• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கோவிட் - டாக்டர் மைதிலி - ராமகிருஷ்னன்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
ஒரு பக்க கதை: கோவிட்.



டாக்டர் மைதிலி.



இந்த கொரோனா வந்தாலும் வந்தது மக்கள் எல்லோரும் நிறைய கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் இன்று வரை. அதிலும் இந்த முன்களப்பணியாளர்கள் என்று அழைக்கப்படும் டாக்டர்ஸ், நர்ஸ் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோர் நிலைமை சொல்ல முடியாது அல்லது
சொல்லில் அடங்காததது.

அரசாங்கமும் எதைத் தின்றால் பித்தம் குறையும் என்று நிலையில் தன்னால் முடிந்தவரையில் மக்களுக்கு தேவையான அளவு உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். என்ன செய்வது யாரையும் குறை சொல்லி பயன் இல்லை. இந்த கதை இந்த கொரோனா சூழ்நிலையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.


இந்த கதையின் நாயகி ஒரு பெண் மகப்பேறு மருத்துவர் அவர் பெயர் மைதிலி நாராயணன். அவளுடைய கணவரும் ஒரு மருத்துவர். அவர் பம்பாயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்கிறார். திருமதி மைதிலி நாராயணன் இங்கு சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அதாவது மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் பணி செய்கிறார். அவர் இப்பொழுது அஸ்தம்பட்டியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருடைய கணவர் பம்பாயில் இருப்பதால் அவரால் வரமுடியாத சூழ்நிலை. ஏனெனில் பம்பாய, பூனே ஆகிய இடங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று அதிகம் காரணமாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டு உள்ளது அரசாங்கத்தால்.

டாக்டர் மைதிலி சேலம் அரசு மருத்துவமனையில் பணி செய்வதால் நகர்புறங்களில் நோய் தொற்று அதிகம் இருப்பதால் அவருக்கு அதிக அளவில் வேலை. இப்பொழுது தான் 15 நாட்களும் பிறகு அவர் தான் இருக்கும் வீட்டிற்கு வந்தார். அரசு கூறிய விதிமுறைகள் படி கைகளுக்கு சேனிடைசர் போட்டு கிளீன் செய்து கொண்டு அதன் பிறகே வெளி கேட்டின் பூட்டை திறந்து உள்ளே நுழைந்தார்

அவளுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அப்படியே ஸோபாவில் அமர்ந்து கொண்டு இருந்த போது அவருடைய ஃபோன் அழைத்தது. அதை எடுத்து பார்த்த போது வீட்டு ஓனர் ராம் அழைத்தது தெரியவந்தது.


உடனே ஃபோன் எடுத்து அட்டெண்ட செய்து, " ஹலோ நான் டாக்டர் மைதிலி பேசறேன் அங்கிள் " என்று சொன்னாள்.
" நான் ஹவுஸ் ஓனர் ராம் பேசறேன்" என்றார். " சொல்லுங்க அங்கிள் நான் சம்பளம் வந்ததும் நேற்றே வாடகையை கூகுள் பேரில் அனுப்பி விட்டேன் என்று சொல்ல", அதற்கு அவர், " நான் அதற்கு ஃபோன் செய்யலை.
டாக்டர். நீங்க உடனே வீட்டை காலி செய்துடுங்க. நீங்கள் அரசு மருத்துவமனையில் வேலை செய்வதால் இங்கு இருப்பவர்களெல்லாம் பயப்படுகிறார்கள் தங்களுக்கு கொரோனோ வந்து விடும்னு. மேலும் கொரோனோ காற்றில் வேறு பரவும்னு சொல்றாங்க.


அதுவுமில்லாமல் என் பெண் வேறு கர்ப்பமாக இருக்கா இப்போது அப்பவோன்னு. அதனால் என்னை தப்பா நினைக்காம உடனே நாளைக்கே கூட காலி செய்துடுங்க " என்று ஹவுஸ் ஓனர் சொன்னார். அதற்கு மைதிலி, " உடனே வீட்டை காலி செய்ய சொன்னால் நான் எங்க போறது அங்கிள். எங்கு கொஞ்சம் டைம் கொடுங்க" என்று கேட்டாள். அதற்கு அவர், " நான் முதலிலேயே உங்களை காலி செய்ய சொன்னேன். நீங்கள் செய்யலே. உங்க அட்வான்ஸை கூட நாளையே தந்து விடுகிறேன் " என்று கூறி அவள் பேசுவதற்கு கூட நேரம் கொடுக்காமல் ஃபோனை வைத்து விட்டார்.

இருக்கிற பிரச்சினையில் இது வேறு. என்ன செய்வது என்று தெரியாமல் நிம்மதியின்றி இன்றி கவலை பட்டு மனவுலைச்சலுக்கு ஆளானாள் . பிறகு ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு அவருடைய பிரெண்டுக்கு ஃபோன் செய்து வீடு கிடைக்குமா உடனே என்று கேட்டு? ஹவுஸ் ஓனர் சொன்னதை எல்லாம் சொன்னாள்.


அவர்களெல்லாம் கொரோனா சூழ்நிலையில் காரணமாக உடனே வீடு கிடைப்பது கஷ்டம் என்று கூறினார்கள். பிறகு சேலத்தில் இருக்கும் தனியார் லேடீஸ் ஹாஸ்டலில் கேட்க, அதற்கு அவர்கள் இப்பொழுது கொரோனா சூழ்நிலையில் புதிதாக யாருக்கும் இடம் கொடுப்பதில்லை என்று கூறினார்கள். பிறகு வேறு வழியின்றி ஆஸ்பத்திரியில் இருக்கும் டீனை தொடர்பு கொண்டு கேட்க, அதற்கு அவர், " டாக்டர் மைதிலி உங்களுக்கே இங்கு இருக்கும் சூழ்நிலை தெரியும். இங்கு இருப்பவர்களுக்கே இடம் இல்லை. மேலும் நீங்கள் டியூட்டியில் இருந்தாலும் பார்க்கலாம்". எனவே நீங்கள் ஒன்று செய்யுங்கள், உங்கள் ஹவுஸ் ஓனரிடம் பேசி சூழ்நிலையை சொல்லி சிறிது அவகாசம் தேவை என்று கேளுங்கள்.


மேலும் கலெக்டர் இந்த சூழ்நிலையில் யாரையும் குறிப்பாக டாக்டர்களை காலி செய்ய சொல்ல கூடாது. அப்படி சொன்னால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார் என்று சொல்லி பாருங்கள். என்னை தவறாக நினைக்க வேண்டாம் " என்று கூ றி ஃபோனை வைத்து விட்டார்.



மைதிலிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை இந்த சூழ்நிலையில். உடல் நிலை வேறு சரியில்லை. மிகவும் களைப்பாக இருந்தது. இன்று தான் பிரகனென்ஸி டெஸ்ட் கிட் வாங்கி காலையில் பார்த்த போது தான் தெரிந்தது அவள் கர்ப்பமாக இருப்பது. இதையெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தாள். எப்பொழுது தூங்கி போனாள் என்று அவளுக்கே தெரியவில்லை.



அன்று இரவு வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது, அவளுடைய வீடு வேறு பூட்டப்பட்டு இருந்தது.அதைபார்த்து திகைத்தாள். அப்பொழுது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது, ஹவுஸ் ஓனரிடம் ஒரு மாற்று சாவி இருப்பது. அவர் தான் அவளுடைய பொருட்களை அதாவது அவளுடைய பெட்டியை எடுத்து வெளியில் வைத்து விட்டார் என்று. ஹவுஸ் ஓனருக்கு ஃபோன் செய்து செய்து பார்த்தபோது அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.


அவளுடைய பெட்டியை எடுத்துக் கொண்டு நடுவீதியில் உட்கார்ந்து கொண்டு, சுயபச்சாததாபத்தில் அவளுக்கு அழுகை வந்தது. சிறிது நேரம் வீட்டின் பக்கத்தில் உட்கார்ந்து அழுது விட்டு மனதை திடப்படுத்திக் கொண்டு பெட்டியை இழுத்துக் கொண்டு நடு ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.



இப்பொழுது ஹவுஸ் ஓனர் வீட்டில் இருந்து அவருடைய மகள் வலியால் துடித்துக் கொண்டு இருந்தாள். அவருடைய மனைவி என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிடித்துக் கொண்டு இருந்தாள். மகள் துடித்துக் கொண்டு இருப்பது கண்டு பொறுக்க முடியாமல் கணவனை அழைத்தாள்.


அவரும் பதறி வந்து பார்த்து விட்டு ஆம்புலன்ஸூக்கு கால் செய்து உடனே வர சொன்னார். கொரோனா சூழ்நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் உடனே வரமுடியாது என்று கூறி வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ள சொன்னான்.


அவர் உடனே அருகில் உள்ள அவருடைய நண்பருக்கு கால் செய்து அவருடைய காரை எடுத்துக் கொண்டு வர சொல்ல, அவரோ தான் இப்பொழுது வெளியூரில் இருப்பதால் உடனே வர இயலாது என்று கூறி, பக்கத்தில் இருக்கும் ஆட்டோகாரரை அழைக்க கூறினார். ஆட்டோ டிரைவர் அவனும் இப்பொழுது அங்கு இல்லை என்றும் வெளியே இருப்பதாகவும் கூறினான். அவருக்கு அதாவது ராமிற்கு இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டிற்கு வந்து பார்த்தார்.


அப்பொழுது தான் டாக்டர் மைதிலி பெட்டியுடன் போவது தெரிய வந்தது. உடனே அவரிடம் வந்து , அவரின் பெண்ணின் நிலைமை கூற, டாக்டர் மைதிலி ஒன்றும் சொல்லாமல் உடனே அவருடைய வீட்டிற்குள்ளே விரைந்து சென்றார். பிறகு அவளை தொடர்ந்து வந்த ராமை வெளியே இருக்கும் படி கூறி விட்டு அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. ராம் குழந்தை பிறந்து விட்டதை அறிந்து கொண்டார். டாக்டர் மைதிலியே ஆஸ்பத்திரிக்கு அழைத்து ஆம்புலன்ஸை வரவழைத்து விட்டு, வீட்டுக்கு வெளியே வந்தாள்.


ராம் டாக்டர் மைதிலியை பார்த்து கை கூப்பி நன்றி சொன்னார் கண்களில் இருந்து கண்ணீர் வழிய. பிறகு அவளிடம் நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டாம் என்றும் அங்கேயே தங்கி இருக்கலாம் என்று கூறி வீட்டு சாவியை அவளிடம் கொடுத்தார். டாக்டர் மைதிலி ஒன்றும் பேசவில்லை. நான் என் கடமையை தான் செய்தேன் என்று அதையும் மனதில் நினைத்துக் கொண்டு தன் பெட்டியுடன் ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.




எழுதியவர்: V R K, SALEM.