• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

குலத்தொழில் 7

மோகனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
87
38
18
Guduvanchery
குலத்தொழில் 7

டில்லி நல்ல கடல் நீல வண்ணத்தில் புடவை அணிந்து சிறு சிறு நகைகள் என அவளின் அளவிற்கு இல்லை, இல்லை முத்துவின் ரசனைக்கு ஏற்ப வந்து இருந்தாள்…

முத்து தான் பாவம் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை..

பார்வையிலேயே அவளை தொடர்ந்து கொண்டு இருந்தான்..

அவனின் துடிப்பையோ அவளின் ஆர்வத்தையோ கண்டுகொள்ளும் நிலையில் இல்லை மற்றவர்கள் (இனி அனைவரும் மற்றவர்கள் தான் )…

புடவை கட்டி அழகு பொம்மைகள் சில நிற்க வைக்கப்பட்டு இருந்தன..

அவற்றை கீழே தள்ளி அதன் மீது ஏறி அமர்ந்து பாக்ஸிங் செய்தனர் நம் வருங்கால பாக்ஸர்கள் ராகவ் மற்றும் கவின்…

யாராலயும் அவர்களின் குத்துசண்டையை நிறுத்த முடியவில்லை… கடைசியில் மூர்த்தி தான் ஆளுக்கு ஒரு உதை வைத்து பொம்மையிடம் இருந்து பிரித்து எடுத்தான்…

உள்ளே நுழைந்ததில் இருந்து சிறுவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்காமல் விசாலம் பொங்கி விட்டார்..

"எல்லாரும் அவங்க அவங்க பொண்டாட்டி புள்ளையோட போய் தேவையானதை வாங்குங்க… நல்ல நேரம் வந்ததும் கூப்பிடுறேன் போய் கூறப்புடவை எடுக்கலாம்…

லட்சுமி நீங்களும் போய் துணிமணி எடுங்க… சாப்பாடு நேரத்துக்குள்ள முடிச்சிடுங்க"ன்னு எல்லாருரையும் முடுக்கி விட்டார்..

நல்ல நேரம் தொடங்கியதும் முக்கியமாக அணைத்து மருமகள்களையும் அழைத்து... கூறப்புடவை நல்ல அரக்கு நிறத்தில் கட்டங்கள் போட்டு மிக சிறிய சரிகையுடன் மிகவும் அழகாக இருந்தது… பார்த்ததும் அனைவருக்கும் பிடித்து போய் விட்டது…

அடுத்து சுகன்யாவையும் கோதையும் பார்த்து "நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பட்டு புடவை எடுத்துக்கோங்க நம்ம வீட்ல நடக்குற கடைசி கல்யாணம்" என கூறியதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்

அந்த பார்வையின் பொருள் "வீட்ல கடைசி கல்யாணம் நாம தான் எல்லாம் எடுத்து செய்ய போறோம் நமக்கு ஒரு பட்டு எடுத்து கொடுத்தால் என்ன" என இருவரும் சிறிது நேரத்திற்கு முன்னர் தான் பேசி இருந்தனர்…

அதுவும் இவர்கள் இன்னும் புடவை எடுக்கும் முன்னரே இவர்களை கூறப்புடவை எடுக்க கூப்பிட்டதால் ஏக கடுப்பில் வந்தனர்…

இப்படி பேசி விட்டோமே எனும் குற்ற உணர்வில் மிகவும் விலை குறைந்த புடவைகளையே பார்த்துக்கொண்டு இருந்தனர்

இதை பார்த்து பார்த்து பொறுமை இழந்த விசாலம் இருவரிடமும் இல்லாத கலர் கேட்டு அவரே 8000 மதிப்புள்ள ஒரே மாதிரி பட்டை எடுத்து காட்டி பிடித்து இருக்கிறதா என கேட்டு அதையே வாங்க வைத்தார்…

இருவருக்கும் பேச்சே வர வில்லை அவ்வளவு சந்தோஷம் முகத்தில்… அதன் பிறகு தான் டில்லியிடம் கூட சாதாரணமாக பேசினர்..

மதியம் சாப்பாடு நேரத்தை தாண்டி விட்டதால் பிள்ளைகள் பசியில் இதுவரை போட்ட ஆட்டத்தை நிறுத்தி அமைதி ஆகிவிட்டனர்…

பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டல் சென்று மதிய உணவு முடித்து முத்து, மயூரநாதர், விசாலம், மற்றும் டில்லி குடும்பம் மட்டும் நகை கடை செல்வது எனவும் மற்றவர்கள் வீடு திரும்பவது என திட்டம் தீட்டினார் விசாலம்…

அதன்படி தாலி வாங்க ராஜம் செட்டி அண்ட் கோவிற்கு சென்றனர்…

பனப்பாக்கத்தில் இருக்கும் 75./. மக்கள் இங்கு தான் நகை வாங்குவார்கள் … கைராசியான கடை என பெயர் பெற்றவர்கள்…

விசாலம் தன் குடும்ப தாலியை அவர்களிடம் காட்டி அதன் படி எடுத்து தர சொன்னார்

அவர்கள் காட்டிய தாலியில் இவர்களோடதும் பொருந்தியதால் உடனே பில் போட செய்து இவர்கள் மட்டும் கிளம்பினர்…

அடுத்து டில்லிக்கு நகை எடுக்க வேண்டும் என கூறியதால் அவர்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் நடந்து கொண்டார் விசாலம்..

முத்து டில்லியிடம் உரிமையாக சென்று "போய் வருகிறேன்… முடிந்தால் போன் பேசலாம் "என கூறிவிட்டு ஒரு புன்னகையுடன் கிளம்பினான்

டில்லியும் தயக்கம் இல்லாமல் பதில் கூறி அனுப்பி வைத்தாள்..

ஒரு நெக்லஸ், ஒரு டாலர் செயின், ஒரு மோதிரம், இரு வளையல்கள், டில்லி ஆசையாக கேட்ட குடை ஜிமிக்கி என தேவையான அனைத்தும் வாங்கினார் கைலாசம்… பெண் பார்த்து பார்த்து நகை எடுப்பது அவருக்கு அவ்வளவு சந்தோஷம் அதனாலேயே கொஞ்சம் கிராம் அதிகம் என்றாலும் அவள் கேட்ட ஜிமிக்கியை வாங்கி இருந்தார்..

இரவு உணவு வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்..

அதன் பிறகு நேரம் போதவில்லை லட்சுமிக்கு… நாளை டில்லிக்கு எண்ணெய் நலங்கு வைத்து பின் புட்டு சுத்துவதாக இருந்தது..

நலங்கு மாவு அரைக்க தேவையானதை அம்முக்குட்டியிடம் கூறி விட்டு புட்டுக்கு தேவையான பச்சரிசி ஊறவைத்து இந்திராவிடம் அதை வடிகட்டி மிக்ஸியில் பவுடர் ஆக அரைக்க சொல்லி வீடு சுத்தம் செய்து டில்லிக்கு மருதாணி அரைத்து என வேலை இருந்து கொண்டே இருந்தது…

டில்லியை ஒரு வேலை கூட செய்ய விடவில்லை எவரும்…

அவள் எழுந்து வந்தாலே ஏதாவது சொல்லி உட்கார வைத்து விட்டனர்..

டில்லிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது… நாம் இனி இவ்வீட்டில் விருந்தாளியா? அவளால் இந்த உணர்வை தாங்க முடியவில்லை…

கொஞ்சம் சத்தமாக அழுவிட்டாள் அந்த நேரம் பார்த்து... வெளியே சென்று நாளைக்கு டிபன்க்கு தேவையானதை வாங்கி கொண்டு உள் நுழைந்த கைலாசம் கண்டது இதை தான்…

அவருக்கு சட்டென எதுவும் புரியவில்லை… பிள்ளை அழுவது மட்டுமே அவரை எதுவும் யோசிக்க விடவில்லை…

சத்தம் கேட்டு வந்த லட்சுமிக்கு மகள் அழும் காரணம் புரிந்து அவளிடம் சென்று "அட என்ன டில்லி இப்டி அழலாமா அங்க பாரு அப்பா பயந்து போய் இருக்கார்.. கண்ணை தொடை… இந்து (இந்திரா )தண்ணி கொண்டா…" டில்லியிடம் தொடங்கி இந்துவிடம் முடித்தார் கூடவே கைலாசத்தையும் முறைத்து கண்ணை தொடக்க சொன்னார்…

"மொதல்ல இந்த தண்ணி குடிச்சிட்டு முகம் கழுவிட்டு வா அம்மா உன்கிட்ட பேசணும் போ… போடா…" மகளின் கலங்கிய முகம் அவரை பெண்களின் நிலை பற்றி கூறியே ஆகவேண்டும் என முடிவு செய்தார்

"சரிம்மா" அழுகையுடன் டில்லி..

முகம் கழிவி வந்தவளிடம்
"இப்போ சொல்லு எதுக்கு இப்படி ஒரு அழுகை பாரு கண்ணெல்லாம் வீங்கி போச்சி.. "

"அம்மா அம்மா… " மீண்டும் அழுகைக்கு தயார் ஆகும் டில்லி

"ஹேய் ஆழமா பேசணும் இல்லனா அம்மாக்கு கோவம் வரும்.. " செல்லமாக கடிந்து கொண்டார் லட்சுமி

"ஹ்ம்ம் சரி சரி… அது நீ ஏன் என்னை எந்த வேலையும் செய்ய விடல.. என்னை எதுக்கு விருந்தாளி மாதிரி உட்கார வச்சிட்டு எல்லாரும் வேலை செயிரிங்க… " ஒருவழியாக அழுகையுடன் கூறிவிட்டாள்

"ஐய அக்கா இதுக்கா அழுத வேலை விடலனா சந்தோஷம் தான " நம்ம அம்முக்குட்டிக்கு உண்மையா அக்கா இதுக்கா அழுதா எனும் எண்ணம்

"ஏய் வாயாடி போய் நா சொன்ன வேலைய செய் " இவள வச்சுக்கிட்டா பேசுறது லட்சுமி அம்மா மைண்ட் வாய்ஸ்

"செய்றேன்னு சொல்றவள விட்டுட்டு என்னை எதுக்கு செய்ய சொல்ற மா… " அம்முக்குட்டி உனக்கு நேரம் சரி இல்ல..

"இப்போ நீ போல அவ்ளோதான். " இதுக்கு மேல இங்க இருந்த அடிதான் எனும் குரல் இது…
இதுக்கும் மேல அங்க நிக்க அம்முக்குட்டி என்ன அவ்ளோ முட்டாளா?

"கல்யாணத்துக்கு இன்னும் 5 நாள் தான் இருக்கு… இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தான் ஒடம்பு மனசு எல்லாமே நல்லா இருக்கும்… போட்டோல முகம் பளிச்சுனு இருக்கும்…

இத்தனை நாள் எவ்ளோ வேலை இழுத்து போட்டு செஞ்ச அப்போ ஏதாவது சொன்னோமா இல்லல… இப்போ நல்லா ரெஸ்ட் எடு சாப்பாடு சாப்டுட்டு மருதாணி வச்சி விடுறேன் சரியா… " பொறுமையாக மகளுக்கு விளக்கம் கூறும் லட்சுமி

"ஹ்ம்ம் சரி " அவளுக்கும் இப்போது முத்துவிடம் போன் பேசும் நேரம் அதனால் உடனே பதில் கூறினாள்

"இன்னும் என்ன இங்க பாத்துட்டு இருக்கீங்க போங்க போய் அடுத்த வேலைய பாருங்க..

மக அழுதா என்னனு கேட்காம இவரும் கண்ண கசக்கிக்கிட்டு என்ன மனுசனோ… " இவர்களை இவ்வளவு நேரம் நின்று பார்த்து கண்கலங்கி நின்ற கைலாசத்தை விரட்டினார்

"அம்மா அப்பாவை திட்டாத நா போய் படுக்கறேன் கொஞ்ச நேரம்.. " தந்தை திட்டு வாங்குவதை தாங்காத மகள்

மறுநாள் காலை :

மூணு முக்காலி வைத்து ஒன்றில் நல்லெண்ணெய் கிண்ணம் அதில் அருகம்புல் சிறு கட்டு இன்னொரு கிண்ணத்தில் நலங்கு மாவு… நலங்கு மாவுன்னா கடையில வாங்கி தண்ணி கலந்து வச்சது இல்ல இது…

துருத்திஇலை, அருகம்புல், கஸ்தூரி மஞ்சள் தூள், பயத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் பச்சரிசி சேர்த்து நல்லா மைய அரைச்சி வச்சியிருக்காங்க நம்ம லட்சுமி அம்மா..

இரண்டாவது முக்காலியில் குங்கும சிமிழ், ஒரு தட்டில் மல்லி ரோஜா கனகாம்பரம் சேர்த்த உதிரி பூக்கள் மஞ்சள் கலந்த அரிசி என டில்லியை ஆசீர்வாதம் செய்ய வைக்க பட்டு இருந்தது..

கடைசி முக்காலியில் நல்ல செந்நிறத்தில் ஆரத்தி கலந்த அகல கிண்ணம் இருந்தது…

டில்லி உட்கார மணை அதன் மீது கைலாசத்தின் வெள்ளை வேட்டி போடப்பட்டு இருந்தது… மணையின் கீழ் மந்தாரை இலை வைத்து பச்சரிசி பரப்பி வெற்றிலை பாக்கு வாழைப்பழம் என வீற்று இருந்தது..

டில்லி உட்காரும் இடத்திற்கு இடப்பக்கம் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து குங்குமம் வைத்து அருகம்புல் மல்லி பூ போட்டு மினி பூஜை ரூம் ரெடியாக இருந்தது…

டில்லியை அவரின் அத்தை முறை கொண்டவர் மாலை சூட்டி பிள்ளையார் பூஜை செய்ய சொல்லி மணையில் உட்கார வைத்து அவரே முதலில் தொடங்கி வைத்தார்…

அனைவரும் வைத்த பின்னர் இவளை குளிக்க வைத்து அவளின் தாய்மாமா கொடுத்த சீரில் இருந்த பட்டு புடைவையை கட்டி மறுபடியும் மணையில் அமர வைத்தனர்…

இதற்கு நடுவில் அனைவருக்கும் பொங்கல் வடை பூரி கேசரி என டிபன் பரிமாறப்பட்டது…

இப்பொழுது டில்லிக்கு புட்டு சுத்த தொடங்கினர்.. முதலில் அரிசி சலிக்கும் சல்லடையில் மந்தாரை இலையில் புட்டு வெள்ளம் வைத்து அதையும் இலை கொண்டு மூடி இருந்ததை எடுத்து சுற்றினார்…

அடுத்ததில் சாதம் கத்திரிக்காய் கொழம்பு ஊத்தி மூடி வைத்து இருந்தது அதையும் சுற்றினார்..

பின்பு சந்தனம் பூசி பொட்டு வைத்து பூ மஞ்சள் அரிசி கொண்டு ஆசீர்வாதம் செய்து ஆரத்தி சுற்றி திருஷ்டி பொட்டு வைத்தார்…

டில்லிக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் தாய் தந்தை மகிழ்ச்சியை பார்த்ததும் அவளும் அதில் மூழ்கி போனாள்…

அனைத்து போட்டோக்களிலும் அவ்வளவு பூரிப்புடன் காணப்பட்டாள் டில்லி…

பெண் அழைத்து செல்லும் தினம் வரை தினமும் காலையில் அவளுக்கு சந்தன நலங்கு பூசி கொண்டாடினர்…

டில்லி தாய் வீடு விட்டு புகுந்த வீடு செல்லும் நாளும் வந்து விட்டது…

தினமும் முத்துவுடன் போனில் பேசுவது அவளின் கல்யாண கனவுகளை அதிகம் ஆக்கி இருந்தது…

மனதில் இவர்களை பிரியும் கவலை இருந்த போதும் முத்துவுடனான அவளின் திருமணம் என்பதில் அனைத்தையும் ஒதுக்கி சந்தோஷமாகவே பெரியவர்கள் ஆசியுடன் கிளம்பினாள் டில்லி..

இனி பனப்பாக்கத்தில் :

முத்துவிற்கு 5 நலங்கு வைத்து அவனின் கன்னத்தின் வண்ணத்தை மாற்றி இருந்தனர்..

சுகுணாவும் கோதையும் விசாலத்தை உட்கார வைத்து என்ன செய்ய வேண்டும் என கேட்டு அவர்களே அனைத்தையும் செய்தனர்…

சகோதரர்கள் இருவரும் வெளி வேலைகளை பார்த்துக்கொண்டனர்..

விசாலத்திற்கும் மயூரநாதருக்கும் அவ்வளவு சந்தோஷம்…

தாத்தா பாட்டி தான் எதுவும் சரியாக இல்லை என குறை கூறிக்கொண்டே உடன் இருந்தனர்… எதையும் காதில் போட்டு உளப்பிக்கொள்ளவில்லை யாரும்…

சந்தோஷம் சந்தோஷம் மட்டுமே வீட்டில்..

அனைவரும் திருமண மண்டபத்திற்கு சென்று சேர்ந்த சிறிது நேரத்தில் டில்லியும் அவளின் சொந்த பந்தம் என அனைவரும் வந்து இறங்கினர்…

டில்லிக்கு ஆரத்தி சுற்றி பண்டபத்திற்குள் அழைத்து சென்றனர்…

உளுந்த போண்டா, கடலை மாவு போண்டா, தொட்டுக்க தேங்காய் சட்டினி, காபி என சாயங்கால சிற்றுண்டி பரிமாறப்பட்டது…

மணமகள் அறையில் நிச்சயம் சமயம் கட்டிய அதே பட்டை கொஞ்சம் நேர்த்தியாக அணிந்து தன் தோழியின் கை வண்ணத்தில் அளவான மேக்கப் போட்டு தயார் ஆகி இருந்தாள்..

மணமகன் அறையில் டார்க் ப்ளூ பேண்ட்டும் நீலமா இல்லை வெள்ளையா என உத்து பார்க்க சொல்லும் நிறத்தில் சட்டையும் அணிந்து, பாண்ட்ஸ் பவுடர் போட்டுக்கிட்டு, தலைக்கு குளித்த தலையுடன் போராடிக்கொண்டு இருந்தான்…

"டேய் கொஞ்சமா எண்ணெய் குடுடா "என தன் தோழனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான்..

"இன்னிக்கு எங்க பேச்ச தான் நீ கேட்கணும்… எவ்ளோ அழகா முடி பறக்குது எண்ணெய் தடவி அடக்க போறானாம் போடா டேய்" தயவு தாட்சண்யம் இன்றி மறுத்தான் நண்பன்

சின்ன காற்று பட்டாலும், அது இஷ்டத்துக்கு பறந்து கொண்டு இருந்தது முத்துவின் கேசம்…

இரவு நெருங்கும் நேரம் இருவரையும் அருகில் இருக்கும் செல்வ விநாயகர் ஆலயத்திற்கு அழைத்து சென்று அமர வைத்தனர்… அவர் அவர் மாமன்மார்கள் வந்து பெரியவர்கள் ஆசி பெற்று தாம்பூலம் பெற்றுக்கொண்டு சென்றனர்..

சம்பந்தி மார்கள் இருவரும் பால் குடித்து தாம்பூலம் வாங்கிக்கொண்டனர்…

மணமக்களை அனைவரும் மஞ்சள் அரிசி பூக்கள் தூவி ஆசீர்வாதம் செய்து கோவில் விட்டு வெளியே வந்தனர்…

வெளியே பெட்ரோல் குடிக்கும் 4 குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் போல் ஜானவாச கார் நின்று இருந்தது…

பின் குறிப்பு : அடுத்த எபில மணமக்கள் அழைப்பு மற்றும் திருமணம் நடைபெற இருப்பதால் அனைவரும் உடன் இருந்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும்..

தொழில் தொடரும்….