அத்தியாயம் 3
சென்னையில் தரை இறங்கி இவன் பெட்டிகளை எடுத்து வரும் முன் மாயமாக மறைந்து இருந்தாள் அவள். பெயர் கூட தெரியாது அவனுக்கு. இருப்பினும் இந்த பத்து மணி நேரமும் பேருதவியாக இருந்தவளுக்கு நன்றி கூட செலுத்த முடியவில்லையே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது. என்ன செய்வது? அவள் பெயரை கூட கேட்கவில்லையே!
அவன் விமானத்தில் இருந்து இறங்கி கழிப்பறை சென்று வருவதற்குள் காணாமல் போய் இருந்தாள். அப்படி என்ன அவசரம்? ஒரு வேளை ஒட்டுனியாக அவன் அவளின் உதவியை கேட்டுக் கொண்டே இருப்பான் என்று அஞ்சி விட்டாளோ? அவனை ஒருவர் அப்படி நினைப்பதா? இப்படி ஒரு நிலையில் அவனை வைத்த விதியை நொந்து கொள்வதை தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.
வீட்டிற்கு சென்று அங்கே சிலையாய் அவர்கள் வீட்டு பூஜை அறையில் அமர்ந்திருந்த அவனது அம்மா சீதாவிடம் சென்று ஆதவனை கொடுத்தவனுக்கு அதற்கு மேல் மித்ராவை பற்றி யோசிக்க நேரமில்லை. அவனை சூழுந்து கொண்டிருந்த பொறுப்புகள் அப்படி.
வெளிநாட்டில் இருந்தாலும் தொழில் சம்பந்தமான அத்தனை முடிவுகளிலும் விஜயின் பங்கு இருந்தது. அண்ணன் இல்லாமல் அதை சமாளிக்கவே தடுமாற்றமாக இருந்தது அவனுக்கு. விஜய் வெளிநாடு சென்ற போதும் இவன் பொறுப்புகள் முன்னைவிட அதிகரித்தாலும் அது சுகமான சுமையாக இருந்தது. தன் சகோதரன் அவன் குடும்பம் அதன் சந்தோஷத்திற்காக செய்கிறோம் என்ற நிலை அப்போது. ஆனால் இப்போதோ!!! இழப்பின் வலி தாங்க முடியாமல் போகும் போது யாருக்காக இப்படி உழைக்கிறோம் என்று தோன்றிவிடும். இது வரை அவர்களிடம் இருந்த சொத்துக்களை வைத்தே கடைசி வரை வாழ்ந்து விடலாம். இதற்கு மேலும் எதற்கு இவ்வளவு அலைச்சல். பேசாமல் இதை எல்லாம் விட்டுவிட்டு எங்கேனும் தூர தேசம் ஓடிவிடலாமா? இமய மலையில் சென்று சன்யாசம் மேற்க் கொள்ளலாமா என்றெல்லாம் அலைபாயும் மனதை ஆதவனின் முகத்தை முன்னிறுத்தி அடக்குவான்.
இது அவனது மட்டும் அல்ல. நினைத்த நேரத்தில் விட்டுவிட்டு ஓடுவதற்கு. மூன்று தலை முறைகளாக அவனது தாத்தா காலத்தில் இருந்து செய்து வரும் தொழில். நான்காவது தலை முறையாக ஆதவன் இருக்கிறான். இதை கட்டி காப்பாற்றி உரிய வயது வரும் போது ஒப்படைப்பது அவனது கடமை.
இந்த ஒரு விஷயத்தையே மனதில் தாரக மந்திரம் போல ஜபித்துக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டு இருந்தான் அவன். இடையில் அந்த பெண் சொன்ன "இதுவும் கடந்து போகும்" என்ற வாசகமும் தோன்றாமல் இல்லை. {இவனா சந்நியாசம் வாங்க போகிறான்?} யாரோ அவள். மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அரிது சே சே இல்லை என்றே சொல்லிவிடலாம். சென்னையின் ஒரு கோடிக்கும் மேல் உள்ள ஜன திரளில் அவளை பெயர் கூட தெரியாத ஒரு பெண்ணை எப்படி மீண்டும் சந்திப்பான்? வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். வேறு ஒன்றும் இல்லை. அவள் செய்த உதவிக்கு நன்றி சொல்லத்தான்! {அவ்வளவே தானா? நீ அதோடு நிறுத்திவிடுவாயா?? பார்க்கலாம் பார்க்கலாம்!!}
ஏதேதோ எண்ணங்களுடன் வண்டியை செலுத்தி வீட்டின் முகப்பில் சென்று நிறுத்தினான் அவன். அவன் இறங்கவும் அவனிடம் இருந்து சாவியை வாங்கி கராஜில் விட வீட்டின் காரோட்டி ஓடி வந்தான். அவனிடம் சாவியை கொடுத்து விட்டு படியேறி வீட்டினுள் சென்றான்.
வீடே களேபரமாக இருந்தது. ஆதவன் வீறு வீறு என்று அழுது கொண்டு இருந்தான். அவனை சமாதான படுத்த முயன்று தொற்றுக் கொண்டு இருந்தனர் சீதாவும் ஆதவனை கவனித்துக் கொள்ள என்று நியமிக்கப் பட்டிருந்த பெண் சுனிதாவும்.
சுனிதா திவ்யாவின் தேர்வு. இந்தியா திரும்பி வந்த பின்னும் அவள் ஒரு பல்கலைக் கழகத்தில் வேலைக்கு செல்லும் எண்ணத்தோடு இருந்ததாலும் சீதாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் திவ்யா இங்கே வரும் முன்னே ஆதவனை கவனித்துக் கொள்ள என்று தேடி தேடி தேர்வு செய்த பெண் சுனிதா. இப்படி எல்லாவற்றையும் முன் யோசனையோடு செயல் பட்டாளே இப்படி அல்ப ஆயுசில் போய் விடுவோம் என்று தெரியாமலே. இப்படி சீதா புலம்பாத நாளே இல்லை.
முன் ஏற்பாட்டின் படி சுனிதா தயாராக இருந்ததால் ஏதேதோ நடந்து விட்டிருந்த போதும் அவளுக்கு ஆதவனை கவனிக்கும் பொறுப்பு வந்தது. ஒரு விதத்தில் இது அவர்களுக்கு வசதியாக இருந்தது. சீதாவின் உடல் நிலை ஒரு வயது குழந்தையின் தேவைகளை கவனிக்க ஏதுவாக இல்லை. இவனுக்கோ விவரமும் தெரியாது அப்படியே முயன்று தெரிந்து கொண்டாலும் முழூ நேரமும் ஆதவனுடன் இருக்க இயலாது. எல்லாமாக இந்த ஒரு மாதமாக சுனிதா இந்த வீட்டில் தான்.
ஆனால் அவளாலும் ஆதவனை சமாளிக்க முடியவில்லை. நடந்து முடிந்த கோரத்தின் விவரம் அறியும் வயது இல்லை என்றாலும் இது வரை அவனோடு இருந்த அப்பா அம்மா அவனருகே இல்லை அவனுக்கு பரிச்சயமான வீடும் இல்லை மனிதர்களும் இல்லை சீதோஷண நிலையும் இல்லை உணவும் இல்லை விளையாட்டு பொருட்களும் இல்லை. இப்படி பல இல்லைகள் அந்த சின்ன குழந்தை ஆதவனின் வாழ்வில்.
அதனாலேயே குழந்தை எல்லாவற்றுக்குமே ஒத்துழைக்க மறுத்தான். ஒவ்வொரு வேளை உணவும் உறக்கமும் அவனுடன் போராட்டம் தான். எல்லாவற்றுக்குமே முரட்டு மறுப்பு தான்.
பிள்ளை மருமகளின் இழப்பில் தவித்து நிற்க கூட சீதாவிற்கு நேரம் தரவில்லை ஆதவன். எப்படி இவனை சமாளிப்பது என்று புரியாமல் தவித்தார். இன்னும் கொஞ்சம் பெரிய குழந்தை என்றால் பேசி புரிய வைக்கலாம். ஏதேனும் தருவதாக சொல்லி காரியம் சாதிக்கலாம். குறைந்த பட்சம் அவன் எதற்காக அழுகிறான் என்று கேட்டாவது தெரிந்து கொள்ளலாம். இது எதுவுமே இல்லாமல் அவன் ஒரு பிஞ்சு குழந்தை. இன்னும் ஒரு வாரத்தில் தான் ஒரு வயதே ஆகப் போகிறது. அப்படி இருக்கையில் என்ன செய்வது?
வீட்டினுள் வந்தவன் நேரே ஆதவனிடம் சென்றான். சித்தப்பாவை பார்த்ததும் உதடு பிதுக்கி மீண்டும் ஒரு சுற்று அழுகைக்கு தயாரானவனை தூக்கிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றான் அவன்.
இட மாற்றத்தில் சற்றே மட்டுப்பட்டது ஆதவனின் அழுகை. பின்னாலேயே வந்த சீதா புலம்பினார்.
"இவ்வளவு நேரமும் எதற்கு அழுதான் என்றே தெரியவில்லை. சாப்பிட கொடுத்தாலும் வேண்டாம் என்றான். விளையாடவும் இல்லை." மெல்லிய குரலில் அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அங்கே வந்தாள் சுனிதா.
"ஆது குட்டிக்கு ஆப்பிள் மில்க் ஷேக் இந்தாருங்கள். அழுது அழுது அவன் தொண்டையே வற்றி போய் இருக்கும்." நிலைமை தெரிந்தால் அவளுக்கும் மிகுந்த வருத்தம் தான். பேசி சில தரத்திலேயே அவளுக்கு திவ்யாவை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் விதி. பெரு முறை கூட நேரில் சந்திக்க முடியவில்லை.
அவள் கொடுத்த சிப்பரை வாங்கி அவனே புகட்டினான். இப்போது இதில் எல்லாம் கொஞ்சம் தேறி இருந்தான். உண்டு முடித்த குழந்தை போக்கை வாய் சிரிப்போடு சீதாவிடம் தாவினான்.
"இவ்வளவு நேரம் அமர்க்களம் செய்தவனா டா செல்லம் நீ? இப்போது இப்படி சிரித்து மயக்குகிறாயே??" என்று கொஞ்சினார் சீதா.
"இவன் காரியக் காரன் அம்மா. சிரித்தே எல்லோரையும் மயக்கி அவன் விருப்பத்திற்கு ஆட வைத்து விடுவான்." புன்னகையுடன் அண்ணன் மகனின் கன்னத்தை நிமிண்டினான் அவன்.
மறுநாள் விடியும் போதே அவனுக்கு அவள் நினைவு தான். எப்படி வாட்டமாக ஆதவனை கையாண்டாள். அவளிடம் இந்த வம்பன் எப்படி பெட்டிப் பாம்பாக இருந்தான்? ம்ம்ம் ஒவ்வொருவர் கை வாட்டம் அப்படி போல.இப்படி மித்ராவை பற்றிய எண்ணங்களே அவனக்கு தயாராகி அலுவலகம் செல்லும் வரையிலும்.
அலுவகத்தில் உள்ளே நுழைந்தவனை எதிர் கொண்டான் அவன் காரியதரிசி ஜீவா.
"சார் காலை வணக்கம். இன்று மதியம் உங்களுக்கு சோலாவில் ஒரு கூட்டம் இருக்கிறது. அதில் நீங்கள் பேச வேண்டிய குறிப்புகள் இதோ. காலையில் நம் ஹோட்டலின் முகப்பில் இருக்கும் இடத்தை ஏதேனும் ஒரு உணவகத்திற்கு கொடுக்கும் திட்டத்திற்கு நாங்கள் சரி பார்த்து தேர்வு செய்து வைத்திருக்கும் மூன்று தொழில் கூடங்களின் விவரங்கள் இதில் இருக்கின்றது. உங்களுடன் அவர்களுக்கான நேர்காணலுக்கும் ஏற்பாடு செய்து இருக்கிறோம். நீங்கள் ஒரு முறை பேசிவிட்டு யா என்று சொன்னால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்." என்று அடுக்கிக் கொண்டே சென்றான் ஜீவா. ஜீவா பேசி முடிக்கவும் எம்.டியின் அறை வரவும் சரியாக இருந்தது.
ஜீவா தந்த குறிப்புகளை பெற்றுக் கொண்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தான் அவன்.
அவர்களது தங்கும் விடுதிகளை நடத்தும் தொழில். தாத்தா காலத்தில் சிறியதாக இருந்து பின்னர் மெல்ல மெல்ல வளர்ந்து இப்போது தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஒரு மூன்று நட்சத்திர விடுதியை நடத்திவருகின்றனர்.
தற்போதைய நடைமுறை படி விடுதியின் முகப்பில் ஒரு உணவகம் வைக்க திட்டமிட்டு இருந்தனர். சிறிய ஜூஸ் கடையோ காபி ஷாப் அளவில். அதை அவர்களே நடத்துவதை விட அந்த துறையில் ஓரளவு கால் பதித்து இருந்தவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு இடம் இவர்களது தொழில் அவர்களது என்று வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தான் விஜய். அதை இப்போது இவன் செயல் படுத்திக் கொண்டு இருந்தான்.
ஜீவா கொடுத்து சென்ற கோப்புகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்தான். முதலில் ஒரு காபி ஷாப் - அவர்களுக்கு ஏற்கனவே பல கிளைகள் இருந்தன. ஏன் ஏற்புடையதாக இல்லை அவனுக்கு. இவர்கள் விடுதியில் தொடங்கும் தொழில் அவர்களுக்கு பத்தோடு பதினொன்று. தனித்துவமாக இருக்காது. ஆனால் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட பெயர். ஓரளவு தரம் இருக்கும். மற்ற இருவரையும் பார்த்து விட்டு கடைசி முடிவு எடுக்கலாம் என்று அந்த கோப்பை தள்ளி வைத்தான்.
அடுத்தது ஒரு ஜூஸ் பார். அவர்களிடம் ஜூசை தவிர மெனுவில் வேறு ஒன்றுமே இல்லை. வெயில் நாட்களில் ஓகே. ஆனால் மழை காலத்தில் எந்த அளவு சரிப்பட்டு வரும் என்று தெரியவில்லை.
மூன்றாவது ஒரு பேக்கரி. இப்போதைக்கு அவர்களுக்கு கடை என்று எதுவும் இல்லை. ஆர்டர் வர வர சப்ளை மட்டுமே செய்து இருந்தார்கள். இவர்களை எப்படி தேர்ந்தெடுத்தான் ஜீவா என்று யோசிக்கும் போதே அங்கே பேனாவில் ஜீவா எழுதி இருந்த குறிப்பை கவனித்தான். இவர்கள் திரமிசு வேற லெவல். அதை சாப்பிட்டு பார்க்கவேணும் நீங்கள் அவர்களை ஒரு முறை சந்திக்க வேண்டும். அட சாப்பாட்டிற்கு பிறந்தவனே.. இதை வைத்தா தொழில் முடிவு எடுக்க முடியும்? உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே அந்த கோப்பை திருப்பியவன் இன்பமாய் அதிர்ந்தான். அதில் தொழில் உடைமையாளர் பற்றிய விவரங்கள் இருந்த பக்கத்தில் மித்ராவின் புகைப்படம் இருந்தது.
பரபரப்புடன் விவரங்களை படித்தான். மித்ரா சுதாகர். நல்ல பெயர். கீழே படித்துக் கொண்டே சென்ற அவன் கண்கள் அதிர்ச்சியில் நிலை குத்தி நின்றது. தனி நபர் விவரங்கள் இருந்த இடத்தில அவள் திருமணம் ஆனவள் என்று குறிப்பிடப் பட்டு இருந்தது.