கேரட் கோசம்பரி - சாலட்
பரிமாறும் அளவு : 2-3 நபர்கள்
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/4 கப்
துருவிய கேரட் - 3/4 - 1 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 1/4 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
எலுமிச்சை - 1 நடுத்தர அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தாளிப்பிற்கு
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 1-2 (விரும்பினால்)
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு துளிர்
தயாரிப்பு
பாசிப்பருப்பை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். 1 மணி நேரம் கழித்து, தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.
கேரட்டைக் கழுவி, தோலை உரித்து, துருவவும்.
தேங்காயைத் துருவி தனியாக வைக்கவும்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில், ஊறவைத்த மற்றும் வடிகட்டிய பருப்பு, துருவிய கேரட், கொத்தமல்லி இலைகள், துருவிய தேங்காய் மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். ஒரு நடுத்தர அளவிலான எலுமிச்சை சாற்றை பிழிந்து நன்கு கலக்கவும். எலுமிச்சை சாற்றை உங்களின் சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு போட்டு, அது பொரிந்ததும், சிவப்பு மிளகாய், பெருங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். ஒரு நொடி வதக்கி, அதனைக் கோசம்பரியில் சேர்க்கவும்.
நன்றாக கலந்து கேரட் கோசம்பரியை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.