• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

குழந்தை கல்வி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
*கல்வியை வெறுக்கும் குழந்தையை எவ்வாறு கையாள்வது?*


கல்வியை வெறுக்கும் குழந்தையை அவர்களின் செயல்பாடுகள் மூலமாகவே நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுடன் உரையாடலின் மூலமாகவே நாம் அறிந்து கொண்டு, அவர்களுக்கு கல்வியை கற்க கடினமான விஷயம் என்னவென்று கேட்டு அறிந்து அதை நீக்க நாம் முழுவதுமாக செயல்பட வேண்டும்.கல்வியில் ஆர்வம் இல்லாததற்கு அவர்களின் மன நிலையும் ஒரு காரணம் ஆகும். அந்த மனநிலையை கண்காணித்து, அவர்கள் ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்ற காரணத்தை கண்டுபிடித்து, முற்றிலும் நீக்கி விட்டாலே குழந்தைகள் கல்வியை வெறுக்க மாட்டார்கள்.

கல்வியை வெறுக்கும் காரணத்தை கண்டறிதல்

குழந்தைகள் கல்வியை வெறுப்பது உண்மையல்ல, அதிலுள்ள கடினமான விஷயம், புரியாத பாடங்கள் என்னவென்று அவர்களுக்கு தெரியாது. பெற்றோரிடம் கூற பயப்படுவதால் தான், அவர்கள் கல்வியை வெறுக்கிறார்கள். இதை நாம் புரிந்து கொண்டு செயல்பட்டால் பெற்றோர்கள் அவர்களை கையாளுவது எளிதாகிவிடும்.

கல்வியைத் தவிர மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல், எடுத்துக்காட்டாக விளையாட்டு, இசை போன்றவற்றில் கல்வியை விட ஆர்வம் அதிகமாக இருத்தல்.

ஆசிரியர் கூறும் பாடங்களை ஒழுங்காக கவனம் இல்லாமல் இருத்தல்.

பெற்றோர்கள் வீட்டில் உள்ள கல்வியில் சிறந்து விளங்கும் மற்ற பிள்ளைகளுடன், கல்வியில் குறைவான ஆர்வம் உள்ள வரை ஒப்பிட்டுப் பேசுவது, அவர்கள் கல்வியில் ஆர்வம் இல்லாமல் தொடர்ந்து இருக்க வழிவகுக்கிறது.

இதை பெற்றவர்கள் நன்றாக கவனித்து இந்த தவறுகளை செய்யாமல் இருந்தாலே அவர்கள் நம் கல்வியை வெறுக்கும் காரணத்தை பெற்றோரிடம் கூறுவார்கள்.

விளையாட்டின் மூலமாக கல்வி கற்று கொடுத்தல்.

குழந்தைகளை இன்று சிறு வயது முதலே அனுப்பப்படும் அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டின் மூலமே பாடங்களை கற்பிக்கப்படுகின்றன.

காணொளிக் காட்சிகள் மூலம் கல்வியை சிறந்து கவனிக்கிறார்கள்.

பாடல்கள் பாடி நடத்தும் போது அவர்களின் ஆர்வம் இன்னும் அதிகமாகிறது.

ஒரு தாளில் படங்கள் வரைந்து கதை சொல்ல சொல்லி விளையாடுதல், அதனால் அவர்களின் சிந்தனைத் திறன் மிகுந்த அளவு பெருகுகிறது.

மனப்பாடம் செய்யும் பாடங்களை, அவர்களுக்கு பிடித்த பாடலின் மெட்டுக்கள் வைத்து மனப்பாடம் செய்ய வைத்தால், அவர்கள் இன்னும் சந்தோஷமாகவும், எளிதாகவும் மனப்பாட பகுதியை படிக்க வாய்ப்புள்ளது.

சாதாரணமாக படித்தவர்கள் சாதனையை கூறல்

சாதாரணமாக படித்தவர்கள் என்று கூறுவதைவிட புரிந்து படித்தவர்கள் என்று கூறலாம்.

இதை ஆங்கிலத்தில் புத்திசாலி வேலை (Smart work) மற்றும் கடினமான வேலை (Hard work) என்று கூறுவார்கள்.

இதில் இவர்கள் புத்திசாலியான வேலையை செய்ய தேர்ந்தெடுத்து செயல்படுவார்கள்.

இவர்கள் குறைந்த நேரத்தில் மிக வேகமாக படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் என்று கூறலாம்.

மேலும் தன்னுடைய சாதனையை அடைய கடினமாக உழைப்பவர்கள், ஆனால் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள்.

படிக்க வேண்டிய பாடங்களை ஒரு முறை படித்தாலும், அதை எந்நேரத்திலும் ஞாபகங்களை வைக்கக்கூடிய மனப்பான்மை உடையவர்கள்.

இதனால் இவர்களின் படிக்கும் நேரம் அதிகமாக செலவாவது இல்லை.

இந்த பழக்க வழக்கங்களை உடைய சாதனையாளர்களை பற்றி கூறி குழந்தைகளை படிப்பில் எளிதாக படித்து விடலாம் என்ற ஆர்வத்தை ஊட்டலாம்.

உன்னால் முடியும்

பெற்றோர்கள் குழந்தைகளிடம் உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை மனதில் திடமாக பதியவைக்க வேண்டும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது போல் பெற்றோர், ஆசிரியர், இறைநம்பிக்கையை குழந்தைகள் மனதளவில் இவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அவர்களை ஊக்கப்படுத்தி புத்துணர்ச்சியை வளர்த்துக்கொள்ளலாம்.

கல்வியின் சிறப்பு, முக்கியத்துவத்தை வலியுறுத்தல்

கல்வி ஒருவனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

இதன்மூலம் எந்நிலையில் இருந்தாலும், வாழ்வில் உயர்ந்த நிலைக்கு அவனை கொண்டு செல்கிறது.

அவனை பார்ப்பவர்கள் மூலம், மற்றவர்களையும் சாதனைகள் புரிய வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது.

குழந்தைகளை சமுதாயத்தில் தடையின்றி இயற்கையாக வளர, இந்த கல்வியானது உதவுகிறது.

குழந்தைகள் தங்களுடைய முழு திறனை வளர்க்க கல்வி முழுப் பங்கு வகிக்கிறது.


*பகிர்வு*
 
Top