• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சக்கரையின் உதிரம் - 4 #திரமிசு

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
சில்லென்று தூரிய மழை சற்றென்று அனல் கொதிக்கும் வென்னீராய் ஆனது அவனுக்கு.



மீண்டும் மீண்டும் அவளது குறிப்புகளை படித்துப் பார்த்தான். பீனிக்ஸ் என்ற பெயரில் அவளது அடுமனை தொழிலை நடத்திக் கொண்டிருந்தாள். கடந்த சில ஆண்டுகளாக அவள் செய்யும் இந்த தொழிலை ஒரு சிறிய ஃபேக்டரி வைத்து செய்து கொண்டிருந்தாள்.



பிறந்தநாள் விழாக்கள் சிறு சிறு விசேஷங்கள் என்று அவளது வளர்ச்சி நன்றாக தான் இருந்தது. இது எல்லாமே அவனுக்கும் படிக்க சந்தோஷமாக தான் இருந்தது. அதிலும் முக்கியமாக ஆன்லைனில் அவளை பற்றியும் அவளது தொழிலை பற்றியும் வந்த விமர்சனங்கள் மிகவும் அவளை புகழ்ந்து இருந்தது அவனுக்கு சந்தோஷத்தை தான் தந்தது. எல்லாமே நல்லது தான். ஆனால் திருமணம் ஆனவள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அது எப்படி? அன்று அவன் பார்த்த போது அவள் கால்களில் வெட்டியோ கழுத்தில் சரடு ஏன் திருமணம் ஆனவள் என்று எந்தவிதமான அறிகுறியும் இல்லையே! அவளுக்கு பிள்ளைகள் இல்லை என்றும் சொன்னாள். ஆனால் அதை சொன்ன போது அவள் முகத்தில் ஏதோ ஒரு பாவம் வந்து சென்றது. அதற்கு அர்த்தம் தான் என்ன? ஒருவேளை திருமணமான பின் பிரிந்தவளோ? அந்த வலியைத்தான் அன்று மறைத்தாளோ? ஆனால் யார் குழந்தைகளை அவள் கவனித்து இருப்பாள்? எப்படி அவளுக்கு பிள்ளை வளர்ப்பு பற்றி இவ்வளவு தெரிந்தது? சரி அண்ணன் குழந்தையோ, தங்கை குழந்தையோ ஏதோ ஒன்று இருக்கலாம். எல்லாம் சரிதான். திருமணம் ஆனவள் என்று சொன்னது தற்போது விவாகரத்து செய்து விட்டவள் என்றும் சொல்லியிருக்க வேண்டுமே! அப்படி ஏதும் இந்த குறிப்பில் இல்லையே! அவன் மனம் அதிலேயே தான் உழன்று கொண்டிருந்தது.



இதைப் பற்றி மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள ஜீவாவை அவனது அறைக்குள் அழைத்தான். உள்ளே வந்த ஜீவா சொன்ன விபரங்களும் அவனை மேலும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தின. மித்ராவிற்கு திருமணம் ஆனது மட்டுமல்லாமல் அவளது தொழிலில் மற்றொரு பங்குதாரராக இருந்தது அவளது கணவனே. அவனைப் பற்றிய குறிப்புகளும் அந்த கோப்பில் இருந்தன. இதுவரை மற்றொரு பங்குதாரர் என்று அலட்சியமாக அதை கவனிக்காமல் இருந்தவன் இப்போது விவரங்களை எடுத்து படித்தான். அவனது பெயர் ருத்ரன். என்னதான் பெயரோ? ருத்ரன் சரியான ருத்ர மூர்த்தியாக இருப்பானா இருக்கும். அவனுக்கும் மித்ராவிற்கும் ஏதோ பெரிய சண்டை இருந்திருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டுமா இல்லை இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோமா ? சே சே. நமக்கு ஒரு பெண்ணை பிடித்து இருக்கு என்பதற்காக அவளது திருமண வாழ்வு தோல்வியில் முடிய விடைய வேண்டுமா? எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இது? முன்னொரு காலத்திலோ இல்லை முட்பிறவியோ எப்போதோ செய்த பாவத்திற்கு இந்த பிறவியில் பல வலிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்க. இது போதாதா?



இந்த பிறவியிலும் மேலும் ஒரு குடும்பத்தை பிரித்த பாவத்தை அவன் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? இல்லை மறந்து விட வேண்டும். இன்றே மித்ராவை இந்த க்ஷனமே மறந்து விட வேண்டும். ஆனால் 10 மணி நேரத்தில் அவள் அவனது மனதில் ஏற்படுத்தி விட்டு சென்ற தாக்கத்தை மறப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அது கடினமான காரியம் என்பதே அவன் அதை மறக்க முயன்ற போதுதான் அவனுக்கே புரிந்தது.



இருந்தாலும் செய்து தான் ஆக வேண்டும். இருக்கட்டும். வாழ்க்கையில் முதன் முதலில் ஒரு பெண்ணின் மீது அவனுக்கு ஏற்பட்ட ஆசை. அது இன்றே மண்ணோடு மண்ணாக போகட்டும். எல்லாருக்குமே தங்கள் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கை அமைவதில்லை தானே. அப்படி ஒருவராக இருந்துவிட்டுப் போகலாம். அது மட்டும் இல்லாமல் அவனுக்கும் வேறு பொறுப்புகள் பல இருந்தன தானே. மித்ரா திருமணம் ஆகாதவள் என்றாலும் அவனை திருமணம் செய்து கொள்ள அவள் ஒப்புக் கொள்வாளா என்பது பெரிய சந்தேகமே. ஆதவன் என்ற பெரிய பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. முன்னேயே பிறந்த ஒரு குழந்தை யாரோ ஒருவருடையது கணவனுடையது கூட இல்லை என்னும் போது எந்த பெண்தான் ஏற்றுக்கொள்வாள்.



மித்ரா அப்படி இருக்க மாட்டாள் தான்.



ஒருவேளை அவனுக்கும் அவளுக்கும் திருமணம் என்ற நிலை வந்தால் அவள் ஆதவனை தன் மகனாகத்தான் பார்ப்பாள். வீண் கற்பனை என்றுமே நடக்கப் போகாத விஷயத்திற்காக எதற்கு இவ்வளவு கற்பனைகள். மனதின் போக்கை திசை திருப்ப முயன்றான்.



ஆனாலும் அவனுக்குள் ஒரு சின்ன உறுத்தல் இருந்து கொண்டு தான் இருந்தது. மித்ராவை பார்த்தபோது சந்தோஷமான திருப்தியான திருமண வாழ்வில் வாழும் ஒரு பெண் போல் அவனுக்கு தோன்றவில்லை. அது அவனது மனதின் ஆழ்மனதின் ஆசையா இல்லை உண்மையா என்பதில் அவனுக்கு நிச்சயம் இல்லை. இருந்தாலும் அவள் சந்தோஷமாகத்தான் வாழ்கிறாள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவா அவனை நிமிடத்திற்கு நிமிடம் ஆட்கொண்டு இருந்தது.



அதற்கு ஒரே வழி அவளை மீண்டும் சந்தித்து அவளோடு நட்பு பாராட்டு அவளது சந்தோஷத்தை உறுதிப்படுத்திக் கொள்வது தான். அதற்குத்தான் அவனுக்கு ஒரு வழி இருக்கிறதே. தொழில் ஒப்பந்தம் என்று. சரி இன்று அவள் வரட்டும். அவளுடன் பேசிப் பார்க்கும்போது தெரிந்துவிடும் அவள் திருமண வாழ்வு எப்படி என்று. மனதை திட படுத்திக் கொண்டு அவளை சந்திக்க தயாரானான்.



சாம்பல் வண்ண நிற சைனீஸ் காலர் கொடுத்தாலும் அதற்கு ஏற்பட நிற லெக்கின்ஸ் அணிந்து கொண்டு தோல் வரை வெட்டப்பட்டு லேயர் கட் செய்து முடியுடன் ஒரு கையில் மிகவும் மெல்லிதான வைர ப்ரேஸ்லெட்டும் மறுக்கையில் விலை உயர்ந்த வாட்ச்சுடனும் உள்ளே நுழைந்தவளை பார்த்தவன் எப்படி உணர்ந்தான் என்பதை சொல்ல முடியாது.



அவள் கொடுத்த தோற்றம் ஓரளவு வசதி படைத்த வீட்டு அரசி பொழுது போகாமல் ஒரு தொழிலை தொடங்கி நடத்துவது போல இருந்தது அவனுக்கு. அப்படியானால் என்ன அர்த்தம் அவள் சந்தோஷமாக வீட்டில் இருக்கிறாள் என்று தானே அர்த்தம். ஆனால் வெறும் தோற்றத்தை வைத்து முடிவு செய்து விட முடியாது. ஏனென்றால் முதலில் அவன் அவளைப் பார்த்தபோது திருமணமாகாதவள் என்றுதான் நினைத்தான். அதுபோல இதுவும் ஒரு மாயையாக இருக்கலாம். பேசிப் பார்த்து தெரிந்து கொள்வோம் என்று கூர்மை காத்தான் உள்ளே வந்து அமர்ந்த மித்ரா அவனை அம்பையை சந்தித்ததற்கான சற்றும் ஆச்சரியமின்றி அமர்ந்தால் முன்னரே அவனை தெரியும் என்பதற்கான அறிகுறியாக சிறு புன்னகை மட்டுமே.



அவனுக்குப் புரியவில்லை. எப்படி இவளுக்கு ஆச்சரியம் இல்லை? கேட்டே விட்டான். " நீங்கள் இங்கே என்னை எதிர்பார்த்து வந்தீர்களா?"



" அப்படியும் சொல்லலாம். ஏனென்றால் சென்ற வாரம் இந்த நிறுவனத்துடன் என்னுடைய ஒப்பந்தத்திற்கான விவரங்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது நிறுவனத்தின் உரிமையாளர் என்று தினேஷ் ரங்கராஜன் என்ற பெயரை பார்த்தேன். லிங்க்டின் உள்ளே சென்று பார்த்த போது உங்கள் புகைப்படம் இருந்தது இதுதான் நீங்கள் என்று தெரிந்து கொண்டேன் ஆமாம் குட்டி ஆ தவன் எப்படி இருக்கிறான்." என்று விசாரித்தாள்.



எவ்வளவு சாதாரணமாக விசாரிக்கிறாள்? அவ்வளவு தானா அவன் அவளிடம் செய்த தாக்கத்தின் அளவு? அது சரி ஏற்கனவே திருமணம் ஆனவர்களிடம் இவன் மேலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியும்? எண்ண ஓட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவளுக்கு பதில் அளித்தான்.



"இருக்கிறான். அவனுக்கு எதுவுமே இங்கே சரிப்பட்டு வரவில்லை. புது இடம் புது மனிதர்கள். அப்பா அம்மா இல்லை. இப்படி பல கஷ்டங்கள். அதனால் கொஞ்சம் பிள்ளை அவஸ்தை படுகிறான். மிகவும் பசி எடுத்தால் மட்டுமே உணவு. அழுது அழுது ஓய்ந்தால் மட்டுமே உறக்கம்



என்ன செய்வது? இன்னும் சில மாதங்களில் இதுவும் அவனுக்கு பழகி போகும் என்று நினைக்கிறேன். அம்மா தான் பாவம் பிள்ளை மருமகளை இழந்த துக்கத்திற்கு அழுவதா இல்லை பேரப்பிள்ளை இழப்பிற்கு ஈடு செய்யும் வகையில் அவனை கவனித்துக் கொள்வதா என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள்." அவனது வழக்கம் போல மனதில் இருந்த அனைத்தையும் அவளிடம் கொட்டினான் தினேஷ் ரங்கராஜன்.



"உண்மைதான் பாவம் அந்த குழந்தையின் சின்ன வயதிலேயே அது எத்தனை கஷ்டங்களை சந்தித்து விட்டது. குறைந்தபட்சம் அவனுக்காக யோசிக்கும் சித்தப்பாவாக உங்களையும் ஒரு பாசமுள்ள பாட்டியும் பெற்றிருக்கிறானே அதுவே பெரிய விஷயம். இதிலிருந்து மீண்டு அவன் கண்டிப்பாக வளர்ந்து நிறைய விஷயங்கள் சாதிப்பான் நீங்கள் கவலைப்படாதீர்கள்." என்று ஆறுதலாக பேசினாள் மித்ரா.
"பார்ப்போம் சரி இப்போது நாம் தொழிலை பார்ப்போம் நீங்கள் உங்கள் தொழிலைப் பற்றி விவரிங்கள் எப்போது ஆரம்பித்தீர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள்."
அவள் கையோடு எடுத்து வந்திருந்த ஒரு பெட்டி மேஜை மீது வைத்த மித்ரா "இங்கே உணவு உண்ணலாமா? அல்லது உணவு உண்ணக்கூடிய ஒரு அறைக்கு செல்லலாமா? நான் உங்களுக்காக சிலது செய்து எடுத்து வந்திருக்கிறேன். உண்டு பார்த்துவிட்டு முடிவுகள் சொல்லுங்கள்." என்று விவரித்தாள்.
"இங்கே சாப்பிடலாம் மித்ரா. உங்களது திரமிசு பற்றி ஜீவா சொன்னான். அதையும் எடுத்து வந்திருக்கிறீர்களா?"
"கண்டிப்பாக. அதுதான் எனது கஸ்டமர் முதல் விருப்பமே. நான் இதுவரை செய்து கொடுத்த எந்த ஒரு பார்ட்டி ஆர்டரிலும் அது இல்லாமல் இருந்ததே இல்லை. ஆனால் அது மட்டும் நான் எடுத்து வரவில்லை. கிரோயிஸ்ஸன்ட் ஸ்பிசி பை, பேஸ்ட்ரி என்று பல விதங்களில் எடுத்து வந்திருக்கிறேன் உங்களுக்கு விருப்பமானது உண்டு பார்த்துவிட்டு மேலும் பேசலாம்." இன்று கடை பரப்பினாள் மித்ரா.
ஒவ்வொரு உணவு வகையையும் பார்க்கும் போது நாஊறி உடனே எடுத்து உண்ண தூண்டும் விதத்தில் இருந்தது. எல்லாமே சில மணி நேரங்களுக்கு முன்னே தயாரித்து எடுத்து வந்திருப்பாளாய் இருக்கும் ஃபிரஷ்ஷாக இருந்தது.
பிடித்ததை எடுத்து முயன்று பார்க்கத் தொடங்கினான் தினேஷ் ரங்கராஜன்.



என்ன முயன்றும் அவளிடம் ஏற்பட்ட நட்புணர்வையோ ஒரு பந்தத்தையோ அவனால் மனதில் இருந்து தூர நிறுத்த முடியவில்லை. அந்த கணம் ஒரு முடிவு செய்து கொண்டான் தினேஷ். இருக்கட்டும் அவள் திருமணம் ஆகி சந்தோஷமாக இருந்தால் அவனது வாழ்க்கை துணையாக இல்லாமல் குறைந்தபட்சம் ஒரு தோழியாக அவனோடு அவள் இருந்தால் போதும். ஏனெனில் மனதில் இருப்பதை அவளுடன் பகிர்ந்து கொள்ளும் போது அவன் உணரும் அந்த லேசான உணர்வு அவனுக்கு வாழ்க்கை முழுவதும் வேண்டும். அவனும் அவளுக்கு உற்ற தோழனாக காப்பானாக என்றுமே இருப்பான். இதுதான் தினேஷ் செய்துகொண்ட முடிவு. அந்த முடிவிலிருந்து தினேஷ் மாறினானா எதனால்?
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
பாவம் அவனுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். பயணம் முடிந்து பிரிந்ததிலிருந்து அவளை மறக்க முடியாமல் நினைத்து தவிக்கிறானே!

முயற்சித்தும் முடியாமல் ஒரு தோழியாகவேனும் அவனுடைய வாழ்வில் அவள் இருக்க விரும்புகிறான்😍

பார்ப்போம் அவன் நினைத்தது நடக்குமா என்று🧐🤩