• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சக்கரையின் உதிரம் - 6

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
அவர்களுக்குள் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருதரப்பினருக்கும் ஏற்றவாறு ஷரத்துகளுடன் கையெழுத்தானது.

மித்ரா அந்த சிறிய கடைக்கு தேவையான பொருட்கள் ஏற்பாடு செய்வதும் அதற்கு ஏற்றவாறு பணியாளர்கள் தயார் செய்வது என்று மிகவும் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தார் இந்த நிலையை அவளுக்கு ஒரு நாள் தினேஷிடம் இருந்து அழைப்பு வந்தது

"மித்ரா நாளை குட்டி ஆதவனுக்கு பிறந்தநாள். எங்கள் எல்லோருக்கும் மனதில் இருக்கும் நிலையில் அதை மிகவும் பெரிதாகக் கொண்டாட தோன்றவில்லை. எப்படி எப்படியோ கொண்டாடி இருக்க வேண்டியது என்ன செய்வது? இருந்தாலும் முதல் பிறந்தநாள் அல்லவா? ஏதாவது செய்து தானே ஆக வேண்டும்! அது பின்னால் அவனுக்கு ஒரு குறையாக இருக்க கூடாது. அதனால் வீட்டிலேயே நான் அம்மா மற்றும் அவனை கவனித்துக் கொள்ளும் சுனிதா என்று மட்டும் கேக் வெட்டி கொண்டாடலாம் என்று முடிவு செய்தோம். உங்களது கேக் வகைகள் பற்றி அம்மாவிடம் சொன்னேன். சத்தானதாகவும் சுத்தமானதாகவும் நீங்களே செய்து கொண்டு இங்கு வந்து விடுங்கள். நாம் சிறிதாக கொண்டாடிவிடலாம். உங்களுக்கு இரவு உணவு எங்கள் வீட்டில் தான்." என்று வேண்டுகோளோடு அன்பு கட்டளை இட்டான்.

இதற்கு மேல் மித்ராவால் எப்படி மறுத்து பேச முடியும் அவளுக்கும் குட்டி ஆதவனை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. பாவம் பெற்றோரை இழந்த பிள்ளை. அவளால் முடிந்தது அந்த ஒரு சிறு விஷயம் தான். மெனக்கெட்டு தேவையான பண்டங்களை வாங்கி வந்து அவளே ஆதவனின் பிறந்தநாள் கேக்கை தயாரித்தாள். இரண்டு அடுக்கு கேக்கில் நீல நிறம் பூசி ஆங்காங்கே குட்டி குட்டி மேகங்கள் போல் அமைத்து ஒரே ஒரு சூரியன் அதுதான் ஆதவனாம் அந்த சூரியனின் மேல் ஆதவன் என்று பெயரும் எழுதி கேக்கில் ஓரிடத்திலிருந்து மேகங்களுக்கு நடுவே அந்த சூரியன் உதித்து வருவது போல் அமைத்தாள்.

தோடு அவ்வளவு ஸ்பெஷல் உணவு வகைகள் சிலது செய்து எடுத்துக் கொண்டு சென்றாள். இவள் சென்ற நேரம் குட்டி ஆதவன் மாலை சிற்றுண்டி உண்ண முடியாது என்று அமர்க்களம் செய்து கொண்டிருந்தான்.

மித்ராவை வரவேற்று உள்ளே அழைத்து சென்று அன்னையை அறிமுகம் செய்து வைத்தான் தினேஷ். அவர்களுடன் முகமன் செய்து கொண்ட பின் ஆதவனிடம் சென்றாள். சுனிதாவின் கையில் அழுது கொண்டிருந்த ஆதவன் மித்ராவை கண்டதும் பட்டென்று அழுகையை நிறுத்தினான்.

உதட்டு பிதுக்கிக் கொண்டே மித்ராவிடம் தாவினான் பிள்ளை. அவனுக்கு உத்ராவை பார்த்தால் எப்படி தூங்க வேண்டும்? குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு அவள் எடுத்து வந்த பலகாரங்களில் இருந்து ஒரு சிறிய கப் கேக் எடுத்து ஊற்றலானால் சமர்த்தாக சாப்பிட்டான் குழந்தை. ஆச்சிரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர் மூவரும். இதுவரை அவன் இங்கே வந்த இந்த ஒரு மாதத்தில் ஒருநாளும் இவ்வளவு அமர்க்களம் இன்றி அவன் உண்டதே இல்லை.

சுனிதா கேட்டே விட்டாள் "எப்படி மேடம் எப்படி அவன் இந்த கேக்கை சாப்பிடுகிறான்? நான் இதுவரை அவனுக்கு எது கொடுத்து பார்த்தாலும் மிகவும் போராடி கெஞ்சி கொஞ்சி தான் சாப்பிட வைக்க வேண்டும்."

ஏதோ யோசித்த சீதா சொன்னார் "ஒருவேளை மித்ரா செய்வது திவ்யாவின் கை பக்குவம் போல இருக்கிறதோ என்னவோ?"

" இருக்கலாம் அம்மா. அதுவும் இருக்கலாம். திவ்யா இவனுக்கு அடிக்கடி இப்படித்தானே குக்கி கேக் என்று பழக்குவாள். அந்த நினைவில் நாம் இவனுக்கு கடையில் வாங்கி கொடுத்தாலும் அதன் சுவை அவனுக்கு பிடிக்கவில்லை. விஜய் வீட்டில் செய்வதாகத்தானே சொல்லி இருக்கிறான். ஒருவேளை அதனால்தான் மித்ராவின் கைப்பக்குவம் பிடித்திருக்கிறதோ என்னவோ இந்த செல்லத்திற்கு." அண்ணன் மகன் ஒருவேளை உணவு ஒழுங்காக உண்டதை கண்ட நிம்மதியில் சொன்னான் தினேஷ்.

"மித்ரா தவறாக எடுத்துக் கொள்ளாமல் இனி தினமும் இவனுக்கான உணவை நீயே தயாரித்து தந்து விடுகிறாயா நான் வேளா வேளைக்கு ஆள் அனுப்பி பெற்றுக் கொள்கிறேன். அதற்குரிய பணத்தையும் இப்போதே வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்." என்றார் சீதா பேரன் எப்படியாவது நன்றாக உண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.

"அம்மா என்ன இது? அவர்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? ஏதோ இன்று ஒரு நாள் பிறந்தநாள் என்று செய்து எடுத்து வந்தார்கள். இதுவே பெரிது. இதற்கு மேல் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது அம்மா." என்று தடுத்தான் தினேஷ்

"இதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை தினேஷ். நீங்கள் இந்த செல்லம் என்னவெல்லாம் சாப்பிட்டான் முன்பு அங்கே லண்டனில் இருந்த போது என்பதை சொல்லி விடுங்கள். அதற்கு ஏற்ப எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை எல்லாம் தயாரித்து அனுப்பி விடுகிறேன். இதற்கு பணம் கூட வேண்டாம். ஏதோ என்னால் இந்த குழந்தையின் துன்பத்தை போக்க முடிந்தால் சந்தோஷம்தான்." என்றாள் மித்ரா.

"கண்டிப்பாக இல்லை மித்ரா. இதற்கு நீ பணம் பெற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அது எப்படி உன்னிடம் உன் உழைப்பை பெற்றுக் கொண்டு பணம் தராமல் எங்களால் இருக்க முடியும்? இல்லையம்மா. கண்டிப்பாக இதற்கு ஏதேனும் ஒரு வேலை சொல்லிவிடு. எப்படியும் நீ உணவு தயாரிக்கும் தொழில்தானே இருக்கிறாய். இதையும் ஒரு தொழிலாக பாரேன். எங்கள் ஆது செல்லத்திற்கு செய்வது போல பிற்காலத்தில் பல குழந்தைகளுக்கு செய்து டெலிவரி செய்யும் தொழிலையும் நீ வளர்த்துக் கொள்ளலாம். வேலைக்கு செல்லும் நிறைய அம்மாக்களுக்கு அது உதவியாக கூட இருக்கு.ம் ஆமாம் இதுவும் ஒரு தொழில்நுத்தி தான். யோசித்துப் பாரேன்."என்று ஐடியா வேறு தந்தார் சீதா

"நல்ல யோசனை தான் ஆன்ட்டி. தினேஷ் உங்கள் குடும்பத்தில் எல்லோருமே தொழிலில் மிகவும் கெட்டியாக தான் இருக்கிறீர்கள். பாருங்களேன் சட்டென்று எப்படி சொல்லிவிட்டார்கள்." என்று பரிகாசம் செய்து சிரித்தாள் மித்ரா.

அவள் என்ன மறுத்தாலும் என்னென்ன உணவு என்ற பட்டியலிட்டு அதற்கு எவ்வளவு என்று அவளிடம் ஒரு தொகையை பேசி அதை அவள் பெற்றுக் கொள்ள ஒத்துக் கொள்ளும் வரை சீதா விடவே இல்லை.

இப்படித்தான் அன்றிலிருந்து ஆதவனின் உணவு மித்ராவின் பொறுப்பு என்றானது.

இந்த பேச்சுக்கள் எல்லாம் முடிந்த பின் ஆதவனுக்காக அவள் எடுத்து வந்திருந்த கேக்கை வைத்து வெட்டி கொண்டாடினர். அதில் இருந்த வேலைபாடுகளை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார் சீதா. மித்ராவை பாராட்டவும் தவறவில்லை.

அதற்குப் பின்னர் எல்லோரும் ஆதவனுக்காக வாங்கி வைத்திருந்த பரிசுகளை கொடுத்தனர்.

அவர்களே பிரித்தும் கொடுத்தனர். சீதா அவர் பங்காக ஒரு புலி நகச் செயின் செய்து வைத்திருந்தார். முன்பே செய்ததுதான். இப்போது அதை அணிவித்து பார்த்து கண்கலங்கினார்.

இதை பார்க்க கொடுத்து வைக்கவில்லையே விஜய்க்கும் திவ்யாவிற்கும் என்று எண்ணினாலும் நல்ல நாளும் அதுவும் ஆக மேலும் அழக்கூடாது என்று கண்ணோரம் கசிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு புன்னகைத்தார்.

தினேஷ் அண்ணன் மகனுக்காக அவன் உருவாக்கி இருந்த ஒரு டிரஸ்ட் பத்திரத்தை எடுத்துக் காண்பித்தான். அண்ணனுக்கும் அண்ணிக்கும் நேர்ந்தது போல் தனக்கும் அம்மாவுக்கும் எதுவும் நேர்ந்தால் கூட உரிய வயது வரும் வரை ஆதவனுக்கு எந்த விதத்திலும் குறை இருந்து விடாத அளவிற்கு அந்த டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தான் தினேஷ். அந்த வயது வரை இவர்கள் தொழிலையும் அந்த டிரஸ்டின் டிரஸ்டிகள் கட்டிக் காப்பாற்றி ஆதவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருந்தான்.

உண்மைதானே வாழ்வு யாருக்கும் நிச்சயமற்றது தானே. அவன் செயல்களைப் பார்த்தபோது மித்ராவிற்கு அவன் மனம் எந்த அளவிற்கு காயப்பட்டிருக்கும் என்று புரிந்தது.

எவ்வளவு ஆழ்மன பயம் இருந்தால் இப்படி ஒரு செயலை இந்த ஒரே மாதத்தில் செய்து முடித்து இருப்பான். அவனுக்கு ஆதவனின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் மிகவும் இருந்தது என்பது தெளிவாக தெரிந்தது. அவன் அண்ணன் மகன் மீது வைத்திருந்த பாசத்தின் அளவும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

பாசத்தின் அன்பின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்திலும் இருக்கும். ஆனால் ஒரு நல்ல குடும்பத் தலைவனின் அழகு அவனுக்கு பின் அவன் குடும்பத்தினர் என்றும் எந்தவித குறையும் இன்றி வாழ வழி செய்து தருவதேm அந்த விதத்தில் தினேஷ் ஒரு நல்ல குடும்பத் தலைவனாக இருக்க முயன்று கொண்டிருந்தான்.

மித்ரா குழந்தைக்காக சிறு போர்ட் புத்தகங்கள் அட்டை படங்களுடன் ஏ பி சி டி ஒன்று இரண்டு என்று ஒரே பெட்டியில் 10 புத்தகங்கள் இருக்கும் ஒரு செட் பரிசளித்தாள். பிரித்துப் பார்த்த குழந்தைக்கு அதில் பெரிதாக ஆர்வமில்லை இரண்டு முறை இப்படியும் அப்படியும் பார்த்துவிட்டு போட்டு விட்டு சென்று விட்டான்.

சுனிதா ஆதவனுக்கு சற்றே பெரிய போலார் பேர் பொம்மை வாங்கி தந்தாள். ஆதவனுக்கு அது மிக மிக பிடித்திருந்தது அதை சுனிதா பிரித்து தந்த நிமிடம் முதல் அதை வைத்துக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தான். அதை கட்டிப்பிடித்தான் முத்தமிட்டான் ஏதேதோ செய்து கொஞ்சிக் கொண்டே இருந்தான். அவன் செயல்களைப் பார்த்து பெரியவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் அந்தப் போலார் பொம்மையை தலையணை போல வைத்த ஆதவன் அதிலேயே படுத்து உறங்கியும் விட்டான். உறங்கிய பிள்ளையை மெல்ல தூக்கிக்கொண்டு சென்று அவனது அறையில் படுக்க வைத்து விட்டு அவளும் உறங்க சென்றாள் சுனிதா.


ஆக மொத்தம் அன்றைய நாள் ஒரு இனிய நாளாகவே கழிந்தது அனைவருக்கும். எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு மித்ரா வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.

அவள் சென்ற பின் மகனை ஆழமாக பார்த்து சீதா "உனக்கு மித்ராவை பிடித்திருப்பது எந்த வித தவறும் இல்லை தினேஷ். பிடித்திருந்தால் சொல்லிவிடு நானே பேசி முடித்து விடுகிறேன்." என்று சொன்னார்.

அதிர்ந்து போய் பார்த்தான் தினேஷ் "அம்மா என்ன சொல்லுகிறீர்கள்? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா."

"சும்மா சொல்லாதடா. எனக்கு தெரியாதா என் பிள்ளையைப் பற்றி? உனக்கு அவள் மேல் ஆர்வம் இருப்பது நன்றாக தெரிகிறது. ஏன் யோசிக்கிறாய்? ஆதவனுக்கா? அவளைப் பார்த்தால் அப்படி ஆதவனுக்காக உன்னை மறுப்பவள் போல தெரியவில்லை தினேஷ். பேசிப் பார்த்தால் தானே தெரியும். அப்படியும் தாண்டி ஆதவன் இருப்பதால் அவள் உன்னை வேண்டாம் என்று சொன்னால் ஆதவனது பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். பணக்கஷ்டம் ஏதுமின்றி அவனை வைத்துக் கொண்டால் போதும். மற்றபடி வளர்ப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். அதற்காக நீ உன் வாழ்வை வீணாக்கி கொள்ளாதே."

"அம்மா அப்படி ஒருநாளும் என்னால் இருந்துவிட முடியாது. நாளை என்றேனும் நான் திருமணம் என்று செய்து கொண்டால் எனக்கென வருபவள் ஆதவனை அவளது மூத்த மகனாக பார்க்க தயாராக இருப்பவள் தான். அதற்குமேல் வேறு பேசுவதற்கு ஒன்றுமில்லை. எப்படி இருந்தாலும் இப்படி வரப்போகிறவள் கண்டிப்பாக மித்ரா இல்லை. ஏனெனில் மித்ரா ஏற்கனவே திருமணம் ஆனவள். அவளது கணவன் ருத்ரன் லண்டனில் இருக்கிறார். அதனால் இந்த பேச்சை இத்தோடு விட்டுவிடுங்கள்." என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு சென்றான் தினேஷ்
.

என்னது திருமணமானவளா? அதிர்ச்சியில் உறைந்து நின்றார் சீதா.
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
சூப்பர் 👌 அடுத்ததொரு தொழில் ஐடியாவும் குடுத்தாச்சு 🤩
 

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
சூப்பர் 👌 அடுத்ததொரு தொழில் ஐடியாவும் குடுத்தாச்சு 🤩
அதே தான்