின் விடுமுறை நாட்கள்… முத்துவிடம் தினமும் ஒரு முறை பேசிவிடுவாள்…

லட்சுமி கணவரை பார்த்துக்கொண்டு வீட்டை பார்க்கவே அவருக்கு நேரம் சரியாய் இருந்தது… இடையில் ஒருநாள் டில்லியின் தொந்தரவு தாங்காது அவளுடன் சொசைட்டிக்கும் சென்று வந்தார்… அங்கு நடக்கும் அனைத்து நடவடிக்கையும் அவரும் அறியும் படி செய்தாள் டில்லி… இதில் மகளை பற்றி லட்சுமிக்கு அவ்வளவு பெருமை…

மற்ற இரு பிள்ளைகளும் படிப்பு, தந்தையுடன் வேடிக்கை பேச்சு என அவர்களின் பொழுதும் கடந்தது

இதற்கு இடையில் விசாலம் அம்மாவும் மயூரநாதரும் வந்து கைலாசத்தை பார்த்து, லட்சுமிக்கு தைரியமும் கல்யாண வேலைகள் பற்றிய கவலையையும் களைந்து விட்டு சென்றனர்..

முத்து முடிந்த அளவுக்கு டில்லிக்கும் அவளின் குடும்பத்திற்கும் உதவியாய் இருந்தான்.. அவளுக்கு சொசைட்டி போக இரு முறை கூடவே சென்று வந்தான்…

பனப்பாக்கத்தில் குடும்ப நிலவரம் எப்பொழுதும் போல் சென்றாலும்… மருமகள்களின் முணுமுணுப்பு விசாலத்தின் காதுகளுக்கு எட்டாத அளவிலேயே நின்றது… காரணம் ஏற்கனவே விசாலத்தின் அறிவுரை மற்றும் தங்களுக்கு தேவையான எதுவும் தடையின்றி கிடைப்பதால் தான்….

விசாலம் கல்யாண வேலைகளை மிகவும் சிறப்பாகவே செய்து வந்தார்…

இன்று முகுர்த்த புடவை எடுத்து விட்டு வீட்டில் இருக்கும் அனைவர்க்கும் ஜவுளி எடுப்பதற்காக விசாலம் தன் அண்ணனின் கடைக்கு செல்ல அனைவரையும் தயார் செய்தார்..

இவர்களுக்கு மட்டும் அல்ல டில்லியின் முழு குடும்பமும் வர இருக்கிறது…

முத்துவின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை… காரணம் கேட்டால் சிரித்தே மழுப்பி விடுவான்… அதனால நானே சொல்றேன்…

காலைலயே டில்லியிடம் இருந்து போன் வந்தது முத்துவிற்கு…

சமீபத்தில் அவளின் தந்தைக்கு உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம்… அதன் காரணமாக இவளுடன் சொசைட்டி செல்வது… தெருவில் பாவு தட்டுவது என சில வேளைகளில் நுழைந்து விட்டார் கைலாசம்…

இதனால் டில்லியிடம் பழைய உற்சாகத்தோடு புது தெம்பும் ஒட்டிக்கொண்டது…

அதன் பிரதிபலிப்பே இன்றைய நாளின் தொடக்கத்திலேயே அழைப்பு விடுத்து விட்டாள்…

"ஹல்லோ" முத்து

"ஹாய் குட் மார்னிங் " புது சந்தோஷம் டில்லியிடம்

"அட என்ன புதுசா குட் மார்னிங்லாம்… ஹாய் கூட புதுசா இருக்கே… " அவளின் சந்தோஷம் இவனிடத்தில்

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நா எப்பவும் போல தான் பேசுறேன்… கிண்டல் பண்ணாம பேசுங்க.. " உரிமை பேச்சு டில்லியிடம்

"ராணிக்கு இன்னிக்கு ஏதோ ஸ்பெஷல் இருக்கும் போலியே அதான் என்னையே மெரட்டுற…" கலாட்டா செய்ய தொடங்கிய முத்து

"நா எப்போ மிரட்டுனேன் ஹ்ம்ம் " சிறு கோபத்துடன் டில்லி

"ஐயையோ பயமா இருக்கே.. நா ரொம்ப நல்ல்ல பையன் மா.. கொஞ்சம் பதமா பாத்து மிரட்டு" இன்னிக்கு இவனுக்கு இருக்கு

"போங்க நா போன் வைக்குறேன்… ரொம்பவே கலாட்டா பண்றீங்க…" செல்ல கோவம் டில்லிக்கு

"ஹஹஹஹஹஹா சரி சரி… காலை திருப்பள்ளி எழுச்சிக்கு என்ன காரணமோ?? " எதுவும் விஷயம் இருக்கும் அதுவும் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என்பது முத்துவின் கணிப்பு

"அது இன்னிக்கு என்ன கலர் டிரஸ் போடுவீங்கன்னு கேட்க தான்… " டில்லி

"அட்ரா சக்க "முத்து மைண்ட் வாய்ஸ்

"ஹே நீயும் அதே கலர் டிரஸ் போட போறியா? அதெல்லாம் வேண்டம் அப்புறம் நம்மள கிண்டல் பண்ணுவாங்க எல்லாரும்… " அவனுக்கும் ஆசை தான்

"அப்போ வேண்டாமா? " ஆசை வடிந்த குரல் டில்லியிடம்

"சரி புல் மேட்ச் ஹா போட்டாத்தான் கிண்டல் அடிப்பாங்க… நாம கொஞ்சமே கொஞ்சம் ஒரே கலர் பேமிலில போடலாம்… " அவளின் இந்த குரலை தாங்காமல் கொஞ்சம் விட்டு கொடுக்கும் மனோபாவம்.

"அது எப்படி? " டில்லி

"நா ப்ளூ கலர் சட்டை போட்டுட்டு இருக்கேன். உன்கிட்ட நீலம் கலர் இல்லனா வானம் கலர் இருக்கா?" எப்படி என்பதை சொல்லிவிட்டான்

"ஹ்ம்ம்ம் இருக்கு ஆனா தாவணி தான் இருக்கு.. புடவை இல்லியே…" அவள் கவலை அவளுக்கு

"அப்போ தாவணி போடு.. " அவனுக்கும் அதானே பிடிக்கும்

"இல்ல இல்ல அம்மா இன்னிக்கி புடவை தான் கட்டணும் சொல்லிட்டாங்க… " அச்சோ அவருக்கு பிடித்ததை செய்ய முடியாதோ

"அச்சச்சோ உன்ன தாவணில பாக்கலாம்ன்னு இருந்தேனே… " வம்பிழுக்கும் முத்து

"ஏன் இப்போவரைக்கும் நீங்க என்னை தாவணில தான் பாத்து இருக்கீங்க… புதுசா பாக்க போற மாதிரி சொல்றிங்க? " நிஜமாகவே புரியவில்லை அவளுக்கு

"இதுக்கு அப்புறம் நீ சேலை மட்டும் தான காட்டுவ அதான்…"
அப்பாடா சொல்லிட்டேன்

"ஓ...இப்போ என்ன பண்றது…"
நிஜ கவலை டில்லிக்கு

"பரவாயில்ல விடு… பாத்துக்கலாம்… " சமாதானம் சொல்கிறானாம் அவனுக்கும் சேர்த்து

"எப்போ வருவீங்க " பேச்சை மாற்றும் டில்லி

"இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம்… 8.10 க்கு பஸ்… 9.15 க்கு காஞ்சிபுரம் பஸ்டாண்ட் வந்துடுவோம்…. நா கிட்ட வரும் போது போன் பண்றேன் அப்போ கிளம்புங்க போதும்… " புரிந்து கொண்டு பதில் கூறும் முத்து

"சரிங்க.. தேவயானதுலாம் எடுத்து வைக்கணும்… வைக்கவா? " இவ்ளோ நேரம் போன் பேசினால் அம்மா திட்டுவாங்களே எனும் பயம் டில்லிக்கு அதை அவனிடம் கூறியது இல்லை…

"சரி அதுக்கு முன்ன ஒரு கவிதை சொல்லு…" இதுமாதிரி நிறைய முறை நிறைய மொக்க கவிதைலாம் சொல்ல சொல்லி வயிறு வலிக்க சிரித்த அனுபவத்தில் இன்றும் கவிதை கேட்குறான் டில்லியின் பாதி கணவன்…

"ஸ்டாக் ஒன்னு இருக்கு இருங்க மெசேஜ்ல அனுப்பறேன்" நிஜ ஆர்வத்துடன் டில்லி… இவளிடம் நல்லா இருக்குனு மட்டும் தான் சொல்லுவான்… சிரிச்சது கூட சொல்லிக்க மாட்டான்…

"""உன் பெயரோ முத்து
கடலில் இருப்பதோ முத்து
என் கையெழுத்தோ முத்து முத்து
நீ தான் என் சொத்து
கவிதை கேட்டால் மொத்து
நீதான் அன்பின் புத்து
பாம்பு வராமல் பாத்து….

என் இதய துடிப்போ லப்பு டப்பு
என் கட்டுத்தறியின் ஓசையோ டொக்கு டொக்கு
பஸ் இன் ஹாரனோ பொயின் பொயின்
நீ சிரிக்கும் ஓசையோ ஹாஹாஹா…. """

இன்னும் இருக்கு கவிதை … மீதிய நாளைக்கு அனுபுறேங்க…

முத்துவால் சிரிப்பை அடக்க முடிய வில்லை… அந்த நேரம் பார்த்து வந்த பாஸு…

"அண்ணே அண்ணே இப்டியே சிரிச்சிட்டே இரு… கீழ்ப்பாக்கத்துல தான் உன்ன சேக்கணும் போல.. " பொறாமையில் பாஸு

"டேய் முடியல டா… ஹஹஹஹ டேய் உனக்கு கவிதை தெரியுமா டா? " அவனின் உற்சாகம் குறைய வில்லை

"என்னது கவிதையா? எனக்கு கவிதா தான் தெரியும்… பன்னிரண்டாவது படிக்குது… டெய்லி என்னை பார்த்து சிறிக்குமே… அதுவா அண்ணே " அவனின் எண்ணம் அவன் அளவில்

"போடாங் உன் கிட்ட போய் கேட்டேன் பாரு… என் ராணி எனக்காக டெய்லி ஒரு கவிதை சொல்றா டா… " சிறு வெட்க புன்னகையுடன் முத்து

"அட பார்ரா அண்ணனுக்கு வெக்கத்தை… சூப்பர்ணே அண்ணி…

எனக்கு ஒன்னு குடுண்ணே கவிதாக்கு சொல்லி நல்ல பேர் வாங்கிடறேன்… " அடப்பாவி சொந்தமா யோசிங்கடா

"உனக்கு கொடுக்கறதுனா ஒத தான் டா குடுக்கணும்… ஓடிடு…" இவன் கிட்ட போய் சொன்னோமே எனும் முத்து

"ஹாஹாஹா என்ஜாய் பண்ணுங்க அண்ணே… " பாஸு

"இன்னும் போலியா நீ… அஹ்ஹ்ஹ.. " அவனால் கவிதை யில் இருந்து வெளியே வர முடியவில்லை..

ஐயையோ கடவுளே எப்டி இப்டிலாம் இவளுக்கு தோணுது…. இதோட அவளோட கற்பனை குதிரையை கட்டி போட்டுடுங்க… புண்ணியமா போகும். . முத்து மைண்ட்

எனக்கு எதுக்கு புண்ணியம்… உனக்கு தான் நிறைய தேவைப்படும்… கடவுள் மைண்ட் வாய்ஸ்

அனைவரும் விசாலம் அம்மாவின் சகோதரர் கடைக்கு வந்து சேர்ந்தனர்… akbk இது தான் அவரின் கடைபெயர்.. 3 தளங்கள் கொண்ட கட்டிடம்… மிகவும் பிரசித்தி பெற்ற ஜவுளிக்கடை சத்திரம் வீதியில் வீற்று இருந்தது…

இங்கு தான் பட்டு பிரிவில் முத்துவின் இரண்டாம் அண்ணன் மூர்த்தி பணி புரிகிறான்…

முதல் தளம் மகளிற்கான ஆடைகள், இரண்டாம் தளம் ஆண்களுக்கானது மற்றும் மூன்றாவது தளம் பட்டு புடவைக்கு என பிரத்யேகமாக உருவாக்கபட்டவை…

எந்த கலர் என்ன விலையில் என்ன வகையானது வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும்….

நம் தேவையை சரியாக சொன்னால் போதும்.. முகத்தில் புன்முறுவலுடன் வயதில் மூத்த விற்பனையாளர்கள் எத்தனை புடவை வேண்டுமானாலும் எடுத்து பிரித்து காட்டுவார்கள்…

இங்கு பெரும்பாலும் வயதில் மூத்த பணியாளர்கள் தான் இருப்பர்… ஏன் என்றால் அவர்களுக்கு தான் பட்டின் தன்மையும் அதை விளக்கும் பொறுமையும் இருக்கும்…

முத்துவின் வீட்டு வழக்க படி பட்டில் தான் கூறப்புடவை…

இந்த அம்முக்குட்டி இந்திரா ரெண்டு மருமக மக்கா அவங்க குட்டிஸ்ன்னு பெரிய பட்டாளமே இருக்கே… அங்க என்ன கும்பளிங்கா இருக்கு…


பின் குறிப்பு : இவங்க அட்டகாசம் அடுத்த பகுதியில் தான்…

இந்த வார கோயில் :

கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி ரொம்ப பேமஸ் ஹா எல்லாரையும் தன் பக்கம் இழுத்த அத்தி வரதர் ஆலயம் தான் பாக்க போறோம்…

திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம்.

மூலவர்:
தேவராஜப் பெருமாள்

உற்சவர்:
பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)

தாயார்:
பெருந்தேவி தாயார்

உற்சவர் தாயார்:
பெருந்தேவி தாயார்

கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.

இந்த கோயிலில் உள் சுற்று வரும் இடத்தில் மேற்கூரையில் வெள்ளியில் பல்லி சிற்பம் ஒன்று உள்ளது… இதை தொட்டு தடவி பிராத்தனை செய்ய படிக்கட்டுகள் வைத்து வசதி செய்து இருக்கும்…

பல்லி தோஷம் இருப்பவர்கள் இதை தொட்டால் தோஷம் நீங்கி பயன் பெறுவர் என்பது ஐதீகம்..

பல்லி விழும் பலன்கள், தோஷங்கள், பரிகாரங்கள் என இன்றும் வழக்கத்தில் உள்ளது…


தொழில் தொடரும்….





 
Top